கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சைபீரிய நாட்டு குகையில் வினோதமான ஒரு உயிரினத்தின் எலும்பு துண்டுகளை தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.
அந்த உயிரினத்தின் கைவிரல்கள் மிகவும் சிறியதாக இருந்தன. எனவே, எலும்பை கொண்டு டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, இந்த எலும்புகள் ஆதிகால மனிதனுடையது என்று தெரிய வந்தது. மேலும் அந்த மனிதன் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவனாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த எலும்புகளை வைத்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF