Thursday, January 28, 2010

hybrid முளையம் சட்ட அங்கீகாரம் பெறுகிறது.

hybrid முளையம் சட்ட அங்கீகாரம் பெறுகிறது.


hybrid embyro (கலப்பு முளையம்) எனப்படும் வேறு இன விலங்கின் முட்டையில் இருந்து ஆய்வுசாலை முறையின் கீழ் அதன் கருவை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக மனித கலக்கருவை அதனுள் செலுத்தி அதனை முளையமாக வளர்த்து அவற்றிலிருந்து மூளை, இதயம், தோல் போன்ற முக்கியமான உறுப்புக்களுக்குரிய இழையங்கள் மற்றும் இழையங்கள் உட்பட பலவற்றை மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கும் இதர நோய்களுக்கு எதிரான சிகிச்சை நோக்கங்களுக்காகவும் மற்றும் மூலவுயிர்க்கல ஆய்வுகளுக்காகவும் பாவிக்கும் நோக்கில் உற்பத்தி செய்ய பிரித்தானிய சட்டவாக்க சபையான அதன் நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.


உலகில் hybrid embyro உருவாக்கத்துக்கு எதிராக கிறிஸ்தவ மற்றும் மதம் சார் அமைப்புக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலும் மனித முட்டைக்கு ஆய்வுசாலைகளில் கடும் தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையிலும்.. மனித முளையங்கள் இவ்வாய்வின் பின் அழிக்கப்படுவது குறித்தும் சர்ச்சைகள் இருந்து வந்துள்ள நிலையிலும் பிரித்தானிய அரசின் இச்சட்டவாக்கம் உலகுக்கு முன்மாதிரியாக அமைகின்றது..!

இந்த அனுமதி உயிரியல் தொழில்நுட்பத்துறையில் மருத்துவரீதியான முளையவியல் மற்றும் உறுப்புக்களின் ஆக்கம் தொடர்பான ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட உதவும். இருப்பினும்...

இந்த வகையில் மனிதக் குழந்தையை உருவாக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF