Sunday, October 24, 2010

ஈராக் போர் ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு


கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் லீக் ஆன விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
2004 ம் ஆண்டு முதல் 2009 வரை ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து அதிபர் சதாம் உசேன் வரை சிறையில் தள்ளப்பட்டு அவரும் தூக்கிலிடப்பட்டார். இந்த போருக்கு பின் ஈராக்கில் ஜனநாயக தேர்தல் நடத்தப்பட்டு அங்கு புதிய ஆட்சி கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் விக்கிலீக் இணையதளத்தில் ஈராக் போர் ஆவணங்கள் லீக் ஆகி இருக்கிறது. 4 லட்சம் ரகசியம் கொண்ட ஆவணங்களில் அமெரிக்காகவின் அத்துமீறல்கள், அட்டூழியங்கள், மற்றும் போர் வீரர்கள், பொதுமக்கள் துன்புறுத்திய சம்பவம் கொண்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு புகைப்படங்கள் மிக கொடூரமானதாக இருக்கிறது. சரண் அடைய வந்தவர்களை சுட்டுக்கொல்வது, சிறையில் அடைத்து துன்புறத்துவது, கண்ணைக்கட்டி கொடுமைபடுத்துதல், சிகரெட்டால் கண்ணை சுடுதல், ரத்தகளறியுடன் கதற விடுவது போன்ற புகைப்பட காட்சிகள் இதில் உள்ளன.
இந்த ஆவணங்கள் சட்டவிரோதமாக வெளியாக தந்திரமாக தயார் செய்யப்பட்டது என அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த போர் ஆவணம் லீக் ஆன விஷயம் அமெரிக்க போர் வரலாற்றிலேயே இதுவரை நடக்காதது என முன்னாள் போர்ப்படை தளபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆவணத்தின்படி ஈராக்கில் மொத்தம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் 66 ஆயிரத்து 81 பேர். 23 ஆயிரத்து 984 பேர் கிளர்ச்சிக்காரர்கள், 15 ஆயிரத்து 195 பேர் ஈராக் போர்படையினர் ஆவர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, October 23, 2010

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

When medications aren't enough, sometimes invasive procedures are used to help treat heart disease.
Your heart is an amazing powerhouse that pumps and circulates 5 or 6 gallons of blood each minute through your entire body.
A human aorta opened lengthwise showing atherosclerosis (thickening and hardening of the arterial wall as a result of fat deposits on the inner surface).
If plaque completely blocks blood flow, it may cause a heart attack (myocardial infarction) or a fatal rhythm disturbance (sudden cardiac arrest).
உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம்.
ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.
மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

மாரடைப்பு என்றால் என்ன?
அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்
 மாரடைப்பு என்றால் என்ன? ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது.
இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது.
இதுவே மாரடைப்பு. இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது? ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.
மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?
காரணங்கள் இரண்டு. ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை. கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் – புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய். கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் – வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை. இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.
மாரடைப்பின் அறிகுறிகள்? மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம். சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு “அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.
இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்:
பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.
சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும்.
இதற்கு “ஆஞ்சைனா’ என்று பெயர். நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி.
மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஞாபகமறதிப் பிரச்சினையா?


படிக்கும் மாணவ, மாணவிகளில் பலரும் ஞாபகமறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்துபோய்விடுகிறதே என்று வேதனைப்படுகிறார்கள்.
ஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபட, மாணவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்…
* இரவில் பாடம் படித்தபின், வேறு எந்த வேலையையும் செய்யாமல் தூங்கச் சென்றுவிடுங்கள்.
* மறுநாள் காலை எழுந்து, இரவில் படித்தவற்றை ஞாபகப்படுத்திப் பாருங்கள். வேறு எந்த வேலையிலும் உங்களை ஈடுபடுத்திவிடாதீர்கள். காரணம் அந்த வேலை பற்றிய நினைவுகள் ஏற்கனவே நீங்கள் படித்தவற்றை மறக்கடிக்கும் வாய்ப்புள்ளது.
* கணக்குப் பாடங்களைப் பார்க்கப் போகிறீர்களா? அதற்கு முன் மூளைக்கு அதிக வேலை கொடுக்கின்ற செயலில் ஈடுபடாமல் மனதைக் கொஞ்சம் ஓய்வாக வைத்திருந்துவிட்டு பிறகு படிக்கச் செல்லுங்கள்.
* இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிப்பது என்று இல்லாமல், போதுமான அளவு உறங்குவது ஞாபகசக்தியைப் பாதிக்காமல் இருக்கும்.
* ஒரு சிக்கலான பாடத்தைப் படிக்கிறீர்கள். அது மூளையில் பதியவில்லை. அதே ஞாபகமாகத் தூங்கச் செல்கிறீர்கள். தூங்கும்முன் அந்தப் பாடத்தை மனத்திரையில் கொஞ்சம் ஓடவிடுங்கள். காலையில் அந்தப் பாடம் மனதில் ஏறக்குறைய முக்கால்வாசி பதிந்திருப்பதை உணர முடியும். மீதி கால் பாகத்தை மீண்டும் ஒருமுறை வாசிப்பதன் மூலம் படித்து முடித்துவிடலாம். இது மனோவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை.
* பொதுவாக காலையில் மனம் தூய்மை, புத்துணர்வோடு இருக்கும். கடினமான பாடங்களை அந்த வேளையில் படித்தால் எளிதில் மனதில் பதியும்.
* ஒரு கேள்விக்கான பதிலைப் போல மற்றொரு கேள்வியின் பதில் இருந்தால், அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல அக்கேள்விகளின் விடைகள் நேர் எதிர்மறையாக இருந்தாலும் அந்த இரண்டையும் தொடர்புக்குள்ளாக்கி நம்மால் நினைவுக்குக் கொண்டுவர முடியும். நமக்குப் புரிகிற மாதிரியான தொடர்புமுறையை ஏற்படுத்திக்கொண்டால் போதும்.
* முறையான மறுபார்வை (ரிவிஷன்), நல்ல நினைவாற்றலையும், கற்றலை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும் ஆற்றலையும் நிச்சயம் தரும்.
* நாம் உண்ணும் உணவுக்கும், ஞாபகசக்திக்கும் தொடர்பு உண்டு. புரதம் அதிகம் கிடைக்கும் கீரை, காய், கிழங்கு போன்றவற்றை அதிகம் உண்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். வல்லாரைக் கீரை, நினைவாற்றலைக் கூட்டும்.
* படமாகக் கண்ணால் காண்பதை நாம் அதிகம் மறப்பதில்லை. எனவே பாடம் தொடர்பான படங்களை அடிக்கடி புரட்டிப் பார்க்க வேண்டும். வரைந்து பார்க்க வேண்டும்.
* பெரிய பாடப் பகுதிகளுக்கு, அவை தொடர்பான சிறுசிறு குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்வதும், அவற்றை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்வதும் பலனளிக்கும்.
* எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமான விஷயம், ஈடுபாடு. நாம் என்றோ பார்த்த ஒரு சினிமாவில் காட்சி, வசனத்தை அப்படியே மறக்காமல் கூறுகிறோம். ஆனால் நேற்றுப் படித்த பாடத்தை மறந்துவிடுகிறோம். அதற்குக் காரணம், ஆர்வம், ஈடுபாடுதான். படிப்பதை கடமையாக மேற்கொள்ளாமல், பிடித்தமான விஷயமாக மாற்றிக் கொண்டால் நிச்சயம் மறக்காது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க


நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த பாடல்கள், படங்கள், நகைச்சுவை மற்றும் தொழில்நுட்பம் இப்படி ஏராளமான வீடியோக்களை நாம் இனையத்தில் பார்த்து ரசிக்கிறோம்.
இந்த வீடியோக்களை பார்க்கவே இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் Youtube, Daily motion, Meta cafe போன்ற தளங்கள் பிரபலமானவை.
ஒருசில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணினியில் சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால் இந்த தளங்களில் நாம் வீடியோவை பார்க்க மட்டுமே முடியும் தரவிறக்க முடியாது. இதை போக்கவே ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.
பயன்கள்:
உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமானது.
இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
நமக்கு தேவையான வீடியோவின் url கொடுத்து START பட்டனை அழுத்தினால் போதும் அந்த வீடியோ நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.
வீடியோ டவுன்லோட் திறன் மிகவும் வேகமாக உள்ளது.
வீடியோவை தரவிறக்கும் போதே நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றும் வசதி(AVI,MP4,WMV)
வீடியோவில் உள்ள பாடலை மட்டும் தனியே பிரித்தெடுக்கும் வசதி.
இப்படி ஏராளமான வசதிகளை பெற்று உள்ள இந்த மென்பொருளின் அளவு 7.19 MB மட்டும் தான்.
பயன் படுத்தும் முறை:
இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களுக்கு வரும் EXE பைலை இரண்டு முறை க்ளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
இப்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள சார்ட்கட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இங்கு நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL காப்பி செய்து அங்கு கொடுக்க பட்டிருக்கும் URL என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும்.
அடுத்த கட்டத்தில் SAVE TO என்ற இடத்தில் உங்கள் வீடியோ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.
அடுத்து OUTPUT என்ற இடத்தில் நீங்கள் இந்த வீடியோவின் வகையை(FORMAT) தேர்வு செய்து கொள்ளவும். மாற்றவேண்டாம் என்றால் WITH OUT CONVERSION என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
அடுத்து கீழே உள்ள START என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் உங்கள் வீடியோ நீங்கள் தேர்வு செய்த இடத்தில் வந்திருக்கும். உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்தி வரும்.
அவ்வளவு தான் இந்த முறையை பயன்படுத்தி இணையத்தில் உள்ள வீடியோக்களை எளிதாக தரவிறக்கி கொண்டு நினைத்த நேரத்தில் பார்த்து ரசித்து கொள்ளலாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கூகுள் குரோம் 7ஆம் பதிப்பு வெளியீடு

Google Chrome
கூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு மகிழ்சியான செய்தி கூகுள் குரோம் தனது புதிய பதிப்பான கூகுள் குரோம் 7வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
இவ் பதிப்பானது விண்டோஸ், லினக்ஸ், மற்றும் அப்பள் ஸ்ரிப்பான(AppleScript) மெக்(Mac) இயங்கு தளங்களுக்கு இயக்க முடியும்.
முன்தைய பதிப்பில் காணப்பட்ட பல குறைபாடுகள் பிழைகள் இவ் பதிப்பு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பிரிட்டன் அணு நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானது






பிரிட்டனைச் சேர்ந்த அணுசக்தி நிரம்பிய நீர்மூழ்கிக் கப்பல் பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் இதனால் ஆபத்து எதுவும் இல்லை என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
ஹெச்.எம்.எஸ். அஸ்டூட் என்ற இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அணு உலைகள் மூலம் இயங்குவதாகும். இது 2007ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படது.
328 அடி நீளம் உள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஸ்காட்லாந்து மேற்குக் கடலில் ஸ்கை என்ற தீவுக்கருகே பாறைகளில் மோதியது.
"இது அணு தொடர்பான சம்பவம் அல்ல, இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இந்த நீர்மூழ்கிக் கப்பல் அணுசக்தியில் இயங்கினாலும் ஆபத்து ஒன்றுமில்லை, இதனால் சுற்றுச்சூழல் தாக்கம் எதுவும் இல்லை." என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, October 21, 2010

1.5 மில்லியன் கார்களை திரும்பப் பெற்றது டொயோட்டா


உலகம் முழுதிலும் டொயோட்டா நிறுவன கார்களை பயன்படுத்தும் பலர் பிரேக் சரியாக இயங்கவில்லை எனக் கொடுத்த புகாரினை தொடர்ந்து குறையிருப்பதாக கண்டறியப்பட்டுள்ள 1.5 மில்லியன் கார்களை திரும்பப் பெறும் முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது.
இந்த வருடத்தின் முற்பகுதியில் உலகின் மிகப்பெரிய கார் நிறுவனமான டொயோட்டாவின் கார்களில் பாதுகாப்பு சரியான வகையில் இல்லை என்ற சர்ச்சை உண்டானது அந்நிறுவனத்திற்கு பெரும பாதிப்பை உண்டாக்கியது. இதைத் தொடர்ந்து ஜப்பான் , அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் டொயோட்டா காரை வாங்கியோர் இதன் ப்ரேக்கில் இருந்து திரவம் கசிவதாக புகாரளித்தனர்.
இது பெரிய பிரசசினை என்பதை உணர்ந்த அந்நிறுவனம் செப்டம்பர் 2004 முதல் பெப்ரவரி 2006 வரையிலான காலகட்டங்களில் தயாரிக்கப்பட்ட கார்களை திரும்பப் பெறுவதென அறிவித்துள்ளது. பிரிட்டனில் மட்டும் 2,081 லெக்சஸ் மாடல் கார்கள் திரும்பப் பெறப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, October 20, 2010

2010 இறுதியில் 2000 மில்லியன் இணையப் பாவனையாளர்கள்


இவ் வருட இறுதியில் உலக சனத்தொகையில் மூன்றில் ஒருவர் இணையப் பாவனையாளர்களாக இருப்பார்கள் என ஐக்கிய நாடுகளின் ஆய்வுறிக்கையொன்று தெரிவிக்கின்றது. 

கடந்த 5 வருடங்களில் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதாவது 2000 மில்லியன்களாக அதிகரித்துள்ளது.

226 மில்லியன் பேர் புதிதாக இவ்வருடத்தில் இணையத்தைப் பாவிக்கத் தொடங்கியுள்ளனர்.

இவர்களில் அநேகர் வளர்ந்துவரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

மேற்படி அறிக்கையின் படி வருட இறுதியில் மேலைத்தேய நாடுகளின் சனத்தொலையில் 71 % இணையப் பாவனையாளர்களாக இருப்பார்கள். 

மேலும் மொபைல் இணையம் மற்றும் புரோட்பேன்ட் (Broadband) ஆகியன வேகமாக வளர்ந்துவருவதாகவும் இது பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் உந்துதலாக உள்ளதாகவும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இண்டர்நெட் எக்ஸ்புளோரரை முழுவதுமாக பேக்அப் எடுக்க



என்னத்தான் சந்தைக்கு புதிய புரவுசர்கள் வந்துகொண்டிருந்தாலும் எக்ஸ்புளோரர் மீது மக்களுக்கு உள்ள மோகம் இன்னும் குறையவில்லை என்றே கூறலாம். இணைய உலகில் பலரது கையினை கட்டிபோட்டுருப்பது எக்ஸ்புளோரர் தான் என்றால் அது மிகையல்ல.
உலகில் அதிகம் நபர்களால் பயன்படுத்தப்படும், புரவுசர்கள் பட்டியலில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர்க்குதான் முதலிடம். இந்த IE-தொகுப்பானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடையது ஆகும். அண்மையில் எக்ஸ்புளோரரின் புதிய தொகுப்பு வெளியானது என்பது குறிப்பிடதக்கது.
மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிகொள்ளவும், பின் அதை ஒப்பன் செய்து பேக்அப் செய்து கொள்ள முடியும். இது அன்மையில் வெளியான IE தொகுப்பாப 9 பீட்டாவிற்கும் பொருந்தும்.
இவ்வாறு எக்ஸ்புளோரர் தொகுப்பினை Backup செய்துகொள்வதன் மூலமாக ஒரு கணினியில் உள்ள புக்மார்க், Setting போன்றவற்றை மற்ற கணினியில் நிறுவிகொள்ள முடியும்.
இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் BackRex பேக்அப் செய்பவை:
Favorites
Proxy & connection settings
Security zones
User customizations
Cookies
History
Dialup accounts
Form Autocomplete entries
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, October 19, 2010

மனம் திறக்கிறார் பில் கேட்ஸ்

தன் புதிய வகை உடைமையால், உலகின் பெரிய பிரச்சனைகளுக்கு விடை காணலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் பில் கேட்ஸ். தன் அதீத ஆர்வமுடைய மற்றும் குறும்பான 18 நிமிடம் பேச்சு மூலம், இரு வினாக்களை எம்மிடம் எழுப்பி, அதற்கான விடைகளை தருகிறார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, October 18, 2010

செல்பேசியால் மூளை புற்றுநோய்?


நீங்கள் செல்பேசியை அதிகம் பயன்படுத்துபவரா? அதாவது ஒவ்வொரு நாளும் வணிக ரீதியாகவோ, கல்வித் தொடர்பாகவோ மற்றவர்களுடன் நீ்ண்ட நேரம் செல்பேசியில் பேசக் கூடியவரா? அப்படியென்றால் செல்பேசியால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பாக செய்யப்பட்டுள்ள ஆய்வுகளையும் அதன் முடிவுகளையும் நீங்கள் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் செல்பேசியில் நீண்ட நேரம் பேசினால் நமது காதைச் சுற்றி வெப்பம் தாக்குவதையும், அதனால் ஒரு விறுவிறுப்பு ஏற்படுவதையும் நிச்சயம் உணர்ந்திருப்போம். செல்பேசி வெப்பமடைந்திருப்பதையும் கவனித்திருப்போம். ஆனால், இவை யாவும் நமக்கு உடல் ரீதியான ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையே என்பதை உலகம் உணர்ந்த அளவிற்கு இலங்கையில் நாம் பெரிதாக உணரவில்லை.
உலக நாடுகளில் இதுபற்றிய உணர்தல் அதிகரித்துள்ளது. “செல்பேசியில் இருந்து வெளிப்படும் நுண்ணிய ஒலி அலைகளால் உருவாகும் ஒருவித கதிர் வீச்சு நமது உடலில், குறிப்பாக நமது மூளையில் செயல்பட்டுவரும் உயிரணுக்களை பாதிக்கின்றன, டிஆக்சிரிபோ நியூக்ளிக் ஆசிட் (டிஎன்ஏ) என்றழைக்கப்படும் நமது மரபிண குணங்களை வார்த்தெடுக்கும் அணுக்களை அவை சம நிலை பிறழச் செய்கின்றன. இதன் விளைவாக புற்றுநோயை உருவாக்கும் கட்டிகளும், மற்ற நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களையும் உண்டாக்குகின்றன” என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
உலக சுகாதார அமைப்பும் இண்டர்ஃபோன் என்ற அமைப்பின் மூலம் 13 ஐரோப்பிய நாடுகளில் செல்பேசியை அதிகம் பயன்படுத்திவருவோர் 5,000 பேரிடம் ஒரு பெரும் ஆய்வை நடத்தி முடித்துள்ளது. அதன் அறிக்கையும் வெளிவந்துள்ளது. ஆயினும், செல்பேசியால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசனையளிக்கக் கூடிய ஒரு தெளிவான வழிகாட்டல் அறிக்கையை அது வெளியிடவில்லை. ஆயினும், இண்டர்ஃபோன் ஆய்வும் பாதிப்பை உறுதி செய்துள்ளது.
செல்பேசியை அதிகம் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளை ஒன்றுபடுத்தி ஆய்வு செய்த கலிபோர்னியா பல்கலையின் பேராசிரியர் ஜோயல் மாஸ்கோவிட்ஸ், “10 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு மிக அதிகமாக செல்பேசியை பயன்படுத்துபவர்களுக்கு மூளைப் புற்று நோய் தாக்கும் வாய்ப்பு 30 விழுக்காடு அதிகம் உள்ளது” என்று கூறியுள்ளார்.
பிட்ஸ்பர்க் பல்கலையில் நடத்தப்பட்ட ஆய்வும் இந்தப் பாதிப்பை உறுதி செய்துள்ளது. ஆனால், இங்கிலாந்தின் தேச புற்றுநோய்க் கழகம், “செல்பேசியைப் பயன்படுத்துவதால் அப்படிப்பட்ட ஆபத்து ஏதும் இல்லை” என்று கூறியுள்ளது. ஆயினும் செல்பேசியால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் ஆலோசனைகளில் ஐரோப்பிய நாடுகள் இறங்கியுள்ளன.
உதாரணத்திற்கு, செல்பேசி பயன்படுத்துவதால் மூளைக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க ஒரு சட்டத்தையே பிரான்ஸ் நாட்டின் இரு அவைகளும் சமீபத்தில் நிறைவேற்றியுள்ளன. தொலைத் தொடர்பு ஒலிக்கற்றைகள் மூளையைப் பாதிக்காவண்ணம், புதிதாக செல்பேசியை வாங்குவோர் அனைவருக்கும் காதில் வைத்துப் பேசக்கூடிய ஏர்ஃபோன்களை சேர்த்தே விற்குமாறு தயாரிப்பாளர்களை அந்நாடு அறிவுறுத்தியுள்ளது (இதன் விளைவாகவே இப்போதெல்லாம் நாம் செல்பேசி வாங்கினால் அதன் கூடவே இலவசமாக ஒரு ஏர்ஃபோன்கள் அளிக்கப்படுகிறது. அது வளர்ந்த நாடுகளில் கட்டாயம். இங்கு ஒரு கூடுதல் வசதியாக அளிப்பதுபோல் கொடுக்கிறார்கள்).
அதுமட்டமல்ல, செல்பேசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் இப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை (குடி குடியைக் கெடுக்கும், குடிப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் என்பது போன்ற) வாசகங்களுடன் விற்குமாறும், செல்பேசியை பயன்படுத்தும்போது எந்த அளவிற்கு நீங்கள் ஒலிக்கற்றை கதிர் வீச்சிற்கு ஆளாகின்றனர் என்ற அளவை (specific absorption rate - SAR) குறிப்பிடும்படியும் பிரான்ஸ் அறிவுறுத்தியுள்ளது.
“செல்பேசிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து தற்போது எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இல்லை என்கிற ஒரு அடிப்படையே அது பாதுகாப்பானது என்பதற்கான அத்தாட்சியல்ல” என்று பிரான்ஸ் அறிவியலாளர் பேராசிரியர் டேனியல் ஊபர்ஹெளசன் கூறியுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் சுற்றுச்சூழல் நல அறக்கட்டளை எனும் அமைப்பை நடத்திவரும் அறிவியலாளரான முனைவர் தேவ்ரா டேவிஸ் ‘டிஸ்கனக்ட்’ எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். “செல்பேசியில் வெளியாகும் கதிர்வீச்சு தொடர்பான உண்மைகள், அவைகளை மறைக்க செல்பேசி தயாரிப்பாளர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்தப் புத்தகம் மேற்கத்திய உலகில் ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் புத்தகத்தில் செல்பேசியால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பற்றிய முழு விவரங்களையும் அளித்துள்ளார் தேவ்ரா டேவிஸ்.
சுற்றுச் சூழல் மற்றும் தனி மனித நடத்தைகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய்கள் குறித்து ஆய்வு செய்துவரும் பேராசிரியர் முனைவர் பிரான்ஸ் அட்கோஃபர், செல்பேசியில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு நமது மரபுத் தன்மையை பாதிக்கிறது என்றும், மூன்றாம் தலைமுறை செல்பேசிகள் (3G), இரண்டாம் தலைமுறை செல்பேசிகளை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றும் கூறியுள்ளார்.
செல்பேசியால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அதன் தயாரிப்பாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள பாதிப்பைக் காட்டிலும் இரு மடங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது சுதந்திரமான ஆய்வுகளில் இருந்து தெரியவருகிறது.
ஒரு நாளைக்கு 2 முதல் 4 மணி நேரம் செல்பேசியைப் பயன்படுத்துபவரின் உயிரணுவை விட, செல்பேசியைப் பயன்படுத்தாதவரின் உயிரணு பலமாக உள்ளது.
சாதாரணமாக தண்ணீர் தொட்டிகளில் விழுந்த எலி, மிகச் சுலபமாக நீந்தி வெளியே வந்து விடுகிறது. ஆனால் செல்பேசியின் கதிர் வீச்சிற்கு ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக்கப்பட்ட எலியானது, தண்ணீர் தொட்டிக்குள்ளேயே சுற்றி சுற்றி நீந்தி வருகிறது. இதற்குக் காரணம் அதன் மரபணுவில் ஏற்பட்ட பாதிப்பு அதன் இயல்பான திறனை மழுங்கடித்துவிட்டதே.
தங்கள் நாட்டில் சிறுவர்கள் செல்பேசியை பயன்படுத்த பிரான்ஸ் நாடு தடை விதித்துள்ளது. இரஷ்யா, இங்கிலாந்து, கனடா, பெல்ஜியம், இஸ்ரேல், ஃபின்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் சிறுவர்கள் செல்பேசியை பயன்படுத்த வேண்டாம் என்றும், அதனை பெற்றோர்கள் கவனித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளன.
இஸ்ரேல் நாட்டின் பல் மருத்துவர்கள் சங்கம் நடத்திய ஆய்வில், கன்னத்தில் ஏற்படும் மிக அரிதான புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வந்தவர்களில் ஐந்தில் ஒருவர் மிக அதிகமாக செல்பேசியை பயன்படுத்தி வருபவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
செல்பேசியை அதிகம் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எந்த அறிவியலாளர் ஆய்வு மேற்கொண்டாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் நிதியுதவியை தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறுத்தியுள்ளன செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள். அதுமட்டுமின்றி, அப்படிப்பட்ட ஆய்வில் ஈடுபட்ட பல அறிவியலாளர்கள் ஆய்வு அமைப்பில் இருந்தே தூக்கி எறியப்பட்டுள்ளனர் என்பதையும் தேவ்ரா தனது புத்தகத்தில் ஆதாரத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

FILE
இவையணைத்தையும் குறிப்பிட்ட தேவ்ரா டேவிஸ், செல்பேசிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறவில்லை!
இன்றைய நவீன யுகத்தில் செல்பேசியின்றி வாழ்வில்லை என்ற நிலையில் உள்ள நாம் அதனை காது வைத்து பேச வேண்டாம் என்றும், காதில் பொறுத்திக்கொண்டு பேசக் கூடிய ஒலி வாங்கிகளைப் (ஏர்ஃபோன்கள்) பயன்படுத்தியே பேசுமாறும் கூறியுள்ளார்.
செல்பேசிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து உலக நாடுகள் உரிய எச்சரிக்கைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும், அது தொடர்பான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே செல்பேசியை பயன்படுத்துவோர் கீழ்கண்ட பாதுகாப்பான வழிகளை கையாள வேண்டும்:
1. செல்பேசியை ஏர்ஃபோன்களுடன் மட்டுமே பயன்படுத்துங்கள்
2. அதனை பேண்ட் பாக்கட்டிலோ, சட்டை பாக்கெட்டிலோ தொடர்ந்து நீண்ட நேரம் வைத்திருக்காதீர்கள் (பயண நேரத்தில் மட்டும் அவ்வாறு வைத்திருப்பது தவிர்க்க இயலாதது).
3. அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும்போது அதனை மேசையின் மீது வைத்திருங்கள்.
4. இயன்ற அளவிற்கு செல்பேசியில் பேசுவைத் தவிர்த்து, குறுஞ்செய்திகளாக தகவல்களை பரிமாறிக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.
புற்று நோயை வருவதைத் தடுக்க, அது உருவாகும் சூழல் அமையாமல் தடுப்போம் என்று கூறுகிறார் தேவ்ரா டேவிஸ்.
மிகச் சரியான வழிதான்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

புற்று நோய்க்கு மனிதனே காரணம் : ஆய்வு


புற்று நோய் ஏதோ இனம்புரியாத இயற்கை விளைவுகளால் ஏற்படுவதல்ல மாறாக மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட அதிநவீன வாழ்வுதான் காரணம் என்று மான்செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதனின் உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள உடல்ரீதியான மாற்றங்களே சமீப புற்று நோய்க் கட்டிகளுக்குக் காரணம் என்று இவர்கள் கூறுகின்றனர்.
இதனை உறுதி செய்ய அவர்கள் எகிப்திய மம்மிக்களை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான மம்மிக்களை ஆய்வு செய்ததில் ஒரேயொரு மம்மியில் மட்டும் புற்று நோய் இருந்தது உறுதியானது.
பண்டைய எகிப்திய பிரதிகளில் காணப்படும் புற்று நோய்ப் போன்ற நோய்க்கான குறிப்புகள் அனைத்தும் குஷ்ட ரோகத்தினால் ஏற்படும் உடல் ரீதியான அறிகுறிகளை புற்று நோய் என்பதாக அது கூறியுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் தலைவரான மைக்கேல் ஸிம்மர்மேன் மாம்மிக்களில் கட்டிகள் இருந்ததற்கான அடையாளம் இல்லை என்பதால் புற்று நோய் அந்தக் காலக்கட்டத்தில் இல்லை என்று கூறமுடியும் என்று கூறுகிறார்.
"இதனால் புற்ற்நோய் அல்லது புற்று நோய் உருவாக்கக் காரணிகள் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய வாழ்வு முறையே என்று நாம் கருத இடமுண்டு" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"சுற்றுசூழலில் இயற்கையாக உள்ள எந்த ஒரு கூறும் புற்று நோய்க்கு காரணமாக இருக்கவில்லை. இதனால் இது மனிதனால் ஏற்பட்டுள்ள சீரழிந்த, மாசாகிப்போன சூழ்நிலைகளால் உருவானதே" என்று நாம் கூற முடியும்." என்று சக ஆய்வாளரும் பேராசிரியருமான ரொசாலி டேவிட் கூறுகிறார்.
அதாவது எய்ட்ஸ், புற்று நோய் என்பதெல்லாம் ஆதிகாலம் தொட்டே இருந்து வருபவை என்ற பொய்யை மருத்துவ ஆய்வும் கார்ப்பரேட் ஆய்வும் கூறிவரும் இந்த நிலையில் புற்று நோய்க்கு ஒரு வரலாற்றுப் பார்வையை அளிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு காலத்தின் உடல்களை ஆய்வு செய்ததில் நவீன சமூகங்களுக்கு கிடைத்த செய்தி என்னவெனில் "புற்று நோய் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டதே" என்பதுதான் என்று இந்த ஆய்வாளர்கள் அடித்து‌க் கூறுகின்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

தேனீக்கள் (Honey Bees)1



உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி (Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.


தேனீக்களின் பூர்வீக பூமி ஆப்பிரிக்காவாகும். அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் பிறகு ஆசியாவிற்கும் பரவின. காலனி ஆதிக்கத்தின் போது அமெரிக்காவிற்கும் பரவி இன்று அன்டார்டிகாவை தவிர்த்து பூமியின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா தட்பவெட்ப நிலைகளிலும் தேனீக்கள் காணப்படுகின்றன. 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தேனீக்களின் உடற்படிவம் மரப்பிசினிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தேனீக்களின் அமைப்பிலேயே மாற்றமின்றியே காணப்படுகின்றன.


தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.

1. இராணித் தேனீ (Queen-Productive Female)
2. ஆண் தேனீக்கள் (Drone)
3. வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive Female)

இம்மூன்றும் மூன்று விதமான உடல் அமைப்பையும் மூன்று விதமான செயல் பாடுகளையும் உடையதாகும். வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டு இவற்றால் உருவாக்கப்படும் கூடு என்ற இவற்றின் ஒரு சமுதாயம் (Colony) நமக்கு விடை பகர முடியாத பல செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும். பொதுவாக ஒரே உயிரினத்தில் பாலினத்தை வேறுபடுத்திக் காட்டும் சில வேறுபாட்டைத் தவிர பெரிய வேறுபாடுகள் எதுவும் காணப்படுவதில்லை. ஆனால் இந்த தேனீக்கள் இனத்தில் விதிவிலக்காக உள்ளுறுப்புக்கள், வெளியுறுப்புக்கள் மற்றும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க வேறு பல வித்தியாசமான அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றை வரிசைப் படுத்தி காண்போம்.

பொதுவான வேறுபாடுகள்

இராணித் தேனீ ஒரு கூட்டில் ஒன்றே ஒன்றுதான் இருக்கும். ஆண் தேனீக்கள் நூற்றுக்கணக்கிலும் வேலைக்காரத் தேனீக்கள் ஆயிரக் கணக்கிலும் இருக்கும். இராணித் தேனீ மற்ற இரு வகை தேனீக்களைக் காட்டிலும் அளவில் பெரியதாகும். கூடுகளில் இருக்கும் மற்ற எல்லா தேனீக்களுக்கும் இதுதான் தாய் ஆகும். இவற்றால் மட்டுமே முட்டையிட்டு குஞ்சுகளைப் பொறிக்க இயலும். ஆண் தேனீக்கள் இராணித் தேனீக்களை விடச் சற்று சிறியதாகவும், வேலைக்கார தேனீக்கள் மற்ற இரு வகையை காட்டிலும் சிறியதாகவும் இருக்கும். இராணித் தேனீக்கு கொட்டக் கூடிய கொடுக்குகள் இருக்கும். அது இறப்பெய்தும் காலம் வரை மீண்டும் மீண்டும் வளரக்கூடியதாகும். ஆண் தேனீக்களுக்கு கொட்டக் கூடிய கொடுக்குகள் இல்லை. வேலைக்காரத் தேனீக்களுக்கு கொட்டக்கூடிய கொடுக்குகள் உண்டு. ஆனால் ஒரு முறை கொட்டியதன் பின்னர் திரும்ப வளருவதில்லை.


இராணித் தேனீ சராசரியாக மூன்று வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றது. ஆண் தேனீக்கள் இராணித் தேனீயுடன் உறவு கொண்டவுடன் உயிரிழக்கின்றன. இவை சராசரியாக 90 நாட்கள் வரை உயிர் வாழ்கின்றன. வேலைக்காரத் தேனீக்கள் சராசரியாக 28 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை உயிர் வாழ்கின்றன. ஆனால் குளிர் காலங்களில் 140 நாட்கள் வரையில் உயிர் வாழக்கூடியன. இராணித் தேனீ முட்டையிலிருந்து முழு வளர்சியடைந்து வெளிவர 16 நாட்கள் எடுத்துக்கொள்கின்றது. ஆனால் ஆண் தேனீக்களுக்கு 24 நாட்களும் வேலைக்காரத் தேனீக்களுக்கு 21 நாட்களும் ஆகின்றது. வேலைக்காரத் தேனீக்களுக்கு பூக்களிலிருந்து மகரந்தத் தூளைச் சேகரித்து கொண்டு வர அவற்றின் பின் காலில் மகரந்தக் கூடை (Polan Basket) என்ற உறுப்பு அமைந்துள்ளது. இந்த அமைப்பு இராணித் தேனீ மற்றும் ஆண் தேனீக்களுக்கு இல்லை. வேலைக்காரத் தேனீக்களுக்கு பூக்களின் குளுகோஸைத் தேனாக மாற்றக் கூடிய தேன் பை எனும் உள்ளுறுப்பு அமைந்துள்ளது. இந்த அமைப்பும் மற்ற இரண்டு வகை தேனீக்களுக்கும் இல்லை. கூடுகட்ட பயன்படுத்தும் ஒரு வித மெழுகை உற்பத்தி செய்யும் சுரப்பி (Wax Gland) வேலைக்காரத் தேனீக்களுக்கு மாத்திரமே அமைந்துள்ளது. மற்ற இரு வகை ஈக்களுக்கும் இல்லை. இது மட்டுமல்லாது மற்ற சில அம்சங்களும் உண்டு. இப்போது நாம் தேனீக்களை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

இராணித் தேனீ (Queen)

ஒரு உறையில் ஒரு வாள். இதுதான் இராணித் தேனீயின் சித்தாந்தம். ஒரு கூட்டில் ஒரு இராணித் தேனீதான் இருக்க முடியும். இது அளவில் மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்தவுடன் ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் பறந்து வெளியில் செல்கின்றது. தரை மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்திற்கு மேல் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் உறவு கொள்கின்றது. அதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக் கொள்கின்றது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. அவை ஆண் ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும். இவை இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை என்று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகினறது. இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது. இவை தங்கள் இறுதி காலத்தில் கிழப் பருவமெய்தி முட்டையிடும் தகுதியை இழந்துவிடுகின்றன. இதை அறிந்த உடன் வேலைக்காரத் தேனீக்கள் புதிய இராணித் தேனீயை உருவாக்கும் முயற்சியில் துரிதமாக இறங்கிவிடுகின்றன. இராணித் தேனீயை உருவாக்க அறை விரைவாக பழுது பார்க்கப்படுகின்றது. கடைசி நேரத்தில் இடப்பட்ட முட்டைகள் சில தேர்ந்தெடுக்கப்பட்டு இராணித் தேனீயை உருவாக்க கட்டப்பட்ட பெரிய அறைகளில் முட்டைகளை இட்டு விரைவில் பொறித்து வெளிவர ஆவணச் செய்யப்படுகின்றது.


முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்களுக்கு தொடர்ந்து ராயல் ஜெல்லி (Royal Jelly) என்னும் உயர் தர ஊட்டச்சத்து திரவம் தரப்படுகின்றது. இந்த திரவம் தொடர்ந்து ஊட்டப்படும் லார்வா இராணித் தேனீயாக உருமாற்றம் அடைகின்றது. இந்த ராயல் ஜெல்லிதான் ஒரு முட்டை வேலைக்காரத் தேனீக்களின் பிறப்பையும் இராணித் தேனீயின் பிறப்பையும் தீர்மானிக்கும் அம்சமாக விளங்குகின்றது. இந்த திரவம் வேலைக்காரத் தேனீக்களின் சுரப்பியிலிருந்து சுரக்கக் கூடியதாகும். இந்த திரவம் வேலைக்கார தேனீக்களின் லார்வாக்களுக்கு முதல் இரண்டு நாட்கள் மாத்திரமே தரப்படுகின்றது. ஆனால் இந்த ராயல் ஜெல்லி மட்டுமே இராணித் தேனீயின் வாழ்நாள் முழுவதுமான உணவாகும். அரசர்கள் உண்ணும் அறுசுவை உணவைப் போன்றே இவற்றிற்கும் அரசு மரியாதையுடன் முக்கியத்துவம் தரப்பட்டு இந்த உணவு வழங்கப்படுகின்றது. இவ்வாறு தொடர்ந்து இந்த திரவம் கொடுக்கப்படுவதன் மூலம் இவை துரித வளர்சியடைகின்றன. மற்ற தேனீக்களைக் காட்டிலும் 5 முதல் 8 நாட்கள் முன்பாகவே பொறித்து வெளிவருகின்றன. முதலாவதாக வெளிவரும் இராணித் தேனீ போட்டி மனப்பான்மையால் பொறித்து வெளிவரக்கூடிய நிலையில் இருக்கும் மற்ற இராணித்தேனீக்களின் லார்வா அறைகளைத் தாக்கி சேதப்படுத்துகின்றது. இவற்றின் பிறப்பே வாழ்வா! சாவா! என்ற போராட்டத்தின் துவக்கமாகவே அமைந்து விடுகின்றது. வெளிவந்துவிட்ட தன் சகோதரி தேனீக்களுடன் தலைமைத் தனத்திற்காக சண்டையிட்டு ஒன்று இறக்கின்றன அல்லது மற்றவற்றை வெற்றிப்பெற்று இராஜ வாழ்க்கையை எதிர் நோக்கி கூடு திரும்புகின்றன. கடமைக்கு முன்பாக பாசத்திற்கு வேலை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பழைய தாய் கிழ இராணித் தேனீயும் புதிய இராணித் தேனீயால் கொல்லப்படுகின்றது. இத்தகைய போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி பெற்று வரும் இராணிக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்து தங்கள் கடமையை கண்ணும் கருத்துமாகச் செய்திட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருப்பதனால் அங்கே புதிய இராஜ்ஜியத்தில் தேனாறு பாயத் துவங்குகின்றது.

ஆண் தேனீ (Drone)

அடுத்து ஆண் தேனீக்களைப் பற்றிப் பார்ப்போம். இவற்றை ஆண் ஈக்கள் என்பதை விடச் சோம்பேறி ஈக்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இவை பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை.


நான் ஆண் என்று வீரவசனம் பேச இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து சமர்த்தாக நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன. இவை செய்யக் கூடிய உருப்படியான காரியம் என்னவென்றால் புதியதாக பொறித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான். இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன. இவை பறந்த வண்ணம் இராணித் தேனீயுடன் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டவுடன் இவற்றின் சிறகுகள் உதிர்ந்து கீழே விழுந்து இறந்துவிடுகின்றன. மேலும் சில பொழுது இவற்றின் சோம்பேறித் தனத்திற்கு பரிசாகக் கூட்டில் உணவு பற்றாக் குறை ஏற்படும் போது பலவந்தமாக, நிர்கதியாக கூட்டை விட்டு வெளியேற்றப்பட்டு பட்டினியால் சாகடிக்கப்படுகின்றன. மற்றவரை அண்டி வாழ்பவரின் நிலை அதோ கதிதான் என்பது மனித இனத்திற்கும் பொதுவானதுதானே.

வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee)

மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, லார்வாக்கள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப் படுகின்றது. இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது. இதைத்தான் வல்ல நாயன் தன் தூய வசனத்தில் தெளிவுபடுத்தியுள்ளான். விளக்கம் தேவையே இல்லாத வார்த்தைகளினால் திருமறையின் பரிசுத்தத்திற்கு சான்று பகரும் வார்த்தைகள் இதோ!


அதன் (தேனீக்களின்) வயிற்றிலிருந்து ஒரு பானம் வெளியேறுகின்றது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற மக்களுக்கு இதில் நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்அன் 16:69)


மேலும் இவற்றின் பின்புறக் கால்களில் அமைந்த மகரந்தக் கூடை என்னும் உறுப்பின் மூலம் மகரந்தச் சேகரிப்பும் இவற்றைக் கொண்டு நடை பெருகின்றன. கூட்டின் வெப்ப நிலையை குறைக்கவும் தேவையின் போது குளிர் காலங்களில் கூட்டில் வெப்ப நிலையை ஏற்படுத்துவதும், எதிரிகள் தங்கள் கூட்டைத் தாக்க வரும் போது தங்கள் கொடுக்கினால் எதிரியைக் கொட்டி பாதுகாக்கவும் செய்கின்றன. இவை ஒரு முறை எதிரியை கொட்டியவுடன் இறந்து விடுகின்றன. இவற்றின் கொடுக்கு அதுனுடைய விஷப் பையுடன் இணைந்து இருப்பதனால் கொட்டும் போது அதன் கொடுக்கு எதிரியின் உடலில் குத்தப்பட்டு அங்கேயே தங்கிவிடுவதனால் அவற்றுடன் இணைக்கப்பட்ட விஷப் பையின் வாய் சிதைந்து விஷம் அவற்றின் உடலில் பரவி உயிரிழக்கக் காரணமாக அமைந்து விடுகின்றது. தங்கள் கூட்டைக் காக்கும் போராட்டத்தில் இவை உயிரைத் தியாகம் செய்கின்றன. கூட இருந்தே கொல்லும் நோய் என்றுச் சொல்வார்கள். இங்கோ கூட இருந்தே கொல்லும் விஷம்! இதுதான் தேனீக்களின் நிலை.

தேன் கூட்டின் அமைப்பு


"ஆயிரம் தச்சர்கள் கூடி உருவாக்கும் மண்டபம்", என்று தமிழில் சொல்லப்படும் உவமைக்கு உரியவை தேனீக்கள் கட்டும் கூடாகும். தேனின் கூடு வேலைக்காரத் தேனின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றன. இதுவே மனிதர்களின் பல பயன்பாட்டிற்கு உதவும் தேன் மெழுகு ஆகும். இவற்றின் கூடு பொதுவாக மரங்கள், மலைக் குகை, மனிதர்கள் எளிதில் அடைய முடியாத கட்டிடத்தின் முடுக்கு, பொந்துகள் போன்றவற்றில் கட்டப்பட்டிருக்கும். இவற்றின் கூட்டு அறை மிக சரியாக அருகோண வடிவத்தில் அமைந்துள்ளது. கலைப் பொருட்களை நாம் எப்படி நேர்தியாக செய்வோமோ அந்த அளவிற்கு மிக நேர்தியாகக் பார்க்க ரசனையை அளிக்கக் கூடிய முறையிலே கூட்டைக் கட்டுகின்றன. கணித ரீதியாக அருகோண வடிவம் என்பது அதிக எடையைத் தாங்கும் அமைப்புடன் விளங்குகின்றன. பொறியியல் அறிந்த ஈக்கள் போலும்!


இராணித் தேனீயின் லார்வா அறை மட்டும் நிலக்கடலையின் வடிவிலும் மற்றவற்றைக் காட்டிலும் சற்றுப் பெரியதாயிருக்கும். கூட்டின் மேற்பகுதியில் தேனின் சேமிப்பு அறை அமைந்துள்ளது. இவற்றின் அறை சுவற்றின் தடிமன் ஒரு அங்குலத்தில் ஆயிரத்தில் இரண்டு பகுதி உடையதாயிருக்கும். இவை இந்த அளவிற்கு மெல்லியதாக இருப்பினும் அவை அதன் எடையைக் காட்டிலும் 25 மடங்கு எடையைக் தாங்கக் கூடிய திறன் உடையதாயிருக்கும். இவற்றின் கூடு முழுதும் இத்தகைய துளை அறைகளை கொண்டதாயிருக்கும். நாட்கள் கூடக் கூட இவற்றின் கூட்டின் அளவும் பெரியதாகிக் கொண்டே செல்கின்றது. ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ஈக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. மனிதர்களோ ஒரு தலைமைக்கு கட்டுபட்டு நடக்கக் கூடிய தேனீக்களிடம் பாடம் படிக்க வேண்டிய நிலையில் தான் இருக்கின்றோம். என் கடமை பணி செய்து கிடப்பதே! என்பதே இவற்றின் தாரக மந்திரம் ஆகும். ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும். இவற்றின் கூடு அதிகமான ஈக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்களால் மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில என்ஸைம்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.

இனப்பெருக்கம்

லார்வாக்களுக்கு ஒரு நாளைக்கு 1200 முறைகளுக்கு மேல் உணவளிக்கப்படுகின்றது.


இராணித் தேனீயின் மூலம் அறைக் கூடுகளில் அறைக்கு ஒன்று வீதம் இடப்படும் முட்டைகள் மூன்று நாட்களுக்குப் பிறகு பொறித்து லார்வாக்கள் வெளிவருகின்றன. இராணித் தேனீக்கென்று வித்தியாசமான வடிவில் நிலகடலை வடிவத்தில் கூடு கட்டப்படுகின்றன. லார்வா நிலையில் அவற்றிற்கு வேலைக்காரத் தேனீக்களினால் ஒருநாளைக்கு 1200 முறைக்கு மேல் உணவு அளிக்கப்படுகின்றது. தங்களது சுய நலத்திற்கல்லாமல் தங்கள் காலனியின் நலனையே கருத்தில் கொண்டு புதிய சந்ததிகளை உருவாக்க வெறித்தனமாக செயல்படும் இந்த செயல் உண்மையில் சிந்திக்கத் தக்க விஷயமாகும். முதல் இரண்டு நாட்களுக்கு வேலைக்கார லார்வாக்களுக்கு ராயல் ஜெல்லி என்னும் உயர் தர புரத உணவு அளிக்கப்படுகின்றது. இது வேலைக்காரத் தேனீக்களின் சுரப்பிகளிலிருந்து சுரக்கின்றது. அதன் பிறகு மகரந்தத் தூள் மற்றும் தேன் ஆகியவை உணவாக அளிக்கப் படுகின்றது. ஆனால் இராணித் தேனீயின் லார்வாக்களுக்கு ராயல் ஜெல்லி மாத்திரமே உணவாக முழு வளர்சி அடையும் வரை அளிக்கப்படுகின்றது. இத்தகைய வேற்றுமை லார்வா பருவத்திலிருந்தே நடைமுறைப்படுத்தப் படுகின்றன. இத்தகைய உயர் தர உணவு தொடர்ந்து கொடுக்கப்படுவதன் மூலம் இவை துரித வளர்சியடைகின்றன. அதன் பிறகு லார்வா முழு வளர்சி நிலையை அடைகின்றது. பின் அறை கூட்டின் மேல் பகுதி மெழுகினால் சீல் வைக்கப்பட்டு மூடப்படுகிறது. அதன் பிறகு அவை PuPa என்னும் கூட்டுப் புழு நிலையை அடைந்து பிறகு முழு வளர்ச்சி அடைந்த நிலையில் அறைக் கூட்டின் மேல் பகுதியை உடைத்து வெளி வருக்கின்றன.




இராணித் தேனீ முழு வளர்சியடைந்து வெளிவர 16 நாட்களும் வேலைக்காரத் தேனீக்களுக்கு 21 நாட்களும் ஆண் தேனீக்களுக்கு 24 நாட்களும் ஆகின்றன. பொதுவாக எல்லா நாட்களிலும் சில நூறு அறைகளிலாவது லார்வா நிலையில் உள்ளவைகளுக்கு உணவு அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்.

புதிய வரவுகள்

தேனீக்கள் நிமிடத்திற்கு 11,400 முறை சிறகடிக்கின்றது. இவ்வளவு வேகத்தில் சிறகை அசைப்பதனால் ஏற்படும் சப்தம்தான் ஈக்களின் ரீங்காரம்.


வெளி வந்தவுடன் புதிய தேனீக்கள் மூன்று வாரங்கள் வரை கூட்டிற்குள்ளேயே வேலையில் அமர்த்தப்படுகின்றன. கூடுகளைப் பராமரிக்கவும், பழைய லார்வா அறைகளைத் தூய்மைப்படுத்தி அடுத்து முட்டையிட ஏதுவாக்கி வைக்கவும், லார்வாக்களுக்கு உணவளித்து பராமரிக்கவும், வேலைக்காரத் தேனீக்களினால் கொண்டுவரப்படும் தேனை இவை தங்கள் வாயில் பெற்று அதை அதற்கென்று இருக்கும் பிரத்யேகமான அறையில் நிரம்பியதன் பின்னர் அதில் காற்று புகா வண்ணம் இறுக்கமாக (airtight) சீல் வைக்கின்றன. மேலும் இவை கூட்டின் வெப்பம் மிகைத்து விடும் போது நீரை விட்டு சிறகை தொடர்ந்து அசைப்பதன் மூலம் காற்றோட்டத்தை ஏற்படுத்தி வெப்ப நிலையை குறைக்கின்றன. கடுமையான குளிர் காலங்களில் இவை ஒன்றுடன் இறுக்கமாக இணைந்து கூட்டில் இருக்கும் லார்வாக்கள் முறையாக வளர்சியடைய வகை செய்கின்றன. இறுதியாக மூன்று வாரங்ககளுக்குப் பிறகு இவை வெளியே சென்று தேனைச் சேகரிக்க அனுப்பப்படுகின்றன.

தேன் சேகரிப்பு

தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரைப் பயணிக்கும் திறன் கொண்டதாகும்.


தேனீக்கள் ஏன் தேனை சேமித்து வைக்கின்றன? என்ற கேள்விக்கு விடை தேடிச் சென்றால் நமக்கு கிடைக்கும் பதில் மலர்கள் பூக்காத உணவு உற்பத்திக்கு வழியே இல்லாத குளிர் காலத்திற்காக இவைகளால் முன் கூட்டியே சேகரிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைதான் தேன் சேகரிப்பு ஆகும். தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும். ஒரு வருடத்தில் இவைகளினால் கூட்டிற்கு 450 கிலோ எடையுடைய மலரின் குளுகோஸ், மரங்களிலிருந்து கொண்டு வரப்படும் புரொபோலிஸ் என்னும் பிசின், நீர் மற்றும் மகரந்தம் கொண்டு வரப்படுகின்றன என்று சொன்னால் ஒரு கூட்டில் வேலைக்காரத் தேனீக்களின் பங்களிப்பு என்னவென்பதை நம்மால் உணர முடிகின்றது.


சில வகைத் தேனீக்கள் தங்கள் உணவிற்காக செல்லும் தொலைவை நாம் அறிந்தால் நம்புவதற்குக் கடினமாக இருக்கும். ஏன் என்று சொன்னால் தேனீக்கள் சற்றேறக் குறைய ஒரு லட்சம் கி.மீ வரை பயணித்து இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து குளுகோஸை எடுத்துப் பிறகு சரியாக தங்கள் கூடு திரும்புகின்றன என்று சொன்னால்


இறைவா! உன்னுடைய அற்புதம் தான் என்ன அற்புதம். இவ்வளவு தொலைவான தூரங்களிலிருந்து மிகச் சரியாக கூடு திரும்பும் இந்த ஆற்றல் எங்ஙனம் இவற்றிற்கு சாத்தியம் ஆயிற்று? இதோ நம் இறைமறை பதில் அளிக்கின்றது..

மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் நீ கூடுகளை அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனி வர்கத்திலும் சாப்பிடு! உன் இறைவனின் பாதையில் எளிதாகச் செல் என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயறுகளிலிருந்த மாறபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன் 16:68,69)

தேனீக்கள் சரியான பாதையில் திரும்பி கூட்டிற்கு வர எல்லாம் வல்ல இறைவன் பொறுப்பேற்றுக் கொண்டான் என்பதை மேற்கண்ட இறை வசனம் தெளிவுபடுத்துகின்றது. இதை மறுக்கக் கூடியவர்கள் தங்கள் பகுத்தறிவைக் கொண்டு பதில் சொல்லட்டும். இதில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நிறைய அத்தாட்சிகளை ஆக்கியிருக்கின்றான் நம் இறைவன்.


இவை இவ்வளவு தொலைவிலிருந்து சேகரித்து வரும் மலரின் குளுகோஸ் ஏறக்குறைய ஒரு பவுன்டு எடையுடைய தேனை உற்பத்தி செய்ய போதுமானதாகும். நம் இறைவன் மகா தூய்மையானவன். நம் இறைவன் தான் நாடியவைகளுக்கு ஆற்றலை மிகைப்படுத்தக் கூடியவன் என்பது மீண்டும் இங்கே நிரூபனமாகின்றது. இவை முதலில் கூட்டை விட்டு வெளியில் சென்று மலர்களின் உள்ளே இருக்கும் மலரின் மதுவை(nectar) உறிஞ்சி உட்கொள்கின்றன. பின்னர் மலரின் மகரந்தத்தையும் சேகரித்து திரும்பி கூட்டிற்கு வருகின்றன. திரும்பிய உடன் மகரந்தத் தூளை நேரடியாக அறைக் கூட்டில் இட்டு சீல் வைக்கின்றன. இந்த மகரந்தத் தூள் நிறைய புரதம் மற்றும் தாதுத் பொருட்கள் நிறைந்ததாகும். மேலும் இவற்றில் 10 க்கு மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன. இதைத் தேனுடன் கலந்து லார்வாக்களுக்கு கொடுக்கின்றன. பின்னர் கூட்டை பராமரிக்கும் தேனீக்களின் வாயில் இவை வயிற்றிலிருந்து வெளிகொணர்ந்த தேனை கொடுக்கின்றன. இவை ஒரு துளி தேனை வெளியேற்ற 50 முறை வயிற்றிலிருந்த கக்குகின்றன. இவை வெளியில் ஏதேனும் புதிய மலர் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை துல்லியமாக ஒரு வித்தியாசமான நடன அசைவின் மூலம் மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கின்றன.

நடன அசைவில் அசாதாரண மொழி

தேனீக்கள் ஆடும் கூத்திற்கு ஒரு அர்த்தம் உண்டு.

தேனீக்கள் தங்கள் உணவிற்காக வெளியில் சென்று ஏதேனும் புதிய உணவாதாரத்தைக் கண்டறிந்தால் கூட்டிற்குத் திரும்பி அந்த இடத்தைப் பற்றிய துல்லியமான தகவல்களை வித்தியாசமான உடல் அசைவின் மூலம் தெரிவிக்கின்றன. உதாரணமாக உணவின் இருப்பிடம் 100 கஜத்திற்கு(yards) உட்பட்ட இடத்தில் ஒரு தேனீயால் கண்டுபிடிக்கப்பட்டால் அது முதலில் அந்த மலரின் குளுகோஸை உறுஞ்சி தன் தேன் பையில் சேகரித்து கூடு திரும்புகின்றன. திரும்பியவுடன் கூட்டில் முதலில் இரண்டு செ.மீ அளவிற்கு சிறிய வட்டமாக (round dance) சுற்றுகின்றது. பின்னர் படிபடியாக சுற்றை பெரிதாக்கி சுற்றுகின்றது. பின்னர் அந்த சுற்றுக்கு எதிர் திசையில் சுற்றுகின்றது. இப்போது அதனுடன் இணைந்து மற்ற ஈக்களும் அந்த நடனத்தில் இணைந்துக் கொள்கின்றன. பின்னர் புதிய இடத்தை கண்டறிந்த தேனீயால் கொண்டு வரப்பட்ட மலரின் மகரந்தம் மற்றும் மலரின் குளுகோஸ் போன்றவற்றின் வாசனையை நுகர்ந்து அது எத்தகைய தாவரம் என்பதை உறுதி செய்து கொள்கின்றன. பின்னர் கூட்டை விட்டு வெளியேறி 100 கஜத்திற்க்குள் பெரிய வட்டம் அடித்து உணவின் இருப்பிடத்தைக் கண்டறிகின்றன. இதே நேரத்தில் 100 கஜத்திற்கு அப்பால் உணவாதாரம் இருக்குமேயானால் தற்போது வேறுவிதமாக நடனத்தை அரங்கேற்றுகின்றன. தங்கள் பின்புறத்தை அசைத்தபடி(waggle dance) மையத்திலிருந்து நேராக சென்று பின்னர் அறைவட்டம் அடித்து அதற்கு எதிர் திசையில் அதைப் போன்றே சுற்றுகின்றன. மேலும் மிக அதிக தொலைவு என்றால் இவை சூரியனின் இருக்கும் திசையையும் உணவு இருக்கும் திசையையும் ஒரு காம்பசின் அமைப்பில் திசையை துல்லியமாக தெரிவிக்கின்றன. இவை கணிதம் அறிந்த ஈக்கள் என்று தவறாக நினைக்க வேண்டாம். எல்லாம் நம் இறைவன் ஜீன்களைக் கொண்டு நடத்தும் ஜால வித்தைகள்தான் இவைகள்.


இந்த முறையில் 10 கிலோ மீட்டர் தொலைவின் இருப்பிடத்தை கூட இவைகளினால் இந்த அதிசய முறையினால் மற்றவற்றிற்கு தெளிவுபடுத்த இயலுகின்றது. யார் இவைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தது? என்ன ஒரு திட்டமிட்ட பிரமிக்க வைக்கும் செயல்பாடுகள். இத்தகைய நடன அசைவுகளை வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளிலும் அவைகளினால் எப்படி அறிந்துக் கொள்ள முடிகின்றது என்பது இதுவரை புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.

தவறுதலின் பலன்தான் கில்லர் தேனீக்கள் (KILLER BEE)


1950 ஆண்டு பிரேசில் விஞ்ஞானிகளுக்கு அதிக தேன் கொடுக்கக் கூடிய ஐரோப்பிய தேனீக்களையும் அதிக வெப்பத்தைத் தாங்கி தேனை உற்பத்தி செய்யும் ஆப்ரிக்கத் தேனீயையும் சேர்த்து கலப்பினம் செய்தால் தங்கள் நாடான பிரேசில் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஒரு ரகத்தை உருவாக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவாக புதிய ரகம் உருவாக்க ஆப்பிரிக்க இராணித் தேனீக்கள் சிலவற்றை பிடித்து பிரேசில் கொண்டு சென்றார்கள். ஆனால் அவற்றில் சில ஈக்கள் தப்பித்து காட்டுக்குள் சென்றுவிட்டன. இந்த ஆப்ரிக்க தேனீக்கள் மிக அதிக அளவிற்கு பாதுகாப்பு உணர்வுக் கொண்டதாகும். மற்ற வகை தேனீக்களைக் காட்டிலும் மிக வேகமாக இவை பறக்கக் கூடியவை. இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகியது. இவை தங்கள் கூட்டை தாக்க வரும் எதிரிகளை மாத்திரம் அல்லாது அதன் சுற்று புறத்தில் வந்தால் கூட கொத்த ஆரம்பித்துவிடும். மற்ற தேனீக்களை விட எதிரி மூன்று மடங்கு தொலைவில் வரும் போதே இவை தாக்கும் தொழிலில் இறங்கி விடுகின்றன. ஆப்ரிக்காவின் அதிக வெப்ப நிலையைத் தாங்கிய இவைகளுக்கு தென் அமெரிக்கா கண்டத்தின் மிதமான வெப்ப நிலையை தாங்கி பரவிச் செல்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. இவற்றின் இராஜ்ஜியம் தங்கு தடையின்றி பரவிச் சென்றது. இவை வருடத்திற்கு 500 சதுர மைல்கள் வீதம் தங்கள் பரப்பளவை விஸ்திகரித்துக் கொண்டே செல்கின்றன. இதன் விளைவாக 1950ல் ஆரம்பித்த இவற்றின் பரவல் 1990ம் ஆண்டு அமெரிக்காவை எட்டிவிட்டது. 40 ஆண்டு காலத்தில் தென் அமெரிக்காவை கடந்து வட அமெரிக்காவை எட்டிவிட்டன. மேலும் இவை பரவிக்கொண்டே செல்கின்றன. இவற்றால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றார்கள். இவை 1990 ஆண்டு முதன்முதலாக அமெரிக்காவில் காணப்பட்டது. அவை டெக்ஸாஸிலிருந்து மெக்ஸிகோவிற்கும் பிறகு 1994ம் கலிஃபோர்னியா மகாணத்திற்கும் பரவின. உலக நாடுகளை அச்சுறுத்தி ஆக்கிரமிப்பு செய்யும் அமெரிக்கவில் இவை சப்தமின்றி தங்கள் ஆக்ரமிப்பைத் தொடர்கின்றன. இன்னும் 50 ஆண்டுகளில் முழு அமெரிக்காவும் ஆக்கிரமிக்கக் கூடிய அபாயம் இருக்கின்றது. மெக்ஸிகோவிலும் அர்ஜெண்டினாவிலும் இவைகளினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களும் உண்டு. அமெரிக்காவைப் பொறுத்தவரை உயிர்இழப்பு ஏற்படாவிடினும் 1990 ஆண்டு அதிகபடியான நபர்கள் இவற்றால் கடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டனர்.

தேன்

தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். இவை மலரிருந்து கொண்டு வரும் குளுகோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சல் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (Buckwheat) என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும். தேனைக் கொண்டு மனிதர்கள் பயன் பெறவே எல்லாம் வல்ல நம் இறைவன் இவற்றை நமக்கு வசப்படுத்தி தந்துள்ளான். அவன் கருணையாளன்.


உலகம் முழுதும் தேனீக்கள் பொருளாதார ரீதியாக செயற்கை முறையில் (Bee Keeping) வளர்க்கப் படுகின்றது. நல்ல பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கக் கூடிய தொழிலாகவும் இது விளங்கிவருகின்றது. நல்ல ஆரோக்கியமான கூட்டில் 14 முதல் 23 கிலோ வரை தேன் சேகரிக்கப்படுகின்றது. இவை தங்கள் குளிர்கால உணவுத் தேவையைக் காட்டிலும் மிக கூடுதலாகும். இவற்றின் மிஞ்சிய தேன் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றின் உயிர் தேவைக்கான கொஞ்சம் தேன் விட்டு வைக்கப்படுகின்றது. உலகத்தின் தேன் தேவையை பெருமளவிற்கு செயற்கைத் தேன் வளர்ப்பின் மூலமே சரிகட்டப்படுகின்றது. 8 முதல் 10 பவுண்டு தேனை சேகரிக்கும் போது அந்த கூட்டிலிருநது 1 பவுண்டு எடையுடைய தேன் மெழுகு கிடைக்கின்றது. தேன் என்பது ஒரு தூய கார்போ-ஹைட்ரேட் உணவாகும். இவை பல மருத்துவப் பயன்பாட்டிற்கு உதவுகின்றன.


இது நிறைய கலோரி நிறைந்ததாகும். உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளைத் தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய இருமடங்கு எடையாகும்.

தேனின் இதர பயன்கள்

இந்த பூமிக் கோளின் தாவரப் பரவலுக்கு தேனீக்களின் பங்கு மிக இன்றியமையாததாகும். அமெரிக்காவில் மாத்திரம் நான்கில் ஒரு பங்கு தாவரம் தேனீக்களினால் இனப்பெருக்கம் அடைகின்றன. இது அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்கும் உள்ள பொதுவான பயனாகும். இவற்றினால் ஏற்படும் பயன்பாட்டின் மதிப்பு அமெரிக்காவில் மாத்திரம் 200 பில்லியன் டாலர் வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணமாக குறிப்பிடுவதை குறையாக எண்ணுபவர்கள் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம். ஏன் என்று சொன்னால் இத்தகைய புள்ளி விபரங்களை சேகரிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இவர்களுக்கே போதிய கால அவகாசமும் பொருளாதாரமும் இடம் தருவதனால் இத்தகைய புள்ளி விபரங்கள் இவர்களிடமிருந்து கிடைக்கப்பெருகின்றன என்பதல்லாமல் வேறு ஒரு காரணமும் இல்லை.


இறைவனின் ஒப்பற்ற ஏற்பாட்டின்படி இவை நமக்கு இனிய தேனை மருத்துவப் பயன்பாட்டிற்கு நல்குவதோடு மட்டுமல்லாமல் வேறு பல அவசியத்தையும் இவற்றில் வைத்த நம் இறைவன் போற்றுதலுக்குறியவன்! புகழுக்குறியவன்! பகுத்தறிவு என்பது இறைவன் மனிதனுக்கு பிரத்யேகமாகக் கொடுத்துள்ளது போன்றே மற்ற சில உயிரினங்களுக்கும் இறைவன் தன் அருட்கொடையின் மூலம் வியக்கத்தக்க அம்சங்களை வைத்துப் படைத்துள்ளான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.


மனிதன் மற்ற எல்லாவற்றையும் விட தன்னை மிகப் பெரியதாக நினைக்கின்றான். இருப்பினும் தன்னை விட மிகத் தாழ்ந்த உயிரினமாக கருதப்படும் பல உயிரினங்கள் பெற்றிருக்கும் அபரிதமான ஆற்றல்கள் பல இவனைக் கொண்டு சாத்தியமற்றதாக இருப்பதை நடுநிலையோடு உணர்ந்து இறைவனின் வல்லமையை ஏற்று அவனுக்கு கட்டுப்பட்டு வாழ கல்வி ஞானத்தை வேண்டுவோம். நேர் வழி செல்வோம்.

(நபியே)கல்வி கொடுக்கப்பட்டோர் இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என அறிந்து அதை நம்புவதற்காகவும் அவர்களது உள்ளங்கள் அவனுக்கு பணிவதற்காகவும் (இவ்வாறு செய்கின்றான்) நம்பிக்கைக் கொண்டோருக்கு அல்லாஹ் நேர் வழியைக் காட்டுகின்றான். (அல்குர்ஆன் 22:54)


அற்புதத்தையே இறக்கியிருக்கின்றது வல்லவனின் வான்மறை திருகுர்ஆன். அல்லாஹ் மகா தூய்மையானவன். உண்மையை அறியும் நோக்குடன் அல்லாஹ்வுடைய திருவேதத்தை ஒருவர் நாடுவாரேயானால் அங்கு நிச்சயமாக நிறைய சான்றுகளையும் அவனுடைய வல்லமையையும் அவர் காண்பார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. எவருடைய இதயத்தில் நோய் உள்ளதோ அவர்களோ
இது பொய்யே தவிர வேறு இல்லை. இதை இவரே இட்டுக் கட்டிக் கொண்டார். மற்ற சமுதாயத்தினரும் இதற்காக இவருக்கு உதவினார்கள் என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். அவர்கள் அநியாயத்தையும் பாவத்தையுமே கொண்டு வந்துள்ளார்கள். (அல்குர்ஆன் 25:04) பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, October 17, 2010

நமது பால்வீதியில் மட்டும் 10 ஆயிரம் கோடி கிரகங்கள்

இன்றுவரை 230 அயல்கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஜெப்ரி மார்சி என்பவர் தலைமையிலான அமெரிக்க ஆராய்ச்சிக் குழு மட்டும் 150 கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கிறது.
நமது பால்வீதியில் மட்டும் 10 ஆயிரம் கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று ஜெப்ரி மார்சி தெரிவித்திருக்கிறார். இதில் வியாழன் போன்ற வாயுக்கோள கிரகங்கள் 600 கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியைப் போன்று 10 லட்சம் கிரகங்கள் இருக்கலாம் என்று டெப்ராபிசர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
தற்போது 5 கிரகங்களில் பூமியைப் போன்று தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 கிரகங்களில் உயிரினம் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மெக்சிகோ அருகே விழுந்த ஒரு விண்கல்லில் சர்க்கரைப் படிவு காணப்பட்டிருப்பதால், உயிரினம் உள்ள அயல்கிரகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அயல்கிரகங்களில் மனிதர்களைப் போன்ற அறிவுமிக்க உயிரினங்கள் இருக்கின்றனவா? என்று கண்டுபிடிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. நமது பூமியின் கடலின் அடியில் உள்ள எரிமலைகளிலும், வடதுருவப் பனிப் பிரதேசத்திலும், வறண்ட பாலைவனங்களிலும் ண்ணுயிரிகள் இருப்பதைப் போல, விண்வெளியில் உள்ள அயல்கிரகங்களிலும் உயிரினங்கள் ஏற்கனவே தோன்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டெப்ராபிசர் தெரிவித்துள்ளார். பூமிக்கு அருகில் உள்ள அயல்கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அதை 10 வருடங்களுக்குள் கண்டுபிடித்துவிடலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
பூமியில் இருந்து 44 ஒளிவருட தூரத்தில் உள்ள `உர்சா மேஜர்’ என்ற நட்சத்திரத்தை ஒரு கிரகமானது, சூரியனை பூமி சுற்றிவரும் தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அக்கிரகத்தில் தண்ணீரும், உயிரினங்களும் காணப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
`இரவில் நான் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவற்றில் உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது’ என்கிறார், டெப்ரா பிசர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, October 15, 2010

அதிசய வாழ்வு பெற்ற சுரங்கத் தொழிலாளர்களுக்கு குவிகிறது பரிசுப் பொருட்கள்


நாட்டின் தங்கச் சுரங்கத்தில், கடந்த 10 வாரங்களாக சிக்கித் தவித்த 33 ஊழியர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பரிசுப் பொருட்களும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.சிலி நாட்டின் அடகாமா பாலைவனத்தில் உள்ள தங்கம் மற்றும் தாமிரச் சுரங்கத்தில், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 700 மீட்டர் ஆழத்தில் வேலை பார்த்த 33 ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த நிலச்சரிவில் இவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக முதலில் கருதப்பட்டது. 17 நாட்களுக்கு பிறகு, ஊழியர்கள் அனைவரும் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொழிலாளர்கள் சிக்கியிருந்த பகுதிக்கு ஒரு துளை அமைத்து உணவு, தண்ணீர், பிராண வாயு உட்பட அனைத்தும் சப்ளை செய்யப்பட்டது. இதனால், உள்ளே இருந்த தொழிலாளர்கள் கடந்த 69 நாட்களாக உயிர் பிழைத்திருந்தனர். பல கோடி ரூபாய் செலவில் அதிநவீன இயந்திரம் கொண்டு வரப்பட்டு, சுரங்கம் துளையிடப்பட்டு, நவீன இயந்திரத்தின் கூண்டு வழியாக ஒவ்வொரு ஊழியர்கள் மேலே கொண்டு வரப்பட்டனர். இந்த கூண்டில் நின்றபடி அதலபாதாளத்தில் இருந்து வரும் போது, அந்த நபருக்கு தேவைப்படும் ஆக்சிஜன் தரவும், அதே சமயம் அவரது இதயத்துடிப்பு எப்படி இருக்கிறது என்பதை அறியவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

அதே போல அக்கூண்டு போன்ற கருவி பயணிக்கும் போது அதற்கு சுற்றுச் சுவரான பெரிய இரும்புக்கூண்டில் வழுவழுப்பாக மோதலின்றி பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது. மேலும், கடந்த சில நாட்களாக சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவானது அவர்கள் உடல்நிலையை சீராக வைத்திருக்கும் படி அதிக கவனம் செலுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு சிலி அதிபர் செபாஸ்டியன் பைனீரா வந்து, மீட்கப்பட்ட ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மருத்துவமனைக்கு சென்று மீட்கப்பட்ட ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையையும் பார்வையிட்டார்.

தொழிலாளர்களை மீட்க அவர் எடுத்து கொண்ட அக்கறையால் அவரது செல்வாக்கு உயர்ந்துள்ளது. இதற்கிடையே மீட்கப்பட்ட தொழிலாளர்களை அவரவர் வீடுகளிலும், ஊர்களிலும் கோலாகலமாக வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.உள்ளூர் தொழிலதிபர் ஒருவர் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து லட்ச ரூபாய் அளித்துள்ளார்.

பிரபல ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சமீபத்தில் தயாரிக்கப்பட்ட "ஐபாட்'களை வழங்கியுள்ளார். கிரீஸ் நாட்டு நிறுவனம் இந்த தொழிலாளர்களை சுற்றுலா தீவுக்கு அழைத்து செல்ல முன்வந்துள்ளது. ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் இந்த தொழிலாளர்களை தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலக தலைவர்களும், பிரமுகர்களும் மீட்கப்பட்ட ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கடலுக்குமேல் மாயமாக மறையும் கப்பல்கள்!

விண்வெளியில் என்ன இருக்கிறது, சந்திரனில் என்ன இருக்கிறது, அல்லது செய்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள், தாம் வசிக்கும் பூமியில் இருக்கும் சில அதிசயங்களை ஆராயத் தயங்குகின்றனர். காரணம் அங்குசென்றால் மரணம் தான் நிகழும் என்று பயமா எனத் தெரியவில்லை. அமெரிக்காவின் மயாமி, வட அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் இருந்து பராமுடா வரையும், அங்கிருந்து சான் -ஜான் -பெரு ரிக்கோ என்ற தீவுகள் அடங்கலாக ஒரு முக்கோண வடிவில் அமைந்திருக்கும் கடல் பகுதியையே பரமுடா முக்கோணம் என அழைக்கப்படுகிறது. உலகிலேயே மிக ஆபத்தான பகுதியாக கருதப்படுவது இதுதான்.

அக் கடல் பிரதேசத்தில் சென்ற கப்பல், சிறு வள்ளங்கள் அடங்கலாக சுமார் 1000 த்திற்கு மேற்பட்ட கப்பல்களை அது விழுங்கியுள்ளது. அப்பிரதேசத்தில் மட்டும் காலநிலை சில நிமிடத்தில் மாற்றமடைவதாகவும், அமெரிக்காவை கண்டு பிடித்த கொலம்பஸ், குறிப்புகளில் கூட அப் பிரதேசத்தில் வித்தியாசமான மின்னல் மற்றும் வெளிச்சங்கள் தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மின் காந்த அலைகள் கடுமையாக அங்கு காணப்படுவதால், விமானத்தில் இயங்கும் கம்பியூட்டர் உட்பட பல கருவிகள் உடனடியாகவே பாதிக்கப்பட்டு அவ்வழியில் செல்லும் பல விமானங்கள் மாயமான முறையில், கடலினுள் விழுந்து மறைந்துள்ளது.

அப்பகுதியில் பறப்பில் ஈடுபடும், போர் விமானங்கள் கூட பல மாயமாக மறைந்துள்ளது. பரமுடா முக்கோணப் பகுதியில் கடலில் திடீர் திடீரென பாரிய குழிகள் தோன்றுவதாகவும் அக்குழிகளுக்குள்ளேயே, கப்பல்கள் சிக்குண்டு மறைவதாகக் கூறப்படுகிறது. திடீர் திடீர் எனத்தோன்றும் கரும்மேகக் கூட்டங்களில் இருந்து பலத்த இடிமின்னல்களும் அப்பகுதியில் வருவதால், விமானங்களும் பறப்பில் ஈடுபடுவது இல்லை. எது எவ்வாறு இருப்பினும் இந்த மறைதல்களுக்கு அமானுட சக்தி, அதாவது இயற்பியல் விதியை மீறிய பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட ஜீவன்களின் நடவடிக்கை காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.

இதுவரை மறைந்த கப்பல்களோ, அல்லது விமானங்களோ ஏன் காணமல் போனது என்று எவராலும் கூறமுடியாத நிலை இருப்பதாகவும், அப்பகுதியில் சில வகை பக்ரீரியாக்கள் கடலுக்கு அடியில் வாழ்வதாகக் கூறப்படுகிறது. பெரும் எண்ணிக்கையில் இவை மைல் கணக்கில் நீண்டு அகண்டு கடலின் அடிப்பகுதியில் காணப்படுவதாகவும் அவைவெளியிடும் ஒருவகை வாயுவால், அப்பகுதியில் கடல்சீற்றம் ஏற்பட்டு பருவமாற்றம், மற்றும் இடி மின்னல் தோன்றுவதாக சில விஞ்ஞானிகள் தெரிவித்தாலும், அதை எவரும் இதுவரை சரியாக நிரூபிக்கவில்லை. மர்மம் தொடர்கிறது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF