Thursday, April 15, 2010

எலும்புகளுக்குப் பதிலாக…

எலும்பு தேய்மானம் என்பது எல்லா வயதினருக்கும் ஏற்படும் பாதிப்பாக இருந்து வருகிறது. எலும்புகள் தேய்ந்துவிட்டால் உடல் இயக்கம் பெரிதும் பாதிக்கப்படும். இத்தகைய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க எலும்புகள் தானமாக கிடைப்பது அரிது.


இதுவரையில் டைட்டானியம் என்ற உலோகம் முலம் எலும்பு மாதிரிகள் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டு வந்தது. இது மிகவும் விலை உயர்ந்தது. மேலும் இவற்றில் சில குறைபாடுகளும் உண்டு.

இந்த நிலையில் உலோகங்களைப் பயன்படுத்தாமல், செயற்கையாகவே எலும்புகளை தயாரித்து பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நிரு பித்துள்ளனர். ஸ்டெம் செல் முலம் எலும்புகளை வளர்த்து எடுக்கும் முறையில் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

ஆய்வகத்தில் சோதனைக் குழாயில் ஸ்டெம் செல் முலம் தாடை எலும்பை அவர்கள் வளர்த்துள்ளனர். இந்த முறையில் எந்த வடிவிலான எலும்பையும் வளர்க்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

எதிர்காலத்தில் எலும்பு தேய்மான சிகிச்சையில் இந்த முறை புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF