Tuesday, June 29, 2010

கடல்நீரில் உப்பு வந்தது எப்படி?

வெப்பக்கோளமாக இருந்த பூமியில், பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து பெய்த மழையால் தான் கடல் உருவானது என்று கூறப்படுகிறது.
பாறைகளில் இருக்கும் உப்பு, மழைநீரால் கரைக்கபட்டு, ஆற்றுநீரால் அடித்து வரபட்டு கடலில் வந்து கலந்தது; அதன்பிறகு ஆவியாதல் முலம் கடலநீர் மேலே சென்றுவிட, உப்பு மட்டும் கடலிலேயே தங்கி விட்டது. இதுபோல் லட்சக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்றதால் கடலில் அதிகளவு உப்பு சேர்ந்து விட்டது என்றே கருதபட்டது.
ஆற்று நீரில் அதிகளவு இருப்பதோ, கால்சியம் மற்றும் பை-கார்பனேட் உப்பு. கடலில் அதிகளவு இருபது நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சோடியம் குளோரைடு உப்பு. அதாவது அடிபடையில் ஆற்றுரில் உள்ள உப்பும், கடல்நீரில் உள்ள உப்பும் வெவ்வேறானவை. எனவே, கடலநீரில் காணப்படும் சோடியம் குளோரைடு உப்பு எங்கிருந்து வந்தது?
பூமி, முதலில் பாறைக்குழம்புக் கோளமாக எரிமலைகளுடன் இருந்தது. அதன்பின்னர் படிபடியாகக் குளிர்ந்ததால், பல்வேறு அடுக்கு பாறைகளுடன் புவி ஓடு உருவானது. பாறைக்குழம்பில் இருந்து பாறைத் தட்டுகள் உருவானபோது, நீர் தனியே பிரிந்து பூமிக்கு மேல் வந்ததால் தான் கடல் உருவானது.
ஆதிகாலத்தில் எரிமலைகளின் முலமாக பூமிக்குள் இருந்து சோடியம் குளோரைடு உப்புகள், வாயு வடிவில் பூமிக்கு மேல் வந்ததால் தான் கடலநீரில் அதிகளவு சோடியம் குளோரைடு உப்பு இருக்கிறது. இக்கருத்துக்கு ஆதாரமாக பாறைக்குழம்புக் கோளமாக இருக்கும் வியாழன் கிரகத்தின் துணைக்கிரகமான `இயோ’ விளங்குகிறது.
பூமியில் உள்ள எரிமலைகளை விட, இயோவின் மேற்பரப்பில் அதிக வெப்பமுள்ள எரிமலைகள் காணபடுகின்றன. இந்த எரிமலைகளில் இருந்து சோடியம் மற்றும் குளோரைடு உள்பட உப்பு முலபொருட்கள் வாயு வடிவில் பீய்ச்சியடித்துக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாகின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாரல் ஸ்ட்ரோபில் என்ற ஆராய்ச்சியாளர் இதைக் கண்டுபிடித்திருக்கிறார்.
1974-ம் ஆண்டு பாபிரவுன் என்ற ஆராய்ச்சியாளர், இயோவின் வாயு மண்டலத்தில் மெலிதான சோடியம் மேகங்கள் இருப்பதை தொலைநோக்கி முலம் கண்டறிந்து அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்பு பல ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியபட வைத்தது. காரணம், இயோவின் மேற்பரப்பில் எங்குமே உப்பு படிவங்கள் இல்லை. முதன்முறையாக எரிமலைகளின் முலம் உப்பு வாயுக்கள் பீய்ச்சியடித்துக் கொண்டிருபதை டாரல் கண்டுபிடித்ததன் முலம், பல்வேறு புதிர்களுக்கு விடை கிடைத்திருக்கிறது.
அதிக வெப்பநிலையில் பாறைக்குழம்புக் கோளமாக இருக்கும் இயோவில், உப்பு எரிமலைகள் இருப்பதைபோல், நம் பூமியும் முதலில் பாறைக்குழம்புக் கோளமாக இருந்தபோது எரிமலைகளில் இருந்து சோடியம் குளோரைடு வெளிவந்தது தெளிவாகிறது. எனவேதான், கடல்நீரில் அதிகளவு சோடியம் குளோரைடு உள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, June 28, 2010

சூரிய குடும்பத்துக்கு வெளியே இளமையான கோள் கண்டுபிடிப்பு

சூரியக்குடும்பத்துக்கு வெளியே புதிய இளமையான கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கோள் உருவாக்கம் பற்றிய விதிகளை இக்கோள் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
சூரியனிலிருந்து சனி கிரகம் உள்ள தொலைவுக்கு சமமாக, சூரியக்குடும்பத்துக்கு வெளியே 63.4 ஒளி ஆண்டுகள் தொலைவில் பெட்டா பிக்டோரிஸ் என்ற கோள் உள்ளது. இது தன்மையில் சூரியனை ஒத்துள்ளது. இக்கோள் உருவாகி ஒரு கோடி 20 லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கலாமென்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆகவே இளமையான கோளாக கருதப்படுகிறது. சூரியனை ஒத்துள்ள இக்கோள், குறுகிய காலத்தில் இந்த வடிவத்தை பெற்றுள்ளது. ஆனால் சூரியனின் வயதோ, 450 கோடி ஆண்டுகள். பெட்டா 2003ல் கண்டுபிடிக்கப்பட்டது. 2009ல் அது ஒரு கோள்தான், நட்சத்திரமல்ல என்று உறுதி செய்யப்பட்டது.
பெட்டா பிக்டோரிஸ் கோளுக்கு அருகில் அதன் துணைக்கோளாக சுற்றி வரும் ஒரு கோளை விஞ்ஞானிகள், தென் ஐரோப்பிய வானியல் கூடத்தின் மிகப்பெரிய டெலஸ்கோப் மூலம், கடந்த ஆண்டில் கண்டறிந்தனர். இந்த கோளுக்கு பெட்டா பிக்டோரிஸ் பி என்று பெயரிட்டுள்ளனர். பொதுவாக ஒரு கோள், முழுமையான வடிவத்துடன், கோளுக்கேயுரிய தன்மைகளை பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு கோடி ஆண்டுகளாகும் என்று அறிவியல் விதிகள் கூறுகின்றன. பி.டி.20 1790பி என்ற கோள், மிகக் குறைந்தபட்சமாக 30 கோடியே 50 லட்சம் ஆண்டுகளில் உருவானதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பெட்டா பிக்டோரிஸ் பி உருவாகி, சில லட்சம் ஆண்டுகளே ஆகியிருக்குமென்று தெரியவந்துள்ளது. இக்கோள், வியாழனை விட ஒன்பது மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. சூரியக்குடும்பத்துக்கு வெளியே, இப்போதைக்கு மிக இளமையான கோள் இதுதான் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, June 27, 2010

iraq war tamil song

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மனிதன் நுரையீரலை செயற்கையாக உருவாக்கும் முயற்சி

மனிதன் நுரையீரலை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் அமெரிக்காவில் ஏல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.இதற்காக முதலில் எலியின் நுரையீரலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எலி நுரையீரலின் செல்லை எடுத்து அதை வளரச்செய்து அதன் மூலம் நுரையீரலை உருவாக்கினார்கள்.

அது எலி நுரையீரல் போலவே திறம்பட செயல்பட்டது. ஆய்வகத்தில் வைத்து நடத்தப்பட்ட இந்த சோதனையில் சுவாசிக்கும் காற்றில் இருந்து நுரையீரல் ஆக்சிஜன் மற்றும் கார்பன்டை ஆக்சைடை பிரிக்கும் வேலையை சரியாக செய்தது. அதில் ஆக்சிஜனை ரத்தத்தில் உள்ள ஹீமோ குளாபினில் சேர்க்கும் பணியையும் செய்தது. இந்த நுரையீரல் 215 நிமிடத்தில் இருந்து 120 நிமிடம் வரை சரியாக செயல்பட்டது. 

இதே அடிப்படையில் மனித நுரையீரலையும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர். 

இதுபற்றி விஞ்ஞானி லாரா நிக்கல்சன் கூறும்போது, செயற்கை எலி நுரையீரல் வெற்றிகரமாக செயல்படுகிறது. இதை அடிப்படையாக வைத்து மனித நுரையீரலை உருவாக்க உள்ளோம். 
இதை உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிக காலங்கள் ஆகும். ஆனாலும் இது மருத்துவ முன்னேற்றமாக அமையும் என்றார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் நீச்சல் குள தடாகம்

உலகிலேயே மிக அதிக பணச் செலவில் கட்டப்பட்ட ஹோட்டல் வரிசையில் தற்போது இடம்பிடித்திருப்பது சிங்கப்பூரில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் ஆகும். சில தினங்களுக்கு முன்னர் இந்த ஹோட்டல் திறந்துவைக்கப்பட்டது. சுமார் 650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நீச்சல் குள தடாகம், ஒலிம்பிக் நீச்சல் குள தடாகத்தைவிட 3 மடங்கு பெரியது எனவும், சிறு வள்ளங்கள் அங்கு பாவிக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. உலகிலேயே கட்டிடத்திற்குமேல், இவ்வாறானதொரு பாரிய நீச்சல் தடாகம் கட்டப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

55 மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலில் சுமார் 2,500 அறைகளைக் கொண்டதாகவும், சுமார் 350.00 ஸ்டேலிங் பவுண்களை அறை ஒன்றின் கட்டணமாக அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 650 அடி உயரத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகமே பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும் சுமார் 70,000 பார்வையாளர்கள் இந்த ஹோட்டலை தினமும் பார்வையிட்டுச் செல்வதாகவும் கூறப்படுகிறது. சுமார் 4 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல், ஆண்டுக்கு சுமார் 40 மில்லியன் டாலர்களை இலகுவாகச் சம்பாதிக்கும் என அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, June 26, 2010

3ஜி இணைந்த மூன்று சிம் போன்

3ஜி இணைந்த நெட்புக் கம்ப்யூட்டர் மற்றும் ஆலிவ் பார் எவர் ஆன் என்ற இருவகை சிம்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய மொபைல் போனையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய ஆலிவ் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஆலிவ் விஸ் (Olive Wiz) என்ற சோஷியல் நெட்வொர்க் மொபைல் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் மூன்று (2 ஜி.எஸ்.எம். + ஒரு சி.டி.எம்.ஏ) சிம்களை இணைத்துப் பயன்படுத்தலாம். இதில் ஆப்பரா மினி பிரவுசர் தரப்பட்டுள்ளது. ஒரு கிளிக் மூலம் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களுகுச் செல்லலாம் பிரவுசிங் மேற்கொள்ளலாம்.
குவெர்ட்டி கீ போர்டு உள்ளது. எளிதாக இமெயில்களைக் கையாள இது உதவுகிறது. ஒரு மொபைல் போனில் காணப்படும் அனைத்து அடிப்படை வசதிகளுடன், 2 மெகா பிக்ஸெல் கேமரா, 4 ஜிபி வரை அதிகப்படுத்தக்கூடிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்,2.2 அங்குல வண்ணத் திரை, இமெயில் பிரவுசிங், WAP/MMS/GPRS தொழில் நுட்ப வசதிகள், ஸ்டீரியோ ஹெட்செட், ஸ்பீக்கர் போன்,எப்.எம். ரேடியோ ஆகியவை உள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, June 24, 2010

மொபைல் டேட்டா அழிந்து போனால்!

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது.
போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?
சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை.
இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது. இந்த சேவையின் பெயர் rSeven. இதனை என்றமுகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதியவும்.
இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது.
இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

வருகிறது ஐ போன் 4

அதோ இதோ என்று சொல்லப்பட்ட ஐ போன் 4 அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனமே ஐபோனையும் அது குறித்தத் தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரிட்டனில் இந்த போன் ஜூன் 24 அன்று விற்பனைக்குக் கிடைக்கும். அடுத்து ஜூலை மாதத்தில் மேலும் 18 நாடுகளில் வெளியிடப்படும்.  இந்த போனின் சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்.
1.வடிவம்:
புதியதாக, முழு சதுரமாக, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இதன் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. வால்யூம் கீகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. முந்தைய போனைக் காட்டிலும் 28% ஸ்லிம்மாக உள்ளது. 9.33 மிமீ தடிமன் உள்ளது. இப்போது உள்ள மொபைல் போன்களில், இதுவே மிகக் குறைந்த தடிமன் உடையாதாக இருக்கிறது.
போனைச் சுற்றிச் செல்லும் ஸ்டீல் வளையம், ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதுவித உலோகமாகும். இது போனுக்கான ஆன்டென்னாவாகவும் இயங்குகிறது. இரண்டாவதாக ஒரு மைக் இணைக்கப்பட்டு, ஒலியின் தேவைற்ற இரைச்சலை நீக்குகிறது. இதன் டூயல் ஸ்பீக்கர்கள் கீழாக அமைக்கப்பட்டுள்ளன. எடை 137 கிராம்.
2. மைக்ரோசிம்:
இந்த போனில் வழக்கமான சிம் கார்டுக்குப் பதிலாக மைக்ரோ சிம்மினைப் பயன்படுத்தலாம்.
3.டிஸ்பிளே:
ஐபோன் 4–ன் திரை அதே 3.5 அங்குல அகலம் கொண்டுள்ளது. ரெசல்யூசன் 640 x 960 ஆக 320 x 480 லிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. மொபைல் போன் ஒன்றின் திரையில் அதிக பட்சம் காணப்படும் ரெசல்யூசன் இதுவாகத்தான் இருக்கும். எல்.இ.டி. பேக் லைட்டுடன் கூடிய எல்.சி.டி. திரையாக இது உள்ளது. இந்த திரையை‘Retina Display’ என அழைக்கின்றனர்.
இந்த தொழில் நுட்பம் ஒரு சதுர அங்குலத்தில் 326 பிக்ஸெல்களைத் தருகிறது. இந்த திரை மேற்புறம் அலுமினோ சிலிகேட் கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், இதில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படாது. இதை ரீசைக்கிள் செய்திட முடியும் என்பதால், அடுத்து ஐபோன் 5 வரும்போது எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
4. கேமரா:
இதன் கேமரா நேரடியாக 8 எம்.பி.க்கு உயரும் என்று எதிர்பார்த்த வேளையில், 5 மெகா பிக்ஸெல் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு எல்.இ.டி. பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. இதனை வீடீயோ ரெகார்டிங் போது பயன்படுத்தலாம். வீடியோ ரெகார்டிங் நொடிக்கு 30 பிரேம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
டச் போகஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் மற்றும் ஜியோ டேக்கிங் ஆகியவை கிடைக்கின்றன. போன் முன் பக்கம் உள்ள இன்னொரு கேமரா, வீடியோ சேட்டிங் செய்திட மிகவும் உதவுகிறது. பேஸ் டைம் என்னும் வசதி மூலம் கேமராக்களுக்கிடையே மாறிக் கொள்ளலாம்.
5.சிப்:
ஆப்பிள் ஏ4 சிப் ஒரு கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. இதே சிப் ஐ பேடிலும் பயன்படுத்தப்படுகிறது. மல்ட்டி டாஸ்க் மற்றும் கேம்ஸ் இயக்கங்கள் இதன் மூலம் மிக எளிதாகக் கிடைக்கின்றன. HSDPA/HSUPA, WiFi 802.11 b/g/n என நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது.
6. கூடுதல் உதிரி வசதிகள்:
பார்வை வசதி குறைந்தவர்களுக்கென ஸ்கிரீன் ரீடிங் என்னும் புதிய நுட்பம் தரப்பட்டுள்ளது. இது போனில் ஏற்படுத்தப்படும் அசைவுகள் மற்றும் தொடுதல் மூலம் இயங்குகிறது. கீ போர்டில் தொடப்படும் எழுத்துக்களை வாய்ஸ் மூலம் தருகிறது. இதன் உள்ளே உள்ள 21 மொழிகளில் இதனை இயக்கலாம். வீடியோ சேட் வசதி இதில் புகுத்தப்பட்டுள்ளது.
இதற்கென வீடியோ சேட் எனப்படும் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனை 30 புளுடூத் சாதனங்களுடன் ஒரே நேரத்தில் இணைத்து இயக்கலாம். இதில் தரப்பட்டுள்ள ஸூம் செயல்பாடு மூலம், திரையை ஐந்து பங்கு பெரிதாக்கிக் காணலாம்.
தான் அடுத்து வடிவமமைக்கும் போன்களில் மின்திறன் அதிகப்படுத்தப்படும் என ஆப்பிள் முன்பு அறிவித்திருந்தது. இதில் மின்திறன் 40% அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 3ஜி பிரவுசிங் தொடர்ந்து ஆறு மணி நேரம், வீடியோ 10 மணி நேரம், மியூசிக் 40 மணி நேரம் பயன்படுத்தலாம். ஒரு முறை ஏற்றப்பட்ட சார்ஜ் 300 மணி நேரம் தங்குகிறது.
இதன் விலை 16ஜிபிக்கு 199 டாலர்; 32 ஜிபிக்கு 299 டாலர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, June 23, 2010

விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு!

இப்போது விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் ஒன்றாகத்தான் தங்க வேண்டும். ஒரு விண்வெளி வீரர் தனிமை விரும்பியாக இருந்தாலும் அவர் தனியே தங்க வாய்ப்பிருக்காது. அதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கவிருக்கிறது, அமெரிக்கா லாஸ் வேகாஸில் உள்ள `பிகெலோவ் விண்வெளி இருப்பிட கட்டுமானத் தொழிற்சாலை’.
இத்தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ள எதிர்காலத்துக்கான மாதிரி விண்வெளி இருப்பிடங்கள் பெரிய தர்ப்பூசணியைப் போலக் காட்சியளிக்கின்றன. இவற்றின் உள்ளே சென்றாலே ஒரு வசதியான வசிப்பிடத்துக்கான அனைத்து வசதிகளையும் காண முடிகிறது.
“எங்கள் தொழிற்சாலைக்கு வந்து இவற்றைப் பார்க்கும் ஒவ்வொரு விண்வெளி வீரரும் பெரிதும் வியந்து போகின்றனர். இந்த அளவுக்கு ஓர் இருப்பிடத்தை உருவாக்க முடியும் என்று அவர்களால் நம்பவே முடியவில்லை” என்று இந்தத் தொழிற்சாலையின் நிறுவனரான ராபர்ட் பிகெலோவ் தெரிவிக்கிறார்.
இன்னும் நான்காண்டு காலத்தில் இந்த விண்வெளி வசிப்பிடங்கள் விண் வெளிக்குச் செல்லப் போகின்றன. அப்போது இவை முதல் விண்வெளி `தனி வசிப்பிடங்களாக’ இருக்கும்.
`பேயிங் கஸ்டமர்களுக்கான’ இருப்பிடங்கள் அதற்கடுத்து ஓராண்டுக்குப் பின் ஏற்படுத்தப்படும். விண்வெளி நிலையம் அமைக்கும் நிபுணத்துவமோ, பொருளாதார வசதியோ இல்லாத நாடுகள் அந்தக் குடியிருப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும். எல்லாவற்றுக்கும் மேலாக, 2016-ம் ஆண்டில் ஒரு பெரிய விண்வெளிக் குடியிருப்பு அமைக்கப்படும். அப்போது அங்கு ஒரே நேரத்தில் 36 விண்வெளி வீரர்கள் வசிக்க முடியும். அது, தற்போதைய சர்வதேச விண்வெளி நிலையத்தில் வசிக்கும் விண்வெளி வீரர்களைப் போல ஆறு மடங்கு அதிகம்.
2017-ம் ஆண்டில் 15 முதல் 20 ராக்கெட் ஏவுதலுக்குக் கட்டணம் செலுத்தியுள்ளது `பிகெலோவ்’ நிறுவனம். அதற்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராக்கெட் ஏவுதலைப் பயன்படுத்திக்கொள்ளும். அதன்மூலம் வர்த்தக ரீதியாக விண்வெளிக்கு ஆட்களைக் கொண்டு செல்ல முடியும் என்று நம்பப்படுகிறது. தனியாரின் இந்த முயற்சிக்கு அமெரிக்க அரசும் ஆதரவு அளிக்கிறது.
விண்வெளிக்கு ஆட்களைக் கொண்டு செல்லும் திறன் கொண்ட விண்கலங்களை உருவாக்குவதற்கு மேலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு உதவுவதற்காக 2011-ம் ஆண்டில் 600 கோடி டாலர்கள் என்ற பெருந்தொகையை முதலீடு செய்யவுள்ளது ஒபாமா அரசு.
தனியார் நிறுவனங்களின் வர்த்தக ரீதியான விண்வெளி முயற்சிகள் வெற்றி பெற்றால், பணம் செலுத்தும் எவரும் விண்வெளிக்குப் பயணம் செய்து அங்கு குறிப்பிட்ட நாட்களுக்குத் தங்கலாம்.
`பிகெலோவ்’ நிறுவனத்தின் விண்வெளி வசிப்பிடத்துக்குப் பூமியிலிருந்து செல்லவும், அங்கு 30 நாட்களுக்குத் தங்கவும் தற்போது ஏறக்குறைய 112 கோடி ரூபாய் கட்டணமாக விதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது அதிகமாகத் தெரிந்தாலும், ரஷியாவின் `சோயுஸ்’ விண்கலத்தின் மூலம் தனது வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப `நாசா’ செலுத்தும் கட்டணத்துடன் ஒப்பிடும்போது குறைவுதான்.
`சூடான்சர்’ என்ற பெயர் கொண்ட, 6,400 கனஅடி பரப்புக் கொண்ட விண்வெளி இருப்பிடத்தை முதலில் விண்வெளிக்கு அனுப்ப `பிகெலோவ்’ திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு 11,700 கனஅடி பரப்புக் கொண்ட இரண்டாவது `சூடான்சர்’ விண்வெளிக்கு அனுப்பப்படும்.
விண்வெளி இருப்பிடங்கள் நிறுவப்பட்டதும், தாங்களால் உணவு, நீர், காற்று விநியோகத்தை மேற்கொள்ள முடியும், திடீரென ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும் என்று `பிகெலோவ்’ நிரூபித்துக் காட்டும். இந்நிறுவனம் தற்போது கூறும் விஷயங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டால், எதிர்கால விண்வெளி வசிப்பிடத்துக்கும், பூமியில் உள்ள ஓட்டல்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இருக்காது என்று கூறப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, June 22, 2010

கடும் மழையால் வந்த விபரீதம்

கௌதமாலா நாட்டில் கடந்த வாரம் பெய்த புயலுடன் கூடிய கடும் மழையின் போது நடந்த விபரீதம் இது. இந்தக் கடும் மழையில் 179 பேர் வரை பலியானார்கள்.

இந்நிலையில் தலைநகரின் கட்டட நெரிசல் மிக்க பகுதியில் நான்கு வீதிகள் சந்திக்கும் சந்திப் பகுதி ஒன்றில் பாரிய குழி ஏற்பட்டுள்ளது.

இதன்போது மேலே அமைந்திருந்த 3 மாடிக் கட்டடம் ஒன்றும் அதில் இருந்தவர்களுடன் குழியினுள் விழுந்து காணாமல்போயுள்ளது. இந்தக் குழி 60 அடி விட்டமும் 330 அடி ஆழமும் கொண்டதாக அமைந்துள்ளது.

இது எதனால் ஏற்பட்டது என்பது குறித்து தற்போது புவியலாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இதேபோன்றதொரு பாரிய குழி அந்நாட்டில் 2007ம் ஆண்டு பெய்த மழையின்போதும் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் வடிவம் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தனது வெற்றிகரமான ஐபோனின் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்" புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் 40 சதவீத வருவாய் ஐபோன் விற்பனை மூலம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. "ஐபோன்"கள் 2007ல் சந்தைக்கு வந்தன. இதுவரை 5 கோடி போன்கள் விற்பனையாகியுள்ள நிலையில், தற்போது மேலும் பல புதிய அம்சங்களுடன் அதன் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்-4" மாடல் சந்தைக்கு வந்துள்ளது.

ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல்போன் சகல வசதிகளையும் கொண்டதாகத் திகழ்கிறது. OS 4 எனும் இயங்குதளத்தில் அதிவேகமாக இயங்கும் திறன் கொண்ட இந்த புதிய செல்போனில், Video Calling, Retina high-resolution display, 5 மெகா பிக்ஸல் கேமரா, லெட் ஃப்ளாஷ், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு வசதி, வை-ஃபி என ஏராளமான வசதிகளை உள்ளடக்கியது இந்த புதிய செல்போன்.

முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையதளத்தை பயன்படுத்தவும் முடியும்.

ஜூன் 24 முதல் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளில் விற்பனை செய்ய உள்ளது. ஜூன் 15 முதல் இந்த ஐபோன்-4 க்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கெனவே ஐபோன் வைத்திருப்பவர்கள், புதிய சாஃப்ட்வேர்களை ஐ ட்யூன் தளத்தில் வரும் ஜூன் 21 முதல் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்..

சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா உள்பட 21 நாடுகளில் ஜூலையில் விற்பனைக்கு வருகிறது ஐபோன். இந்தியா உள்ளிட்ட 88 நாடுகளில் வரும் செப்டம்பரில்தான் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும்.. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, June 21, 2010

சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கான காரணம்..

சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு, அரிசி கஞ்சியால் உருவாக்கப்பட்ட சாந்து கலவையே காரணமென விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக, சீனப் பெருஞ்சுவர் கருதப்படுகிறது. இந்த நீண்ட சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், இயற்கை சீற்றங்களையெல்லாம் எதிர்த்து இன்றும் உறுதியுடன் உள்ளது. இது தொடர்பாக, பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சீஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு, அரிசி கஞ்சி, சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புக்கல் கலந்த சாந்து பொருள் தான் காரணமென தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது:பழங்கால சீன கட்டட கலைக்கு சான்றாக, சீனப் பெருஞ்சுவர் விளங்குகிறது. இந்த சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், அதே உறுதியுடன் இருப்பதற்கு, அரிசி கஞ்சியுடன், சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, உருவாக்கப்பட்ட கலவையால், கற்களை இணைத்துள்ளது தான் காரணம்.
இந்த கலவையில், தாவர பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயிரற்ற பொருளான சுண்ணாம்பில், கால்சியம் கார்பனேட் உள்ளது. தாவரத்திலிருந்து எடுக்கப்படும் அரிசி கஞ்சியில், “அமிலோபெக்டின்’ என்ற மாவுச்சத்து உள்ளது.சுண்ணாம்பு மற்றும் அரிசி கஞ்சி உள்ளிட்ட பொருட்களை கலந்து கலவை உருவாக்கும்போது, அரிசி கஞ்சியில் உள்ள “அமிலோபெக்டின்’ கலவைக்கு ஒட்டும் தன்மையை கொடுக்கிறது. இந்த கலவையை, கற்களுக்கு இடையில் வைத்து கட்டும்போது, அந்த சுவர் மிகவும் உறுதியாக மாறுகிறது. மேலும், சுவர்களில், விரிசல் ஏற்படாமலும், அதில் காளான், பூஞ்சை போன்றவை ஏற்படாமலும் சுவரை பாதுகாக்கிறது.
இந்த கலவையை கொண்டுதான், சீனப்பெருஞ்சுவரும், அதில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இது கட்டப்பட்ட பின், பல்வேறு போர்களை சந்தித்துள்ளது. பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களால், இதை உடைக்கும் முயற்சிகள் எல்லாம் தோற்றன.மேலும் நிலநடுக்கம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களையும் தாங்கி, அதே உறுதியுடன் இந்த சுவர் நீடித்து நிற்கிறது.பழங்கால கட்டடக்கலை வல்லுனர்கள், எத்தகைய பொருட்களை பயன்படுத்தினர் என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்குமா என்பது தெரியாது. இருப்பினும் தொடர்ந்து எங்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, June 20, 2010

ஒரேயொரு மூளையுடன் வாழும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

உலகில் ஒட்டிப் பிறந்திருக்கும் இரட்டைக் குழந்தைகள் எல்லோரையும் விட இவர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். ஏனெனில் இவர்கள் இருவருக்கும் ஒரேயொரு மூளை மாத்திரம் பொதுவாக இருக்கின்றது.
ஒரேயொரு மூளையுடைய ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இந்த உலகத்திலேயே இவர்கள் மாத்திரம்தான். ரரிஅனா-கிரிஸ்ரா இருவரும் கனடாவில் வாழ்கின்றார்கள். இவர்களுக்கு தற்போது மூன்று வயது.இருவருக்கும் ஒரேயொரு மூளை மாத்திரம் இருப்பதால் ஒருவரிடம் இருந்து மற்றவரை அறுவைச் சிகிச்சை மூலம் பிரிக்கின்றமை சாத்தியம் அல்ல என்று வைத்தியர்கள் திட்டவட்டமாகக் கூறி விட்டனர். இவர்களுக்கு வேறு யாரிடமும் காணவே முடியாத தனித்துவமான சிறப்புத் தன்மைகள் பல இருக்கின்றன என்று பெற்றோர் கூறுகின்றனர்.
குறிப்பாக ரரிஅனாவின் கண்களால் கிரிஸ்ராவும், கிரிஸ்ராவின் கண்களால் ரரிஅனாவும் காட்சிகளைக் காண முடிகின்றது என்று அவர்கள் தெரிவித்தனர்.சாதாரணமாக ஒட்டிப் பிறந்த ஏனைய இரட்டைக் குழந்தைகளால் செய்ய முடியாத இவ்வாறான பல செயல்களை இந்த இருவரும் செய்கின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் மருத்துவ உலகம் இவர்களைப் பார்த்து அதிசயிக்கின்றது.
உலகத்தின் மாறுபட்ட அபிப்பிராயங்களையும் தாண்டி இவர்கள் இருவரும் எப்போதும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். இவர்களால் நன்றாகவே நடந்து திரிய முடிகிறது.இவர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் உண்டு. உதரணமாக எந்தப் பாதையால் நடக்கலாம்?, என்ன செய்து கொள்ளலாம்? போன்ற விடயங்களில் இவர்களுக்குத் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் எழுந்துவிடத்தான் செய்கின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Delta IV உந்துகணை

உந்துகணைகளும் அவற்றின் பயன்பாடுகளும் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படும் தேவைகளுக்கேற்ப காணப்படுகின்றன. இன்றைய விண்வெளிப் பயணங்கள் அனைத்தும் உந்துகணைகளின் உதவியுடனேயே மேற்கொள்ளப்படுகின்றன.
விண்வெளிப் பயணங்களிலும் குறிப்பிட்டதொரு விண்வெளிப் பயணத்தின் தேவையினைப் பொறுத்து அத்தேவைக்குப் பொருத்தமான உந்துகணை பயன்படுத்தப்படுகின்றது.
இவ்வாறு விண்வெளிக்குச் செயற்கைக் கோள்களை ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் உந்துகளை வகையைச் சார்ந்ததே இந்த DeltaIV உந்துகணையாகும். இந்த Delta IV ஏவுகணையானது காவிச்செல்லும் நிறை மற்றும் காவிச்செல்லும் உயரம் என்பவற்றிற்கேற்ப மேலதிக உந்துசக்தியைப் பெறுவதற்கான மேலதிக உந்துகணை ஊக்கிகளை (additional rocket boosters) பொருத்திப் பயன்படுத்தவல்லதாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக இந்த உந்துகணை விரிவுபடுத்தவல்ல ஏவு தொகுதி (expandable launch system) என்றழைக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனமான போயிங் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட இந்த உந்துகணை, அமெரிக்க வான்படையினால் பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்கான செயற்கைக் கோள்களை சுற்றுப்பாதையில் ஏவுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த உந்துகணைகள் ஐந்து வெவ்வேறு வடிவங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையிலேயே இவ்வுந்துகணைகள் உற்பத்தி செய்யப்பட்டன. 63 மீற்றர் தொடக்கம் 72 மீற்றர் வரையான உயரங்களில் காணப்படும் இவ்வுந்துகணை, 5 மீற்றர் விட்டத்திலும் 249500 – 733400 கிலோகிராம் நிறையுடையதாகவும் காணப்படுவதுடன், இரண்டு தொகுதிகளால் ஆனதாகவும் காணப்படுகின்றது.
Delta IV உந்துகணை ஒன்று பல்வேறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது தொகுதியே பிரதான தொடக்கநிலை உந்துகணை இயந்திரத்தைக் (rocket engine) கொண்டுள்ளது. உந்துகணையின் வடிவத்திற்கேற்ப இவ்வுந்துகணையின் முதலாவது தொகுதி RS-68 உந்துகணை இயந்திரத்தைக் கொண்டிருக்கும். பொதுவாக உந்துகணைகளின் முதலாவது தொகுதி இயந்திரங்கள் திண்ம எரிபொருள் (solid fuel) இல்லது மண்ணெய் (kerosene) பயன்படுத்தியே இயக்கப்படும். ஆனால் இந்த Delta IV உந்துகணை முதலாவது தொகுதி இயந்திரத்திற்கு திரவ ஐதரசன் மற்றும் திரவ ஒட்சிசன் கலவையையே எரிபொருளாகப் பயன்படுத்துகின்றது.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட உந்துகணை இயந்திரங்களில் மிகவும் பெரியது, இந்த Delta IV உந்துகணையின் முதலாவது தொகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் RS-68 உந்துகணை இயந்திரமேயாகும். இவ்வுந்துகணை இயந்திரத் தயாரிப்பின் பிரதான நோக்கம் குறைந்த செலவில் அதிக வலுவைப் பெறவல்லதாக இவ்வியந்திரத்தை உருவாக்குவதே. இவ்வுந்துகணையின் இரண்டாவது தொகுதி RL-10B2 உந்துகணை இயந்திரத்தைக் கொண்டுள்ளது.
இந்த Delta IV இன் சிறிய வடிவத்தில் RS-68 வகை இயந்திரம் முதல் சில நிமிடங்களுக்கு 102% உந்துவிசையை உந்துகணைக்கு வழங்குகின்றது. முதல் நிலை இயந்திரத்தின் உந்துவிசை 58% ஆகக் குறைவடைந்து இதன் இயக்கம் செயலிழந்ததும், முதல்நிலைத் தொகுதி உந்துகணையிலிருந்து பிரிந்துவிட, அடுத்தநிலை இயந்திரம் தொடர்ந்து உந்துகணையை உந்திச்செல்லும். அதேபோன்று இவ்வுந்துகணையின் கனரக வடிவத்தில் முதற்தொகுதியின் இயந்திரம் முதல் 50 செக்கன்களுக்கு 120% உந்துசக்கியை உந்துகணைக்கு வழங்கி 50 செக்கன்களின் முடிவில் உந்துவிசை 58% ஆகக் குறைவடைந்து இயந்திரம் செயலிழக்கின்றது. இயந்திரங்களின் இந்தச் செயற்பாடுகள் யாவும் வழிநடத்தற் தொகுதியிலிருந்து (guidance system) கிடைக்கும் கட்டளைகளுக்கேற்ப இடம்பெறுகின்றன.
Delta IV உந்துகணையில் பயன்படுத்தப்படும், L3 Communication நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட, வழிநடத்தற் தொகுதியானது, சுழல்காட்டி (gyroscope) மற்றும் முடுக்கமானி (accelerometer) ஆகியவற்றின் துணையுடன் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தின் கட்டளைகளையும் உள்வாங்கி மிகவும் மிகவும் துல்லியமாக உந்துகணையினை வழிநடாத்திச் செல்கின்றது.
இந்த உந்துகணையானது தேவைக்கேற்ப பல்வேறு வகையான சுமைகளைக் (payload) காவிச்செல்லவல்லது. இதன் சுமையேற்றும் பகுதியானது வெவ்வேறு வகையான சுமைகளை ஏற்றக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சுமைகளின் தன்மைக்கேற்ப, சுமையேற்றும் பகுதியையும் மாற்றக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டிலிருக்கும் உந்துகணைகளிலேயே, இந்த Delta IV உந்துகணையே மிகவும் உயரம் கூடிய உந்துகணையாகும். விண்வெளிப் பயணத்துறையினுள் இந்த Delta IV உந்துகணை அறிமுகப்படுத்தப்பட்டபொழுது, விண்ணுக்கு செய்மதிகள் மற்றும் பிற பொருட்களை அனுப்புவதற்குத் தேவையான உந்துகணைகள் போதுமானளவிற்குப் பயன்பாட்டில் இருந்தன. அதீத திறனுடன் இந்த உந்துகணை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இதனை ஒருதடவை ஏவுவதற்கு ஆகும் செலவு, வர்த்தக நிறுவனங்களுக்குக் கட்டுபடியற்றதாக இருந்தது. இதன் காரணமாக வர்த்தக நோக்கில் இந்த உந்துகணை எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இருப்பினும் அமெரிக்க அரசு இந்த உந்துகணையினை தேவைக்கேற்ப பயன்படுத்தியே வருகின்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, June 19, 2010

மெக்சிக்கோ எண்ணெய்க்கசிவு : பிரி. ரூ. 92 ஆயிரம் கோடி நஷ்டஈடு

மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுக்கு ரூ. 92 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க பிரிட்டிஷ் பெற்றோலிய நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து பெருமளவில் மெக்ஸிகோ கடலில் எண்ணெய்க் கசிந்து வருகிறது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்தான் இதனை ஓரளவு அடைக்க முடியும் எனக் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மெக்ஸிகோ கடலில் பெரும் பரப்பளவில் பரவிக் கிடக்கும் இந்த எண்ணெயால் சுற்றுச் சூழல் பாதிப்பு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எண்ணெய்க் கசிவைச் சுத்தம் செய்யும் பணியை இப்போதைக்கு ஆரம்பித்துள்ளனர். ஆனால் கசியும் எண்ணெயின் அளவில் 1 சதவீதத்தைக் கூட நாள்தோறும் சுத்தம் செய்யமுடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு பிரிட்டிஷ் பெற்றோலிய நிறுவனம் 1.6 பில்லியன் டொலர் மட்டுமே முதலில் செலவிட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் எச்சரிக்கை மற்றும் நெருக்குதல் காரணமாக 20 பில்லியன் டொலர் (ரூ. 92,000 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது மேற்படி நிறுவனம்.
இந்தத் தொகையை மேலும் அதிகரித்துத் தரவும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டோனி ஹேவர்ட் ஒப்புக் கொண்டுள்ளார்.
பிரிட்டிஷ் பெற்றோலிய நிறுவன அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்துக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஒபாமா இத்தகவலை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"தற்போதைய அமெரிக்க சட்டத்தின் படி, இத்தகைய எண்ணெய்க் கசிவு விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் ரூ. 345 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால், இது மிகவும் குறைவான நிதி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மெக்சிகோவில் தற்போது நிகழ்ந்துள்ள இந்த மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேட்டால், பொதுமக்கள், வணிகம் செய்வோர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய இழப்புகளை ஈடுசெய்யும் வகையில், ரூ.92,000 கோடி அளிக்க பிரிட்டிஷ் பெற்றோலியம் முன்வந்துள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த முடிவுக்கு அமெரிக்க அரசியல் தலைவர்களும் தலைவர்களும் வரவேற்பளித்துள்ளனர்.
"இது பகுதி அளவு இழப்பீடுதான், சேதங்கள் அதிகமாகும் பட்சத்தில், பாதிக்கப்படும் மக்களுக்கான முழு இழப்பீட்டையும் பிரிட்டிஷ் பெற்றோலிய நிறுவனம் அளிக்க வேண்டியிருக்கும்" என அமெரிக்க நாடாளுமன்ற தலைவர் நான்சி பெலோசி தெரிவித்தார்.
இதற்கிடையே, கசியும் எண்ணெயின் அளவு தினசரி 50,000 பேரல்களுக்கும் அதிகம் என்பதை முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது அமெரிக்கா.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, June 18, 2010

சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் : அறிவியலாளர்கள் எச்சரிக்கை


கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது.
வாசிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 8 ஆம் நாளன்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழிநுட்ப உபகரணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.
“நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது, இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்,” என நாசாவின் ஈலியோஇயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் ஃபிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக்கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை எற்படுத்தும். இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரியக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும், தொழிநுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக்கும்.
இருந்தாலும் "பெரும் ஒளிவட்ட வெளித்தள்ளுதல்" (coronal mass ejections, CMEs) மனித இனத்தைப் பாதிக்கும் எனக்கூறப்படுகிறது. இது 2012 ஆம் ஆண்டில் நிகழலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும்.
அதிதொழிநுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை எற்ற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

வியாழனில் இடம்பெற்ற மோதுகையை அடுத்து பெரும் தீப்பந்து அவதானிக்கப்பட்டது

விண்கல் அல்லது சிறுகோள் ஒன்று வியாழனில் சென்ற வியாழக்கிழமை மோதியதை அடுத்து அப்பகுதியில் பெரும் தீப்பந்து ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீப்பந்து ஜூன் 3 2031 UTC மணிக்கு பிலிப்பீன்சைச் சேர்ந்த கிறித்தோபர் கோ, மற்றும் ஆத்திரேலியாவைச் சேர்ந்த ஆந்தனி உவெசுலி ஆகிய இரண்டு தனிப்பட்ட வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. உவெஸ்லி என்பவரே சென்ற ஜூலை மாதத்தில் வியாழன் கோளில் இடம்பெற்ற மோதுகையை அவதானித்து நாசாவுக்கு அறிவித்தவர். இம்முறை பூமியைப் போன்ற அளவுள்ள தீப்பந்து மோதுகையின் பின்னர் எழும்பியதை அவதானித்துள்ளார். விண்கல் ஒன்று கோள் ஒன்றில் மோதியதை காணொளி மூலம் பதிவு செய்யப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.
சென்ற ஆண்டு வியாழன் மோதுகையைப் பற்றிய மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டு சில மணி நேரத்தில் புதிய மோதுகை அவதானிக்கப்பட்டுள்ளது. சென்ர ஆண்டு 500 மீட்டர் அகலமுள்ள சிறு கோள் ஒன்று 2009, ஜூலை 19 இல் மோதியதென்றும், இதன் மூலம் பசிபிக் பெருங்கடல் போன்ற அளவுள்ள காயம் வியாழனில் தோன்றியுள்ளதாகவும் ஹைடி ஹம்மெல் என்பவரின் தலைமையில் வானியலாளர்கள் அறிவித்துள்ளனர். இதன் தாக்கம் பல ஆயிரம் அணுகுண்டுகளின் தாக்கத்துக்கு ஒப்பானதாகும்.
1994 ஜூலையில் ஷூமேக்கர்-லீவு 9 என்ற வால்வெள்ளி வியாழனைத் தாக்கியிருந்தது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மனிதர்கள் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம் கெபிட்டல் கேட்: கின்னஸ் சாதனையில் பதிவு

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள'கெபிட்டல் கேட்'என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி தொடங்கப்பட்டது. 

இதற்கு 'கெபிட்டல் கேட்'எனப் பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டது. 


இந்த கட்டடம், 18 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது, பைசா கோபுரத்தின் சாய்மானத்தை விட நான்கு மடங்கு அதிகம். (பைசா கோபுரத்தின் சாய்மானம் 3.99 டிகிரி). இந்த கட்டடத்தின் 12 மாடிகள் செங்குத்தாக உள்ளன. 

அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள், படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த அளவில் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் இந்த கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்டபோது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. 

இதைக் கட்டுவதற்கு, 10 ஆயிரம் தொன் இரும்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நட்சத்திர ஓட்டல் மற்றும் அலுவலகங்கள் இதில் இயங்கவுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள், இந்த கட்டடத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, June 17, 2010

தசை நார்களும் நீரிழிவு நோயும்!!

சர்க்கர நோய் உடலில் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புக்களில் தசை நார் பாதிப்பும் ஒன்று. பொதுவாக நாம் உண்ணும் உணவு சக்தியாக உபயோகப்படுத்தப்பட வேண்டும். அன்றாட நடவடிக்கைகளுக்கும், சிறு சிறு வேலைகளைச் செய்வதற்கும் நம் உண்ணும் உணவு செரித்து அதிலிருந்து கிடைக்கும் சக்தியே உபயோகப்படுத்தப்படுகிறது.
நம்மால் உபயோகப்படுத்தப்பட்டது போக மீதமான சக்தி அல்லது சர்க்கரை இரத்த்த்தில் இருக்கும்.
தசைகளில் வலியானது இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையானது தசை நார்களில் படிவதால் ஏற்படுகிறது.
நம் உணவின் சக்தியில் 60% தசை நார்களின் செயல்பாட்டுக்கு, அதாவது உடல் உழைப்பு, உடற்பயிற்சி ஆகியவற்றால் செலவழிக்கப்படவேண்டும். இதில் குறைவு ஏற்பட்டால்
தசைப்பிடிப்பு
கால், கை வலி
கெண்டைக் கால் வலி
குடைச்சல்
உடல் வலி

ஆகியவை ஏற்படும்.
இவ்வாறு ஏற்படும்போது சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் வலி அதிகம் ஏற்பட்டு கை கால்களைப் பிடித்து மசாஜ் செய்து விட்டால் வலி குறைவது போல் தோன்றும். இவற்றைச் சரிசெய்ய:
இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
தினமும் நடைப்பயிற்சி அவசியம்.
கை, கால்களை நீட்டி மடக்கிச் செய்யும் உடற்பயிற்சிகளையும் சேர்த்துச் செய்ய வேண்டும்.
நடைப் பயிற்சியைத் துவங்குவது எப்படி? நடைப் பயிற்சியை எப்படித் துவங்குவது என்பது மிக முக்கியம். நாம் ஏற்கெனவே தினசரி நடைப் பயிற்சி செய்யும் நண்பரிடம் ”நாளை முதல் நானும் உங்களுடன் நடக்க வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அதன்படி காலை 5 அல்லது 5.30 க்கு எழுந்து, அவருடன் நடப்போம். இரண்டு நாள் அல்லது சில நாட்களில் இந்த முடிவுக்கு வந்து விடும். ஏனென்றால் அவர் ஏற்கெனவே நடை பழகியவர்.
அவர் வேகத்துக்கு நாம் ஈடு கொடுக்க முடியாது
அவர் செல்லும் தூரம் நாம் நடக்க முடியாது.
அப்படியென்றால் எப்படி நடைப்பயிற்சியை ஆரம்பிப்பது?
நடைப்பயிற்சியை மெதுவாகவும் எளிமையாகவும் ஆரம்பிக்க வேண்டும்,
முதலில் 10 ந்மிடம் நடந்து வீடு திரும்புங்கள்.
1 வாரம் இது போல் செய்யவும்.
அடுத்த வாரம் 5 நிமிடம் கூட்டிக் கொள்ளவும்.
நடப்பது த்ற்போது எளிமை ஆகிவிடுகிறது அல்லவா? ஒவ்வொரு வாரமும் 5 நிமிடம் கூடுதலாக நடந்து பழகினால் உங்கள் இலக்கை எந்தக் கஷ்டமும் இன்றி விரைவில் அடையலாம்.
நடப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டுவருவது சிரமமாக இருக்கும், ஆனாலும் அதைக் கடைப்பிடிப்பது அவசியம்.
பொதுவாக உடல் நலனுக்காக நடப்பவர்கள் 20-30 நிமிடங்கள் குறைந்த பட்சம் வாரத்தில் 4-5 நாட்கள் என்ற இலக்கை எட்டுமாறு வைத்துக் கொள்ளலாம்.
பேச்சு வேகத்தில் நடப்பது என்றால் என்ன? நாம் நடக்கும் போது மூச்சின் வேகம் அதிகரிக்கும். நடப்பது சிரமமாகத்தோன்றும். அப்படிப்பட்ட நேரத்தில் பேசிக்கொண்டே நடப்பது எளிதாக இருக்காது. நாளடைவில் பேசிக் கொண்டே நடப்பது எளிதாகி விடும். இது உங்கள் உடல் தகுதி அதிகரித்திருப்பதைக் குறிக்கும்.
பிட்னெஸ் நடைப் பயிற்சி: ஏற்கெனவே நடைப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்போருக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் புதிதாகப் நடைப் பயிற்சியில் ஈடுபடும் முன் மருத்துவரின் ஆலோசனை அவசியம். நல்ல நடைபயிற்சிக்கான காலணி ஷூ அவசியம்.
அதே போல் நடப்பதற்கு முன் உங்கள் சர்க்கரை அளவு 100 மி.கி க்குக் கீழ் இருந்தால் ஏதாவது சிறு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். நடப்பதற்கு முன் இரத்தத்தில் சர்க்கரை 100 க்கு மேல் இருப்பது அவசியம்.
பிட்னெஸ் வாக்கிங்க் என்றால் என்ன? கை,கால் மூட்டுக்களுக்கு அதிக பழு ஏற்படுத்தாமல் செய்யும் நடைப் பயிற்சியே இது. சாதாரண நடையையே கொஞ்சம் கால் எட்டிப் போட்டு நடக்க வேண்டும்.
இன்னொரு வகையில் கீழ்க்கண்டவாறு மாறி மாறி நடப்பதும் மிகப் பலன் தரும்:
மிதமான நடை- 5 நிமிடம்,
கொஞ்சம் வேகம் கூட்டிய நடை-2 நிமிடம்
அதிவேக நடை –1 நிமிடம்
20 நிமிடங்கள் இது போல் நடப்பது உங்கள் உடல் தகுதியைக் கூட்டும்.
மெதுவாக உங்கள் நடை வேகம், நடக்கும் நேரம், நடக்கும் தூரம் ஆகியவற்றைக் காலப்போக்கில் உங்கள் உடல் தகுதிக்கேற்றவாறு கூட்டிக் கொள்ளலாம்.
நடைப் பயிற்சி என்பது நீரிழிவு நோயாளிகள் மட்டுமில்லாமல் அனைவருக்கும் அவசியமான ஒன்று. தொடர்ந்து நடந்து நலம் பெறுவோம்!
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிம புதையல்!

உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான்.
அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் ‘ஸ்மெல் பண்ணவர்கள்’ அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் பேரளவில் கண்டுபிடித்துள்ளனர்.


இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் போரிலும் மதத் தீவிரவாதத்திலும் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும்.’இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்’ என்கிறார் ஒரு அதிகாரி.
லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில்,
”ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும் என்றார்.இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?:அதைத் தெரிந்து கொள்ளும் முன், ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் எவ்வளவு என்று பார்க்கலாம்.
இந்த நாட்டின் பொருளாதாரம் பெருமளவு சார்ந்திருப்பது… விவசாயத்தையோ, தொழிற்சாலைகளையோ அல்ல. ஓப்பியம் மற்றும் அபின் தயாரிப்பை!சர்வதேச அளஷவில் கொடிய போதைப் பொருள்கள் அனைத்துக்கும் தாயகமாகத் திகழ்கிறது ஆப்கானிஸ்தான். மேற்கு ஆசியாவின் போதை மருந்து முக்கோணத்தின் மையப் பகுதி ஆப்கானிஸ்தான். இன்று நேற்றல்ல…பண்டைய காலத்திலிருந்தே ஓப்பியம் தயாரிப்பது ஆப்கானிஸ்தானில் குடிசைத் தொழில் மாதிரி.இதற்கடுத்த வருவாய் ஆதாரம், முன்பு ரஷ்ய உதவி. இப்போது அமெரிக்கா தரும் நிதியுதவி.இப்படி சகல வழிகளிலும் ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் அளவே 12 பில்லியன்கள்தான்! அதாவது இந்த 12 பில்லியன் டாலர்தான் ஆப்கானிஸ்தானின் ஜிடிபி (gross domestic production!).
ஒரு சர்வதேச நடுத்தர ஐ.டி. நிறுவனத்தின் லாபத்தின் அளவும் இதுதான்.ஆனால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஜிடிபியே 1.23 ட்ரில்லியன்தான்!!.இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள ‘பில்லியன் டாலர் கேள்வி’!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் ‘ட்ரில்லியன் டாலர் கேள்வி!’ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் தலைதூக்கும் நிலை.
நாட்டின் ஒரு பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது.இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப் பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில், இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியலறிஞர்கள்.இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது.ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.
ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30 மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர் அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப் பார்த்தால், ‘தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா அல்லது தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா என்பது தெரியவில்லை.கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா.’Unobtanium’ என்ற கற்பனையான கனிமத்தை எடுக்க பண்டோரா கிரகத்தையே அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து, அதன் மக்களை ஒழித்துக் கட்டும் கற்பனைக் கதையைத் தான் ‘avathar’ என்ற படமாக எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன்.
3 டி சமாச்சாரம், அன்னிய கிரகவாசிகள் என்று கதை போனதால் கேமரூன் சொல்ல வந்த விஷயம் (கதையின் கரு ) பெரிதாகப் பேசப்படவில்லை.இப்போது ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிம வளம் கிட்டத்தட்ட பண்டோரா கிரக கதை மாதிரி ஆகிவிடுமோ என்ற அச்சம் இப்போதே பரவ ஆரம்பித்துவிட்டது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, June 15, 2010

350 கோடி ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் தண்ணீர் : ஆய்வில் தகவல்

ஹலோ ரொபோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வின் படி 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது. 

அதன் வடக்கு துருவத்தில், அட்லாண்டிக் கடல் அளவு தண்ணீர் இருக்கிறது. இது பூமியில் உள்ள அளவுக்கு சமமானதாகும். 

செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா, இல்லையா என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஹலோ ரொபோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வெளியிட்ட செவ்வாய்க் கிரகத்தின் படங்களை வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

தவிர, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க செயற்கைகோள் வெளியிட்ட தகவல்கள் மூலமும் ஆராய்ச்சி செய்தனர்.

செவ்வாய்க்கிரகத்தில் 54 ஆறுகளின் டெல்டா படுகைகள் உள்ளன. இதனால் அங்கு ஆறுகள் உற்பத்தியாகி ஓடிக்கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, June 10, 2010

பூமியை சூரியன் விழுங்கி விடுமா?

இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமி இருக்காது.  அதை சூரியன் விழுங்கி விடும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்தின் சஸ்ஸக்ஸ் பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஸ்மித் தலைமையிலான நிபுணர் குழு ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
சூரியன் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டு வருகிறது. இப்படியே போனால் இன்னும் 760 கோடி ஆண்டுகளில் அது பூமியை விழுங்கி விடும். சூரியனின் வெப்பம் காரணமாக பூமியில் எதுவும் இருக்காது எல்லாம் சாம்பலாகி விடும். சூரியனின் வெப்பத்தால் கடல்கள் அனைத்தும் ஆவியாகி முற்றிலுமாக வற்றிப் போய் விடும் என்கிரார் ராபர்ட் ஸ்மித்.
இதைத் தவிர்க்க முடியாதா பூமியைக் காப்பாற்ற முடியாதா என்ற கேள்விக்கு ஸ்மித் பதிலளிக்கையில் இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது.வான்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு பெரிய விண்கல்லை பூமியின் புவி வட்டப் பாதைக்கு இழுத்து அதனுடன் பூமியை மோத விட வேண்டும். அப்படி மோதினால் நமது புவி வட்டப் பாதை மாறி வேறு பாதைக்கு நாம் வீசப்படுவோம். அப்படிச் செய்தால் சூரியனின் கோரப் பிடியிலிருந்து பூமி தப்பலாம்.
இது சாத்தியமா பேத்தலாக இருக்கிறதே என்று நினைக்கக் கூடாது. இன்னும் சில நூற்றாண்டுகளில் இப்படி ஒரு மோதலை ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பத்தை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே பூமி அழியலாம் என்று பயப்படுவதை விட தப்பி விடும் என்ற நம்பிக்கையுடன் நாம் இருக்கலாம் என்கிறார் ஸ்மித்.
அதற்குள் புதிதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள புவி போன்ற மற்றைய கிரகங்களுக்கு மனிதன் புலம் பெயர்ந்துவிடுவான். 760 கோடி ஆண்டுகள் எதற்கு? இன்றுள்ள மனிதர் எவரும் மேலும் 150 ஆண்டுகளுக்கு பின்னர் உயிருடன் இருக்கமாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, June 9, 2010

3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System

கணணியை செயற்படுத்தவென உருவாக்கப்பட்டவைதான் இயங்குதளங்கள் (Operating System). இன்னும் சொல்லப்போனால் கணணி வன்பொருட்களுக்கும்(Hardwares) பயனாளர்களுக்கும்(users) இடையிலான ஒரு இடைமுகமாக(Interface) செயற்படுபவை.
இவ்வாறான பல இயங்குதளங்கள் இன்றைய உலகில் பல உருவாக்கப்பட்டுள்ளன உருவாக்கபட்டுக்கொண்டிருக்கின்றன. அவ்வாறான பல இயங்குதளங்களாக Windows XP, Windows Vista, Windows 7 , Apple OS, Ubuntu OS, Linux, Google Chrome OS, RISC OS, Amiga OS, MAC OS, போன்ற இன்னும் பல இயங்குதளங்கள் இன்று காணப்படுகின்றன.
அவ்வாறான இயங்குதளங்கள் இருக்கின்ற போதிலும் இவற்றைவிட மிகச்சிறிய அளவில் உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஒன்றும் உள்ளது.
KOLIBRI OS எனப்படும் இந்த இயங்குதளமானது 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது Windows,Linux, Mac போன்ற பிற இயங்குதளங்களை அடிப்படையாகக்கொண்டு அமையாமல் CPU நிரலாக்கமொழி எனப்படும் முதலாம் தலைமுறை( First Generation language) மொழியான கணணி இயந்திர மொழியின்(Machine Code) துணையுடன் உருவாக்கப்பட்ட இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது மிகச்சிறிய அளவில் மென்பொருள் பொதிகளையும் கொண்டுள்ளது. Games, Tables Editor, Compiler,Text Editor, Demos, Web Browser போன்ற மென்பொருட்கள் உள்ளடங்கலாக இந்த இயங்குதளமானது உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பான மிகச்சிறிய மென்பொருளாகும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கூகிளிடமிருந்து புதிய இரண்டு சேவைகள்

கூகிள் மெப்ஸ்(google maps), கூகிள் பஸ்(google buzz), ஜிமைல்(gmail) என்பவற்றின் கலவையாகவே இந்த புதிய சேவை அமைந்துள்ளது.
நமது நண்பர்களின் ஊரையோ அல்லது அவர்களின் வீட்டுக்கு செல்லும் பாதையையோ அல்லது அவர்களின் வீட்டையோ தேடி அலைய வேண்டிய சிரமத்தை கூகிள் மெப்ஸ்(maps) நமக்கு போக்கியது. தற்போது குறித்த ஒரு அமைவிடத்தை ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளும் வழிமுறையை கூகிள் இலகுவாக்கித்தந்துள்ளது.
முன்பெல்லாம் ஒரு இடத்தை கூகிள் மெப்ஸ்(maps) மூலம் நமது நண்பர்களுக்கு காட்ட வேண்டுமானால், அந்த மெப் ன் லின்க்கினை(link) எடுத்து மைல்(mail) பண்ணுவோம்.அந்த லின்கினை கிளிக்(click) செய்து அந்த இடத்தை பார்க்கக் கூடியதாக இருந்தது ஆனால் தற்போது எமது inbox ல் வைத்தே பார்க்க கூடியதாக இருக்கும். இதனை செயற்படுத்த gmail setting ற்கு சென்று Labs என்பதை க்ளிக் செய்து Google Maps previews in mail என்பதை enable செய்து save பண்ணிக்கொள்ளவும்.
அடுத்தது google buzz ல் மெப்ஸ் இனை சேர்த்துக்கொள்ளல். நீங்கள் பகிரப்போகும் மெப்ஸ் ன் லின்கினை எடுத்து paste செய்து கொண்டால் போதும். google maps இனி google buzz இலும் தெரியும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, June 5, 2010

2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?

2002 என்.டி.7 (2002 N.T.7) என்ற விண்கல் ஒன்று விநாடிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது 2019வது ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி பூமியைத் தாக்கும் என்று விஞ்ஞானிகள் நாள் குறித்தனர். 

இந்த விண்கல்லின் அகலம் 3 கிலோமீட்டர். இது பூமியின் மீது மோதினால் 77 லட்சம் அணுகுண்டுகள் வெடித்தது போன்ற பேரழிவு ஏற்படும், பூமியில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்துவிடும், கடல்பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வற்றிவிடும், தொடர்ந்து 16 மணிநேரம் வானம் இருட்டாக இருக்கும், 12 கோடி பேர் இறந்து போவார்கள், ஓசோன் படலத்தில் பெரிய ஓட்டை விழுந்து பகலில் அதிக வெப்பமும், இரவில் அதிக குளிரும் இருக்கும்’ என்று ஆல்ஸ்டர் அப்ஸர்வேஷன் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஆனால் பின்னர் வெளியான ஆராய்ச்சி முடிவுகள் இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் என்றும் அப்படியே பூமியின் பாதையில் வந்தாலும் அதைத் தாக்கி அழிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளன. விண்கற்கள் பூமியின் பாதையில் வருவதும், பின்பு அவை விலகிச் செல்வதும் விண்வெளி வரலாற்றில் அவ்வவப்போது நடைபெறும் நிகழ்வுகளே. எனவே பயம் கொள்ளத் தேவையில்லை. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF