Saturday, July 31, 2010
பாரிய விண்கல்லினால் பூமிக்கு பேராபத்து!
பிரமாண்டமான விண்கல்லொன்று 2182ஆம் ஆண்டு பூமியுடன் மோதவுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். 1999 RQ36 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இவ்விண்கல் பூமியுடன் மோதுவதற்கான சந்தர்ப்பம் 1000இல் ஒன்று என்ற நிகழ்தகவில் காணப்படுவதாகவும் அவ்விஞ்ஞானிகள் மேலும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
1999 RQ36 விண்கல்லானது 2182ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் திகதி பூமியுடன் மோதுவதற்காக சாத்தியக் கூறுகள் அதிகமாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 1800 அடி நீளமான இந்த விண்கல் பூமியுடன் மோதுண்டால் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும். மேக்ஸிக்கோவின் Chicxulub கிடங்கினை உருவாக்கிய விண்கல் மோதலானது பூமியில் பாரிய சுனாமி போன்ற அனர்தத்தினை ஏற்படுத்தியிருக்கும். அந்த விண்கல் மோதல்தான் டைனோஸர் போன்ற விலங்கினங்களின் அழிவுக்கும் காரணமாக அமைந்திருந்தது. அதைவிட பாரிய அழிவினை 1999 RQ36 விண்கல் ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விண்கற்கல் சூரிய சக்தியினை உள்வாங்கி மீண்டும் அந்த சக்தியை கதிர்ப்பு செய்வதால் விண்கற்களில் பாதைகள் மாறுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன எனவும் விஞ்ஞானிகள் ஆறுதல் கூறுகின்றனர்.
எது எப்படியிருப்பினும் இந்த பாரிய விண்கல்லானது தற்பொழுது பூமியின் பின்னால் இருப்பதால் 2011ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் அதனை விஞ்ஞானிகளால் அவதானிக்க முடியுமாம்.
1999 RQ36 விண்கல்லின் பாதையினை மாற்றவேண்டுமானால் 100 வருடங்களுக்கு முன்பாகவே அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். ஆகையினால் அணுகுண்டுகளை காவிச்செல்லும் விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
மாரடைப்பை ஏற்படுத்தும் கால்சியம் மாத்திரைகள்
உடலில் எலும்புகள் வளர்ச்சியடையவும், வலுப்பெறவும் கால்சியம் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த மாத்திரைகளால் மாரடைப்பு நோய் அதிக அளவில் ஏற்படுவது தெரிய வந்துள்ளது.
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக்கழக த்தின் பேராசிரியர் அயன்ரெய்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இவர்கள் 12 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர்.
அவர்களில் 30 சதவீதம் மாரடைப்பு மற்றும் இதய நோயாளிகள் கால்சியம் மாத்திரை சாப்பிடுபவர்கள் என தெரிய வந்தது. இதில் பெரும்பாலானவர்கள் வயதான பெண்கள்.
மாரடைப்பு தவிர வலிப்பு ஏற்பட்டு இதன் மூலம் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் இம்மாத்திரையால் ஏற்படுவதும் தெரிய வந்தது. எனவே, தேவை யில்லாமல் கால்சியம் மாத்திரைகள் சாப்பிடக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கால்சியம் மாத்திரைகள் இதய நோய்களை ஏற்படுத்தாது என முந்தைய ஆய்வுகள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Friday, July 30, 2010
கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி
உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா?
ஆம்,கையடக்க… இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், “ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, “ஸ்கின்புட்’ என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும். நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு, லேப்-டாப், கம்ப் யூட்டர், மொபைல், ஐபாட் ஆகியவற்றை இயக்க முடியும்.
மைக்ரோசிப் வடிவிலான புரஜக்டர்கள் தான் கீபோர்டு வடிவில் இருக்கும். அதில் உள்ள பட்டன் களை நீங்கள் தட்டினால் அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்து அதற்கான விளைவுகள் திரையில் உருவாகும்.முன்னங்கைகளில் எந்த இடத்தில் எந்த சிப் இருக்கிறதோ அந்த, “சிப்’பில் உள்ள பட்டனை மிகவும் செல்லமாக நீங்கள் தட்டினால் போதும்; என்ன எழுத்து வரவேண்டுமோ அதுவரும் வகையில், கைகளில் பல்வேறு கோணங் களில் பொருத்தப் பட்டுள்ள சென் சார்களிலிருந்து செய்தி கடத்தப்படும் வகையில் இந்தப் புதிய கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருவி, 20 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது சந்தைக்கு வரக்கூடும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஐஸ்கட்டி உருகுவதால் 12 ஆண்டுகளில் பூமி நீரில் மூழ்கும் அபாயம்; சுற்றுச் சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை
பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் தட்ப வெப்ப நிலையில் மாறுதல் ஏற்பட்டு வருகிறது. பூமியில் ஏற்படும் மாசுகாரணமாக விண்வெளியில் கார்பனின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் வடக்கு மற்றும் தென் துருவங்களில் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வழக்கத்தை விட அதிக அளவில் உருகுகின்றன. இதனால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 12 ஆண்டுகளில் பூமியின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இந்த தகவலை தாய்லாந்து சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே கார்பன் உற்பத்தியை குறைத்து பூமியை காப்பாற்றும் பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, July 27, 2010
மிக பெரிய பனிமலை கடலில் விழுந்தது
சுமார் 3,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாபெரும் பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்தது. அதாவது ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் என்ற நாட்டின் பரப்பளவுக்கு சமமான பனிமலைச் சிகரம் மெர்ட்ஸ் என்ற மிகப்பெரிய பனிமலையிலிருந்து பெயர்ந்து விழுந்துள்ளது.
இதனால் கடல் நீர் சுழற்சியில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பி9பி (B9B) என்று அழைக்கப்படும் மற்றொரு பனிமலை மெர்ட்ஸ் பனிமலை மீது மோதியதில் பல பில்லியன் டன் நிறையுள்ள, நினைத்துப் பார்க்க முடியாத பரப்பளவிலான பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்துள்ளது.
கிழக்கு அண்டார்டிக்காவிலிருந்து தெற்குக் கடலில் இந்த பனிமலை பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த இரண்டு பனிமலைகளும் தற்போது அடுத்தடுத்து அண்டார்டிகாவில் மிதந்து வருகிறது என்று ஆஸ்ட்ரேலிய அண்டார்டிகா ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மிகப்பெரிய பனிமலையில் ஒரு ஆண்டிற்கு உலகில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு நாடுகளுக்கு தண்ணீர் அளிக்கக் கூடியது என்று அவர் மேலும் கூறினார்.
இதனால் ஐரோப்பாவில் பனிப்பொழிவு நாட்களும், பனிப்பொழிவு அளவும் அதிகரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வு இயற்கையான நிகழ்வுதான் என்றாலும் இதன் நீண்ட கால தாக்கம் பற்றி நாம் கவலையடையாமல் இருக்க முடியாது என்று கிரின்பீஸ் ஆய்வுச் சோதனை மைய விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
இந்த பனிமலை உடைந்து விழுந்த அண்டார்டிகா கடல் பகுதியில் கடல்பனி அவ்வளவாக இல்லாத ஒரு இடமாகும். இதனால் இங்கு வாழும் உயிரினங்கள் உணவிற்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பனிமலை உடைந்து விழுந்த இடம் குளிர்ந்த, அடர்த்தியான பிராண வாயு நிரம்பிய நீர் உருவாகும் இடமாகும். இது கடல்தரைக்குச் சென்று ஆழ்கடலை பிராண வாயு நிரம்பிய ஒன்றாக மாற்றும்.இப்போது இந்தப் பனிமலை உடைந்து அண்டார்டிகாவில் விழுந்தது, மேற்கூறிய பிராண வாயு உருவாக்க நடவடிக்கையில் தாக்கம் ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் என்னவென்று இப்பொது கூற முடியாது என்று அந்த விஞ்ஞானி தெரிவித்தார்
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
நாயாக மாறிய பெண்
உக்கிரேன் நாட்டை சேர்ந்த "ஒசான மலய" என்ற பெண் எவ்வித மனித நடத்தைகளையும் காட்டாமல் முற்றுமுழுதாக நாய்களின் நடத்தையை காட்டி பார்ப்போரை வியப்பிலும் அதே வேளை சோகத்திலும் ஆழ்த்தி வருகின்றாள்.
"ஒசான மலய" என்ற பெண் முற்றுமுழுதாக நாய்களின் நடத்தையை காட்டுவதற்கான சோகக்கதை இதுதான்:-
1983 ம் ஆண்டு கார்த்திகை மாதம் பிறந்த இப் பெண், குழந்தை பருவத்தில் இயல்பான மனித சுபாவங்களேயே கொண்டிருந்தாள்.ஆனால் அக்குழந்தையின் விதி பெற்றோர்களால் மாறியது. இந்தப் பெண் குழந்தை பருவத்திலேயே குடிகார பெற்றோரால் கைவிடப்பட்டாள்.இதனால் தான் அவ் விபரீதம் நடந்தது.
பெற்றோரால் கைவிடப்பட்ட அந்தக் குழந்தை பின் நாய் வளர்க்கும் இடம் ஒன்றில் நாய்களோடு நாய்களாக கூட்டிலேயே இருந்து 6 வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து இருக்கின்றாள்.இதனால் மனித நடாத்தைகளை மறந்து முற்றுமுழுதாக நாயின் நடாத்தைகளுக்கு மாறினாள்.
நாய்களைப்போல் குறைப்பது ,பாய்வது,நடப்பது,உணவுண்பது மற்றும் நீர் பருகுவது என அனைத்து நடவடிக்கைகளும் நாய்களைப் போலவே செய்யத் தொடங்கினாள். ஆறு வருடங்களுக்கு பின் இப் பெண்ணை இனம்கண்டு தத்தெடுத்த சமூக ஆர்வலர்கள் விஞ்ஞானிகளின் உதவியுடன் அப்பெண்ணை மீண்டும் மனித இயல்புகளுக்கு மாற்ற முயற்சி எடுத்து வருகின்றனர்.
ஆனால் இன்றுவரை அவ் முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை. "தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் "என்ற பழமொழிக்கு அமைய இப்போது 27 வயதாகும் இப் பெண்ணின் நடத்தைகள் சற்றும் மாறாமல் இன்றுவரை நாய்களின் நடத்தைகளுடனேயே வாழ்ந்து வருகின்றாள் . பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு : நாசா தகவல்!!
"பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள "தெர்மோஸ்பியர்' அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது'என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 600 கி.மீ,. உயரம் கொண்ட பகுதி தெர்மோஸ்பியர் அடுக்கு என்றழைக்கப்படுகிறது.வளிமண்டலம் முடிந்து விண்வெளி ஆரம்பிக்கும் பகுதியில் தெர்மோஸ்பியர் அடுக்கு அமைந்துள்ளது.சூரியனிலிருந்து வரும் சுற்றுச்சூழலுக்கு தீங்கான கதிர்களை வடிகட்டி அனுப்புவதில் தெர்மோஸ்பியர் அடுக்கு பெரும்பங்கு வகிக்கிறது.சமீப காலமாக வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பு மற்றும் புறஊதாக்கதிர்களின் பாதிப்பால் தெர்மோஸ்பியர் அடுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.இதனால் பூமியின் தட்ப வெப்ப நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடல்சார் ஆய்வுக்கழக விஞ்ஞானி ஜான் எம்மர்ட் வெளியிட்ட ஆய்வறிக்கை:பூமியின் வளிமண்டலத்தில் கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திடீரென கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எங்களது ஆய்வில் வளி மண்டல அழுத்தம் திடீரென முப்பது சதவீத அளவிற்கு குறைந்துள்ளது.தெர்மோஸ்பியர் அடுக்கு சூரியனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பகுதியாகும்.பூமியின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் தெர்மோஸ்பியர் அடுக்கில் பரவி விரிவடைகிறது.இதை தெர்மோஸ்பியர் அடுக்கு, பூமிக்கு வராமல் தடுக்கிறது. சூரியனிலிருந்து வரும் வெப்பத்தின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடந்த 2007 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை தெர்மோஸ்பியர் அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்து வளிமண்டலத்தை தாண்டி தெர்மோஸ்பியர் அடுக்கு வரை பரவி விட்டது.
எனவே தெர்மோஸ்பியர் அடுக்கில் கார்பன் டை ஆக்சைடு குளிரூட்டியாக செயல்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த பாதிப்பிற்கு கார்பன் டை ஆக்சைடு வாயு மட்டும் காரணம் என கூற இயலாது.பிற காரணிகளும் தெர்மோஸ்பியர் அடுக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு காரணமாக இருக்கலாம்.இவ்வாறு ஜான் எம்மர்ட் கூறினார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Saturday, July 24, 2010
பிரபஞ்சத்தின் அடிப்படை இயக்கம் என்ன?
பொருள் என்பது என்ன?
‘அணுத்துகள்களின் பரஸ்பர பிணைப்பு நிலையான அணுமூலக்கூர்களின் கோர்வையே பொருள்’ என்கிறது அறிவியல். அணுத் துகள்களே அணுக்களாகவும் அணுக்களே மூலக்கூர்களாகவும், மூலக்கூர்களே பொருட்களாகவும், பொருட்களே பிரபஞ்சத்தின் அனைத்துமாகவும் பரந்து விரிந்து வியாபித்துள்ளது என்கிறது அறிவியல்.
நுண்ணோக்கி வழி பொருளை கூர்மைப்படுத்தி பிரித்து பிரித்து செல்லும் போது மூலக்கூறு நிலையில் இருந்தே பொருளை ஒளியாக தான் காண முடியும். அணுக்களை எல்லாம் அணு நிலையில் ஒளியாக தான் அறிய முடியம். அணுத்துகள்கள் எனப்படும் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போட்டான் என்பவைகள் எல்லாம் ஒளிநிலையில் தான் அறியப்பட்டுள்ளன.
ஒளி தான் இன்றுவரை அறிவியல் நிர்ணியத்துவைத்துள்ள இறுதிப்பொருள் அல்லது மூலபொருள்.
ஒளி - இது ஆற்றலில் ஒருநிலை, அல்லது ஒருவகைஆற்றல் என்கிறது அறிவியல்.
பொருள் என்றால் என்ன? அதில் என்ன இருக்கிறது? என பொருளை நுணுங்கி, நுணுங்கி திரும்பத்திரும்ப ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு எஞ்சியது ‘‘ஒளியின் நிச்சயமற்ற தன்மை (துகள்-அலை)’ மட்டுமே. அணு, அணுக்கரு, அணுத்துகள்கள் இதெல்லாம் E=mc^ சமன்பாடுபடி தூயஆற்றலாகி விடும் என்கிறார் பேரரிஞர் ஐன்ஸ்டீன். அப்போது பொருள் என எதுவுமே இல்லை. எல்லாமே ஆற்றல்கள் என்ற முடிவுக்குத்தான் வருகிறார்கள் விஞ்ஞானிகள்.
இங்கு மேற்சொன்ன அறிவியல் விளக்கங்களுள் எல்லாம் நுழைய வேண்டாம்
பொருள் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு எளிமையான விளக்கத்தை எடுப்போம்.
பொருள் என்றால் துகள்நிலை. அதாவது மையமும் எல்லையும் உள்ளநிலை. அது அணுதுகளானாலும் சரி, பூமியானாலும் சரி, அளவு தான் சிறிது பெரிது என இருக்குமே தவிர எல்லாம் பொருள் தான். எல்லை(உருவம்) உள்ள எல்லாம் பொருள் தான்.
வெளி என்றால் பொருளுக்கு நேர் எதிரானது. அதற்கு எல்லையும் இல்லை மையமும் இல்லை.
உதாரணமாக ஒரு கல்லை எடுக்கொள்ளலாம். அதற்கு மையமும் எல்லையும் இருக்கிறது. ஆனல் கல்லை சுற்றிய வெளிக்கு எல்லையும் இல்லை மையமும் இல்லை.
அடுத்து இயக்கம் குறித்து பார்க்கலாம்
இயக்கம் என்பது பொருளும் வெளியும் பரஸ்பரம் நிலைமாற்றம் கொள்வது. இங்கு ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஓடுதல், நடத்தல். சுற்றுதல், பறத்தல் இதெல்லாம் கூட்டு இயக்கங்கள். இந்த இயக்கங்களுக்கு எல்லாம் மூலமாக அல்லது அடிப்படையாக இருப்பது நிலைமாற்ற இயக்கம் தான்.
பொருள் வெளியாகும், வெளிபொருளாகும் இதுதான் அடிப்படைஇயக்கம். ஈர்ப்பு விலக்கு இதெல்லாம் இரண்டாம் படி இயக்கங்கள் தான்.
உதாரணத்தில் சொல்லவேண்டுமானால்
கம்யூட்டர் மொழி, சிப்புகள், டிரான்சிஸ்டர், மின்சார இயக்கம், திரைபடம், தொடர்விளக்கு இப்படி எல்லா இயக்கங்களையுமே சொல்லலாம். இந்த இயக்கங்களில் எல்லாம் அடிப்படை தோன்றி மறைதல் மட்டும் தான். அதாவது ஆன், ஆப். இது தான் அடிப்படை இயக்கம். அதில் ஆன் பொருள். ஆப் வெளி இந்த இரண்டும் மாறிமாறி வருவது தான் அடிப்படை இயக்கம்.
நாம் இயல்பு வாழ்க்கையில் இயக்கத்தை தொகுப்பு இயக்கமாகவும், அதன்மீது செலுத்தப்படும் அறிவை தொகுப்பு அறிவாகவும் கொள்வதால் இயக்கங்கள் பலவிதமாக தெரிகிறது. (இதுகுறித்து விரிவாக அறிவு பகுதியில் பார்க்கலாம்)
‘‘பொருள்-வெளி’’ நிலைமாற்றமே இயக்கம் இது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
அடுத்து ஆற்றல் குறித்து பார்ப்போம்
இயக்கம் இயங்க காரணமாக இருப்பது, அல்லது இயக்கத்தை இயக்குவதை ஆற்றல் என்கிறோம். உதாரணமாக:&- அணு ஒரு பொருள். அணுவில் எலக்ட்ரான் சுழல்வது இயக்கம், எலக்ட்ரானை சுழற்றுவது ஆற்றல். நாம் ஒரு பொருள். நாம் ஓடுவது, சாடுவது, பேசுவது, உயிர்வாழ்வது இதெல்லம் இயக்கம். நாம் ஓட, ஆட, பேச, காரணமாக இருப்பது ஆற்றல்.
இயக்கம் இயங்க ஒரு இயக்குஇயக்கம் தேவை. அந்த இயக்குஇயக்கமே ஆற்றல்.
அதாவது ஒரு இயக்கத்திற்கு இன்னொரு இயக்கம் ஆற்றலாகிறது.
பிரபஞ்சத்துள் பலவகை ஆற்றல்கள் உள்ளது என்கிறது அறிவியல். ஒளிஆற்றல், வெப்பாற்றல், நிறைஆற்றல், காந்தஆற்றல், வேதிஆற்றல், உயிர்ஆற்றல், உணர்வாற்றல், நினைவாற்றல் என்பன பலஆற்றல் வகைகள். இது அல்லாமல் இன்னும் பல ஆற்றல் வகைகள் இருக்ககூடும் என்பதையும் அறிவியல் மறுப்பது இல்லை.
இப்படி பல்வேறு வகை ஆற்றல்களை அறிவியல் வியம்பினாலும், ஒளியாற்றல் தான் எல்லாவற்றிற்கும் மூல ஆற்றலாக கூறப்படுகிறது. ஒளியே மற்ற பல ஆற்றல் களாகவும் மாற்றப்படுவதாக அறிவியல் விளக்குகிறது.
ஒளி என்பது என்ன? அதிவேக இயக்கம் தான் ஒளி.
எந்த ஒரு பொருளும் ஒளியின் வேகத்தில் இயங்குமானால் அந்த பொருள் ஒளியாகிவிடும் என்று தானே ஐன்ஸ்டீன் அவர்களின் E=mc^ சமன்பாடு சொல்கிறது.
தெண்டுல்கர் மட்டையில் பட்ட பந்து ஒளியின் வேகத்தில் மைதான எல்லையை கடக்கு மானால் பார்வையாளர்கள் கண்ணில் படுவது எல்லாம் மட்டையோ பந்தோ அல்ல மாறாக மின்னல்(ஒளி) மட்டுமே.
மனிதஅறிவு இன்று வரை அறிந்திருக்கும் உச்சவேகம் ஒளியின் வேகம் தான். உச்சவேகத்தில் இயங்கும் ஒரு பொருளை மனிதஅறிவு ஒளியாக தான் அறிகிறது. உங்கள் வீட்டு மின்விசிறியை வேகமாக சுழலவிட்டுப் பாருங்கள். கண்ணுக்கு தெரிவது ஒளி மட்டுமே.
ஒளி என்பது அலை மற்றும் துகள் நிலைகளின் நிச்சயமற்ற வெளிப்பாடு. அதாவது துகளாகவும் இருக்க வேண்டும் அலையாகவும் இருக்க வேண்டும். இந்த இரண்டு நிலைகளும் ஒத்த கணத்தில் இருக்கவேண்டும். அதுதான் ஒளி. அப்படியானல் அங்கு கணிக்கமுடியாத அதிவேகம் இருக்க வேண்டும். அதாவது தொடர் இயக்கம் இருக்க வேண்டும். இந்த தொடர் இயக்கத்தை தான் ஆற்றல் என்கிறோம்.
சுருக்கமாக தொகுத்து சொல்கிறேன்.
1. மையமும் எல்லையும் உள்ள நிலையை பொருள் என்கிறோம்
2. மையமும் எல்லையும் இல்லாத நிலையை வெளி என்கிறோம்.
3. பொருளும் வெளியும் நிலைமாற்றம் கொள்வதை இயக்கம் என்கிறோம்
4. இயக்கம் இயங்க காரணமாக இருக்கும் இயக்கத்தை ஆற்றல் என்கிறோம்
5. ஆற்றலை அதிவேக இயக்கமாக அறிகிறோம்.
இபபோது நம்முன் வந்து நிற்கும் அடுத்தடுத்த கேள்விகள்
1. இந்த பிரபஞ்சத்தில் நிலவும் ஒவ்வொரு இயக்கத்திற்கும் இன்னொரு இயக்கம் ஆற்றலாக இருந்துவருகிறது. அப்படி பார்க்கும் போது பொருள் வெளியாகவும், வெளி பொருளாகவும் மாறும் அடிப்படை இயக்கத்திற்கு எது ஆற்றல்? அது எபபடி வந்தது?
2. பொருளில் ஆற்றல்கள் தான் நிறைந்திருக்கிறது என்பது சரி. அப்படியானால் வெளியில் என்ன இருக்கிறது? அது ஏன் வேறுபட்டு நிற்கிறது.?
3. நிலை என்றால் என்ன? அது எப்படி வந்தது?
இந்த கேள்விகளுக்கான விளக்கங்களை அடுத்தப்பதிப்பில பார்க்கலாம். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உடல்அமைப்பு சில தகவல்கள்
- உடலில் உள்ள மொத்த எலும்புகளில் பாதிக்குமேற்பட்டவை கை, கால் விரல்களிலேயே தான் அமைந்திருக்கின்றன.
- ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் பத்து லட்சம் ஃபில்டர்கள் உள்ளன. இவை ஒரு நிமிடத்திற்கு 13 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன. கழிவுகள், சிறுநீராக வெளியேறுகின்றன.
- தினமும் நாம் பார்ப்பதற்காக, கண்ணைச் சுற்றியுள்ள தசைகளை சுமார் ஒரு லட்சம்முறை இயக்குகிறோம். இந்த அளவுக்குக் கால் தசைகளை நாம் இயக்க வேண்டுமெனில் ஒரு நாளைக்கு 80 கிலோ மீட்டர்கள் நடந்தால் தான் முடியும்.
- நமது கண்ணின் கருவிழிக்குள் கிட்டத்தட்ட பதினேழுகோடி பார்வை செல்கள் உள்ளன. இதில் பதின்மூன்று கோடி செல்கள் கருப்பு, வெள்ளையைப் பார்க்க உதவி செய்பவை. மீதியிருக்கும் சுமார் நாலு கோடி செல்கள், மூலமாகத்தான் நாம் வண்ணங்களைப் பார்க்க முடிகிறது.
- உடலிலேயே மிகவும் சிறிய தசை காதுகளுக்குள் உள்ளது. அதன் மொத்த நீளம் ஒரு மில்லிமீட்டர்தான். அதேபோல் காதுக்குள் இருக்கும். சில பகுதிகள் விசேஷமானவை. இவைகளுக்கு ரத்தம் செல்வதில்லை. இவை நமக்கு வேண்டிய சத்துக்களை மிதந்து கொண்டிருக்கும் திரவத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றன. செவிப்பறை மிகவும் நுண்மையான அமைப்பு, ரத்தக் குழாய்கள், அங்கு வந்தால், நாடித்துடிப்பின் சத்தத்திலேயே செவிப்பறை செயலற்றுப் போய்விடும் என்பதால் ரத்தக் குழாய் இல்லை
- நாடித்துடிப்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரியாக இல்லை. ஓய்வாக இருக்கையில் ஒரு ஆணின் துடிப்பு, ஒரு நிமிடத்திற்கு எழுபத்திலிருந்து எழுபத்திரண்டு வரை இருக்கிறது. பெண்ணுடையதோ, எழுபதெட்டிலிருந்து எண்பத்திரண்டு வரை இருக்கிறது. கடுமையாக உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது நிமிடத் திற்கு 200 துடிப்புகள் வரை கூட உயரும்
வெள்ளைச் சர்க்கரையை எப்படித் தயார் செய்கிறார்க
இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பாலில் வரை சர்க்கரை ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சர்க்கரையை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளைச் சர்க்கரையை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சர்க்கரைத் தயார் செய்ய என்னென்ன ரசயாணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாருங்கள்.
1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 செண்டி கிரேட் முதல் 70 செண்டி கிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 செண்ட் கிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு வருகிறது சர்க்கர. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சர்க்கரையில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சர்க்கரையில் விஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சர்க்கரையை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசயானம் மஞ்சல் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
உங்கள் சட்டை காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சர்க்கரையை எடுத்து தேய்த்துப் பாருங்க. நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு சமாச்சாரத்தைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சர்க்கரையை சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடு படும்?
குடல் மட்டுமல்ல, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி (ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான நுழைவுவாயில்) நிச்சயம் வரும்.
சரி, இன்று முதல் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட வேண்டாம். இனி இனிப்புக்கு என்ன வழி?
வழியில்லாமல் இல்லை. ஆலைகளில் தயாரான வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை ஒழித்துக் கட்டிவிட்டு, வெல்லம், நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.
Friday, July 23, 2010
மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்கலாம் : ஆய்வில் தகவல்
மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர்.
இனி அந்த கவலை தேவை இல்லை. மூளையை ஸ்கேனிங் செய்து அதன் மூலம் எதிர்கால திட்டங்கள் மற்றும் லட்சியங்களை கணிக்க முடியும்.
இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இவர்கள் மனிதனின் மூளையில் புதிதாக “மேப்பிங்” முறையை பயன்படுத்தினர்.
அதன் மூலம் அவர்களின் மனதில் எதிர்காலத்தில் அவர்களின் லட்சியம் என்ன? எந்தவிதமான பாடப்பிரிவை எடுத்து படித்து நிபுணராக முடியும் என்று கணித்துள்ளனர். இதற்கு “மனோதத்துவ கணக்கீடு” என்று பெயரிட்டுள்ளனர்.
இது குறித்து மனநல பேராசிரியர் ரிச்சர்டு ஹயர் ஒரு ஆய்வு நடத்தினார். ஒருவருக்கு உள்ள திறமை மற்றும் தனித்தன்மை என்ன என்று மூளைக்கு தான் தெரியும். எனவே, மூளையை “ஸ்கேன்” செய்வதன் மூலம் இதை கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்காக அவர் 6 ஆயிரம் பேரின் மூளைகளை ஸ்கேன் செய்து ஆய்வு மேற் கொண்டார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Thursday, July 22, 2010
மின்னல் சரக்கு ஊர்தியை தாக்கும் நேரடி காட்சிகள்
மின்னல் தாக்கியது குறித்த பல கதைகளை செய்திகள் வாயிலாக கேட்டிருப்போம். அமெரிக்க நெடுஞ்சாலை ஒன்றில் போய்க் கொண்டிருக்கும் சரக்கு ஊர்தி மீது மின்னல் தாக்கிய நிகழ்வு தற்போது தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளி யு டியுப்பில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இது குறித்த பலரின் கருத்துக்களும் அதில் இடம் பெற்றுள்ளது. பயணிகளை கொண்ட ஒரு கார் அந்த நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருப்பதும் அதற்கு எதிர் திசையில் செல்லும் வாகனம் மீது மின்னல் தாக்குவதும் இந்த காணொளியில் தெளிவாக தெரிகிறது.
இயற்கையின் கோர தாண்டாவதை கண் முன் கொண்டு வந்துள்ள இந்த காணொளி கடந்த வாரம் யு டியுப்பில் வெளியிடப்பட்டிருப்பினும் இந்த வீடியோ முன்னதாகவே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட இது தொடர்பான பல விவாதங்களும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.
மின்னல் தாக்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் சரக்கு வாகனம் தொடர்ந்து நகர்ந்து செல்வது எப்படி என பலரும் கணக்கிட ஆரம்பித்துள்ளனர் இந்த காணொளியைக் கண்ட பின்னர். இதை யார் படம் பிடித்திருக்க முடியும்? அதே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் காரில் இருக்கும் பயணியா எனபது உள்ளிட்ட பல மில்லியன் டாலர் கேள்விகளும் இதில் எழுந்துள்ளன. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
விமானத்தை விட வேகமாக செல்லும் சூப்பர் கார் மணிக்கு 1609 கி.மீ. வேகத்தில் ஓடும்
இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்டு நோபல் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ஏற்கனவே மணிக்கு 1228 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரை உருவாக்கி இருந்தனர்.இப்போது இதே குழுவினர் இன்னும் அதிக சக்தி கொண்ட காரை உருவாக்கி வருகின்றனர்.
விமானத்தின் ஜெட் என்ஜின் மற்றும் “பால்கான்” ராக்கெட் தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி இதை உருவாக்குகின்றனர்.
இந்த கார் விமானத்தை விட வேகமாக மணிக்கு 1609 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இது 1 லட்சத்து 35 ஆயிரம் குதிரை சக்தி திறன் கொண்டது. 45 வினாடியில் 7.25 கிலோ மீட்டர் தூரம் சென்று விடும். பார்முலா-1 கார் பந்தயத்துக்கு பயன்படுத்திய காரை விட 180 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கும்.
இதன் தயாரிப்பு பணிகள் முழுமையாக முடிந்து 2012-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சோதனை ஓட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, July 21, 2010
பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் ரகசியம்
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும் சீதோஷ்ண நிலை காரணமாகவும், ஒவ்வொரு ஆண்டும் இடம் பெயர்கின்றன. இந்த இடப் பெயர்ச்சியின் போது அவை பல ஆயிரம் கி.மீ. தூரத்தை கடக்கின்றன. சில பறவைகள் தொடர்ந்து பல மணி நேரம் பறந்து இலக்கை அடைகின்றன.
“பல ஆயிரம் கி.மீ., தூரம் தொடர்ந்து பறப்பதற்கான உடல் திறன், இப்பறவைகளுக்கு எப்படி கிடைக்கிறது…’ என்பது, பறவைகள் குறித்த ஆய்வாளர்களின் நீண்ட நாள் கேள்வியாக இருந்தது.
இந்நிலையில், நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் பறவைகள் சக்தி பெற, “பெர்ரி’ பழங்களை அதிகமாக உண்ணுகின்றன என்ற புதிய தகவல் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அமெரிக்க ரசாயன கழகம் நடத்திய தேசிய கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
“மனிதர்களின் உடல் நலத்திற்கு சத்துக்கள் தரும் பழங்கள், காய்கறிகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளோம். இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகளும், அதிக சத்துக்கள் நிறைந்த உணவையே விரும்புகின்றன…’ என்று ரோட்தீவு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு தலைவர் நவீன்டிராசீரம் கூறியுள்ளார்.
பெர்ரி பழங்களை உண்ணும் 12 பறவைகளை ரோட் தீவு, டின்னி பிளாக் தீவுகளில் நவீன்டிராசீரம் மற்றும் அவருடன் பணியாற்றுபவர்கள் சேகரித்தனர். இப்பறவைகள் அட்லாண்டிக் கடல் வழியாக பறக்கும் போது இடையே உள்ள தீவுகளில் இறங்கின. அப்போது பறவைகளின் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு மற்றும் நன்கு பழுத்த நிலையில் உள்ள ஆரோவுட், வின்டர் பெர்ரி, பேபெர்ரி, சோக் பெர்ரி, எல்டர்பெர்ரி ஆகிய பழங்களின் பிக் மென்ட்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் திறன் குறித்து நவீன்டிராசீரம் கூறிய தாவது:
மற்ற பெர்ரி பழங்களின் சராசரியை விட ஆரோவுட் பழத்தில் 650 சதவீதத்திற்கும் அதிகமான பிக்மென்ட்டும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் 150 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உள்ளன. இதனால் தான் பறவைகள் ஆரோவுட் பழங்களை அதிகமாக உண்கின்றன. இலையுதிர் காலத்தில் இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள், தங்கள் எடையைப் போல மூன்று மடங்கு பெர்ரி பழங்களை உண்ணுகின்றன. ஒரு மனிதன் தினசரி 136 கிலோ சாப்பிட்டால் எந்த அளவு சக்தி கிடைக்குமோ அதைவிட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள் கறுப்பு நிறத்திலும், ஆழ்ந்த பிக்மென்ட் மற்றும் உயர்வான ஆன்டி ஆக்சிடன்ட் கொண்ட பழங்களை விரும்புவதை, முன்னதாக விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர். ஆன்டி ஆக்சிடன்ட், நோய் எதிர்ப்பு சக்தியை தருவதுடன், பறவைகள் நீண்ட தூரம் பறப்பதற்கான சக்தியையும், உடல் வெப்பம் அதிகரிக்கும் சக்தியையும் தருகின்றன. இவ்வாறு நவீன்டிராசீரம் கூறியுள்ளார்.
பழங்களை தின்று கொட்டைகளை எச்சங்களாக வெளியேற்றுவதன் மூலம் பழம் தரும் தாவரங்கள் பல இடங்களில் பரவுகின்றன. இதன் மூலம் சக்தியளிக்கும் பழங்களை தரும் பெர்ரி இன மர வகைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உலகின் பல இடங்களில் அவை பரவ, இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள் உதவுகின்றன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Monday, July 19, 2010
இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம்
மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.
‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
வால் நட்சத்திர தோற்றத்தில் புதிய கிரகம்
வால் நட்சத்திர தோற்றத்துடன் புதிய கிரகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது சூரியன் அருகே ஒரு புதிய கிரகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இது வால் நட்சத்திரம் போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது.
இதை நாசா விஞ்ஞானிகள் “ஹப்பிள் ஸ்பேஸ்” டெலஸ்கோப் மூலம் கண்டுபிடித்தனர். அதற்கு ஒசிரிஸ் என்ற புனைப்பெயர் சூட்டியுள்ளனர்.
இது பூமியில் இருந்து 153 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. “ஜுபிடர்” கிரகத்தைவிட சிறியது. முதன் முதலாக கடந்த 1999-ம் ஆண்டு இதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
ஆய்வு மேற்கொண்ட போது விண்வெளியில் வீசிய பலத்த காற்றின் போது இந்த கிரகம் சூரியனை சுற்றி வருவது தெரிய வந்தது. இது கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்த கூடியது.
இந்த கிரகத்துக்கு எச்டி 209458 பி என அதிகார பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Sunday, July 18, 2010
ஆசியாவின் மிகப் பிரபலமான இடம் தாஜ்மஹால்
உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹால், தற்போது ஆசியாவின் மிகப் பிரபலமான இடமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நகரில் 2010 ஆம் ஆண்டுக்கான ஆசிய கண்கவர் கண்காட்சி (Asian Attractions Expo - AAE) நடந்து வருகிறது.
இந்த கண்காட்சியில் சர்வதேச பொழுதுபோக்கு பூங்கா சங்கம் ( Amusement Parks and Attractions - IAAPA) சார்பில், ஆசியாவின் கண்கவர் விருது வழங்கும் விழா நடந்தது.
இதில் 6 விதமான பிரிவுகளில் ஆசியாவின் பிரபலமான இடங்களை தேர்வு செய்ய போட்டி நடத்தப்பட்டது.
இதற்காக மொத்தம் 94,099 பேர் வாக்களித்தனர்.அவர்களில் அதிமானோர் தாஜ்மஹாலை தேர்வு செய்தனர்.
இதன் மூலம் ஆசியாவின் மிகப் பிரபலமான இடமாக தாஜ்மஹால் தேர்வு செய்யப்பட்டது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
பூமியின் மைய பகுதியில் என்ன இருக்கும்?
பூமியின் மையபகுதியை நோக்கிச் செல்லும்போது அழுத்தம் அதிகரிக்குமா? குறையுமா? வெப்பமாக இருக்குமா? குளிர்ச்சியாக இருக்குமா? பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் பலர் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பில் காற்றின் அழுத்தம் மட்டுமே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், பூமிக்கு உள்ளே அந்த இடத்தின் மேலுள்ள பாறைகளின் அழுத்தமும், காற் றின் அழுத்தமும் சேர்ந்திருக்கும்தானே! இதனால் தான் சுரங்கத்தின் உள்ளே கூட அழுத்தம் அதிக மாக உள்ளது. பூமியின் மையபகுதியை நோக்கி செல்லச் செல்ல அழுத்தமும் அதிகரிக்கிறது; வெப்பமும் அதிகரிக்கிறது. பூமியின் மையபகுதி வெப்ப குழம்பாக இருப்பது தான் இதுபோன்ற வெப்பத்துக்குக் காரணம்.
பெரும்பாலும் இரும்பு மற்றும் நிக்கலால் ஆனது தான் பூமியின் உட்பரப்பு. அதன் உட்பகுதி திட பொருளாகவும், வெளிபகுதி திரவமாகவும் இருக்கும் என்று கருதபடுகிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் மேல் ஓடு குளிர்ந்து உறைந்து போய் விட்டது. அதுதான் நாம் இப்போது பார்க்கும் பாறைகள், குன்றுகள் மற்றும் மலைகள்.

பூமியின் உள்ளகத்தைச் சுற்றி சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் பருமன் உள்ள `மாடில்’ எனும் அடுக்கு உள்ளது. இந்த அடுக்கின் பலம் குன்றிய சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்படும். அந்த விரிசல்களில் அவ்வப்போது பீறிட்டு எழும் நெருப்பு பிழம்புகள் தான் `எரிமலைகள்’.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Saturday, July 17, 2010
புன்னகை சிந்தும் மோனாலிசா ஓவிய ரகசியத்தை கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானிகள்
எப்போதும் மாறாத புன்னகை சிந்தும் உலகப்புகழ் மிக்க மோனாலிசா ஓவியத்தை பிரான்ஸ் ஓவியர் லியோனார் டோ டா வின்சி என்பவர் வரைந்தார். புன்னகை பூக்கும் எழில்மிகு ஓவியத்தின் ரகசியம் குறித்து பலர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஓவியர் லியோனார்டோ டா வின்சியின் ஓவியங்கள் பாரிஸ் நகரின் லூவர்அருங்காட்சியகத்தில் உள்ளது. அங்குள்ள மோனாலிசா உள்ளிட்ட 7 ஓவியங்களை விஞ்ஞானிகள் பிலிப்வால்டர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தனர்.
மோனாலிசா உள்ளிட்ட ஓவியங்கள் மீது எக்ஸ்ரே கதிர்களை பாய்ச்சி பரிசோதனை செய்தனர். அதில் மோனாலிசா ஓவியத்தை லியோனார்டோ டாவின்சி 30 அடுக்கு பெயிண்டிங் (வண்ணம்) செய்து இருப்பது தெரிய வந்தது.
மேலும் ஒவ்வொரு வண்ண கலவை அடுக்கு களும் 40 மைக்ரோ மீட்டர் அதாவது மனிதனின் மயிர் தடிமன் அளவுக்கு நுண்ணியமாக வரையப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
மேலும், மோனாலிசா ஓவியத்தில் மேங்கனிஷ் ஆக்சைடு என்ற ரசாயண கலவையின் மூலம் ஓவியர் டா வின்சி வரைந்துள்ளார். ஓவியம் பளபளப்பாக இருப்பதற்கு அதன் மீது அவர் காப்பர் உலோகத்தை பயன் படுத்தியுள்ளார்.
இந்த தகவலை விஞ்ஞானி பிலிப்வால்டர் தெரிவித்துள்ளார். ஓவியர் டாவின்சி பயன் படுத்திய தொழில் நுட்பத்துக்கு ”ஸ்பு மோடோ” என்று பெயர் என அவர் கூறினார்.
மோனாலிசா ஓவியத்தை டாவின்சி கடந்த 1503 -ம் ஆண்டு வரைய தொடங்கினார். புளோ ரென்டைனை சேர்ந்த வியாபாரி பிரான்சிஸ்கோ டெல்ஜியோகாண்டோ வின் மனைவி லிசா கெராந்தினி இந்த ஓவியத்துக்கு மாடலாக இருந்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Thursday, July 15, 2010
ஆக்டோபஸ் கொடூர கொலை : டிவியில் நேரடி ஒளிபரப்பு
தென்ஆப்ரிக்காவில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரின்போது, ஜெர்மனி அருங்காட்சியகத்தை சேர்ந்த பால் என்ற 2 வயது ஆக்டோபஸ் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே சரியாகக் கணித்து உலகப் புகழ் பெற்றது.
ஜெர்மனி அணி விளையாடிய 7 போட்டிகள் மற்றும் ஸ்பெயின் & நெதர்லாந்து மோதிய பைனல் என 8 போட்டியிலும் பால் சொன்ன அணிதான் வெற்றி பெற்றது. தனது துல்லியமான ஆரூடத்தால் ஆதரவாளர்களை மட்டுமல்ல, எதிர்ப்பாளர்களையும் சம்பாதித்தது அந்த ஆக்டோபஸ். ஜெர்மனி அரைஇறுதியில் ஸ்பெயினிடம் தோற்கும் என்று கணித்ததால், உள்நாட்டில் அதற்கு ‘துரோகி’ பட்டம் கிடைத்தது. அதே சமயம் ஸ்பெயினில் இந்த ஆக்டோபஸை குலதெய்வமாக வணங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
கால்இறுதியில் ஜெர்மனியிடம் அர்ஜென்டினா உதை வாங்கும் என்று ஆக்டோபஸ் கணித்தது அப்படியே நடந்ததால் அந்நாட்டு ரசிகர்களும் ஆத்திரத்தில் உள்ளனர். இந்நிலையில், அர்ஜென்டினா டிவி சேனல் ஒன்றில் ‘எ பர்பெக்ட் வேர்ல்டு’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் ராபர்டோ என்பவர், நேரடி ஒளிபரப்பில் ஒரு ஆக்டோபஸை வெறித்தனமாக கொலை செய்து ரசிகர்களை திருப்திப் படுத்தியிருக்கிறார். ‘நம் அணியை தோற்கடித்த ஆக்டோபஸ் பால் அல்ல இது. ஆனாலும், அதுவாகவே இதை நினைத்துக் கொள்ளுங்கள். இதை கொடூரமாக கொல்லப் போகிறேன். இப்போது கழுத்தை திருகுகிறேன். தலையை வெட்டி துண்டு துண்டாக்கி மிக்சியில் போட்டு அரைக்கிறேன்’ என்று நேர்முக வர்ணனை கொடுத்தபடியே அந்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறார். அர்ஜென்டினா ரசிகர்கள் ஏராளமானோர் இதை கைதட்டி ரசித்தனர்.
இந்த கொடூர கொலைக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “கணிப்பு என்பது சுவாரசியத்துக்காக நடத்தப்பட்டது. அதற்காக அப்பாவி ஜீவன் ஆக்டோபஸ் மீது ஆத்திரத்தை காட்டுவதா?” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். டிவி சேனல் மீது வழக்கு தொடர்வது பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஆச்சரிய ஆக்டோபஸ்:
ஆச்சரிய ஆக்டோபஸ்:
ஆக்டோபஸ் ஆச்சரியமான உயிரினம். கதைகள், திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதுபோல ராட்சத ஆக்டோபஸ்கள் இருப்பதாக தெரியவில்லை. நன்கு வளர்ந்த ஆக்டோபஸ் 15 கிலோ எடை இருக்கும். அதிகபட்சமாக 71 கிலோ எடை கொண்ட ஆக்டோபஸ் ஒருமுறை பிடிபட்டுள்ளது. ஆக்டோபஸ் உடலை பாதியாக வெட்டினால், 2 பக்கமும் ஒன்றுபோல இருக்கும். ஆக்டோபஸ் மிகவும் புத்திசாலி. எந்த விஷயத்தையும் உடனே கற்றுக் கொள்ளும். நம்மை போலவே குறுகியகால, நீண்டகால நினைவாற்றல் கொண்டது. இரண்டு வெவ்வேறு வடிவங்கள், டிசைன்களை வேறுபடுத்தி பார்க்கும் திறன் கொண்டவை. ஒரே நிறம் அல்லது டிசைனை காட்டிக் காட்டி பழக்கப்படுத்தினால் அதை மீண்டும் தேடி கண்டுபிடித்துவிடும். கால்பந்து போட்டியின் போது அணிகளின் கொடிகளை கண்டுபிடித்தது கூட இதன் அடிப்படையில்தான் என்றும் கூறப்படுகிறது.
ஆக்டோபஸுக்கு எலும்புக் கூடு கிடையாது. எல்லா ஆக்டோபஸ்களுமே விஷத் தன்மை கொண்டவை என்றாலும், நீல நிற வளையங்கள் கொண்ட ஆக்டோபஸ் மட்டுமே மனிதனைக் கொல்லும் அளவுக்கு விஷமுடையது. 6 மாதத்தில் இருந்து அதிகபட்சமாக 5 ஆண்டு மட்டுமே உயிர் வாழும். ஆக்டோபஸ் 3 இதயம் கொண்டது. ஹீமோசயானின் என்ற ரசாயனம் இருப்பதால் ஆக்டோபஸ் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Subscribe to:
Posts (Atom)