Thursday, July 22, 2010
மின்னல் சரக்கு ஊர்தியை தாக்கும் நேரடி காட்சிகள்
மின்னல் தாக்கியது குறித்த பல கதைகளை செய்திகள் வாயிலாக கேட்டிருப்போம். அமெரிக்க நெடுஞ்சாலை ஒன்றில் போய்க் கொண்டிருக்கும் சரக்கு ஊர்தி மீது மின்னல் தாக்கிய நிகழ்வு தற்போது தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளி யு டியுப்பில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இது குறித்த பலரின் கருத்துக்களும் அதில் இடம் பெற்றுள்ளது. பயணிகளை கொண்ட ஒரு கார் அந்த நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருப்பதும் அதற்கு எதிர் திசையில் செல்லும் வாகனம் மீது மின்னல் தாக்குவதும் இந்த காணொளியில் தெளிவாக தெரிகிறது.
இயற்கையின் கோர தாண்டாவதை கண் முன் கொண்டு வந்துள்ள இந்த காணொளி கடந்த வாரம் யு டியுப்பில் வெளியிடப்பட்டிருப்பினும் இந்த வீடியோ முன்னதாகவே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட இது தொடர்பான பல விவாதங்களும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.
மின்னல் தாக்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் சரக்கு வாகனம் தொடர்ந்து நகர்ந்து செல்வது எப்படி என பலரும் கணக்கிட ஆரம்பித்துள்ளனர் இந்த காணொளியைக் கண்ட பின்னர். இதை யார் படம் பிடித்திருக்க முடியும்? அதே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் காரில் இருக்கும் பயணியா எனபது உள்ளிட்ட பல மில்லியன் டாலர் கேள்விகளும் இதில் எழுந்துள்ளன. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF