Thursday, January 21, 2010

நிலவின் ஒளி பிரதிபலிப்பு


நிலவு தன்னுடைய ஒளியை வெளிப்படுத்திக் கொள்கிறது என்றே முந்தைய நாகரிங்கள் கருதின. ஆனால் இன்றோ நிலவின் அதன் ஒளி பிரதிபலிக்கப்பட்ட ஒளி என்ற உண்மையை இன்றைய அறிவியல் எடுத்து கூறுகின்றது. ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் வசனத்தில்...

تَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاء بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُّنِيرًا
வான (மண்டல)த்தில் கோளங்கள் வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.سورة الفرقان 25:61
திருக்குர்ஆனில் சூரியனுக்கு பயன்படுத்தப்படும் அரபுச் சொல் 'ஷம்ஸ்' இதனை 'ஸிராஜ்' (ஒளிவிளக்கு) 'வஹ்ஹாஜ்' (பிரகாசிக்கும் விளக்கு) 'தியா' (ஒளிரும் மகிமை) என்றும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. சூரியன் தனக்குள் எரிந்துகொண்டே இருப்பதால், அது கடுமையான உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் உண்டு பண்ணிக்கொண்டே உள்ளது.


சந்திரனை குறிக்கும் அரபுச் சொல் 'கமர்' என்பதாகும். இந்த சந்திரனை 'முனீர் என்றும் வர்ணிக்கிறது. 'முனீர்' என்றால் ஒளியை (நூர்) வழங்கும் கோளம் என்று பொருள். எந்த இடத்திலும் சந்திரனை குறித்திட 'வஹ்ஹாஜ்' 'தியா' 'ஸிராஜ்' ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவே இல்லை. அதே போல் சூரியனை குறித்திட 'நூர்' அல்லது 'முனீர்' என்ற சொற்களும் பயன்படுத்தப்படவில்லை.
சூரியனிலிருந்தும், சந்திரனிலிருந்தும் பெறப்படும் ஒளியின் இயல்பை எடுத்துக் கூறும் வசனங்களைப் பாருங்கள்.
هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاء وَالْقَمَرَ نُورًا
"அவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான்" سورة يونس 10:5
أَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللَّهُ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا
ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படி படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அவனே ஆக்கியிருக்கிறான். 71:15,16 سورة نوح பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

நீரின் சுழற்சி



நீரின் சுழற்சி பற்றி நிகழ்கால மனிதன் அறிந்திருக்கும் கோட்பாட்டை Bernard Palissy என்பவர் தான் முதன் முறையாக கி.பி 1580ல் விளக்கிச் சொன்னார். சமுத்திரத்திலுள்ள நீர் எவ்வாறு கரு மேகங்களாக உருவெடுக்கின்றது என்பதை அவரே விளக்கிச் சொன்னார்.
உருண்டு திரண்ட வெண் மேகங்கள் நிலத்தை நோக்கி மெல்ல நகர்கின்றன. கடலிலிருந்து உயர எழுந்து குளிர்ந்து கெட்டியாகி நிலத்தில் மழைத்துளிகளாய் விழுகின்றன. இவ்வாறு விழுந்த மழைத்துளிகள் ஏரிகளாய், நதிகளாய் மாறி மீண்டும் சமுத்திரத்திற்கே திரும்பிச் செல்கின்றன. இவை தொடர் நிகழ்ச்சியாய் நிகழ்கின்றன.
கி.மு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த தேல்ஸ் (Thales of Miletus) என்பார் கடலின் மேற்பரப்பில் உள்ள நீர்த்திவலைகள் காற்றின் வாயிலாக எடுத்துச் செல்லப்பட்டு நிலம் நோக்கி மழைத்துளியாய் விழுகின்றது என நம்பினார். ஆரம்ப காலத்தில் நிலத்தடி நீரின் நிலை பற்றிய அறிவை மக்கள் அறிந்திருக்கவில்லை.


இந்நீரியல் கோட்பாட்டின்படி நீரானது குளிர்ந்த மலைப் பொதும்புகளில் உறைந்து நிலத்தடி நீர் நிறைந்த ஏரிகளாய் உருவாயின. அந்த ஏரிகளோ நீரூற்று பொங்கிப் பாய உதவின என்று கருதப்பட்டது. ஆனால், பூமியின் பிளவுகளில் கசிந்து உட்புகும் மழை நீரே ஏரிகளும், நீரூற்றுகளும் தோன்றக் காரணமாய் உள்ளது என்பதை நாம் இன்று அறிந்துள்ளோம். நீரின் சுழற்சி குறித்து திருக்குர்ஆனில் விளக்கப்பட்டுள்ளது.
أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاء مَاء فَسَلَكَهُ يَنَابِيعَ فِي الْأَرْضِ ثُمَّ يُخْرِجُ بِهِ زَرْعًا مُّخْتَلِفًا أَلْوَانُهُ
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக்கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. 39:21 سورة الزمر
وَيُنَزِّلُ مِنَ السَّمَاء مَاء فَيُحْيِي بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ




அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. 30:24 سورة الروم

وَأَنزَلْنَا مِنَ السَّمَاء مَاء بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ
மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிடவும் நாம் சக்தியுடையோம். 23:18 سورةالمؤمنون
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாமறிந்த வகையில் எந்த ஒரு மூல நூலும் நீரின் சுழற்சி குறித்து இவ்வளவு துல்லியமாக வர்ணித்திடவில்லை. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பூமியின் முளைகளாக இருக்கும் மலைகள்!


கோள வடிவிலான இந்த பூமியின் மேற்பரப்பு (Outer Crust Of The Earth) மட்டுமே உறுதியாகவும், கடினமானதாகவும் இருக்கிறது. ஆனால், உள்பகுதியில் ஆழமாக செல்ல செல்ல அவைகள் அதிக வெப்பமுடையதாகவும், உருகிய நிலையிலும் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். பூமியின் மேற்பரப்பில் உள்ள இந்த இருகிய பகுதி (Outer Crust) பூமியின் மேற்பரப்பிலிருந்து 1 முதல் 10 கிலோமீட்டர் வரைதான். அதற்கு கீழே உருகிய நெருப்பு குழம்புகள் இருக்கின்றன.
இவ்வாறு பூமியின் மேற்பகுதி இறுகியும், உட்பகுதி இறுகாமல் உருகிய நிலையிலும் இருப்பதால், பூமியின் சுழற்சியின் காரணமாக மையவிலக்கு விசையால் (Centrifugal Force) பூமியின் மேற்பரப்பு நகர்ந்து இடம் பெயர்ந்தது என்று புவியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக உலக வரைபடத்தை காட்டுகிறார்கள். உல்கம் முழுவதிலும் வளைந்தும், நெளிந்தும் இருக்கும் பூமியின் நிலப்பரப்புகளை ஒன்று சேர்த்தால் அவை கச்சிதமாகப் பொருந்திக் கொள்ளும் என்கின்றனர்.


இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால் ஒரு காலத்தில் ஒரே துண்டாக இருந்த பூமியின் நிலப்பரப்புகள் எல்லாம் விலகி தனித்தனி துண்டுகளாகியது (Continental Drift) என்பதுதான். பூமியின் மேற்பகுதி கடினமானதாகவும், உட்பகுதி உருகிய நிலையிலும் இருப்பதால் தான் இது நடைபெற்றதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இவ்வாறு இந்த நிலப்பரப்புகள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்த வேளையில் ‘Folding Phenomena’ என்ற முறையில் நிலப்பரப்புகளில் மலைகள் தோன்ற ஆரம்பித்தன. இந்த மலைகள் பூமியின் மேற்பரப்பில் அல்லாமல் பூமிக்குள்ளும் ஆழமாகச் சென்று முளைகளாக அமைந்தன. அதனால்தான் வேகமாக நகர்ந்து கொண்டிருந்த கண்டத்தின் நிலப்பரப்புகள் அவ்வாறு வேகமாக நகராமல் நிலைநிறுத்தப்பட்டன. இவ்வாறு மலைகளை முளைகளாக நிலைநிறுத்தியதை அல்லாஹ்வும் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்.
“நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?” (அல்குர்ஆன்: 78:6-7)
“இன்னும் இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்” (அல்குர்ஆன்: 21:31)
“அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கின்றீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அதன்மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான். மேலும், அதன்மீது எல்லாவிதமான பிராணிகளையும் அவன் பரவ விட்டிருக்கின்றான். இன்னும், நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்” (அல்குர்ஆன்: 31:10)
“உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான். இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்)” (அல்குர்ஆன்: 16:15)
மலைகள் பூமிக்குள் இவ்வாறு முளைகளாக அமைந்திருக்காவிட்டால், நாம் வசிக்க முடியாத அளவிற்கு இந்த பூமி ஆடி, அசையும் என்கின்றனர் புவியியல் வல்லுணர்கள்.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சுனாமி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!

சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு+னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.
சுனாமி எப்படி உருவாகிறது?
பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என் பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாயின. இந்த பிளேட்கள் மீது தான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள் தான். இதைத் தான் 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமாக்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது.
எப்படியெல்லாம் வரும் சுனாமி?
1. கடலாழத்தில் ஏற்படும் எந்த பாதிப்பின் போதும் வரும்.
2. கடலாழ பூகம்பத்தினால் வரும்
3. கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.
4. மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.
5. வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)
6. கடலில் பவுதிக மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்.
சுனாமி முதன் முதலில் ஏற்பட்டது எப்போது?
ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு., 365ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

1. சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.

2. 1883ம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத் துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

3. அதன் பின்னர் தொடர்ந்து 1999ம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964ம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.

சுனாமி எச்சரிக்கை அமைப்பு:
அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1ல் ஹவாய் தீவை தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின.

அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் 'சுனாமி மிதவை கருவி'.

1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.
சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்:
கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.

இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.

நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம், சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக், ஆப்ரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சுகமான சுமைகள்!

கடமை மறந்த மானிடா!
உன் - மடமையை ஒரு முறை அசைபோட்டுப் பார்.
அடித்தளத்தை இடித்துவிட்டா
அடுக்கு மாடி கட்டப்பார்க்கிறாய்?!
சரிந்து கொண்டிருக்கிறது உன் எதிர்காலம்!
அதை சரிக்கட்டினால் உனக்குப் பொற்காலம்.
வாழ்வதும் வீழ்வதும் உன் முடிவிலே..
முடிவெடு, இன்றே இனியதோர் விடைகொடு!
உன் வாழ்க்கையைச் செதுக்கிச் செப்பனிடு
ஊன், வினையற்று உருமாறு.
ஊருலகம் உனக்கு ஊன்று கோலன்று..
உண்மையே உனை உறுதியாக்கும்!
டீவியும், இணையதள வாழ்க்கையும்
நீ உறவாடும் புதிய உறவுகள்!
உன் நிஜ உறவுகளை அவை சிதைக்காமலிருக்கட்டும்!
சிந்தித்து செயலாற்றும் திறன் உன் முடிவிலே!
நேற்றைய பொழுதுகள் வீணாக..
நாளைய பொழுதுகள் தேனாக..
இரண்டுக்கும் நடுவிலே போராட்டத்தைத் துவங்கு!
என் உள்ளம் பேசுகிறது:
விடியுமா என் பொழுதுகள் ?!
விடை தேடி அலைகிறேன்.
சுகமானதோர் போராட்டம் துவங்குகிறது!
நான் திருந்த வேண்டும்..
மரணிக்குமுன் மனிதனாக வேண்டாமா?!
கடந்த காலத்தை வீணாக்கிவிட்டு
நறைத்த உணர்வுகள் என் வாழ்க்கையை ஏப்பம் விடுகின்றன!
நாளைய விடியலைத் தேடி ஒரு ஓயாப் பயணம்.
கடந்துவிட்ட இருள்களுக்கு வெள்ளையடிக்கின்றேன்.
நாளையாவது பளிச்சென்று விடியட்டும்.
இம்மையின் இன்னல்கள் துரும்பாக
சத்தியத்தில் என் பயணம் கரும்பாக
இதோ! நிம்மதியின் சுகம் எனை அழுத்த
மறுமைக்காய் செதுக்குகிறேன் நாளையை!
சுகமான சுமைகளோடு
சவீகரித்துக் கொண்டேன் சத்தியத்தை.
இப்போதுதான் சுவாசம் கூட இலகுவாக இருக்கிறது!
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சத்தியம் சத்தியப் பாதை

பாதையிலும் சத்தியம் அசத்தியமுண்டா?
இது சிலரது கேள்வி!
சத்தியமும் அசத்தியமும்
சர்ச்சை செய்தால் தான்
சச்சரவற்ற வாழ்க்கை புலரும்!
சத்திய மார்க்கம், சத்திய வழி
சத்தியப் பாதை.. ..
சகலமும் சந்தோஷ முடிவைத்
தேடும் சாலைகள்!
இரவைத் துரத்தும் பகல்
இது - இன்றியமையாப் பயணம்.
நிழலைக் கலைக்கும் வெயில்
இது - இயற்கையின் விளையாட்டு!
சத்தியத்தைச் சரிய வைக்கும் அசத்தியம்
இது - பாதாளத்துக்கு பவனிதரும் பள்ளக்கு!
உண்மையை உருக்குலைத்து
ஊமைக் கதைகள் பேசி
சத்தியத்தை சாகடிக்கும் சாத்தானியர்கள்!
காலத்தைக் கடத்திவிட்டு
கலாச்சார மோசடி நடாத்திவிட்டு
கலங்கமற்ற சத்தியத்தை
கண்ணீரோடு தவழவிடலாமா? பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அம்மா

அம்மாக்களுள் சகாப்தம் என் அன்னை
அரவணைத்த அம் மெய் எங்கே?
ஆசை முத்தமிட்ட கன்னமெங்கே
கட்டித்தழுவிய கரங்கள் எங்கே
இன்று நீ எங்கே?

எங்கே சென்றாய் என்னருமைத் தாயே
கருவானது முதல் கண்ணுக்குள் காத்தாயே
கருணையின் உருவானவளே - என்றும்
அகிலத்தின் பொக்கிசம் தாய்
அந்தததாய்களுக்குள் நீ ஒரு சகாப்தம்!

ஏன் இந்த கொடுமை - விழி
மூடியும் திறந்தும் நான் கண்டேன்
பல கனவு பலித்திடுமா - என்று
எண்ணித் துணிகையில் நீ சென்றாய்
எமைப்பிரிந்து.

தரணிக்கும் தனயனுக்கும் நீ - ஒரு
சகாப்தமே அகிலத்தின் திருவுருவே
நீ என்றும் எப்போதும் என்னுள்............. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கொடுப்பது

கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது
நீ ஒரு கருவியே
இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை
இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே
இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை
தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்
நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே
உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்
ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம்
கேட்க வேண்டியதில்லை பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, January 20, 2010

ஓர் ஓசையற்ற பயணம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
ஓர் ஓசையற்ற பயணம்!
காலம்: அனைத்து கிழமை நாட்களிலும்
பயணி பற்றிய விபரம்: -
தகுதியானோர் : ஆதமின் மகன்!
மூல உற்பத்தி : களிமண்!
விலாசம் : பூமியின் மேற்பகுதி!
பயணச் சீட்டு பற்றிய விபரம்: -
பயண வழி : ஒன்வே ஒன்லி (ஒற்றைப் பயணம் மட்டும், திரும்பும் சீட்டு கிடையாது)!
விலை : முற்றாக இலவசம்!
முற்பதிவு : ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது!
பொதி(சுமை) பற்றிய விபரம்: -
ஒவ்வொரு விமானத்திலும் ஒரு பயணி மட்டுமே அனுமதி!
கூடுதலாக 5 மீட்டர் வெள்ளைத் துணியும் சிறிய அளவு காட்டனும் எடுத்துக் கொள்ளலாம்!
பெறுமதி வாய்ந்த பொதி பற்றிய விபரம்: -
மனத்தூய்மையுடன் நிறைவேற்றப்பட்ட தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், தர்மங்கள்,
சத்தியத்திற்காக செய்த தியாகங்கள்,
குழந்தைகளை நல்லவர்களாக ஆக்க எடுத்துக் கொண்ட உண்மையான கரிசணைகள் மற்றும்
இது போன்ற நற்காரியங்கள் மட்டும்.
பயணம் பற்றிய விபரம்: -
பயணத்தளம் : பூமியின் எந்தப் பகுதியுமாக இருக்கலாம்.
பயணிக்கும் நேரம் : மரணத்தைத் தொடர்ந்து!
இறங்கும் இடம் : மறு உலகம்.
குறிப்பு: பயணச் சீட்டு, கடவுச் சீட்டு, பிரயாண ஆவணங்கள் போன்ற எதுவும் தேவையில்லை. தயாராக மட்டும் இருந்து கொண்டால் போதுமானது!
தங்குமிட வசதி: -
தற்காலிகமாக மட்டும் ஏற்பாடு செய்யப்படும்!!
அறையின் அளவு : கிட்டத்தட்ட 2 அடி அகளமும் 6 அடி நீளமுமாகும்!
அறையின் சிறப்பம்சம் : வெரும் புழுதி மணலினாலும் சிறிய கற்களினாலும் அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!
தங்குமிட வசதி பற்றிய விபரம் : பணக்காரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் ஒரே வகையான வசதி மட்டும்தான் ஏற்பாடு செய்யப்படும் என்பதை தயவு செய்து கவணத்திற் கொள்க!
கீழ்காணும் செளகரியங்கள் காணப்படும் :

குளிரூட்டி (ஏ.சி) : 0 டொன் !!!
நீர் விநியோகம் : கிடையாது !!!
மின் விநியோகம் : கிடையாது !!!
தொலை பேசி : கிடையாது !!!
டீ.வி மற்றும் சேனல்கள் : சுவனம் அல்லது நரகம் !!!
பத்திரிக்கைகள் அல்லது புத்தகஙகள் : கிடையாது !!!
ரூம் சர்விஸ் : அல்லாஹ்வுக்கு எந்தளவு கட்டுப்பட்டு நடந்தோம் என்பதைப் பொருத்து அமையும்!
முக்கிய கவணத்திற்கு : -
அனைத்து பயணிகளும் மேற் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தையும் தயவு செய்து கவணத்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்!
பயணச் சீட்டு ரத்துச் செய்யப்படுவதோ அல்லது பிறருக்கு மாற்றுவதோ முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது!
எனவே, தயவு செய்து அனைவரும் (விதிவிலக்கு கிடையவே கிடையாது) பயணத்திற்கு தயாராக இருந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றோம்.
மலக்குல் மெளத் எனப்படும் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்தவுடன் பயணம் ஆரம்பமாகும் என்பதையும் அறியத்தருகின்றோம்!
மேலதிக தகவல்களுக்கு: -
உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அல்-குர்ஆன் மற்றும் ஸுன்னாவை படிக்கவும். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, January 19, 2010

மரண ஓலம் !

மரண ஓலம் உலகத்தை அப்பிக்கொண்டிருக்கிறது! எங்கு பார்த்தாலும் மனித இரத்தம் புவியை நனைத்துக் கொண்டிருக்கும் சிவப்புக் காட்சிகள்! குறிப்பாக முஸ்லிம்களின் விலைமதிக்க முடியாத உயிர், செல்லாக் காசுகளாகிவிட்ட கொடூர காலக்கட்டம்! எந்த நேரத்தில் நம் உயிர் பிரியும் என்பது யாருக்கும் தெரியாது! எங்கு தான் இந்த உயிர் பறிக்கப்படும் என்பதும் நமக்குத் தெரியாது!
எனவே அடிக்கடி நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த கால நம் வாழ்க்கையை கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்து நம் எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். கடந்த காலம் குறித்த பின்னோக்கும் தன்மையும், எதிர்காலம் குறித்த திட்டமிடலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை.
எல்லாவற்றிற்கும் மேலாக மறுமைக்காணதோர் பயணம் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பயணம் ஒரு சுவனப் பசுஞ்சோலையை நோக்கியதோர் பயணமாகவும் இருக்கலாம், அல்லது பாதாள படுகுழியின் பாசறையான நரகம் நோக்கியதோர் பயணமாகவும் இருக்கலாம் அல்லவா? நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அன்பு நெஞ்சங்களே! மறுமையின் நந்தவனத்தில் ‘நாமும் ஒரு மலராக’ வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
இதோ கீழ்காணும் எண்ண அலைகளை அமைதிப்படுத்த முயற்சிப்போமாக! எம்மைப் படைத்த வல்ல ரஹ்மானின் ஆதரவு என்றும் நம்மோடு இருக்கின்றது.
தீமை தரும் பேச்சுக்களை விட்டும் என் நாவை எந்தளவு பாதுகாத்துக் கொள்கிறேன்? அல்லது வெட்டிப் பேச்சும், வீண் வம்பும் தான் என் கைதேர்ந்த கலையா?
என்றாவது மையவாடியைத் தரிசித்து, நமக்கும் மரணம் வருமே! நாமும் இங்கு தானே கொண்டு வரப்படுவோம்! என்கின்ற எண்ணம் எப்போதாவது வந்துள்ளதா? அல்லது உலகம் மரணத்தையும் மறுமையையும் மறக்கடித்து விட்டதா?
கப்ர் வாழ்க்கைக்கான கட்டுச் சாதனத்தை தயார் செய்து விட்டேனா? அல்லது கப்ர் வாழ்க்கையே இப்போது தான் நினைவுக்கு வருகின்றதா?
பிறர் குறைகளைப் பாராது என் குறைகளை சீர் செய்வதில் எந்த அளவு ஆர்வம் காட்டியிருக்கிறேன்? அல்லது பிறர் குறைமேய்வது தான் என் தொழிலா?
இறையச்சமுடையவனாகுவதற்கு எந்த அளவு முயற்ச்சித்திருக்கிறேன்? அல்லது என் மனது கல்லாகி விட்டதா?
காலத்தை வீணடிக்காது அமானிதத்தைப் பாதுகாத்திருக்கிறேனா? அல்லது காலம் கூட அமானிதம் என்பது எனக்குத் தெரியாதா?
அல்-குர்ஆனில் எத்தனை சூராக்களைப் பாடமாக்கியிருக்கிறேன்? எத்தனை ஹதீஸ்களை மனனமிட்டிருக்கிறேன்? இல்லை இல்லை பாட்டும் படமும் தான் என் சிந்தனையின் விருந்தா?
நான் மற்றவர்களை சந்திக்கும் போதெல்லாம் சலாம் கூறுகின்றேனா? அல்லது சலாம் கூறுவது கூட எனக்கு கசப்பாக இருக்கிறதா?
புன்சிரிப்போடும், நல்ல வார்த்தைகளோடும் மற்றவர்களைச் சந்திக்கிறேனா? அல்லது கர்வம் தான் என் நடைமுறைகளின் அலங்காரமா?
என் எல்லாக்காரியங்களிலும் வலதை முற்படுத்துகின்றேனா?
மறுமையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஷபாஅத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, முஅத்தின் பாங்கு கூறும் போது நானும் அதே போன்று கூறுகின்றேனா? அல்லது வீணாக பேசிக் கொண்டிருக்கிறேனா?
எந்த அளவு என் நாவை பேணுகிறேன்? குறிப்பாக புறம் பேசாமலிருக்கிறேனா?
தீமையான விஷயங்களைக் கேட்பதை விட்டும் என் காதுகளையும், தீயவைகளைப் பார்ப்பதை விட்டும் என் கண்களையும் காத்துக்கொள்கிறேனா?
நான் முஸலிமாக இருப்பதையொட்டி அல்லாஹ்வைப் புகழ்ந்தேனா? அல்லது நான் ஒரு நன்றி கெட்டவனா?
எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கின்றேனா? அவனிடமே உதவியும் தேடுகின்றேனா?
பிற முஸலிம்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக எப்போதாவது தனிமையில் பிரார்த்தனை செய்துள்ளேனா?
பெருமையடிக்காமல் அல்லாஹ்வுக்கென்று என்னைத் தாழ்த்திக் கொண்டேனா?
அல்லாஹ்வின் படைப்பினங்களைக் கூர்ந்து கவனித்து படிப்பினை பெற்றுள்ளேனா?
எனக்கேற்படும் சோதனைகளிலிருந்து விடுபட அல்லாஹ்விடத்தில் முறையிட்டு கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேனா?
எல்லா நேரத் தொழுகைகளையும் ஜமாஅத்தோடு தொழுகின்றேனா? எத்தனை முறை முன்வரிசையில் நிற்பதற்கு கவணம் செலுத்தியிருக்கிறேன்?
அல்-குர்ஆனை நிதானமாக எத்தனை முறை ஓதியிருக்கிறேன்? அதன் மொழி பெயர்ப்பை படித்து விளங்க முயற்சி செய்தேனா?
சுன்னத்தான தொழுகைகளைத் தொழுகின்றேனா? குறிப்பாக முன்பின் சுன்னத்துகள், வித்ர், ளுஹா போன்ற தொழுகைகளோடு எந்தளவு என் தொடர்பு இருக்கின்றது?
காலை-மாலை திக்ர்களைப் பேணி ஓதுகின்றேனா?
எல்லா அமல்களையும் இஹ்லாஸோடு செய்கின்றேனா? அல்லது உலக இலாபம் தான் என் நோக்கமா?
நயவஞ்சகத்திலிருந்து பாதுகாப்பு பெறும் பொருட்டு நான் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றேனா?
என் பெற்றோர்களோடு நல்ல முறையில் நடக்கின்றேனா? உறவினர்களோடு சேர்ந்து வாழ்கின்றேனா?
ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்கின்றேனா?
எவனாவது நோய் வாய்பட்டிருக்கும் நிலையில் நோய் விசாரிக்கச் சென்று நோய் நிவாரணத்திற்காக அந்நோயாளிக்கு பிரார்த்தனை செய்தேனா?
முஸ்லிம்கள் தாக்கப்படுகின்ற போதெல்லாம் அவர்களின் விடுதலைக்காக ஒரு சொட்டு கண்ணீராவது சிந்தியிருக்கிறேனா?
ஒவ்வொரு நாளும் தூங்கும் முன் என்னை நானே சுய பரிசோதனை செய்கின்றேனா?
சகோதர சகோதரிகளே! கொஞ்சம் நில்லுங்கள்!
இக்கேள்விகளை அடிக்கடி உங்கள் மனதில் ஓட விடுங்கள்! ஒவ்வொரு கேள்விக்கும் விடை காண முழு முயற்சி எடுங்கள்!
நம் அமல்களை ஏற்றுக்கொள்ள வல்லோனே போதுமானவன். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சந்தோஷமாயிரு!

அல்லாஹ்வின் நாமம் போற்றி…
சந்தோஷமாயிரு!!
- இறைவிசுவாசமும், நற்கருமங்களும் சிறந்த வாழ்க்கையின் சின்னங்கள். இரண்டையும் காலம் முழுவதும் கைவிடாதே!
- கல்வியைக் கைக்கொள், வாசிப்பை வளப்படுத்து. அது உன் கவளையைப் போக்கும்!
- பாவங்களுக்கு விடை கொடு, பாவமன்னிப்பைப் புதுப்பித்துக் கொள்.. அவை உன் வாழ்க்கைக்கு ஒளியூட்டும் ஊடகங்கள்!
- அல்குர்ஆனின் வரிகளை ஆழ்ந்து கவணி. இறைஞாபகம் இறுதி விரை தொடரட்டும்!
- மனிதர்களோடு மனம் மங்காது நடந்து கொள், உன் உள்ளம் அமைதி பெரும்!
- வீரத்தை உன் நெஞ்சிலே விதைத்துக் கொள், கோழைத்தனம் உன்னைக் கொடுமைப்படுத்த வேண்டாம். வீரம் உள்ளத்தை வளப்படுத்தும்!
- போட்டியும் பொறாமையும், நயவஞ்சகமும், நானென்ற அகங்காரமும் அகத்து நோய்கள். அவற்றை உள்ளத்திலிருந்து உறித்தெடுத்து விடு!
- காயம் தரும் கவளையும், வாழ்க்கையின் வசந்தங்களை சாகடிக்கும் அதிருப்தியும் களையப்பட வேண்டிய களைகள். பயன் தரும் செயல்களில் கவணம் கொள்!
- உனக்கு மேலே உள்ளவர்களை ஒரு போதும் பாராதே! உனக்குக் கீழே ஓராயிரம் பேருண்டு. அவர்களை நினைத்து அமைதி கொள்!
- கீழ்த்தர உணர்வுகளுக்கும், கெட்ட சிந்தனைகளுக்கும் இடம் கொடாதே. மோசமான கற்பனைகளை முளையிலேயே கிள்ளிவிடு!
- கோபப்படாதே! பொறுமையைக் கைக் கொள்! அந்தோ வாழ்க்கையின் இறுதி வினாடிகள் எம்மை அழைக்கின்றன!
- நீங்கும் செல்வத்தை நினைத்து நிம்மதியாயிரு! ஏழ்மை வந்துவிடும் என ஒருபோதும் அஞ்சாதே. அல்லாஹ்வின் மீது தவக்குல் வை!
- நீங்கும் பிரச்சினைகளுக்காய் நித்தமும் அழாதே! வாழ்க்கையின் வரம்புகளில் அவ்வப்போது முளைக்கும் துன்பங்களை துச்சமாய் மதி!
- வாழ்க்கையை எளிமையாக்கு! உலக வாழ்க்கையின் வசந்தங்களைத் தேடித் தேடி ஒருபோதும் அலையாதே. அது உன்னை சிறுமைப் படுத்தும்!
- படாடோபம் உன்னை பரிதவிக்க வைக்கும். உன் ஆன்மாவை அவதிக்குள்ளாக்கும்!
- கடந்த காலத்தை நீதியின் தராசில் நிறுத்துப்பார். உன்னை நீயே அறிந்து கொள்வாய்!
- கரைதட்டிய துன்பங்களோடு உன்னுடன் உறவாடும் அருட்கொடைகளை ஒப்பிட்டுப்பார். உன்வாழ்க்கையின் அஸ்தமனங்களை விட, விடியல்களே அதிகமாயிருக்கும்!
- உன்னை நோக்கி வந்த சொல்லம்புகளை ஓரங்கட்டு. அவை சொந்தக்காரனைத்தானே சென்றடையும். உன்னை அது ஒருபோதும் ஊனப்படுத்தமாட்டாது.
- உன் சிந்தனையைச் செழுமையாக்கு. அருளும், அறிவும், சீரும், சிறப்பும், வெற்றியும், வீரமும் உன் சிந்தனைக்கு விருந்தளிக்கட்டும்.
- யாரிடமிருந்தும் நன்றியை எதிர்பார்க்காதே! பகட்டுப் பாராட்டுக்கள் உன்னை ஊனப்படுத்த வேண்டாம். அல்லாஹ்வின் அருள் வேண்டியே அமல்களனைத்தும் ஆர்முடுகளாகட்டும்!
- நற்கருமங்களை நாற்படுத்தாதே. இன்றே செய்! நாளை என்பது நமக்கு வேண்டாம்!
- உன் தகுதிக்கேற்ப காரியம் கொள். உன் சாந்திக்கு பச்சைக் கொடிகாட்டும் சங்கதிகளில் சங்கமமாகு!
- அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப்பார். நன்றி செலுத்து. நன்றிமறவா நாட்டம் கொள்!
- அல்லாஹ் உனக்களந்த செல்வம், செழிப்பு, குடும்பம், குதூகழிப்பு, ஆரோக்கியம் அனைத்திலும் திருப்தி கொள்!
- அறிந்தோர், அறியாதோர் அனைவரோடும் அன்புடன் நட. அக்கம் பக்கத்து வீட்டாரை அரவனைத்து நட. ஏழைகளின் பக்கம் கொஞ்சமேனும் திரும்பிப்பார்.
உன் இருட்டு வாழ்க்கைக்கு விடை கொடு! அந்தோ சந்தோஷம் சங்கமமாகும் சமயம் உனை அழைக்கின்றது. நாளைய திங்கள் சந்தோஷக் கதிர்களோடு உதிக்கட்டும். அவை உன் கறுப்புப் பக்கத்தைத் துடைத்து வென்மையாக்கும்!!
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்பார்கள்! அஃதே பிறர் உள்ளத்தில் சந்தோஷத்தை விதை. உன் உள்ளத்தில் அது தனாய் ஊற்றெடுக்கும்!
உலகில் சந்தோஷத்தையும், நிம்மதியையும் படைக்க நாமும் புறப்படுவோமா? நிச்சயமாக வல்ல ரஹ்மான் நமக்குத் துணை நிற்பான் பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சிறிய பயணிகள், பெரிய பயணம்










பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சிறிய பயணிகள், பெரிய பயணம்










பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சிறிய பயணிகள், பெரிய பயணம்










பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சிறிய பயணிகள், பெரிய பயணம்










பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அல் quraan

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, January 18, 2010

செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறமுடியும் : அமெரிக்க விஞ்ஞானிகள்


செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறமுடியும் : அமெரிக்க விஞ்ஞானிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 17 சனவரி 2010, 09:09.47 மு.ப GMT ]



செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. இதற்கான ஆய்வில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது போன்ற ஆய்வுகளை ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் விஞ்ஞானிகளும் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறி அங்கு வாழ முடியும். அதுவும் இந்த ஆண்டு இறுதிக்குள் அது நடைபெற வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஹூஸ்டனில் உள்ள நாசா ஜான்சன் விண்வெளி மையத்தின் விண்வெளி உயிரியல் துறையின் தலைமை விஞ்ஞானி டேவிட் மெக்கேயின் தலைமையிலான குழுவினர் இதற்கான ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் சக்தி வாய்ந்த புதிய மைக்ராஸ்கோப்புகள் மற்றும் உபகரணங்கள் மூலம் எரிநட்சத்திர கற்களை பரிசோதனை செய்தனர்.

மேலும் அங்குள்ள பாறைகளையும் சோதித்து பார்த்தனர். இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் வாயுக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. எரிநட்சத்திர கற்களை சோதித்து பார்த்ததில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அங்கு ஐஸ்கட்டிகளால் ஆன குளிர்ந்த பாலைவனம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பூமியில் விழுவதற்கு முன்பு 3 எரிநட்சத்திர கற்களும் 10 லட்சம் ஆண்டுகள் சூரியனை சுற்றியபடியே இருந்துள்ளது. இதற்கிடையே செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் நுண்ணுயிர்கள் இருந்தது. எனவே, அங்கு உயிர்கள் வாழ முடியும் என்று கருதப்படுகிறது.
இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியும் என்று நாசாவிஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மரணம்!

மரணம்!
கருத்து வேறுபாடற்ற ஒரே தலைப்பு,
அது மரணம் என்பது மட்டுமே!
இரண்டாம் கருத்துக்கு இடம்பாடுள்ள விடயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளும் நாம்,
நிச்சயிக்கப்பட்ட அந்த நாளிகையை மறந்து விட்டோமா?
அல்லது உலக வாழ்க்கையும் சடவாதமும் நம்மை மறக்கடிக்கச் செய்து விட்டதா?
புரியாத புதிராய் நம் வாழ்க்கை நடை போட
நாட்டு நடப்புக்கள் நம் மண்டையை நரை போட
இரத்தக் களரிகள் இதயத்தைத் துளை போட
இங்கிதமற்ற வாழ்க்கை மட்டும் நமை இம்சைப் படுத்துகின்றது!
மனிதா நில்!
இன்றோ நாளையோ உன் உயிரின் கதை முடிந்து போகுமே!
இனிய பொழுதுகளும் சேர்ந்து போகுமே!
இல்லற வாழ்க்கையும் அதனோடே இனைந்து போகுமே!
உன் வாழ்க்கையின் வசந்தங்கள் எங்கே?
வாஞ்சை தந்த வனப்புக்கள் எங்கே?
மரணம் உனை அரவணைக்கு முன் முளங்காளிட்டு வணக்கம் செலுத்தியவன் கூட,
நீ கட்டையாய்க் கிடக்கும் போது பிணத்தை இன்னுமா புதைக்கவில்லை எனக் கூறி பின் தள்ளி நின்றுவிடுவான்.
நாட்டு நடப்புக்கள் நமக்கு பாடம் சொல்கின்றன. நாம் தான் மரணத்தை மறந்து விட்டோமே!
கட்டு நோட்டுக்களும் கடை வாசல்களும்,
காட்டு வாழ்க்கை போல் கசந்து விடு முன்னே உன் கடந்த காலத்தை அசை போடு!
மீதி வாழ்க்கையை நிறை போடு!
உன் உடலுக்காய்த் தொழும் நாள் வருமுன்
நீயே – உனக்காய்த் தொழுது கொள்!
உதிர்ந்து போகும் உன் வாழ்க்கையை நினைந்து
உன் உதிரா வாழ்க்கைக்காய் உனை வார்த்துக் கொள்!
நாளைய பொழுதுகள் நமக்காய் காத்துக் கிடக்கின்றன
அது – சுட்டெரிக்கும் சுடு நெருப்பா?
இல்லை சுவனத்தின் சுகந்தங்களா?
யாவும் அறிந்தோன் வல்லோன் ரஹ்மானே!!
உலக நெருப்பு நமக்குப் புதிதல்ல
உலகையே உருக்கிடும் நெருப்புத்தான் நமக்குப் புதிது!
உன் நிஜங்களை ஒரு முறை நிறுத்துக் கொள்!
போலிகளை அவ்வப்போது கலைந்து கொள்!
கடைசி நாளிகைகள் கண்சிமிட்டும் போது
கண்ணீர் மழைகளெல்லாம் அந்த நெருப்பை அனைக்கமாட்டா!
கபனும், கப்ரும் உனை அழைக்கு முன் மீண்டும் ஒரு முறை அழுது கொள்!
மலக்குல் மெளத்தும் வரும் முன்னே
மண்ணறை வாழ்க்கைதனைப் பெறு முன்னே
மன நிலை மாற்றி மறுமைக்காய் வாழ்க்கையை வரைவோமே!! பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அறிவியல் கேள்வி - பதில்கள்


[1]சூரிய, சந்திர கிரகணம் ஏன் ஏற்பகிறது? இதை வெறும் கண்ணால் பார்த்தால் கெடுதலா?
சூரிய கிரகணம் ! சூரியனுக்கு பூமிக்கும் இடையில் சந்திரன் வரும் பொழுது நிகழ்வது முழுவதுமான சூரிய கிரகணம் மிகவும் அரிதாக நடக்கும் ஒன்று கடந்த 1999ம் ஆண்டு பிரான்சில் முழு சூரிய கிரகணம் நடந்தது. அடுத்தது ஆகஸ்டு 1ம் தேதி (01.08.2008)

சந்திர கிரகணம் பூமியின் நிழல் சந்திரனில் விழுந்து ஏற்படுவது சூரியன் பூமி சந்திரன் இவையாகவும் ஒரே நேர்க்கோட்டிற்கும் வரும் பொழுது மட்டுமே ஏற்படும் சமீபத்திய சந்திர கிரகணம் பிப்ரவரி 21 2008ம் ஆண்டு நடந்தது. முழு சந்திர கிரகணம் அரிதாய் நடக்கும் ஒன்று. அடுத்த முழு சந்திர கிரகணம் டிசம்பர் 21, 2010ம் அன்று ஏற்படும்.

பொதுவாக கிரகணங்கள் ஓரு இடத்தில் பார்ப்பது போல் இன்னொரு இடத்தில் பார்க்க முடியாது உலக உருண்டையில் நாம் இருக்கும் பகுதியை பொறுத்து அதன் பகுதியோ அல்லது முழுவதுமாகவே பார்க்கலாம் 1999ம் ஆண்டு சூரிய கிரகணம் முழுவதுமாக தெரிந்தது பிரான்ஸில் என்பதை வைத்து புரிந்து கொள்ளவும். பொதுவாக கிரகணங்களை வெறும் கண்களால் காண்பது நல்லதல்ல, சென்னையில் பிர்லா கோளரங்கம் போன்ற அறிவியல் கூடங்களில் அதற்கான வசதிகள் உண்டு. வெற்று கண்களாளயோ, கருப்பு கண்ணாடிகளின் மூலமோ பார்ப்பது நல்லதல்ல.

[2]வெங்காயம் வெட்டும் பொழுது கண்ணீர் வருவதேன்?
வெங்காயத்தில் உள்ள ஒரு அமிலம் (ப்ரோப்பேன்தாயல் ஆக்ஸைடு) சுலபமாக ஆவியாகி கண்களை பாதித்து-அதன் பலன் கண்ணீர்.

[3]பறவைகள் மட்டும் எப்படி மின்சார கம்பியில்...?
ஒரு கம்பியில் அமர்ந்தால் பறவைகளுக்கு மட்டும் அல்ல நமக்கும் ஒன்றும் ஆகாது. மின்சாரம் பாய வேண்டுமானால் இரண்டு வகையான கம்பிகளையும் கொஞ்சமேனும் தொடவேண்டும்

[4]கப்பல், விமானம், போன்றவற்றில் பயணம் செய்யும் பொழுது சில பேருக்கு மட்டும் வாந்தி வருகிறதே ஏன்?
பயணத்தின் போது ஆடும் ஆட்டத்தினால் காதுகளுக்கு இருக்கும் பேலன்ஸ் மெக்கானிசம் (இதைப்பற்றி சின்ன கட்டுரையே வரையலாம்) தடைப்பட்டு, ஓரு வித குழப்பத்தில் வெளிவருவதுதான் தலை சுற்றல், வாந்தி
அலர்ஜியை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
அலர்ஜியை பொருத்தமட்டில் அது ஓன்றும் பாக்டீரியாவை போன்று உடம்பில் உருவாகி வரும் நோய் போன்றதல்ல பொதுவாக நம் உடம்பில் தற்காப்புக்காக இம்யுன் சிஸ்டம் (நோய் எதிர்ப்பு வகையறா) என்பது எல்லோருக்கும் உண்டு. சில நேரங்களில் சில வஸ்த்துக்களை நாம் விழுங்கும் போதே, தூசி போன்ற சமாச்சாரங்களை உடம்புக்குள் ஏதோ ஒரு வழியில் உள்ள போகும் போது இந்த இம்யுன் சிஸ்டம் குளறுபடி பண்ணி அலர்ஜி என்ட்ரி. இந்த வியாதிக்கு அலர்ஜி என பெயர் சூட்டியவ டாக்டர் க்ளெமன்ஸ் ப்செராய்ஹன். அலர்ஜி வருவது ஓவ்வொருவருக்கும் வேறு வேறு வகையில் வரும்.
ஒருத்தருக்கு முள்ளங்கி அலர்ஜி என்றால் இன்னொருவருக்கு கத்திரிக்காய். இது நமக்கு எந்த பொருளால் வருகிறது என்பதை தனிப்பட்ட ஒருவருக்கு ஆராய்ச்சி செய்து கண்டுப்பிடிப்பது என்பது சிரமமான விஷயமே. சில ஆண்டுகளுக்கு முன் இந்த அலர்ஜிக்கு காரணம் ஆராக்கிடோனிக் ஆஸிட் என்றும் கெமிக்கல் சமாச்சாரம்தான் என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்

[5]பிளைட்டின் (flight) கருப்பு பெட்டி எதற்கெல்லாம் பயன்படும் ?
பிளைட் டேட்டா ரிக்கார்டர் (flight data recorder) எனப்படும் பிளாக் பாக்ஸ் உண்மையில் ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள பொருள். எந்த ஒரு விமானமும் விபத்திற்குள்ளான பிறகு இந்த கருப்பு பாக்ஸை (ஆரஞ்சு பாக்ஸ்) தேடிப்பிடித்து அதில் கடைசியில் என்ன மாதிரியான வார்த்தைகள், சப்தங்கள் பதிவாயிருக்கின்றன என்பதை ஆராய்வார்கள், அதற்கு மட்டுமல்லாமல் முதலில் இயக்கி பார்க்கும் விமானங்களின் சேப்டி சம்பந்தப்பட்ட விபரங்களுக்கும் ஜெட் என்ஜீனின் செயல் திறன்களை பரிசோதிக்கவும் பயன்படுத்துகிறார்கள். எந்த மாதிரியான விபத்தாக இருந்தாலும் இந்த பெட்டி மட்டும் பிழைத்துக் கொள்ளும். ரொம்ப அரிதாக சில தகவல்கள்களில் சில குறைகள் நேரிடலாம், அதுவும் அந்த விபத்தின் தன்மையை பொறுத்து.

[6]நன்றாக சாப்பிட்டதும் ஒரு மாதிரி மந்த நிலை (தூக்கம்) வருவதேன்?
சாதாரணமாக தெரியும் நம் மூளை நாம் சுவாசிக்கும் காற்றில் 75% சதவீதக்கும் மேல் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்ளும், இரத்த ஓட்டத்தை பொறுத்தவரையிலும் கூட அப்படிதான். நீங்கள் நன்றாக சாப்பிட்டால் உடனே உங்கள் வயிறு உணவை செரிமானம் செய்ய இரத்த ஓட்டத்தையும் ஆக்ஸிஜனையும் பங்கு போட வரும் பொழுது, மூளை தனக்கு உரிய இரத்தம் வராமல் கொஞ்சம் ஸ்தம்பிக்க, மந்த நிலை ஆரம்பம். நம் உடம்பிலேயே மிகவும் பசி கொண்ட உறுப்பு மூளைதான். அதற்கு ஆக்ஸிஜனும், இரத்த ஓட்டமும் அதிகமாக வேணும்.

[7]இடி விழுந்து சாவு எப்படி?
நீங்கள் நினைப்பது போல் இடி என்பது ஓரு பெரிய கல் என்பது போன்றோ, அல்லது கனத்த இரும்பு துண்டு என்பது போலவோ, உள்ள விஷயம் அல்ல. மேகங்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான கிலோ வோல்ட் மின்சக்தி பூமியில் சில உயரமான பொருட்களுடம் ஸ்பார்க் அடிக்கும் அந்த மின்சாரம்தான் இடி, நீங்கள் காதில் இடிசத்தம் கேட்டது என்று சொல்வது, மின்னல் உருவாகும் சமயத்தில் வருகின்ற சத்தம் தான் அது. மின்சாரம் ஒன்று கூடி ஒரு இடத்தில் பயங்கரமான வோல்டேஜ் சக்தியுடன் தாக்குவதுதான் நம்மை காலி செய்யும் இடி .
பச்சைமரம் உட்பட எதுவும் இதன்மூலம் கருகிவிடும். உங்களுக்கு தெரிந்த ஒருவர் இவ்வகையில் இடிதாக்கி இறந்திருந்தால், அதை அவர் உணரும் முன்னே இறந்திருப்பார். அவ்வளவு சக்தி.

[8]மாரடைப்பு பற்றி. !?
பெரும்பாலும் ஆண்களுக்கு, அதிலும் ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு இந்த மாரடைப்புக்கான சாத்திய கூறுகள் அதிகம். இதயம் எல்லா பகுதிகளுக்கும் ரத்தம் சப்ளை செய்யும் குழாய்களை கரானரி ஆர்ட்டரிஸ் என்பார்கள், மொத்தம் இரண்டு குழாய்கள் உண்டு. இவைகளை அடைப்பு ஏற்படும் போதுதான் சிக்கல்.

மாரடைப்பு ஏற்பட காரணம் பல. அவைகளில் சில, அதிகம் அலட்டிக் கொள்ளும் போது, நிறைய சாப்பிட்டபின், ரொம்ப குளிர் அனுபவிக்கும் போது,மேற்சொன்னவைகளும் கூடி நின்றால் 90 சதவீதம் மாரடைப்புக்கு வாய்ப்பு. மாரடைப்பை உணரும் வகைகளில் சிலர் பொதுவாக மார்பின் நடுவில் வலி வரும், அதிகமாக வேர்க்கும், மூச்சு திணரும் ரத்தம் இல்லாமல் பல்ஸ் சடாரென்று குறைந்து நினைவிழக்கும், இப்படி சிலவற்றில் ஒன்றை உணர்ந்தால் கூட, அடுத்த ஓரு மணி நேரத்திற்குள் ஐ.சி.யு.வில் (இன்டன்சிவ் கேர் யூனிட் சேர்ந்தால்) பிழைத்துவிடலாம்.

[9]மலைபிரதேசங்களில் குளிர்ச்சியான க்ளைமேட் எப்படி வருகின்றது.?
சூரிய ஒளியை கடல் மட்டத்திற்கு சமமாக இருக்கும் அடர்த்தியான காற்று கிரகித்து நமக்கு தருவதால் கொஞ்சம் வெப்பம் அதிகம். மலைமேல் இருக்கின்ற அடர்த்திக் குறைந்த காற்றுமண்டலம் கிரகிக்க முடியாமல் சூரிய ஒளியின் வெப்பம் குறைந்து குளிர் தெரிகிறது.
ஓரு சின்ன பரிசோதனை இது. நீங்கள் மலை பிரதேசங்களுக்கு செல்லும் போது செய்து பாருங்கள். ஒரு காலி பிளாஸ்டிக் பாட்டிலை நன்றாக மூடி வைத்துக்கொள்ளுங்கள். மலையின் உச்சியை தொட்டபின் பாட்டிலின் அடைப்பட்டிருந்த காற்று மிகுந்த சத்தத்துடன் வெளியே வரும். பின்பு அதே பாட்டிலில் நன்றாக மூடி மலையை விட்டு கீழே இறங்கியவுடன் பாட்டிலை நன்றாக பாருங்கள் அது கண்டிப்பாக சிறுதளவாவது யாரோ கையால் பிடித்து நைத்தது போல் இருக்கும். காரணம் சமமட்டத்தில் இருக்கும் காற்று அடர்த்தியாக இருப்பதால் பாட்டில் உள்ளே இருக்கும் குறைந்த காற்றழுத்தத்தை சமன்படுத்த இந்த காற்று முயற்ச்சித்ததால் பாட்டில் நைத்து போயிருக்கும்.

[10]பூமிக்கும் வானத்துக்கும் எவ்வளவு தூரம்?
வானம் என்பது ஒர முடிவு அல்ல அது முடிவுறா வகையறா (infinte) நீங்கள் அண்ணாந்து பார்க்கும் வான வெளியில் தெரியும் எண்ணில் அடங்கா நட்சத்திரங்களுக்கு அப்பாலும் பல விஷயங்களை இருக்கின்றன நாமாக, நமக்கு மேலுள்ளதை வானம் என்று ஒரு பெயரிட்டிருக்கிறோம். அது ஒரு மனித அறிவுக்குள் அடங்கா பிரம்மாண்ட சமாச்சாரம்.
ஒளியின் வேகம் எவ்வளவு? இதைவிட வேகமாக செல்லக்கூடிய எதேனும் உண்டா?
மனிதன் கண்டுபிடித்த வரையில் ஒளியைவிட வேகமாக செல்லக்கூடிய ஒன்று அறிவியல் ரீதியாக எதுவுமில்லை (மனம் வேண்டுமானால் இதைவிட வேகமாக போகலாம் சந்திரனில் இருப்பது போல் நினைத்தால், 1 வினாடிக்கும் குறைவான நேரத்தில் நீங்கள் சந்திரனில் இருப்பீர்கள்) ஒளியின் வேகம் கொஞ்சநஞ்சமில்லை, ஒரு செகண்டுக்கு சுமார் 1,86,282 மைல்கள் (மணிக்கு அல்ல, கவனம் கொள்ளவும்) இன்னும் எளிமையான சொல்லவேண்டுமென்றால் பூமிலிருந்து 3,84,403 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் சந்திரனை ஒளியின் வேகத்தில் சென்றால் ஜஸ்ட் 1 1/3 செகண்டில் ‘டச்’ பண்ணிடலாம்.
ஒளியின் வேகம் ஒரு சாதாரண பரந்த அண்ட வெளியில் இருக்கும் அந்த வேகம் ஒரு கண்ணாடியிலோ காற்று நுளைந்த இடத்திலோ சென்றால் கொஞ்சம் குறைவு. சூரியனையும் தவிர்த்து அண்ட வெளியில் (milky ways - பால் வீதி) அறிவியல் உலகத்தில் தோராயமாக 200 முதல் 400 மில்லியன்கள் (3000 கோடிக்கும் மேல்) இருப்பதாக நம்புகிறார்கள். இவைகள் ஒவ்வொன்றுக்கும் உள்ள தூர அளவை கேட்டால் தலை விண்மீன்கள் சுற்றும். இவைகளின் தூரத்தை கிலோமீட்டர் கொண்டு அளந்தால் அவைகளை எண்களில் எழுதிப்பார்க்கும்பொழுது இன்னும் அதிகமாய் தலை சுற்றும் ஆகவேதான் அந்த தூரங்களை ஒளி ஒரு வருடத்திற்கு அதன் ராட்சஸ வேகத்தில் சென்றால் எவ்வளவு தூரமோ அதை ஒரு ஒளி ஆண்டு என்று அதன் மூலம் ஒவ்வொரு விண்மீன்களுக்கும் உள்ளதூரங்களை அளவிடுகிறார்கள்.
julian காலண்டர் (கிரிகோரியன் காலண்டர் என்பது நாம் கணக்கிடும் 365 நாள் கணக்கு) பிரகாரம் 365.25 நாட்களுக்கு ஒளி சென்றடையும் தூரம் 9460730472580 (என்னோட பேங்க் அக்கவுண்ட் நம்பர் இல்லை ) நம்ம கணக்கில் சொல்லவேண்டுமென்றால் ஒன்பது லட்சத்து நாற்பதாயிரத்து எழுபத்து மூனு கோடியே, நாலுலட்சத்து எழுபத்து இரண்டாயிரத்து ஐநூற்று எண்பது கிலோ மீட்டர்) நம் அண்ட வெளியில் இருக்கும் விண்மீன்கள் ஒவ்வொன்றும் இந்த மாதிரி ‘ஒளி ஆண்டு’ தூரங்களை வைத்து கணக்கிட்டால் அவையே பல ஆண்டுகள் சென்றால் தான் ஒன்றிலிருந்து ஒன்றை அடைய முடியும் இவையெல்லாம் கூட மனிதன் கண்டுபிடித்த தூரம் தான் இதற்கு மேலும் உண்டு என்பது அறிவியல் நம்பும் ஒன்று பூமிக்கு மிக அண்மையிலுள்ள விண்மீணான புரோக்சிமா செண்டோரி ( proxima centuri) 4:22 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

[11]பால் பொங்குவதற்கு என்ன காரணம் ?
ரொம்ப சிம்பிள். பாலை சூடாக்கும் பொழுது, பாலின் மேற்பரப்பில் ஆடை படர்ந்து, ஆவி மேற்கொண்டு செல்ல முடியாமல் ஆவி பாலை சட்டியின் மேலே கொண்டு வருகிறது.

போதைப் பொருட்களை விரும்பி சாப்பிடுகிறார்களே அவற்றில் அப்படி என்ன டேஸ்ட்?
போதைப் பொருட்களில் நாக்குக்கு சுவை தரக்கூடிய சுவையான வஸ்துக்கள் ஒன்றும் இல்லை. அவை போதை தருவது நரம்புகளுக்கு. எல்லாவகையான போதை வஸ்துக்களும் உட்கொண்டபின் அவை நம் நரம்பு மண்டலத்தின் சில சுகமான மந்த நிலையை தருவதால் அதை சிலர் நாடுகிறார்கள்.
சிறிய சுவை குறைவான உணவை வேண்டாம் என்று, சொல்பவர்கள் மதுப்பிரியராக இருந்தால் அவர் குடிக்கும் போதை திரவத்தை வாங்கி குறைந்த பட்சம் வாசனையானது பாருங்கள் இனி ஜென்மத்திற்கும் அந்த பாட்டிலை திரும்ப வாங்கி பார்க்க மாட்டீர்கள் போதை வஸ்துகள் பயன்படுத்தும் (பணக்காரர்கள் தவிர்த்து) எல்லோர்க்கும் ஒரு தகுந்த காரணம் வைத்திருப்பார்கள்., மனைவி தொந்தரவு ஆரம்பித்து கடன் பிரச்சனை வரை.

[12]அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் திட்டமிட்டு கண்டுபிடிக்கப்பட்டதா?
உலகில் உள்ள அனேக கண்டுபிடிப்புகள் திட்டமிடாதவைகள்தான். எதையேனும் கண்டுபிடித்தாக வேண்டும் என்பது போல் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வார்கள். அவ்வாறாக மேற்கொள்ளும் பொழுது அவர்கள் எதை குறி வைத்தார்களோ, அது கிடைக்காமல் வேறு ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பு நிகழும். அப்படி நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் ஏராளம்.
அலெக்ஸாண்டர் பிளமிங் பென்சிலின் கண்டுபிடித்தது அவரது உதவியாளர், பிளமிங்கின் மேஜையை சரியாக சுத்தப்படுத்தாமல் இருந்ததால்., எட்வர்ட் ஜென்னர் அம்மை நோய்க்கு எதிர்ப்பு சக்தி (vaccination) மருந்து கண்டுபிடித்ததும் இதே மாதிரியான ஒரு சம்பவத்தினால்தான். அதே வேளையில் மேலே சொன்னவர்கள் தங்களுடைய ஆராய்ச்சியில் இந்த மாதிரியான கண்டுபிடிப்புகள் ஒன்றை கண்டுபிடித்தாக வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். எடிசன் பல்பு உட்பட எல்லாவற்றையும் கண்டுபிடித்தாலும், அவரது பல படைப்புகள் வேறொன்றின் படைப்புகளுக்கிடையே கண்டுபிடித்ததுதான்.

[13]மரங்கள் அதிகமாக இருந்தால் மழை அதிகமா?
ஆமாம். மரங்கள் அடர்த்தியால் சுற்றுப்புறச் சூழல் உஷ்ணம் குறைந்திருக்கும். அதனால் வான்வெளி காற்றோட்டத்தில் மாற்றுவிளைவை ஏற்படுத்தி மேகக்கூட்டத்தை குளிர செய்து மழை ஆஜர். மழையின் வருகையால் மரங்கள் அதிகமாகி மழை பெய்து-இப்படியே ஒரு காலச்சக்கரம் நல்லவிதமாய் சுற்றும். மரம் அதிகமாக இருக்கும் இடத்தில் மழையின் தரிசனம் அதிகமே!

[14]விமானங்கள் அதிகப்பட்சம் எவ்வளவு வேகத்தில் போகுது?
உள் நாட்டுக்குள் பறக்கும் விமானங்கள் பொதுவில் மணிக்கு 600-800 கிலோமீட்டர் வேகத்தில் போகும். வியாபார ரீதியிலான ஜெட் விமானங்கள் மணிக்கு 900 கிலோமீட்டர் வேகம். 1969ல் ஆரம்பித்த கான்கார்டு விமானம் சும்மா ‘ஜிவ்’வுன்று பறப்பதில் எல்லா விமானத்திற்கும் அப்பன், மணிக்கு 2000 கிலோமீட்டருக்கு மேல், ஆனால் எரிப்பொருள் மிச்சம் ஆவதில்லை என்றதாலும், 2003ல் பாரீஸில் நடந்த ஒரு பெரிய விபத்தாலும் கான்கார்டை ஓரம் கட்டி மூடுவிழா நடத்திவிட்டார்கள். பொதுவில் விமானங்கள் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கும்.

[15]ராசி கற்களில் சக்தி ஏதும் உண்டா? அணிந்தால் அது கிடைக்கும். இது கிடைக்கும் என்கிறார்களே?
கற்கள் என்பது ஒரு வகை இறுகிய கரி. பூமிக்கடியில் பல ஆயிரம் ஆண்டுகளாக புகைந்த பல வஸ்துக்கள் பூமியின் வெப்பத்தினாலும், இன்னும் பிற சூழ்நிலைகளாலும் நன்றாக இறுகி, பெட்ரோல், ராசிகற்கள், தாதுக்கள் இப்படி பல பொருட்களாக கிடைக்கிறது. ராசி கற்கள்?!, கடைசியில் ஜோதிடர்கள் கையில் வந்து சேருகிறது. அவைகளில் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.
விஞ்ஞானத்திற்கு சோதனையின் மூலம் கிடைக்கும் சாட்சிகளும், ஆதாரங்களும் வேணும், இல்லையெனில் எதையும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். கற்கள் அணிந்தால் பரீட்சையில் பாஸாகி விடுவீர்கள் என்று சொல்லி அதை நீங்கள் மோதிரமாக மாட்டும் பொழுது உங்கள் மனதிற்கு ஒரு ‘தெம்பு’ வருது பாருங்கள். அதுதான் இங்கே முக்கியம். இந்த பாஸிடிவ் சிந்தனை வருவதற்கு அந்த கற்கள் உபயோகப் படலாம். அவ்வளவே, ஆனால் நன்றாக படிக்காமல் போனால் எந்த இராசி கற்களாலேயும் நம்மை காப்பாற்ற முடியாது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அறிந்தும் அறியாத அண்டார்க்டிகா கண்டம்

அறிந்தும் அறியாத அண்டார்க்டிகா கண்டம்

மூன்று மாதம் தூங்கி விழும்
துருவம் பூண்ட,
மூன்று மாதம்
கண்மூடா வெளிச்சம் கொண்ட
தென்கோடிக் கண்டம்,
இந்தியக் கண்டத்தின் தோழி!
பனிக்கண்டமாய்
தனிக்கண்டமாய்ப் பிரிவதற்கு முன்
தோளோடு தோள் சேர்ந்து
ஆஃபிரிக்கா, ஆஸ்திரேலியா,
தென் அமெரிக்கக் கண்டமுடன்
வேனிற் சோலையில்
விலங்கினம் உலாவிய
விந்தைக் கண்டம்!
'பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல யுகங்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஓர் ஒற்றைக் கண்டமாக இருந்தது! பல மில்லியன் ஆண்டுகள் கழித்து எப்படியோ அப்பெருங் கண்டம் உடைபட்டு, வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து மெதுவாய் நகர்ந்து தற்போதுள்ள இடங்களுக்கு அவை நிலப்பெயர்ச்சி ஆகியுள்ளன! பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crust] உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] ஊர்ந்து பெயர்ச்சி அடைகின்றன! கண்டங்களின் நிலப்பெயர்ச்சி நியதிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சி நிகழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பல கண்டங்களில் காணப்படும் நிலத்துவ விலங்கினம், தாவர இனத்தின் பூர்வப் படிவப் பதிவுச் சான்றுகள் [Fossil Records] உறுதி அளிக்கின்றன '.
ஆல்ஃபிரெட் வெஜினர், ஜெர்மன் பூதளவாதி (1880-1930)

முன்னுரை: 1885 ஆம் ஆண்டில் ஆஸ்டிரியன் பூதளவாதி எட்வெர்டு சூயஸ் [Eduard Suess (1831-1914)] கூறிய மகத்தான கருத்து: ஒரு காலத்தில் தென்பாதிக் கோளக் கண்டங்களான தென் அமெரிக்கா, ஆஃப்பிரிகா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்க்டிகா ஆகிய அனைத்தையும் இணைக்கும் நிலப்பாலங்கள் இருந்திருக்க வேண்டும். அந்த நாடுகளில் எல்லாம் பொதுவாகக் காணப்பட்ட பூர்வப் படிவச் செடி [Fossil Fern Glossopteris (Plant)] ஒன்றின் உறுதிப்பாட்டில், அவர் அவ்விதம் கூறினார். அந்தப் பெருங் கண்டத்திற்கு 'கோந்துவானா ' [Gondwana] என்று பெயரையும் வைத்தார்.
தென்பகுதியான கோந்துவான கண்டமும் வடபகுதியான லெளரேசியா கண்டமும் [Lauresia] சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே ஒற்றைப் பெருங்கண்டமான பங்கயாவிலிருந்து [Pangaea] பிரிந்ததாகப் பின்னால் ஜெர்மன் விஞ்ஞானி ஆல்ஃபிரெட் வெஜினர் கூறினார். வட பகுதியான லெளரேசியா கண்டத்தில் வட அமெரிக்கா, யுரேசியா [ஐரோப்பா+ஆசியா (இந்தியா தவிர)] இரண்டும் ஒன்றாக இருந்தன என்பது வெஜினர் கருத்து. முதலில் தோன்றிய ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு 'பங்கயா ' என்று பெயரிட்டவர், ஆல்ஃபிரெட் வெஜினர். கிரேக்க மொழியில் பங்கயா என்றால் 'எல்லாம் நிலம் ' என்று அர்த்தம்.

1820 இல் தென்கடலில் சீல் மீன்களின் தோல் கவசத்தைத் தேடிச் சென்ற கப்பல் மாலுமிகள் சிலர் எதிர்பாராமல் கண்டுபிடித்த தளப்பகுதியே, அண்டார்க்டிகா கண்டம்! பூமியில் ஐந்தாவது பெரிய கண்டமான அண்டார்க்டிகாவின் பெரும்பான்மையான தளப்பரப்பு சுமார் 6000 அடி முதல் 14,000 அடி தடிப்புள்ள பனித் தட்டுகளால் மூடப்பட்டுள்ளது! சுமார் 7 மில்லியன் கியூபிக் மைல் கொள்ளளவு கொண்ட பனித் திரட்சி கொண்டது! உலகின் 70% சுவைநீர்க் கொள்ளளவு அண்டார்க்டிகாவின் பனித் திரட்சியில் சேமித்து வைக்கப் பட்டுள்ளது. அப்பேரளவு பனிமலை ஒரு வேளை உருகினால், உலகின் கடல் மட்டம் 150 அடி-200 அடி உயரத்துக்கு ஏறி, ஆயிரக் கணக்கான கடற்கரைப் பிரதேசங்கள் மூழ்கி, பூகோளக் கடற் கொந்தளிப்பும், சூழ்வெளிச் சுற்றோட்டமும் பெருமளவில் பாதிக்கப்படும்!

அண்டார்க்டிகா கண்டத்தின் பூர்வீக வரலாறு
500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, காம்பிரியன் யுகத்தில் [Cambrian Era] அண்டார்க்டிகா கண்டம் பூமத்திய ரேகைப் பகுதியில் படுத்திருந்தது! பூமியின் உட்கருவில் கொந்தளிக்கும் திரவக் குழம்பின் மீது உலகக் கண்டங்கள் நகரும் போது, மெஸோசோவிக் யுகத்தில் [Mesozoic Era (65-250 மில்லியன் ஆண்டுகள்)] ஆஸ்திரேலியாவுடன் ஒட்டி யிருந்த அண்டார்க்டிகா கண்டம் தெற்கு நோக்கித் திசைமாறியது! அந்த யுகத்தில்தான் அநேக விலங்குகளும், சிலவித டைனோசார்ஸ்களும் வேனிற் தளமாய் இருந்த அண்டார்க்டிகாவில் நடமாடி வந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அண்டார்க்டிகா, ஆஸ்திரேலியாவை விட்டுப் பிரிந்து தென் துருவம் நோக்கிப் புலப்பெயர்ச்சி அடைந்தது.

நிரந்தரப் பனி மண்டலம் சூழ்ந்த அண்டார்க்டிகா கண்டம் தென்துருவப் பகுதியில் தற்போது தங்கியுள்ள ஒரு பனிக்கண்டம். உலகக் கண்டங்களில் ஐந்தாவது பெரிய அண்டார்க்டிகா அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் போல ஒன்றரை மடங்கு பெரியது! உலகிலே மிகப் பெரிய பாலை நிலத்தைக் கொண்டது அண்டார்க்டிகா! அதன் 98 சதவீதப் பரப்பில் பல்லாண்டுகள் உறைந்து போன பனித்தட்டுகளும், மீதி 2 சதவீதத்தில் மலட்டுப் பாறைகளும் கொண்டது. உலகின் மொத்தத் தொகையில் 90% அளவு பனிமண்டலம் அண்டார்க்டிகாவில்தான் சேமிப்பாகி உள்ளது. அண்டார்க்டிகாவின் தென் துருவம் உலகக் கண்டங்களிலே மிக்கப் பனிக்குளிரும், மிக்கப் பனிப்புயலும், மிக்க வரட்சியும் கொண்டது. இதுவரைப் பூமியில் குளிர் தணிந்து, 1983 இல் பதிவான அண்டார்க்டிகாவின் உஷ்ணம் -89 C (-128.6 F)! ஒவ்வொரு வருடத்திலும் அண்டார்க்டிகாவின் பெரும்பான்மையான பகுதிகளில் தெளிக்கப்படும் சராசரி பனித்தூவல் 2 அங்குலத்துக்கும் குறைவுதான்!

அண்டார்க்டிகாவைக் கண்டுபிடிப்பதில் இருவர் போட்டி
1820 இல் தென்கடலில் சீல் மீன்களின் தோல் கவசத்தைத் தேடிச் சென்ற கப்பல் மாலுமிகள் சிலர் எதிர்பாராமல் கண்டுபிடித்த தளப்பகுதியே, அண்டார்க்டிகா கண்டம்! வட துருவத்தில் 1909 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி அமெரிக்கத் தீரர் ராபர்ட் எட்வின் பியரி [Robert Edwin Peary (1856-1920)] முதன்முதலில் தடம் வைத்தார்! 1908 ஆண்டில் பிரிட்டாஷ் தேடுநர் குழுவின் தலைவனாய் இருந்த, ஐரிஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்னஸ்ட் ஷாக்கில்டன் [Ernest Shackleton] அண்டார்க்டிகாவில் கால்வைத்துத் தென் துருவத்தை நோக்கிச் செல்லும் போது உணவுப் பண்டம் பற்றாமல், எதிர்த்து வரும் குளிர்காலப் பனிப்புயலின் தாக்குதலைத் தாங்க வலுவின்றி 97 மைல் தூரம் வரை சென்று மீள வேண்டியதாயிற்று. தென் துருவத்தில் யார் முதலில் தடம் பதிப்பது என்று போட்டி யிட்டு இரண்டு தீரர்கள் முயன்றனர். முதல்வர்: நார்வே நாட்டைச் சேர்ந்த ரோவால்டு அமுன்ட்சென் [Roald Amundsen (1872-1928)] ஒரு கப்பல் உரிமையாளரின் மகன். புதிய பிரதேசங்களைத் தேடுவதில் பயிற்சி பெற்றுக் கப்பலோட்டுவதிலும் திறமை மிக்கவர். அவர்தான் முதன்முதலில் வடமேற்குப் பனிக்கடலில் கப்பல் பயணம் செய்து, வடதுருவத்தில் தடம் வைக்க முதலில் முயன்றவர். இரண்டாமவர்: இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஃபால்கன் ஸ்காட் [Robert Falcon Scott (1868-1912)].

ஒரு சில மாதங்களில் அடுத்து, அமுன்ட்சென்னும், ஸ்காட்டும் தமது வரலாற்று முக்கிய தென் துருவப் பயணங்களைத் துவங்கினார்கள். அவர்கள் இருவரும் முற்றிலும் வேறான பண்புகளைக் கொண்டவர்கள். ஸ்காட் மெலிந்த உடம்பும், கடுஞ்சினமும், கடிய உழைப்பும் கொண்டவர். தனது 42 வயதில் தென்துருவப் பயணத்தைத் துவங்கினார். அமுன்ட்சென் எளிமையும் நேர்மைப் போக்கும் உள்ளவர். வடதுருவம் தேடிச் சென்று ஆர்க்டிக் பிரதேசத்தில் மாண்டு போன பிரிட்டாஷ் தீரர் ஸர் ஜான் ஃபிராங்க்லின் [Sir John Frnaklin (1786-1847)] மீது, அமுன்ட்சென் சிறுவனாக இருந்த போது மதிப்பும் பெருமையும் கொண்டிருந்தார். மருத்துவப் படிப்பை 21 வயதில் விட்டுவிட்டு, வாழ்க்கையில் புதிய இடங்களைக் கண்டுபிடிக்கும் தேடுநராக விழைந்து பயிற்சியைப் பெற்றார். ஃபிரான்க்லினைப் பின்பற்றி ஆர்க்டிக் பகுதிக்குச் சென்று, சிரமங்களை அறிந்து வரத் தீர்மானித்து, சிறிது தூரம் பயணமும் செய்தார்.

இருவரிலும் நார்வேயின் வீரர் அமுன்ட்சென் தகுந்த, எடை குறைந்த சாதனங்களை எடுத்துச் சென்று வெகு திறமையாகத் தனது துருவப் பயணத்தைத் துவக்கினார். அமுன்ட்சென் வட துருவத்தில் தடம் வைக்க, கனடாவின் வடமேற்கு வழியில் [Northwest Passage] போகும் போது, எஸ்கிமோக்களுடன் பழகி அவர்கள் அணியும் தளர்ந்த தோலுடைகளை [Fur] உடுத்திப் பனி மண்டலத்தில் உலவிப் பயிற்சி எடுத்துக் கொண்டவர். காலில் பூட்டிய பனிச்சறுக்கிகள் எடை குன்றிதாய் இருந்ததால், வெகுநேரம் களைப்படையாமல் வழுக்கிச் செல்ல ஏதுவாய் இருந்தன. 1910 ஜூன் மாதம் முதல் தேதி ஸ்காட் குழுவினர் 'டெர்ரா நோவா ' (Terra Nova) என்னும் கப்பலில் 19 சைபீரியன் கோவேறு கழுதைகளை [Siberian Ponies] ஏற்றிக் கொண்டு இங்கிலாந்து லண்டனிலிருந்து நியூ ஸீலாந்துக்குப் புறப்பட்டார். ஸ்காட் தென் துருவம் செல்வதைக் கேள்விப்பட்டு, அமுன்ட்சென் வட துருவம் போகும் திட்டத்தை மாற்றி அவரும் தென் துருவப் போட்டியில் கலந்து கொண்டார். 1911 அக்டோபரில் அமுன்ட்சென் தென் அமெரிக்க முனையான ஹார்ன் [Cape Horn] வழியாக நான்கு உதவி ஆட்கள், 52 கிரீன்லாந்து நாய்களை ஏற்றிக் கொண்டு அண்டார்க்டிக் கடலை அணுகத் தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தார்.

ஸ்காட் அக்டோபரில் (1911) நியூ ஸிலாந்து வந்து சேர்ந்தார். அண்டார்க்டிக் பயணத்தில் ஸ்காட்டின் சைபீரியன் கழுதைகள் இரு மடங்குப் பொதி சுமந்ததால் பனிப்புயலில் இழுத்துச் செல்ல வெகு சிரமப்பட்டன. ஆனால் கிரீன்லாந்து பனியில் பழக்கப் பட்ட அமுன்ட்சென் நாய்கள், வெகு விரைவாக குறைந்த பளுவை இழுத்துச் சென்று, முதல் நான்கு நாட்களில் சுமார் 90 மைல்கள் கடந்தன! அமுன்ட்சென் துருவ முயற்சியில் வெற்றி பெற்று 1911 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி நார்வே தேசக் கொடியை, முதன் முதல் தென் துருவத்தில் நாட்டினார். ஸ்காட் ஒரு மாதம் கழித்து பின்புதான் 1912 ஜனவரி 17 இல் தென் துருவத்தை அடைந்தார். நார்வேயின் கொடியையும், அவருக்கு முன் வந்தடைந்த அமுன்ட்சென் ஸ்காட்டுக்கு விட்டுச் சென்ற கடிதத்தையும் கண்டு, ஸ்காட் பெருத்த ஏமாற்றம் அடைந்தார். இறுதியில் திரும்பும் போது பனிப்புயலில் அவரும் அவரது குழுவினரும் சிக்கி மாண்டு போயினர். எட்டு மாதங்கள் கழித்து அவரகளது உடல்கள் காணப்பட்டு மீட்கப் பட்டன!

அண்டார்க்டிகா கண்டத்தின் இயற்கை அமைப்பு
தென்னமெரிக்காவின் தென்கோடி ஹாரன் முனையிலிருந்து சுமார் 600 மைல் தூரத்தில் அண்டார்க்டிகாவின் நீட்சித்தள [Antarctica Peninsula] முனை உள்ளது. பூமியில் ஐந்தாவது பெரிய கண்டமான அண்டார்க்டிகாவின் பெரும்பான்மையான தளப்பரப்பு சுமார் 6000 அடி முதல் 14,000 அடி தடிப்புள்ள பனித் தட்டுகளால் மூடப்பட்டுள்ளது! சுமார் 7 மில்லியன் கியூபிக் மைல் கொள்ளளவு கொண்ட பனித் திரட்சியைக் கொண்டது! அப்பேரளவு பனிமலை ஒரு வேளை உருகினால், உலகின் கடல் மட்டம் 150 அடி-200 அடி உயரத்துக்கு ஏறி, ஆயிரக் கணக்கான கடற்கரைப் பிரதேசங்கள் மூழ்கி, பூகோளக் கடற் கொந்தளிப்பும், சூழ்வெளிச் சுற்றோட்டமும் பெருமளவில் பாதிக்கப்படும்! உலகின் 70% சுவைநீர் கொள்ளளவு அண்டார்க்டிகாவின் பனித் திரட்சியில் சேமித்து வைக்கப் பட்டுள்ளது. ரஷ்யாவின் ஃபான் பெல்லிங்ஸாசன் [Von Belling shausen (1778-1852)], பிரிட்டனின் எட்வெர்டு பிரான்ஸ்பீல்டு [Edward Bransfield (1795-1852)], அமெரிக்கன் நாதனீல் பால்மர் [Nathenel Palmer (1799-1877)] ஆகியோர் மூவரும் 1820 ஆம் ஆண்டில் அண்டார்க்டிகா கண்டத்தை முதன்முதலில் கண்டதாகக் கூறுகிறார்கள். அதன் நிலப்பரப்பு 5.5 மில்லியன் சதுர மைல் [14.2 மில்லியன் சதுர கி.மீடர்] விரிந்தது.

கிழக்கு, மேற்கு அண்டார்க்டிகா பகுதிகள் 1900 மைல் [3000 கி.மீடர்] நீளமுள்ள குறுக்கு அண்டார்க்டிக் மலைத் தொடரால் [Transantarctic Mountains] பிரிக்கப் படுகின்றன. உலகக் கண்டங்களில் கடல் மட்டத்தளம் சராசரி 6000 அடி உயர்ந்த அண்டார்க்டிக் பிரதேசம் போன்று பூமியில் வேறு எதுவும் கிடையாது! பனிச் சிகரத்தைத் துளைத்தெழுந்த மலைச் சிகரம் சுமார் 15,000 அடி உயரமுள்ளது!
1900 ஆண்டுகளில் பன்னாட்டுத் தேடுநர்களால் அண்டார்க்டிக் கண்டத்தின் உட்பகுதிகளும், அதைச் சுற்றி யிருக்கும் கடல்களும் விளக்கமாக அறியப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஏழு நாடுகள் புகுந்து, குடியாக்கிரமிப்பு ஆட்சியை [Colonial Claim] அண்டார்க்டிகாவில் துவங்கின. அகில உலக பூதளப் பெளதிக ஆண்டில் [International Geophysical Year (1957-58)] 12 நாடுகள், 50 குடியேற்ற தளங்களை ஆக்கிரமித்து, கூட்டாய்வு நிலையங்களை நிறுவகம் செய்தன. 1991 ஆண்டு ஒப்பந்தப்படி தாது உலோகங்கள் தேடும் திட்டங்கள் [Mineral Exploitation] இன்னும் 50 ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டன.

அண்டார்க்டிகாவைப் பற்றித் தேடுநர் திரட்டியுள்ள பூதள விபரங்கள் மிக மிகக் குறைந்தவை. கிரஹாம் களம், விக்டோரியா களம் [Graham Land, Victoria Land] ஆகிய இரண்டையும் தவிர மற்ற களங்களின் பூதள விபரங்கள் இன்னும் அறியப் படாமலே இருக்கின்றன. உட்தளப் பகுதிகள் மீது நிரந்தரமாக தடித்த பனிப் போர்வை மூடி இருப்பதால், இந்த யுகத்தில் அவற்றின் தளப்பண்புகள் யாவும் ஆராயப்படப் போவதில்லை! 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த காம்பிரியன் யுகத்துப் [Cambrian Era] பூர்வீகப் படிவங்கள், புராதனத் தேக்கப் புழுதிகள் [Fossils & Sediments] அண்டார்க்டிக் கண்டத்தின் தென்பகுதியில் கிடக்கின்றன. கிரஹாம் களத்தில் மெஸோசோவிக் யுகத்தின் ஜுராஸ்ஸிக் தாவரப் [Mesozoic Age Jurassic Flora] பூர்வப் படிவங்கள் காணப்படுகின்றன.
இsc0522051h.jpg

அண்டார்க்டிக்காவில் காணப்படும் பறவைகள், விலங்கினங்கள்
பிரம்மாண்டமான பனி மண்டலம் கொண்ட அண்டார்க்டிகாவில், கடும்பனியைத் தாங்கிக் கொள்ளும் ஆதிவாசி விலங்கினமும், தாவரச் செடிகளும்தான் [Primitive Indigenous Animals & Plants] பிழைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றன. கண்டத்தின் பூதளப் பரப்பு வெற்று நிலமாயினும், சுற்றியுள்ள கடலில் பலவிதப் பாலூட்டிகள் [Mammals], திமிங்கலம், சீல் மீனினம் போன்ற நீரினப் பிறவிகள் மிகவும் செழிப்பாக விருத்தியாகின்றன. நீரில் மிதந்து நீந்தும் இம்மி ஜந்துகள் [Microscopic Plankton] மற்றும் மாபெரும் திமிங்கலம் போன்றவை அண்டார்க்டிகா கடலில் காணப்படுகின்றன. ரோமத் தோல் கொண்ட [Fur] பாலூட்டியான பல்வகை சீல் நீந்திகள் [Elephant Seal, Leopard Seal, Ross Seal, Weddell Seal, Fur Seal, Crabeater Seal] அண்டார்க்டிகாவில் காணப்படுகின்றன.

அண்டார்க்டிகாவில் வாழும் பறவை இனத்தைச் சேர்ந்த பெங்குவின் புள்ளினங்கள் பறக்க முடியாமல் இருந்தாலும், நீரில் நீந்தும் திறமை பெற்றவை! பதினேழு வகையான பெங்குவின் புள்ளினங்கள் அங்கு வசிக்கின்றன. பெரும்பான்மையான காலம் அவை கடலில் மீன் பிடித்து உயிர் வாழ்கின்றன. அவற்றின் இறகுகள் தாமரை இலைபோல் தண்ணீர் ஒட்டாத தன்மை கொண்டு, மினுமினுப்பான ஒளியைக் கொண்டவை. உடலில் அவ்விதம் நீர் ஒட்டாததால், பெங்குவின்கள் தமது தோலை எப்போதும் வரட்சியாக வைத்துக் கொள்ள முடிகிறது. எல்லாப் பறவைகளையும் விட எண்ணிக்கை மிக்க இறகுகளை [ஒரு சதுர அங்குலத்தில் 70 இறகுகள்] பெங்குவின்கள் கொண்டவை. ஒவ்வோர் ஆண்டிலும் அவற்றின் பழைய இறகுகள் விழுந்து, புதிய இறகுகள் முளைக்கின்றன. எல்லா வகையிலும் பெரியதான ராஜாப் பெங்குவின் [Emperor Penguin] உயரம்: 3.7 அடி [1.1 மீடர்]. எடை: 65 பவுண்டு [30 கி.கிராம்]. எல்லா வகைப் பெங்குவின்களும் பெருத்த சிரசும், குறுகிய தடித்த கழுத்தும் கொண்டவை. அழகிய வளைவுகள் கொண்டு வழுக்கி விரைவாகப் பாய்ந்து நீந்துவதற்கு எளிதாக உதவும் படர்ந்த கால்களும் சிறகு போல் தள்ளும் இரட்டை விலாத் துடுப்புகளும் பெற்றவை.

அண்டார்க்டிக்காவில் காணப்படும் பூர்வப் படிவ மாதிரிகள்
தென்துருவப் பகுதியில் இப்போது இருக்கும் அண்டார்க்டிகா கண்டம், 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, காம்பிரியன் யுகத்தில் (Cambrian Era) பூமத்திய ரேகை அரங்கில் வேனிற்தளமாக இருந்து, பின்னால் அங்கிருந்து மெதுவாக ஊர்ந்து தெற்கு நோக்கி வந்தது! வெப்ப பூமியாக இருந்த காலங்களில் டைனசார்ஸ் போன்ற பலவித நிலத்துவ விலங்குகளுக்கு இருப்பிடமாக இருந்தது. இப்போது அவ்விதப் பூர்வீக விலங்கினங்கள் யாவும் மாய்ந்து போய், அவற்றின் பூர்வப் படிவ மாதிரிகள் மட்டும் புதைந்து கிடக்கின்றன. 2003 ஆம் ஆண்டு இறுதியில் ஜேம்ஸ் மார்டின் குழுவினர் ஜேம்ஸ் ராஸ் தீவில் இறைச்சி தின்னும் டைனசார்ஸ் [Theropad] பூர்வ படிவ எலும்புகளைக் காண்டார்கள். ஆறு அல்லது எட்டடி நீளமுள்ள அந்த டைனசார்ஸ் மெஸோசோயிக் யுகத்தின் இறுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்தது. 1994 இல் ஹாம்மர் குழுவினர் 20 அடி நீளமுள்ள, இறைச்சி தின்னும் ஜுராஸ்ஸிக் யுகத்தின் டைனசார்ஸ் [Theropad] ஒன்றின் எலும்புகளைக் கண்டார்கள்.

வில்லியம் ஹாம்மர் குழுவினர் 30 அடி நீளமுள்ள தாவரம் உண்ணும் டைனசார்ஸ் [Sauropad] ஒன்றின் 10 அடி அகண்ட இடை எலும்புகளை 2003 ஆம் ஆண்டு இறுதியில் கண்டார்கள். அது ஜுராஸ்ஸிக் யுகத்தில் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நிலத்து விலங்கினம். தென் டகோடா பூதளக் காட்சி சாலையைச் சேர்ந்த ஜிம் மார்டின், வேகா-சிமோர் தீவுகளில் தாவரம் உண்ணும் டைனசார்ஸின் [Hadrosaur] பூர்வ படிவ எலும்புகளைக் கண்டார்கள். 1991 இல் மில்நர் குழுவினர் வேகா தீவில் தாவரம் தின்னும் டைனசார்ஸ் [Ornithopad] ஒன்றின் பூர்வ படிவத்தைப் பார்த்தார்கள். ஆலிவர் குழுவினர் ஜேம்ஸ் ராஸ் தீவில் 1986 ஆம் ஆண்டில் தாவரம் புசிக்கும் டைனசார்ஸ் [Cretaceous Period Dinosaurs] ஒன்றின் எலும்புக் கூட்டைக் கண்டார்கள். இதுவே முதன் முதலில் அண்டார்க்டிகாவில் கண்டுபிடிக்கப் பட்ட டைனோசார்ஸ்.

25 மைல் அகண்ட, ஆழமான அடித்தட்டுப் பழுது [Deep Crustal Fault] இருப்பினும், எரிமலைகளே இதுவரை எழாத ஓர் அதிசயக் கண்டம், அண்டார்க்டிகா! அண்டார்க்டிகா குறுக்கு மலைத்தொடரில் இதுவரை எரிமலைகளே உண்டான தில்லை! ஆஃபிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா, இந்தியா, ஆகிய முற்கால ஒட்டுக் கண்டங்களில் காணப்படும் பூர்வப் படிவ மரங்கள் [Glossopteris], நிலத்தில் ஊர்ந்திடும் விலங்கினம் [Lystrosaurus] அண்டார்க்டிகாவிலும் காணப்படுகின்றன. விஞ்ஞான ஆய்வாளர்கள் அண்டார்க்டிகா கண்டத்திற்கு விஜயம் செய்தாலும், பனிப்புயல்களும், பனிப் பொழிவுகளும் மிகையாகி மித மிஞ்சியக் குளிர்ப் பிரதேசமாக இருப்பதால் நிரந்தரமான மனிதக் குடியேற்ற இல்லங்கள் எவையும் அங்கு கிடையா. வேனிற் காலத்தில் சுற்றுலா புரிந்து வந்து போகும் மாந்தர் [Seasonal Visitors] ஆண்டுக்கு சுமார் 4000 பேர் என்று கணக்கிடப் பட்டுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF