Saturday, July 17, 2010

புன்னகை சிந்தும் மோனாலிசா ஓவிய ரகசியத்தை கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானிகள்

எப்போதும் மாறாத புன்னகை சிந்தும் உலகப்புகழ் மிக்க மோனாலிசா ஓவியத்தை பிரான்ஸ் ஓவியர் லியோனார் டோ டா வின்சி என்பவர் வரைந்தார். புன்னகை பூக்கும் எழில்மிகு ஓவியத்தின் ரகசியம் குறித்து பலர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஓவியர் லியோனார்டோ டா வின்சியின் ஓவியங்கள் பாரிஸ் நகரின் லூவர்அருங்காட்சியகத்தில் உள்ளது. அங்குள்ள மோனாலிசா உள்ளிட்ட 7 ஓவியங்களை விஞ்ஞானிகள் பிலிப்வால்டர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தனர்.
மோனாலிசா உள்ளிட்ட ஓவியங்கள் மீது எக்ஸ்ரே கதிர்களை பாய்ச்சி பரிசோதனை செய்தனர். அதில் மோனாலிசா ஓவியத்தை லியோனார்டோ டாவின்சி 30 அடுக்கு பெயிண்டிங் (வண்ணம்) செய்து இருப்பது தெரிய வந்தது.
மேலும் ஒவ்வொரு வண்ண கலவை அடுக்கு களும் 40 மைக்ரோ மீட்டர் அதாவது மனிதனின் மயிர் தடிமன் அளவுக்கு நுண்ணியமாக வரையப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
மேலும், மோனாலிசா ஓவியத்தில் மேங்கனிஷ் ஆக்சைடு என்ற ரசாயண கலவையின் மூலம் ஓவியர் டா வின்சி வரைந்துள்ளார். ஓவியம் பளபளப்பாக இருப்பதற்கு அதன் மீது அவர் காப்பர் உலோகத்தை பயன் படுத்தியுள்ளார்.
இந்த தகவலை விஞ்ஞானி பிலிப்வால்டர் தெரிவித்துள்ளார். ஓவியர் டாவின்சி பயன் படுத்திய தொழில் நுட்பத்துக்கு ”ஸ்பு மோடோ” என்று பெயர் என அவர் கூறினார்.
மோனாலிசா ஓவியத்தை டாவின்சி கடந்த 1503 -ம் ஆண்டு வரைய தொடங்கினார். புளோ ரென்டைனை சேர்ந்த வியாபாரி பிரான்சிஸ்கோ டெல்ஜியோகாண்டோ வின் மனைவி லிசா கெராந்தினி இந்த ஓவியத்துக்கு மாடலாக இருந்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF