Cannabis வகை போதைப் பொருளில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து.
Cannabis போன்ற போதைப் பொருட்களை புகைப்பதால் பல தீமைகள் ஏற்படுகின்ற போதும் அவற்றை ஆய்வுசாலைகளில் பகுத்து அவற்றில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சில இரசாயனக் கூறுகளை (THC போன்றவை) புற்றுநோய்க்கு மருந்தாக பாவிக்க முடியும் என்று பிரித்தானிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
குறிப்பாக புற்றுநோய் கலங்களைப் பலவீனமாக்கி அவை பெருக்கமடைவதை இந்த இரசாயனக் கூறுகள் தடுக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
இது எல்லா வகை புற்றுநோய்க்கும் பயனளிக்க கூடியது என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதும் குறிப்பாக சுவாசப்பை, மூளை மற்றும் குருதிப் புற்றுநோய்க்கு எதிராக பாவிக்கப்பட முடியும் என்று நம்பப்படுகிறது.
ஏற்கனவே Cannabis போன்ற போதைப் பொருட்களில் இருந்து பகுத்தெடுக்கப்படும் இரசாயனக் கூறுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள் சில வலியுணரும் நோய்களுக்கு எதிராக வலியைக் குறைக்கப் பாவிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்காக Cannabis போன்ற போதைப் பொருட்களை புகைப்பதாலோ அல்லது உள்ளெடுப்பதாலோ இந்தப் பயன் கிடைக்காது. மாறாக புற்றுநோய் உட்பட உடல் பாதிப்பு அதிகரிக்கவே செய்யும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF