சமுதாயத்தில் ஏற்ற இறக்கங்கள் பின்பற்றப்படும்வரை மனவியாதிகள் இருக்கும் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். உளவியலின் தந்தையாக போற்றபடும் சிக்மட் பிராய்டு, `பண்பாட்டு உணர்ச்சியால் (பாலின) உணர்வை கட்டுபடுத்துவதும் மனநோய் பாதிப்புக்கு காரணம்’ என்று கூறினார். மனிதன் ஒரு இன்பம் விரும்பி. அவனுக்கு துன்பம் பிடிக்காது. ஆனால் இன்பமும் துன்பமும் மனதால் வருகிறது என்பதை உணராதபோது அவன் சுயநிலை இழக்கிறான். உளவியல் பாதிப்பு வெளிபடத் தொடங்குகிறது. மற்றவர்களால் மனநோயாளி என ஒதுக்கபடுகிறான். உடல் திடகாத்திரமாக இருந்தும் மனம் திடமாக இல்லாவிட்டால் அவனை சமுகம் மனிதனாகக் கருதாது.
மனவியாதியும் மற்ற வியாதிகள்போல குணபடுத்தக் கூடியதே. ஆனால் சமுகம், பாதிக்கபட்டவருடன் அவரது குடும்பத்தையே ஒதுக் குவதால் யாரும் துணிந்து மனநல சிகிச்சையை முதலிலேயே நாடுவதில்லை. சிந்தனை, உணர்ச்சி, பண்பியல் இவற்றின் குறைபாடுகளே மன நோயின் அறிகுறிகளாகும். வழக்கத்துக்கு மாறாக பேசுவது, சொன்னதையே சொல்வது சிந்தனை குழப்ப அறிகுறிகளாகும். கல்வி அறிவிற்கும், கலாச்சாரத்திற்கும் பொருந்தாத முடநம்பிக்கை, அச்சம் காரணமாக எழும் தேவையற்ற பயம், நம்பிக்கை, இயல்பான உணர்வுகள் அடங்காமல் வெளி படுவது மனநோய் வெளிபாடுகளாகும்.கடவுள் தோன்றுவதாகவும், ஏதோ ஒலி கேட்பதாகவும், வாசனை வருவதாகவும், யாரோ தங்களை தொட்டுத் துன்புறுத்துவதாகவும் கூறுவதும் சில அறிகுறிகள் தாம். ஞாபகசக்தி குறைவதும், தூக்கம் குறைவதும் மன பாதிப்புகளின் வெளிபாடுகளே. அறிகுறிகளை சரியாக கவனிக்காவிட்டால் மனநோய் முதிர்கிறது. இதில் எண்ணம் தொடர்பான முதிர்ந்த மனநோய்கள் இருவகைபடும். அவை: மூளை பாதிப்பது, மூளை பாதிக்காத மனம் சார்ந்த பாதிப்பு.
இதன் முதல்கட்டமாக மனச் சிதைவு ஏற்படுகிறது. குழந்தைகளிடம் அதிக எதிர்பார்பை காட்டுவதால் குமர பருவ மனச்சிதைவு உண்டாகிறது. இளமையில் விரைப்பு சார்ந்த மனச்சிதைவு நோய் ஏற்படுகிறது. பகை, வெறுப்பு, அலட்சியம், அகம்பாவ எண்ணம் கொண்டவர்களுக்கு பின்னாளில் சந்தேகம் சார்ந்த மனச் சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மனநலக் குறைவு உடல் நோய்களையும் தோற்றுவிக்கும். ஏனெனில் மனமும், உடலும் இணைபுள்ளவை. உடலில் நோய் ஏற்பட்டால் கோபம், எரிச்சல், சோர்வு போன்ற மன பாதிப்புகள் வெளிபடும். அதுபோல மனஅதிர்ச்சி ஏற்படும்போது வியர்வை, நடுக்கம் போன்ற உடல்பாதிப்புகள் ஏற்படும்.
எனவே உளவியல் மாற்றங்களால் சில வியாதிகளும் தோன்றும். உணர்வு கொந்தளிப்பால் ஆஸ்துமா, குடற்புண் உள்ளிட்ட ஜீரண மண்டல வியாதிகள் ஏற்படும். பயம், நாணம், கோபம் போன்ற உணர்வு அடக்கத்தால் தோல் வியாதி, ரத்த அழுத்தமும், சுரப்பிகளில் பாதிப்பும் ஏற்படுகிறது. பயம், அதிர்ச்சி போன்றவற்றால் மூளை நாளங்கள் பாதிப்பு, மூளையில் ஏற்படும் பலவித நோய்களாலும் மனநோய் உருவாகும். ஜன்னி நோய் ஒரு வித பிதற்ற நிலை மனவியாதியே. மதுபழக்கம், நாளமில்லாச் சுரப்பிகளின் பாதிப்பு இதற்கு காரணமாகும். சிலருக்கு நினைவுகள் அடிக்கடி மாறுவதால் மனக்குழப்பம் ஏற்படலாம். ரத்த ஓட்டம் குறைவு, மூளையில் உருவாகும் கட்டியால் நாள்பட்ட மூளைபாதிப்பு நோய் ஏற்படலாம். இதனால் மனம் ஆற்றல் இழந்துபோகும். உணர்ச்சி வசப்படுவதால் பலவித வலிப்பு நோய்கள் ஏற்படுகின்றன. இதை மருந்துகளால் குணபடுத்தலாம்.
ஜன்னி, மனக்குழப்பம், வலிப்பு இவற்றுக்கு மதுபழக்கம் மற்றும் பழக்கவழக்கங்களே முக்கிய காரணம். ஒருவர் நலமாக இருக்க வேண்டுமென்றால் அவரது குழந்தை பருவம் சரியாக அமைந்திருக்க வேண்டும். குழந்தைகள் நோயற்ற நிலையில் சாப்பிட மறுத்தால் மனபாதிப்பாக இருக்கும். கவன ஈர்ப்புக்காக அல்லது, எதிர்ப்புக்காக, பயத்தால் உண்ண மறுத்து அடம் பிடிக்கலாம்.
மிரட்டும் கனவுகளால் தூக்கம் இழப்பது, தூக்கத்தில் சிறுர் கழிப்பது போன்றவற்றுக்கு மன பாதிப்புகளே காரணம். திக்கிபேசுவது மனநோய் இல்லை. ஆனால் அதனால் மனஇறுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மனவளர்ச்சி மற்றும் சூழ்நிலைக் குறைபாடுகள் குழந்தைகளின் கற்றல் திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பின்னாளில் வேறு மனநோய்களை தோற்றுவிக்கலாம். பொய், களவு, சண்டைக்குச் செல்லுதல், தீ வைத்தல் போன்றவற்றில் ஈடுபடும் குழந்தைகள் சமுக விரோதிகளாக வளரும் ஆபத்து உண்டு. இதற்கு காரணம் மனபாதிப்புகளே. இவர்கள் புத்திசாலிகளாகக் காணப்படுவார்கள். ஆனாலும் தாங்கள் விரும்பியதை அடைவதிலேயே குறியாக இருப்பார்கள். பாரம்பரியம், சுற்றுச்சூழல், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் அவர்கள் பாதிக்கபட காரணமாக அமைகின்றன.
குழந்தை பருவ ஏக்கங்கள், கோபங்கள், பெற்றோரின் கண்டிப்பு ஒருவரை மதுபழக்கத்திற்கு அடிமையாக்கலாம். மது மன நிலையை மாற்றுவதால் மனநோய் தோன்றும். ஒவ்வொரு மனநோயாளிக்கும் மிகவும் தேவையானது ஒரு நண்பனே என்கிறார் உளவியல் நிபுணர் கிளிபோர்டு பியர்ஸ். இக்காலத்தில் மனநோய்களுக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் இருக்கின்றன. வீரிய மருந்து மாத்திரைகள் மதம் பிடித்தவர்போல் இருக்கும் நோயாளியை கட்டுபடுத்த உதவுகிறது. மின் அதிர்ச்சி முறை மற்றொரு முக்கியமான சிகிச்சையாகும். மருத்துவர்கள் செர்லெட்டி, பினி இருவரும் 1938-ல் இம்முறையை அறி முகபடுத்தினர். அதிக பாதிப்புள்ளவர்களுக்கு மூளை அறுவைச் சிகிச்சையும் செய்யப்படுகிறது. இதுதவிர பேச்சு வழியில் மனபகுப்பு மருத்துவம், மனோவசிய சிகிச்சை, நடத்தை மாற்று மருத்துவம் போன்றவையும் உள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF