Monday, April 19, 2010

கூகுலால் நடந்த திருட்டு

திருட்டுக்கு துணை போவதாக கூகுல் மீது ஒரு புகார் உண்டு.இப்போது கூகுல் மீண்டும் இத்தகைய புகாருக்கு ஆளாகியிருக்கிற‌து.


இங்கிலாந்தை சேர்ந்த கார்டன் ரேனர் என்பவர் தனது வீட்டில் நட்ந‌த திருட்டுக்கு கூகுலின் ஸ்டிர்ரிவியூ சேவையே காரணம் என்று புகார் கூறியிருக்கிறார்.

அதென்ன ஸ்டிர்ரிவுயூ.

பறவை பார்வையாக வீதி காட்சிகளை பார்க்க உதவும் கூகுலின் ஸ்டிரீட்வியூ சேவை சர்ச்சைக்குறியதாகவே இருக்கிற‌து.ஸ்டிரீட்வியூ வழியே பார்த்தால் குறிப்பிட்ட வீதியில் உள்ள வீடு வரை தெளிவாக பார்க்கலாம்.தேடல் சேவையில் மற்றுமொரு அற்புதமாகவே கூகுல் இதனை வழங்கி வருகிற‌து.

ஆனால் இந்த சேவை அந்தரங்கத்தின் மீதான ஊடுருவலாக விமர்சிக்கப்படுகிற‌து.உள்ளங்கை நெல்லிக்கனி போல வீடுகளை புகைப்படமாக பார்க்க முடிவதால் விஷமிகள் இதனை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிற‌து.

இத‌ன் கார‌ண‌மாக‌வே ப‌ல‌ ந‌க‌ர‌ங்க‌ள் இந்த‌ சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள‌ன. கூகுலின் ஸ்டிரீட்வியூ க‌மிரா வாக‌ன‌ம் த‌ங்க‌ள் ந‌க‌ரில் தென்ப‌ட்ட‌வுட‌னேயே போராட்ட‌த்தில் குதித்த‌ ந‌க‌ர‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.

இந்த‌ எதிர்ப்பு கார‌ண‌மாக‌ கூகுல் வீதிகாட்சிகளில் ம‌னித‌ர்களின் முகம் தெரியாம‌ல் ம‌றைத்து விடுகிற‌து.இதனிடையே கூகுல் ஸ்டிர்ரிட்வியூ காட்சியை பார்த்து விட்டு திருட‌ர்க‌ள் த‌ங்க‌ள் இல‌க்கை தேர்வு செய்து க‌ண்ண‌ம் வைப்ப‌தாக‌ புகார்க‌ள் கூற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

இங்கிலாந்தில் இத்த‌கைய‌ ச‌ம்ப‌வ‌ம் ஒன்று ந‌ட‌ந்திருக்கிற‌து.கார்டன் ரேயான் என‌ப‌வ‌ர் த‌ன‌து வீட்டின் காரேஜில் திருட‌ர்க‌ள் கைவ‌ரிசை காட்டிய‌தாக‌வும் இத‌ற்கு கூகுலே கார‌ண‌ம் என்றும் குற்ற‌ஞ்சாட்டியுள்ளார்.

கூகுல் ஸ்டிரீட்வியூ காட்சியில் அவ‌ர‌து வீடு ப‌திவாகியிருக்கிற‌து.அருகே அவ‌ர‌து காரேஜும் ப‌திவாகியுள்ள‌து.அந்த‌ ப‌ட‌த்தில் காரேஜ் க‌த‌வு அப்ப‌டியே திற‌ந்து கிட‌க்கிற‌து.

இந்த காட்சியை பார்த்து விட்டு தான் திருட‌ர்க‌ள் காரேஜுக்கு வ‌ந்து கைவ‌ரிசை காட்டிய‌தாக‌ அவ‌ர் கூறியுள்ளார். கூகுல் க‌த‌வுக‌ள் திற‌ந்து கிட‌ப்ப‌தை ம‌றைத்திருக்க‌ வேண்டும் என்று அவ‌ர் கூறியுள்ளார்.

கூகுல் வ‌ழ‌க்க‌ம் போல‌ இந்த‌ குற்ற‌ச்சாட்டுக்கு பொதுவான‌ ப‌திலை அளித்துள்ளது .வீட்டின் உரிமையாளார்க‌ள் கோரினால் வீட்டின் விவ‌ர‌ங்களை ம‌றைத்து விடுவோம் என்று கூகுல் தெரிவித்துள்ள‌து.

ஆக‌ கூகுல் ஸ்டிர்ரிட்வியூ ச‌ர்ச்சை தொட‌ர்கிற‌து.

நிற்க‌ இந்த‌ சேவையில் எதிர்பாராத சுவ‌ர‌ஸ்யங்க‌ளூம் உண்டு.

மார்க் வெட்கின்ஸ் என்ப‌வ‌ரின் திரும‌ண‌ காட்சி இப்ப‌டி கூகுல் காமிராவில் சிக்கி ஸ்டிர்ரிவியூவில் ப‌திவான‌து.அவ‌ருடைய‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் பார்த்து விட்டு இது ப‌ற்றி கூறிய‌ போது அட‌ நம்ம‌ க‌ல‌யாண‌ம் கூகுலில் இருக்கிற‌தா என குஷியாகிவிட்டார்.

திரும‌ண நாள் அன்று எடுக்க‌ப்ப‌ட்ட‌ புகைப்ப‌ட‌ம் போல‌ அந்த‌ காட்சி தெளிவாக‌ அமைந்துள்ள‌து.

அந்த‌ காட்சியை அவ‌ர் த‌ன‌து திரும‌ண‌ ஆல்ப‌த்தில் இட‌ம்பெற‌ வைத்திருக்கிறார்.இது எப்ப‌டியிருக்கு. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF