Friday, April 30, 2010

மடிகணினியை பாதுகாப்பது எப்படி

மடிகணினியை பயணம் செய்யும் போது அதிக நேரம் பயன்படுத்த கூடாது.


POWER DISCHARGE ஆனவுடன் கணினியில் இருந்து LOW BATTERY என்ற WARING செய்தி கிடைத்தவுடன் பின்புதான் நீங்கள் கணினிக்கு CHAGRE செய்ய வேண்டும்.

ORINIGAL CHARGER ரை பயன்படுத்துவது நல்லது.

சிறு பிரச்சனை ஏற்ப்பட்டால் நாமாகவே மடிகணினியை கலட்டி பார்ப்பது மிகவும் தவறு.

கணினியில் இருந்து வெப்பம் சரிவர வெளியேற வேண்டும் அல்லவா !அதனால் மடி கணினியை சமம்மான இடத்தில்

பயன்படுத்தவேண்டும்.

அதிக நேரம் நம் மடியில் மடிகணினியை பயன்படுத்த கூடாது.(தோள் பாதிப்பு வரலாம்)

மடிகணினிக்கு ஏற்ற SAFETY பேக் தேவை.

முன்று மாதத்துக்கு ஒரு முறை கணினியில் உள்ள இயங்குதளத்தை மாற்றுவது நல்லது.

அடிக்கடி ஒரு மடிகணினியில் இருந்து மற்றோர் மடிகணினிக்கு BATTERY யை மாற்றி கொள்ளாமல் இருந்தால் நல்லது.

மடி கணினி காணமல் போய்விடலாம் அதனால் மடி கணினியின் SEIRAL NUMBER ரை குறித்து கொள்ளவேண்டும்.

நீங்கள் மடிக்கணியை சில நாள்கள் பயன்படுத்த முடியாமல் சூழில்நிலை ஏற்ப்பட்டால் (அதாவது வெளியூர் சென்றால்) மடிகணினியில் இருந்து BATTERY யை தனியாக கலட்டிவைக்கவேண்டும் பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

MICROSOFT நிறுவனத்தின் WINDOWS 8

MICROSOFT நிறுவனத்தின் அடுத்த இயங்குத்தளம் WINDOWS 8 ஜூலை 2012 ல் வருகிறது. இது WINDOWS 7 னை விட வேகமாகவும், பயனாளர்க்கு உதவியாகவும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

விண்டோஸ் பயனாளர்க்கு புதிய வசதிகளை அறிமுகம் ஆகிறது.

விண்டோஸ் 8 128 BIT என்று எதிர்பார்க்கபடுகிறது .
INTEL நிறுவனத்தின் உதவியுடன் USB 3.0 இதில் அறிமுகம் செய்யப்படுகிறது.

USB 2.0 வில் அதிக பச்சமாக 480 MBits/s. USB 3.0 வில் அதிக பச்சமாக 5 Gbits/S .

விண்டோஸ் 7 உள்ள குறைகளை கண்டறிந்து விண்டோஸ் 8 உருவாக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, April 29, 2010

பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி

கருமுட்டைகளில் உட்கருவை மாற்றம் செய்வதன் மூலம், பரம்பரை நோய்கள் மற்றும் அரிய வகை நோய்களுக்கு முடிவு கட்டி விடலாம் என்று, பிரிட்டன் டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மனித குணங்களை நிர்ணயிக்கும் டி.என்.ஏ.,வின் ஒரு நுண்ணுறுப்பு, ‘மைட்டோகான்ட்ரியா!’ இது மொச்சைக் கொட்டை வடிவில் அமைந்திருக்கும். இது தான், ஒரு செல்லுக்கு சக்தியை வழங்குகிறது.இதில் ஏற்படும் குறைபாடுகளே பரம்பரை நோய்கள் வரக் காரணம் என்று நவீன மருத்துவம் கண்டறிந்துள்ளது. பிரிட்டனில் நடந்த ஆய்வுப்படி, தாய்வழியில் வரும் பரம்பரை நோய்கள் 250 பேரில் ஒருவருக்கு மிகச் சிறிய அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

உலகளவில், 6,500 பேரில் ஒருவரை பரம்பரை நோய்கள் மிகத் தீவிரமாகத் தாக்குகின்றன. இதனால் தசைப் பலவீனம், செவிட்டுத் தன்மை, இதயச் செயலிழப்பு, கண்களில் பார்வை பாதிப்பு மற்றும் இதர உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். சில சமயம் உயிரிழப்பு கூட நேரிடும்.இதுபோன்ற பரம்பரை மற்றும் அரிய வகை நோய்களை முற்றிலும் நீக்குவதற்காக, பிரிட்டன் டாக்டர்கள், ஒரு புதிய வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, செயற்கைக் கருத்தரிப்பு முறையில், விந்தணு சேர்க்கப்பட்ட குறைபாடில்லாத கருமுட்டை ஒன்றை எடுத்து, அதிலுள்ள உட்கருவை (நியூக்ளியஸ்) நீக்குகின்றனர்.பின் இந்தக் குறைபாடுள்ள கருமுட்டையிலுள்ள உட்கரு, ஏற்கனவே உட்கரு நீக்கப்பட்ட கருமுட்டையில் வைக்கப்படுகிறது. இம்முறையில் நோய் பாதிப்பு ஏற்படுத்தும் டி.என்.ஏ.,வின் அளவு மிக மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், பரம்பரை நோய் மற்றும் அரிய வகை நோய்கள் வர வாய்ப்பில்லை.

இதுகுறித்து, வடகிழக்கு பிரிட்டனைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டக்ளஸ் டர்ன்புல் கூறுகையில், ‘இது நமது லேப்-டாப்பில் பேட்டரி மாற்றுவது போன்றது. பேட்டரி மாற்றப்பட்டவுடன் வழக்கம் போல் அது இயங்குகிறது. அதன் ‘ஹார்ட் டிரைவ்’வில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.அதுபோல், இம்முறையில் பிறக்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோர் வழி பரம்பரை நோயால் பாதிக்கப்படுவதில்லை’ என்றார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, April 28, 2010

உலகின் மிகப் பெரிய டெலஸ்கோப் சிலியில்!

அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் உலகிலேயே மிகப்பெரிய டெலஸ்கோப் அமைக்கப்பட உள்ளது. இது ரூ.5 ஆயிரம் கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.


இந்த தகவலை தெற்கு ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வானத்தில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கு அப்பால் நடைபெறும் அதிசயங்களை உன்னிப்பாகக் கவனிக்க முடியும்.

இது கடல் மட்டத்தில் இருந்து 3,060 மீட்டர் உயரத்தில் மலை மீது அமைக்கப்படுகிறது. சிலியின் வட பகுதியில் மைன் ரிச்அடகாமா பாலைவனப் பகுதியில் இந்த மலை உள்ளது.

மற்ற டெலஸ்கோப்களை விட இதில் மிகவும் தெளிவாகப் பார்க்க முடியும். இந்த டெலஸ்கோப் அமைக்கும் பணி 2018ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

புதிய தனிமம் கண்டுபிடிப்பு


இதுவரை 116 வேதியியல் தனிமங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. தற் போது 117-வது தனிமத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.


தனிமங்கள் பொதுவாக அவற்றின் உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையைக் கொண்டு வகைப் படுத்தப்படுகிறது. புதிதாக உருவாக் கப்பட்டுள்ள தனிமம், கால்சியம் மற்றும் பெர்கிலியம் தனிமங்களை மோதச் செய்து தயாரிக்கப்பட்டது. இதற்கு தற்காலிகமாக `அன்அன்செப்டியம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷிய விஞ்ஞானிகள் இணைந்து இந்த தனிமத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய தனிமம் இதுவரை உள்ள தனிமங்களை விட உறுதியானதாகவும், எடை கூடியதாகவும் இருக்கிறது. எனவே எதிர்காலத்தில் இந்த தனிமத்தைக் கொண்டு தனித்திறன்மிக்க பொருட்களை தயாரிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

இதுகுறித்த ஆய்வு கட்டுரை வேதியியல் தலைமை அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் இந்த தனிமம் புதிய பெயருடன், ஆவர்த்தன தனிம அட்டவணையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இனையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்

நம்மிடம் குறைந்த திறன் கொண்ட கணினி இருக்கும் அதனால் நாம் வேகமாக இனையத்தில் உலவ முடியாது கணினியில் மெமரியின் அளவை அதிகரித்தால் கொஞ்சம் மாற்றம் கிடைக்கும் இருப்பினும் பணம் செலவில்லாமல் சில மாற்றங்கள் கணினியில் செய்வதன் மூலம் கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் இந்த தகவல் இனையத்தில் உலவும் திறனை மட்டுமே மேம்படுத்தும்.


இங்கு நான் இரண்டு வழிமுறைகள் வழியாக கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் டெஸ்க்டாப்பில் இருக்கும் மை கம்ப்யூட்டரின் Properties தேர்ந்தெடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Hardware என்பதை கிளிக்கி Device Manager என்பதை திறக்கவும்.

இனி Device Manager என்பதை கிளிக்கிய பிறகு மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Communication Port என்பதை டபுள் கிளிக் செய்தால் இப்போது மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Port Settings என்பதை தேர்ந்தெடுத்து அதில் Bit Per Second என்பதில் 128000 என மாற்றவும் அடுத்து கீழே இருக்கும் Flow Control என்பதில் Hardware என மாற்றவும்.

என்ன அப்படியே செய்து விட்டீர்கள்தானே இனி ஓக்கே கொடுத்து வெளிவரவும் இனி அடுத்து என்ன செய்வது என பார்க்கலாம், இனி Start -> Run -> என்பதில் gpedit.msc என டைப் செய்து ஒக்கே கொடுக்கவும் இப்போது ஒரு விண்டோ திறக்கும் அதில் Local Computer Policy என்பதன் கீழே இருக்கும் Computer Configuration பகுதியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அதில் Network என்பதை கிளிக்கி அடுத்ததாக QOS Packet Scheduler கிளிக்கவும் இனி வலது பக்கம் பாருங்கள் Limit Reservable Bandwidth என்கிற பெயர் இருக்கிறதா அதை டபுள் கிளிக் செய்யுங்கள் திறக்கும் விண்டோவில் செட்டிங்ஸ் டேப் திறந்து அதில் இருக்கும் Bandwidth Limit என்பதில் 0 என மாற்றிவிடுங்கள் அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து வெளியேறுங்கள் அவ்வளவுதான்.

இனி என்ன முன்பு இருந்த வேகத்திற்கும் இப்போது இருக்கும் வேகத்திற்கும் ஏதாவது மாற்றம் தெரிகிறதா பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும் நிச்சியம் நீங்கள் அந்த மாற்றத்தை உணர்வீர்கள். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, April 24, 2010

குண்டு துளைக்காத 'டி-சர்ட்'

`டி-சர்ட்’டுகள் இளைய தலைமுறையினரின் நாகரிக உடையாக இருக்கிறது. கட்டழகை பளிச்சிட்டு காட்டும் இந்த உடைகளை இளைஞர்கள் மட்டுமல்லாது இளம்பெண்களும் விரும்பி அணிகிறார்கள்.


தற்போது நவீன தொழில்நுட்பத்தில் குண்டு துளைக்காத டி-சர்ட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சீனா, சுவிட்சர்லாந்து, தெற்கு கரோலினா நாட்டு ஆய்வாளர்கள் இணைந்து இதை உருவாக்கி இருக்கிறார்கள்.

இதற்காக வழக்கமாக பயன்படும் பருத்தி நூல் சில மாறுதலுக்கு உட்படுத்தப்படுகிறது. பருத்தி யில் உள்ள கார்பனுடன் போரான் உலோகம் சேர்க்கப்படுகிறது. இதனால் போரான் கார்பைடு கலவை உருவாகிறது. இதுதான் கதிர்வீச்சு கலன்களில் பயன்படுத்தப்படுகிறது.

எனவே இதைக் கொண்டு தயாரிக்கப்படும் டி-சர்ட்டுகள் குண்டு துளைக்காத தன்மையைப் பெறுகின்றன. அத்துடன் சூரிய ஒளியின் புறஊதாக் கதிரின் தாக்குதல் மற்றும் ரேடியோ அலைகள், கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கிறது. மேலும் எடை இலேசானதாகவும் இருக்கும்.

ராணுவம் மற்றும் போலீஸ் வீரர்களுக்கு ஏற்கனவே கவச உடைகள் உண்டு. அவை தடிமனாகவும், எடை கூடியதாகவும் இருக்கின்றன. அவர்களுக்கு எடைகுறைந்த மாற்று கவசஉடையாக இந்த நவீன டிசர்ட்டுகளை வழங்க ஆய்வுகள் நடந்து வருகிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உலகின் முதலாவது முழு முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றி

உலகின் முதலாவது முழு முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக ஸ்பெய்ன் மருத்துவர்கள் தெரிவித்துள்னர்.


ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த 30 சத்திர சிகிச்சை நிபுணர்களினால் இந்த விசேட சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முழுவதுமாக சிதைவடைந்த முகமொன்றுக்கு பதிலாக மற்றுமொரு நபரின் முகமொன்றின் பாகங்கள் பொருத்தி இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் முழுவதுமாக குறித்த நபரின் முகம் சிதைவடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாடை, மூக்கு, முகத் தோல், உதடுகள் மற்றும் பற்கள் உள்ளிட்ட பூரண முகப் பகுதியும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

முகமாற்று அறுவைச் சிகிச்சை 22 மணித்தியாலங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதற்கு முன்னர் பத்து முகமாற்று அறுவைச் சிகிச்சைகள் உலகில் இடம்பெற்ற போதிலும், இந்த அளவிற்கு மிகவும் சிக்கல் மிகுந்த முழு முகமாற்று அறுவை சிகிச்சையொன்று இதுவரையில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும், தற்போதே தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டினால் குறித்த நபர் காயமடைந்ததாகவும் இதற்கு முன்னர் ஒன்பது தடவைகள் நடத்தப்பட்ட சத்திரசிகிச்சைகள் பலனளிக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

சுவாசித்தல், உணவு உண்ணல், பேசுதல் போன்ற பல்வேறு அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது குறித்த நபர் அவதியுற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்டர்நெட்டில் பதற்றம் தரும் செய்திகள்

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் அடிக்கடி சில போலியான செய்திகள், தகவல்கள் நம்மை அச்சுறுத்தி உடனே செயல்பட வைக்கும் வகையில் வருவது அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகிறது.


இந்த செய்திகள் பலவகைப்படும். சில எடுத்துக் காட்டுக்களைப் பார்க்கலாம். இவை எல்லாமே பாப் அப் விண்டோக்களில் காட்டப்படும். உங்கள் கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்குவதை அறியவில்லையா? வைரஸ் பாதித்துள்ளது.

ஒரு அப்டேட் செய்திட வேண்டும். ட்ரோஜன் அல்லது மால்வேர் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்துள்ளது. இந்த லிங்க்கில் கிளிக் செய்தால் கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படும், வைரஸ் நீக்கப்படும்.

இவற்றைப் படித்த நாம் அனைவருமே சிறிது கலவரப்படுவோம். உடனே செயல்பட்டு லிங்க்கில் கிளிக் செய்து வைரஸை இலவசமாக நீக்க முயற்சிக்க ஆசைப்படுவோம்.

இன்னும் சில செய்திகள், பெரிய புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து வந்தது போல் காட்டப்படும். அந்நிறுவனத்தின் வெப்சைட் முகவரி தரப்பட்டிருக்கும். நிறுவனத்தின் முகவரி தானே, சரியாகத்தானே இருக்கும் என்று எண்ணி கிளிக் செய்திடுவோம்.

ஆனால் ஒரு சிறு எழுத்தை மாற்றி வேறு ஒரு வெப்சைட் செல்வோம். அங்கும் நிறுவனத்தின் வெப்சைட் சாயலில் வெப்சைட் காட்டப்பட்டு நாம் மாட்டிக் கொள்வோம்.

இது போன்ற செய்திகளை நம்பி நாம் செயல்படுகையில் நம் கம்ப்யூட்டரைக் கையகப்படுத்தும் வகையில் புரோகிராம்கள் பதியப்படலாம். பின் நம் பெர்சனல் தகவல்கள் அனைத்தும், அந்த புரோகிராமினை அனுப்பியவர்கள் கைகளுக்குச் சென்றுவிடும்.

அல்லது கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் வைரஸ்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து அனைத்து மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். இது போன்ற நிகழ்வுகளை எப்படி சமாளிப்பது?

முதலில் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எந்தக் காரணத்தைக் கொண்டும், லிங்க் ஆகத் தரப்பட்டிருக்கும் இடம் அருகே கர்சரைக் கொண்டு செல்ல வேண்டாம். எங்கும் கிளிக் செய்திட வேண்டாம். உடனே மால்வேர் அல்லது வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்க ஆரம்பிக்கும். இதனைத் தடுத்து நிறுத்தும் வழி எதுவும் திரையில் கிடைக்காது.

1. ஆல்ட் + எப்4 (Alt+F4) கீகளை சேர்த்து அழுத்தினால், இந்த எச்சரிக்கை செய்தி தரும் கட்டம் மறைந்துவிடும். அல்லது பிரவுசரே மறைந்துவிடலாம். பின் மீண்டும் பிரவுசரை இயக்கி இன்டர்நெட் பிரவுசிங்கைத் தொடங்கி விடலாம்.

2. மேலே சொன்ன வழியின் மூலம், அந்த விண்டோவினை மூட இயலவில்லை என்றால், கண்ட்ரோல்+ ஆல்ட்+டெல் (Ctrl+Alt+Del) கீகளை அழுத்தி டாஸ்க் மேனேஜரைப் (Task Manager) பெறவும். இதில் அப்ளிகேஷன்ஸ் (Applications) டேப்பில் இடது கிளிக் செய்திடவும்.

3. இங்கு உங்கள் பிரவுசர் பெயர் பட்டியலில் இருக்கும். உடன் ஏதாவது புதியதாக ஒரு புரோகிராம் தெரிகிறதா என்று பார்க்கவும். இருந்தால் அதுதான் உங்களை ஏமாற்றும் புரோகிராம். அதனைத் தேர்ந்தெடுத்து என்ட் டாஸ்க் (End Task) பட்டனை அழுத்தி, அந்த புரோகிராமினை மூடவும். அப்படி ஒன்றும் இல்லை என்றால், பிரவுசர் புரோகிராமினை மூடவும்.

சில நடவடிக்கைகளை நாம் மறக்காமல் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.

எப்போதும் உங்கள் ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும். வழக்கமாகப் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இல்லாமல், வேறு ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை டவுண்லோட் செய்து, அவ்வப்போது இயக்கிப் பார்ப்பதுவும் நல்லது.

இதற்கென புரோகிராம் ஒன்றினை இணையத்தில் அண்மையில் காண நேர்ந்தது. அதன் பெயர்Malwarebytes AntiMalware. இதனை இலவசமாக டவுண்லோட் செய்து கம்ப்யூட்டரில் இயக்கலாம்.

தரவிறக்கம் செய்ய பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, April 23, 2010

இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல், தனது மகள்கள் இருவரும் இன்டர்நெட் பயன்படுத்த, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.


அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல், சமீபத்தில் தனது மகள்கள் மலியா(11), சாசா(8) ஆகியோருடன் மெக்சிகோவில் சுற்றுப் பயணம் செய்தார். ஒபாமா அதிபராக பதவியேற்ற பின், மிஷெல் முதல் முதலாக தனது கணவர் இல்லாமல் மேற்கொண்ட பயணம் இது.

இந்த சுற்றுப் பயணத்தின் போது, `டிவி` பார்ப்பதற்கும், மொபைல் போன்களை பயன் படுத்துவதற்கும் தனது மகள்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தார் மிஷெல்.குறிப்பாக, இன்டர்நெட் பயன்படுத்துவது தொடர்பாக மலியாவுக்கும், சாசாவுக்கும் கடுமையான கட்டுப் பாடுகளை அவர் விதித்தார்.இதுகுறித்து மிஷெல் கூறியதாவது:

தற்போதுள்ள இளைய தலைமுறையினர் இன்டர்நெட் பயன்படுத்துவதில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். இதில் நல்ல விஷயமும் உள்ளது; தவறான விஷயங்களும் உள்ளன. குறிப்பாக, `பேஸ்புக்` போன்ற தளங்களை பயன்படுத்துவதில், ஏராளமான பிரச்னைகள் உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து தங்கள் குழந்தைகளுக்கு, பெற்றோரும், ஆசிரியர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தவறான தளங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, என் மகள்களுக்கு எடுத்துக் கூறியுள்ளேன். இந்த விஷயத்தில் அவர்களுக்கு கட்டுப்பாடும் விதித்துள்ளேன். குழந்தைகள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். நானும், அதிபர் ஒபாமாவும், எங்கள் குழந்தைகளுடன் பேசுவதற்கு அதிக நேரத்தைச் செலவிடுகிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.இவ்வாறு மிஷெல் கூறினார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம்

துரித உணவகத்தில் சாப்பிடும் பழக்கமுடையவர்களின் உடல் பருமனடைவதுடன் அவர்கள் மெல்ல மெல்ல பொறுமை குணத்தையும் இழந்துவிடுகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.


நேரத்தை சேமிக்கிறோம் என்ற பேரில் துரித உணவகத்தில் சாப்பிட பழகுபவர்களுக்கு நாளையடைவில் அதுவே அவர்களின் வாழ்க்கை முறையாகிவிடுகிறது. இதனால் அவர்களுக்கு கிடைக்கும் பலனைவிட பாதிப்புதான் அதிகம் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகமே எந்திரமயமாகவிட்டது. இதன்விளைவாக மனிதர்கள் நிற்க நேரமில்லாமல் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கின்றனர். பெரும்பாலான மனிதர்கள் உணவு சாப்பிடுவதற்கு முக்கியத்துவமே அளிப்பதில்லை. இதுபோன்றவர்கள்தான் துரித உணவங்களில் சாப்பிடுவதை வாடிக்கையாக்கிக் கொள்கின்றனர்.

துரித உணவகங்களில் சுவைக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இதனால் இந்த உணவை சாப்பிடுபவர்கள் உடல்ரீதியாக பல்வேறு உபாதைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் அவர்கள் துரித உணவகத்தில் எப்படி அவசரம் அவசரமாக சாப்பிடுகிறார்களோ அந்த அவசரத்தையே பிற செயல்களிலும் பின்பற்றத் தொடங்கி விடுகின்றனர்.

துரித உணவகத்தில் சாப்பிடும் பழக்கமுடைய நூற்றுக்கணக்கானோரிடம் நடத்திய ஆய்வில் இது உறுதியாகியுள்ளது என்றும் அந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சூரியன் தொடர்பான புதிய படங்களை நாஸா வெளியிட்டுள்ளது

சூரியன் தொடர்பான புதிய படங்களை நாஸா விண்வெளி ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்டுள்ளது.


அதிஉயர் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கமரக்களினால் குறித்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சூரியனில் பல்வேறு வெடிப்புக்கள் இடம்பெற்று வருவதாகவும், வாயு வெளியேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளைப் பயன்படுத்தி சூரிய சக்தி மற்றும் சூரிய குடும்பம் பற்றிய புதிய ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என நாஸா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சோலர் டைனமிக் ஒப்சர்வேர்ட்டி எனப்படும் விசேட கமராவைக் கொண்டு சூரியனின் படங்கள் எடுக்கப்பட்டுள்ளதகாவும், ஐந்து வருடங்களுக்கு இந்த கமரா படங்களை விநியோகிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், சூரியன் பற்றிய ஆய்வுகளை பூரணப்படுத்த இன்னும் நீண்டகாலம் தேவைப்படும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த கமரா மிகவும் துல்லியமான படங்களை பல கோணங்களிலிருந்து எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, April 22, 2010

அதிகம் அறியப்படாத ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்

வைரஸ்கள் வந்து வந்து போகின்றன. ஒரு சில தொடர்ந்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கின்றன. புதிதாய் வரும் வைரஸ்கள் எத்தனை நாட்கள் தங்கி இருந்து தொல்லை கொடுக்கும் என்று நம்மால் கணிக்க இயலவில்லை.

ஆனால் இவற்றைத் தேடி அழிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து இயங்குகின்றன. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் என்று கேள்விப்பட்டவுடன் நம் மனதிற்கு வருவது சைமாண்டெக், மெக் அபி, நார்டன் ஆகியவையே. ஆனால் இன்னும் பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் அவ்வளவாகப் புகழ் பெறாமல் உள்ளன. இவை செயல்பாட்டில் பிரபலமான புரோகிராம்களுக்கு இணையாகவே உள்ளன.

அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

1. பிட் டிபன்டர் (BitDefender) பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், விண்டோஸ் மட்டுமின்றி லினக்ஸ் சிஸ்டங்களிலும் இயங்கி செயல்புரிகிறது. அத்துடன் மெயில் சர்வர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் எதிர்ப்பு பணியை மேற்கொள்கிறது.

மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய

2. அவிரா ஆண்ட்டிவிர் (Avira Antivir): இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மற்ற புரோகிராம்கள் கண்டுபிடிக்காத சில வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்கும் வழிகளைத் தருகிறது. அதே போல மற்றவற்றைக் காட்டிலும், கூடுதல் வேகத்தில் இது செயல்படும்.

மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய

3. கிளாம் ஏவி (Clam AV): இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும் சர்வர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. அத்தகைய சர்வர்கள் வைத்திருப்போர் கட்டாயம் இதனை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும்.

மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய

4.அவாஸ்ட் (Avast): மற்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் போல இது பெயர் பெற்றது இல்லை . ஆனால் இந்த புரோகிராம் தருவது போல பல ஆப்ஷன்களை மற்ற புரோகிராம்கள் தருவது இல்லை.

மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய

5. ஆர் கே ஹண்டர் (rk hunter) : இதன் சிறப்பு இது ஒரு ரூட்கிட் எதிர்ப்பு டூலாகும். நம்மில் பெரும்பாலானவர்கள் ரூட்கிட் நமக்கு தரக்கூடிய பாதிப்புகளை அறிந்திருப்பது இல்லை. மேக் கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் இது சேதத்தை விளைவிக்கும். உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ரூட்கிட்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கவில்லை என்றால்,இதனை உடனே நிறுவுவது அவசியம்.

மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய

6. டாக்டர் வெப் க்யூர்இட் (Dr.Web CureIt): இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது ஒரு சிறிய பைனரி பைல். இதன் மீது டபுள் கிளிக் செய்தால், அது நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும். இதில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. இதன் அண்மைக் காலத்திய மேம்படுத்தப்பட்ட புரோகிராமினை அப்படியே அப்டேட் செய்திட முடியாது. மீண்டும் புதிதாக டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இதனை போர்ட்டபிள் வைரஸ் ஸ்கேனராகப் பயன்படுத்தலாம்.

மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய

7. இ செட் ஸ்மார்ட் செக்யூரிட்டி (ESET Smart Security): NOD32 என்னும் ஆண்ட்டி வைரஸ் டூலைத் தந்தவர்களே இதனையும் தந்துள்ளனர். இது ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களாகச் செயல்படுகிறது. இதன் பயர்வால் செயல்பாடு சற்று விசித்திரமானது. இது இருக்கும் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை, நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, அதற்கேற்ற வகையில் செயல்படுகிறது. டேட்டா திருடு போகாமலும், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல்பாட்டை முடக்கும் வைரஸ்களை இயங்கவிடாமலும் இது தடுக்கிறது.

மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய

8. ஐ ஆண்ட்டி வைரஸ் (iAnti Virus): இதன் பெயரில் உள்ள ஐ என்பதைப் பார்த்தவுடன் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மேக் கம்ப்யூட்டர்களுக்கானது என்று அறிந்திருப்பீர்கள். மேக் கம்ப்யூட்டர்களில் எல்லாம் வைரஸ் வராது என்று சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் என அனைத்து வகை சிஸ்டங்களிலும் வைரஸ்கள் புகுந்து நாசம் விளைவிக்கின்றன. இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்படுவதும், மேக் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ் போல ஒன்றின் வழியாகத்தான். மேக் சிஸ்டத்திற்கு மிகச் சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இது.

மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய

9. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials) பல்வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை மேலே பார்த்தோம். மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள இதனையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு, மைக்ரோசாப்ட் தரும் இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இலவசமாகும். பொதுவாக மைக்ரோசாப்ட் மற்றும் இலவசம் என்ற இரண்டும் இணையாது. இது ஒரு விதிவிலக்காகும்.

மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய

10. ஸோன் அலார்ம் (Zone Alarm): மற்ற ஆண்ட்டி வைரஸ் தராத ஒரு சிறப்பான உதவியை ஸோன் அலார்ம் செய்கிறது. டேட்டா லாக் என்னும் டூலை ஸோன் அலார்ம் தருகிறது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் டேட்டாவிற்கு என்கிரிப்ஷன் மூலம் பாதுகாப்பு தரும் வேலையையும் இது மேற்கொள்கிறது. எனவே என்கிரிப்ஷன் கீ இல்லாதவர்கள் டேட்டாவினப் படித்து அறிய இயலாது. அதே போல கம்ப்யூட்டரை பூட் செய்வதிலும் இது பாதுகாப்பு தருகிறது. எனவே ஆண்ட்டி வைரஸ், என்கிரிப்ஷன், பூட் அனுமதி என கூடுதல் வசதிகளையும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிரம் தருகிறது.

மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, April 19, 2010

ஐஸ்லாந்து எரிமலை சாம்பல் தூசியால் 6 மாதத்திற்கு விமான போக்குவரத்து பாதிக்கும்?

ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை தொடர்ந்து குமுறி வந்தால் அடுத்த ஆறு மாத்த்திற்கு விமான போக்குவரத்தை நினைத்துப் பார்க்க முடியாது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

2வது முறையாக ஐஸ்லாந்து எரிமலை குமுறி வெடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் எழுந்துள்ள சாம்பல் தூசி ஐரோப்பிய வான்வெளியை அப்படியே மறைத்து நிற்கிறது. இதனால் விமானப் போக்குவரத்து முற்றிலும் செயலிழந்து கிடக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து விமான்ங்கள் இரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிலைமை மேம்பாடு அடையாததால் ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

விமான நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் விமான நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டுவிட்டன. அங்கு வரும் விமானங்களை கங்கேரிக்கும், ருமேனியாவில் உள்ள சில விமான நிலையங்களுக்கும் திருப்பி விடப்படுகின்றன.

ஆப்கானிஸ்தானில் காயமடையும் வீரர்களை அழைத்து வரும் அமெரிக்க இராணுவ விமானங்களும் இந்த சாம்பல் மண்டலத்தால், பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. வேறு மார்க்கம் வழியாக அவை ஆப்கானிஸ்தானிலிருந்து விமானங்களை இயக்கி வருகின்றன.

எரிமலை தொடர்ந்து குமுறி வந்தால், அடுத்த ஆறு மாதங்களுக்கு விமானப் போக்குவரத்தையே நடத்த முடியாத நிலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் ஐரோப்பிய, அமெரிக்க விமான நிறுவனங்கள் பீதியடைந்துள்ளன.

அண்மையில்தான் பொருளாதார சீர்குலைவு பிரச்சினயிலிருந்து விமான நிறுவனங்கள் மீண்டு வந்தன. தற்போது எரிமலையால், விமானப் போக்குவரத்து மீண்டும் பெரும் நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளதால் நிறுவனங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
ஐஸ்லாந்து நாட்டில்வெடித்துச் சிதறும் எரிமலையின் வீடியோ காட்சி பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றி பெறாதது ஏன்?

ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த கிரையோஜெனிக் இன்ஜின் இயங்காததே இத்திட்டத்தின் தோல்விக்கான காரணம்' என, 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.


கடந்த 15ம் தேதி, ஜி-சாட் 4 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் திட்டம், வெற்றி அடையவில்லை. இதற்கான காரணம் பற்றி, 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

இதன் முடிவாக, ''கிரையோஜெனிக் இன்ஜின் இயங்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. அது ஏன் இயங்கவில்லை என்பது தான் கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது,'' என்கிறார், 'இஸ்ரோ'வின் செய்தித் தொடர்பாளர் சதீஷ்.ராக்கெட் ஏவப்பட்டது தொடர்பான அத்தனை விவரங்களும், மறுநாளே கையில் கிடைத்துவிட்டன.

'இஸ்ரோ'வின் மூத்த விஞ்ஞானிகள், கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு, அவற்றை வரிக்கு வரி படித்துக் கொண்டிருக்கின்றனர்.ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட், மூன்று நிலைகளைக் கொண்டது.

மூன்றாவது நிலையில், முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின், முதல் முறையாக பொருத்தப்பட்டிருந்தது. இந்த இன்ஜின், மைனஸ் 253 டிகிரி செல்சியசில் உள்ள ஹைட்ரஜன் திரவத்தையும், மைனஸ் 183 டிகிரி செல்சியசில் உள்ள ஆக்சிஜன் திரவத்தையும் எரிபொருளாகக் கொண்டது.

திட்டமிட்டபடி, 15ம் தேதி மாலை 4.27 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. அதன் இரண்டாம் நிலை முடியும் வரை, அதாவது 293வது வினாடி வரை, எல்லாம் சரியாகவே சென்று கொண்டிருந்தது.ஆனால், மூன்றாம் நிலையில், கிரையோஜெனிக் இன்ஜின் இயங்கத் துவங்கியிருக்க வேண்டிய 304வது வினாடியில், பிரச்னை உருவானது; ராக்கெட் கடலில் விழுந்தது.

இதுதொடர்பாக, 'இஸ்ரோ'வின் முன்னாள் மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறும்போது,''

இரண்டாவது நிலையின் இறுதி வரை எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை என்பதும், கிரையோஜெனிக் இன்ஜின் இயங்கவில்லை என்பதும் உறுதியாகிவிட்ட விஷயங்கள். அதன் பிறகு, ராக்கெட்டின் வேகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை; சரியவும் துவங்கிவிட்டது,'' என்றார்.

கிரையோஜெனிக் இன்ஜின் ஏன் இயங்கவில்லை என்பது பற்றி, 'இஸ்ரோ' விஞ்ஞானிகள், தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். காரணம், ஜி.எஸ்.எல்.வி., டி 3யில் பொருத்தப்பட்டிருந்த கிரையோஜெனிக் இன்ஜின், முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பதால், ஏகப்பட்ட முறை பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

போதாதக்குறைக்கு, 'இஸ்ரோ'வின் முன்னாள் தலைவர்கள், கிரையோஜெனிக் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கிய தேசியக் குழு ஒன்றும், இந்த ராக்கெட்டை பல முறை ஆய்வு செய்து, 'தாராளமாக ஏவலாம்' என, பச்சைக்கொடி காட்டியிருந்தது.

அதுமட்டுல்ல, அந்த கிரையோஜெனிக் இன்ஜின், அடுத்தடுத்து 7,767 வினாடிகளுக்கு தரையில் பரிசோதிக்கப்பட்டது. இத்தனைக்கும், வானத்தில் அது 720 வினாடிகள் தான் இயங்க வேண்டியிருந்தது.

'இஸ்ரோ' தலைவர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டது போல, இன்ஜின் உள்ளிட்ட ஒட்டுமொத்த கிரையோஜெனிக் இயந்திரமும் 2007ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதியே தகுதிச் சோதனையில் முழு வெற்றி பெற்றுவிட்டது. ஆனால், வான்வெளியின் வெற்றிடத்தில் (வேக்குவம்) கிரையோஜெனிக் இன்ஜின் இயங்க வேண்டியிருந்தது தான் மிகப் பெரிய சிக்கல்.

ஏனெனில், தரையில் அதுபோன்ற வெற்றிடத்தை செயற்கையாக உருவாக்கி சோதித்துப் பார்க்க முடியாது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கூகுலால் நடந்த திருட்டு

திருட்டுக்கு துணை போவதாக கூகுல் மீது ஒரு புகார் உண்டு.இப்போது கூகுல் மீண்டும் இத்தகைய புகாருக்கு ஆளாகியிருக்கிற‌து.


இங்கிலாந்தை சேர்ந்த கார்டன் ரேனர் என்பவர் தனது வீட்டில் நட்ந‌த திருட்டுக்கு கூகுலின் ஸ்டிர்ரிவியூ சேவையே காரணம் என்று புகார் கூறியிருக்கிறார்.

அதென்ன ஸ்டிர்ரிவுயூ.

பறவை பார்வையாக வீதி காட்சிகளை பார்க்க உதவும் கூகுலின் ஸ்டிரீட்வியூ சேவை சர்ச்சைக்குறியதாகவே இருக்கிற‌து.ஸ்டிரீட்வியூ வழியே பார்த்தால் குறிப்பிட்ட வீதியில் உள்ள வீடு வரை தெளிவாக பார்க்கலாம்.தேடல் சேவையில் மற்றுமொரு அற்புதமாகவே கூகுல் இதனை வழங்கி வருகிற‌து.

ஆனால் இந்த சேவை அந்தரங்கத்தின் மீதான ஊடுருவலாக விமர்சிக்கப்படுகிற‌து.உள்ளங்கை நெல்லிக்கனி போல வீடுகளை புகைப்படமாக பார்க்க முடிவதால் விஷமிகள் இதனை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிற‌து.

இத‌ன் கார‌ண‌மாக‌வே ப‌ல‌ ந‌க‌ர‌ங்க‌ள் இந்த‌ சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள‌ன. கூகுலின் ஸ்டிரீட்வியூ க‌மிரா வாக‌ன‌ம் த‌ங்க‌ள் ந‌க‌ரில் தென்ப‌ட்ட‌வுட‌னேயே போராட்ட‌த்தில் குதித்த‌ ந‌க‌ர‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.

இந்த‌ எதிர்ப்பு கார‌ண‌மாக‌ கூகுல் வீதிகாட்சிகளில் ம‌னித‌ர்களின் முகம் தெரியாம‌ல் ம‌றைத்து விடுகிற‌து.இதனிடையே கூகுல் ஸ்டிர்ரிட்வியூ காட்சியை பார்த்து விட்டு திருட‌ர்க‌ள் த‌ங்க‌ள் இல‌க்கை தேர்வு செய்து க‌ண்ண‌ம் வைப்ப‌தாக‌ புகார்க‌ள் கூற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

இங்கிலாந்தில் இத்த‌கைய‌ ச‌ம்ப‌வ‌ம் ஒன்று ந‌ட‌ந்திருக்கிற‌து.கார்டன் ரேயான் என‌ப‌வ‌ர் த‌ன‌து வீட்டின் காரேஜில் திருட‌ர்க‌ள் கைவ‌ரிசை காட்டிய‌தாக‌வும் இத‌ற்கு கூகுலே கார‌ண‌ம் என்றும் குற்ற‌ஞ்சாட்டியுள்ளார்.

கூகுல் ஸ்டிரீட்வியூ காட்சியில் அவ‌ர‌து வீடு ப‌திவாகியிருக்கிற‌து.அருகே அவ‌ர‌து காரேஜும் ப‌திவாகியுள்ள‌து.அந்த‌ ப‌ட‌த்தில் காரேஜ் க‌த‌வு அப்ப‌டியே திற‌ந்து கிட‌க்கிற‌து.

இந்த காட்சியை பார்த்து விட்டு தான் திருட‌ர்க‌ள் காரேஜுக்கு வ‌ந்து கைவ‌ரிசை காட்டிய‌தாக‌ அவ‌ர் கூறியுள்ளார். கூகுல் க‌த‌வுக‌ள் திற‌ந்து கிட‌ப்ப‌தை ம‌றைத்திருக்க‌ வேண்டும் என்று அவ‌ர் கூறியுள்ளார்.

கூகுல் வ‌ழ‌க்க‌ம் போல‌ இந்த‌ குற்ற‌ச்சாட்டுக்கு பொதுவான‌ ப‌திலை அளித்துள்ளது .வீட்டின் உரிமையாளார்க‌ள் கோரினால் வீட்டின் விவ‌ர‌ங்களை ம‌றைத்து விடுவோம் என்று கூகுல் தெரிவித்துள்ள‌து.

ஆக‌ கூகுல் ஸ்டிர்ரிட்வியூ ச‌ர்ச்சை தொட‌ர்கிற‌து.

நிற்க‌ இந்த‌ சேவையில் எதிர்பாராத சுவ‌ர‌ஸ்யங்க‌ளூம் உண்டு.

மார்க் வெட்கின்ஸ் என்ப‌வ‌ரின் திரும‌ண‌ காட்சி இப்ப‌டி கூகுல் காமிராவில் சிக்கி ஸ்டிர்ரிவியூவில் ப‌திவான‌து.அவ‌ருடைய‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் பார்த்து விட்டு இது ப‌ற்றி கூறிய‌ போது அட‌ நம்ம‌ க‌ல‌யாண‌ம் கூகுலில் இருக்கிற‌தா என குஷியாகிவிட்டார்.

திரும‌ண நாள் அன்று எடுக்க‌ப்ப‌ட்ட‌ புகைப்ப‌ட‌ம் போல‌ அந்த‌ காட்சி தெளிவாக‌ அமைந்துள்ள‌து.

அந்த‌ காட்சியை அவ‌ர் த‌ன‌து திரும‌ண‌ ஆல்ப‌த்தில் இட‌ம்பெற‌ வைத்திருக்கிறார்.இது எப்ப‌டியிருக்கு. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, April 18, 2010

அணுவாயுத பாதுகாப்பு குறித்த மாநாடு சாதகமான முறையில் அமையப் பெற்றது : சுவிஸ் ஜனாதிபதி

அணுவாயுத பாதுகாப்பு தொடர்பில் வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச மாநாடு சாதகமான முறையில் அமையப் பெற்றதாக சுவிட்சர்லாந்து ஜனாதிபதி டொரிஸ் லூதார்ட் தெரிவித்துள்ளார்.


அணு உற்பத்திகளை மிகவும் பாதுகாப்பான முறையில் பேண வேண்டுமென்ற பரக் ஒபாமாவின் கோரிக்கையை உலக நாடுகளினது தலைவர்கள் ஏற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணு உற்பத்திப் பொருட்களை சட்டவிரோதமான முறையில் கடத்துவோருக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி பாவனைக்காக பல நாடுகள் அணுசக்தியை பயன்படுத்தி வருகின்ற போதிலும், பிழையான நபர்களின் கைகளில் அணு உற்பத்திப் பொருட்கள் சென்றடையக் கூடாது என சுவிஸ் ஜனாதிபதி மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உங்கள் கோப்பில் வைரஸ் இருக்கிறதா எளிதாக சோதிக்கலாம்

விண்டோஸ் எக்ஸ்பி-யில் இருந்து விண்டோஸ் 7 வரை உள்ள அனைத்து விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் உள்ள வைரஸ் கோப்புகளை எளிதாக உடனடியாக கண்டுபிடிக்கலாம்.


நம் கணினியில் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் வைத்திருந்தால் அடுத்த ஆண்டிவைரஸ்-க்கு தேவையான சில கோப்புகளை வைரஸ்

இருப்பதாக அறிவிக்கும். சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் கோப்பை வைரஸ் இருப்பதாக ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளும் மற்றொரு

ஆண்டிவைரஸ் மென்பொருள் வைரஸ் இல்லை என்றும் அறிவிக்கும் இந்த நேரத்தில் நாம் அந்த கோப்பில் உண்மையாகவே வைரஸ் இருக்கிறதா என்று இந்த இணையதளம் மூலம் கண்டுபிடிக்கலாம்.

இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் வைரஸ் இருக்கிறதா என்று சோதிக்க விரும்பும் நம்முடைய கோப்புகளை choose என்ற பொத்தானை

அழுத்தி தேர்ந்தெடுக்க வேண்டும் ஸ்கிரிப்ட் வைரஸ் இருப்பதாக தோன்றினால் அதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அடுத்து எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். நம் இமெயில் முகவரியைம் கொடுத்து Analyse என்ற பொத்தானை அழுத்தி எளிதாக சோதிக்கலாம். சோதிக்கப்பட்டு உடனடியாக நமக்கு இமெயில் மூலம் முடிவு அனுப்பப்படும். இதை சோதிக்க இந்த இணையதளத்தில் எந்த கணக்கும் உருவாக்கத் தேவையில்லை. கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கிரிமினல்களை காட்டிக்கொடுக்கும் கிருமிகள்

தந்திரமாக செயல்பட்டு தப்பிவிடுவதில் குற்றவாளிகள் சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களை கைரேகை மற்றும் பிற அங்க அடையாளங்களை வைத்து கண்டுபிடிப்பது சிரமம். அவர்களை எளிதில் அடையாளம் காண புலனாய்வுக்குழுவினர் புது வழியை கண்டுபிடித்துள்ளனர்.


நுண்ணுயிரிகளான கிருமிகள் குற்றவாளிகளை காட்டிக்கொடுப்பதில் உதவும் என்பதே அந்த கண்டுபிடிப்பு. ஒருவரின் உடலில் பல லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. கண், முக்கு, குடல் என ஒவ்வொரு பகுதியில் வாழும் நுண்ணுயிரிகளும் வெவ்வேறு வகையாகவும், விதவிதமான பண்புகளையும் கொண்டவையாக இருக்கின்றன.

சாதாரண தொடுதலிலும் இந்த கிருமிகள் இடம் பெயருகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு அங்கேயே அழியாமல் நிலைக்கின்றன. அதேபோல் ஒவ்வொரு மனிதனின் உடலில் உள்ள நுண்ணுயிரிகளும் வித்தியாசமாக இருக்கின்றன.

எனவே இதைக் கொண்டு புலனாய்வு செய்ய முடியும் என்று கொலரோடா (அமெரிக்கா) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மெய்ப்பித்துள்ளனர். அவர்களது ஆய்வில் 70 முதல் 90 சதவீத அளவில் குற்றவாளிகளை அடையாளம் காணலாம் என்று தெளிவானது.

`பேக்டீரியல் ஜெனிடிக் சிக்னேச்சர்` எனப்படும் இந்த முறை, எளிதில் பயன்தரும் புதிய புலனாய்வு முறையாக எதிர்காலத்தில் வரப்போகிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஸ்லிப்ஸ்ட்ரீமிங் (Slipstreaming) என்றால் என்ன???

சிலர் இப்படி அலுத்துக் கொள்வார்கள் – போன வாரம் இரவில் விண்டோஸ் சிஸ்டத்தை ரீ இன்ஸ்டால் செய்தேன். போதும் போதும் என்றாகிவிட்டது என்று சொல்லிவிட்டு, அவரே ஸ்லிப் ஸ்ட்ரீமிங் இருந்தால் கொஞ்சம் ஈஸியாக இருந்திருக்கும். சீக்கிரம் படுக்கைக்குப் போயிருக்கலாம் என்பார்.


விண்டோஸ் மிக ஈஸியாக இன்ஸ்டால் ஆகிவிடும். ஆனால் அதன் பின்னர், சர்வீஸ் பேக், லேட்டஸ்ட்டாக வந்த ஹாட் பிக்ஸ், அண்மையில் வந்த டிரைவர் தொகுப்புகள். என கணக்கிலடங்காத பின்னூட்டுகளை சிரமப்பட்டுத் தேடி இன்ஸ்டால் செய்திட வேண்டி இருக்கும். இல்லையேல் உங்கள் புரோகிராம்கள் இயங்காது. விண்டோஸ் முன்பு போலக் காட்சி அளிக்காது.

ஸ்லிப் ஸ்ட்ரீமிங் என்பது இந்த அலைச்சலுக்கும் தேடலுக்கும் ஒரு முடிவு கட்டுகிறது. ஸ்லிப் ஸ்ட்ரீமிங் என்பது ஒரு பூட்டபிள் சிடியில், நமக்குத் தேவையான லேட்டஸ்ட் டிரைவர் தொகுப்புகள், முழுமையான ஒரிஜினல் இன்ஸ்டலேஷன் பைல்கள், அப்போதைய சர்வீஸ் பேக் என அனைத்தையும் பதிந்து வைக்கும் செயல்பாடாகும். இந்த சிடியை வைத்துக் கொண்டால், விண்டோஸ் சிஸ்டம் தொகுப்பை ரீ இண்ஸ்டால் செய்வது முதல் அனைத்து வேலைகளையும் தானே மேற்கொண்டு விடும். இதனை எப்படி தயாரிப்பது?

இதற்கு முதலில் நமக்குத் தேவை விண்டோஸ் ஒரிஜினல் சிடி. இதனை முதலில் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் சி (C:/XP) டிரைவில் காப்பி செய்திடவும். உங்களுடைய சிஸ்டம் டிஸ்க்கில் லேட்டஸ்ட் சர்வீஸ் காப்பி இருந்தால் நல்லது. இல்லையேல் மைக்ரோசாப்ட் தளம் சென்று அதனையும் காப்பி செய்து அந்த டிரைவில் தனியான போல்டரில்பேஸ்ட் செய்திடவும். மைக்ரோசாப்ட் தளத்தில் என்ன என்ன ஹாட் பிக்ஸ் பைல்கள் கிடைக்கின்றனவோ, அவை அனைத்தையும் காப்பி செய்து பேஸ்ட் செய்திடவும்.

விண்டோஸ் சிஸ்டம் சிடியில் இல்லாத டிரைவர்கள் ஏதேனும் உங்களுக்குத் தேவை என்றால், அவற்றின் தளங்களுக்குச் சென்று அவற்றையும் இதே போல அந்த இரண்டாவது போல்டரில் காப்பி/பேஸ்ட் செய்திடவும்.

இப்போது ஸ்லிப் ஸ்ட்ரீமிங் செயல்பாடு இந்த இரண்டு போல்டரையும் ஒரு ஐ.எஸ்.ஓ. இமேஜ் மூலம் உருவாக்குவதன் மூலம் இணைக்கும். இதற்கு உதவக் கூடிய புரோகிராம் ஆட்டோ ஸ்ட்ரீமர் (AutoStreamer 1.0.33) என்பதாகும். இதனை கீழே உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
தரவிறக்கம் செய்ய

இதனை டவுண்லோட் செய்து ஸ்லிப் ஸ்ட்ரீமிங் செய்திடப் பயன்படுத்தவும். இந்த வேலைகளை எல்லாம் மேற்கொள்ள சிறிது சிரமம் என்றாலும், விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்திடுகையில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை எல்லாம் சுலபமாக மேற்கொள்ளலாமே.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கொழும்பு - ஐரோப்பிய விமான சேவைகள் பல ரத்து

ஐஸ்லாந்தில் வெடித்த எரிமலை கக்கிய புகை மண்டலம் வான்பரப்பில் பரவியதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் சுமார் 17ஆயிரம் விமான சேவைகளை ரத்துச் செய்துள்ளதாக யூரோ கண்ட்ரோல் தெவித்துள்ளது. இதன் காரணமாக லண்டன் மற்றும் ஏனைய ஐரோப்பிய நகரங்களுக்கு கொழும்பிலிருந்து இயக்கப்படும் பல விமான சேவைகள் மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


விமானப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளோர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்னராக தமது பயண ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு விமான சேவை குறித்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் பரவியுள்ள புகைமண்ட லம் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதன் காரணமாகவே இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, நேற்றுப் புறப்படவிருந்த இரு விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய சேவைகள் காமையாளர் ரொஷானி மாசகோரல தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை 2.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட விருந்த இலண்டனுக்கான விமான சேவையும் நேற்றுப் பகல் 1.15 இற்குப் புறப்படவிருந்த மேலுமொரு இலண்டனுக்கான விமான சேவையுமே ரத்துச் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இது தவிர பிராங்போர்டுக்கான விமான சேவையை ரூமேனியா வரையிலேயே நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், பயணிகள் தாம் பயணிக்கவிருக்கும் விமானம் தொடர்பான தகவல்களை 091 7335500 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அயர்லாந்து, பிரிட்டன், பெல்ஜியம்,நெதர்லாந்து, டென்மார்க், சுவீடன், நோர்வே, பின்லாந்து, எஸ்டோனியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாத்திரம் 17 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக ஐரோப்பிய விமானசேவை கட்டுப்பாட்டு அமைப்பான யூரோ கன்ட்ரோல் தெவித்துள்ளது.

இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் குறித்த எரிமலையை அண்டிய பகுதிக்கு பயணித்து அதன் நிலைமைகளை கண்காணித்துள்ள ஐஸ்லாந்து வானிலை மையத்தின் உறை பனி எரிமலை தொடர்பான ஆராச்சியாளர் டாக்டர் மெத்தீவ் ராபர்ட்ஸ், இந்த எரிமலை கக்குவது இன்னும் சில நாடுகளுக்கு நீடிக்கும் எனவும் ஆனால் தற்போது குறைந்தளவான சாம்பல் புகையையே எரிமலை கக்கிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இவ்வாறான நிலைமையே தொடர்ந்தும் நீடிக்குமானால் உள்ளூரில் மட்டுமே அதிக பாதிப்புகள் ஏற்படலாம் என கூறியுள்ள டாக்டர் மெத்தீவ் ராபர்ட்ஸ், சர்வதேச ஆகாய போக்குவரத்தில் குறைந்தளவான அச்சுறுத்தலையே எதிர்பார்க்கமுடியும் என சுட்டிக்காட்டினார்.

ஆசிய நாடுகளிலிருந்த ஐரோப்பாவுக்குச் செல்லும் விமானங்களுக்கு பிரதான நாடாக சிங்கப்பூர் திகழ்வதால் சிங்கப்பூரில் தற்போது ஹோட்டல்கள் விமானப் பயணிகளால் நிரம்பி வழிவதாகவும் தெவித்துள்ள பி.பி.ஸி, இந்த விமானப் போக்குவரத்துத் தடை காரணமாக விமான சேவை நிறுவனங்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, April 16, 2010

ரஷ்யாவின் இறுதி அணு உலை இன்றுடன் மூடப்படுகிறது


கடந்த 52 ஆண்டுகளாக அணு ஆயுதங்களுக்குத் தேவையான புளுட்டோனியத்தைத் தயாரித்து வந்த அணு உலையை இன்றுடன் ரஷ்யா இழுத்து மூடுகிறது. இதன்மூலம் புளுட்டோனியம் தயாரிக்கும் ரஷ்யாவின் கடைசி அணு உலையும் மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


வொஷிங்டனில் நடந்த சர்வதேச அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டில் இந்த முடிவை ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் அறிவித்தார்.

அணு ஆயுதம் வைத்துள்ள அனைத்து நாடுகளும் அதைக் குறைப்பதற்கும், புதிய அணு ஆயுத தயாரிப்பை கட்டுப்படுத்தவும், அணு ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், அவை தீவிரவாத அமைப்புகளிடம் சிக்கிவிடாமல் தடுப்பது குறித்தும் விவாதிக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் முயற்சியால் வொஷிங்டனில் இந்த மாநாடு நடந்தது.


மாநாட்டில் சீனா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 47 நாடுகள் பங்கேற்றன.

இந் நிலையில், ரஷ்யாவின் பனி படர்ந்த சைபீரியா பகுதியில் உள்ள புளுட்டோனியம் தயாரிக்கும் அணு உலை இன்றுடன் (ஏப்ரல் 15) மூடப்படுவதாக ரஷ்ய அதிபர் மெத்வதேவ் அறிவித்துள்ளார்.


சைபீரியாவின் ரகசிய நகரான ஸெலெஸ்னோகோர்க்கில் உள்ள இந்த உலையில் புளுட்டோனியம் தயாரிப்பு கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதமே நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், அங்கு மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், அந்த அணு உலையை மொத்தமாகவே மூடுவதாக அறிவித்தார்.

அமெரிக்கா-சோவியத் யூனியன் இடையே பனிப் போர் நடந்து வந்த காலகட்டத்தில் ரஷ்யாவில் 13 அணு உலைகளில் புளுட்டோனியம் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், சோவியத் யூனியன் உடைந்து சிதறிய பிறகு பெரும்பாலான உலைகள் புளுட்டோனிய தயாரிப்பை நிறுத்திவிட்டன. 2008ஆம் ஆண்டு அதில் பெரும்பாலானவை மூடப்பட்டுவிட்டன.


அதே போன்று, அமெரிக்காவில் 14 அணு உலைகளில் புளுட்டோனியம் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்தத் தயாரிப்பை சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவும் நிறுத்திவிட்டது.

அமெரிக்காவிடமும் ரஷ்யாவிடமும் இப்போது பல நூறு தொன் அளவுக்கு ஆயுத ரக புளுட்டோனியம் இருப்பில் உள்ளது. இதில் தலா 34தொன் புளுட்டோனியத்தை அழித்துவிடுவது என இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இதைக் கொண்டு 17,000 அணு குண்டுகள் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 34தொன் புளுட்டோனியத்தை அழிக்க சுமார் ரூ. 25,000 கோடி வரை செலவாகும். இதற்காக ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஓரளவு நிதியுதவியும் செய்ய முன் வந்துள்ளது.

உலகின் 90 சதவீத அணு ஆயுதங்களை வைத்துள்ள அமெரிக்காவும் ரஷ்யாவும் கடந்த வாரத்தில் இன்னொரு முக்கிய முடிவையும் எடுத்தன. அதன்படி இரு நாடுகளும் தலா 1,550 அணு குண்டுகளை ஒழித்துவிடுவது என்றும், அணு ஆயுதங்களுடன் தயார் நிலையில் உள்ள தலா 800 ஏவுகணைகளை செயலிழக்கச் செய்வது என்றும் முடிவு செய்துள்ளன. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஐஸ்லாந்து எரிமலை வெடித்து வானம் புகை மயம் : ஐரோப்பாவில் விமான சேவைகள் ரத்து

ஐஸ்லாந்து நாட்டில் உள்ள எரிமலை வெடித்ததில் கிளம்பிய படு பயங்கரமான சாம்பற்புகையால் வான்வெளி முழுதும் புகை மயமாக காட்சியளிக்கிறது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட வடக்கு ஐரோப்பாவில் சுமார் 4000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது


விமான எந்திரங்களில் கோளாறு ஏற்படும் என்பதால் பிரிட்டனுக்கு உள்ளேயும், வெளியேயும் வான்வெளியில் எந்த ஒரு விமானமும் சில மணி நேரங்களுக்கு பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கணிக்க‌க் கூடிய நிலையில் அங்கு நிலவரம் இல்லை என்பதால் வான்வெளி எப்போது விமானப் போக்குவரத்திற்கு தயாராகும் என்பது பற்றி சரியான தகவல்கள் தற்போது வரை இல்லை.

இந்தப் புகை நார்வே, சுவீடன், ஃபின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளின் வான்வெளியையும் விமானப் போக்குவரத்திற்கு லாயக்கற்றதாகியுள்ளது.

இந்த எரிமலை சாம்பற்புகையில் அடங்கியிருக்கும் பாறைகளின் துகள்கள், கண்ணாடி, மற்றும் மண் ஆகியவற்றால் விமான எந்திரம் நடுவானில் பழுதடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே இந்த எரிமலை வெடிப்பால் பனிமலை ஒன்று வேகமாக உருகி வருவதால் அப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

போக்குவரத்து நிறுத்தப்பட்ட விமான நிலையங்கள்:

ஆபர்தீன், எடின்பர்க், கிளாஸ்கோ விமான நிலையங்கள் மூடப்பட்டது.

லிவர்பூல் ஜான் லென்னான் விமான நிலையம், மான்செஸ்டர் மற்றும் நியூகாசில் விமான நிலையங்கள்.

பர்மிங்காம் விமான நிலையத்தில் கணிக்க முடியாத அளவுக்கு விமானங்கள் தாமதம். தவிரவும் ஈஸ்ட் மிட்லேன்ட், லீட்ஸ் பிராட்ஃபோர்ட், கார்டிப், பிரிஸ்டல் விமான நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள காட்விக், ஹீத்ரூ, மற்றும் சிட்டி விமான நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பத்தாயிரக்கணக்கான பயணிகள் அவதி.

பிரிட்டனின் அனைத்து உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சாம்பற்புகை 55,000 அடி உயரத்திற்கு சென்றுள்ளது இது வடக்கு பிரிட்டன், மற்றும் ஸ்காட்லாந்து ஊடாகக் கடந்து செல்லும் என்று ஐரோப்பிய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டகம் தெரிவித்துள்ளது.

ஆனால் வா‌னிலை மைய அதிகாரிகளோ, இந்தப் புகை மூட்டம் முழுதும் விலக சில நாட்கள் பிடிக்கும் என்று கூறுகின்றனர்.

ஏற்கனவே 1982ஆம் ஆண்டும், 1989ஆம் ஆண்டும் எரிமலை சாம்பற்புகையில் சிக்கிய இரு விமானங்களிலும் அதன் 4 எஞ்சின்களும் பழுதடைந்து பெருமாபாடு பட்டு தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

வீட்டிலேயே புற்றுநோய் ஸ்கேனர் : இந்தியர் சாதனை

புற்று நோய் மருத்துவ உலகிற்கு சவாலான கொடிய வியாதி. இதன் அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம். இந்த கொடிய வியாதியையும் எளிமையாக பரிசோதிக்க இந்தியர் ஒருவர் நவீன ஸ்கேனரை உருவாக்கி உள்ளார்.


ரத்தப் பரிசோதனை மூலமே எந்த வகையான புற்றுநோயையும் கண்டு பிடித்து விடும் அந்த நவீன ஸ்கேனர். டாக்டர்களிடம்கூட செல்ல வேண்டாம். நீங்களே பரிசோதித்துப் பார்க்கும் வகையில் எளிமையானது, விலை குறைவானது இந்த ஸ்கேனர்.

அசாம் மாநிலத்திலுள்ள வடகிழக்கு குன்றுகள் பல்கலைக்கழக (N.E.H.U) பேராசிரியர் ஆர்.என்.சாரன் இந்த கருவியை வடிவமைத்துள்ளார். பயோ மாலிகுலர் மார்க்கர் எனப்படும் இந்தக் கருவி கையாளுவதற்கு எளிமையானது. தனிநபர்கூட பரிசோதித்துப் பார்க்கலாம். சில துளிகள் ரத்தம் கொடுத்தால் போதும். சிறிது நேரத்தில் பல்வேறு தகவல்களை அட்டவணைப்படுத்தி காட்டிவிடும்.

கருப்பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை போன்ற சோதனைகளையும் செய்து கொள்ளலாம். இதற்கு 100 முதல் 150 ரூபாய்தான் செலவாகும். 20 ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு சாரன் இதை உருவாக்கி இருக்கிறார்.

'இந்தியர்களின் அடிப்படை நிலையை உணர்ந்து கொண்டு இதை வடிவமைத்ததாக அவர் பெருமிதம் கொள்கிறார். எளிமையான இந்த ஸ்கேனர் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெறும். வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, April 15, 2010

‌தி‌க்குவா‌ய்‌க்கு மரபணு மூல‌ம் ச‌ி‌கி‌ச்சை

தி‌க்கு வா‌ய் ‌வியா‌தி உடையவ‌ர்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை முறை எ‌ன்றா‌ல் அது அவ‌ர்களது மன‌நிலையை உறு‌தி‌ப்படு‌த்து‌ம் வகை‌யி‌ல் ம‌ட்டுமே அமை‌ந்‌திரு‌ந்தது.


அதாவது ‌தன‌க்கு ‌தி‌க்கு வா‌ய் எ‌ன்ற க‌வலையை குறை‌ப்பத‌ற்கான ப‌யி‌ற்‌சியு‌ம், தெ‌ளிவாக‌‌ப் பேசுவத‌ற்கு எல‌க்‌ட்ரா‌னி‌க் கரு‌வியுமே பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு வ‌ந்தது.

ஆனா‌ல் ஆ‌ய்‌வி‌ன் மூல‌ம் க‌ண்ட‌றி‌ய‌ப்ப‌ட்டு‌ள்ள மரபணு‌க்களை‌ப் ப‌ய‌ன்படு‌த்‌தி பு‌திய மரு‌ந்தை உருவா‌க்க ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் ந‌ம்‌பி‌க்கை தெ‌ரி‌வி‌த்து உ‌ள்ளன‌ர்.

அதாவது உட‌லி‌ல் உ‌ள்ள 3 மரபணு‌க்க‌ள்தா‌ன் ‌தி‌க்கு வா‌‌ய்‌க்கு காரணமாக அமை‌கிறது.

இவ‌ற்‌றி‌ன் செய‌ல்படு‌ம் ‌வித‌த்‌தி‌ல் மாறுபாடு ஏ‌ற்ப‌ட்டா‌ல் பே‌ச்சு‌த் ‌திற‌னிலு‌ம் பா‌தி‌ப்புக‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன. வேறு‌சில வள‌ர்‌ச்‌சிதை மா‌ற்ற‌த்‌திலு‌ம் இவை ப‌ங்கா‌ற்று‌கி‌ன்றன. எனவே மரபணு‌‌வி‌ன் மூல‌ம் ‌தி‌க்கு வா‌ய்‌க்‌கு ‌விரை‌வி‌ல் ‌தீ‌ர்வு காணலா‌ம். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

எலும்புகளுக்குப் பதிலாக…

எலும்பு தேய்மானம் என்பது எல்லா வயதினருக்கும் ஏற்படும் பாதிப்பாக இருந்து வருகிறது. எலும்புகள் தேய்ந்துவிட்டால் உடல் இயக்கம் பெரிதும் பாதிக்கப்படும். இத்தகைய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க எலும்புகள் தானமாக கிடைப்பது அரிது.


இதுவரையில் டைட்டானியம் என்ற உலோகம் முலம் எலும்பு மாதிரிகள் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டு வந்தது. இது மிகவும் விலை உயர்ந்தது. மேலும் இவற்றில் சில குறைபாடுகளும் உண்டு.

இந்த நிலையில் உலோகங்களைப் பயன்படுத்தாமல், செயற்கையாகவே எலும்புகளை தயாரித்து பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நிரு பித்துள்ளனர். ஸ்டெம் செல் முலம் எலும்புகளை வளர்த்து எடுக்கும் முறையில் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

ஆய்வகத்தில் சோதனைக் குழாயில் ஸ்டெம் செல் முலம் தாடை எலும்பை அவர்கள் வளர்த்துள்ளனர். இந்த முறையில் எந்த வடிவிலான எலும்பையும் வளர்க்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

எதிர்காலத்தில் எலும்பு தேய்மான சிகிச்சையில் இந்த முறை புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, April 14, 2010

உலகப் பெரும் விரைவாக்கி செர்ன் ஒரு கால யந்திரம்

"செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists). இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !"


·பிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)

"இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது. அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும். மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி வி¨சையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.

டெஸ்பியோனா ஹாட்ஷி·போடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)
"பிரபஞ்சப் பெருவெடிப்பு நிகழ்ந்து பில்லியன்த் தசம விநாடியில் (Billionth of a Second of the Big Bang) தோன்றிய திரைக் காட்சியைக் கண்டு விட்டோம். இந்தப் புதிய கட்டம் "முதல் பௌதிகம்" என்று பெயர் அளிக்கப் படுகிறது ! இவற்றைப் போல் இன்னும் ஈராண்டுகள் செய்யப் போகும் பல பில்லியன் புரோட்டான் மோதல்களின் துவக்கக் கட்டம் இது."


ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist)

"இது உலகத் தோற்றத்தைக் கூறும் முதற்பிரிவு (Genesis Chapter -1) விளக்கம் நோக்கி மனிதர் வைக்கும் மாபெரும் கால்தடம் ! செர்ன் உடைப்பி பிரபஞ்சத் தோற்றப் படைப்பு யந்திரம் (Genesis Machine) ! பிரபஞ்ச வரலற்றின் மாபெரும் மகத்தான காட்சியை மீண்டும் திரையிட்டுக் காட்ட செர்ன் உதவுகிறது ! புதிரான இந்த நுண்துகள்களின் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தில் நாம் யாரென்னும் கருத்தை மாற்றி விடலாம் !"

மிஸியோ காக்கு, பௌதிக மேதை (Michio Kaku, New York)

"மேற்கட்ட செர்ன் சோதனையில் விரைந்து பாயப் போகும் எதிர் எதிர் ஒளிக்கற்றைகள் நேரிணைப்பு (Alignment of Beams) செய்யப் படவேண்டும். அது நிபுணருக்குப் பெரும் சவாலானது. அட்லாண்டிக் கடலின் அகண்ட இருபுறக் கரைகளிலிருந்து இரண்டு எதிர், எதிர் ஊசிகளை அனுப்பிக் கடல் நடுமையத்தில் அவற்றை மோத வைக்கும் சவாலைப் போலாகும்,"

ஸ்டீவ் மையர்ஸ் (Steve Myers, Director of CERN Accelerators & Technology)

மனித இனம் தொடுவானுக்கு அப்பால் விண்வெளியை நோக்கி அங்கே என்ன உள்ள தென்று எப்போதுமே அறிய விரும்பியுள்ளது ! 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த பிரபஞ்சப் பெருவெடிப்பு நிகழ்ச்சி ஓர் வரையறைக் குட்பட்ட காலத்தில்தான் எழுந்திருக்கிறது ! அதாவது 15 பில்லியன் ஆண்டுக்கு முந்தி உண்டான வடிவுகளை (Objects) நாம் காண முடியாது ! காரணம் அதுவரைப் பயணம் செய்யும் கால வரம்பு ஒளிக்குப் போதாது ! ஆதலால் இன்னும் ஆழமாய் நோக்கி உளவச் சக்தி வாய்ந்த மிகக் நுண்ணிய மின்னலைகளை (Short Waves) நாம் பயன்படுத்த வேண்டி யுள்ளது. ஆகவேதான் (செர்ன் போன்ற) பூத விரைவாக்கி யந்திரங்கள் பரமாணுக்களை மிகச் சக்தியூட்டிச் சோதிக்கத் தேவைப்படுகின்றன !

விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டி·பென் ஹாக்கிங் (பிப்ரவரி 3, 1994)
"புரோட்டான் ஒளிக்கற்றைச் சோதனை துகள் உடைப்புச் சோதனைச் சாதனங்கள் செம்மையாக இயங்குவதைக் காட்டுகிறது. இந்தச் சாதனை இயக்கம் சீரிணைப்புச் செம்மை வினை (Work of Synchronization). துரிதக் காந்தங்கள் முதலில் சீரிணிப்பாகி ஒளிக்கற்றையை வேகத்தை வளர வைத்து ஒரு விரைவாக்கியிலிருந்து மறு விரைவாக்கிக்கு மாற்றி முடிவில் பெரு உடைப்பு யந்திரத்துக்குத் திருப்ப வேண்டும். அப்போது யந்திரத்தின் சீரிணைப்பும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்தகைய நிகழ்ச்சி 100 பிக்கோ வினாடிக்குள் (Pico-sceconds) நேர்ந்து விடும்." (One Picosecond = 1 /10^12 Sec)

கியான்லுயிகி அர்துயினி (Gianluigi Arduini) (LHC Deputy Head of Hardware Commissioning)


மனதைக் துள்ள வைக்கும் உச்ச சக்தி வானியல் பௌதிகம் (High Energy Astrophysics) நுட்பத் துகளை பிரமாண்டத்துடன் பிணைக்கிறது. இத்துறையில் எழுந்த முன்னேற்றக் கோட்பாடுகள் பிரபஞ்சத் துவக்கத்தின் நிகழ்ச்சிகளையும், அப்போது தோன்றிய பேரளவுச் சக்தி வாய்ந்த இயக்கங்களையும் உளவு செய்ய விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. அத்துடன் அடுத்த சில ஆண்டுகளுக்கு மேலும் புதுக் கண்டுபிடிப்புகள் தோன்றுவதற்கு உறுதி அளிக்கின்றன.

கெல்லி ஜாகர், (Kellie Jaeger, Astronomy Magazine)
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே புரோட்டான்களும், நியூட்ரான்களும் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட மூலாதாரப் பரமாணுக்கள் (Subatomic Particles). அவை கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் அவைதான் அணுவின் பிளக்க முடியாத மூலப் பரமாணுக்களாய்க் கருதப்பட்டன. 1960 ஆண்டுகளில் அவற்றுக்கும் நுட்பமான துகள்களால் பரமாணுக்கள் உருவாகி யுள்ளன என்று அறியப் பட்டது. புதுமுறைச் சோதனைகள் மூலம் புரோட்டான், நியூட்ரான் ஆகிய பரமாணுக்களின் உறுதியற்ற உள்ளமைப்பை இப்போது அழுத்தமாய்ச் சொல்ல முடிகிறது.


கிளாஸ் ரித் & ஆன்டிரியா சே·பர் (Klaus Rith & Andreas Schafer)
செர்ன் பூத விரைவாக்கி ஏன் கால யந்திரமாகக் கருதப் படுகிறது ?


செர்ன் பூத விரைவாக்கி யந்திரம் துகள் பௌதிகத்தில் இதுவரை விஞ்ஞானிகள் தீர்வு காண முடியாத வினாக்களுக்கு விடை அறிய உதவும். சென்ற சில பத்தாண்டுகளாய்ப் பிரபஞ்சத்தை உருவாக்கிய அடிப்படைத் துகள்கள் பற்றியும் அவற்றின் இயக்க ஈடுபாடுகள் பற்றியும் விஞ்ஞானிகள் விளக்கமாக உளவி அறிந்துள்ளார். அதுவே 1964 இல் துகள் பௌதிகத்தின் நிலைத்துவ மாடல் (Standard Model of Particle Physics) எனப் பெயரிடப் பட்டது. ஆனால் அந்த மாடலில் இடைவெளி காணப்பட்டு முழு விளக்கமும் காணப்பட வில்லை. அதைப் பூர்த்தி செய்யவே செர்ன் போன்ற பூத விரைவாக்கி யந்திரங்களின் உதவி விஞ்ஞானிகளுக்குத் தேவைப்பட்டது.
பிரபஞ்சத்தில் நிறை (Mass) என்பது என்ன ? அதன் மூலாதாரம் என்ன ? ஒரு துகளுக்கு எப்படி நிறை உண்டாகிறது ? ஐஸக் நியூட்டன் அதை விளக்கத் தவறினார். ஏன் சிறு துகள்களுக்குத் தனித்துவ நிறை உள்ளது ? ஏன் சில துகள்களுக்கு நிறை இல்லாமல் போனது ? தற்போது இவற்றுக்கு எல்லாம் முறையான பதில் கிடையாது. இந்த வினாக்களுக்கு விடை அறிய இதுவரை புலப்படாத, இருக்கும் என்று மட்டும் யூகித்த 'ஹிக்ஸ் போஸன்' (Higgs Boson) நுண்துகள் உதவி செய்யும். செர்ன் விரைவாக்கியின் குறிக்கோளில் ஹிக்ஸ் போஸான் இருப்பை மெய்ப்பித்தல் ஒன்றாகும். பிள்ளைப் பிரபஞ்சத்தின் துவக்க காலங்களில் ஹிக்ஸ் போஸான் போன்ற மூல அடிப்படைத் துகள்கள் உருவாகி இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் இப்போது யூகிக்கிறார். செர்ன் விரைவாக்கியில் அட்லாஸ், சி.எம்.எஸ் சோதனைகள் (Atlas & CMS Experiments) (CMS -Compact Muon Solenoid) ஹிக்ஸ் போஸான் நுண்துகளைத் தேடிக் கண்டுபிடிக்கும்.

பிரபஞ்சத்தில் பெரும்பான்மையாக இருப்பது கண்ணுக்குப் புலப்படாத 96% மொத்தமான கருஞ்சக்தியும், கரும்பிண்டமும் (Dark Energy & Dark Matter) என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். எறும்பிலிருந்து காலக்ஸி வரை நாம் பிரபஞ்சத்தில் காணும் அனைத்தும் சில அடிப்படைத் துகள்களால் உருவாக்கப் பட்டவை. அவற்றைத் தொகுத்துப் பிண்டம் (Matter) என்று குறிப்பிடுகிறோம். கண்ணுக்குப் புலப்படும் அந்த நிறை பிரபஞ்சத்தில் 4% அளவே. மீதம் பிரபஞ்சத்தில் இருந்து நம் கண்ணுக்குப் புலப்படாத 96% கருஞ்சக்தியும், கரும்பிண்டமும் என்று கருதப் படுகிறது. ஆனால் அத்தகைப் பேரளவு நிறையும் சக்தியும் நேரடியாகத் தெரிவதில்லை. அவற்றை உளவிப் பிரபஞ்சத்தில் காண்பது அரிது. ஆனால் அவற்றின் ஈர்ப்பு விசையை மட்டும் அறிய முடிகிறது. கருச்சக்தி காலக்ஸிகளைத் துரிதமாய் விரைவாக்கம் செய்வதை வைத்து அறியப் படுகிறது. ஆயினும் கரும்பிண்டத்தையும் கருஞ்சக்தியையும் உளவி அறிவது சவாலான அகிலவியல் விஞ்ஞானமாகவும் துகள் பௌதிக மாகவும் (Cosmology & Particle Physics) இருந்து வருகிறது. செர்ன் விரைவாக்கியின் அட்லாஸ், சி.எம்.எஸ் சோதனைகள் பெரும் சீர்வடிவத் துகள்களைத் (Supersymmetric Particles) தேடிக் கரும்பிண்டக் கட்டமைப்பு நியதியை ஆராயும்.

பிரபஞ்சப் புதிர்களை விடுவிக்கும் செர்ன் விரைவாக்கி


செர்ன் செய்து காட்டும் சோதனையில் விண்வெளியில் இணைப் பிரபஞ்சம் (Parallel Universe) ஒன்றிருப்பதைக் காட்டலாம் ! பிரபஞ்சத்தின் முதற் காட்சியைத் திரையிட்டுக் காட்டலாம். புதிய நூற்றாண்டின் நூதனக் கண்டுபிடிப்பான நுண் கருந்துளையை (Nano-Blackholes) உருவாக்கிக் காட்டலாம் ! சில விஞ்ஞானிகள் அவ்விதம் நுண் கருந்துளைகள் உண்டாக்க செர்ன் அசுர விரைவாக்கிக்கு ஆற்றல் போதாது என்று கூறுகிறார் ! ஆனால் ஓர் இணைப் பிரபஞ்சம் இருக்குமாயின் மிகைப்பட்ட ஈர்ப்பாற்றல் கிடைத்து நுண் கருந்துளைகள் உருவாகலாம் என்றும் கருதப்படுகிறது. 'பல்வகைப் பிரபஞ்ச நியதி' (Multiverse Theory) நமது பிரபஞ்சத்துக்கு மிக்க அருகில் அடுத்தோர் பிரபஞ்சம் இருக்கலாம் என்று அனுமானம் செய்கிறது. இந்தக் கோட்பாடு பிரபஞ்சத்தில் 96% இருப்பாகக் கருதும் கருஞ்சக்தி, கரும்பிண்ட (Dark Enerrgy & Dark Matter) உற்பத்திக்குக் காரணமாகும் 'ஈர்ப்பாற்றல் கசிவு' (Gravity Leaks) போன்ற சில விளைவுகளுக்குப் பொறுப்பேற்கும் விளக்கம் அளிக்கலாம்.

நமது பால்வீதியும், பேரடுக்கு ஒளிமந்தைக் கொத்துக்களும் (Milkyway Galaxy & Super-Clusters of Galaxies) கொண்ட பிரம்மாண்டமான விண்வெளிக் கொள்ளளவு கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒரு 'பூதக் கவர்ச்சி' நிறையின் (The Great Attractor Mass) இழுப்பை நோக்கிப் போய்க் கொண்டுள்ளன. அந்தக் கவர்ச்சி நிறை பரிதி மண்டலத்திலிருந்து சுமார் 250 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது என்று ஊக்கிக்கப் படுகிறது ! பால்வீதி காலக்ஸியிலிருந்து 2.2 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள காலக்ஸி ஆன்றோமெடா (Andromeda Galaxy) பால்வீதி நோக்கி மணிக்கு 200,000 மைல் வேகத்தில் நெருங்கிக் கொண்டு வருகிறது ! இம்மாதிரிக் கவர்ச்சி ஓர் ஈர்ப்பாற்றல் இழுப்பாகத்தான் இருக்க முடியும். ஆனால் நமக்கு தெரிந்த அவ்வித இழுப்புக்கு ஏற்ற நிறை அங்கே இல்லை. அதாவது பத்து பால்வீதி அளவுக்குச் சமமான ஏதோ ஒரு புலப்படாத நிறை இரண்டு காலக்ஸிகளுக்கும் இடையே இருந்து ஆன்றோமெடா ஒளிமந்தை நகர்ச்சியை இவ்விதம் இயக்கி வருகிறது.

சில விஞ்ஞானிகள் செர்ன் விரைவாக்கியை விடவும் பேரளவு பூத வடிவ விரைவாக்கியைக் (Ultimega Atom Smasher) கட்ட இப்போதே திட்டமிடுகிறார். நான்கு விநாடிக்கும் மேலாக ஆயுள் நீடிக்கும் 'மூவான் உடைப்பி' (Muon Collider) எனப்படும் எதிர்காலப் பேரசுர உடைப்பி ஒன்று தயாராகச் சிந்தனை உருவாகி வருகிறது. (1 Muon = 200 Electrons Size). எதிர்கால மூவான் உடைப்பி நிறுவனம் ஒரு பெரும் சவாலாக இருக்கும். மூவான் புரோட்டான் நிறைக்கு ஏழில் ஒரு பங்கு (1 by 7) நிறை கொண்டது. ஆகவே புரோட்டானை விட வெகு வேகத்தில் மூவானை விரைவாக்க முடியும். மேலும் குறைந்த ஆற்றலில் செய்ய முடியும். எலெக்டிரானை விட 200 மடங்கு நிறையுள்ளது மூவான். அடுத்து விரைவாக்கி யந்திரங்களில் காந்த தளங்கள் வளைக்கும் போது சீரோட்டக் கதிர்வீச்சால் (Synchrotron Radiation) மூவான் கதிர்வீச்சாய் மாறிப் போகாது ! விரைவாக்கி வட்டக் குழல்களில் மூவான்களை ஏற்றப் பட்ட ஒளிச்சக்தியில் வைத்திருக்க முடியும். ஆனால் அவற்றை விடச் சிறிய எலக்டிரான்களை விரைவாக்க மாபெரும் நேர்போக்கு விரைவாக்கியால்தான் (Huge Linear Accelerators) முடியும். மூவானின் நீடித்த ஆயுட் காலம் (Stable Lifetime) 2.2 மைக்ரோ விநாடிகள். நிறை குன்றிய அவற்றை ஒளிவேகத்துக்கு மிக ஒட்டிய வேகத்தில் விரைவாக்க முடியும். அகிலக் கதிர்கள் (Cosmic Rays) உண்டாக்கும் மூவான் நுண்துகள்கள் பூமியில் விழுந்து நாம் உளவும் வரை நீடிப்பதில்லை. செர்ன் விரைவாக்கியில்தான் மூவானை உருவாக்க இயலும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, April 13, 2010

பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில், (வேற்றுக்கிரக பறக்கும் தட்டினை ஒத்த) ஒரு விண்கலமொன்றினை இரண்டு யுத்த விமானங்கள் துரத்திச்சென்ற காட்சி, பொதுமக்களின் கமேராவில் பதிவாகியுள்ளது.


மிட்லாண்ட் Service Park இல் இருந்து, தொடர்ந்து 30 செக்கன்களுக்கு இக்காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

வட்டவடிவில் மிகச் சிறியதாக காட்சியளிக்கும் இவ்விண்கலத்தினை இரண்டு அதிவேக ஜெட் வகை விமானங்கள் துரத்திப்பிடிக்கச் சென்ற இக்காட்சி அப்பிரதேச மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது.

ராடார் மூலம் இப்பறக்கும் தட்டு அவதானிக்கப்பட்டதும், உடனடியாக அதனை துரத்திச் செல்லும் முயற்சியில் இறங்கியதாம் இங்கிலாந்து விமானப்படை! எனினும் இம்முயற்சி வெற்றி அளித்ததா என மூச்சுக்காட்டவில்லை என்பது தான் ஏமாற்றம்!

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் நிக் போக், இது பற்றி தெரிவிக்கையில்,
நான் எனது வாழ்நாளில்,அவதானித்த ஒரு சிறந்த வானொளி காட்சி இது என்றார். எனினும் பாதுகாப்பு அமைச்சு, இன்னமும் இக்காட்சிகள் பற்றி கருத்தேதும் கூற முன்வரவில்லை எனது குறிப்பிடத்தக்கது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

தோல் புற்றுநோயை குணப்படுத்த புதிய மருந்து

தோல் புற்றுநோயால் உலகம் முழுவதும் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகின்றனர். இங்கிலாந்தில் கடந்த 25 ஆண்டுகளில் மற்ற புற்றுநோய்களைவிட தோல் புற்றுநோயினால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


எனவே, இதற்கான மருந்தை சிகாகோ ரஷ் மெடிக்கல் சென்டர் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஹோவர்ட் கவுப் மேன் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.

இந்த மருந்தை இங்கிலாந்தில் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தோல் நோயினால் மிகவும் பாதிக்கப்பட்ட 50 நோயாளிகளுக்கு புதிய மருந்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர்களுக்கு 9 மாதங்களுக்கு மேல் அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் 16 சதவீதம் பேருக்கு முற்றிலும் நோய் குணமானது. 28 சதவீதம் பேருக்கு பாதிக்கு மேல் குணமானது.

இந்த மருந்து, புற்று நோயை ஏற்படுத்தும் செல்களை அழித்து ஆரோக்கியமான செல்களை உருவாக்குவதாக பேராசிரியர் டாக்டர் ஹொவர்ட் தெரிவித்துள்ளார்.

இன்னும் பல ஆய்வுக்குப்பின் இந்த புதிய மருந்து 5 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்

அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம்.


இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம்.

குறிப்பிட்ட காலைடைவெளியில் ஒழுங்காக Defragment செய்தல். ஆகக்குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும். இதன்போது hard drive இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் fileகள் ஒழுங்காக அடுக்கப்படும். இது fileகளை இலகுவாக திறப்பதற்கு ஏதுவாகும்

Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.

hard drive இல் இருக்கும் தேவையற்ற games, music, pictures களை அளித்து விடுங்கள். இவை hard drive ஐ அடைத்துக்கொண்டு மெதுவாக இயங்கச்செய்கின்றன. உங்கள் hard drive, நிரம்ப்பிப்போய் இருந்தால் அது RAM ஐயும் processing ஐயும் பாதித்து அடிக்கடி பழுதுகள ஏற்பட வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.

சிறந்த anti-virus program ஐ பாவியுங்கள். வாரத்திற்கு ஒருமுறையேனும் உங்கள் laptop ஐ முழுமையாக் scan பண்ணுங்கள்.பெரும்பாலான anti-virus program களில் இதை தன்னிச்சையாக செய்வதற்கு வசதிகள் உண்டு.

recycle bin ஐயும் அடிக்கடி வெறுமையாக்குங்கள். தேவையற்றவறை bin இல் வைத்திருப்பதால் பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை.

temporary Internet Fileகளை அழியுங்கள். நீங்கள் ஒவ்வொருமுறையும் இணையப்பக்கத்திற்கு செல்லும்போதும் temporary Internet Fileகள் சேமிக்கப்படுகின்றன. நீங்கள் எந்ந்தவொரு browser ஐ பயன்படுத்தினாலும் அதன் cache ஐ clear செய்ய மறந்து விடாதீர்கள்.

laptop ஒவ்வொருமுறையும் on செய்யப்படும்போது தாமாகவே இயங்கும் startup programகளை குறையுங்கள். இவை எல்லாம் desktop தெரியாவிட்டாலும் பின்னணியில் இயங்கிக்கொண்டு இருப்பதால் RAM ஐ பயன்படுத்திக்கொண்டிருக்கும். எப்படி "msconfig" செய்வது என்று அறிந்து manualஆக தேவையற்றவற்றை தாமாக இயங்குவதை தடைசெய்யுங்கள்.

laptopஐ மென்மையான தளங்களில் வைப்பதை தவிருங்கள். மெத்தை சோபா போன்றவை உங்கள் laptop இனுள் காற்று உட்புகுவதையும் வெளிவருவதையும் தடைசெய்யும். இதன்போது processor சூடாகுவதால் crashe ஆகும் வாய்ப்புகளும் உதிரிப்பாகங்கள் பழுதாகும் வாய்ப்புகளும் அதிகம்.

தேவையற்ற programகளை Uninstall செய்யுங்கள். Uninstall செய்வதற்கு எப்போதும் Control Panel இல் உள்ள Uninstall வசதியை பாவியுங்கள். இல்லாவிட்டால் பிரச்சினை இன்னும் கூடும்.

அதிக programகளை உபயோகிப்பவரானால் RAM ஐ Upgrade செய்யுங்கள்.

இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிக்க கூடியதாக இருக்கும்.

ஆயினும் இவை எதையும் செய்வதற்கு முன் உங்களது முக்கியமான Fileகளை backup செய்து வைத்துக்கொள்வது அவசியமாகும். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF