Sunday, July 1, 2012

அறிவை வளர்க்க சில வழிகள்!


இந்த உலகத்தில் இவருக்குத் தான் அறிவு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அறிவாளியாக, புத்திசாலியாக இருப்பர்.அறிவு என்பது சிந்திக்கும் திறனையே குறிக்கிறது. எந்த சமயத்தில் எப்படி சிந்தித்தால் எப்படி வெற்றி கிட்டும் என்பதை சரியாக யார் சிந்தித்து அறிவை பயன்படுத்துகிறார்களோ அவர்களே புத்திசாலி மற்றும் மிகுந்த அறிவுள்ளவர்கள்.உதாரணமாக ஒருவர் படிப்பில் கெட்டிக்காரராக, புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் அவர் விளையாட்டில் அவ்வாறாக இருக்க மாட்டார்கள். இவ்வாறு அறிவில் பல வகைகள் உள்ளன. அத்தகைய அறிவை அனைவரும் பெற வேண்டுமென்றால், அறிவை வளர்க்க ஒரு சில வழிகள் இருக்கிறது.
அறிவை வளர்க்க சில டிப்ஸ்


1. நல்ல தூக்கம் மற்றும் போதுமான ஓய்வு அவசியம். இவற்றில் தூக்கம் மற்றும் ஓய்வு ஆகிய இரண்டும் ஒன்று அல்ல.ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூங்குகிறோம். ஆனால் அப்போது உடலானது ஓய்வு பெறுகிறது. ஆனால் அவ்வாறு தூங்கி எழுந்து புத்துணர்ச்சி அடையாமல் இருந்தால், எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அப்போது அறிவானது குறைவாகத் தான் இருக்கும். ஆகவே நல்ல தூக்கத்தின் மூலம் அறிவானது பெருகும்.


2. நிறைய பேர் வார இறுதியில் தூங்கி எழுந்திருக்கும் போது நீண்ட நேரம் கழித்து எழுந்திருப்பர். ஆனால் எழுந்ததும் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பர்.ஆனால் அப்படி எழுந்து உடற்பயிற்சி செய்ய நினைக்கும் நேரம் ஷூ ஆனது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் தேடி, அதையே கண்டு பிடிக்க போய் ஒரு நாளில் அரை நாள் போய்விடும். இந்த நேரத்தில் அவர்களது மூளையானது அந்த ஒரு ஷூவில் மட்டும் தான் இருக்கிறதே தவிர, வேறு எதையும் யோசிக்கவில்லை.


மேலும் சோம்பேறித்தனம் தான் அறிவை மழுங்க வைத்து நேரத்தை கழிக்கிறது. எப்படியெனில் நீண்ட நேரம் தூங்குவதால் சோம்பேறித்தனம் தான் அதிகரிக்கும்.ஆகவே அத்தகைய நீண்ட நேர தூக்கமானது அறிவை அப்போது மழுங்க வைத்துவிடுகிறது. ஆகவே அவ்வாறு மழுங்காமல் ஸ்டாமினா அதிகரிக்க தினமும் எழுந்து சுறுசுறுப்பாக 'ஜாக்கிங்' செய்ய வேண்டும். இதனால் அறிவானது பெருகும்.


3. தொலைக்காட்சியில் தேவையில்லாத நிகழ்ச்சிகளைப் பார்த்து அறிவை மழுங்க வைக்கின்றனர். மேலும் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு அடிமையே ஆகிவிடுகின்றனர்.மூளையானது ஒரு கத்தி போன்றது. அதை பயன்படுத்தாவிட்டால் கூர்மையை இழந்துவிடும். ஆகவே அறிவுக்கு வேலை கொடுக்கும் நிகழ்ச்சிகளை வேண்டுமென்றால் காணலாமே தவிர, அறிவை மழுங்கச் செய்யும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டாம்.


4. இன்றைய காலத்தில் நிறைய பேர், எடை குறைய வேண்டும் என்பதற்காக சிலசமயம் சாப்பிடாமலே இருக்கின்றனர். ஆகவே இத்தகையவற்றை நினைவில் கொள்ளாமல், நன்கு உண்டால் தான் மூளையானது கத்திப் போல் நன்கு வேலை செய்யும்.மேலும் நட்ஸ், தானியங்கள், முட்டை மற்றம் கடல் உணவுகள் போன்றவை மூளையை வளர்க்கும் உணவுகள் ஆகும். மேலும் இவை அனைத்தும் உடலுக்கு ஏற்ற, உடல் எடையை அதிகரிக்காத உணவுகளும் கூட.


5. நன்கு விளையாட வேண்டும். மூளையை நன்கு சுறுசுறுப்பாக, கூர்மையாக வைத்துக் கொள்ள யோசிக்கும் வகையில் இருக்கும் விளையாட்டுகளை விளையாட வேண்டும்.உதாரணமாக செஸ், வார்த்தை விளையாட்டு, மெமரி கேம்ஸ் போன்றவற்றை விளையாடுவதன் மூலமும் அறிவை வளர்க்கலாம்.இவ்வாறெல்லாம் பின்பற்றுங்கள் மூளையானது சுறுசுறுப்போடு இருப்பதோடு, அறிவும் கூர்மையடையும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF