Tuesday, March 23, 2010

மனித உடலியல்


மனித உடலின் முக்கிய உறுப்பு மண்டலங்கள் என்னென்ன?


உடலின் பல்வேறு உறுப்புகளைக் கண்டறிந்தே மனித உடற்கூறியல் ஆய்வுசெய்யப்படுகிறது. உடலுறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள்ஆகியவற்றின் அடிப்படையில் அவை பல்வேறு குழுக்களாக அல்லது மண்டலங்களாகப்
பிரிக்கப்படுகின்றன. அக்குழுக்கள் பின்வருமாறு:

எலும்பு (skeletal) மண்டலம்,

தசை (muscular) மண்டலம்,

நரம்பு (nervous) மண்டலம்,

நாளமில்லா சுரப்பி (endocrine) மண்டலம்,

மூச்சு (respiratory) மண்டலம்,

இதயக் குருதி நாள (cardiovascular) மண்டலம்,

நிணநீர் நாள (lymph vascular) மண்டலம்,

செரிமான (digestive) மண்டலம்,

கழிவு (excretory) மண்டலம் மற்றும்

இனப்பெருக்க (reproductive) மண்டலம்

உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒருமனித உடலில் சுமார் 2 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலைநீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது. மிகவும்சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில்விளங்குவது ஈரல் (liver) ஆகும்.

ஒருவரின் சிதைந்து போன உடலுறுப்பை நீக்கி, வேறொரு கொடையாளியிடமிருந்துபெறப்பட்ட நல்ல உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிப் பொருத்துவதற்கு உறுப்புமாற்று அறுவை சிகிச்சை (transplantation surgery) எனப் பெயர். தற்போது இதயம், ஈரல்,சிறுநீரகங்கள், நுரையீரல்கள் ஆகிய உறுப்புகளை அறுவை சிகிச்சை வாயிலாக மாற்றிப்பொருத்த முடியும்.

ஓர் உயிரணுவின் (cell) உள்ளே என்ன இருக்கிறது?

தாவரம், விலங்கு, மனிதர் ஆகிய அனைத்து உயிரினங்களும் உயிரணுக்களால் ஆனவையே. இவ்வுயிரணுக்களில் சைடோபிளாசம் (cytoplasm) எனப்படும் பாகு (jelly) போன்ற நீர்மப் பொருளே நிரம்பியுள்ளது.

ஒவ்வொரு உயிரணுவும் மிக மெல்லிய சவ்வு போன்ற பொருளால், நீர் நிரம்பிய பலூன் (balloon) போன்று ஒன்றிணைக்கப்படுகிறது. உயிரணுவின் உள்ளே சைட்டோபிளாசம், குறிப்பிட்ட நுண் உறுப்புப் பகுதிகளில் (organells) அடங்கியிருக்கும். உயிரணுக்களின் செயல்பாட்டை இவையே கட்டுப்படுத்துகின்றன; எடுத்துக்காட்டாக புரதங்களின் (proteins) உற்பத்தியைக் குறிப்பிடலாம்.

மைட்டோகாண்டிரியா (mitochondria) எனப்படும் மிகச் சிறு நுண்ணுறுப்புகள் உயிர்வளியைப் பயன்படுத்தி உனவுப் பொருளைத் துகள்களாக மாற்றி, உயிரணுக்களுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன.

அணு உட்கருப் (nucleus) பகுதியில் நூலிழை போன்ற 46 குரோமோசாம்கள் அடங்கியுள்ளன; இவையே உயிரணுவின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துபவை.

குடல்களின் சுவர்ப் பகுதியில் உள்ள உயிரணுக்கள் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்பவை; ஆனால் மூளைப் பகுதியின் நரம்பிலுள்ள உயிரணுக்கள் நம் வாழ்நாள் முழுதும் உயிர் வாழ்பவை.

உயிரணுக்கள் வாழ்வதற்கு உணவு, உயிர்வளி, நீர்மச் சூழல் ஆகியன இன்றியமையாதன. இரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் உணவையும் நீர்ப்பொருளையும் அளிக்கின்றன. கழிவுப் பொருட்களையும் இவையே வெளியேற்றுகின்றன. உயிரணுவுக்குத் தேவைப்படும் உணவு மற்றும் வேதிப்பொருட்களையும் இரத்தமே அளிக்கிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF