Saturday, March 6, 2010

சிலி நிலநடுக்கத்தால் பூமியின் மையக்கோட்டில் பாதிப்பு


சிலி நாட்டில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஏற்பட்ட 8.8 ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக பூமியின் மையக்கோட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாளின் மொத்த கால அவகாசத்தில் 1.26 மைக்ரோ செகண்ட் குறையும் என நாசா விஞ்ஞானிகளின் முதற்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன.


இதுதொடர்பாக சி.என்.என் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,
பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் போது பூமியில் உள்ள பாறைகள் இடம்பெயரும். இதன் காரணமாக பூமி சுழலும் வேகம் மாறுவதால், ஒருநாளின் கால அவகாசமும் மாறுபடும்.

நாசாவில் பணியாற்றும் புவியியல் விஞ்ஞானி ரிச்சர்ட் க்ராஸ் என்பவர் கணினியின் உதவியுடன் நடத்திய ஆய்வில், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி சிலியில் ஏற்பட்ட 8.8. ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக பூமியின் மையக்கோடு 8 செ.மீ. சாய்ந்துள்ளதையும், இதன் காரணமாக நாளின் காலஅவகாசம் 1.26 மைக்ரோ செகண்ட் அளவு குறைந்துள்ளதையும் கண்டறிந்துள்ளார்.

கடந்த 2004இல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் பூமியின் சுழலும் வேகம் அதிகரித்தது. அதனால் நாளின் காலஅவகாசம் 6.8 மைக்ரோ செகண்ட் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: ஒரு நொடியில் மில்லியனில் ஒரு பகுதியே மைக்ரோ செகண்ட் எனப்படும். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF