Tuesday, March 23, 2010

டி.என்.ஏ (DNA) என்பது என்ன?

டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம். DNA என்பது deoxyribonucleic acid என்னும் ஆங்கிலத் தொடரின் சுருக்கமாகும். மனித உயிரைக் கட்டுப்படுத்தும் அடிப்படை அலகு இதுவே. இது நியூகிளியோடைட்ஸ் எனும் வேதி அலகுகளின் தொடர்களிலிருந்து பெறப்படும் மிகவும் சிக்கலான பொருளாகும். ஒரு புதிய உயிரினம் வளர்ச்சியுறுவதற்கான எல்லா அறிவுறுத்தல்களும் டி.என்.ஏ மூலக் கூறாகக் (molecule) குறிப்பிடப்படுகின்றன. ஓர் ஏணியை முறுக்கியது போன்று இதன் வடிவம் விளங்குகிறது. இரு செங்குத்தான நீண்ட புரியிழைகள், அமினோ அமில இணைகளான தொடர் படிகளால் இணைக்கப்படுகின்றன; இவை குறிப்பிட்ட சில வழிகளால் மட்டுமே இணைக்கப்பட முடியும். இந்த அமினோ அமில இணைகளின் அமைப்பு டி.என்.ஏ மூலக்கூறின் குறியீடாக விளங்குகிறது; இவ்விணைப்புகளின் குழுக்கள் மரபணுக்கூறுகளாக (genes) விளங்குகின்றன. ஒவ்வொரு டி.என்.ஏ மூலக் கூறும் ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் அணுக்களால் கட்டமைக்கப்படுகிறது. ஒரு முழு மனிதத் தொகுதியில் 46 குரோமோசாம்கள் உள்ளன: இதில் 23 தாயின் முட்டை உயிரணுவிலிருந்தும் மற்ற 23 தந்தையின் விந்தணுவிலிருந்தும் வந்தவை. ஒரு உயிரணு பிரியும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குரோமோசோமிலுமுள்ள டி.என்.ஏவின் ஒவ்வொரு துண்டும் நகல் எடுக்கப்படுகிறது.

டி.என்.ஏ மூலக்கூறு மிக நீண்டது, மென்மையானது; ஸ்பேகெட்டி (spaghetti) என்னும் இத்தாலியத் தின்பண்ட நூலிழையின் 5 மைல் நீள அளவுக்கு இது அமையும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF