இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பில் காற்றின் அழுத்தம் மட்டுமே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், பூமிக்கு உள்ளே அந்த இடத்தின் மேலுள்ள பாறைகளின் அழுத்தமும், காற் றின் அழுத்தமும் சேர்ந்திருக்கும்தானே! இதனால் தான் சுரங்கத்தின் உள்ளே கூட அழுத்தம் அதிக மாக உள்ளது. பூமியின் மையபகுதியை நோக்கி செல்லச் செல்ல அழுத்தமும் அதிகரிக்கிறது; வெப்பமும் அதிகரிக்கிறது. பூமியின் மையபகுதி வெப்ப குழம்பாக இருப்பது தான் இதுபோன்ற வெப்பத்துக்குக் காரணம்.
பெரும்பாலும் இரும்பு மற்றும் நிக்கலால் ஆனது தான் பூமியின் உட்பரப்பு. அதன் உட்பகுதி திட பொருளாகவும், வெளிபகுதி திரவமாகவும் இருக்கும் என்று கருதபடுகிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் மேல் ஓடு குளிர்ந்து உறைந்து போய் விட்டது. அதுதான் நாம் இப்போது பார்க்கும் பாறைகள், குன்றுகள் மற்றும் மலைகள்.

பூமியின் உள்ளகத்தைச் சுற்றி சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் பருமன் உள்ள `மாடில்’ எனும் அடுக்கு உள்ளது. இந்த அடுக்கின் பலம் குன்றிய சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்படும். அந்த விரிசல்களில் அவ்வப்போது பீறிட்டு எழும் நெருப்பு பிழம்புகள் தான் `எரிமலைகள்’.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF