பொருள் என்பது என்ன?
‘அணுத்துகள்களின் பரஸ்பர பிணைப்பு நிலையான அணுமூலக்கூர்களின் கோர்வையே பொருள்’ என்கிறது அறிவியல். அணுத் துகள்களே அணுக்களாகவும் அணுக்களே மூலக்கூர்களாகவும், மூலக்கூர்களே பொருட்களாகவும், பொருட்களே பிரபஞ்சத்தின் அனைத்துமாகவும் பரந்து விரிந்து வியாபித்துள்ளது என்கிறது அறிவியல்.
நுண்ணோக்கி வழி பொருளை கூர்மைப்படுத்தி பிரித்து பிரித்து செல்லும் போது மூலக்கூறு நிலையில் இருந்தே பொருளை ஒளியாக தான் காண முடியும். அணுக்களை எல்லாம் அணு நிலையில் ஒளியாக தான் அறிய முடியம். அணுத்துகள்கள் எனப்படும் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போட்டான் என்பவைகள் எல்லாம் ஒளிநிலையில் தான் அறியப்பட்டுள்ளன.
ஒளி தான் இன்றுவரை அறிவியல் நிர்ணியத்துவைத்துள்ள இறுதிப்பொருள் அல்லது மூலபொருள்.
ஒளி - இது ஆற்றலில் ஒருநிலை, அல்லது ஒருவகைஆற்றல் என்கிறது அறிவியல்.
பொருள் என்றால் என்ன? அதில் என்ன இருக்கிறது? என பொருளை நுணுங்கி, நுணுங்கி திரும்பத்திரும்ப ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு எஞ்சியது ‘‘ஒளியின் நிச்சயமற்ற தன்மை (துகள்-அலை)’ மட்டுமே. அணு, அணுக்கரு, அணுத்துகள்கள் இதெல்லாம் E=mc^ சமன்பாடுபடி தூயஆற்றலாகி விடும் என்கிறார் பேரரிஞர் ஐன்ஸ்டீன். அப்போது பொருள் என எதுவுமே இல்லை. எல்லாமே ஆற்றல்கள் என்ற முடிவுக்குத்தான் வருகிறார்கள் விஞ்ஞானிகள்.
இங்கு மேற்சொன்ன அறிவியல் விளக்கங்களுள் எல்லாம் நுழைய வேண்டாம்
பொருள் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு எளிமையான விளக்கத்தை எடுப்போம்.
பொருள் என்றால் துகள்நிலை. அதாவது மையமும் எல்லையும் உள்ளநிலை. அது அணுதுகளானாலும் சரி, பூமியானாலும் சரி, அளவு தான் சிறிது பெரிது என இருக்குமே தவிர எல்லாம் பொருள் தான். எல்லை(உருவம்) உள்ள எல்லாம் பொருள் தான்.
வெளி என்றால் பொருளுக்கு நேர் எதிரானது. அதற்கு எல்லையும் இல்லை மையமும் இல்லை.
உதாரணமாக ஒரு கல்லை எடுக்கொள்ளலாம். அதற்கு மையமும் எல்லையும் இருக்கிறது. ஆனல் கல்லை சுற்றிய வெளிக்கு எல்லையும் இல்லை மையமும் இல்லை.
அடுத்து இயக்கம் குறித்து பார்க்கலாம்
இயக்கம் என்பது பொருளும் வெளியும் பரஸ்பரம் நிலைமாற்றம் கொள்வது. இங்கு ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஓடுதல், நடத்தல். சுற்றுதல், பறத்தல் இதெல்லாம் கூட்டு இயக்கங்கள். இந்த இயக்கங்களுக்கு எல்லாம் மூலமாக அல்லது அடிப்படையாக இருப்பது நிலைமாற்ற இயக்கம் தான்.
பொருள் வெளியாகும், வெளிபொருளாகும் இதுதான் அடிப்படைஇயக்கம். ஈர்ப்பு விலக்கு இதெல்லாம் இரண்டாம் படி இயக்கங்கள் தான்.
உதாரணத்தில் சொல்லவேண்டுமானால்
கம்யூட்டர் மொழி, சிப்புகள், டிரான்சிஸ்டர், மின்சார இயக்கம், திரைபடம், தொடர்விளக்கு இப்படி எல்லா இயக்கங்களையுமே சொல்லலாம். இந்த இயக்கங்களில் எல்லாம் அடிப்படை தோன்றி மறைதல் மட்டும் தான். அதாவது ஆன், ஆப். இது தான் அடிப்படை இயக்கம். அதில் ஆன் பொருள். ஆப் வெளி இந்த இரண்டும் மாறிமாறி வருவது தான் அடிப்படை இயக்கம்.
நாம் இயல்பு வாழ்க்கையில் இயக்கத்தை தொகுப்பு இயக்கமாகவும், அதன்மீது செலுத்தப்படும் அறிவை தொகுப்பு அறிவாகவும் கொள்வதால் இயக்கங்கள் பலவிதமாக தெரிகிறது. (இதுகுறித்து விரிவாக அறிவு பகுதியில் பார்க்கலாம்)
‘‘பொருள்-வெளி’’ நிலைமாற்றமே இயக்கம் இது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
அடுத்து ஆற்றல் குறித்து பார்ப்போம்
இயக்கம் இயங்க காரணமாக இருப்பது, அல்லது இயக்கத்தை இயக்குவதை ஆற்றல் என்கிறோம். உதாரணமாக:&- அணு ஒரு பொருள். அணுவில் எலக்ட்ரான் சுழல்வது இயக்கம், எலக்ட்ரானை சுழற்றுவது ஆற்றல். நாம் ஒரு பொருள். நாம் ஓடுவது, சாடுவது, பேசுவது, உயிர்வாழ்வது இதெல்லம் இயக்கம். நாம் ஓட, ஆட, பேச, காரணமாக இருப்பது ஆற்றல்.
இயக்கம் இயங்க ஒரு இயக்குஇயக்கம் தேவை. அந்த இயக்குஇயக்கமே ஆற்றல்.
அதாவது ஒரு இயக்கத்திற்கு இன்னொரு இயக்கம் ஆற்றலாகிறது.
பிரபஞ்சத்துள் பலவகை ஆற்றல்கள் உள்ளது என்கிறது அறிவியல். ஒளிஆற்றல், வெப்பாற்றல், நிறைஆற்றல், காந்தஆற்றல், வேதிஆற்றல், உயிர்ஆற்றல், உணர்வாற்றல், நினைவாற்றல் என்பன பலஆற்றல் வகைகள். இது அல்லாமல் இன்னும் பல ஆற்றல் வகைகள் இருக்ககூடும் என்பதையும் அறிவியல் மறுப்பது இல்லை.
இப்படி பல்வேறு வகை ஆற்றல்களை அறிவியல் வியம்பினாலும், ஒளியாற்றல் தான் எல்லாவற்றிற்கும் மூல ஆற்றலாக கூறப்படுகிறது. ஒளியே மற்ற பல ஆற்றல் களாகவும் மாற்றப்படுவதாக அறிவியல் விளக்குகிறது.
ஒளி என்பது என்ன? அதிவேக இயக்கம் தான் ஒளி.
எந்த ஒரு பொருளும் ஒளியின் வேகத்தில் இயங்குமானால் அந்த பொருள் ஒளியாகிவிடும் என்று தானே ஐன்ஸ்டீன் அவர்களின் E=mc^ சமன்பாடு சொல்கிறது.
தெண்டுல்கர் மட்டையில் பட்ட பந்து ஒளியின் வேகத்தில் மைதான எல்லையை கடக்கு மானால் பார்வையாளர்கள் கண்ணில் படுவது எல்லாம் மட்டையோ பந்தோ அல்ல மாறாக மின்னல்(ஒளி) மட்டுமே.
மனிதஅறிவு இன்று வரை அறிந்திருக்கும் உச்சவேகம் ஒளியின் வேகம் தான். உச்சவேகத்தில் இயங்கும் ஒரு பொருளை மனிதஅறிவு ஒளியாக தான் அறிகிறது. உங்கள் வீட்டு மின்விசிறியை வேகமாக சுழலவிட்டுப் பாருங்கள். கண்ணுக்கு தெரிவது ஒளி மட்டுமே.
ஒளி என்பது அலை மற்றும் துகள் நிலைகளின் நிச்சயமற்ற வெளிப்பாடு. அதாவது துகளாகவும் இருக்க வேண்டும் அலையாகவும் இருக்க வேண்டும். இந்த இரண்டு நிலைகளும் ஒத்த கணத்தில் இருக்கவேண்டும். அதுதான் ஒளி. அப்படியானல் அங்கு கணிக்கமுடியாத அதிவேகம் இருக்க வேண்டும். அதாவது தொடர் இயக்கம் இருக்க வேண்டும். இந்த தொடர் இயக்கத்தை தான் ஆற்றல் என்கிறோம்.
சுருக்கமாக தொகுத்து சொல்கிறேன்.
1. மையமும் எல்லையும் உள்ள நிலையை பொருள் என்கிறோம்
2. மையமும் எல்லையும் இல்லாத நிலையை வெளி என்கிறோம்.
3. பொருளும் வெளியும் நிலைமாற்றம் கொள்வதை இயக்கம் என்கிறோம்
4. இயக்கம் இயங்க காரணமாக இருக்கும் இயக்கத்தை ஆற்றல் என்கிறோம்
5. ஆற்றலை அதிவேக இயக்கமாக அறிகிறோம்.
இபபோது நம்முன் வந்து நிற்கும் அடுத்தடுத்த கேள்விகள்
1. இந்த பிரபஞ்சத்தில் நிலவும் ஒவ்வொரு இயக்கத்திற்கும் இன்னொரு இயக்கம் ஆற்றலாக இருந்துவருகிறது. அப்படி பார்க்கும் போது பொருள் வெளியாகவும், வெளி பொருளாகவும் மாறும் அடிப்படை இயக்கத்திற்கு எது ஆற்றல்? அது எபபடி வந்தது?
2. பொருளில் ஆற்றல்கள் தான் நிறைந்திருக்கிறது என்பது சரி. அப்படியானால் வெளியில் என்ன இருக்கிறது? அது ஏன் வேறுபட்டு நிற்கிறது.?
3. நிலை என்றால் என்ன? அது எப்படி வந்தது?
இந்த கேள்விகளுக்கான விளக்கங்களை அடுத்தப்பதிப்பில பார்க்கலாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF