உலகெங்கும் கடவுள் துகள் (God Particle) ஆராய்ச்சியின் புதிய வெற்றியை பற்றி பேசிக்கொண்டிருக்க,இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட சுவிற்சர்லாந்தின் சேர்ன் ஆராய்ச்சி கூடத்தை சுற்றி கட்டப்பட்ட பாரிய ஹாட்ரன் மோது கருவியை பற்றிய சில சுவாரஷ்யமான புகைப்படங்கள் சில.இவை 2009ம் ஆண்டு நவம்பர் மாதமளவில் மீள்திருத்தப்பணிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் எடுக்கப்பட்டுள்ளன. மின் ஒழுக்கினால், இதன் 9,000 காந்த ஈர்ப்பு கொண்ட சூப்பர் கடத்திகளில் 53 பாகங்கள் சேதமடைந்திருந்தன. அதன் திருத்த பணிகளும், மீள் தொடக்கமும் இங்கு பதியவிடப்பட்டுள்ளது.