Wednesday, March 24, 2010

மனதை படிக்கும் கம்ப்யூட்டர் வடிவமைப்பு

பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள், மனிதர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை படிக்கும் வகையிலான கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளனர்.


இதுகுறித்து, லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மற்றும் அவரது சகாக்கள் கூறியதாவது,

கம்ப்யூட்டரால், மனிதர்களின் மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம், அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு, அவற்றை அப்படியே வெளிப்படுத்த முடியும். இதற்காக, பத்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களிடம் ஆய்வு நடத்தப் பட்டது. இவர்களுக்கு சில பெண்கள் கடிதங்களை தபால் பெட்டியில் போடுவது, பேப்பர் கப்பில் காபி அருந்துவது போன்ற காட்சிகள் அடங்கிய, சில வினாடிகள் மட்டுமே ஒளிபரப்பாகக் கூடிய படம் காண்பிக்கப்பட்டது.

அதன் பின், அவர்கள் என்ன பார்த்தனர் என்பதை திரும்ப நினைவுப்படுத்தி பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அப்போது ஸ்கேனர் கருவி மூலம் மூளையில் ஏற்படும் ரத்த ஓட்ட மாறுதல்களை வைத்து, அதன் செயல்பாடு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அந்த எலக்ட்ரிக்கல் தகவல்களை, அதற்கென உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் புரோகிராம் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டவர்கள் நினைவு கூர்ந்ததை, 50 சதவீதம் துல்லியமாக வெளிப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF