Monday, March 15, 2010

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் நமது உடலின் வெப்பநிலை கூடினாலோ, குறைந்தாலோ உடல் நோய்வாய்ப்படும். நமது இயக்கத்துக்கு ஏற்ப வெப்ப ஆற்றல் வெளிப்படும். மாறுபடவும் செய்யும்.


இப்படி உடல் இயக்கத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை சேகரித்து அந்த ஆற்றலைக் கொண்டு எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க ஒரு கருவி தயாரித்துள்ளது எம்.ஐ.டி. பல்கலைக்கழகம்.

நடப்பது, ஓடுவது என எந்த வேலையில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட அளவில் ஆற்றல் செலவாகிறது. அதில் ஒரு பகுதி வெப்ப ஆற்றலாக வெளியேறுகிறது. இந்த வெப்ப ஆற்றலையும், சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் உள்ள ஆற்றலையும் கிரகித்து மின்ஆற்றலாக சேமிக்கிறது இந்தக் கருவி. இதைக் கொண்டு 2 வாட் மின்சாரத்துக்கும் குறைவான பயன்பாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

செல்போன் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் கருவிகள் மிகக் குறைந்த மின் ஆற்றலில் இயங்கக்கூடியவை. எனவே இந்த கருவியில் சேமிக்கும் மின் ஆற்றலைக் கொண்டு இனி செல்போன்களை சார்ஜ் செய்ய முடியும். சார்ஜரை தேடிக் கொண்டோ, தூக்கிக் கொண்டோ திரிய வேண்டாம். அனைவரும் பயன்படுத்தலாம் இந்த லாபமான கருவியை. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF