Monday, March 22, 2010

விண்டோஸ் 7 ல் சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் உருவாக்குவது எப்படி?


சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் பல சமயங்களில் நமக்கு பேருதவியாக இருக்கும். புதிதாக ஏதாவது மென்பொருள் பதிந்த பின்னரோ அல்லது புதிதாக ஏதாவது வன்பொருள் நிறுவிய பின்னரோ கணினியின் இயங்குதளம் பாதிக்கப்பட்டு சரிவர இயங்காமல் போய்விடுகிறது.


இது போன்ற சமயங்களில் நாம் ஏற்கனவே ஏதாவது ஒரு தேதியில் சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் உருவாக்கியிருந்தால், அந்த குறிப்பிட்ட தேதிக்கு கணினியை ரீஸ்டோர் செய்ய முடிவதால், நமது முக்கியமான டேட்டாக்களை இழக்காமலிருக்க முடியும். இந்த வசதி Windows Me பதிப்பிலிருந்து மைக்ரோ சாப்டினால் தரப்பட்டுள்ளது. (Windows 98 -ல் டாஸ் ப்ராம்ப்ட்டில் Scanreg / Restore என்ற கட்டளை கொடுத்து பயன் படுத்தலாம்.)

எப்பொழுதுமே புதிதாக எதாவது மென்பொருள் அல்லது வன்பொருள் நிறுவுவதற்கு முன்னதாக ஒரு சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் உருவாக்குவது பாதுகாப்பானதாகும்.

இந்த வசதி விண்டோஸ் எக்ஸ்பியில் All Programs -> Accessories -> System Tools -> System Restore சென்றால் கிடைக்கும்.

விண்டோஸ் ஏழில் இந்த வசதி சற்று வித்தியாசமாக தரப்பட்டுள்ளது.

My Computer ல் வலது கிளிக் செய்து Properties செல்லவும். இனி வரும் டயலாக் பாக்ஸில் இடதுபுற பேனில் System Protection என்பதை கிளிக் செய்யவும்.

இனி திறக்கும் System Properties திரையில் System Protection என்ற டேபில் 'Create' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

அடுத்து உங்களுக்கு இந்த ரீஸ்டோர் பாயிண்ட் எப்பொழுது எந்த நிகழ்விற்கு முன் உருவாக்கினோம் என்பதை நினைவூட்டும் வகையில் ஒரு விபரத்தை டைப் செய்து Create கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவுதான்!
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF