Monday, July 16, 2012

முதன் முறையாக வாழை ஜீனோமை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!


வாழையின் ஜீன் வரிசைக் கிரமத்தை(ஜீனோம்) முதன் முறையாக வெளியிட்டு விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
சர்வதேச அளவில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் பொருளாக வாழை விளங்குகிறது.பல்வேறு மருத்துவ சிறப்புமிக்க இந்த வாழை, ஒட்டுண்ணி மற்றும் பல காரணிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சர்வ‌தேச அளவில் அதன் அறு‌வடை பாதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் பிரான்ஸ் வேளாண் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ஏஞ்சலிக் டி ஹாண்ட் கூறுகையில், வாழை வருங்காலத்தில் பெரும்சரிவை சந்திக்கும் என்று அனைவரும் அச்சமுற்றிருந்த நிலையில், வாழையின் ஜீனோம் வகைப்படுத்தப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.இது வரவேற்கத்தக்கக நிகழ்வு ஆகும். இந்த ஜீனோமின் மூலம், பூச்சிக்கொல்லி உதவியின்றி நோய்த் தாக்கு‌தலுக்கு எதிர்ப்பு திறன் கொண்ட புதிய வகை வாழையை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.இந்த தகவலை டிஸ்கவரி நியூஸ் வெளியிட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF