Thursday, June 3, 2010

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!

கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.
இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும்.
அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.
கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.
மூளை வளர்ச்சிக்கு முக்கியமான omega-3 fatty acids’ (docosahexaenoic acid)மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம்.
தாய், சிசுவின் உடலில் ‘omega-3 fatty acids’ அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.
32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்டியாக சீனா புதிதாக ஐபெட் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது 

மடிக்கணினிகளின் விற்பனையை பின்னுக்கு தள்ளி தற்போது முதலிடம் பிடித்து வரும் ஐபேட் போலவே இப்போது புதிதாக ஐபெட் என்ற ஒன்றை சீன தொழில் நுட்ப வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர். ஐபேட் -ல் என்ன வெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் இந்த ஐபெட்-லும் பயன்படுத்தலாம்.

பயன்படுத்துவதற்க்கு எளிது மட்டுமல்ல விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வண்ணம் எளிதில் உடையாதவாறு இதன் மேல்பாகம் வடிமமைக்கப்பட்டுள்ளது. இதிலும் ஆண்டிராய்டு அப்ளிகேசன் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 128 MB RAM , 16 GB சேமிக்கும் வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் விலை $105 டாலர் தான்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, June 2, 2010

இதயம் எப்படி இயங்குகிறது?


இதயம் எப்படி இயங்குகிறது? இந்தக் கேள்விக்கான பதிலைச் சொன்னால் எளிமையாக இருப்பதுபோல்தான் தோன்றும். ஆனால் அதன் நடைமுறை மிகவும் நுட்பமானது, நுண்ணியமானது.
பயன்படுத்தப்பட்ட அசுத்தமான ரத்தம், நமது உடலின் பல பகுதிகளில் இருந்து பலவகையான சிறிய சிரைகளின் (Veins) வழியாக இதயத்தின்  வலப்பக்க மேல் அறைக்குக் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வலப்பக்க கீழ் அறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. பிறகு இந்த ரத்தமானது  நுரையீரல் தமனியின் வழியாக நுரையீரல்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
நுரையீரல்களில் என்ன நடக்கிறது?
நுரையீரல்களில் ரத்தமானது தூயமையாக்கப்பட்டு உயிர்வளி (அ) பிராண வாவு (அ) ஆக்ஸிஜன் (oxygen) சேர்க்கப்படுகிறது. பிறகு சுத்தம் செய்யப்பட்ட ரத்தமானது நுரையீரல் சிரையின் வழியாக இதயத்தின் இடப்புறம் உள்ள மேல் அறையை அடைந்து அடுத்து இதயத்தின் கீழ் அறையை அடைகிறது, இதயம் சுருங்கும்போது கீழ் அறையில் இருந்து ரத்தம் வெளியேறி மகா தமனியின் வழியாக ஆங்காங்கே உள்ள பலவகையான கிளைகளின் வழியாக உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.
இதயம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் அதில் உள்ள உயிர் தரும் அமைப்புகளும், கழிவுகளை அகற்றும் அமைப்புகளும் நன்றாகச் செயல்பட வேண்டும். தமனிகள்தான் உயிர் தரும் அமைப்புகள் (LIFE GIVERS) என குறிப்பிடப்படுகின்றன. ஏனென்றால் இந்த வகை ரத்தக் குழாய்கள்தான் நமது உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உயிர்வளி, உயிர்சத்துகள், ஹார்மோன்கள், உணவு ஆகியவற்றை இடைவிடாது 24 மணி நேரமும் அளிக்கின்றன.
சிரைகள்தான் கழிவுப் பொருள்கள் அகற்றும் அமைப்புகள் (GARBAGE DISPOSAL PARTS) எனப்படுகின்றன. இந்த வகை ரத்தக் குழாய்களும் நன்றாகச் செயல்பட வேண்டும். ஏனென்றால் இந்த அமைப்புகள்தான் உடலில் உள்ள பல கோடிக்கணக்கான திசுக்களில் தேங்கியிருக்கும் கழிவுப் பொருள்களை ரத்தத்தின் மூலமாக இதயத்துக்குக் கொண்டு வருகின்றன. இந்த இரண்டு அமைப்புகள் மட்டுமல்லாது. இதயத்தின் வால்வுகளும் நன்றாகச் செயல்பட வேண்டும், அப்போதுதான் இதயத்தின் பணி சிறப்பாக நடக்கும்.
மேலோட்டமாகப் பார்த்தால் ஒற்றை விசை அமைப்புபோல் இதயத்தின் இரண்டு பக்கங்களையும் சுருங்கி விரிந்து ரத்தத்தைப்பெறும் வேலையையும், அனுப்பும் வேலையையும் செய்வதுபோல் தோன்றும். ஆனால் இதயத்தின் வலப்பக்கம் தனி விசையாகவும், இடப்பக்கம் தனி விசை அமைப்பைக் கொண்டதாகவே கருதப்படுகிறது.
இதயம் துடித்துக் கொண்டிருப்பது ஒன்று. அப்படியானால் இதயம் எந்நேரமும் இயங்கிக் கொண்டேதான் இருக்குமா? அதற்கு ஓய்வு என்பதே கிடையாதா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். பொதுவாக நம் இதயம் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து செயல்படுவது போல் தோன்றும்.
ஆனால் உண்மை நிலை அதுவல்ல.
எந்த உறுப்பாக இருந்தாலும் அது நீண்ட நாள்களுக்கு நன்றாகச் செயல்பட சற்று ஓய்வு தேவை. இதயத்துக்கும் இந்த விதி பொருந்தும். ஆனால் மற்ற உறுப்புகளைப்போல் இதயம் ஓய்வு எடுத்தால் நமது நிலை என்னவாகும்?
இதயம் இயங்கிக் கொண்டே ஓய்வு எடுத்துக் கொள்ள இயற்கையே சில விந்தையான வழிமுறைகளை வகுத்துள்ளது. ஒவ்வொரு முறையும்
சுருங்கி விரியும்போது கிடைக்கும். அரை நொடிப் பொழுதை (Half a second) இதயம் ஓய்வுக்காக பயன்படுத்திக் கொள்கிறது.
இதுபோல் இரவில் தூங்கும் போது நம் உடலில் உள் மிகவும் நுண்ணிய ரத்தக் குழாய்களுக்குத் தேவையான ரத்தத்தை அனுப்புவதை ஓரளவு குறைத்துக் கொள்வதன் மூலமாகவும், இதயமானது தன்னுடைய வேலைத்திறனை குறைத்து ஓய்வு எடுத்துக் கொள்கிறது.
லப், டப்& இவை இதயத்தின் துடிப்பைக் குறிக்கும் சொற்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இதயத்தில் இருந்து எழும் இந்த ஒலிதான் அது  இயங்குவதற்கான அறிகுறி.
அமைதியான நேரத்தில் மற்றவரின் நெஞ்சுப் பகுதியில் கூர்மையாக உங்கள் காதை வைத்தோ அல்லது மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதாஸ்கோப் என்ற கருவியை உங்கள் மார்பில் இடப்பக்கத்தில் வைத்தோ உன்னிப்பாகக் கவனித்தால் இதயத்தின் லப், டப் சத்தத்தை கேட்கலாம்.
முதலில் ஏற்படுவது லப் என்ற ஒலியாகும். இந்த ஒலி ஒரு நொடியில் 10&ல் ஒரு பங்கு நேரம் கேட்கும். இந்த ஒலியை கதவை மூடும் சத்தத்துக்கு ஒப்பிடலாம். இந்த ஒலியானது இதயத்தின் மேல் அறைக்கும், கீழ் அறைக்கும் இடையே உள்ள இரண்டு வால்வுகள் மூடுவதாலும்  இந்த அறைகளில் உள்ள தசைகள் சுருங்குவதாலும் ஏற்படுகிறது.
இரண்டாவது ஒலியான டப் இதயத் தமனிகளில் உள்ள வால்வுகள் மூடுவதால் ஏற்படுகிறது.
இதயம் தொடர்பாக இன்னோர் ஆச்சரியமான தகவலைச் சொல்லட்டுமா? இதயம் என்பது மின் ஆற்றலால் இயக்கப்படும் ஓர் உறுப்பு. இன்னும்  டெக்னிக்கலாகச் சொல்லப்போனால் மின்சாரத்தால் இயக்கப்படும் பம்பிங் (pump) எந்திரம். நம் உடலுக்குள் ஏது மின்சாரம் என நீங்கள் நம்ப  முடியாமல் கேட்பது புரிகிறது.
இதயம் தனக்குத் தேவையான மின் ஆற்றலை (Electric power) தானே உற்பத்தி செய்து தன்னைத் தானே தொடர்ந்து இயக்கிக்
கொண்டிருக்கிறது. இந்த மின் ஆற்றலை இதயம் எப்படி உற்பத்தி செய்கிறது? அதற்காகவே ஒரு சிறப்பு அமைப்பு இதயத்துக்குள் அமைந்துள்ளது.
இதயத்தின் வலது பக்க மேல் அறையின் மேற்பகுதியில் நரம்புகளாலும், தசை நார்களாலும் உருவாக்கப்பட்டுள்ள முடிச்சு போன்ற அமைப்பு  உள்ளது. இந்த நரம்புத் தசை முடிச்சை ஆங்கிலத்தில் சைனோ& ஆக்டீரியல் நோடு (Sino Arterial Node) என்று சொல்வார்கள். சுருக்கமாக  எஸ்.ஏ.நோடு (S.A.Node) என்றும் சொல்வார்கள். இந்த அமைப்பை மோட்டார்களில் உள்ள மின் ஆற்றலை உற்பத்தி செய்யும் அமைப்போடு  ஒப்படலாம்.
இதயத்துக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறிய மின் உற்பத்தி அமைப்பானது நிமிடத்துக்கு 72 முறை என்ற எண்ணிக்கையில் மின்பொறியை  அல்லது மின் ஆற்றலை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இதய மேல் அறையில் தொடங்கும் மின் ஆற்றலானது. மேல் அறைக்கும் கீழ்  அறைக்கும் இடையே அமைந்துள்ள மற்றொரு நரம்பு முடிச்சு அமைப்புவரை (NODE) ஒரே சீராகப் பரவுகிறது. இங்கிருந்து இந்த மின் ஆற்றல்,  ஒரே சீராக இதயத்தின் இடப்பக்கம் உள்ள கீழ் அறையின் கடைசிப் பகுதிவரை பரவுகிறது.
இவ்வாறு மின் ஆற்றல் ஒவ்வொரு முறையும் சீராக இதயம் முழுவதும் பரவுவதால் இதயம் இயக்கப்படுகிறது. மின் ஆற்றலால் இதயம்  நிமிடத்துககு 72 முறை என்ற அளவில் துடிக்கிறது.
உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் இயங்குவதற்கு ரத்தமும், அதன்மூலம் கடத்தப்படும் பிராண வாயுவும் தேவை என்பது எல்லோரும்  அறிந்ததே. அப்படியானால் இதயம் இயங்கவும் ரத்தம் தேலை இல்லையா, அந்த ரத்தத்தை இதயம் எப்படி பெறுகிறது?
ஒரு வங்கியில் சாதாரணமாகப் பணிபுரியும் ஒருவர் தன்னுடைய வங்கியில் அலுவலக நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளைக்  கையாண்டாலும், தன்னுடைய சொந்தத் தேவைக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்தமுடியாது. மாறாக வங்கியில் இருந்து மாத ஊதியமாகப்  பெறும் பணத்தை மட்டும்தான் தன்னுடைய சொந்தத் தேவைக்காகவும், தன்னுடைய குடும்பச் செலவுக்காகவும் பயன்படுத்த இயலும்.  இதுபோல் இதயம் தன்னுடைய அறைகளில் கரை புரண்டு ஓடும் தூய்மையான ரத்தத்தை தான் இயங்குவதற்காக நேரிமையாகப்  பயன்படுத்துவதில்லை. மாறாக உடலின் மிகப்பெரிய ரத்தக் குழாயாகிய மகா தமனியில் (Aorta) இருந்து முதல் கிளைகளாகப் பிரியும் இதயத்  தமனிகள் (CORONARY ARTERIES) மூலமாகத் தனக்குத் தேவையான ரத்தத்தை இதயம் பெறுகிறது. மகா தமனியின் இருந்து முதல்  கிளைகளாக மூன்று தமனிகள் பிரிகின்றன. இந்த மூன்று ரத்தக் குழாய்கள்தான் இதயம் இயங்குவதற்குத் தேவையான உயிர்வளி, ரத்தம், ஊட்டச் சத்துகள் ஆகியவற்றை வழங்குகின்றன. குளிர்பானங்கள் குடிப்பதற்குப் பயன்படுத்தும் உறிஞ்சும் குழல்களின் (STRAWS) அளவில்தான இதயத்  தமனிகள் இருக்கும்.
மனிதனின் மொத் எடையில் இதயமானது 200&ல் ஒரு பங்கு என்ற அளவில்தான் இருக்கிறது. அளவு சிறயதாக இருந்தாலும், மனிதனின்
உடலில் ஓடிக்கொண்டிருக்கும் மொத்த அளவில் 200&ல் ஒரு பங்கு அளவுள்ள ரத்தத்தை இதயம் பயன்படுத்திக் கொள்கிறது.
இதயத்துக்கு ரத்தம் அளிக்கும் ரத்தக் குழாய்களை ஆங்கிலத்தில் (CORONARY ARTERIES) என்று அழைப்பார்கள். இந்த ரத்ததக் குழாய்கள்  அனைத்தும் இன்னும் பல சிறு கிளைகளாகப் பிரிந்து இதயத்தை ஒருவலைபோல் போர்த்தியுள்ளன.
(CORONARY ARTERIES) என்ற பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. லத்தீன் மொழியில் கொரானா (CORONA) என்றால் மகுடம்
அல்லது மணிமுடி என்பது பொருள். பல நூறு ஆண்டுகளுக்கு முன், மேலை நாடுகளில் முட்கள் போன்ற அமைப்புடைய கிரீடத்தை மன்னர்கள் தங்கள் மகுடமாக அணிந்து கொள்வது வழக்கம். எனவேதான் இதய ரத்தக் குழாய்களுக்கு இந்தப் பெயர் வந்தது.
இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களுக்கும் உடலின் மற்ற பகுதியில் உள்ள ரத்தக் குழாய்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதயத்  தமனிகள், இதயத்தின் இடைவிடாத இயக்கத்துக்கு ஏற்றவாறு இயற்கையாகவே நெகிழ்ந்து விரிந்து கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இதயம் விரிவடையும்போது இந்த ரத்தக் குழாய்கள் நன்கு விரிவடைந்து, தங்களுக்குத் தேவையான ரத்தத்தைப் பெற்றுக்கொள்கின்றன.
இதுபோல் இதயம் சுருங்கும் போது இதயத்தின் ரத்தக் குழாய்கள் நன்றாகச் சுருங்கி ரத்தத்தை வெளியேற்றுகின்றன.
இதயம் & சில ஆச்சரியமான உண்மைகள்
மனிதன் உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் ஒன்று இதயம்.
இதயமானது தொடர்ச்சியாக 12 மணி நேரத்தில் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டு 6 டன் எடையுள்ள பொருளை தரையில இருந்து 2 அடி
உயரத்துக்கு தூக்க முடியும்.
இதயமானது ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் உடலில் உள்ள மொத்தம் சுமார் பத்தாயிரம் மைல் நீளம் உள்ள ரத்தக் குழாய்களில்  ரத்தத்தை அனுப்புகிறது.
மருத்துவர்களால் புரிந்துகொள்ள முடியாத சில புதிரான ஆற்றல்களை இதயம் பெற்றுள்ளது. இதயத்தைப் பிணைத்திருக்கும் பலவகையான  நரம்பு அமைப்புகளை முழுமையாகத் துண்டித்துவிட்டால்கூட, இதயம் எந்தவிதமான பாதிப்புக்கும் ஆளாகாமல், தானாகவே இயங்கும் ஆற்றல்  பெற்றது.
ஒவ்வொரு நாளும் இதயமானது ஒரு லட்சம் முறை விரிந்து சுருங்குகிறது. இந்தக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் 70  ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயமானது 25 ஆயிரம் கோடி முறை சுருங்கி விரிகிறது.
ஒரு நாளில் இதயமாவது 1800 காலன் (7200 லிட்டர்) அளவு ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது. இந்த அளவில்
கணக்கிட்டால் இதயமானது ஒரு மனிதனின் வாழ்நாளில் சுமார் 4.6 கோடி காலன அளவு ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கு அனுப்புகிறது.
இதயத்தின் ஆற்றலானது (Power) ஒரு குதிரையின் ஆற்றலில் (Horse Power) 240&ல் ஒரு பங்கு.
இதயமானது ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் சுமார் 11 பிண்ட் (PINT) அளவுள்ள ரத்தத்தை ரத்தக் குழாய்களின் மூலமாக உடலின் பல  பாகங்களுக்கு அனுப்புகிறது.
இதயமானது ஓர் ஆண்டில் வெளியேற்றும் ரத்தத்தின் அளவானது 6.5 லட்சம் காலன்கள். இந்த அளவு ரத்தத்தைக் கொண்டு 900 காலன்
கொள்ளளவு கொண்ட 72 லாரிகளை நிரப்பலாம்.
ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயமானது வெளிப்படுத்தும் ஆற்றலை ஒன்றாகத் திரட்டினால் அந்த ஆற்றலால் ஒரு டன் எடையுள்ள
பொருளைத் தரையில் இருந்து சுமார் 150 மைல் உயரத்துக்குத் தூக்க முடியும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் எண்ணெய்க் கசிவைத் தடுப்பதில் தோல்வி

அமெரிக்காவில் மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுவருகின்ற எண்ணெய்க் கசிவை அடைப்பதற்காக BP நிறுவனத்தார் தற்போது செய்துள்ள முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.
"ஆழ்கடல் கிணற்றிலிருந்து எண்ணெய் வெளிவருவதைத் தடுப்பதற்காக மேலிருந்து கடினமான சேற்றையும் சிமெண்டு-ஜல்லிக் கலவையையும் செலுத்தி நாங்கள் மூன்று நாட்களாக முயற்சி செய்தும் எண்ணெய் வெளிவருவதைத் தடுக்க முடியவில்லை", என BP நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி டூக் சட்டில்ஸ் அறிவித்துள்ளார்.
பல முறை முயன்ற பின்னும் இந்த முயற்சி பல தரவில்லை என்பதால் மாற்று வழியில் முயலலாம் என அந்நிறுவனம் தற்போது தீர்மானித்துள்ளது.
அடுத்த கட்ட முயற்சி
பூமிக்கு அடியிலிருந்து எண்ணெய் மேலே வருவதற்கான அந்த குழாயை ஒரு இடத்தில் வெட்டி, மேலே வருகின்ற எண்ணெயை கடலில் கலக்க விடாமல் அப்படியே உறிஞ்சி கப்பலில் சேமித்து விடுவது என்பது அவர்களுடைய அடுத்த உத்தியாக இருக்கும் எனத் தெரிகிறது.
இந்தத் திட்டம் வெற்றி அடைந்தாலும் கூட, கடலில் எண்ணெய் கலப்பதை மொத்தமாகத் தடுத்து விட முடியாத் என்பதை பிபி நிறுவனத்தார் ஒப்புக்கொள்கின்றனர்.
அரசியல் தாக்கங்கள்
கசிந்த எண்ணெய் அமெரிக்கக் கரை வரை பரவியுள்ளது என்றால், இதன் அரசியல் தாக்கங்களோ அதனையும் தாண்டி வாஷிங்டன் வரை பரவியுள்ளது.
எண்ணெய்க் கசிவைத் தடுக்க முடியாது போயுள்ள இந்த சூழ்நிலை குறித்து தான் கவலையும் கோபமும் அடைந்திருப்பதை அதிபர் ஒபாமா ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தார். இந்த விவகாரம் அவரது தலைமைத்துவத்தின் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.
வானிலை சவால்கள்
களத்தில் ஏற்கனவே நிலவுகின்ற சிரமான சூழலை வானிலை மாற்றங்கள் மேலும் கடினமாக்கி விடலாம் என கடலோரக் காவல்படையைச் சேர்ந்த அதிகாரி ரியர் அட்மிரல் மேரி லாண்ட்ரி கூறுகிறார்.
"வானிலை என்பது எங்களுடைய முயற்சிகளுக்கு மிகப்பெரிய ஒரு சவாலாக அமைந்துள்ளது. மெக்ஸிகோ வளைகுடாவில் சூறாவளிகள் ஏற்படுகின்ற ஒரு காலகட்டத்துக்குள் நாம் இப்போது நுழைந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்." என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே லூசியானா மாகாண கடலோரப் பகுதிகளில் தங்களுடைய நிலமும் வாழ்வாதாரமும் அழிக்கப்படுவது கண்டு மக்களிடம் ஆத்திரமும் ஆற்றாமையும் அதிகரித்து வருகிறது.
எண்ணெய்க் கசிவை தடுத்து நிறுத்துவதற்கான நிஜமான தீர்வு என்பது அந்த இடத்துக்கு அருகிலேயே இன்னொரு கிணற்றைத் தோண்டுவது என்பதுதான் என நிபுணர்கள் பலர் நம்புகின்றனர்.
ஆனால் அப்படி இன்னொரு கிணற்றைத் தோண்ட ஆகஸ்ட் மாதம் வரை ஆகிவிடலாம்.
அதற்கு முன்னதாக மாற்று வழி கண்டறியப்படவில்லை என்றால், எண்ணெய்த் திட்டுக்களால் ஏற்படுத்தகக்கூடிய சுற்றுச் சூழல், பொருளாதார மற்றும் அரசியல் சேதங்கள் மிகவும் மோசமாக இருக்கும் என்றே தெரிகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும்

பொதுவாக எந்த ஒரு போரிலும் சில முக்கியமான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதில் முக்கியமானது தான் “உளவு” ஆகும்.
போருக்கு முன்னதாக எதிரியின் இயலுமை, ஆயுதவளங்கள், சாதகமான பௌதிகநிலைகள், செயல்வேகம் ஆகியவற்றை அறிந்து கொள்வதன் மூலம் போரின் முடிவை தமது தரப்பிற்கு சாதகமாக்கிக்கொள்வது என்பது “உளவு” இனுடைய அவசியம் ஆகும். ஆகவே பூமி மீதான முற்றுகைக்கான உளவு நடவடிக்கைகள் தான் இப்பொழுது அவதானிக்கப்படும் மேற்படி வேற்றுக்கிரகவாசிகளின் பிரசன்னத்திற்கான அர்த்தமாகுமா? எனும் கேள்வியும் எழத்தானே செய்கிறது.
யுத்தம் உளவு முடிந்தவுடனா? அல்லது ஆரம்பித்துவிட்டதா?
எமது கிரகத்திற்கு ஆக்கிரமிப்பு நோக்கமாக வருகை தரும் வேற்றுக்கிரகவாசிகள் அரங்கேற்றிக்கொண்டிருக்கின்ற உளவு நடவடிக்கைகள் தான் எம்மால் அவதானிக்கப்படும் சம்பவங்களுக்கான காரணம் என்று ஆய்வின் முன்னைய பகுதியில் தெளிவாக ஆராய்ந்து உறுதிப்படுத்தி இருந்தோம்.
அப்படியாயின் அவர்கள் தமது ஆக்கிரமிப்பின் ஓரங்கமாக மனிதர்கள் மீது உயிரிழப்புகளை ஏற்படுத்த்தொடங்கவில்லையா? என்று நோக்குமிடத்து இல்லை என்னும் பதிலை கூறுவதில் பல சிக்கல்கள் தோன்றுகின்றன.
இதன் ஓரம்சமாக தோன்றுவது தான் இப்போது இடம்பெறும் உயிரிழப்புகளுக்கும் அவர்களுக்கும் தொடர்புண்டா என்கிற கேள்வி.
வேற்றுக்கிரகவாசிகள் திடீர் திடீரென தோன்றுவதும் அதே வேகத்தில் மறைந்து போவதற்கும் ஆன காரணங்களாக
1. அவர்கள் எமது கண்ணுக்கு புலப்படாத வேறு பரிமாணங்கள் ஊடாக (Dimensions) இயங்கக்கூடிய ஆற்றலைக்கொள்ளுதல்.
2. அவர்கள் சூழ்நிலைக்கேற்ப உருமாறக்கூடிய ஆற்றலை கொண்டிருத்தல் ஆகியவற்றைக்குறிப்பிடலாம்.
இப்போது பூமியில் ஏற்படுகின்ற சிறு விபத்துக்கள் முதல் பல பாரிய விபத்துக்கள் வரை காரணம் கண்டறிய முடியாத நிலை காணப்படுகிறது. வேற்றுக்கிரக வாசிகள் மேற்குறிப்பிட்ட இயல்புகளை கொண்டிருக்குமிடத்து இவ்விபத்துக்களில் அலகுவாக பங்கேற்க்க்கூடியவர்களாக இருப்பது அவ்வளவு கடினமானதல்ல.
மாறாக இவ்விபத்துக்களில் அவர்கள் தொடர்பைக் கொண்டிக்காவிடின் அவர்கள் உயிரிழப்புக்களை ஏற்படுத்துவது எப்போது?
பொதுவாக ஒரு ஆக்கிரமிப்பானது சில பிரதான நோக்கங்களையே கொண்டிருக்கும்.
1. எதிரி நாட்டு வளத்தை சூறையாடுதல்.
2. தன்னை பலமானவனாக காட்ட முயற்சிப்பது. அதாவது பிராந்தியத்தில் தனது நிலையை உயர்வாக வைத்திருத்தல். ( வல்லரசு )
3. அடிமைப்படுத்தல்.
இதில் 2வது காரணத்தை வேற்றுக்கிரகவாசிகள் கொண்டிருப்பின் ஏற்கனவேயே எம்மீது தாக்குதலை ஆரம்பித்திருக்கவேண்டும். எனினும் இதுவரை அவ்வாறு இடம்பெறாமையானது 2வது காரணத்திற்கான சாத்தியப்பாடுகளை குறைக்கிறது. (Possibilities)
எனவே அவர்களின் தெரிவாக அமையக்கூடியது 1ம் 3ம் காரணங்கள் ஆகும்.
1. எமது பூமியிலுள்ள வளமே அவர்களின் முக்கிய இலக்காக மாறுமென்பதை எம்மால் ஊகிக்கமுடிகிறது. எனினும் இந்த வளங்களுக்கான வேட்டை பூமியில் தொடங்கிவிட்டதா? இல்லையா? இதுவரை நாம் அறிந்த வளங்களில் குறிப்பிடத்தக்க மறைவுகள் இடம்பெறாத்தைக்கொண்டு இன்னும் வளத்திற்கான ஆக்கிரமிப்பு தொடங்கவில்லைஎன்று கூறிவிடமுடியாது.
ஏனெனில் எம்மால் வளங்கள் என்று அடையாளம் காணப்பட்டவை தான் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் வளங்களாக இருக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. எனவே இப்பொழுது ஆரம்பித்திருக்கும் இந்த வளங்கள் சூறையாடப்படாமல் காரணமாக நாம் அடுத்த கட்ட முன்னேற்றத்தை (அவர்களுக்கு இணையாக) அடையவதற்கான அறிவைப்பெறுகின்ற சமயத்தில் கூட வளப்பற்றாக்குறையால் இப்படியே இருக்கவேண்டிய இருக்கவேண்டிய நிலை ஏற்படலாம். அதாவது எமது எதிர்கால வளர்ச்சியின் போது நாம் இனம் காணப்போகும் வளங்கள் இப்போது வேற்றுக்கிரகவாசிகளால் எமது பூமியில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றன.
இவ்வாறு தங்களுக்குரிய வளங்களை முற்றாக இங்கிருந்து கொண்டு சென்ற பின் தம்முடன் மனிதர்கள் போட்டியிடுவதற்கான போராடுவதற்கான இடிப்படை இயலுமைகள் கூட அற்ற தன்மையையே கொண்டிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அவர்கள் வெளிப்படையாக பூமிமீது ஆக்கிரமிக்கும் சாத்தியம் ஏற்படும். அப்போது பாரிய போர் நடைபெறாது. பூமி அவர்களுக்கு இலகுவாக அடிபணிக்ன்ற நிலை ஏற்படும். பூமியிலுள்ள அனைவரும் வேற்றுக்கிரக வாசிகளின் அடிமைகளாகும் நிலை உருவாகுவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லாமலில்லை.
தொடரும்...............
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, May 29, 2010

ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன்

இருதய நோய் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த நோய்க்கு புதிய புதிய சிகிச்சை முறைகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன.

இருதயத்துக்கு ரத்தம் எடுத்துச்செல்லும் குழாயில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய `பைபாஸ் ஆபரேஷன்’ நடத்தப்படுகிறது. இதுதவிர இருதய துடிப்பு சீராக இல்லாமல் இருப்பவர்களுக்கும் சிக்கலான ஆபரேஷன்கள் செய்யப்படுகின்றன.

குறிப்பாக இருதய துடிப்பு சிலருக்கு குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும். இதை சரிசெய்யவும், இருதயத்துக்கு சீராக ரத்தம் செல்லவும் மிகச்சிறிய குழாய் போன்ற மருத்துவ உபகரணத்தை இருதயத்தில் பொருத்துவார்கள்.

ஆபரேஷன் நடக்கும் போது இந்தப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்பதை எக்ஸ்ரே படம் பிடித்து பார்ப்பார்கள். அதாவது எக்ஸ்ரே கருவி முலம் இந்த ஆபரேஷனை தொடர்ச்சியாக படம் பிடித்து கண்காணிப்பார்கள். அப்போது சுமார் 250 க்கும் மேற்பட்ட எக்ஸ்ரேக்கள் எடுக்கப்படும். இதனால் இந்த ஆபரேஷனை செய்யும் டாக்டர் மற்றும் நர்சுகள் கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

இதை தவிர்க்க ரிமோட் கண்ட்ரோல் முலம் இந்த ஆபரேஷனை செய்ய எந்திரக் கை ஒன்றை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் வடிமைத்துள்ளனர். `ரிமோட் கேதீட்டர் மேனிபுலேசன் சிஸ்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எந்திரக் கை இங்கிலாந்தில் உள்ள ஜிலன் பீல்டு மருத்துவமனையில் உள்ளது. இங்கு இந்த எந்திரக்கையை பயன்படுத்தி உலகிலேயே முதன்முதலில் 70 வயதான கென்னத் குராக்கர் என்பவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.

நோயாளி ஆபரேஷன் தியேட்டரில் இருக்க, அவர் அருகில் எந்திரக்கை தயாராக இருந்தது. டாக்டர் ஆன்ட்ரே தலைமையிலான குழுவினர் பக்கத்து அறையில் இருந்தபடி எந்திரக்கையை ரிமோட் முலம் இயக்கி ஆபரேஷன் செய்தனர். இந்த எந்திரக்கையில் உள்ள கருவிகள் முலம் நோயாளின் உடலில் மிகச்சிறிய அளிவில் துளையிடப்பட்டு உடலுக்குள் சிறிய கேமிரா, மின்விளக்கு, அறுவை சிகிச்சை செய்யும் கத்தி மற்றும் பிற உபகரணங்கள் செலுத்தப்பட்டன. உடலுக்குள் செலுத்தப்பட்ட கேமிரா முலம் உறுப்புகளுக்குள் இருக்கும் பாதிப்பை டெலிவிஷன் திரையில் டாக்டர் பார்த்தபடியே ஆபரேஷன் செய்தார். இருதயத்தை சுற்றி இருந்த ஜவ்வுப்படலம் காரணமாக இருதயதுடிப்பு ஒழுங்கற்ற நிலையில் இருந்ததை ஆபரேஷன் முலம் சரிசெய்தனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

6 மாத குழந்தையின் புத்திசாலித்தனம்!

குழந்தைகள் சூதுவாது அறியாதவை. நல்லது கெட்டது தெரியாமல் பல தவறுகளை செய்துவிடும். உதாரணமாக நெருப்பு சுடும் என்று அறியாமல் தீபத்தின் அருகே நெருங்கிச் செல்வதை குறிப்பிடலாம்.

ஆனால் குழந்தைகளுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று பகுத்தறியும் பண்பு 6 மாதத்திலேயே வந்துவிடுகிறது என்று புதிய ஆய்வு கூறுகிறது.

6 மாதம் முதல் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. யேல் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வின்போது 6 மாத குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொம்மைகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டது. பொம்மையில் நல்லவிதமான, வாசனையுள்ள பொம்மைகள் கொடுக்கப்பட்டன. சில முறை அச்சுறுத்தும் பொம்மை மற்றும் துர்நாற்றமுடைய பொம்மைகள் வழங்கப்பட்டன.

அப்போது குழந்தைகள் நல்லபொம்மை எது என்று எளிதாக அடையாளம் கண்டுகொள்வது தெளிவானது. கெட்ட பொம்மையைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொள்வது, வேறெங்கோ பார்ப்பது, சிலவேளைகளில் இவற்றையெல்லாம் மீறி தலையால் பொம்மையை மோதி தள்ளிவிடுவது போன்ற செயல்களிலும் 6 மாதம் முதல் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஈடுபட்டன.

2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பொம்மைக் காட்சிகளைக் காட்டி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது எந்தப் பொம்மை தங்களுக்கு உதவி செய்கிறது, எது தனது செயலுக்கு தடையை ஏற்படுத்தி தீமை செய்கிறது என்று நன்றாக தெரிந்து கொண்டன. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தீய பொம்மைகளை தாக்கவும் குழந்தைகள் தவறவில்லை.

இந்த ஆய்வில் இருந்து குழந்தைகளுக்கு சீக்கிரமாகவே நன்மை, தீமையை அறியும் பண்பு வந்துவிடுவது தெளிவானது! பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Facebook இன் புதிய வரவு : குரல்வழி மற்றும் முகம் பார்த்து அரட்டை வசதி அறிமுகம்

அதிரடியாக வளர்ந்து வரும் சமூக வலைப்பின்னல் ஆகிய Facebook நீண்டகாலமாக பரீட்சார்த்த நிலையில் இருந்த குரல்வழி மற்றும் முகம்பார்த்து அரட்டை(Voice and Video chat) பண்ணும் தொழில்நுட்பத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னமும் Beta நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.


FriendCam Video Chat என்னும் பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மென்பொருளானது இணைய உலகில் Skype க்கு போட்டியாக அமைந்திருக்கின்றது.

இருந்தபோதிலும் இந்த மென்பொருளானது சில அடிப்படை பிரச்சனைகளை இன்னும் நிவர்த்திசெய்யவில்லை. Beta நிலையிலுள்ளமையினால் இது காலப்போக்கில் சரிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்துகளா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌தீமை


ஆ‌ன்டி பயாடி‌க் என‌ப்படு‌ம் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளா‌ல், உட‌லி‌ல் உ‌ள்ள நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி பா‌தி‌க்க‌ப்படுவது ந‌ம்‌மி‌ல் பலரு‌க்கு‌ம் தெ‌ரியாது.

ஒரு செ‌ய‌‌ற்கையான ‌நிக‌‌ழ்‌வினா‌ல், உட‌லி‌ல் இய‌ற்கையாக உ‌ள்ள நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி கு‌ன்று‌கிறது.

மேலு‌ம், ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் உ‌ட‌லி‌ன் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `பி காம்ப்ளக்ஸ்' குறையும்.
வாய் து‌ர்நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளை சா‌ப்‌பிடுபவ‌ர்களு‌க்கு ஏற்படு‌கிறது.

சிலரு‌க்கு நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளை சா‌ப்‌பி‌ட்டது‌ம், உடலா‌ல் அதனை‌த் தா‌‌ங்‌கி‌க் கொ‌ள்ள இயலாத போது உட‌ல் நடு‌க்க‌ம் ஏ‌ற்படு‌கிறது.
மேலு‌ம், உட‌லி‌ல் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி எ‌ன்பதே இ‌ல்லாமலே‌ப் போ‌ய் ‌விடு‌ம் ஆப‌த்து‌ம் உ‌‌ள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கடலுக்குள் ஆய்வு நிலையம்!

நிலவில் கால்பதித்த சாதனை `மனிதனின் சிறிய அடி’ என்று வர்ணிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த பெரிய (அடியாக) திட்டமாக செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் முயற்சி நடந்து வருகிறது.

நிலவைவிட செவ்வாய் அதிக தூரத்தில் உள்ள கோளாகும். மேலும் அங்குள்ள சீதோஷ்ண நிலை பூமி, நிலவு இரண்டையும்விட பலவிதங்களில் மாறுபட்டது. உதாரணமாக பூமியைவிட 6-ல் ஒரு பங்கு ஈர்ப்பு ஆற்றல்தான் நிலவில் காணப்படுகிறது. ஆனால் செவ்வாய் கிரகத்திலோ ஈர்ப்பு விசை 8-ல் முன்று பங்காக இருக்கிறது. இதுதவிர சூரிய ஔ பற்றாக்குறை, தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு போன்றவையும் காணப்படுகிறது.

எனவே செவ்வாய் பயணம், நிலவுப் பயணத்தைவிட சவாலானது. இதை எதிர்கொள்ளும் விதமாக செவ்வாய்க்கு செல்லும் விண்வெளி வீரர்கள் பல்வேறுவித ஆய்வு, ஒத்திகை நிகழ்ச்சிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இவற்றில் ஒரு சில சோதனைகள் முடிந்துவிட்டன.

அடுத்தகட்ட சோதனையாக விண்வெளி வீரர்களை கடலுக்கு அடியில் அழைத்துச் சென்று ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக கடலில் 65 அடி ஆழத்தில் புளோரிடா மாகாணத்தில் ஒரு ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. நாசாவின் இந்த திட்டம் நீமோ (NEEMO – நாசா எக்ஸ்டிரிம் என்விரான்மென்ட் மிஷன் ஆபரேஷன்ஸ்) என்று அழைக்கப்படுகிறது.

சவால் நிறைந்த, சிக்கலான சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சிகள் இதன் முலம் அளிக்கப்படுகிறது. விண்வெளிக்கு செல்லும் வீரர்களை அஸ்ட்ராநட்ஸ் (Astronauts) என்று அழைப்பதுபோல கடலுக்குள் தங்கி இருந்து ஆய்வு நடத்தும் வீரர்களை அக்வாநட்ஸ் (Aquanauts) என்று அழைக்கிறார்கள்.

இந்த சோதனையில் அனுபவம்மிக்க 2 விண்வெளி வீரர்கள் உள்பட மொத்தம் 6 பேர் கலந்து கொள்கிறார்கள். 2 வார ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற செயற்கை சூழ்நிலையில் ஸ்பேஸ்வாக் செய்வது, எந்திரங்களை இயக்குவது போன்ற பணிகளை வீரர்கள் செய்கிறார்கள். இந்த முன்கட்ட ஆய்வு, விண்வெளி வீரர்களின் உடல்தகுதியை அதிகப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இலண்டனில் இன்று ஐபேட் (iPad) விற்பனை கோலாகலமாக ஆரம்பம்

இலண்டனிலும் வேறு பல நகரங்களிலும் ஐபேட்(iPad) வாங்குவதற்காக பல மணி நேரம் முன்னதாகவே வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். இலண்டனில் இன்று காலை 8 மணிக்குத் திறந்த ஆப்பிள் கடைக்கு நேற்று நண்பகலில் இருந்தே மக்கள் வரிசையாகக் காத்திருக்கக்த் தொடங்கி விட்டனர்.

பிரபல நகச்சுவை நடிகர் Stephen Fry முன்கூட்டியே பதிவு செய்து ஒரு ஐபேட் வாங்கினார். ஏற்கனவே அமெரிக்காவில் ஒன்றை அவர் வாங்கியிருந்தார். இப்போது மீண்டும் வேறு ஒரு மாதிரி ஐபேட் வாங்கியுள்ளார். இதை என்ன செய்யப் போகிறீர்கள் என்று நிரூபர்கள் கேட்டதிற்கு நான் இதைக் கொண்டு போய் தடவப் போகிறேன் என்றார். ஆம் தொடு திரைத் தொழில் நுட்பம் தடவுவதன் மூலம் இயங்கும். அதை அவர் அப்படி நகைச் சுவையாகச் சொன்னார்.

ஐ-பொட், ஐ-போன், ஐபேட் ஆகியவற்றை வெற்றீகரமாகச் சந்தைப் படுத்தியதால் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பெரும் பெறுமதி மதிப்புயர்வைப் பெற்றுள்ளன. கடந்த் 10 ஆண்டுகளில் அவற்றின் மதிப்பு 10 மடங்கு உயர்ந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளின் மொத்த மதிப்பு இப்போது $222bn (£152.5bn) ஆக உயர்ந்துள்ளது. இதனால்தொழில்நுட்ப நிறுவனங்களின் பெறுமதி வரிசையில் இதுவரை முதலாம் இடத்தில் இருந்த மைக்ரோசொfர் இப்போது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப் பட்டு ஆப்பிள் முதலாம் இடத்தை அடைந்துள்ளது.

மைக்ரோசொfரின் சந்தை மதிப்பு $219bn (£150.5 bn). பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, May 25, 2010

தென் கிழக்காசியாவில் கையடக்கதொலைபேசி பாவனையில் இலங்கை முதலிடம்

கையடக்க தொலைபேசி பாவனையில் இலங்கை தென்கிழக்காசிய வலயத்தில் முன்னணியில் உள்ளதாக ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்திய இணையத்தளம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இலங்கையின் ஜனத்தொகையில் 81.35 சத வீதமானோர் கையடக்கத்தொலைபேசியினை உபயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், 1 கோடி 60 லட்சத்து 27 ஆயிரம் பேர் கையடக்க தொலைபேசியினை பாவனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

தெற்காசிய நாடான பாக்கிஸ்தானில் 9 கோடியே 7 லட்சத்து 58 ஆயிரம் பேர் கையடக்க தொலைபேசியினைப் பயன்படுத்துகின்றனர். இது பாக்கிஸ்தானின் சனத்தொகையில் 59.6 சத வீதம் என தெரிவிக்கப்பட்டுள்ள, இதேவேளை, 58 கோடி 4 லட்சம் கையடக்க தொலைபேசி பாவனையாளர்களைக் கொண்ட இந்தியாவில், சனத்தொகையில் 50 சத வீதமானவர்களே, பாவனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூட்டானில் 47.8 சத வீதமானவர்களும், மாலைதீவில் 46 சதவீதமானவர்களும், ஆப்கானிஸ்தானில் 35 சத வீதமானவர்களும் கையடக்க தொலை பேசிகளை நடத்துகின்றனர்.

இதனிடையே பங்களாதேஷில் 34 சத வீதமானவர்கள் கையடக்க தொலைபேசியினை பயன்படுத்தும் அதேவேளை, நேபாளத்தில் மிகக் குறைந்த அளவான 23 சத வீதமானவர்களே பயன்படுத்துவதாக இந்திய இணையதள ஆய்வு ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசியின் பாவனை அதிகரித்துச் செல்வது, தொலைத் தொடர்பு ரீதியான சமூக அபிவிருத்தியே காரணம் என அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

நவீன வசதிகளுடன் செயற்கை 'கை'

அதிகரிக்கும் விபத்துகளால் ஏராளமானவர்கள் உடல் உறுப்புகளை இழக்கிறார்கள். வேறுசில பயங்கர வியாதிகளாலும் உடல் உறுப்புகள் செயலிழக்கலாம். இதுபோல திடீர் சம்பவங்களால் கை, கால்களை இழந்தவர்கள் வாழ்வே திசைமாறிவிடும்.

செயற்கை கை, கால்கள் பொருத்திக் கொள்ளும் வசதி இருக்கிறது. ஆனாலும் அவை இயற்கையான கை, கால்கள்போல செயல்படாது. பெயரளவில் ஒரு அங்கமாகவே இருக்கும்.

இந்தக் குறையை களைந்து விபத்தில் கைகளை இழந்தவர்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்கும் விதத்தில் நவீன வசதிகள் நிறைந்த செயற்கை கை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை உள்ள மற்ற செயற்கை கைகளைவிட இது கொஞ்சம் நவீனமானது. குறிப்பாக `புளூடூத்’ தொழில்நுட்பம் முலமாக செயல்படக்கூடியது. இதன் உதவியால் எந்த விதமான பொருட்களையும் இயற்கை கைகளைப் போலவே பற்றிப்பிடித்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். 5 விரல்களையும் தனித்தனியாக இயல்பான விரல்கள்போல இயக்க முடியும். இதன் உதவியுடன் 90 கிலோ எடையைக் கையாள முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டச் பயோனிக்ஸ் நிறுவனம் இந்த செயற்கை கையை வடிவமைத்துள்ளது. இதற்கு `ஐ லிம்ப் ஹேண்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டே வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக் கை தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. விபத்தில் கையை இழந்த தீயணைப்பு வீரர் ஐயன் ரெய்டு என்பவருக்கு இந்த செயற்கைக் கை முதல் முறையாக பொருத்தப்பட்டது. `கை துண்டிக்கப்பட்டதால் இழந்த உணர்வுகளை மீண்டும் பெற்றிருப்பதாகவும், அனைத்து வேலைகளையும் தடையின்றி செய்ய முடிவதாகவும்’ அவர் தெரிவித்துள்ளார்.

அங்ககீனம் அடைந்தவர்களுக்கு அளவற்ற பயன்தரக் கூடியது இந்தக் கை! பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும்.

பிறந்து சில மாதங்களில் ஆட்களைப் பார்த்து இனம் காணத் தெரியாத பொழுதே தன் தாயினை குழந்தை நன்றாக அடையாளம் தெரிந்து வைத்திருக்கும். தாயின் அரவணைப் பிற்குப் பிறகே சமாதானம் அடையும். இல்லாவிட்டால் காரணமே இல்லாமல் அழுவதை நாம் பார்க்கலாம்.

ஆனால் இதுபோன்ற பாசத்தை தந்தையுடன் குழந்தை வெளிப்படுத்துவது கிடையாது. தாய்- குழந்தைக்கு மட்டும் அப்படி என்ன பிணைப்பிருக்கிறது? என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். அதற்கான விடை கிடைத்துவிட்டது. நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த மவுன்ட் சினாய் மருத்துவ மைய ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர்.

`ஆக்சிடாக்சின்’ என்னும் ஒருவித ஹார்மோன்கள் பெண்களின் உடலில் காணப்படுகின்றன. இவைதான் தாய்- குழந்தையின் பிணைப்பை தூண்டுகிறது. அதுமட்டுமல்லாமல் வேறு சில பணிகளிலும் இந்த ஹார்மோன்கள் பணியாற்றுகிறது. தாய்க்கு, பாலூட்டும் உணர்ச்சியை அதிகமாக்குவது, உடல் உழைப்பை தூண்டுவது, குழந்தைகளை தாயின் அருகாமையை எதிர்பார்த்து காத்திருக்க வைப்பது போன்ற பணிகளில் ஆக்சிடாக்சின் பங்கேற்கிறது.

பாச அரவணைப்பான `கட்டிப்புடி’ வைத்தியத்தில் தூண்டப்படுவது இந்த ஹார்மோன்கள்தான்! பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, May 24, 2010

டயனோசரஸ் அழிவுக்கு புதுக்காரணம்

உருவத்தில் பெரிய, ராட்சத விலங் கினம் டயனோசரஸ். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வசித்த இந்த விலங்கு இனம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. இதற்கு காரணம் `விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த விண்கற்கள்’ என்று கூறப்பட்டது

இந்த நிலையில், டயனோசரஸ் அழிவுக்கு காரணம் விண்கற்கள் அல்ல என்று தெரியவந்துள்ளது. பூமியில் ஏற்பட்ட தட்ப வெப்ப மாறுதல்கள் காரணமாகவே டயனோசரஸ்கள் அழிந்தன என்கிறார்கள்.

நார்வே நாட்டில் உள்ள ஸ்வெல்பார்டு என்ற இடத்தில் சமீபத்தில் டயனோசரஸ் புதைபடிமங்கள் கிடைத்தன. இந்த படிமங்களை டாக்டர் கிரிகோரி பிரைஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அப்போது தான் டயனோசரஸ் அழிவுக்கு தட்ப வெப்ப மாற்றம் தான் காரணம் என்பது தெரியவந்தது.

சுமார் 13 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் தட்ப வெப்ப நிலையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டது. இந்த மாற்றம் படிப்படியாக உருவானது. பூமி சூடாவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது என்று நாம் இப்போது கூறுவது போன்ற நிலை அப்போது காணப்பட்டது. இதன்காரணமாக வடதுருவத்தில் பனிமலைகள் உருகி அதன் குளிர்ந்த தண்ணீர் கடலில் கலப்பது அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து கடலில் வெப்பம் வெகுவாக குறைந்தது. 4 டிகிரி செல்சியஸ் முதல் 13 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்ததால் கடலில் மட்டுமின்றி பூமியிலும் வெப்ப மாறுதல்கள் உருவானது. இதனால் கடல் மற்றும் பூமியில் வாழ்ந்த உயிரினங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன. இப்படித்தான் டயனோசரஸ் இனமே அழிந்தது. இந்த அழிவும் ஒரேநாளில் நடக்கவில்லை. படிப்படியாக அழிவு தொடர்ந்து முற்றிலும் அந்த இனமே இல்லாமல் போய்விட்டது.

இதுஎல்லாவற்றையும்விட டாக்டர் கிரிகோரி இன்னொன்றையும் சொல்லி மிரட்டுகிறார். அது-

`டயனோசரஸ் அழிவு தொடங்கும் போது எந்த மாதிரியான தட்ப வெப்ப சூழ்நிலை இருந்ததோ, அதுபோன்ற ஒரு நிலை இப்போது தொடங்கி உள்ளது. இந்த நிலை நீடிக்கும் போது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது போன்ற ஒரு அழிவை மனித இனம் சந்திக்க வேண்டியிருக்கும்’ பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, May 23, 2010

மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா?

மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது.

மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் உதாரணம் காட்டுவது மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு மாயர்களின் காலண்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைவது தான் இப்போது பலருக்கும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

மாயமந்திரங்களிலும், வானவியல் சாஸ்திரங்களிலும் கைதேர்ந்த கில்லாடிகளான மாயர்கள் ஏன் 2012-ல் காலண்டரை முடித்து விட்டிருக்கிறார்கள். அன்று உலகம் அழியப் போவதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்கள் ஞானதிருஷ்டியால் கண்டுவிட்டார்கள் என்று கொலைவெறியோடு வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் பலர். ஆரம்பத்தில் தென்னமெரிக்காவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் சூடாக விவாதிக்கப்பட்ட ‘உலகின் கடைசி நாள்’ விவாதம், இப்போது மூடநம்பிக்கைகளில் புரையோடிப் போன ஆசிய நாடுகளுக்கும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறது.

சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?

சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்’ என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.


ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறிச்சீறும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிவுகள் மனிதகுலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த ஊழிப்பெருந்தீ, மற்றும் ஊழிப்பெருநீர் வகையறாக்களை உறுதி செய்கிறது.

சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதை ‘ஜட்ஜ்மெண்ட் டே’ என்று பலரும் அஞ்சுகிறார்கள்.

அதாவது இப்போது உலகில் வசித்து வரும் நீங்களும், நானும் ஐந்தாவது காலக்கட்ட மனிதர்கள். நான்காவது காலக்கட்டத்தில் வசித்தவர்கள் 5125 வருடங்களுக்கு முன்பாக (கி.மு. 3113ல்) நடந்த ஏதோ ஒரு இயற்கைப் பேரழிவில் மண்டையைப் போட்டிருப்பார்களாம். நிலத்தை மூழ்கடித்த நீரால் அவர்கள் அழிந்திருப்பார்கள் என்று மாயன் கணிப்பு கூறுகிறது. மனிதக்குலம் ஒட்டுமொத்தமாக அழிந்து, மீண்டும் பிறந்துதான் இன்று பூமியின் கடைசிக் காலக்கட்டத்தைச் சேர்ந்த பெருமை என்று நாம் சொல்லவில்லை. எப்போதோ செத்துப்போன மாயர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

செயற்கை உயிர் கண்டுபிடிப்பு

செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள பாக்டீரியா
உலகின் முதல் 'செயற்கை உயிரி' என்று வருணிக்கப்படுகின்ற ஒரு பாக்டீரியாவை விஞ்ஞானிகள் படைத்துள்ளனர்.


கணினி ஒன்றைப் பயன்படுத்தி வெறுமனே நான்கு இரசாயனங்களைச் சேர்த்து கட்டமைக்கப்பட்ட டி.என்.ஏ.வால் கட்டுப்படுத்தப்படக்கூடிய ஒற்றை உயிர்க்கல உயிரி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

"இந்த பாக்டீரியாவின் மரபணுப் பாரம்பரியம் என்பது ஒரு கணினிதான். ஆகவே, செயற்கையாகப் படைக்கப்பட்ட முதல் உயிர் வடிவம் என்றால் அது நிச்சயம் இதுதான்." என்கிறார் இந்த செயற்கை உயிரியைப் படைத்திருக்கின்ற ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் கிரெய்க் வெண்டர்.
அதாவது ஒரு பாக்டீரியாவுக்கான மரபணுக் கட்டமைப்பை கணினி மென்பொருள் துணையுடன் வடிவமைத்து செயற்கையாக இரசாயனங்களைக் கலந்து உருவாக்கி அதனை ஒரு உயிரணுக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

அவ்வாறு செயற்கை மரபணுக் கட்டமைப்பு செலுத்தப்பட்டவுடன் அந்த உயிரிகள், அந்த செயற்கை மரபணுக் கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் செயல்பட ஆரம்பித்துள்ளன.

அமெரிக்காவில் மேரிலாண்ட் மற்றும் கலிபோர்னியா மாகாணங்களிலிருந்து செயல்படும் ஜே.சி.வி.ஐ. என்ற ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த செயற்கை உயிரியை உருவாக்கியுள்ளனர்.

தி சயின்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு, அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு மாபெரும் முன்னேற்றம் என்று வருணிக்கப்படுகிறது.

மருந்தாக செயல்படக்கூடிய, எரிபொருளாக செயல்படக்கூடிய, காற்று மண்டலத்திலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சி காற்றை சுத்தப்படுத்தக்கூடிய வகைகளில் எல்லாம் செயற்கை பேக்டீரியாக்களை உருவாக்கி நாம் பலன் பெற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அதேநேரம் செயற்கை உயிரினங்களால் உலகத்துக்கு பெரிய ஆபத்துகளும் வரலாம் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இயற்கையில் காணப்படும் இந்த பேக்டீரியாவிலிருந்து இந்த செயற்கை பாக்டீரியாவை வேறுபடுத்திக் காட்டுவதற்காக செயற்கை பாக்டீரியாவின் மரபணுக் கட்டமைப்பில் அதனை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர்கள், அவர்களின் இணையதள முகவரி போன்றவையும் அதிலே சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செயற்கையாக உயிரிகளைப் படைப்பது தார்மீக அடிப்படையில் சரியா, தவறா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பையோஎன்ஜினியரிங் என்று சொல்லப்படும் இந்த உயிரியல் தொழில்நுட்பத்தால் ஒரு புதிய தொழில்துறைக்கான கதவுகள் திறந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பயனுள்ள எரிபொருட்களையும் புதிய தடுப்பு மருந்துகளையும் உருவாக்கக்கூடிய பணி செய்யும் செயற்கை பாக்டீரியாக்களுக்கான மரபணுக் கட்டமைப்பை வடிவமைப்பது தொடர்பில் இந்த ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கனவே மருந்து உறுபத்தி நிறுவனங்களுடனும் எரிபொருள் எடுக்கும் நிறுவனங்களுடனும் சேர்ந்துப் பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த செயற்கை உயிரிகளின் பலன்கள் மிகவும் மிகைப்படுத்திச் சொல்லப்படுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, May 22, 2010

சாண எரிவாயுவில் ஓடும் ரெயில்

வேகமாக தீர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மாற்று எரிபொருள் தேவையை அதிகரித்திருக்கிறது. இதன் எதிரொலியாக காட்டாமணக்கில் இருந்து பயோடீசல் உள்பட பலவிதமான மாற்று எரிபொருட்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

இதில் ஒரு முன்னோடி நிகழ்வாக மாட்டுச் சாண எரிவாயுவைக் கொண்டு முதல்முதலாக ரெயில் இயக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒக்லகோமா – போர்ட் வொர்த் நகரங்களுக்கு இடையே இந்த ரெயில் இயக்கப்படுகிறது. ஒரு ஆண்டு காலத்துக்கு பயணிகள் ரெயிலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ள அந்த ரெயில் சமீபத்தில் சோதனை ஓட்டமாக விடப்பட்டது.

முதற்கட்ட ஆய்வில் 20 சதவீத எரிவாயுவும் 80 சதவீத டீசலும் சேர்த்து இயக்கிப் பார்க்கப்பட்டது. அதன்பிறகு அதிகப்படியான எரிவாயு சேர்த்து தற்போது ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ரெயிலுக்கு `ஹார்ட்லேண்ட் பிளையர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

`பொதுவாக உயிரி எரிபொருளை பயன்படுத்தும்போது என்ஜினுக்குள் அழுத்தம் அதிகரித்து பாதிப்புகள் ஏற்படும். எனவே சில மாற்றங்களுடன் இந்த என்ஜின் தயாரிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவில் முதல்முதலாக சாண எரிவாயுவில் இயங்கும் வகையில் ரெயில் விடப்பட்டுள்ளது’ என்று அங்குள்ள ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி : விஞ்ஞானி தகவல்

'ஏலியன்ஸ்' என்றழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி; ஆனால் அவர் களை, மனிதர்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது' என, பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.

ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது:

பிரபஞ்சத்தில், 10 ஆயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில், பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன என்று கூறுவது தவறு.

என்னுடைய கணித அறிவின்படி, வேற்று கிரகவாசிகள் உள்ளனர் என்பது தெரிகிறது. அவர்கள் எந்த உருவத்தில் உள்ளனர் என்பதைக் கண்டறிவது தான் சவாலான விஷயம். அவர்கள் நுண்ணுயிரிகளாகவும் இருக்கலாம். புழுவாகவும் இருக்கலாம். அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த உருவங்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதற்கு, நம் உயிரினத்தின் வளர்ச்சியை உதாரணமாகக் கொள்ளலாம்.

தங்கள் கிரகத்திலுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி விட்டு, தற்போது வேறு இடத் தில் வசிப்பதாக நான் கருதுகிறேன். அது போன்ற வேற்று கிரகவாசிகள், மற்ற கிரகங்களுக்கு நாடோடிகள் போல நுழைந்து, அவ்வுலகத்தைக் கைப்பற்றவும் தயாராக இருக்கலாம். ஆனால், அவர்கள் இவ்வுலகில் நுழைந்தால், அவர்களுக்கு அது வெற்றியாக அமைய வாய்ப் பில்லை. இவ்வாறு ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, May 21, 2010

பில்கேட்ஸ் ஒரு சகாப்தம்.

வெற்றியாளர்களில் இரண்டு வகை... உலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும்விட வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை... அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை... பில்கேட்ஸ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.


'உழைக்க மட்டுமல்ல... உழைப்பை விட்டு விலகியும் இருக்கத் தெரிய-வேண்டும்...' - இதுதான் பில்கேட்ஸ் நமக்கு உணர்த்தியிருக்கும் சமீபத்திய பாடம். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு பொருள் இருக்கிறது. ஒரு எம்.பி.ஏ. பாடத் திட்டத்துக்கு நிகரான வாழ்க்கைமுறை அவருடையது.பள்ளிக்கூட காலத்திலேயே பில்கேட்ஸ் 'பாட'த்தைத் தொடங்கிவிட்டார்.


கொடுக்கிற பாடத் திட்டத்தைப் படிப்பதைவிட விருப்பமானதைப் படிப்பதுதான் சிறந்தது என்பதை நம்பினார்। மற்ற மாணவர்களிடமிருந்து வேறுபட்டு, படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்த பில்கேட்ஸை, சியாட்டில் நகரின் 'லேக்சைட் (Lake Side) பள்ளி'யில் அவருடைய பெற்றோர் சேர்த்தனர். அங்கே பில்கேட்ஸை ஈர்த்தது ராட்சத சைஸில் பூதம் போல இருந்த கம்ப்யூட்டர். அந்தக் காலத்தில் கம்ப்யூட்டரை விஞ்ஞானக் கூடங்களில் மட்டுமே பயன்படுத்தினார்கள். இரவு பகலாக அதன் முன் தவமாகக் கிடந்த பில்கேட்ஸ், தானாகவே புத்தகங்களையும், கையேடுகளையும் படித்து கம்ப்யூட்டர் மொழியான 'பேசிக்'கில் (BASIC) புரோகிராம் எழுதத் தொடங்கினார். அவருடைய பள்ளித் தோழர் பால் அலெனுக்கும் அதே ஆர்வம். திடீரென்று ஒருநாள், 'இனிமேல் மாணவர்கள் கம்ப்யூட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது' என்ற அறிவிப்பு வந்தது. இருவரும் கவலைப்பட்டனர்.அந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டரை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்தது। 'அந்த கம்ப்யூட்டரில் ஏதாவது குறைபாடு இருந்தால் வாடகை கொடுக்கத் தேவையில்லை' என்று வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. குறைபாடுகள் அதிகம் இருக்கவும் செய்தன.


பில்கேட்ஸ் நினைத்திருந்தால் வாடகைக்கு கம்ப்யூட்டர் எடுத்து, அதில் உள்ள குறைபாடுகளைச் சொல்லி, வாடகை கட்டாமல் பயன்படுத்தியிருக்க முடியும்। ஆனால், அவர் கம்ப்யூட்டர் வாடகைக்குத் தரும் நிறுவனங்களில் ஒன்றான 'கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷனு'க்குச் சென்று அவர்கள் கம்ப்யூட்டரில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அதனால், அந்தக் குறைபாடுகள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு வாடகைப் பணம் பெருகியது. பில்கேட்ஸ் சம்பளமாகப் பெற்றுக்கொண்டது இலவசமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் உரிமையை!கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதைவிட, புதிய திசையில் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் கலை அவரிடம் நிறையவே இருந்தது। வாகனப் போக்குவரத்து விவரத்தை கம்ப்யூட்டரில் உள்ளிடம் 'டேட்டா என்ட்ரி' வேலை 17 வயது பள்ளி மாணவன் பில்கேட்ஸூக்குக் கிடைத்தது. ஒவ்வொரு வாகனமும் கடந்து செல்லும்போது காகிதச் சுருளில் ஒரு துளை போடப்படும். அந்தத் துளைகளை எண்ணி கம்ப்யூட்டரில் என்டர் செய்வதுதான் வேலை. துளைகளை எண்ணிச் சொல்வதற்கு சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து, 'டிராஃப்- ஓ -டேட்டா' (Traf-O-Data) என்று பெயரிட்ட பில்கேட்ஸூக்கு, இந்தத் தொழிலில் நல்ல லாபம்! போக்குவரத்து விவரங்களை அலசி அதை நெறிப்படுத்துவதற்காக பல நகராட்சிகள் அந்தக் கருவியை நாடியபோது, 'இனிமேல் நாங்களே அந்த வேலையை நகராட்சிகளுக்குச் செய்துதருவோம்' என்று அமெரிக்க மத்திய அரசு அறிவித்துவிட்டது. பில்கேட்ஸின் பிஸினஸ் படுத்துவிட்டது.


இந்தச் சமயத்தில் அவர் ஹார்வர்ட் கல்லூரியில் இணைந்தார்। அதற்குப் பக்கத்திலேயே பால் அலெனுக்கு ஒரு வேலை கிடைத்தது. இருவரும் அடிக்கடி சந்தித்தனர். 1975 ஜனவரி மாதம் 'பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ்' இதழில் 'உலகின் முதல் மைக்ரோ கம்ப்யூட்டர் அல்டெய்ர் 8800' என்று வந்த கட்டுரையை எடுத்துக்கொண்டு பில்கேட்ஸிடம் ஓடிவந்தார் அலென். அதைத் தயாரித்த எம்.ஐ.டி.எஸ். (MITS) நிறுவனத்தைத் தொடர்புகொண்ட கேட்ஸூம் அலெனும், 'உங்கள் கம்ப்யூட்டரில் பேசிக் புரோகிராம் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும். அதைச் செயல்படுத்த உதவும் பேசிக் இன்டர்பிரட்டர் (புரோகிராமை கம்ப்யூட்டர் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றித்தரும் இடைநிலை சாஃப்ட்வேர்) எங்களிடம் இருக்கிறது' என்று அள்ளிவிட்டனர். உண்மையில் அவர்களிடம் 'அல்டெய்ர்' ரக கம்ப்யூட்டர் ஒன்றுகூட கிடையாது.'எம்.ஐ.டி.எஸ்-ஸின் ஹார்ட்வேர், தனது சாஃப்ட்வேர் இரண்டும் சேர்ந்து முழுமையான கம்ப்யூட்டராக இயங்கும்' என்ற ஒப்பந்தம் போட்டார் பில்கேட்ஸ். இனி இங்கு என்ன வேலை என்று ஹார்வர்டில் இருந்து வெளியேறினார். 1975 ஏப்ரலில் 'மைக்ரோசாஃப்ட்' நிறுவனம் உருவானது.இனி எதிர்காலம் மைக்ரோ கம்ப்யூட்டருக்குத்-தான் என்பதை உணர்ந்த பில்கேட்ஸ், தன்னுடைய சாஃப்ட்வேர் உரிமையை கம்ப்யூட்டர் தயாரிக்கும் பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்தார்.


இதில் எம்.ஐ.டி.எஸ். அதிருப்தி அடைந்ததைப் பற்றியோ, கோர்ட்டுக்கு இழுத்ததைப் பற்றியோ கவலைப்படவில்லை. வெறும் 'பேசிக்' புரோகிராமோடு நிற்காமல் 'ஃபோர்ட்ரான்', 'கோபால்' ஆகிய மொழிகளுக்கும் இன்டர்பிரட்டர் உருவாக்கினார். அவற்றை கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களிடமே கொடுத்து கம்ப்யூட்டரோடு பொட்டலம் கட்டி விற்கும்படி ஒப்பந்தம் போட்டார். பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் இல்லாமல் கம்ப்-யூட்டர் முழுமையடையாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார்.மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ।பி।எம்। மைக்ரோசாஃப்ட் நிறுவனக் கதவுகளைத் தட்டியதுதான் பில்கேட்ஸின் வாழ்வில் திருப்பு-முனை! அப்படியரு சூழ்நிலையைக் கையாள்-வது எப்படி என்ற பாடத்திட்டம் உருவானது.குட்டி கம்பெனிகள் மைக்ரோ கம்ப்யூட்டர் தயாரிக்கும்போது, தான் பின் தங்கிவிடக்கூடாது என்று தாமதமாக விழித்துக்கொண்ட ஐ।பி।எம்., நெருக்கடியான காலக்கெடுவோடு பில்கேட்ஸிடம் வந்தது. அந்தக் காலக்கெடுவுக்குள் ஹார்ட்வேரை உருவாக்குவது சிரமமில்லை. ஆனால், அதைச் செயல்பட வைக்கும் சாஃப்ட்வேர்... அந்த சாஃப்ட்-வேரை ஹார்ட்வேருக்குப் புரியவைக்கும் ஆப-ரேட்டிங் சிஸ்டம்... இதையெல்லாம் உருவாக்குவது அத்தனை எளிதில்லை. சாஃப்ட்வேருக்கு ஓகே சொன்ன மைக்ரோசாஃப்ட், இன்னொரு நிறுவனத்தின் ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள சிபாரிசு செய்தது। ஆனால், அந்த இன்னொரு நிறுவனத்-துடன் ஐ।பி.எம்மால் உடன்பட முடியவில்லை. பந்து திரும்பவும் பில்கேட்ஸ் கோர்ட்டுக்கே வந்தது.

micro soft office
இந்தமுறை “சரி” என்றார் கேட்ஸ்। அதுதான் அவரை உலகின் முதல் பணக்காரர் ஆக்கிய வார்த்தை! இத்தனை குறுகிய காலத்தில் 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை புதிதாக உருவாக்க முடியாது என்பது பில்கேட்ஸூக்கு தெரியும்। 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' (SCP) என்ற நிறுவனம் உருவாக்கியிருந்த 'க்யூடாஸ்' (QDOS) என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை, வெறும் இருபத்தைந்தாயிரம் டாலர் என்ற விலைக்கு வாங்கி-னார்। அதில் மராமத்து வேலைகள் செய்து, தன்னுடைய கைவண்ணத்தைக் கொஞ்சம் காட்டி 'டிஸ்க் ஆபரேட்டிங் சிஸ்டம்' (DOS) என்ற பெயரில் ஐ.பி.எம். (IBM) கம்ப்யூட்டரோடு சேர்ந்து உலகமெங்கும் பரப்பினார். 'பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சி' என்று சொல்லும் நிகழ்வாக இது 1981-ல் அமைந்தது. தன் தயாரிப்புதான் பவுடர் பூசி 'ஐ.பி.எம்'- கம்ப்யூட்டரோடு சக்கைபோடு போடுகிறது என்று 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' நிறுவனம் குய்யோ, முறையோ என்று கூவியபோது, பில்கேட்ஸ் பணத்தால் அடித்து, அந்த நிறுவனத்தின் வாயை அடைத்தார். உன்னால் ஒரு செயல் முடியாதபோது, யாரால் முடியுமோ அவரை உன்னுடையதாக்கு என்ற தத்துவம் அவருக்குக் கைவந்ததானது! ஐ।பி।எம். நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தில் இருந்த சாமர்த்தியம்தான் பில்கேட்ஸிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அடுத்த முக்கியமான பாடம். என்னதான் 'ஐ.பி.எம்.' நிறுவனம் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் பாகங்களை உருவாக்கியிருந்தாலும், மற்ற யார் வேண்டுமானாலும் அதை காப்பியடிக்க முடியும். ஆனால், அதில் இயங்கும் சாஃப்ட்வேர் மைக்ரோசாஃப்டிடம் மட்டுமே இருந்தது. ஐ.பி.எம்-க்குப் போட்டியாக பல கம்பெனிகள் இறங்கியபோது அவை சாஃப்ட்வேருக்காக பில்கேட்ஸை நாடின. பிற நிறுவனங்களுக்கு விற்கக்-கூடாது என்று ஒப்பந்தம் போடாததால் 'ஐ.பி.எம்.' கையைப் பிசைந்துகொண்டு நிற்க, பில்கேட்ஸ் டாலர் மழையில் நனையத் தொடங்கினார். தூறல், மழையாகி, அதுவே அடைமழையாகக் கொட்டத் தொடங்கியது.


கீ போர்டு மூலம் மட்டுமே கட்டளைகளை உள்ளிடக்கூடிய 'டாஸ் சிஸ்ட'த்தில் 'மைக்ரோசாஃப்ட்' இருந்த நேரத்தில் 'மவுஸை' வைத்து திரையில் தெரியும் கட்டளைகளை 'க்ளிக்' செய்து செயல்படுத்தும் புதிய தளத்துக்குப் போயிருந்தது போட்டி நிறுவனமான 'ஆப்பிள்'. 1984-ல் அதன் 'மேகின்டாஷ்' கம்ப்யூட்டர் 'மவுஸ்' உடன் வெளிவந்தது. 'மேகின்டாஷ்' கம்ப்யூட்டரில் இயங்குவதற்கு ஏற்ப 'எம்.எஸ்.வேர்ட்'டை (MS word) மட்டும் உருவாக்கிக் கொடுத்தது. ஆனால், அந்த முயற்சியின்போது மவுஸால் கம்ப்யூட்டரை இயக்கும் சிஸ்டத்தின் நுணுக்கங்களை காப்பியடித்து, அதை வைத்து 'விண்டோஸ்' என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை தயாரித்ததாக 'மைக்ரோசாஃப்ட்' மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை நீதிமன்றம் உறுதிப்படுத்தவும் செய்தது.

எதுபற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து நடைபோட்ட 'மைக்ரோசாஃப்ட்'டில் இருந்து, 1990-ல் 'விண்டோஸ்- 3।0' வெளியானது. அதைப் பிரபலப்படுத்த 'மைக்ரோசாஃப்ட்' தயாரித்து அளித்த 'எக்ஸெல்', 'வேர்ட்', 'பவர் பாயின்ட்' ஆகியவற்றை உள்ளடக்கிய 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' மென்பொருட்கள் பெரிதும் பயன்பட்டது. 'ஆப்பிள்' கம்ப்யூட்டரில் கூட 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' வெற்றிகரமாக இயங்கியது. 'விண்டோஸ்- 3.0' நல்ல வெற்றி. 1995-ல் வந்த 'விண்டோஸ் -95' அதை விடக் கூடுதல் வெற்றி. அதற்குள்ளாக அவர் உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்துக்குச் சென்றிருந்தார். 'விண்டோஸி'ன் நதிமூலம் 'ஆப்பிள்'தான் என்பது மறந்தே போயிற்று. இப்படி 'ஆபரேட்டிங் சிஸ்டம்' பந்தயத்தில் கவனம் செலுத்திய பில்கேட்ஸ், இணையப் புரட்சியைத் தவறவிட்டார்। இணையதளங்களை மேய்வதற்கு 'நெட்ஸ்கேப் நேவிகேட்டர்' என்ற உலாவி பிரபலமாக இருந்தது. சுமார் 85 சதவிகிதம் பேர் இந்த உலாவியைப் பயன்படுத்தியே இணையத்தில் உலாவினார்கள். அதனால் என்ன... பில்கேட்ஸ் கையில்தான் ஒரு வெற்றி ஃபார்முலா இருக்கிறதே... உருவாக்கத் தவறினால் உருவாக்கியவனை அழுத்து என்று!'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' என்ற உலாவியைத் தயாரித்தார்। மக்கள் கவனத்தை இந்தப் பக்கம் திருப்ப அவர் எடுத்த ஆயுதம்... இலவசம்! 'விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்ட'த்தோடு 'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை' இலவசமாகக் கொடுத்தார். விளைவைச் சொல்லவேண்டுமா... கொஞ்ச நாளில் 'நெட்ஸ்கேப்' பின்னுக்குத் தள்ளப்பட்டது.

'விண்டோஸ்' என்ற அரக்கனை வைத்துகொண்டு எல்லா சாஃப்ட்வேர் நிறுவனங்களையும் நசுக்குவதாக பில்கேட்ஸ் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டார். மைக்ரோசாஃப்டின் சட்ட விரோத நடவடிக்கை நிரூபிக்கப்பட்டது. மைக்ரோசாஃப்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஒன்று 'ஆபரேட்டிங் சிஸ்டம்' தயாரிக்க. மற்றது பிற சாஃப்ட்வேர்களைத் தயாரிக்க என்று நீதிமன்றம் சொன்னது. ஆனால், சாஃப்ட்வேருக்கு முன்-னால் சட்டம் கொஞ்சம் பலவீனமாகத்-தான் பேசி-யது. பிறகு, அந்தத் தண்டனை வெகுவாகக் குறைக்கப்-பட்டது. இன்றும் சாஃப்ட்வேர் கொடி உயரத்தான் பறக்கிறது... பில்கேட்ஸ் சொல்லும் தெளிவான பாடம் இதுதான்... 'உழைக்கத் தயங்காதே... ஒரு கட்டத்துக்கு மேல் போனபிறகு உண்மையாக உழைப்பவனுடைய உழைப்பை தனதாக்கிக் கொள்ளவும் தயங்காதே...' இதுதான் சக்சஸ் ஃபார்முலா! அதற்கு வாழும் உதாரணமாக இருக்-கிறார் பில்கேட்ஸ்! 2006-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முழுநேர தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார்। அதன்பின் 'சேர்மன்' என்ற அளவில் மற்றவர்களை வைத்து கம்பெனியை நடத்தி, மேற்பார்வை செலுத்திவந்த பில்கேட்ஸ், தற்போது முழுமையாக ஓய்வு பெறுவதாக

 அறிவித்திருக்கிறார்। பல முனைகளிலும் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சவாலைச் சந்திக்கும் நேரத்தில், இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். ஆனால், பில்கேட்ஸ் எனும் மனிதரும், அவர் உலக மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கமும் வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும், சாஃப்ட்வேர் சாம்ராஜ்ஜியத்தின் நிகரில்லாச் சக்கரவர்த்தி என்ற அடையாளத்தோடு.......!!
BILL GATES : A LIVING LEGEND & REAL ROLE-MODEL FOR ALL 'IT' LOVERS. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF