Friday, April 23, 2010

பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம்

துரித உணவகத்தில் சாப்பிடும் பழக்கமுடையவர்களின் உடல் பருமனடைவதுடன் அவர்கள் மெல்ல மெல்ல பொறுமை குணத்தையும் இழந்துவிடுகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.


நேரத்தை சேமிக்கிறோம் என்ற பேரில் துரித உணவகத்தில் சாப்பிட பழகுபவர்களுக்கு நாளையடைவில் அதுவே அவர்களின் வாழ்க்கை முறையாகிவிடுகிறது. இதனால் அவர்களுக்கு கிடைக்கும் பலனைவிட பாதிப்புதான் அதிகம் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகமே எந்திரமயமாகவிட்டது. இதன்விளைவாக மனிதர்கள் நிற்க நேரமில்லாமல் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கின்றனர். பெரும்பாலான மனிதர்கள் உணவு சாப்பிடுவதற்கு முக்கியத்துவமே அளிப்பதில்லை. இதுபோன்றவர்கள்தான் துரித உணவங்களில் சாப்பிடுவதை வாடிக்கையாக்கிக் கொள்கின்றனர்.

துரித உணவகங்களில் சுவைக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இதனால் இந்த உணவை சாப்பிடுபவர்கள் உடல்ரீதியாக பல்வேறு உபாதைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் அவர்கள் துரித உணவகத்தில் எப்படி அவசரம் அவசரமாக சாப்பிடுகிறார்களோ அந்த அவசரத்தையே பிற செயல்களிலும் பின்பற்றத் தொடங்கி விடுகின்றனர்.

துரித உணவகத்தில் சாப்பிடும் பழக்கமுடைய நூற்றுக்கணக்கானோரிடம் நடத்திய ஆய்வில் இது உறுதியாகியுள்ளது என்றும் அந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF