Thursday, July 22, 2010

விமானத்தை விட வேகமாக செல்லும் சூப்பர் கார் மணிக்கு 1609 கி.மீ. வேகத்தில் ஓடும்

இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்டு நோபல் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ஏற்கனவே மணிக்கு 1228 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரை உருவாக்கி இருந்தனர்.இப்போது இதே குழுவினர் இன்னும் அதிக சக்தி கொண்ட காரை உருவாக்கி வருகின்றனர். 

விமானத்தின் ஜெட் என்ஜின் மற்றும் “பால்கான்” ராக்கெட் தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி இதை உருவாக்குகின்றனர். 

இந்த கார் விமானத்தை விட வேகமாக மணிக்கு 1609 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இது 1 லட்சத்து 35 ஆயிரம் குதிரை சக்தி திறன் கொண்டது. 45 வினாடியில் 7.25 கிலோ மீட்டர் தூரம் சென்று விடும். பார்முலா-1 கார் பந்தயத்துக்கு பயன்படுத்திய காரை விட 180 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கும்.

இதன் தயாரிப்பு பணிகள் முழுமையாக முடிந்து 2012-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சோதனை ஓட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF