Saturday, July 31, 2010
பாரிய விண்கல்லினால் பூமிக்கு பேராபத்து!
பிரமாண்டமான விண்கல்லொன்று 2182ஆம் ஆண்டு பூமியுடன் மோதவுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். 1999 RQ36 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இவ்விண்கல் பூமியுடன் மோதுவதற்கான சந்தர்ப்பம் 1000இல் ஒன்று என்ற நிகழ்தகவில் காணப்படுவதாகவும் அவ்விஞ்ஞானிகள் மேலும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
1999 RQ36 விண்கல்லானது 2182ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் திகதி பூமியுடன் மோதுவதற்காக சாத்தியக் கூறுகள் அதிகமாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 1800 அடி நீளமான இந்த விண்கல் பூமியுடன் மோதுண்டால் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும். மேக்ஸிக்கோவின் Chicxulub கிடங்கினை உருவாக்கிய விண்கல் மோதலானது பூமியில் பாரிய சுனாமி போன்ற அனர்தத்தினை ஏற்படுத்தியிருக்கும். அந்த விண்கல் மோதல்தான் டைனோஸர் போன்ற விலங்கினங்களின் அழிவுக்கும் காரணமாக அமைந்திருந்தது. அதைவிட பாரிய அழிவினை 1999 RQ36 விண்கல் ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விண்கற்கல் சூரிய சக்தியினை உள்வாங்கி மீண்டும் அந்த சக்தியை கதிர்ப்பு செய்வதால் விண்கற்களில் பாதைகள் மாறுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன எனவும் விஞ்ஞானிகள் ஆறுதல் கூறுகின்றனர்.
எது எப்படியிருப்பினும் இந்த பாரிய விண்கல்லானது தற்பொழுது பூமியின் பின்னால் இருப்பதால் 2011ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் அதனை விஞ்ஞானிகளால் அவதானிக்க முடியுமாம்.
1999 RQ36 விண்கல்லின் பாதையினை மாற்றவேண்டுமானால் 100 வருடங்களுக்கு முன்பாகவே அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். ஆகையினால் அணுகுண்டுகளை காவிச்செல்லும் விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF