Wednesday, September 28, 2011

7,50,000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்:என்ன செய்ய போகிறீர்கள்?



ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் 7,50,000 பிள்ளைகளை பட்டினி மரணத்தின் விளிம்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டதாக ஐ.நா அவசர அறிவப்பு விடுத்துள்ளது.இந்நிலைமை நீடித்தால் அடுத்த சில மாதங்களில் அவர்கள் அனைவரும் மரணமடைவார்கள் என ஐ.நா எதிர்வு கூறியுள்ளது.
இந்த அதிர்ச்சி தகவல்கள் இன்னமும் எத்தனையோ பேருக்கு தெரியாமல் இருக்கலாம் என்ற ஏக்கத்துடனும், தெரிந்தவரகளிலும் ஒரு சிலரை தவிர ஏன் அநேகமானோர் பேசாமல் இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்துடனும் விரிகிறது இக்கட்டுரை! மின்னஞ்சல் வழியாக பலருக்கும் இப்பதிவு சென்றடைய இப்பதிவினை இங்கு இணைக்கிறோம் -
சோமாலியாவின் தெற்குப் பகுதியில் பட்டினி காரணமாக ஐந்து வயதுக்குட்டபட்ட சுமார் 29.000 பிள்ளைகள் கடந்த 90 தினங்களில் மரணித்துள்ளார்கள். பட்டினி வேகம் தொற்று நோய்போல பரவிக்கொண்டிருக்கிறது.சோமாலியாவில் மட்டும் அடுத்த சில மாதங்களில் 7,50,000 பிள்ளைகள் பட்டினி மரணத்தை நெருங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏழுமாதமுள்ள சிறுமி ஒருத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவருடைய நிறை வெறும் 3.4 கிலோ மட்டுமே. ஐ.நாவின் வேண்டுகோள் பலமாக இருந்தாலும் அதற்கு உலகின் வளமுள்ள நாடுகள் பெரிதாக அக்கறை காட்டவில்லை.

ஆபிரிக்க கண்டத்தில் மிகவும் வறுமைப்பட்ட நாடாகவும் உலகிலேயே மிகவும் ஆபத்து மிக்க நாடுகளில் ஒன்றாகவும் இருப்பது சோமாலியா ஆகும். 1991ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தால் அப்போது ஆண்டு அவந்த அரசு கவிழ்ந்ததோடு பல விடுதலைப் போராட்ட இயக்கங்களும் ஆரம்பமாகியது. பின்னர் அவ்வியக்கங்கள் அனைத்தும் தீவிரவாத அமைப்புகளாக மாறி இன ரீதியான அல்லது மதப் பிரிவின் ஆயுதக்குழுக்களாக மாறியது. இதனால் கொலைக்களமாக மாறியது சோமாலியா. அந் நாட்டில் உள்ள வறுமைக்கோட்டிற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளில் சென்று சரணடைந்தனர். சோமாலியர்களும் தமது சொந்த நாட்டில் இருக்க முடியாது பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

தற்போது சோமாலியாவில் இருக்கும் அரசானது மூன்றில் 1 பங்கு நிலத்தைக்கூட தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். உலக நாடுகள் அனைத்தும் சோமாலியாவை தோல்வியடைந்த நாடு என்று பொருட்பட அழைப்பார்கள். போராளிகள் ஒருபக்கம், தீவிரவாதிகள் ஒருபக்கம் மற்றும் அரசாங்கம் ஒருபக்கம் என இருக்கும் நிலையில் அங்கே உள்ள மனிதர்கள் நிலை படுமோசமாக இருக்கிறது. சத்தான உணவுகள் இன்றி மக்கள் இறப்பது என்றால் அது சோமாலியாவாகத் தான் இருக்கமுடியும்.
அளவுக்கு அதிகமான வெப்பம், மழை வீழ்ச்சி குறைவு எந்தப் பயிரையும் பயிரிட முடியாத நிலை என்பன போக 100 அடிக்கு வெட்டினால் கூட தண்ணீர் கிடைப்பது இல்லையாம். இப்படியும் ஒரு பூமியா ? என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.இங்கே இருக்கும் ஆடு மாடுகள் தொடக்கம் மனித இனம் வரை சொல்முடியாத துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். பிறந்த நாள் முதல் இதுவரை ஒரு பிஸ்கட் துண்டைக் கூடக் கடித்துப்பார்க்காமல் இறந்த குழந்தைகள் இங்கே தான் இருக்கிறார்கள். சாக்கிளேட் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகளும் இங்கே தான் இருக்கிறார்கள். சமீபத்தில் ராய்டர் செய்திச் சேவையானது வெளியிட்ட படங்கள் உலகை அதிரவைத்துள்ளது.

பட்டினியால் செத்த குழந்தை இன்னும் சாகக்கிடக்கும் குழந்தை மற்றும் போசாக்கு குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள். உணவு இல்லை என்றால் கடிப்பதற்கு ஒரு கொய்யாக் காய் இல்லை மாம்பழம் அதுவும் இல்லாவிட்டால் ஒரு பப்பாப்பழமாவது எமது ஊரில் கிடைக்கும். ஆனால் சோமாலியாவில் பஞ்சு மட்டும் தான் மரமாக இருக்கிறது. சிலவேளைகளில் தினை கிடைக்கும். அதிலும் கஞ்சிவைத்தே உண்ண முடியும். இப்படியான நிலையில் வாழும் அம்மக்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, அங்கே இருக்கும் குழந்தைகளுக்காவது உதவவேண்டும். தம்மாலான உலர் உணவுகளை வழங்கி பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கு 1 நேரச் சாப்பாடாவது கிடைக்கச் செய்யவேண்டும். 


சர்வதேச சூழலில் பணம் படைத்த மேற்குலக நாடுகள் சோமாலியாவை கண்டும் காணாததுபோல உள்ளனர். அங்கே எண்ணை வளம் இருந்திருந்தால் நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு போய் நின்றிருக்கும் மேற்குலகம். ஆனால் அங்கே ஒன்றுமே இல்லையே..

மனம் வைத்தால் இதனை ஒரு சிறிய உதவியாகச் செய்யலாம். தமது பிள்ளைகளுக்கு உணவுகளை வாங்கும்போது சோமாலிய பிள்ளைகளுக்கு ஒரு உலர் உணவை வாங்கி அதனை அங்கே அனுப்பிவைக்கலாம். இதனை தாய் தந்தையர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் சேர்ந்து செய்யவேண்டும்.மக்கள் செல்வங்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து சோமாலியப் பிள்ளைகளுக்கு உணவுகளை அனுப்பிவைத்தால் நாமும் ஒரு சோமாலியக் குழந்தைக்கு உணவு கொடுப்போம். தர்மம் தலைகாக்கும்.
உதவி செய்ய விரும்புவோர் சர்வதேச அமைப்புகளின் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.
 
http://www.unhcr.org/emergency/somalia/global_landing.html?gclid=CJyA7M_GrqsCFUp76wod2mDlKA
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பயர்பொக்ஸ் 7.0 தரவிறக்கம் செய்வதற்கு...


பயர்பொக்ஸ் உலாவியின் தற்போதைய பதிப்பான 6.0.2 சற்று மேம்படுத்தப்பட்ட பதிப்பாக தற்போது வெளிவந்துள்ளது.இதில் மெமரி மிகவும் குறைவாக எடுத்துக் கொண்டு வேலை செய்யும் விதத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
அதிகபட்சம் 50 சதவீதம் இணையப்பக்கங்கள் லோடு ஆகும் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கின்றனர். நிறைய பாதுகாப்புகள் மேம்படுத்தப்படிருக்கின்றன.புக்மார்க்குகள் உடனடியாக பயர்பொக்ஸ் உலாவியின் மூலமாக Sync செய்யும் வசதியும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
விண்டோஸ் பயனாளர்களுக்கான Firefox 7.0 Stable Version Download English.
லின்க்ஸ் பயனாளர்களுக்கான Firefox 7.0 Stable Version Download English.
கூகுளின் புதிய வசதிகள் வந்துகொண்டிருக்கும் வேளையில் தனது 13ஆம் ஆண்டின் பிறந்தநாளினை கொண்டாடுகிறது கூகுள்.இந்நேரத்தில் பழைய ஆட்சென்ஸ் முகப்பினை விரைவில் மூடப்போவதாகவும் அதற்காக புதிய ஆட்சென்ஸ் முகப்பிற்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஒருமுறை மட்டும் படிக்கக்கூடிய மின்னஞ்சலை அனுப்புவதற்கு..


அவசரத்தில் மின்னஞ்சல் அனுப்பிய பின் ஏன் அனுப்பினோம் என்று நினைத்து வருத்தப்படுபவர்கள் பலர்.அதற்கு தீர்வாக தான் ஒரு இணையதளம் உள்ளது. கீழே உள்ள சுட்டியில் சென்றவுடன் தோன்றும் விண்டோவில் சென்று  அனுப்ப வேண்டிய தகவலை தட்டச்சிடவும்.
அதன் பின் தங்களுக்கு ஒரு தொடுப்புக் கிடைக்கும். அதை தகவல் சேர வேண்டியவருக்கு அனுப்பிவிடுங்கள்.அவர் திறந்து வாசிக்கலாம் அதன் பிறகு அவர் மூடி விட்டுத் திறந்தால் மறுபடியும் அங்கே தகவல் இருக்காது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஆசிரியர்களுக்கு திறமையான ஐடியாக்களை கொடுக்கும் இணையம்..


கல்வி கண் திறக்கும் கடவுள் என்று சொல்லக்கூடிய ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் பல வகையான ஐடியாக்கள் மற்றும் செயல் முறைகளை தெளிவாக எடுத்துச்சொல்ல ஒரு தளம் உள்ளது.
ஒரு கடினமான பாடத்தை எப்படி நடத்தினால் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள் என்பதில் தொடங்கி வொர்க்‌ஷீட் எப்படி உருவாக்க வேண்டும் என்பது வரை அனைத்து விதமான ஐடியாக்களையும் நமக்கு அளிப்பதற்காக ஒரு பயனுள்ள தளம் உள்ளது.
A to Z Teacher Stuff இது தான் இணையதளத்தின் பெயர் ஆசிரியர்களுக்கு எப்படி அவர்களின் அறிவை மேலும் பட்டை தீட்டலாம் என்று சொல்லும் இத்தளத்திற்கு சென்று நாம் Word Shapes Worksheet Generator, Word Search Maker, Handwriting Worksheet Generator, Leveled Books Database, Science Experiments Teacher Tools ,Teacher Tips, Lesson Plans, Printables & Worksheets என அனைத்தும் பயன்படுத்தலாம் தேவையான பிரிண்ட் செய்த பேப்பரை தரவிறக்கம் செய்யலாம்.
ஆசிரியர்களுக்கு பாடத்தில் ஏழும் சந்தேகங்களுக்கு விடை அளிக்க பல திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளையும் எவ்வாறு திட்டமிட்டு பாடம் நடத்த வேண்டும்.பாடத்தில் உள்ள முக்கியமானவற்றை மாணவர்கள் மனதில் பதியும்படி சொல்ல எண்னென்ன நுணுக்கங்கள் எல்லாம் உள்ளன என்பதை அழகாக பட்டியலிட்டு சொல்கிறது இத்தளம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

70 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பலில் 240 தொன் வெள்ளி..

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய இங்கிலாந்து கப்பலில் 240 தொன் வெள்ளி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1940ஆம் ஆண்டு டிசம்பரில் எஸ்.எஸ்.கெய்ர்சப்பா என்ற இங்கிலாந்து கப்பல் இந்தியாவிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு சென்றது. கப்பலில் 240 தொன் வெள்ளி, இரும்பு மற்றும் தேயிலை ஆகியவை ஏற்றப்பட்டிருந்தன. 

கப்பல் 1941, பெப்ரவரி 17ல் அயர்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதிக்கு 300 மைல் தொலைவில் வந்த பொழுது பருவநிலை மற்றும் எரிபொருள் இல்லாமை ஆகியவற்றால் தத்தளித்து கொண்டிருந்தது. அது 2ஆம் உலக போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம். அதனை நடுக்கடலில் வைத்து ஜெர்மனி நாட்டின் நீர்மூழ்கி கப்பலான யு101 தாக்கி மூழ்கடித்தது. இதில் ஒருவரை தவிர கப்பலில் இருந்த 85 பேர் கொல்லப்பட்டனர். தற்போது இந்த கப்பல் அட்லாண்டிக் கடற்படுகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் 155 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் மதிப்பிலான வெள்ளி இருப்பதுதெரிய வந்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றைய செய்திகள்.

ஜனாதிபதி மகிந்த இன்று காலை கொழும்பு வந்துசோ்ந்தார்.

நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை 5.30 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல்- 228 என்ற விசேட விமானத்தில் நாடு திரும்பியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கியநாடுகள் சபையின் 66 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த19 ஆம் திகதி நியூயோர்க் செனறிருந்த ஜனாதிபதி பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரைநி கழ்த்தினார்.
நியூயோர்க்கில் தமது பயணம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில்,
 அர்த்தமுள்ள வகையில் ஐ.நாவுடன் பேசுவதற்கு இலங்கை அரசு ஒருபோதும் வெட்கப்படவில்லை. நியூயோர்க்கிற்கான இந்தப் பயணம் குறித்து பெரிதும் மகிழ்கிறேன். இது மிகப்பயனுள்ள வகையில் அமைந்திருந்தது. எமது சந்திப்புக்கள் மூலமாக உண்மையான நிலைவரத்தை அடுத்தவருக்குப் புரிய வைக்க முடிந்தது என்று, ஓய்வாக இருந்த ஒரு பொழுதில் ஜனாதிபதி அமெரிக்காவின் டெய்லி எவ்.ரி. பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
ஜனாதிபதி தனது இந்தப் பயணத்தின் போது, நியூயோர்க்கில் வைத்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கீமூன்,  இந்தியா, ஈரான், பாலஸ்தீனம், கட்டார், கொலம்பியா, சல்வேனியா, நைஜீரியா, உகண்டா, நேபாளம், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவுத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா ஆகியோர் மரியாதை நிமித்தம் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர்.
அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகளான வோல் ஸ்ரீட் ஜேர்னல் மற்றும் தி எக்கனமிஸ்ட் டைம்ஸ் ஆகியன ஜனாதிபதியை நேர்காணல் செய்துள்ளன.
இதேவேளை, அமெரிக்க நீதிமன்றம் ஒன்று ஜனாதிபதிக்கு அழைப்பாணை அனுப்பி இருந்தபோதும் அவரது பயணத் திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் பதவி கிடைத்தால் மட்டுமே அரசாங்கத்துடன் இணைந்து போட்டி!- முஸ்லிம் காங்கிரஸ்.

2013ம் ஆண்டு நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர்தான் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ கல்முனையில் நேரில் வந்து பிரகடனப்படுத்தினால் மட்டுமே எமது கட்சி அரசுடன் இணைந்து போட்டியிடும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷிர் சேகுதாவூத் தெரிவித்தார்.அவ்வாறு இடம்பெறவில்லையென்றால் நிச்சயமாக அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்று தனித்து போட்டியிட்டு ஏனைய கட்சிகளோடு இணைந்து ஆட்சியமைப்போம் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சாய்ந்தமருது கடற்கரை வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர் பஷிர் சேகு தாவூத்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷ‌ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பாக இருந்தாலும் சரி ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும் சரி கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமானால் முஸ்லிம் காங்கிரஸ் கேட்கின்ற அனைத்தையும் வழங்கி அக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் மாத்திரமே ஆட்சியை கைப்பற்ற முடியும்.
இத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து போட்டியிடுவது நிச்சயம். இதனால் அரசால் தனித்து ஆட்சியமைக்க முடியாது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் தான் கட்சி என்ற அமைப்பு இருக்கும். அப்போது தான் மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களின் அரசியல் அந்தஸ்து இருக்கும். அதனூடாக அபிவிருத்தி கிடைக்கும்.
இதுவே எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் கனவாகும். அந்தக் கனவை நினைவாக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த தேர்தலை நாம் பயன்படுத்துகின்றோம். எனவேதான் கடந்த 30 ஆண்டுகளாக கட்டிக்காத்த இந்த கட்சியின் கொள்கைகளை காப்பாற்றி இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும்.
தனி நபர்கள் சண்டையிட்டு கொள்வதற்காக அல்ல இக் கட்சி. மறைந்த தலைவரின் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதே பெரும்பான்மை இன கட்சிகளின் நோக்கமாகும். அதற்காகவே முஸ்லிம் காங்கிரஸிலிருந்து சிலரை பிரித்தெடுத்து அமைச்சு பதவிகளையும் அபிவிருத்திகளையும் அரசாங்கங்கள் வழங்குகின்றன.
நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது குறித்த பதவிக்காவே. ஆனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் மேயர் அல்லது தவிசாளர் பதவிக்கே என்று தான் போட்டியிடுவார்கள். இங்குள்ள 25 வேட்பாளர்களினதும் நோக்கம் மேயராகுவதே தவிர உறுப்பினராகுவதல்ல என்றார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை குழப்பும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது!– ஐ.தே.க.
எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை குழப்பும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
பல்வேறு வழிகளில் தேர்தலை குழப்புவதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.சில பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய வேட்பாளர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கிக் கொள்ள அரசாங்கம் தீவிர முயற்சி செய்து வருகின்றது.
அம்பாந்தோட்டையில் வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பதனை கண்காணிக்க கமரா பொருத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிப்போரை அச்சமூட்டும் நோக்கில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.இவ்வாறான பிரச்சாரங்களுக்கு மக்கள் அஞ்சத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டவர்களுக்கு இம்மாதம் 30 ம் திகதி முதல் ஒன்லைன் விசா.
இலங்கைக்கு வருகின்ற மற்றும் இலங்கையூடாக பயணம் செய்கின்ற வெளிநாட்டவர்களுக்காக இணையத்தளத்தினூடாக விசாவை பெற்றுக்கொடுப்பதற்கான புதிய முறைமையொன்றாக இலத்திரனியல் பயண (Electronic Travel Authorization -ETA) முறைமையொன்றை தாபித்து நடைமுறைப்படுத்துவதற்கு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 
இந்த புதிய முறைமையினை அறிமுகப்படுத்தும் உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் இணையத்தளத்தில் சுற்றுலாப் பயணிகள், பல்வேறு நிகழ்வுகளுக்காக வெளிநாடு செல்பவர்கள் www.eta.gov.lk என்ற இணையத்தள முகவரியினூடாக விசாவை பெற்றுக்கொள்ள முடியும் என்று குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபையின் உடன்பாட்டுடனும் ஈடுபாட்டுடனுமே மேற்படி முறைமை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி தீர்வு காணப்பட வேண்டும் : இந்தியா வலியுறுத்து.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்திய விரைவான அரசியல் தீர்வை காண இலங்கை முன்வரவேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.இந்திய நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி, இலங்கையின் பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகமவிடம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
நியூயோர்க்கில் இருவரும் சந்தித்துக் கொண்ட போது இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் பேச்சுவார்த்தைகளின் மூலம் சமாதான தீர்வு ஏற்படவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.இதற்காக அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முக்கிய அரசியல் விடயங்களில் தீ;ர்வுகளை முன்வைத்து இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பிரனாப் முகர்ஜி இதன் போது வலியுறுத்தினார்.
இதேவேளை இரண்டு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சின் பின்னர் கருத்துரைத்த இந்திய அதிகாரி ஒருவர், சமாதான தீர்வின் மூலம் இலங்கையில் தமிழர்கள் சமாதானமாகவும் நீதியுடனும் வாழுவதை இந்தியா விரும்புவதாக இந்திய அமைச்சர் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் படையினரை ஈடுபடுத்துவது தவறில்லை!– கோத்தபாய.
நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காக படையினரை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்துள்ள நிலையில் படையினரை வேறு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்துவது பிழையானதா?
இராணுவத்தினர் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் போது அதனை சிலர் நாடு இராணுவமயப்படுத்தப்படுவதாக பிரச்சாரம் செய்கின்றனர்.
திறமையான படைவீரர்கள் நகர அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.குறுகிய அரசியல் லாபத்தை நோக்கமாகக் கொண்டவர்கள் இராணுவத்தின் அபிவிருத்திப் பணிகளை இராணுவமயமாக்கல் நடவடிக்கையாக நோக்குகின்றனர்.
இராணுவத்தினர் ஒழுக்கத்துடன் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர் என பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏமன் பாதுகாப்பு அமைச்சரை கொலை செய்ய முயற்சி.
ஏமன் பாதுகாப்பு அமைச்சர் சென்ற வாகன அணிவகுப்புக்கு அருகில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காருடன் வந்து தற்கொலைப்படையைச் சேர்ந்த ஒருவர் தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சர் காயமின்றி உயிர்தப்பியதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தென்பகுதி நகரான ஏடனில் கடற்கரையோர நெடுஞ்சாலையில் பாதுகாப்பு அமைச்சர் முகமது நசீர் அகமதுவின் வாகன அணிவகுப்பு சென்றபோது அந்த கார் வெடிகுண்டு வெடித்தது.
இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் அந்த நாட்டில் தற்போதுள்ள அரசியல் குழப்பநிலையைப் பயன்படுத்தி அல்கொய்தா தொடர்புடைய பயங்கரவாதிகள் நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர்.அவர்களை எதிர்த்து ஏமன் ராணுவம் போரிட்டு வருகிறது. அவர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ட்ரீம்லைனர் விமானம் அறிமுகம்.
பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “787 ட்ரீம்லைனர்” விமானத்தை போயிங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முதல் விமானம் நிப்பான் நிறுவனத்துக்கு டெலிவரி செய்யப்பட்டது. விமான தயாரிப்பில் உலக புகழ் பெற்ற அமெரிக்க நிறுவனம் “போயிங்”. இதன் ஒரு பிரிவான போயிங் கமர்ஷியல் ஏர்பிளேன்ஸ்(பி.சி.ஏ) நிறுவனம் விமானங்களை டிசைன் செய்வது, விமானத்தின் பகுதிகளை உருவாக்கும் பணியை பல்வேறு நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுத்து அவற்றை பெற்று அசெம்பிள் செய்வது, விமான விற்பனை, பராமரிப்பு, சர்வீஸ் ஆகியவற்றை கவனித்து வருகிறது.
அமெரிக்காவின் ரென்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விமான வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் எரிபொருள் செலவு அதிகம் ஏற்படுத்தாத குறைந்த எடை கொண்ட விமானத்தை உருவாக்க பிசிஏ பல ஆண்டுகளாக தீவிர ஆய்வு நடத்தி வருகிறது.
“787 ட்ரீம்லைனர்” என்று 2005-ல் பெயர் வைக்கப்பட்டது. ஆராய்ச்சி ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க ஆர்டர்களும் குவிந்து கொண்டிருந்தன. 787 ட்ரீம்லைனர் 2007ல் வரும் என்றது போயிங். ஆய்வு முடியாததால் வரவில்லை.
சியாட்டில் நகரை ஒட்டியுள்ள எவரெட் தொழிற்கூடத்தில் அசெம்பிளிங் வேலை 2009 டிசம்பரில் முடிந்து ட்ரீம்லைனரை வெள்ளோட்டம் விட்டது போயிங். முறைப்படியான சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்ததில் ஜப்பானை சேர்ந்த ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு முதல் ட்ரீம்லைனர் விமானத்தின் சாவியை ஒப்படைத்திருக்கிறது போயிங்.
மிகமிக எடை குறைந்த கம்போசைட் பொருட்களைக் கொண்டு பல பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வழக்கமான அலுமினிய பாடிக்கு பதிலாக கார்பன் பைபர் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.வழக்கத்தைவிட பெரிய ஜன்னல் கண்ணாடி, ஜன்னல் வெளிச்சத்தை குறைத்துக் கொள்ளும் எலக்ட்ரானிக் டிம்மர் வசதி, உயரத்தால் ஏற்படும் காது அழுத்தம் போன்றவற்றை தவிர்க்கும் வகையில் பிரத்யேக பிரஷரைசேஷன் வசதி ஆகியவை சிறப்பம்சங்கள்.
எரிபொருள் 20% மிச்சமாகும் என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுனர்கள். இதில் 330 பேர் வரை பயணம் செய்ய முடியும். ஒரு விமானம் விலை ரூ.907 கோடி.கடந்த ஜூன் மாத நிலவரப்படி, 787 ட்ரீம்லைனர் விமானத்துக்காக உலகம் முழுவதும் இருந்து 827 ஆர்டர்கள் வந்திருக்கின்றன. கூடுதல் வசதிகளுடன் கூடிய 787ட்ரீம்லைனர்-9வது மொடல் விலை ரூ.1,068 கோடி.
சீனாவில் ரயில்கள் மோதி விபத்து: 40 பேர் பலி.
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் 2 சுரங்கப்பாதை ரயில்கள் இன்று மோதி விபத்துக்குள்ளாயின. இதில் பயணிகள் பலர் காயமடைந்தனர்.சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என ரயில்வே நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தினால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாக தகவல் இல்லை. எனினும் விபத்து நிகழ்ந்த பின்னர் தலையில் காயங்களுடன் பயணிகள் பலர் சுயநினைவிழந்த நிலையில் தரையில் கிடத்தப்பட்டிருப்பது சீன இணையதளங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் மூலம் தெரிகிறது.
கடந்த ஜூலையில் வென்ஜூவ் நகரில் அதிவேக ரயில் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்தனர். இதனால் ரயில்வே அமைப்பு குறித்து பொதுமக்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையை சரிசெய்ய சீனா முயற்சித்துவரும் நிலையில் இந்த ரயில் விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் தொடரும் பொதுமக்கள் போராட்டம்: 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அடக்க ராணுவம் ஏவி விடப்பட்டுள்ளது.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கொன்று குவித்து வருகின்றனர். ஹோம்ஸ், பாபா அமர் உள்ளிட்ட பல இடங்களில் போராடும் மக்கள் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு வருகின்றனர்.
துருக்கி எல்லை அருகேயுள்ள வடக்கு இட்லிப் பகுதியில் ராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சுட்டு கொல்ல விரும்பாத ராணுவ வீரர்கள் அங்கிருந்து தப்பி ஓடுகின்றனர்.இவ்வாறு தப்பி ஓடிய 4 பேரை சிரியா ராணுவம் சுட்டுக் கொன்றது. மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடாபியின் சொந்த நகருக்குள் நுழைந்த புரட்சி படை.
லிபியாவில் கடாபியின் சொந்த நகருக்குள் புரட்சி படை புகுந்தது. லிபியாவில் அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சி மக்கள் போராட்டத்தால் வீழ்ந்தது.இருந்தும் அவரது ஆதரவாளர்கள் அதிகம் உள்ள ஒரு சில நகரங்கள் மட்டும் இன்னும் புரட்சி படையின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. எனவே அவற்றை கைப்பற்றுவதில் புரட்சிப்படை தீவிரமாக உள்ளது.
கடாபியின் ஆதரவு நகரமான பாலிவாட் கைப்பற்றப்படும் நிலையில் உள்ளது. அதை தொடர்ந்து அவரது பிறந்த ஊரான சிர்த் நகரை கைப்பற்ற கடும் சண்டை நடக்கிறது.சிர்த் நகரம் தலைநகர் திரிபோலி அருகே உள்ளது. அந்த நகரை நோக்கி புரட்சிப்படை முன்னேறியது. ஆனால் அவர்களை தடுத்து கடாபியின் ராணுவமும், அவரது ஆதரவாளர்களும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
புரட்சி படைக்கு ஆதரவாக நேட்டோ படையினரும் களம் இறங்கியுள்ளனர். ராணுவ தளங்களின் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். கடுமையான துப்பாக்கி சண்டையும் நடக்கிறது.இதனால் ராணுவம் பின் வாங்கியது. அதை தொடர்ந்து சிர்த் நகருக்குள் புரட்சிப்படை புகுந்தது. அங்கு தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடக்கிறது. இதனால் அந்த நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
பாகிஸ்தானிற்கான உதவிகளை நிறுத்தும் மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்.
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் நிறுத்தக்கோரும் தீர்மானத்தை அமெரிக்க எம்.பி.பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார். 
கடந்த மே 1ம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லேடன் அமெரிக்கப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் மூலம் பாகிஸ்தான் இன்னமும் பயங்கரவாதத்தினை ஆதரிப்பது அமெரிக்காவினை ஆத்திரமடைய வைத்துள்ளது.இந்நிலையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண கவர்னர் டோட்பையோ என்பவர் அமெரிக்கா பாராளுமன்ற விதி எண் 3013ன்படி தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார்.
அதில் இனி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் அனைத்து உதவிகளையும் முடக்கி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இவர் அமெரிக்க பாராளுமன்ற வெளியுறவுத்துறை கமிட்டியின் உறுப்பினர் ஆவார்.இது குறித்து கவர்னர் கூறுகையில்,“பயங்கரவாதத்தினை ஒடுக்கும் விஷயத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவை ஏமாற்றி விட்டது. ஆனால் உதவியை மட்டும் எதிர்பாக்கிறது. இந்த தீர்மான அமெரிக்க பாராளுமன்ற வெளியுறவு கமிட்டியின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” ‌என்றார்.
70 வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் 240 டன்கள் வெள்ளி கண்டுபிடிப்பு.
கடந்த 1940ஆம் ஆண்டு டிசம்பரில் எஸ்.எஸ்.கெய்ர்சப்பா என்ற இங்கிலாந்து கப்பல் இந்தியாவிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு சென்றது.கப்பலில் 240 டன்கள் வெள்ளி, இரும்பு மற்றும் தேயிலை ஆகியவை ஏற்றப்பட்டிருந்தன.
கப்பல் 1941 பிப்ரவரி 17ல் அயர்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதிக்கு 300 மைல் தொலைவில் வந்த பொழுது பருவநிலை மற்றும் எரிபொருள் இல்லாமை ஆகியவற்றால் தத்தளித்து கொண்டிருந்தது.
அது 2ஆம் உலக போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம். அதனை நடுக்கடலில் வைத்து ஜெர்மனி நாட்டின் நீர்மூழ்கி கப்பலான யு101 தாக்கி மூழ்கடித்தது.இதில் ஒருவரை தவிர கப்பலில் இருந்த 85 பேர் கொல்லப்பட்டனர். தற்போது இந்த கப்பல் அட்லாண்டிக் கடற்படுகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதில் 155 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான வெள்ளி இருப்பது தெரியவந்துள்ளது.
பிலிப்பைன்சில் பயங்கர சூறாவளி: பள்ளிகளுக்கு விடுமுறை.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சூறாவளி, மழை காரணமாக உள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டின் கிழக்கு அரோரா பகுதியில் மணிக்கு 215 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசும் என்று வானிலை ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.மீட்புப்பணிக்கு கடற்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை: மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்பு.
சவுதி அரேபியாவில் நகராட்சித் தேர்தல்களில் பெண்கள் வேட்பாளர்களாக நிற்கவும், வாக்களிக்கவும், ஷூரா கவுன்சிலில் உறுப்பினர்களாகவும் மன்னர் அப்துல்லா அனுமதி வழங்கியுள்ளார்.
அவரது அறிவிப்பை அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். அமெரிக்காவும் மன்னருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.பிற நாடுகளில் உள்ளதைப் போல பெண்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்க வேண்டும் என சவுதி அரேபியாவில் நீண்ட காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்களும் போராடி வருகின்றனர்.
அந்நாட்டில் பெண்கள், ஆண் துணையின்றி வாழக் கூடாது, கணவர் அல்லது தந்தை அல்லது சகோதரர் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது, கார் ஓட்டக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்டதிட்டங்கள் உள்ளன. சமீபத்தில் பெண்கள் தனியாக கார் ஓட்டும் உரிமை கோரி போராட்டம் நடத்தினர்.தற்போதைய மன்னர் அப்துல்லா தன்னை சீர்திருத்தவாதியாகக் காண்பித்துக் கொள்பவர். அதற்கேற்ப சவுதி மக்கள் சமூகத்தில் காலத்திற்கேற்றபடி பல்வேறு மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளார்.
அரபு நாடுகளில் புரட்சித் தீ பரவிய வேளையில் சவுதி அரேபியாவிலும் அதன் தாக்கம் தென்பட்டது. அப்போது மன்னர் பல்வேறு சலுகைகளை அறிவித்து அந்தத் தாக்கத்தைக் குறைத்தார்.சவுதியைப் பொறுத்தவரை மன்னர் ஆட்சிதான் என்பதால் நகராட்சிக்கான பதவிகளுக்கு மட்டுமே பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. நான்காண்டுக் காலம் கொண்ட இப்பதவியில் இன்று வரை ஆண்கள் மட்டுமே வேட்பாளராக நிற்கின்றனர். அவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 22ம் திகதி அடுத்த நான்காண்டுக்கான நகராட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் மன்னருக்கு ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவான “ஷூரா கவுன்சிலில்” பேசிய மன்னர் அப்துல்லா,“அடுத்த நகராட்சித் தேர்தல் முதல் பெண்களும் வேட்பாளராக நிற்கலாம், வாக்களிக்கலாம். ஷூரா கவுன்சிலுக்கும் உறுப்பினர்களாக வரலாம். இம்முடிவை நாட்டின் உயரிய மத அறிஞர்களுடனான ஆலோசனைக்குப் பிறகே எடுத்துள்ளேன்” என அறிவித்தார்.
சவுதியில் நகராட்சிகளுக்குப் பெரிய அளவில் அதிகாரங்கள் கிடையாது. பாதி உறுப்பினர்கள் தேர்தல் மூலமும், மீதி பேர் நியமன உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.ஷூரா கவுன்சிலில் இன்று வரை ஆண்களே உறுப்பினர்களாக உள்ளனர். மன்னரின் அறிவிப்பு அந்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பை உடனே ஏன் அமல்படுத்தக் கூடாது? நாட்டிற்கு உடனடியாக ஒரு பெரிய அதிர்ச்சியைத் தந்துவிடக் கூடாது என்பதற்காக மன்னர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.எனினும் பெண்களுக்கான மிகச் சிறிய உரிமைகளுக்குக் கூட நாங்கள் போராட வேண்டியிருக்கிறது என்பதே பெரிய வெட்கக் கேடு தான் என்று தெரிவித்துள்ளார் சவுதியின் பிரபல பெண்ணுரிமைப் போராளி வகேஜா அல் ஹவைதார்.
பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 37 பேர் பலி.
பாகிஸ்தானில் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் பலியாயினர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள பாசிலாபாத் நகரில் உள்ள பள்ளி மாணவர்கள் காலார் கார்பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.
பஸ் சாவல்நகர் அரு‌கே சென்று கொண்டிருந்த போது திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பள்ளிகுழந்தைகள் 37 பேர் பலியாயினர்.70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அருகில் இருந்த கிராம மக்கள் கூறு‌கையில் அதிகளவிலான கூட்டம் மற்றும் ‌போதியலைட் வசதி இல்லாததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.அதேசமயம் விசாரணை அதிகாரிகள் பஸ்சில் பிரேக் பெயிலியர் ஆனதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
72 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய பஸ்சில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் என 110க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது. அளவுக்கு அதிகமான மாணவர்களை ‌பஸ்சில் பயணம் செய்ய அனுமதி வழங்‌கியது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது: பாகிஸ்தான்.
பயங்கரவாத அமைப்பான ஹக்கானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.இஸ்லாமாபாதில் ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு ராணுவத் தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி தலைமையில் நடைபெற்ற ராணுவக் கமாண்டர்கள் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டதாக தி எஸ்க்பிரஸ் ட்ரிபுனே பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
ஹக்கானி அமைப்பு குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழலும் உருவாகியுள்ளது.இது அதிகரித்தால் மோசமான விளைவு ஏற்படும். இதைத் தணிக்க வேண்டும் என்பதை பாகிஸ்தான் கமாண்டர்கள் ஒப்புக்கொண்டனர். அதேசமயத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இந்நிலைக்கு மேலும் பாகிஸ்தானால் செயல்பட இயலாது என்பதை உறுதியாகத் தெரிவித்தனர்.
அதிருப்தியில் உள்ள அமெரிக்கா ஒருவேளை தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் கமாண்டர்கள் அனைவரும் தங்களது யோசனைகளை வழங்கினர் என்றும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். இருப்பினும் ராணுவத் தளபதி அவசரக் கூட்டத்தைக் கூட்டி நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசித்துள்ளார். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றமான சூழலின் தீவிரம் வெளிப்பட்டுள்ளது என்றும் அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.
இதனிடையே ஹக்கானி அமைப்பை உருவாக்கியதே அமெரிக்கா தான் என்று பாகிஸ்தான் குற்றம்சுமத்தியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்த போது ஹக்கானி பயங்கரவாதிகளை அமெரிக்காவின் உளவுப் பிரிவான சிஐஏ-தான் உருவாக்கிப் பயிற்சி அளித்தது. இதை மறந்துவிட்டுப் பேசக்கூடாது.
இப்போதும் ஹக்கானி பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில்தான் இருக்கிறார்கள். அவர்கள் பாகிஸ்தானில் இல்லை. அப்படி இருப்பதாகக் குற்றம் சுமத்தினால் அதற்கான ஆதாரத்தை அமெரிக்கா அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்தார்.
இதுபோன்ற மோசமான செயலில் அமெரிக்கா ஈடுபட்ட போதிலும் ஆப்கானிஸ்தானில் 1980களில் நடைபெற்ற போரில் அந்நாட்டுக்கு பாகிஸ்தான் உதவியது என்றும் அவர் கூறினார்.அமெரிக்கா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் யூசுப் ரஸô கிலானி.
செப்டம்பர் 29ம் திகதி நடைபெறும் இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறாதக் கட்சிகள், மதத் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்கலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.இக்கூட்டத்தில் நாட்டில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து ஆலோசனை நடத்துவதுடன், அமெரிக்காவுடனான எதிர்கால உறவு குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமனில் தொடரும் கலவரம்: ராணுவ தளபதி சுட்டுக் கொலை.
ஏமனில் ராணுவ தளத்தின் மீது பழங்குடியினர் நடத்திய தாக்குதலில் ராணுவ தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்.அதிபர் சலே ஆதரவு ராணுவ வீரர்கள் 30 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில் அதிகார மாற்றம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான அதிபரின் அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்துவிட்டன.
சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் சிகிச்சை பெற்று வந்த ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே கடந்த 24ம் திகதி எதிர்பாராத விதமாக நாடு திரும்பினார்.ஏற்கனவே கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக அதிபர் எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தி வந்த நிலையில் அதிபர் நாடு திரும்பிய பின்னும் தாக்குதல் ஓயவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிபர் சலே விடுத்த அறிக்கையில் வளைகுடா கூட்டுறவுக் கவுன்சில் பரிந்துரைத்தவைகளின்படி அதிபர் மற்றும் பார்லிமென்ட் தேர்தல்கள் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வரும்படி எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டன. இந்நிலையில் சனாவின் வடபகுதியில் உள்ள ராணுவத் தளம் மீது நேற்று பழங்குடியினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 63வது படைப் பிரிவின் தளபதி கொல்லப்பட்டார். ராணுவ வீரர்கள் 30 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.
ஆப்கன் முன்னாள் அதிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது.
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ரப்பானி கொலையில் தலிபான்களுடன் தொடர்புடைய முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆப்கன் முன்னாள் அதிபர் பர்ஹனுதீன் ரப்பானி கடந்த 20ம் திகதி பயங்கரவாதிகள் இருவரால் கொலை செய்யப்பட்டார். இக்கொலை குறித்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவை அதிபர் ஹமீத் கர்சாய் நியமித்துள்ளார்.
இந்நிலையில் ஹமீதுல்லா அகுண்ட் என்பவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாகவும், அவருக்கும் தலிபான்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் ஆப்கன் அரசு செய்தித் தொடர்பாளர் சிபதுல்லா சபி தெரிவித்துள்ளார்.தலிபான்களுக்கும், ரப்பானி தலைமையிலான அமைதி கவுன்சிலுக்கும் இடையில் தூதுவராக அகுண்ட் செயல்பட்டுள்ளார்.
கிரீஸ் நாட்டில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு: அனைத்து துறையினரும் போராட்டம்.
கிரீஸ் நாட்டில் அரசு மேற்கொண்டு வரும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து நேற்று நாடு முழுவதும் பொலிஸ் உட்பட அனைத்துத் துறையினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையில் யூரோ மண்டல கடன் நெருக்கடியைத் தீர்க்கும் வகையில் சர்வதேச நிதியமைப்பு புதிய திட்டம் ஒன்றை வகுத்து வருகிறது.
ஐ.எம்.எப் ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புகளிடம் இருந்து கிரீஸ் பெற்ற கடன் தவணைகளுக்காக அரசு ஊழியர் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அந்நாடு அமல்படுத்தி வருகிறது.
இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதத்தில் நேற்று நாடு முழுவதும் பாதாள ரயில், டிராம் மற்றும் புறநகர் ரயில் ஊழியர்கள் 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் பல மணிநேரம் வேலை நிறுத்தம் செய்தனர்.
விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களும் வேலை செய்ய மறுத்ததால் விமானப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். இவர்களோடு கிரீஸ் பொலிஸ் துறையும் சேர்ந்து கொண்டது.இதற்கிடையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஐ.எம்.எப் தலைமையகத்தில் நேற்று யூரோ மண்டல கடன் நெருக்கடி தீர்வுக்கான கூட்டம் நடந்தது.
இதில் ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பின் மொத்த நிதியான 440 பில்லியன் டொலர் என்பதை 2 டிரில்லியன் டொலர் அளவிற்கு அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டது.இன்னும் ஒரு சில நாட்களில் கடன் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் எனவும், அத்தீர்வு ஐந்தில் இருந்து ஆறு வாரங்களுக்குள் அமல்படுத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, September 27, 2011

நாடுகளின் இணையவேகம்: சுவாரஸ்ய தகவல்....


பிரபல இணையம் தொடர்பான தகவல்களை வழங்கி வரும் பெண்டோ நெட்வேர்க்ஸ் எனப்படும் நிறுவனம் உலக நாடுகளின் சராசரி இணைய வேகம் தொடர்பில் ஆய்வொன்றினை மேற்கொண்டது. 
சுமார் 224 நாடுகளின் இணைய வேகம் மற்றும் தரவிறக்கம் பூர்த்தியாக எடுக்கும் நேரம் என்பனவற்றை ஆராய்ந்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. 

இந்த ஆய்வானது இவ்வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 20 மில்லியன் கணனிகளில் இருந்தான 27 மில்லியன் தரவிறக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி உலகநாடுகளின் சராசரி தரவிறக்க வேகம் 580 kpbs ஆகும். பல சுவாரஸ்யமான தகவல்கள் இவ்வாய்வின் போது வெளியாகியுள்ளன. 

ஆம், இப்பட்டியலில் முதலிடத்தினை ஓர் ஆசிய நாடு தனதாக்கிக் கொண்டுள்ளது. அது தென் கொரியாவாகும். அமெரிக்காவிற்கு கிடைத்திருப்பது 26 ஆவது இடமாகும். அமெரிக்காவில் வேகம் வெறும் 616 kpbs. இவ்வாய்வின்படி 2 ஆம் இடத்தினை ருமேனியாவும் 3 ஆம் இடத்தினை பல்கேரியாவும் பிடித்துள்ளன. முதல் 15 இடங்களுக்குள் ஐரோப்பிய நாடுகளே அதிகம் இடம்பிடித்துள்ளன. ஆய்வின் முடிவுகளுடன் கூடிய வரைபடம். இலங்கையின் வேகம் 89 kbps. எமது நாட்டின் வேகத்தினை விட நைஜீரியா, அங்கோலா, அல்ஜீரியா, நைகர், சம்பியா ஆகிய நாடுகளின் வேகம் அதிகம். தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த கனடா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு முதல் 15 இடங்களுக்குள் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

via chartsbin.com பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்...


சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது.
சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால் அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.
வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.
உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றைய செய்திகள்.

மஹிந்த ராஐபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை.

அமெரிக்காவில் தங்கியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது எனத் தெரிய வருகிறது.
கேணல் ரமேஸின் மனைவி நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வத்சலாதேவி எதிர் ராஜபக்ச வழக்கிலேயே ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என ஈ.ஐ.என். செய்தி தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேஸின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் சட்டவாளர் வி.ருத்ரகுமாரன் கடந்த 22 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.
கேணல் ரமேஸின் படுகொலை மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து அவர் அவசரமாக நாடு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.தே.கவில் குடும்பவாத அரசியல் கிடையாது : கரு ஜயசூரிய.
ஐக்கிய தேசியக் கட்சியில் குடும்பவாத அரசியல் கிடையாது என கட்சியின் இணைப் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சி ஒரு குடும்பத்தினருக்கு சொந்தமானதல்ல.இந்த நாட்டில் தகுதியானவர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படுவதில்லை.
சகல விடயங்களிலும் அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.அரசியல்வாதிகள் சகல விடயங்களிலும் தலையீடு செய்கின்றனர்.மாத்தறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
அம்பாறையில் பிரதி பொலிஸ் அத்தியட்சகரை சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரியும் மரணம்.
அம்பாறையில், விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார என்பரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரி தன்னைத்தானே சுட்டு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அம்பாறை மாவட்ட மஹாஓயா விசேட அதிரடிப்படைத் தளபதியான 45 வயதுடைய சிசிர குமாரவுடன் ஏற்பட்ட வாக்குவாதமொன்றையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி தனது கைத்துப்பாக்கியால் ஏ.எஸ்.பி. சிசிரகுமாரவை சுட்ட பின் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது அவர்கள் இருவரும் உடனடியாக அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது ஏ.எஸ்.பி. சிசிரகுமார உயிரிழந்திருந்தார்.
தற்கொலை செய்துகொள்ள தன்னைத்தானே சுட்ட பொலிஸ் அதிகாரி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் மாற்றமில்லை: வெளிவிவகார அமைச்சு.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், அவர் தனது அமெரிக்கப் பயணத் திட்டத்தை மாற்றியமைக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நியூயோர்க் நீதிமன்றத்தில் கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்து ஜனாதிபதி தனது பயணத்தை இடைநிறுத்தி விட்டு கொழும்பு திரும்புவார் என்று விடுதலைப் புலிகளும், அவர்களின் அனுதாபிகளும் நம்பியதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
எனினும் ஜனாதிபதி மகிந்த தனது அமெரிக்க நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்காமல், அங்கேயே தங்கியுள்ளதாகவும், விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கண்டு அமெரிக்காவை விட்டு ஓடிவிட போவதில்லை என்று அவர் சூளுரைத்துள்ளதாகவும்; கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக  விசேட அதிரடிப்படை பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். 
நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆற்றல் மஹிந்தவிடம் இல்லை: ரணில்.
நாட்டின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்;க்கும் ஆற்றல் ஜனாதிபதியிடம் இல்லையென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கை நாட்டின் பிரச்சினைகளுக்கு இன்னும் உரிய வகையிலான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு மஹிந்த அரசாங்கத்தினால் முடியாது போய் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்காததன் காரணமாக அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளை நோக்கி செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டுள்ளது.அதனை மறைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினர் மீது ஆளுங்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்து வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
பண்டாரநாயக்க பெயரை இல்லாதொழிக்க சதித் திட்டம் தீட்டப்படுகிறது – சந்திரிக்கா.
பண்டாரநாயக்க பெயரை இல்லாதொழிப்பதற்கு பாரிய சதித் திட்டமொன்று திட்டப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வுகள் இன்று அத்தனகல்ல ஹொரகொல்லவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் டி.எம். ஜயரட்ன, முன்னாள் ஜனாதிபதியும் புதல்வியுமான சந்திரிக்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கட்சித் தலைமையகத்தில் சந்திரிக்காவின் படம் அகற்றப்பட்டுள்ளது.தந்தை, தாய் மற்றும் நான் தொடர்ச்சியாக 62 ஆண்டுகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமை தாங்கி கிண்ணஸ் சாதனை படைத்துள்ளோம்.தற்போது கட்சிக் கூட்டங்களில் எனது பெயரை குறிப்பிடுவதில்லை, எனினும் வீதியில் இறங்கினால் மக்கள் பேராதரவு வழங்கி வருகின்றனர்.அந்தக் காலம் போன்று தற்போது இல்லை என மக்கள் அதிருப்தியை வெளியிடுகின்றனர்.
இரத்தம் வியர்வை சிந்தி இந்தக் கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றேன், எனினும், அமைச்சர்கள் என்னிடம் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்கவின் ஐம்பதாம் நினைவு நிகழ்வுகளில் கட்சியின் பொதுச் செயலாளர் கலந்து கொள்ளவில்லை என சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் மஹாராஜா குழும நிறுவனத்தின் தலைவர் ராஜமஹேந்திரனுடன் தாம் நட்புறவைப் பேணியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கனில் ரபானியை கொலை செய்தது யார்: விசாரணைக்கு கர்சாய் உத்தரவு.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போராடி வந்த பர்ஹானுதீன் ரபானி கொலை குறித்து தீவிர விசாரணை நடத்த அதிபர் ஹமித் கர்சாய் உத்தரவிட்டுள்ளார்.ஆப்கனில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிபர் ஹமித் கர்சாய் அமைதி கவுன்சில் அமைத்துள்ளார். அதன் தலைவராக முன்னாள் அதிபர் ரபானி நியமிக்கப்பட்டார்.
நாட்டில் அமைதியை ஏற்படுத்த இவர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். சமாதான பேச்சு நடத்துவதாக தலிபான்களும் கூறினர். இதுகுறித்து பேச கடந்த 20ம் திகதி ரபானி வீட்டுக்கு ஒருவர் வந்தார். திடீரென வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினார். இதில் ரபானி கொல்லப்பட்டார்.
ரபானி கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் அவருடன் போனில் பேசியவரை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.இதுகுறித்து மேலும் விசாரணை நடத்த ராணுவ அமைச்சர் அப்துல் ரகீம் வர்தாக் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அதிபர் ஹமித் கர்சாய் கூறினார்.
போப் ராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல் பொய்யானது: வாடிகன் அதிகாரிகள்.
கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர் போப்பாண்டவர் தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக இத்தாலி பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்தியை வாடிகன் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இத்தாலி பத்திரிக்கையான லிபெரோ நாளிதழில் நேற்று முதல் பக்கத்தில் வெளியான செய்தி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பத்திரிக்கையின் நிருபர் ஆண்டோனியா சோச்சி என்பவர் அந்த பரபரப்பான செய்தியை எழுதி இருந்தார்.
அதில் உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் வயோதிகம் காரணமாக உடலளவில் பலவீனமாக உள்ளார். மேலும் உலகளவில் கத்தோலிக்க பாதிரியார்கள் மீது எழுந்து வரும் பாலியல் குற்றசாட்டுகளால் போப் மனமுடைந்து காணப்படுகிறார்.
அதனால் வரும் 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு 85 வயது நிறைவடைந்த உடன் போப் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்ற இத்தாலி பத்திரிக்கைகள் சிலவற்றிலும் இந்த செய்தி வெளியாகி இருந்தது.
டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தியில் பல நாடுகளில் 170க்கும் மேற்பட்ட குழந்தை பாலியல் துன்பறுத்தல் வழக்குகளில் கத்தோலிக்க பாதிரிமார்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர். இதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட போப்பின் முயற்சிகள் தோல்வியுற்றதால் அவர் ராஜினாமா முடிவுக்கு வந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த செய்திகளை வாடிகன் அதிகாரிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். இதுகுறித்து வாடிகன் நகர செய்தி தொடர்பாளர் பாதிரியார் பிடரிக்கோ லோம்பார்டி கூறியதாவது, போப்பின் உடல்நிலை மிக சிறப்பாக உள்ளது. அவருக்கு தனது பதவியை ராஜினாமா செய்யும் எந்த எண்ணமும், தேவையும் இதுவரை ஏற்படவில்லை.
ஜேர்மனிக்கு சென்ற போதும் அவருக்கு எந்த உடல்நலக் குறைவும் ஏற்படவில்லை. அவருக்கு எதிராக எழும் எல்லா சிக்கல்களை மேற்கொள்ளும் திறமை அவரிடம் உள்ளது.
ராஜினாமா குறித்த தகவல்களை எழுதியவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ போப்பிற்கு எந்த பாதிப்பும் இதுவரை இல்லை. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் என்றார்.இதுகுறித்து செய்தி வெளியிட்ட நிருபர் ஆண்டோனியோ கூறியதாவது, இந்த வதந்தியை கிளப்பி விட்டதே வாடிகன் நகரத்தை சேர்ந்தவர்கள் தான். ராஜினாமா செய்வது குறித்து தகவலை போப் இதுவரை மறுக்கவே இல்லை என்றார்.
ஸ்பெயினின் புகழ் பெற்ற காளைச் சண்டைக்கு வருகிறது தடை.
ஸ்பெயின் நாட்டின் புகழ் பெற்ற காளைச் சண்டை ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. நேற்று இந்த காளைச் சண்டையின் கடைசிப் போட்டி பார்சிலோனாவில் நடைபெற்றது.2012 முதல் காளைச் சண்டைக்குப் பெயர் பெற்ற காட்டலோனியா பிராந்தியம் முழுவதும் காளைச் சண்டைக்குத் தடை விதிக்கப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டு இந்த காளைச் சண்டை. நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்த பழம் பெறும் வீர விளையாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று விலங்கின ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இதனால் அவர்களுக்கும், காளைச் சண்டைப் பிரியர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதலும் வெடித்து வந்தது.
ஸ்பெயினின் காட்டலோனியா பிராந்தியத்தில்தான் இந்த விளையாட்டு பிரபலமானது. தற்போது இந்தப் பிராந்தியத்தில் காளைச் சண்டைக்குத் தடை விதிக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது.
2012ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் இந்தத் தடை அமலுக்கு வருகிறது. இதையடுத்து பார்சிலோனாவில் நேற்று கடைசி காளைச் சண்டை நடந்தது. இதையடுத்து கிட்டத்தட்ட 20,000க்கும் மேற்பட்ட சீட்களைக் கொண்ட அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது.காளைச் சண்டைப் பிரியர்கள் கடைசிச் சண்டையை மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடு பார்வையிட்டு ரசித்தனர். பார்சிலோனாவின் லா மொனுமென்டல் அரங்கில் இந்த விளையாட்டு நடந்தது.
இந்தத் தடை காரணமாக காளைப் பிரியர்கள் பெரும் சோகமடைந்துளளனர். அதேசமயம் இந்தத் தடைக்காக போராடி வந்த எதிர்ப்பாளர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். இனி காளைகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.லத்தின் அமெரிக்க நாடுகளில் இந்த காளைச் சண்டை பிரபலமானது. இருப்பினும் ஸ்பெயினில் அதிலும் பார்சிலோனாவில் நடக்கும் காளைச் சண்டைதான் மிகப் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல் துறைக்காக நோபல் பரிசு பெற்றவர் புற்றுநோயால் மரணம்.
புற்றுநோயால் அவதியுற்று வந்த நோபல் பரிசு பெற்ற பிரபல பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர் வேங்காரிமாத்தாய் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
ஆப்ரிக்க நாடான கென்யா நாட்டைச் சேர்ந்தவர் வேங்காரிமாத்தாய்(71) . நீண்ட காலமாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். நைரோபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சைபலனின்றி கடந்த ஞாயிறன்று இறந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இவர் கடந்த 1977ம் ஆண்டு கென்யாவில் “பசுமை இயக்கம்” என்ற அமைப்பை நிறுவினார். உலகினை சுற்றுச்சூழலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக ‌போராடி வந்தார். இவரது அயராத முயற்சியால் ஆப்ரிக்கா முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 40 மில்லியன் மரக்கன்றுகள் நடப்பட்டன.
1980களில் சுற்றுச்சூழ‌லால் ‌நைரோபி நகரம் மாசுபடர்ந்து வருவதை அறிந்த மாத்தாய் இனி தலைநகரான ‌நைரோபி நகரில் உயர்ந்த கட்டிடங்கள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.அப்போதைய அரசை எதிர்த்து போராடியதற்காக சிறை சென்றார். இவரது சிறந்தபணியினை பாராட்டி கடந்த 2004ம் ஆண்டு இவருக்கு சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நோபல் பரிசினை பெறும் முதல் ஆப்ரிக்க பெண் என்ற பெருமையினை பெற்றார். கடந்த 2002ம் ஆண்டு ‌கென்யா நாட்டின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
லிபிய சிறையில் கொன்று புதைக்கப்பட்ட 1270 நபர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு.
லிபியாவில் நீண்ட காலமாக ஆட்சி நடத்திய அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. எனவே அவரது ஆட்சி வீழ்ந்தது.அவரது மகன்கள், மகள் மற்றும் ஆதரவாளர்கள் லிபியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தற்போது லிபியாவில் இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது.
புதிய அரசு இன்னும் ஒரு வாரத்தில் அமைக்கப்பட்டு பதவி ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைநகர் திரிபோலியில் உள்ள அபுசலீம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் கடாபி ராணுவத்தால் கொன்று புதைக்கப்பட்டிருப்பதை இடைக்கால அரசு கண்டுபிடித்துள்ளது.
கடாபிக்கு எதிராக செயல்படுபவர்கள் கைது செய்யப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ராணுவத்துக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லையெனில் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு 1270 பேர் கொலை செய்யப்பட்டு சிறைக்குள்ளேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 1996ம் ஆண்டு முதல் இந்த கொடூர செயல் நடந்துள்ளது. அந்த சிறையை சமீபத்தில் பார்வையிட்ட இடைக்கால அரசின் பிரதிநிதிகள் அங்கு ஆய்வு செய்தனர்.
அப்போது சிறையின் பின்புறம் மனித எலும்புகள் சிதறி கிடந்தன. பலரது உடையும் மண்ணின் மேற்பரப்பில் தெரிந்தது. இதுகுறித்து அங்கு பணி புரியும் சிறை காவலர்களிடம் விசாரித்தபோது மேற்கண்ட தகவல் தெரிய வந்துள்ளது.எனவே சிறையின் பின்புறத்தில் கைதிகள் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கனில் அமெரிக்க உளவுத்துறை அலுவலகத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறை அலுவலகத்தில் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் அரியனா ஓட்டல் வளாகம் உள்ளது. அதை அமெரிக்காவின் மத்திய உளவு நிறுவனமான சி.ஐ.ஏ பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை 4.45 மணியளவில் தீவிரவாதிகள் அந்த அலுவலகத்துக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு அமெரிக்க படைகளும் சுட்டன. இந்த சண்டை சில மணி நேரம் நடந்தது. இந்த தகவலை ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சித்திக் சித்திடு உறுதி செய்துள்ளார்.
அங்கு துப்பாக்கி சத்தம் கேட்டதை பொலிசார் கேட்டதாக அவர் கூறினார். அது கூட்டு படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு ஆப்கானிஸ்தான் படைகளோ, பொலிசாரோ நுழைய முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் அச்சம்பவத்தை வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிகாரிகளும் உறுதி செய்தனர். நிலைமையை சமாளிக்கப்பட்டு விட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து சொல்ல காபூலில் உள்ள அமெரிக்க தூதர் கவின் சுந்தாவால் மறுத்து விட்டனர். சமீபகாலமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க தூதரகத்தில் புகுந்து 19 மணி நேர தாக்குதல் நடத்தினர். மேலும் முன்னாள் அதிபர் பக்ருதீன் ரப்பானியை மனித குண்டு மூலம் கொலை செய்தனர்.இச்சம்பவங்களுக்கு அல்கொய்தா ஆதரவு பெற்ற பாகிஸ்தானின் ஹக்கானி தீவிரவாதிகள்தான் காரணம் என அமெரிக்கா கூறியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறை அவர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டியிருந்தது.
பயங்கரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்.
லண்டனின் வெம்பிளி அரங்கில் மினாஜ் உல் குரான் எனும் இஸ்லாமியக் குழுவின் 12,000 முஸ்லிம்கள் திரண்டு பயங்கரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.2012இல் சமாதானத்தை ஏற்படுத்தும் திட்டத்திற்காக ஒரு மில்லியன் மக்களை ஒன்லைனில் கையெழுத்திட வைத்து இந்த மாநாடு கூட்டப்பட்டிருந்தது.
10 வருடமாக இடம்பெறும் பயங்கரவாதச் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என இந்த மாநாடு ஒரு செய்தியை வெளிப்படுத்தும் என மினாஜ்-உல்-குரானின் நிறுவுனர் தெரிவித்துள்ளார்.இவரது பேச்சின் போது பயங்கரமான 9/11 என்று ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட போதும் அவருக்குக் கைதட்டல்கள் பாராட்டாகக் கிடைத்தன.
வழமையாக இந்த அரங்கில் பொப் நட்சத்திரங்கள் தான் கூட்டங்களை இழுப்பார்கள். ஆனால் இன்று இந்த முஸ்லிம் கல்வியாளர் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தார்.இவரது சொற்கள் கருத்தாழமிக்கவையாக இருந்தன. இஸ்லாமிற்கும் பயங்கரவாதத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்த அவர் பயங்கரவாதத்தினையும் பயங்கரவாதிகளையும் கண்டித்தார்.
இக்கூட்டத்தை ஒழுங்குசெய்ய இவர்களுக்கு ஒரு வருடம் தேவைப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பலதரப்பட்ட மொழிகளில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதன் போது முன்னரே பதியப்பட்ட பல தலைவர்களது கருத்துக்களும் ஒலி, ஒளி பரப்பப்ட்டன.
இங்கு பலதரப்பட்ட சமயங்களினதும் குருமார்களும் கலந்து கொண்டு அமைதிக்கான வேண்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.இதில் முஸ்லிம் உலகில் ஜனநாயகம் மற்றும் நல்ல செயற்பாடுகளுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் ஏழ்மைக்கு எதிராகவும் பிரகடனங்கள் செய்யப்பட்டன.
சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை.
சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
அங்கு பெண்கள் ஓட்டு போடக்கூடாது. மற்றும் ஓட்டு போடுவதற்கும் உரிமை இல்லை. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் வாழும் பெண்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள நகரசபை தேர்தலில் போட்டியிடவும், ஓட்டு போடவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான அறிவிப்பை சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா(87) நேற்று அறிவித்தார். அப்போது அடுத்து நடைபெற உள்ள நகராட்சி கவுன்சிலர்கள் தேர்தலில்(ஷீரா) பெண்களையும் பங்குபெற செய்ய முடிவு செய்துள்ளோம் என அறிவித்தார்.சவுதி அரேபியாவில் வருகிற 29ந் திகதி 285 நகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடக்கிறது. அதில் 5 ஆயிரம் ஆண்கள் போட்டியிடுகின்றனர்.இதைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேர்தலில் பெண்களும் பங்கேற்க முடியும். தேர்தலில் அவர்களும் போட்டியிடலாம். ஓட்டு போடலாம்.
உரிமைகளுக்காக கடந்த சில மாதங்களாக முஸ்லிம் நாடுகளில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. அந்த நிலை இங்கும் ஏற்படக்கூடாது என கருதி அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்து சவுதி அரேபிய மன்னர் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்ததாக தெரிகிறது.சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி தற்போது அங்கு பெண்கள் கார் ஓட்டி வருகின்றனர். இதேநிலை மற்ற விஷயங்களிலும் ஏற்பட்டு விடக்கூடாது என அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் துப்பாக்கிச் சூடு: 13 பேர் பலி.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் நடந்த சண்டையில் 13 தீவிரவாதிகள் பலியாயினர்.பிலி்ப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஹிலிடாலிப்போ நகரத்தில் துப்பாக்கி ஏந்தி வந்த 50 தீவிரவாதிகள் திடீரென அதிகாலையில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் 13 தீவிரவாதிகளும், இரு கடற்படை வீரர்களும் உயிரிழந்தனர் என்று கடற்படைத் தலைவர் கால் ரோமியோ டெனால்கொ கூறினார்.இத்தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இத்தீவிரவாதிகள் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தினரால் பயிற்சி பெற்றவர்களாக இருக்கலாம் என்று பிலிப்பைன்ஸ் ராணுவ அலுவலகம் கருதுகிறது.
இத்தீவிரவாதிகள் ஹடீப் காரியாவை தலைவனாகக் கொண்ட புதியதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத இயக்கம் என்று ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கால் ரான்டோல்ப் கேபன்ங்பேங் கூறினார்.அப்பகுதியில் நடந்து கொண்டிருக்கின்ற வளர்ச்சிப் பணிகளை எதிர்த்தே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று டெனால்கொ கூறினார்.
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி.
ஈராக்கின் கர்பாலா நகரில் நிகழ்ந்த தொடர் கார் குண்டு வெடிப்புகளில் 12 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஈராக்கின் தலைநகர் பாக்தாத் நகரில் 90 கி.மீ தொலைவில் உள்ள கர்பாலா நகரில் அரசு கட்டடம் ஒன்று உள்ளது.
இங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்து அருகே உள்ள பொலிஸ் ஸ்டேஷனிலும் இரு முறை வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.இந்த தாக்குதலில் 12 பேர் பலியாயினர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
யூரோ மண்டலத்தின் கடன் நெருக்கடி பரவினால் சமாளிக்க முடியாது: ஐ.எம்.எப் தலைவர்.
யூரோ மண்டலத்தின் கடன் நெருக்கடி பிற நாடுகளுக்கும் பரவும் பட்சத்தில் அவற்றுக்கு கடன் தவணைகள் அளிப்பதற்கான பணம் சர்வதேச நிதியமைப்பிடம் இல்லை என கிறிஸ்டைன் லகார்ட் தெரிவித்துள்ளார்.
யூரோ நாணயம் பயன்படுத்தும் 17 நாடுகளில் தற்போது கிரீஸ் எந்நேரமும் திவாலாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா தலைவர்களிடம் கிரீசை திவால் ஆவதில் இருந்து மீட்பதற்கு எவ்வித யோசனையும் இல்லை.
இந்நிலையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஐ.எம்.எப் தலைமையகத்தில் இரு நாட்களாக உலக நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.
மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் வராமல் தடுப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து பேட்டியளித்த ஐ.எம்.எப் தலைவர் கிறிஸ்டைன் லகார்ட்,”ஐ.எம்.எப்.பிடம் தற்போது உள்ள பணம் தற்போதைய பிரச்னைகளைச் சமாளிக்க போதுமானது தான். ஆனால் இந்தக் கடன் நெருக்கடி பிற நாடுகளுக்கும் பரவும் பட்சத்தில் அவற்றுக்கு கடன் தவணைகள் அளிக்க ஐ.எம்.எப்.பிடம் பணம் இல்லை” எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கனடா நாட்டுப் பிரதிநிதிகள் மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் ஏற்படுமானால் அதைப் போக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.அதேநேரம் கிரீஸ் நிதியமைச்சர் இவாஞ்சலோஸ் வெனிசுலோஸ் கூறுகையில்,“கிரீஸ் ஒரு போதும் திவாலாகாது. யூரோ மண்டலத்தை விட்டு வெளியேறாது. அந்த நிகழ்வுகள் நடந்தால் அது யூரோ மண்டலத்தை மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்” என உறுதியளித்தார்.
அணுசக்தி ரகசியங்களை லிபியாவிற்கு பாகிஸ்தான் வழங்கியது அம்பலம்.
பாகிஸ்தான் தனது அணுசக்தி ரகசியங்களை ஈரான் மற்றும் லிபியா போன்ற நாடுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.மேலும் அந்த ரகசியங்களைப் பெறுவதற்காக லிபியா கொடுத்த ஐந்து மில்லியன் டொலர் பணம் இந்தியா, சிங்கப்பூர் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இயங்கி வரும் “பாக்ஸ் நியூஸ்” செய்தி நிறுவனம் ஐ.எஸ்.ஐ.யின் சில ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணங்களில் இருந்து பாகிஸ்தானின் அணுசக்தி ரகசியங்கள் லிபியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு விஞ்ஞானி அப்துல் காதீர் கான் மூலம் கடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானின் பிரபல அணுசக்தி விஞ்ஞானியான அப்துல் காதீர் கான் 2004ல் நாட்டின் விஞ்ஞான ரகசியங்களை ஈரான், ஈராக், வடகொரியா, லிபியா ஆகிய வெளிநாடுகளுக்கு கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இதற்கான ஆதாரங்களை அமெரிக்கா அப்போது வெளியிட்டிருந்தது. தொடர்ந்த விசாரணையில் 2009ல் கான் மீதான குற்றச்சாட்டுகளை இஸ்லாமாபாத் ஐகோர்ட் நிராகரித்து அவரை வழக்கில் இருந்து விடுவித்தது.
இவ்வழக்கு நடந்து கொண்டிருந்த போது ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் கானை நேரில் அழைத்து விசாரித்ததாக செய்திகள் வெளியாயின. ஆனால் அப்போது அதை அதிகாரிகள் மறுத்தனர்.இதையடுத்து அதற்கான ஆதாரங்கள் மேற்கத்திய நாடுகளின் உளவுத் துறைகளுக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் சிலவற்றைத் தான் தற்போது பாக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ ஆவணங்களில் இதுகுறித்து கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான அணுசக்தி தொழில் நுட்பங்களை சட்ட ரீதியாகவும், கள்ளத்தனமாகவும் வெளிநாடுகளில் இருந்து பெறுவதற்கு அரசு பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.அதற்கு வசதியாக 1976ல் அணுசக்தி ஆராய்ச்சிக் கழகம் நிறுவப்பட்ட போது அதன் திட்ட இயக்குனருக்கு எல்லையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
இலங்கைத் தமிழர்களும், துபாயில் வசித்து வருபவர்களுமான பரூக் மற்றும் தாகிர் இருவரும் கானின் திட்டங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அணுசக்தி தொழில்நுட்பங்களைப் பெறுவதற்காக லிபியா இவர்கள் இருவரிடமும் ஐந்து மில்லியன் டொலர் பணம் கொடுத்தது.
அதில் கொஞ்சம் டாக்டர் நியாசி வழியாக இந்தியா, சிங்கப்பூர் என அனுப்பப்பட்டு ஐதர் ஜமானின் வங்கிக் கணக்கில் போடப்பட்டது. இந்தக் கணக்கில் இருந்து தாகிர் கொஞ்சம் எடுத்து தகவல்கள் அளித்தவர்களிடமும், கானால் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட சமூக, கல்வி நலத் திட்டங்களுக்கும் அனுப்பியுள்ளார்.டாக்டர் நியாசி மூலம் லிபியர்களைத் தொடர்பு கொள்ள பரூக் முக்கியமானவராக இருந்திருக்கிறார். இவர் தான் வரைபடங்களை லிபியர்களுக்கு அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்: விளாடிமிர் புடின்.
ரஷ்யாவில் அடுத்தாண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அந்நாட்டுப் பிரதமர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.ரஷ்யாவில் தற்போது பிரதமராக விளாடிமிர் புடினும், அதிபராக டிமிட்ரி மெட்வடேவும் உள்ளனர். கடந்த 2000 முதல் 2008 வரை புடின் அதிபராக இருந்தார்.ரஷ்ய அரசியல் சாசனம், ஒருவர் இருமுறைக்கு மேல் தொடர்ந்து அதிபராக இருக்கக் கூடாது என, தடை விதித்திருப்பதால் 2008ல் புடின் மெட்வடேவை அதிபராக்கி தான் பிரதமரானார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாஸ்கோவில் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சியின் ஆண்டுக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய அதிபர் மெட்வடேவ்,“அதிபர் தேர்தலில் வேட்பாளராக புடின் நிற்பதற்கு கட்சி ஆதரவளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இதன்பின் பேசிய புடின் அதிபர் வேட்பாளராக நிற்க ஒப்புக் கொண்டார். 2012ல் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் நிற்க எனக்கு வாய்ப்பு தந்தமைக்கு கட்சிக்கு நான் நன்றி கூறுகிறேன் என்றார்.அடுத்தாண்டு நடக்க உள்ள தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் யார் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற குழப்பத்துக்கு புடினின் இந்த ஒப்புதல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதே நேரம் பிரதமர் பதவிக்கு மெட்வடேவ் வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையில் புடினின் ஆதரவாளரும், தற்போதைய ரஷ்ய நிதியமைச்சருமான அலக்சி குத்ரின் நேற்று வாஷிங்டனில் அளித்த பேட்டியில், தற்போதைய அதிபர் மெட்வடேவ் பிரதமராகும் பட்சத்தில் தான் அவரது அமைச்சரவையில் பணியாற்ற முடியாது என கூறியுள்ளார்.குத்ரின் பிரதமர் பதவியைக் குறிவைத்துள்ளதாகவும், அதனால் தான் அவர் இவ்விதம் பேசியுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் உடனே நாடு திரும்ப உத்தரவு.
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்துக்காக அமெரிக்கா சென்றிருந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கர்ரை உடனே நாடு திரும்பும்படி அந்நாட்டுப் பிரதமர் கிலானி உத்தரவிட்டார்.
ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவதற்கு ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஆதரவளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதையடுத்து கிலானி இவ்வாறான நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
“அந்நிய சக்திகளில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிக்க அனைத்து அரசியல் கட்சியினரின் கூட்டத்தைக் கூட்டவும் கிலானி ஏற்பாடு செய்துள்ளார்” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடாபி சொந்த ஊரின் மீதான தாக்குதல்கள் நிறுத்திவைப்பு.
லிபிய அதிபர் மம்மர் கடாபியின் சொந்த ஊரான சிர்தேவின் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடாபியின் சொந்த ஊரான சிர்தே அரசு எதிர்ப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. கடாபியின் படைகளுக்கும், அரசு எதிர்ப்புப் படைகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமையிலிருந்து கடுமையான சண்டை நடந்து வந்தது.
இந்நிலையில் நேட்டோவின் உத்தரவின் பேரில் அரசு எதிர்ப்புப் படையினர் தங்கள் தாக்குதல்களை நிறுத்தியுள்ளனர். நேட்டோ படையினர் தாக்குதல்களை மேற்கொள்ள உள்ளதாலேயே அரசு எதிர்ப்புப் படையினரின் தாக்குதல் திங்கள்கிழமை வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நகரைக் கைப்பற்றும் நோக்கில் வலுவான சுற்று முற்றுகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கவச வாகனங்களும், பீரங்கிகளும், ராக்கெட் ஏவு வாகனங்களும் நகரைக் குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன.
தாக்குதல் தொடங்கப்பட்டால் நகரினுள் கடுமையான சண்டை மூளும் என்றும், வீதிகளில் தான் அதிகளவில் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெறும் என்றும் அரசு எதிர்ப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கூறினார்.
முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற சண்டையில் அரசு எதிர்ப்புப் படையினர் 7 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 145 பேர் காயமடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF