Wednesday, February 2, 2011

இன்றய செய்திகள்02/02/2011


ஆரோக்கியமான நிலையில் இருந்த 100 நாய்களைக் கொலை செய்த கனேடியக் கம்பனி! அதிர்ச்சித் தகவல் அம்பலம்.

பனிப் பிரதேசங்கள் ஊடாக பொருட்களை இழுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் ஆரோக்கியமான நிலையில் உள்ள 100 நாய்களை பிரிட்டிஷ் கொலம்பியா கம்பனியொன்று கொலை செய்ததாக வெளியான தகவல்கள் குறித்து பிரிட்டிஷ் கொலம்பியா அதிகாரிகளும் சமஷ்டிப் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

இந்தக் கம்பனியின் வர்த்தகத்தில் மந்த நிலை ஏற்பட்டதாலும்,இந்த நாய்களைப் பராமரிக்க வேறு இடங்கள் கிடைக்காமல் போனதுமே இந்த நாய்கள் கொல்லப்படுவதற்குக் காரணங்கள் என்று தெரியவந்துள்ளது. 

இது சம்பந்தமாக விசாரணைக் கோவையொன்று தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊர்ஜிதம் செய்தனர். இந்தக் கம்பனியின் உத்தரவின் பேரில் பல நாய்களைக் கொன்ற ஒரு ஊழியர் அதனால் தனக்கு மன அழுத்தங்கள் ஏற்பட்டதாகக் கூறி முறைப்பாடு செய்துள்ளார். 

அதனைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு ஏப்பிரல் மாதத்தில் மூன்று தினங்களில் இந்த நாய்கள் கொல்லப்பட்டுள்ளன. பல நாய்கள் சுட்டுக் 
துப்பாக்கித் தோட்டாக்கள் தீர்ந்து போன நிலையில் கத்தியால் குத்தப்பட்டும் இன்னும் பல கொடிய முறைகளைக் கையாண்டும் இவை கொல்லப்பட்டுள்ளன. 

இந்த நாய்களுள் பல புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாரிய புதைகுழிகளும் தோண்டப்படவுள்ளன. இந்த சம்பவம் பற்றிய முழு அளவிலான விசாரணைகளுக்கு அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்கொல்லப்பட்டுள்ளன.


பெருவெடிப்புச் சோதனைக் இயந்திர விரிவாக்கல் நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு.
கேர்ன் பெருவெடிப்புச் சோதனை இயந்திர விரிவாக்கல் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆய்வு வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டால் இந்த பிரபஞ்ச உருவாக்கம் தொடர்பில் பல கேள்விகளுக்கு விடை காண முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரு வெடிப்புச் சோதனை இயந்திரத்தை நீண்ட காலத்திற்கு இயங்காமல் இருக்கச் செய்து பின்னர் முழு வீச்சில் ஆய்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், பின்னர் இந்தத் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் 2013ம் ஆண்டு இயந்திரத்தின் மேம்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

கிருமி நாசினிகளாக எறும்புகளை பயன்படுத்த முடியும் : ஆய்வு.
கிருமி நாசினியாக எறும்புகளை பயன்படுத்த முடியும் என அண்மைய ஆய்வுத் தகவல் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகளினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்;கப்படுகிறது.
பயிர்ச் செய்கையை அதிகமாகத் தாக்கும் கிருமி நாசினிகளை குறித்த வகை எரும்புகள் இல்லாதொழிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தென் அமெரிக்காவில் காணப்படும் விசேட சிகப்பு எறும்புகளை கிருமி நாசினிகளாக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐவரி கோஸ்டிலிருந்து கொக்கோவை இறக்குமதி செய்யாவிட்டால் விவசாயிகளே பாதிக்கப்படுவர் : நெஸ்ட்லே.
சர்ச்சைக்குரிய ஐவரி கோஸ்ட் நாட்டிலிருந்து கொக்கோவை இறக்குமதி செய்யாவிட்டால் விவசாயிகளே பாதிக்கப்படுவர் என உலக உணவுப் பொருள் உற்பத்தி ஜாம்பவான்களாக நெஸ்ட்லே தெரிவித்துள்ளது.
ஐவரி கோஸ்ட் நாட்டிலிருந்து தமது நிறுவனம் கொக்கோவை இறக்குமதி செய்வதில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி கபாக்பூவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் கொக்கோ இறக்குமதியை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொக்கோவை இறக்குமதி செய்யாமல் நிறுத்துவதன் மூலம் ஜனாதிபதி கபாக்பூவை விடவும், அப்பாவி ஆபிரிக்க விவசாயிகள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துனிசியாவிற்கு கண்ணீர் புகை குண்டு ஏற்றுமதி: பிரான்ஸ் ஒப்புதல்.
பென் அலியின் ஆட்சி கவிழ்வதற்கு 2 நாட்கள் முன்பாக துனிஷியாவிற்கு கண்ணீர் புகை குண்டுகள் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்ததாக பிரான்ஸ் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
துனிஷியாவில் அதிபர் பென் அலியின் ஆட்சி அணுகு முறையால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ம் திகதியன்று, ஆட்சிக்கு எதிராக போராட்டத்தை துவக்கினார்கள். மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு, பென் அலி ராணுவ நடவடிக்கைகளை மேற் கொண்டார்.
அரசு மேற்கொண்ட படை பிரயோகத்தில் 147 மக்கள் கொல்லப்பட்டதாகவும், 500 பேர் காயம் அடைந்தததாகவும் துனிஷியாவில் உள்ள ஐ.நா மனித உரிமைக் குழுவின் தலைவர் பாக்ரே வாலி நியாயே தெரிவித்தார்.
துனிஷியாவின் முந்தய காலனி ஆட்சியாளரான பிரான்ஸ், பென் அலி ஆட்சி கவிழ்வதற்கு 2 நாட்கள் முன்பாக அந்நாட்டிற்கு கண்ணீர் புகை குண்டுகளை ஏற்றுமதி செய்தது என பிரான்ஸ் பிரதமர் பிரான்கய்ஸ் பிலியான் ஒப்புக் கொண்டார்.
துனிஷிய நிலவரத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டதாக, கடந்த வாரம் பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி தெரிவித்திருந்தார். துனிஷியாவின் மக்கள் போராட்டம் வெடித்ததை தொடர்ந்து அந்நாட்டில் இருந்த தனது தூதரை பிரான்ஸ் திரும்ப அழைத்தது. மக்களின் போராட்டத்தை எதிர் கொள்ள முடியாத பென் அலி சவுதி அரேபியாவில் அடைக்கலம் தேடியுள்ளார்.
அலி நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து துனிஷியா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. செவ்வாய் கிழமையன்று பாரிஸ் அருகே, அலிக்கு சொந்தமான குண்டு எறியும் ஜெட்டை பிரான்ஸ் பறிமுதல் செய்தது.
27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், பென் அலியின் சொத்துகளை முடக்க முடிவு எடுத்த திகத்திற்கு மறுநாள் இந்நடவடிக்கையை பிரான்ஸ் மேற்கொண்டது.

இருதய ஆராய்ச்சிக்கு மீன்: பிரிட்டன் ஆய்வாளர்கள் சாதனை.
பிரிட்டனில் 750, 000 பேரைப் பாதிக்கும் இருதய நோயைக் குணப்படுத்த பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.
இருதயத் தசைகளில் ஏற்படும் பிரச்சினையே இருதயக் கோளாருக்கும், மாரடைப்புக்கும் பெரும்பாலும் காரணமாக அமைகின்றது. பிரிட்டனிலும் இதே நிலை தான்.
செப்ராபிஷ் எனப்படும் ஒரு வகை நன்னீர் மீன் இனத்தைப் பயன்படுத்தி இருதய நோயைக் குணப்படுத்துவது பற்றியே தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. தனது இருதய தசைகளை தானாகவே சீர் செய்து கொள்ளும் ஆற்றல் இந்த மீன் இனத்துக்கு உண்டு.

மனிதர்களையும் இதே நிலைக்குக் கொண்டு வருவது தான் இந்த ஆராய்ச்சியின் இறுதி நோக்கம். பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் கடந்த 50 வருடங்களாக இருதய நோய்களை கண்டுபிடிப்பதிலும், குணப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றது. ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு இருதயம் பழுதடைந்தால் அதை எப்படி குணப்படுத்துவது என்பது தான் ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது, என்று இந்த நிறுவனத்தின் மருத்துவப் பணிப்பாளர் பேராசிரியர் பீட்டர் வெஸ்பேர்க் கூறினார்.

விஞ்ஞான ரீதியாக பழுதடைந்த இருதயத்தைத் திருத்துவதென்பது முடியாத ஒரு காரியமல்ல. கை, கால்கள் உடைந்தால் திருத்துவது போல் தான் இதுவும். ஆனால் அடுத்த 10 வருடத்துக்குள் இந்த ஆய்வுகளை மேற்கொள்ள 50 மில்லியன் பவுண் தேவைப்படும் இதுதான் பிரச்சினை என்று விளக்கமளிக்கின்றார் பேராசிரியர் பீட்டர் வெஸ்பேர்க்.

செப்ராபிஷ் மீன் இனம் முழு அளவில் செயற்படும் சிறிய இதயத்தைக் கொண்டது. எனவே பழுதடைந்த இதயங்களைச் சீர் செய்யும் ஆய்வுகளுக்கு இவை பெரும் துணையாக இருக்கும் என்று இவர் மேலும் கூறினார்.

அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அதிபர் முபாரக்.
கடந்த 30 ஆண்டுகளாக எகிப்தில் ஆட்சி செய்து வரும் ஹோஸ்னி முபாரக்கின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த மக்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தலைநகர் கொய்ரோவில் உள்ள சதுக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு முற்றுகையிட்டதை தொடர்ந்து, அதிபர் முபாரக் மக்களின் போராட்டத்திற்கு பணிந்தார். தற்போதைய ஆட்சி காலம் வரை இருப்பதாகவும், அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.
பொருளாதார சீர்குலைவு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் நாடு வீழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டதை தொடர்ந்து முபாரக் பதவி விலக வேண்டும் என மக்கள் கொந்தளிப்பு தீவிரமடைந்தது.
சர்வதேச அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவரான முகமது எல்பராடே மக்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். அல் அரேபியா டெலிவிஷனுக்கு அவர் அளித்த பேட்டியில், முபாரக் பதவி விலகாமல் நீடிப்பது நாட்டின் நிலைமையை குலைக்கும் என்றார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், முபாரக்கிற்கு தொலைபேசியில் பேசியுள்ளதாகவும், எகிப்தில் உரிய மாற்றம் மேற்கொள்வதே அர்த்தம் உள்ளதாக இருக்கும் என தெரிவித்தேன் என்றார்.

அடர்ந்த காட்டுக்குள் அடையாளம் காணப்படாத மனித இனம்!

உடம்பெல்லாம் ஏதோ வர்ணம் பூசிய நிலையில் பிறேஸிலின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இன்னும் அடையாளம் காணப்படாத மனித குலத்தின் ஒரு இனம் வாழ்வது தெரியவந்துள்ளது. 

பராகுவே, பபுவாநியுகினி, அந்தமான் தீவுகள் என்பனவற்றில் இதற்கு முன் அடையாளம் காணப்பட்டது போலவே இவர்களும் இந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள மனித வர்க்கத்தில் இருந்து துண்டிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். 

இவர்கள் வாழும் காட்டுப்பகுதி ஈரழிப்பான ஒரு பிரதேசமாகும். இவர்கள் கத்தி மற்றும் உலோகத்தினாலான 
செவ்விந்தியர்கள் என நம்பப்படும் 50 முதல் 100 பேர் கொண்ட ஒரு கூட்டம் இங்கு வாழுகின்றது. பெரு நாட்டுக்கும் பிறேஸில் நாட்டுக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியிலேயே இவர்கள் வாழும் இடம் அமைந்துள்ளது. 

இவர்களின் வழித் தோன்றல்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு வாழ்ந்து வந்திருக்கலாம் என்றும்,வெளி உலகோடு தொடர்பற்ற நிலையில் இவர்கள் வாழ்ந்து வருவதால் பலர் நோய்களால் மரணித்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
கூரிய ஆயுதங்களை வைத்துள்ளனர்.

இவர்கள் பற்றிய விவரணமொன்று வியாழக்கிழமை பிபிஸி யில் ஒளிபரப்பாகவுள்ளது. இவர்கள் வாழும் சூழல் இயற்கை வளம் கொண்டதாகவும், பழங்கள் மற்றும் மரக்கறி வகைககள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றன.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, February 1, 2011

கொசுத்தொல்லையிலிருந்து விடுபட: Anti Mosquito(புதிய மென்பொருள்)

கொசுக்களை அழிக்க அல்லது விரட்ட தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம். பலர் டென்னிஸ் மட்டை போன்ற ஒன்றை வைத்து கொசுக்களை அடிப்பதை பார்த்து இருக்கிறோம்.
நாம் கணிணியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது கொசு கடிக்காமல் இருக்க இந்த Anti Mosquito என்ற மென்பொருள் உதவுகிறது. இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இயக்கினால் கீழ்க்கண்ட விண்டோ தோன்றும்.
அதில் Activate என்பதை கிளிக் செய்தால் இந்த மென்பொருள இயங்க ஆரம்பித்து விடும். Activate என்பதை கிளிக் செய்தவுடன் இந்த மென்பொருள் கொசுவை விரட்டும் அல்ட்ரா ஒலிகளை வெளிபடுத்த ஆரம்பித்து விடும். இந்த அல்ட்ரா ஒலிகளை நாம் கேட்க முடியாது.
மீண்டும் InActivate கிளிக் செய்து இந்த மென்பொருளின் இயக்கத்தை நிறுத்தலாம். மேலும் Hide என்பதை கிளிக் செய்து பின்புலத்தில் இயக்கலாம். இந்த மென்பொருளில் இருந்து வரும் அல்ட்ரா ஒலி கொசுக்களை பறக்க விடாமல் கட்டுபடுத்துகிறது.
இதனால் இதை இயக்கிய சில நிமிடங்களில் உங்கள் கணிணிக்கு அருகில் இருந்து கொசுக்கள் ஓடிவிடும். நீங்கள் உங்கள் ஒலிப்பான்களை On செய்து வைத்திருந்தால் போதும். CNET தளம் இந்த மென்பொருளில் எவ்வித வைரஸ்களும் இல்லை என உறுதி செய்துள்ளது. இந்த மென்பொருளை தரவிறக்க கீழ்க்கண்ட சுட்டியை பயன்படுத்தலாம். 


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பெற்றோரிடம் பேசத் திணறும் பிள்ளைகள்.


இன்றைய இளைஞர்கள் அறிவியல், தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் வேக வேகமாக முன்னேறி வருகின்றனர்.
பல்வேறு திறமைகளை கைவசம் கொண்ட அவர்களுக்கு தங்கள் சொந்த பிரச்சினைகள் மட்டும் பூதாகரமாக இருப்பது ஏன்? இன்றைய தலைமுறையை சிக்கலுக்குள்ளாக்கும் கேள்வி இதுதான்.
நவீன தலைமுறையினருக்கு தங்களது பிரச்சினைகளை பெற்றோர்களிடம் ஏன் வெளிப்படையாக தெரிவிக்க முடியவில்லை...இதற்கு என்ன காரணம்? அப்படியே திக்கித்திணறி தெரிவித்தாலும் கூட அவை பெரும்பாலும் தோல்வியில் தான் முடிகின்றன. இதற்கு என்னதான் காரணம்?
பெற்றோர்களிடம் இன்றைய இளைய தலைமுறையினர் தங்களுக்குள்ள பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்குள் ஒருவித பதற்றம் வந்து தொற்றிக் கொள்கிறது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமையாமல் போய்விடுமோ என்ற பயத்தில் தான் அந்த பதற்றம் ஏற்படுகிறது. அந்த மிதமிஞ்சிய எதிர்பார்ப்பில், தாங்கள் சொல்ல வந்த பிரச்சினைகளை மறந்து எதைஎதையோ தவறாக சொல்லி விடுகிறார்கள். அதன்பிறகு, பெற்றோர்கள் தங்களுக்கு சாதகமாக பதில் சொல்வார்கள் என்று பிள்ளைகள் எதிர்பார்த்தால், அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.
அதேபோல், பிள்ளைகள் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லி விட்டார்களா? அல்லது சொல்ல வந்த விஷயத்தில் எதையாவது மறைக்கிறார்களா என்று பெற்றோர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக, இந்த மாதிரியான நெருக்கடிகள் பற்றி இளைய தலைமுறையினர் யோசிப்பதே இல்லை. காரணம், அவர்களுக்கு `தாங்கள் தான் எல்லாவிதத்திலும், பெற்றோர்களை விட சிறந்தவர்கள். இப்போது உள்ள அறிவியல் சாதனங்கள் அவர்களின் காலத்தில் இல்லை. அதை நாம் தானே பயன்படுத்துகிறோம். அதனால், நமக்குத் தான் எல்லாம் தெரியும்' என்ற அதிகப்பிரசங்கித்தனமான எண்ணமும் ஒரு காரணமே.
இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், தங்கள் பிரச்சினைகளை எவ்வாறு பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றே அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்களுடைய அனுபவங்கள் உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்பதை நம்புங்கள். அதனால், உங்கள் பிரச்சினைகளை தயங்காமல், எதையும் மறைக்காமல், வெளிப்படையாக எடுத்துக் கூறுங்கள். அப்போதுதான் முழுமையான தீர்வு கிடைக்கும்.
சொல்ல விரும்பும் பிரச்சினையை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், ரத்தினசுருக்கமாக எடுத்துக் கூறுங்கள். என்ன பிரச்சினை? எங்கு நடந்தது? அதற்கு யார் காரணம்? நீங்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்? நீங்கள் எதிர்பார்க்கும் முடிவு என்ன? என்பது போன்ற அடிப்படையான தகவல்களை உங்கள் பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
உதாரணத்திற்கு நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள். அதை உங்கள் பெற்றோரிடம் தயங்கி தயங்கி தெரிவிக்கும் போது அவர்கள் மறுத்து விடுகிறார்கள். நீங்கள் கல்யாணம் முடிந்தால் போதும் என்ற அப்போதைய சந்தோஷத்தை எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், உங்கள் பெற்றோரோ, `பிள்ளைகளுக்கு எந்த விதத்திலாவது தீங்கு நேர்ந்து விடுமோ?' என்று பயப்படுகின்றனர். அதனால்தான், அவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
பிரச்சினைகள் தலைமுறை இடைவெளியிலோ, அல்லது தகவல் தொடர்பு இடைவெளியிலோ வருவதில்லை. நம்மிடம் தான் உள்ளது. பிரச்சினைகளை எவ்வாறு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டால் போதும். தெளிவு உள்ள இடத்தில் பிரச்சினைக்கு இடமே இல்லை.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா?


இன்றைய இளைஞர்களும், நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறுநீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு எலுமிச்சை மிக சிறந்த மருந்து.
எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.
சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளன. அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.
பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது. எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.
தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை. இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான். பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.
சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும் என்றால், சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.
இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.
கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy) , பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.
இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும். திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம்.
ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும் என்கிறார் ரோஜர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மச்சம் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான இதயம், கண்கள்: ஆய்வுத் தகவல்.


உடம்பில் மச்சம் இருப்பதை சிலர் அதிர்ஷ்டம் என்று கூறுவர். சிலரோ இது எதுக்குப்பா எக்ஸ்டிரா லக்கேஜ் என்று அலுத்துக் கொள்வர். ஆனால் அப்படி அலுத்துக் கொள்ளத் தேவையில்லையாம். மச்சம் இருந்தால் பல மகத்துவங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு ஒன்று மச்சம் குறித்த ஆய்வை மேற்கொண்டது. அது மச்சம் இருப்பவர்களுக்கு மச்சம் இல்லாதவர்களை விட வலுவான எலும்புகள் இருப்பதாகவும், அவர்களுக்கு எலும்புகளைத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் மிகக் குறைவு என்றும் இந்தக் குழு கண்டுபிடித்துள்ளது.
மேலும் மச்சக்காரர்களுக்கு தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்குமாம். இது தவிர அவர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும் என்றும் கண்டுபிடித்துள்ளனர். மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும் போது தோலில் கருப்பு நிறப் புள்ளி ஏற்படுவது தான் மச்சம் எனப்படுகிறது. இது வழக்கமாக குழந்தைப் பருவத்தில் தான் ஏற்படும். சிலருக்கு மச்சம் நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும்.
18 வயது முதல் 79 வயது வரை உள்ள உருவ வேறுபாடுள்ள இரட்டையர் பெண்கள் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 100 மச்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 25 மச்சத்தை விடக் குறைவாக உள்ளவர்களை ஒப்பிடுகையில் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் 50 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவிலும் இதே போன்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது என்று மரபியல் துறை நிபுணர் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஜப்பான் நாட்டில் 52 ஆண்டுகளுக்கு பின்னர் சீற்றம் கொண்ட எரிமலை!

ஜப்பான் நாட்டின் தென்பகுதியில்  Kyūshū தீவில் அமைந்து உள்ள எரிமலை ஒன்று 52 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் குமுறத் தொடங்கி உள்ளது. 

Kirishima மலைத் தொடரில் இந்த எரிமலை அமைந்துள்ளது. Mount Shinmoedake என அழைக்கப்படுகிறது.கடந்த 26 ஆம் திகதி குமுறத் தொடங்கியது. அதிகாலை 7.30 மணி அளவில் இந்த எரிமலையில் இருந்து புகை மூட்டங்கள் கிளம்பின. பின்னர் தீச் சுவாலைகளை கக்கியபடி உக்கிரமாக இந்த எரிமலை குமுறத் தொடங்கியது.
2.5 கிலோ மீற்றர் வரை புகைப் படலங்கள் எழுந்து வானை மூடின. எரிமலையில் இருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் வரை கற்கள் வீசப்பட்டன.









பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கம்ப்யூட்டரில் தவிர்க்க வேண்டிய தவறுகள்.


வாரம் இரு நாட்களில் நல்ல உடற்பயிற்சி, தினந்தோறும் இறைவணக்கம், அலுவலகத்தில் சீரான பணி, சட்டம் மதித்து நடத்தல் என நாம் நம் அன்றாட வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் பலவற்றை மேற்கொள்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் என்று வருகையில் நாம் பல தவறுகளை ஏற்படுத்துகிறோம்.
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.
1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்: பலரின் டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி, குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதில்லை. இதனாலேயே விண்டோஸ் இயக்கம், “பல ஐகான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. அவற்றைச் சரி செய்திடலாமா?" என்று பிழைச் செய்தி காட்டுகிறது.
இதனை எப்படி சரி செய்திடலாம்? அவ்வப்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐகான்களுக்குரிய பைல்களை, சார்ந்த ட்ரைவ்களுக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும். பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையில், பெரும்பாலும் டெஸ்க் டாப்பிலேயே டவுண்லோட் செய்து வைக்கிறோம். அவசர வழிக்கு இது சரிதான். ஆனால் அடுத்து, அந்த பைலின் தன்மை, பொருள் சார்ந்து அதனை, அதற்கான ட்ரைவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.
2. ஷட் டவுண் செய்திட பவர் பட்டன்: இது லேப்டாப் கம்ப்யூட்டர் சார்ந்த செய்தி. பலர் லேப்டாப் கம்ப்யூட்டரின் பணி முடிந்தவுடன், அதனை முறையாக ஷட் டவுண் செய்திடுவதில்லை. பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடிவிற்குக் கொண்டு வருகிறோம் அல்லது கொண்டு வருவதாக நினைக்கிறோம். பல லேப்டாப்களில் இந்த பவர் பட்டன், லேப்டாப் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோட் என்னும் செயலற்ற நிலைக்குத்தான் கொண்டு செல்லும்.
இது ஒன்றும் மோசமான தவறு அல்ல. இது போலத் தூங்கும் லேப்டாப், சில நொடிகளில் இயக்கத்திற்கு வந்துவிடும். ஆனாலும் இவ்வாறு செய்வது தவறு. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, ஸ்லீப் மோட் என்பது முற்றிலும் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலை அல்ல. பேட்டரியின் பவர் அப்போதும் செலவழிந்து கொண்டு தான் இருக்கும். எனவே, தொடர்ந்து அது மின்சார சாக்கெட் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தாலே, பாதுகாப்பாக இருக்கும். இல்லையேல், அதன் பேட்டரி பவர் தீர்ந்து போய்,மொத்தமும் சக்தி அற்ற பேட்டரி கொண்ட லேப்டாப் தான் உங்களுக்குக் கிடைக்கும்.
இரண்டாவதாக, நீங்கள் எப்போதும் கம்ப்யூட்டரை நிறுத்தி வைக்க, ஸ்லீப் மோடினை விரும்புவதாக இருந்தால், அது கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடும் வாய்ப்பினையே இழக்கிறது. விண்டோஸ் சுமுகமாக இயங்க வேண்டும் என்றால், அது முற்றிலும் நிறுத்தப்பட்டு, பின்னர் ரீ பூட் செய்யப்பட வேண்டும்.
3.மவுஸ் பயன்படுத்தி புரோகிராம் இயக்கம்: ஒரு புரோகிராமினை இயக்க ஒவ்வொரு முறையும், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராமின் இயக்க பைல் பார்த்து கிளிக் செய்வது. அல்லது அதன் ஐகான் மீது டபுள் கிளிக் செய்வது போன்ற பழைய பழக்கங்களை விட்டுவிடுங்கள். அல்லது குயிக் லாஞ்ச் ஏரியாவில், புரோகிராம் ஐகான்களை வைத்து, அதில் ஒரே ஒரு முறை கிளிக் செய்வதன் மூலம் அவற்றை இயக்கலாம்.
இப்போது இன்னும் வேகமான முறை ஒன்று உள்ளது. விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்புகளில், ஸ்டார்ட் பட்டனை அடுத்துள்ள இடத்தில் உள்ள புரோகிராம்களில் வரிசைப்படி, அதற்கான எண்ணை விண்டோஸ் கீயுடன் அழுத்தினால், அந்த புரோகிராம் இயக்கப்படும். எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் பட்டனை அடுத்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பெயிண்ட், குவார்க் எக்ஸ்பிரஸ் என வைத்திருந்தால், விண்+1, விண்+2 என அழுத்தினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அடுத்ததாக பெயிண்ட் எனத் திறக்கப்படும்.
4. பாதுகாப்பற்ற பிளாஷ் ட்ரைவ்: டேட்டாவினை எடுத்துச் செல்ல, பிளாஷ் ட்ரைவ்கள் மிகவும் வசதியானவை தான். ஆனால் இதில் உள்ள டேட்டாவினை, மற்றவர் அறியாதபடி என்கிரிப்ட் செய்து நாம் வைப்பதில்லை. இதனால், அது தொலைந்திடும் பட்சத்தில், நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றவருக்குக் கிடைத்திடும் சூழ்நிலைகள் உருவாகிவிடும். இதில் டேட்டாவினை எளிதாக என்கிரிப்ட் செய்திட, இணையத்தில் கிடைக்கும் ட்ரூகிரிப்ட்(TrueCrypt) போன்ற புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது நல்லது.
5.கண்ணை மூடிக் கொண்டு நெக்ஸ்ட் அழுத்துவது: திடீரென நம் டெஸ்க்டாப்பில் ஏதேதோ படங்களுடன் ஐகான்கள் தோன்றி நம்மை ஆச்சரியப்படுத்தும். நாம் பயன்படுத்தும் வெப் பிரவுசரிலும் இதே போல் சில தோற்றமளிக்கும். இவை தோன்றுவதற்கு நாம் தான் காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், என்ன ஏது எனப் படிக்காமலேயே, அடுத்தடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்துகிறோம்.
இதன் மூலம் அந்த புரோகிராம்களைத் தயாரித்த நிறுவனங்களின் சோதனை டூல்கள், புரோகிராம்களை நம் கம்ப்யூட்டரில் நிறுவ நாம் சம்மதம் அளிக்கிறோம். மேலும் நமக்குத் தேவைப்படாத சில இயக்கத்திற்கும் இசைகிறோம். இது போல நாம் நம்மை அறியாமல் அளிக்கும் சலுகைகள், நம் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களை நிறுவி, நம்மை சிக்க வைக்கின்றன. எனவே, ஒரு புரோகிராமினை இன்ஸ்டலேஷன் செய்கையில், இணையப் பக்கம் வழியாக ஒன்றை டவுண்லோட் செய்கையில், நம்மிடம் எதற்கு இசைவு கேட்கப்படுகிறது என்று சரியாகப் படித்துப் பார்த்து இயங்க வேண்டும்.
6. ஒரே ஒரு பேக் அப் அபாயம்: பலர் தங்கள் பைல்களுக்குப் பேக் அப் எடுப்பதே இல்லை. இது மிகப் பெரிய தவறு. சிலர் ஒரே ஒரு பேக் அப் பைலுடன் நிறுத்தி விடுகின்றனர். இதுவும் தவறுதான். எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, முழுமையான பேக் அப் காப்பி ஒன்றை உருவாக்குவதும், அதற்கான சாப்ட்வேர் ஒன்றை இயக்கி, குறிப்பிட்ட கால கட்டத்தில் பேக் அப் காப்பி அமைப்பதுவும் மட்டுமே சரியான வழியாகும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றய செய்திகள்01/02/2011

எதிர்த்துப் பேசிய பிள்ளைகளை சுட்டுக் கொன்ற தாய்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தாய் ஒருவர் சொந்தப் பிள்ளைகள் இருவரையும் படுகொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 50 வயதுடைய யூலி என்பவரேகொலைகாரத் தாய். பிள்ளைகள் இவரை எதிர்த்து கதைத்த காரணத்தினால் சுட்டுக் கொலை செய்துள்ளார். பிள்ளைகள் தற்கொலை செய்து விட்டனர் என மற்றவர்களை நம்ப வைக்கின்றமைக்கு திட்டம் தீட்டினார்.இவரின் மகனுக்கு வயது 13, கால்ப்பந்து பயிற்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவனை தாயரின் கையிலிருந்த துப்பாக்கி பதம் பார்த்தது. இதன் பின்னர் மகளை நாடிச் சென்றார். மகளுக்கு வயது16. மகளின் மண்டையை குறிவைத்தார். இரண்டு பிள்ளைகளும் இறந்து விட்டனர். மறு நாள் காலை கொளையாளியான தாயை பொலிஸார் கைது செய்தனர். பிளளைகளை கொன்றமைக்கான காரணத்தை பொலிஸார் கேட்டமைக்கு எதிர்த்து பேசினார்கள், வாய்க்காரப் பிள்ளைகள் என கூறினார்.






எகிப்திலிருந்து வெளியேறுமாறு சுவிஸ் பிரஜைகளுக்கு எச்சரிக்கை.
எகிப்திலிருந்து வெளியேறுமாறு சுவிட்சர்லாந்து பிரஜைகளுக்கு சுவிஸ் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தள்ளது.
எகிப்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களினால் ஆபத்து ஏற்படக் கூடுமென சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாகவேனும் சுவிட்சர்லாந்து பிரஜைகள் எகிப்திலிருந்து வெளியேற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
எகிப்திற்கான விஜயம் ஆபத்தானது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் 1574 சுவிட்சர்லாந்து பிரஜைகள் தங்கியிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து பிரஜைகள் எகிப்தை விட்டு வெளியேறுவதற்கு உதவிகளை வழங்கும் நோக்கில் தூதரக அதிகாரியொருவர் கெய்ரோ விமான நிலையத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எகிப்தில் திடீர் திருப்பம்: ராணுவம் அதிபருக்கு கட்டுப்பட மறுப்பு.
எகிப்து நாட்டின் அதிபராக ஹோஸ்னி முபாரக்கு எதிராக  தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியாவில் நடந்த பேரணிகளில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இதில், ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர். மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்தமாக அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அவர்களை கட்டுப்படுத்த ராணுவத்தை முபாரக் ஏவிவிட்டார். ராணுவ டாங்கிகள், பீரங்கி வண்டிகள், தெருக்களில் நிறுத்தப்பட்டன எந்திர துப்பாக்கிகளுடன் ராணுவ வீரர்கள் ஆங்காங்கே தயாராக நின்றனர். போராட்டகாரர்களை ஒடுக்கும்படி முபாரக் ராணுவத்துக்கு உத்தரவிட்டபடி இருந்தார்.

ஆனால் முபாரக் உத்தரவுக்கு கட்டுப்பட ராணுவம் திடீரென மறுத்து உள்ளது. பொதுமக்களை சுட முடியாது என்றும் ராணுவம் கூறிவிட்டது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எகிப்து மக்கள் இந்த நாட்டின் சிறந்த குடிமக்கள் அவர்கள் சட்டப்பூர்வமாக போராடுகின்றனர். அவர்களுக்கு போராட உரிமை உள்ளது. எங்கள் சொந்த நாட்டு மக்களை நாங்கள் தாக்கமாட்டோம்” என்று கூறப்பட்டுள்ளது.
ராணுவமும் மக்கள் பக்கம் சாய்ந்துவிட்டதால் முபாரக்கின் நிலைமை மோசமாகி உள்ளது. அவர் எந்த நேரத்திலும் பதவி விலக வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தடுக்க போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முபாரக் முயற்சித்து வருகிறார்.

இது தொடர்பாக துணை அதிபர் உமர் சுலைமான் டெலிவிஷனில் தோன்றி வேண்டுகோள் விடுத்தார். அதில் அவர் கூறியதாவது: அதிபர் முபாரக் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறார். எல்லா பிரச்சினைகளையும் பேசி தீர்த்து கொள்ளலாம். அரசியல் சட்டம், சட்டவிதிகள் அனைத்தையும் மாற்றி அமைக்கலாம். பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என்று அவர் கூறினார்.
ஆனால் போராட்டகாரர்கள் சமாதானத்துக்கு தயாராக இல்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலகியே ஆக வேண்டும் என்று கூறி உள்ளனர். அதிபர் உத்தரவுக்கு ராணுவம் கட்டுப்பட மறுத்துவிட்ட நிலையில் எதிர்கட்சியினரும் சமாதான பேச்சு நடத்த தயாராக இல்லாததால் முபாரக் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பி.பி.சி தமிழோசையை நிறுத்தும் முடிவை திரும்ப பெற்றது.
உலகப் பிரசித்திப் பெற்ற ஒளி - ஒலி பரப்பு ஊடகமான BBC தனது தமிழ் மொழி ஒலிபரப்புச் சேவையை முடிவுக்குக் கொண்டு வருகின்ற திட்டத்தை பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக் தடை செய்துவிட்டார்.
இதன்மூலம் தமிழோசை தொடர்ந்து ஒலிக்க வழி ஏற்பட்டுள்ளது. செலவுகளைக் குறைப்பதற்காக பி.பி.சி நிறுவனம் ஒலிபரப்புச் சேவைகள் ஐந்தை நீக்க உத்தேசித்து இருந்தது. அவற்றுள் பி.பி.சி தமிழோசையும் ஒன்று.
இந்நிலையில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக் தலையிட்டு மேற்படி ஒலிபரப்புச் சேவைகளை இல்லாமல் செய்யும் திட்டத்தை பி.பி.சி செய்தி நிறுவனம் கை விடச் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு வெள்ள பாதிப்பால் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு.
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஏராளமான நகரங்கள் மூழ்கின. சுரங்கத் தொழில் மற்றும் சுற்றுலா துறையில் செழிப்பாக உள்ள குயின்ஸ்லேண்டு மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது.டுவூம்பா நகரின் கார்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இவை எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை.
தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் சேதம் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அதன்படி குயின்ஸ்லேண்டு மாகாணத்தில் மட்டும் வெள்ளத்தால் ரூ.30 ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இழப்பை சரி கட்டுவதற்காக பட்ஜெட்டில் இடைக்கால வரிகளை விதிக்கப்போவதாக பிரதமர் ஜுலியா அறிவித்துள்ளார்.


ஒபாமாவின் புதிய திட்டத்திற்கு தடை.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புதிய சுகாரதார திட்டத்திற்கு பல்வேறு மாகாணங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து ‌‌தொடரப்பட்ட வழக்கில் இந்த சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா மருத்துவம், காப்பீட்டு திட்டம் குறித்து புதிய சட்டத்தினை கடந்த மார்ச்‌ மாதம் பார்லிமென்ட்டா காங்கிரஸில் தாக்கல் செய்தார். இதற்கு ஓப்புதல் பெறப்பட்டது. அப்ப‌ோது பேசிய ஒபாமா, 30 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த புதிய சட்டத்தினால் பலன் பெறுவர் நடுத்தர குடும்பத்தினர் வரிச்சலுகையும் பெறலாம் என தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த புதிய சட்டத்திற்கு குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து வெர்ஜினியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் 78 பக்க தீர்‌ப்பில் உடனடியாக இந்த சட்டத்திற்கு தடைவிதித்துள்ளது.
அமெரிக்கர்களின் தனிப்பட்ட உரிமையினை பறிக்கும் செயல் என்றும், அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்றும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அமெரிக்காவில் உள்ள 50 க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 26 மாகாணங்களில் இந்த புதிய சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் பேரணி: அதிபர் மனைவி லண்டன் ஓட்டம்.
எகிப்தில் மக்களின் போராட்டத்தினால் திணறி வரும் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக கோரி 10 லட்சம் பேர் கொண்ட பேரணியை எதிர்க்கட்சிகள் நடத்தியது. 
தலைநகர் கெய்ரோவின் சதுக்கத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடி கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொய்ரோ மட்டுமின்றி அலெக்சாண்ட்ரியா உள்பட நாடு முழுவதும் கலவரம் பரவியுள்ளது. கலவரத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இருந்தும் கலவரம் ஓய்ந்தபாடில்லை. மக்களை அமைதிப்படுத்த ஏற்கனவே இருந்த மந்திரி சபையை அதிபர் முபாரக் கலைத்துவிட்டார்.

புதிய இடைக்கால மந்திரி சபையை அமைத்துள்ளார். இருந்தும் மக்கள் அமைதியாகவில்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர் மறுத்து வருகிறார். 
தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியாவில் நடந்த பேரணிகளில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர். மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
ஒட்டு மொத்தமாக அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்டம் கட்டுக்கடங்காமல் தீவிரமடைந்ததை தொடர்ந்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் மனைவி சுஷானே (69) லண்டன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
லண்டனில் இவர்களுக்கு சொந்தமான ஆடம்பர பங்களா உள்ளது. இது ரூ.60 கோடி மதிப்புடையது. மனைவி சுஷானேயை தொடர்ந்து அதிபர் முபாரக்கும் திடீரென லண்டன் தப்பி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் உறவு கெடும்-இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை.
மீண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இந்திய, இலங்கை நல்லுறவு கெடும் என்பதை இலங்கைக்கு இந்தியா, திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்வதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியை இன்று கிருஷ்ணா சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஒரு விஷயத்தை நான் இலங்கைக்குத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். எந்த மாதிரியான சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட நிலையிலும் படை பலத்தை அப்பாவி மீனவர்கள் மீது பிரயோகிக்கக் கூடாது. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது கடந்த காலமாக இனி இருக்க வேண்டும். இது தொடரக் கூடாது. இனி எப்போதும் இது நடக்கவே கூடாது.
இந்திய மீனவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய அரசு முழுமையாக உறுதி பூண்டுள்ளது.
இதை மீறி இலங்கை கடற்படையினர் தாக்குதலைத் தொடர்ந்தால், இரு நாடுகளின் நல்லுறவை அது பாதிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உறவு கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இலங்கையின் கடமையாகும்.
பாகிஸ்தான் நமது மீனவர்களைத் தாக்குவதில்லை, கொல்வதில்லை. வேறு எந்த நாட்டிலும் கூட இப்படி நடப்பதில்லை. ஆனால் இலங்கை மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்று அந்த நாட்டிடம் கேட்கப்பட்டுள்ளது. இனிமேல் இது தொடரக் கூடாது என்றும் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுன் இந்தியாவுக்கு இதயப்பூர்வமான, தோழமையான, பாரம்பரியமான உறவு உள்ளது. இதை இலங்கை அரசு மனதில் கொள்ள வேண்டும். எனவே இது கெடாத வகையில், தனது படையினருக்கு அது அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றார் கிருஷ்ணா.




சுதந்திர தினத்தன்று சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் - ஐ.தே.க.


சுதந்திர தினத்திலன்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த சரத் பொன்சேகா சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களை கொள்வனவு செய்த குமரன் பத்மநாதன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கொண்டாடப்படும் சுதந்திரம் அர்த்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வுகளை தமது கட்சி புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக பாடுபட்ட சரத் பொன்சேகாவை சுதந்திர தினத்திலன்று விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



வடமராட்சி முனைக்கடற்பரப்பில் 32 அடி நீளம் கொண்ட திமிங்கல வகை இராட்ச மீன் ஒன்று செத்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

இன்று அதிகாலை 6 மணியளவில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்களே இதனை அவதானி;த்துள்ளனர்
இம் மீன் 32 அடி நீளம் கொண்டதாகவும் 10 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான நிறையைக் கொண்டதாகவும் உள்ளது
இது தொடர்பில் வயது முதிர்ந்த மீனவரான வயோதிபர் ஒருவரிடம் வினவிய போது இவ்வாறன இராட்சத திமிங்கல வகையான மீன் ஒன்று 35 வருடங்களுக்கு முன்னர் பருத்தித்துறை சக்கோட்டைப்பகுதியில் கiரையொதிங்கியதென்றும் இவ்வாறு கரையொதுங்கும் இவ்வகையான மீன்கள் 50 வருடத்திற்கும் அதிகமாக உயிர் வாழக் கூடியது என்றும் தெரிவித்தார்
ஆயினும் குறித்த மீனை அவதானித்தவர்கள் அதன் பல்லைவைத்துக்கொண்டு இது 60 வயதிற்கும் அதிகமான மீன் என்று தெரிவித்தனர்.




முயலுக்கு சிலை எடுத்த சீனர்கள்.
சீனாவில் இப்போது முயல் வருடம்.இந்த முயல் வருடத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்று கோலாகலமாக கொண்டாடுகின்றனர் சீனர்கள். இக்கொண்டாட்டங்களின் உற்சாகத்தில் மிகவும் பிரமாண்டமான இராட்சத முயல் சிலை ஒன்றை வடிவமைத்து உள்ளனர்.30 ஆயிரம் கோப்பைகளை பயன்படுத்தி இந்த வித்தியாசமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது.





கோழிகளை தங்க வைக்க விசேட ஹோட்டல்.
உலகில் எத்தனையோ வித்தியாசமான ஹோட்டல்கள் உள்ளன.இவற்றை எல்லாம் 'மனிதன்' அவ்வப்போது வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வந்து இருக்கின்றது.ஆனால் இப்போது எம்மால் அறிமுகம் செய்யப்பட இருக்கின்ற ஹோட்டல் மிகவும் வித்தியாசமானது.மனிதர்கள் தங்குகின்றமைக்கு பதிலாக கோழிகள் தங்குவதற்கு என்று அமெரிக்காவின் ஹெல்ஸ்ரன் நகரில் இத்த விநோதமான ஹோட்டல் அமைக்கப்பட்டு உள்ளது.31 வயது உடைய David Roberts என்பவரின் சிந்தனையில் இந்த ஹோட்டல் உருவாகி உள்ளது.கோழிகள் இங்கு தங்க வைக்கப்படுகின்றமைக்கு கோழிகளின் உரிமையாளர்களிடம் இருந்து தலா 02 பவுண்டுகள் வரை அறவிடப்படுகின்றது.கோழிகளை வளர்ப்பவர்கள் தூரப் பயணங்களை செல்லும்போது பாதுகாபு கருதி இந்த ஹோட்டலில் கோழிகளை தங்க வைத்து விட்டு செல்ல முடியும்.இந்த ஹோட்டல் மிகவும் வெற்றிகரமாக இயங்குகின்றது.




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பச்சை நிறமாக மாறி ருக்கும் கனேடிய ஆறு.

கனடாவின் Goldstream Riiver திடீர் என்று பச்சை நிறமாக மாறி உள்ளது.கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி முதல் இம்மாற்றம் நேர்ந்து உள்ளது.சுற்றுலாப் பயணிகள் இந்நிற மாற்றத்தால் பெரிதும் கவரப்பட்டு உள்ளனர்.










பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF