Saturday, July 31, 2010

மாரடைப்பை ஏற்படுத்தும் கால்சியம் மாத்திரைகள்

உடலில் எலும்புகள் வளர்ச்சியடையவும், வலுப்பெறவும் கால்சியம் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த மாத்திரைகளால் மாரடைப்பு நோய் அதிக அளவில் ஏற்படுவது தெரிய வந்துள்ளது.
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக்கழக த்தின் பேராசிரியர் அயன்ரெய்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இவர்கள் 12 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர்.
அவர்களில் 30 சதவீதம் மாரடைப்பு மற்றும் இதய நோயாளிகள் கால்சியம் மாத்திரை சாப்பிடுபவர்கள் என தெரிய வந்தது. இதில் பெரும்பாலானவர்கள் வயதான பெண்கள்.
மாரடைப்பு தவிர வலிப்பு ஏற்பட்டு இதன் மூலம் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் இம்மாத்திரையால் ஏற்படுவதும் தெரிய வந்தது. எனவே, தேவை யில்லாமல் கால்சியம் மாத்திரைகள் சாப்பிடக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கால்சியம் மாத்திரைகள் இதய நோய்களை ஏற்படுத்தாது என முந்தைய ஆய்வுகள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF