Tuesday, September 21, 2010

பூமிக்கு அருகில் புதிய கிரகங்கள்

பிரபஞ்சம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டாலும், இன்னமும் அதன் ரகசியத்தை ஆய்வாளர்கள் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. உலகின் பல நாடுகள் விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
விண்வெளி ஆய்வுகளை அமெரிக்கா நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஆய்வு திட்டம் அங்கு தீட்டப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், உடா மாநில பல்கலைக்கழக டைனமிக் பரிசோதனை கூடத்தில் 16 அங்குல தொலைநோக்கி உருவாக்கப்பட்டது.
“வைஸ்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும், “வைட் பீல்டு இன்பிராரெட் சர்வே எக்ஸ்புளோளர்’ என்ற இந்த விண்வெளி தொலைநோக்கி, கடந்த டிசம்பரில் பூமியில் இருந்து 300 மைல் தூரத்தில் விண்வெளியில் சுற்றி வரும்படி ஏவப்பட்டது. 11 நொடிக்கு ஒரு படம் என்ற அளவில் இந்த தொலைநோக்கி விண்வெளியை கேமராவால் சுட்டுத்தள்ளி, படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
இவ்வாறு அனுப்பப்பட்ட படங்கள் மூலம் விண்வெளி குறித்த பல்வேறு புதிய விஷயங்கள் கிடைத்து வருகின்றன. “வைஸ்’ தொலைநோக்கி அனுப்பிய படங்கள் மூலமாக, கடந்த ஆறு மாதங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 95 கிரகங்கள் பூமிக்கு மிக அருகில் உள்ளன என தெரியவந்துள்ளது. மிக அருகில் என்றால், இக்கிரகங்கள் பூமியில் இருந்து 3 கோடி மைல்கள் தொலைவில் உள்ளன. இவற்றால் பூமிக்கு தற்போது எந்த அபாயமும் இல்லை.
“வைஸ்’ தொலைநோக்கி, விண்வெளியில் தன் முதல் முழுமையான தேடுதலை சமீபத்தில் தொடங்கி உள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு இறுதிக்குள், பிரபஞ்சம், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவை எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கான விடை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய கிரகங்களை மட்டும் இல்லாமல் 15 புதிய வால் நட்சத்திரங்களையும் அமெரிக்க தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. நட்சத்திரங்களை விட அளவில் சிறியதும், கிரகங்களை விட பெரியதுமான வளர்ச்சி குறைந்த நூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை, “வைஸ்’ ஆய்வு செய்துள்ளது. இவற்றில் 20 குறித்த தகவல்கள் முழுமையாக கிடைத்துள்ளன. 45 ஆயிரம் கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, ஒளிமிக்க ஒரு பால் மண்டலத்தை, “வைஸ்’ கண்டுபிடித்துள்ளது.
சாதாரண தொலைநோக்கியை விட, “வைஸ்’ தொலைநோக்கி சக்தி வாய்ந்ததாக இருப்பதால், அது அனுப்பி வரும் விண்வெளி தகவல்கள் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இன்பிரா ரெட் தொழில்நுட்ப தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. அதில் இருந்து இதுவரை உருவாக்கப்பட்ட தொலைநோக்கிகளில், “வைஸ்’ தொலைநோக்கி தான் மிக சக்தி வாய்ந்தது.
“விண்வெளியில் காணப்படும் கடும் வெப்பம் மற்றும் அதிக ஒளி கொண்ட பொருட்களை நோக்கியே பெரும்பாலான தொலைநோக்கிகள் செயல்படும். ஆனால், அடர்த்தியான தூசிகளின் உள்ளேயே ஊடுருவி, தெளிவற்று காணப்படுபவைகளையும் தெளிவாக பார்க்கலாம்; குளிர்ச்சியான மற்றும் இருட்டில் மறைந்துள்ள பொருட்களையும் காணலாம் என்பதுதான், “வைஸ்’ விண்வெளி தொலைநோக்கியின் சிறப்பு!’ என்கிறார் ரிச்சர்டு பின்செல் என்ற விஞ்ஞானி. “பிரபஞ்சத்தில் பூமிக்கு அருகில் காணப்படும் பொருட்களை கொண்டு பால் மண்டலம் உருவானதை சிறிது சிறிதாக அறிந்து வருகிறோம். இனி கிடைக்கும் புள்ளி விவரங்களை கொண்டுதான் உண்மையான கண்டுபிடிப்புகள் வெளிவரும்!’ என்கிறார் நாசா விஞ்ஞானி பீட்டர் இசென்ஹர்டு.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, September 20, 2010

ரோபோடிக் துறையில் புதிய புரட்சி: இலத்திரனியல் தோல்

தொடுகையை உணரக்கூடிய இலத்திரனியல் தோலினை கலிபோர்னிய பேர்கலி பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானிகள் குழுவொன்று உருவாக்கியுள்ளது.

மேற்படி இலத்திரனியல் தோலானது எந்திரனியல் (ரோபோடிக்) மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைகளில் புதிய அத்தியாயமொன்றை உருவாக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது ஆய்வுகூட பரிசோதனை அளவிலேயே இருக்கும் மேற்படி தோலானது, மனித தோலைப் போன்று மிக வேகமாக தொடுகைகளை உணர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமுக்கத்தை உணரக் கூடிய உயர் உணர்திறனை கொண்டமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இலத்திரனியல் தோலானது சிலிக்கோன், நெனோ வயர்கள் மற்றும் ஜேர்மானியம் என்பவற்றால் ஆக்கப்பட்டுள்ளது.
மேலும் நெனோ ஸ்கேல் ட்ரான்ஸ்சிஸ்டர் மற்றும் இலகுவான இறப்பர் என்பனவும் இதில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை மிகவும் மலிவாக உருவாக்க முடியுமெனவும், இதன் இயக்கத்திற்கு மிகக் குறைந்த அளவிலான மின்சக்தியே ( வோல்டேஜ்) தேவையெனவும் கருதப்படுகின்றது.
எதிர்காலத்தில் இரசாயனப் பொருட்கள் மற்றும், வெப்பம், ரேடியோக் கதிர்கள் என்பனவற்றுக்குத் துலங்களைக் காட்டக்கூடிய சென்ஸர்களை மேற்படி தோலில் உள்ளடக்க தாம் எதிர்ப்பார்ப்பதாக அவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
எதிர்காலத்தில் மனிதர்கள் உள் நுழைய முடியாத இடங்களில் கூட இலத்திரனியல் தோல் கொண்ட ரோபோக்களைக் கொண்டு தாம் நுழைய எதிர்ப்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, September 18, 2010

உலகமக்களின் கடும் எதிர்ப்பின் எதிரொலி - புனித திருக்குர்ஆன் பிரதியை எரிக்கப் போவதாக அறிவித்த வெறியன் டெர்ரி ஜோன்ஸ் கைவிட்டான்


அமெரிக்காவின் ஃப்ளோரிடா சர்ச்சின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் தற்பொழுது அதனை கைவிட்டு விட்டதாக அறிவித்துள்ளான்.

கிரவுண்ட் ஸீரோவுக்கு அருகில் மஸ்ஜித் நிர்மாணிக்காமலிருந்தால் தாங்கள் ஒருபோதும் திருக்குர்ஆன் பிரதியை எரிக்கமாட்டோம்எனவும் அவன் தெரிவித்துள்ளான்.

டெர்ரி ஜோண்ஸ் கிரவுண்ட் ஸீரோவில் இஸ்லாமிய மையம் நிறுவ  ஏற்பாடு செய்துவரும் இமாம் ஃபைஸல் அப்துற்றவூஃப்  பள்ளிவாசல் கட்டும் முயற்சியை வேறு இடத்திற்கு மாற்ற ஒப்புக் கொண்டுள்ளதாக கூறியதை அடுத்து தான் இந்த செயலில் இருந்து பின்வாங்கியதாக அவன் சப்பைக்கட்டு கட்டியுள்ளான். ஆனால் அது தவறான தகவல் என  இஸ்லாமிய மையம் அறிவித்துள்ளது.

சமாதானத்தை லட்சியமாகக் கொண்ட எவருடனும் பேச்சு வார்த்தை நடத்த தயார் என நியூயார்க் இமாம் அப்துற்றவூஃப் உறுதிபடக் கூறியுள்ளார்.

திருக்குர்ஆன் பிரதியை எரிக்கும் விபரீதத்தை விளைவிக்கக்கூடாது என அமெரிக்க உளவுத்துறையான  எஃப்.பி.ஐ.யும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸும் செம்மையாக கண்டித்ததைத் தொடர்ந்து தான்  நையபுடைக்கப்படுவதில் இருந்து தப்புவதற்காகவே அந்த பைத்தியம் தனது விபரீதத்தை செய்ய வில்லை என கூறப்படுகிறது.

இந்த  பைத்தியக்கார னின்  முயற்சி உலகெங் கும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத் தினரின் உயிருக்கு கடுமை யான  அச்சுறுத்தலாக அமையும் என ஆப்கானில் நிலை கொண்டிருக்கும் நேட்டோ படைகளுக்கு தலைமை தாங்கும் அமெ ரிக்க படை தளபதி பெட்ராஸ் தெரி வித்தார். ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருக்கும் ஒரு லட்சத்து இருபதினாயிரம் துருப்புக்களுக்கும் நேரிடையான ஆபத்தை விளை விக்கக் கூடியது என்று அவர் கூறியிருந்தார்.   அரசு இதில் நேரடியாக தலையிட்டது. ஆனால் தனது அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டதாக வெளியான செய்தியை ஒபாமா மறுத்துள்ளார்.

அமெரிக்காவில் எல்லா மதப்பிரி வினருக்கும் சம உரிமை உண்டு என வும் மஸ்ஜித் கட்டுவதை எதிர்க்க வில்லை எனக்கூறிய ஒபாமா, கிரவுண்ட் ஸீரோவுக்கருகில் யூத தேவாலயமும், ஹிந்துக்கோயிலும் கட்டலாமென்றால் மஸ்ஜிதும் கட்டலாம் எனத் தெரிவித்தார்.

“நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரி களல்ல மாறாக பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள்” என ஒபாமா செப்.11 நினைவுத்தின நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்னர் வெள்ளை மாளிகையில் வைத்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, September 17, 2010

மெலிவான தோற்றத்தை பேறவேண்டுமா

மெலிவான தோற்றத்தை பேறவேண்டும் என்பதற்க்காக பல பேர்பலவிதமான கஸ்டங்களை அனுபவித்து உடற்பயிற்ச்சி செய்து உணவுக்கட்டுப்பாட்டு முறைகளை கைப்பிடித்து உடம்பினை பராமரிக்கின்றார்கள்.அத்துடன் பருத்த உருவம் உடையவர்கள் தமது புகைப்படங்களினை தாழ்வுமனப்பான்மை காரணமாக பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர்.அப்படியானவர்களுக்கு வரப்பிரசாமாக இந்த ஒன்லைன் மென்பொருள் உதவுகின்றது..
http://www3.weightmirror.com/weightmirror/index.php?id=
இந்த இணையத்தளத்தில் உங்களது புகைப்படத்தைபதிவேற்றியதும்..அதில்உங்கள் முகவடிவத்தை கணக்கொடுத்து அதற்க்கேற்ற மாதிரி உங்கள் உடல் அமைப்பை குறைத்துக்கொள்ள முடியும்.. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

நாஸா கொள்வனவு செய்துள்ள ரோபோ தெஸ்பியன்

ரோபா தெஸ்பியன் 15 மொழிகளை பேசக்கூடியவாறு புரோகிராம் படுத்தப்பட்டதும் மனிதர்களோடு பழகக்கூடியதுமான நவீன ரோபோவாகும்.
மேற்படி ரோபோவானது நகைச்சுவையுணர்வு உடையதும் தனது எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடியதுமாகும்.
இது அடர்த்தியான காற்றினால் (கொம்பிரஸ் எயார்) வழுவூட்டப்படுகின்றது.
இது முற்றிலும் அலுமினியத்தினால் ஆக்கப்பட்டதாகும்.
மேற்படி ரோபோவானது கோர்னிய நிறுவனமொன்றினால் உருவாக்கப்பட்டதாகும்.
தற்போது இது நாஸாவினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
5 அடி 9 அங்குலமான இந் ரோபோ புளோரிடாவில் உள்ள கெனடி விண்கல நிலையத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களை வழிநடத்துவதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.
இதற்காக நாஸா மேற்படி நிறுவனத்திற்கு 70,520 யூரோக்களை செலுத்தியுள்ளது.
மேலும் நாஸாவின் R2 எனப்படும் முக்கிய விண்வெளி செயற்திட்டத்திற்கு இது அனுப்பப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
தொடுதிரையுடன் கூடிய இண்டர் பேஸினைக்கொண்டுள்ள மேற்படி ரோபோவானது அதன் செயற்பாடுகளை முன்கூட்டியே புரோகிராம் செய்துகொள்ளமுடியும்.
ரோபோ தெஸ்பியன் 2001 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 9 Beta

மைக்ரோசொப்ட் கோர்ப்ரேசன் இன்டர்நெற் எக்ஸ்ப்லோரர் 9 சோதனைத் தொகுப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.
இது மிகவும் வேகமாக இயங்குமெனவும் சிறப்பான வரைகலை (கிராபிக்ஸ்) அனுபவத்தினை தரக்கூடியதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 9 சோதனைத்தொகுப்பு சுமார் 30 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
எச்.டி.எம்.எல் 5 தொழில்நுட்பத்தினையும் இது கொண்டுள்ளது.
இதன் வேகமான அதிக பாதுகாப்பான செயற்பாட்டிற்கு தாம் உத்தரவாதமளிப்பதாக மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.
இதனோடு மைக்ரோசொப்டின் பிங் தேடல் தளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது கூகுளிற்கு தகுந்த போட்டியளிக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பாவனையாளர்களின் விருப்பத்தெரிவில் உள்ள தளங்களை இயங்குதளத்தினுள் நுழையாமல் விண்டோஸ் டாஸ்க் பாரின் ஊடாக நுழைய முடியும்.
இயங்குதள சந்தையில் அதிக பங்கினை கொண்டுள்ள இன்டர்நெற் எக்ஸ்புளோரர் கடந்த சில வருடங்களாக பயர்பொக்ஸ் மற்றும் குரோமிடம் தனது பங்கினை இழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, September 15, 2010

விண்டோஸ்-7 தீர்வுகள்


விண்டோஸ் 7 ஏறத்தாழ அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக மாறி வருகிறது. கம்ப்யூட்டர் திறன் இந்த சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ள, அதிகமாக இருக்க வேண்டும் என்றாலும், நவீன வசதிகளை நாமும் அனுபவிப்போமே, ஏன் அவற்றை விலக்க வேண்டும் என பலரும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர்.  விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பல சின்னஞ்சிறு வசதிகள் நேரடியாக அறிந்து கொள்ள முடியாத வகையில் தரப்பட்டுள்ளன. இவை நம்முடைய பல பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதாய் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1.பிரச்னைகளைப் பதிவு செய்: (PSRProblems Step Recorder) நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில் ஏதேனும் ஒரு பிரச்னையை எதிர் கொள்கிறோம். அது எதனால் ஏற்படுகிறது, அல்லது அந்த பிரச்னை தான் என்ன என்று நம்மால் விளக்க இயலவில்லை. இதற்கான தீர்வு தான் Problems Step Recorder  என்னும் வசதி. பிரச்னைகள் ஏற்படுகிறது எனத் தெரிந்தால், அந்த அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்கும் முன், ஸ்டார்ட் கிளிக் செய்து, PSR  என டைப் செய்து, என்டர் தட்டவும். அதன் பின்னர் Start Record  என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், நீங்கள் கம்ப்யூட்டரில் என்ன செய்தாலும், செலக்ட் செய்தாலும், கிளிக் செய்தாலும், டைப் செய்தாலும் அவை அனைத்தும் பதியப்படும். ஒவ்வொரு திரை மாற்றத்தினையும் காட்சிகளாக எடுத்துப் பதிந்து கொள்ளும். இவை அனைத்தையும் சுருக்கி ஒரு MHTL  பைலாக உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கும். இதனை விரித்துப் பார்த்து எங்கு பிரச்னை ஏற்பட்டது எனத் தெரிந்து கொள்ளலாம். அல்லது பிரச்னையைத் தீர்க்க வரும் கம்ப்யூட்டர் டெக்னீஷியனிடம் காட்டி தெரிந்து கொள்ளலாம்.
2.”சிடி’யில் இமேஜ்: மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு வசதியை, இம்முறை மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் தந்துள்ளது. அது சிடி மற்றும் டிவிடிக்களில் I.S.O. . இமேஜ்களை பதிவதுதான். கம்ப்யூட்டரில் உள்ள ஐ.எஸ்.ஓ. இமேஜ் மீது டபுள் கிளிக் செய்து, காலியாக உள்ள சிடி வைத்திருக்கும் ட்ரைவைத் தேர்ந்தெடுத்து, Burn  என்பதில் கிளிக் செய்தால், டிஸ்க்கில் இமேஜ் எழுதப்படும்.
3. பிரச்னைகளைத் தீர்க்க: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பிரச்னை ஏற்பட்டால், ஏடாகூடமாக அது செயல்பட்டால், அதன் காரணம் உங்களுக்குத் தெரியவில்லை என்றால், Control Panel > Find and fix problems (or ‘Troubleshooting’)  எனச் சென்று, பிரச்னைகளைக் கண்டறியும் பல சிறிய தொகுப்புகளைக் காணலாம். இவற்றைக் கிளிக் செய்து பிரச்னைகளைக் கண்டறிந்து, நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் சரி செய்து, சிஸ்டத்தை கிளீன் செய்தால், சிஸ்டத்தின் பிரச்னைக்குரிய செயல்பாடு தானாகவே சரி செய்யப்படும்.
4. ஆபத்துக்கால “சிடி’: நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திருந்தால், சிஸ்டத்தில் பிரச்னை ஏற்பட்டு இயங்கா நிலை ஏற்படும் காலங்களில் பயன்படுத்த, சிஸ்டம் பூட் செய்திட சிடி ஒன்றை மிக எளிதாக உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். Click Start > Maintenance > Create a System Repair Disc   எனச் சென்று, ஆபத்துக்காலத்தில் கம்ப்யூட்டர் பூட் செய்திட சிடி ஒன்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.
5. கம்ப்யூட்டரைச் சிறுவர்களிடமிருந்து காப்பாற்ற: நீங்கள் இல்லாத போது, சிறுவர்கள், சில வேளைகளில் பெரியவர்களும் கூட, பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, பிரச்னையை உருவாக்கு கின்றனரா? அல்லது இயக்கிப் பார்க்கக் கூடாத அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறார்களா? இவை உங்கள் நிறுவனம் நீங்கள் பயன்படுத்தத் தந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்கான புரோகிராமாக இருக்கலாம். இவற்றைத் தடுக்க,  AppLocker என்ற ஒரு புரோகிராம் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ளது GPEDIT.MSC   என்ற புரோகிராமினை இயக்கி,  Computer Configuration > Windows Settings > Security Settings > Application Control Policies > AppLocker   எனச் சென்று எப்படியெல்லாம், அப்ளிகேஷன்களை இயக்குவதை நீங்கள் தடுக்கலாம் மற்றும் அனுமதிக்கலாம் என்று பாருங்கள்.
6. கூடுதலாக கணக்கிடும் வசதி: விண்டோஸ் 7தரும் கால்குலேட்டர் பார்ப்பதற்கு, விஸ்டாவில் இருந்த கால்குலேட்டர் போல இருந்தாலும், இதன்  Mode   என்பதைக் கிளிக் செய்து பார்த்தால், இந்த கால்குலேட்டர் தரும் கூடுதல் வசதிகளை அறிந்து கொண்டு பயன்படுத்தலாம்.
7. மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ரெஸ்டோர்: முந்தைய நாள் ஒன்றில் இருந்த நிலைக்கு, நம் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்லும் வசதிதான் சிஸ்டம் ரெஸ்டோர். இதனால், ஏதேனும் வைரஸ் தாக்குதல்கள், அப்ளிகேஷன் சாப்ட்வேர் இயக்கப் பிரச்னைகள் இருந்தால், அவை எதுவும் இல்லாத நாள் ஒன்றுக்கு உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று இயக்கலாம். ஆனால் எந்த அப்ளிகேஷன் மற்றும் ட்ரைவர் பைல்கள் இதனால் பாதிக்கப்படும் என நமக்குக் காட்டப்பட மாட்டாது. இது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மேம்படுத்தப்பட்டு நவீனப் படுத்தப்பட்டுள்ளது. மை கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்து, பின்னர் Properties > System Protection > System Restore > Next எனச் சென்று நீங்கள் செல்லவிருக்கும் ரெஸ்டோர் பாய்ண்ட், அதாவது எந்த நாளில் இருந்த நிலைக்குச் செல்ல ரெஸ்டோர் பாய்ண்ட் ஏற்படுத்தினீர்களோ, அந்த நிலையில் கிளிக் செய்திடலாம். பின்னர், புதியதாகத் தரப்பட்டிருக்கும் ‘Scan for affected programs’என்பதில் கிளிக் செய்தால், விண்டோஸ் எந்த புரோகிராம்கள் மற்றும் ட்ரைவர்கள் அழிக்கப்படும் அல்லது சரி செய்யப்படும் என்று பட்டியலிட்டுக் காட்டும்.
8.எக்ஸ்பி வகை இயக்கம்: பல லட்சக்கணக் கானவர்களால், பல ஆண்டுகள் மிகப் பிரியமுடன் இயக்கப்பட்டு வந்த சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி. ஏன், இன்னமும் கூட அதுதான் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படுகிறது. இதற்குக் காரணம் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள், இதில் மட்டுமே இயங்கும்படி அமைக்கப்பட்டிருப்பதுதான். அப்படியானால், விண்டோஸ் 7 இயக்கத்திற்கு மாறிவிட்டால் என்ன செய்வது? என்ற கேள்வி பலருக்கு எழும். இதற்காகவே விண்டோஸ் 7 இயக்கத்தில், எக்ஸ்பி வகை இயக்கத்திற்கு மாற்றிக் கொள்ள ஒரு வசதி தரப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து(http://www.microsoft.com/windows/virtualpc/download.aspxஎக்ஸ்பி மோட் என்பதின் நகல் ஒன்றை டவுண்லோட் செய்து பதிந்து வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது இயக்கிப் பயன்படுத்தலாம்.
9.சகலமும் ரைட் கிளிக்: இந்த வசதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் முற்றிலும் புதுமையான முறையாகும். டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். உங்கள் ஸ்கிரீன் ரெசல்யூசனை செட் செய்திட இடம் கிடைக்கும். முன்பு போல டிஸ்பிளே செட்டிங்ஸ் என்றெல்லாம் செல்ல வேண்டியதில்லை. அதே போல டாஸ்க் பாரில் உள்ள  எக்ஸ்புளோரர் ஐகான் மீது ரைட் கிளிக் செய்தால், Documents, Pictures, the Windows folder  போன்ற பல சிஸ்டம் போல்டர்களுக்கு நேரடியாகச் செல்லலாம். உங்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்து வதில் நாட்டம் இல்லையா! அப்படியானால், அந்த ஐகானை டாஸ்க் பாரில் இருந்து நீக்கிவிடலாம்.  பயர்பாக்ஸ் அல்லது குரோம் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
10. மாறும் வால் பேப்பர்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பல அழகான வால் பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. எனவே எவற்றை விடுத்து, எதனை நம் வால் பேப்பராக அமைப்பது என்று நம்மால் முடிவு செய்திட முடியாது. இதற்காகவே, அந்த வால் பேப்பர்கள் அனைத்தையும், அல்லது நீங்கள் விரும்பும் சிலவற்றை மட்டும்,  ஒரு ஸ்லைட் ÷ஷாவாக அமைக்கும் வசதி தரப்பட்டுள்ளது. டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து,  Personalise > Desktop Background என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, நீங்கள் விரும்பும் வால்பேப்பருக்கான படங்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.  பின்னர் எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை இந்த படங்கள் மாறிக் காட்சியாகத் தெரிய வேண்டும் என்பதனை முடிவு செய்து அமைக்கவும். இது 10 விநாடிகள் முதல் ஒரு நாள் வரை இருக்கலாம். இவை வரிசையாக இல்லாமல், மாறி மாறி வர வேண்டும் எனில்   Shuffle   என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.http://www.microsoft.com/windows/virtual-pc/default.aspx
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

நேரடி ஒளிபரப்பிற்காக யூடியுப்-ன் புதுமையான சோதனை முயற்சி

நேரடி ஓளிபரப்பு இணையத்தில் அதுவும் குறிப்பாக யூடியுப்-ல் செய்தால் எப்படி இருக்கும் இதற்காக யூடியுப் புதுமையான சோதனை 
முயற்சியில் இறங்கியுள்ளது.
தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு எப்படி பார்க்கிறோமோ அதைப் போல் இனி யூடியுப்-ல் நேரடி ஒளிபரப்பை நடத்துவதற்கான முயற்சி இப்போது யூடியுப்-ல் நடந்து வருகிறது. ஏற்கனவே யூடியுப்-ல் Indian Premier League கிரிக்கெட் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்தது ஆனால் எதிர்பார்த்தபடி லைவ் ஸ்டிரிம் (live stream) ஆக கொடுக்க முடியவில்லை இதற்காக லைவ் ஸ்டிரிம் நேரடி ஒளிபரப்புக்கான சோதனை முயற்சியாக Howcast, Young Hollywood, Next New Networks, Rocketboom போன்ற தளங்களில் இருந்து நேரடி ஓளிபரப்பாக வரும் வீடியோவை யூடியுப் இன்று முதல் ஒளிபரப்பு செய்கிறது.
சாதாரணமாக நாம் பயன்படுத்தும் வெப்கேமிரா மற்றும் External USB/FireWire camera போன்றவற்றின் மூலம் எடுக்கும் வீடியோவையும் யூடியுப் – மூலம் நேரடியாக ஒளிபரப்புவதற்கான சோதனை முயற்சியாக இது அமையவிருக்கிறது. விரைவில் "யூடியுப் லைவ்“ என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, September 14, 2010

`ரிமோட் கண்ட்ரோல்’ எப்படி செயல்படுகிறது?


நீங்கள் தினசரி சாதாரணமாகத் தொலைக்காட்சி `ரிமோட் கண்ட்ரோலை’ பயன் படுத்துகிறீர்கள். அது எப்படிச் செயல்படுகிறது என்று தெரியுமா?
`ரிமோட் கண்ட்ரோல் அமைப்பு’, ஒரு தொடர்பு அமைப்பு ஆகும். அதில் முன்று விஷயங்கள் முக்கியமாக அடங்கி இருக்கின்றன.
1. `டிரான்ஸ்மிட்டர்’
2. `சிக்னல்’
3. `ரிசீவர்’
தொலைக்காட்சிக்கான `ரிமோட் கண்ட்ரோல் அமைப்பை’ பொறுத்தவரை, நீங்கள் `டிரான்ஸ் மிட்டர்’ என்று சிறுஉபகரணத்தைக் கொண்டு டிவியில் தேவைக்கேற்ப மாற்றம் செய்கிறீர்கள். `டிரான்ஸ்மிட்டரின்’ ஒவ்வொரு பட்டனையும் நீங் கள் அழுத்தும்போது அதிலி ருந்து ஒரு `சிக்னல்’, டிவியை நோக்கிச் செலுத்தபடுகிறது. அந்த `சிக்னல்’, டிவி பெட்டியில் பெறபடுகிறது. பின்னர், உங்களின் உத்தரவுக்கு ஏற்ப மாற்றம் ஏற்படுத்தபடுகிறது.
`சிக்னல்’ என்றால் என்னவென்று அறிவோம். பல்வேறு வகையான `ரிமோட் கட்ரோல் அமைப்புகளுக்கு’ ஏற்ப `சிக்னல்’ வேறுபடுகிறது. டிவியை பொறுத்தவரை அகச்சிவப்புக் கதிரானது சிக்னலாக பயன்படுத்தபடுகிறது. `ரிமோட் கண்ட்ரோல்’ பொம்மைகள் போன்றவற்றில் சிக்னலானது `சோனிக்’ அல்லது `அல்ட்ராசோனிக்’ அலைகளாக இருக்கும்.
ரிமோட் கண்ட்ரோல் அமைப்பு செயல்படும் தூரம் அதிகமாக இருக்க வேண்டிவரும்போது, சக்திவாய்ந்த `ரேடியோ’ அலைகள் பயன்படுத்தபடுகின்றன. ஆளில்லா தொலைக் கட்டு பாட்டு விமானங்கள், விண்கலங்கள் ஆகியவற்றில் அந்த முறை பயன்படுத்தபடுகிறது.
டிவி `ரிமோட் கண்ட்ரோல்’ அமைப்பில் ஒவ்வொரு பொத்தானுக்கும் வெவ்வேறு பணி இருக்கிறது. ஒரு பொத்தான், பிரகாசத்தைக் கூட்டும் என்றால், மற்றொரு பொத்தான், பிரகாசத்தைக் குறைக்கும். ஒரு பொத்தான், ஒலியைக் கூட்டினால், மற்றொரு பொத்தான் அதைக் குறைக்கும்.
இவற்றை போல, வண்ணம், சேனல்களுக்கு என்று பல்வேறு பொத்தான்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஒவ்வொரு பொத்தானும் அழுத்தபடும்போது அது குறிபிட்ட அலைநீளத்தில் ஒரு அலையையோ, `சிக்னலை’யோ அனுப்புகிறது.
ஒவ்வொரு `சிக்னலும்’ டிவியில் உள்ள `ரிசீவரால்’ வெவ்வெறு விதமாக பெறபடுகின்றன. ரீசிவரானது குறிப்பிட்ட கட்டளையை அதைக் கட்டுபடுத்தும் குறிப்பிட்ட பகுதிக்கு பிரித்து அனுப்புகிறது.
ஆக, கண்ணுக்குத் தெரியாத சிக்னல்கள் முலம் உங்களால் உட்கார்ந்த இடத்தில் இருந்தே டிவியை இயக்க முடிகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, September 12, 2010

பூமியை நோக்கி வரும் விண் கற்கள்!

இரண்டு விண்கற்கள் இன்று பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ கூறியிருப்பதாவது:
பிரபஞ்சத்தில் ஏராளமான கோள்கள், துணைக் கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் 2 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதை டஸ்கன் நகரில் உள்ள கேடலினா விண்ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. 2010ஆர்எக்ஸ்30 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் சுமார் 32 முதல் 65 அடி நீளம் இருக்கலாம் என்று தெரிகிறது.
இது பூமியை 2.46 லட்சம் கி.மீ. தூரத்தில் புதன்கிழமை கடக்கும். 2010ஆர்எப்12 என்ற கல் 20 முதல் 46 அடி நீளம் இருக்கும் என்று தெரிகிறது. இது 78 ஆயிரம் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லும். பிரபஞ்சத்தை பொருத்தவரை இந்த தொலைவு மிகமிக குறைவு. அதனால், ‘நூலிழையில்’ பூமி தப்பியது என்றே கூறலாம். இந்த கற்களால் பூமிக்கு ஆபத்து இல்லை
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, September 11, 2010

பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய

நம்மில் பலர்பேர் பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தி வருவோம், இது ஒரு சோஷியல் தளம் ஆகும். இதன் மூலம் நம் கருத்தினை நண்பர்களுடனோ அல்லது பிறரிடமோ பகிர்ந்து கொள்ள முடியும்.
பேஸ்புக் கணக்கினை அலுவலகத்தில் பார்த்துவிட்டு கணக்கினை விட்டு வெளியேறாமல் வந்திருப்போம். அல்லது ப்ரவுசிங் சென்று விட்டு கணக்கினை சரியாக Logout செய்யாமல் மறந்து வந்திருப்போம். அப்போது நம்முடைய கணக்கினை யாராவது முடக்கவோ அல்லது அதன் மூலம் எதாவது தீய செயலில் ஈடுபடவோ வாய்ப்புள்ளது.
நம்முடைய பேஸ்புக் கணக்கு திறக்கப்பட்ட அனைத்து இடங்களிருந்தும் கணக்கினை விட்டு வெளியேற முடியும், இதன் மூலம் திறக்கபட்ட பேஸ்புக் கணக்கினை Logout செய்ய முடியும்.
முதலில் உங்களின் பேஸ்புக் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும். பின் ACCOUNT > Account Setting என்பதை தேர்வு செய்யவும்.
பிறகு Account Security என்பதற்கு நேராக உள்ள Change என்ற பொத்தானை அழுத்தவும்.
அடுத்தாதக் தோன்றும் திரையில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் வேறு இடத்தில் திறக்கபட்டிருந்தால் காட்டும்.
பின் End activity என்ற பொத்தானை அழுத்தவும். இனி எந்த நாட்டில் உங்கள் பேஸ்புக் திறக்கபட்டிருந்தாலும் சரி மற்ற Device அதாவது மொபைல் போனில் உங்கள் அக்கவுண்ட் திறக்கப்பட்டிருந்தால் அதுவும் Logout ஆகிவிடும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, September 9, 2010

15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

சென்ற ஆகஸ்ட் 16ல் தன் பதினைந்தாவது பிறந்த நாளை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கொண்டா டியுள்ளது. நிறுவனங்கள் பயன்பாடு, விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படுவது போன்ற பல கூறுகளால், இன்னும் தன் முதல் இடத்தைப் பிரவுசர் சந்தையில் தக்கவைத்துள்ள இந்த பிரவுசர், இதற்கென தொடர்ந்து மேற்கொண்டு வரும் போராட்டம் கவனிக்கத்தக்கதாகும்.
2001 ஆம் ஆண்டில் விண்டோஸ் எக்ஸ்பி அறிமுகப்படுத்தப்பட்ட போது, மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் குறித்த தன் நடவடிக்கை களில் சிறிது மந்த நிலையை மேற்கொண்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் பயர்பாக்ஸ் பிரவுசர் வெளியாகி, நல்லதொரு இடத்தைப் பிடித்துக் கொண்டது.
தொடர்ந்து கூகுளின் குரோம் பிரவுசரும் வெளியாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தன் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களுக்குத் தரத் தொடங்கியது. இதனால் தன் 15 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த மாதத்தில், பிரவுசர் சந்தையின் முதல் ஹீரோவாக இருந்தாலும், சுற்றிலும் பல போட்டியாளர்களைச் சந்திக்கும் நிலையிலேயே இ.எ. பிரவுசர் உள்ளது. ஜூலை இறுதியில் இ.எ. பிடித்துள்ள இடம் 60%; பயர்பாக்ஸ் 23%, குரோம் 7% மற்றும் சபாரி 5%.
கூகுள் தன் பிரவுசரான குரோம் தொகுப்பின் தன்மையை வேறு எந்த பிரவுசரும் கொண்டிருக்கவில்லை என்று பெருமைப்படுகிறது. இணைய வழி சேவைகள் என்று பார்க்கையில் கூகுள் தான் மிக அதிகமாக சேவைகள் தருவதாகவும், அதனாலேயே இதன் பிரவுசர் தனித்தன்மை கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது.
குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் வெளியாகும்போது, இந்த உண்மை தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனைச் சமாளிக்கும் வகையில் இ.எ. பிரவுசர் பதிப்பு 9 வெளியாக உள்ளது. தற்போதைய கம்ப்யூட்டர்களில் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கும் கிராபிக்ஸ் பயன்பாட்டினை இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் இணைத்து, இதன் வலிமையை நிரூபிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சில சோதனைப் பதிப்புகளையும் காட்டியுள்ளது.
இந்நிலையில் ஒரு கேள்வி நம் மனதில் எழுகிறது. எது முக்கியம்? ஆப்பரேட்டிங் சிஸ்டமா? பிரவுசரா? மைக்ரோசாப்ட் எப்போதும் ஒரு பிரவுசர், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டு வருகிறது. இங்கு தான் பிரச்னையே எழுகிறது. ஏன் மைக்ரோசாப்ட் இந்த நிலையை எடுக்கிறது என்று பார்க்கலாம்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ல் வெளியானது. தன் விண்டோஸ் 95 தொகுப்பினை வெளியிட்டு ஒரு மாதம் கழித்து இந்த பிரவுசரை வெளியிட்டது. விண்டோஸ் 95 சிஸ்டத்தின் ஆட் ஆன் தொகுப்பாகத் தந்தது.
இணையத்தின் வலிமையை, திறனைத் தான் தெரிந்து கொண்ட தாகவும், அதனால் தன் அனைத்து சாதனங்களிலும், இணையப் பயன்பாட்டினை இணைக்க இருப்ப தாகவும் அறிவித்தது. அப்போது பிரவுசர் உலகில் கொடி கட்டிப் பறந்த நெட்ஸ்கேப் பிரவுசரை, இன்டர்நெட் எக்ஸ்புளோரரால் உடனே வெளியே தள்ள முடியவில்லை. 1997 ஆண்டு, முதல் ஆறு மாதம் வரை இ.எ. பிரவுசர் 50% இடத்தை மட்டுமே கொண்டிருந்தது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 3, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு வெளியானபோதுதான், இ.எ. பிரவுசருக்கு நல்ல காலம் ஏற்பட்டது. உடனே இது போல இணைத்துத் தருவது, நிறுவனக் கொள்கைகளைக் காற்றில் பறக்க விடுவதாகும், எல்லை மீறிய செயல் என்று அப்போது ஐரோப்பிய கூட்டமைப்பு வழக்கு தொடுத்தது. சென்ற ஆண்டு தான் இந்த வழக்கு முடிவு மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தண்டிக்கும் வகையில் வெளியானது.
ஐரோப்பிய நாடுகளில் மட்டும் தன் பிரவுசரைக் காட்டாமல் இருக்கப்போவதாக, மைக்ரோசாப்ட் அச்சுறுத்திப் பார்த்தது. இறுதியில் மற்ற பிரவுசர்களையும் வாடிக்கையாளர்கள் விரும்பினால், டவுண்லோட் செய்து பயன்படுத்த வழிகளைத் தருவதாக அறிவித்தது.
நெட்ஸ்கேப் பிரவுசரைப் பின்னுக்குத் தள்ளி, இருக்கும் இடம் காணாமல் ஆக்கியபின், மைக்ரோசாப்ட் சற்று நிதான போக்கினைக் கடைப்பிடித்தது. அடுத்த புதிய வசதிகள், இ.எ. பதிப்பு 6ல் தான் தரப்பட்டது.
இந்த வேளையில் பயர்பாக்ஸ் டேப் பிரவுசிங் உட்பட பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது. இது போன்ற சில புதுமைகள் எதனையும் தராததால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சற்றுத் தள்ளாடியது.
இதனால், தன் இ.எ. பிரவுசர் பதிப்பு 8 மற்றும் பதிப்பு 9ல், இன்டர்நெட் உலகம் எதிர்பார்க்கும் நவீன வசதிகளைத் தர முனைந்து செயல்பட்டது. தொடர்ந்து இந்த முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.
1995: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 1.0
விண்டோஸ் 95 வந்த பின் ஒரு மாதம் கழித்து “Internet Jumpstart Kit” என அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக வெளியாகவில்லை.
1995: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 2.0.
அந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. மேக் மற்றும் விண்டோஸ் ஆகிய இரு சிஸ்டங்களையும் இது சப்போர்ட் செய்தது.
1996: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 3.0.
1996 ஆகஸ்ட்டில் வெளியானது. இமெயில் சப்போர்ட் தரப்பட்டது. இமேஜ் பைல்கள் காட்டப்பட்டன. ஆடியோவும் இதிலேயே இயக்கப்பட்டது.
1997: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 4.0.
வாடிக்கையாளர்களுடன் தகவல் சேர்க்கும் வகையில், இன்ட்ராக்டிவ் இணைய தளங்கள் சப்போர்ட் செய்யப்பட்டன. மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 4.0. இமெயில் சேவையை வழங்கும் வகையில் வெளியானது.
1998: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 5.0.
தொழில் நுட்ப ரீதியாகச் சில திறன்கள் மேம்பாடடைந்தன.
2001: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6.0.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக வெளியானது. பல ஆண்டுகள் இதன் கூறுகளே, பிரவுசர் ஒன்றின் வரையறைக்கப்பட்ட கூறுகளாக இருந்து வந்தன.
2006: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0.
2006 அக்டோபர் மாதம் வெளியானது. விண்டோஸ் சர்வீஸ் பேக் 2 பயன்படுத்துபவர்களுக்கென உருவாக்கப்பட்டு கிடைத்தது. பின்னர் விஸ்டாவின் ஒரு பகுதியானது. டேப் பிரவுசிங் வசதி தரப்பட்டது.
2009: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8.0.
மார்ச், 2009ல் வெளியானது. தன் பிரவுசிங் இன் ஜினை, நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கியது மைக்ரோசாப்ட். இந்த பிரவுசரின் ஒரு பகுதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் ஒரு பகுதியானது.
2011? இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9.0.
பெரிய அளவிலான அடுத்த அப்டேட் இதுவாகத்தான் இருக்கும். எச்.டி.எம்.எல்.5 தொழில் நுட்பத்திற்கான மேம்படுத்தப்பட்ட சப்போர்ட் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக இயங்கும் ஜாவா ஸ்கிரிப்ட் இன் ஜின் கிடைக்கும். கம்ப்யூட்டரின் கிராபிக்ஸ் சிப்பின் திறனைப் பெற்று, டெக்ஸ்ட் மற்றும் கிராபிக்ஸ் திறனை மேம்படுத்திக் காட்டப்படும் வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, September 8, 2010

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறது… வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செய்யும் பொழுதல்லவா அது!
நீங்கள் நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தால் இனியாவது அதிகாலையின் அதிசயங்களை அனுபவிக்க விடி காலையிலேயே விழித்தெழுங்கள்.ஆமாம்…காலையில் துயில் எழும் பழக்கம் நமக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றன. `அதிகாலையில் எழுவது ஆரோக்கியமும், அறிவும் தரும்’ என்கிறார் பிராங்கிளின்.
சீக்கிரம் எழுந்தால் அதிகாலையை போன்ற அமைதி உங்களிடமும் ஒட்டிக் கொள்ளும். வாகன இயக்கம், ரேடியோ, டி.வி. இரைச்சல், பக்கத்து வீடுகளின் கூச்சல், குழந்தைகளின் அழுகுரல் என்று எதுவும் உங்களுக்குத் தொந்தரவு செய்யாது.
எங்கும் அமைதி நிலவ நீங்கள் நிம்மதியாக செயல்படலாம். அதிகாலையை போன்ற அருமையான பொழுதை வேறு எப்போதும் அனுபவிக்கவே முடியாது. அந்த வேளைதான் சிந்திக்க, செயல்பட, படிக்க, சுவாசிக்க என பலவற்றுக்கும் ஏற்றது.
காலையில் படுக்கையில் இருந்து துள்ளிக்குதித்து எழுந்திருங்கள். சோம்பேறித்தனமாக எழுந்தால் அன்றைய தினமே சோம்பலாகத்தான் இருக்கும். அவசரம் அவசரமாக வேலைகளை செய்ய வேண்டிவரும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்படும். பிறகு அலுவலகத்திற்கு கிளம்ப தாமதம் ஆகும். இப்படி அடுக்கடுக்கான சிரமங்கள் தொடர, நிம்மதியே போய்விடும்.
சீக்கிரமாக எழுந்துவிட்டால் பாதி வேலையை சூரியன் உதிக்கும் முன்பே முடித்துவிட்டு நிதானமாக இருக்கலாம். இதனால் மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும் நாள் இறுதிவரை இன்பமாகவே தொடரும்.
காலை வேளையிலேயே எழுதுவது, மெயில் பார்பது போன்ற சின்னச் சின்ன வேலைகளை செய்து முடித்தால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம். அந்த நேரத்தை குடும்பத்தினருடன் ஜாலியாகக் கழிக்கலாம்.
உங்கள் லட்சியத் திட்டங்கள் பற்றி அதிகாலையில் சிந்தியுங்கள். அப்போது குழப்பங்களுக்குக் கூட தெளிவான வழி கிடைக்கும். எழுந்தவுடன் அன்று முடிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். உடனே லட்சிய பயணத்தை தொடங்குங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
ஒவ்வொரு வேலையையும் சரியாகச் செய்து முடிக்க வேண்டுமானால் அதற்கு காலையில் எழுவது தான் சரியான செயல். ஒரு வேலையில் தாமதமானாலும் அடுத்தடுத்த தாமதங்கள் உங்கள் மதிப்பை குறைப்பதோடு, வேலைகளையும் முடக்கும்.
நீங்கள் சொல்வதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. காலையில் எழுந்திருக்கத்தான் முடியவில்லை என்கிறீர்களா? அது ஒன்றும் பெரிய காரியமில்லை. முதலில் சில நாட்கள் அலாரம் வைத்து எழுந்திருக்கலாம். அலாரத்தை படுக்கையில் வைத்தால் மனம் அணைத்துவிட்டு தூங்கத்தான் சொல்லும். எனவே எழுந்து சென்று `ஆப்’ செய்யும் தொலைவில் அலாரத்தை வையுங்கள்.
இரவில் 2 டம்ளர் தண்ணீர் பருகிவிட்டு படுத்தால் காலையில் தானாகவே எழுந்திருப்பீர்கள். எழுந்தவுடன் மீண்டும் படுக்காமல் வேலை செய்யத் தொடங்கிவிட்டால் சோம்பல் ஓடியே போகும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

குழந்தைகள் உடலில் கொழுப்புசத்தை அதிகரிக்கும் நோன்ஸ்டிக் பாத்திர சமையல்

உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் எண்ணையின் அளவை குறைப்பதற்காக சமீப காலமாக “நோன்ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்கின்றனர். இதன் மூலம் சமைக்கும் போது மிக குறைந்த அளவே எண்ணை பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் பாத்திரத்தில் ஒட்டாது.
எனவே அவற்றில் சமையல் செய்வது ஒரு பாஷனாக கருதப்படுகிறது. ஆனால், அதுவும் ஒருவகையில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
“நோன்ஸ்டிக் பாத்திரத்தில் சமையல் செய்து தயாரிக்கப்படும் உணவை குழந்தைகளின் உடலில் கொழுப்புசத்து அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் ரசாயன பொருட்கள் மற்றும் தண்ணீரை உறிஞ்சாத வாட்டர் புரூப் தயாரிக்க பயன்படும் “பேப்ரிக்குகளும் கொழுப்பு சத்தை உணவில் அதிகரிக்கின்றன. அந்த உணவை சாப்பிடும் குழந்தைகளின் ரத்தத்தில் கலந்து கொழுப்பு சத்தை அதிகரிக்கிறது. லிபோபுரோட்டீனின் அளவை குறைக்கிறது. இதனால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது.
நோன்ஸ்டிக் பாத்திரங்களில் உணவு பொருட்கள் ஒட்டாமல் இருக்க “பெர்புலோரோ அல்சைல் திரவம் பூசப்படுகிறது. இதன் மூலம் தான் கொழுப்புசத்து அதிகரிப்பதாக கூறப்படுகிறது.இந்த ஆய்வை மேற்கு வர்ஜினீயா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஸ்டெபானியா பிரிஸ்பீ தலைமையிலான குழு மேற்கொண்டனர்
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பழைமை வாய்ந்த நாணயங்கள் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 82 இஸ்லாமிய நாணயங்களை ஜேர்மனிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மேற்படி நாணயங்கள் சுமார் 1200 வருடங்கள் பழைமை வாய்ந்தவையெனக் கருதப்படுகின்றது.
ஆய்வாளர் குழுவொன்று ஜேர்மனியின் மெக்லன் பேர்க் மாகாணத்தில் உள்ள அன்க்லாம் நகரில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போதே இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சில நாணயங்கள் தூய வெள்ளியினால் செய்யப்பட்டவை. மேலும் இவை 180 ஆவது ஹிஜ்ரி வருடத்தினை சேர்ந்தவையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த வரலாற்று ஆசிரியர் ஒருவர் இந்நாணயங்கள் சுமார் 1200 வருடங்களுக்கு முன்னரே வர்த்தக நடவடிக்கைகளின் போது பாவனைக்குட்படுத்தப்பட்டதைத் தாம் உறுதி செய்வதாகத் தெரிவித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, September 6, 2010

விண்டோஸ் எக்ஸ்பி(Windows XP)எளிதாக பார்மெட்செய்வது எப்படி

விண்டோஸ் எக்ஸ்பி(Windows XP) 
இந்த விண்டோஸ் எக்ஸ்பியை நான் என் நண்பர்கள் பலபேருக்கு பார்மெட் மற்றும் இன்ஸ்டால் செய்து கொடுத்து இருக்கிறேன். பார்மெட் செய்யும்போது ஏற்படும் சிலபிரட்ச்சனைகளையும் சந்தித்துஇருக்கிறேன். 
அதனால் முதலில் இதனை எளிதாக பார்மெட்செய்வது எப்படி என்பதை பற்றிய ஒருசிறுகுறிப்பு உங்களுக்கு தருகிறேன். 
(
விண்டோஸ் எக்ஸ்பியை பார்மெட் செய்ய அதிகம் கம்ப்யூட்டர் தெரிந்துஇருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சில முக்கிய குறிப்புகள் நீங்கள் தெரிந்து கொண்டாலே போதும்) 
உங்களுக்காக Windows XP பார்மெட் செய்வது பற்றி சிறுகுறிப்பு. 
நீங்கள் புதிதாக கம்ப்யூட்டர் வாங்கி இருக்கிறீர்கள் அல்லது ஏற்கனவே உள்ளவிண்டோஸ் எக்ஸ்பியை அழித்துவிட்டு புதிதாக எக்ஸ்பி பதியவேண்டு என்றுநினைக்கிறீகள் என்று வைத்துக்கொள்வோம். 
முதலில் உங்களிடம் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி சி.டி. யை உங்கள் கம்ப்யூட்டரின் சி.டிடிரைவில் போட்டு கம்ப்யூட்டரை ஆன் செய்யுங்கள். 
உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி சி.டியை டிடெக்ட் செய்யக் கூடிய செட்டப்சரியாக இருந்தால் கம்ப்யூட்டர் ஆன் ஆகும் நேரத்திலேயே Enter continue.... என்றஆங்கில வார்த்தைவரும். 
அப்படி வந்தால் எண்டர் அடித்துவிடுங்கள். 
(நீங்கள் ஏற்கனவே இருக்கும் விண்டோஸ் எக்ஸ்பியை பார்மெட் செய்து மறுபடி புதியஎக்ஸ்பி ஏற்றுவதாக இருந்தால் உங்களுடைய முக்கியமான பைல்களை ஒரு யூஎஸ்பிடிரைவில் எடுத்துவிடுங்கள். அதோடு உங்களுக்கு தேவையான ஆடியோ வீடியோடிரைவையும் பேக்கப் செய்து அதே யூஸ்பி டிரைவில் வைத்துக்கொள்ளுங்கள். டிரைவர்ஸ் பேக்கப் செய்வதற்க்கு உங்களுக்கு மென்பொருள் இல்லை என்றால் இந்த டிவைஸ் டிரைவர் கோப்புகளை அப்படியே பேக்கப் எடுத்துக்கொள்ள ஒரு எளிய மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Double Driver.
இந்த மென்பொருள் மூலம் ஒரு முறை அனைத்து டிவைஸ் டிரைவர்களையும் பேக்கப் எடுத்து விட்டால் போதும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இதைக்கொண்டு பழையவற்றை மீட்டுக்கொள்ளலாம்.
இலவச மென்பொருள்.


சரி இப்பொழுது அடுத்ததுக்கு வருவோம். உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி சி.டி Enter continue....... என்ற செட்டப்புக்கு செல்லாமல் Operating System Not Installed என்றவார்த்தையோடு நின்றுவிட்டால் அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவேஉள்ளவிண்டோஸ் ஓப்பன் ஆகிவிட்டால் என்னசெய்வது. 
மறுபடியும் உங்கள் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்யுங்கள்.

உங்கள் கம்ப்யூட்டர் ரீ.ஸ்டார் ஆகும்போது முதலில் உங்கள் கம்ப்யூட்டர் பிராண்ட்லோகோ வரும் அல்லது பிராண்டட் கம்ப்யூட்டராக இல்லாமல் இருந்தால் உங்கள்கம்ப்யூட்டரின் மெமரியைரீட் பன்னக்கூடிய முதல் டிஸ்பிலே வரும். அந்த நேரத்தில்நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பட்டனில் Esc அல்லது F2 அல்லது Delete என்றமூன்று பட்டன்களில் ஏதாவது ஒன்றை அழுத்துங்கள். ஏன்என்றால் இந்த மூன்றில் ஒருபட்டனில்தான் உங்கள் கணினியை சி.டி. செட்டப்புக்கு மாற்றக்கூடிய வழி கிடைக்கும்.சில கணினியில் முதல் டிஸ்பிலேயிலேயே Setup Option க்குசெல்லக்கூடிய Short cut கீஎது என்பது அதன் வலது அல்லது இடது பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும். 
கணினியில் அது குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த Short cut கீமூலம் உங்கள்கணினியின் Bios செட்டப்புக்கு உள்ளே செல்லுங்கள்.

 அங்கு சென்று Boot Option ல்உள்ளமுதலாவது Boot Option Hard disk  CD or DVD டிரைவிற்க்குமாற்றிவிட்டு F10 அழுத்தி Save & Exit செய்துவிட்டுமறுபடியும்கம்ப்யூட்டரைரீஸ்டார்செய்யுங்கள். 
சரி Enter continue......... என்ற வார்த்தையோடு உங்கள் எக்ஸ்பி சி.டி தொடந்தால்

 உடனே தாமதிக்காமல் உங்கள் கீபோர்டில் Enter பட்டனை அழுத்துங்கள். 
 உங்கள் கீபோர்டில்F2-F6 பட்டனை அழுத்துங்கள். 

சிறிது நேரம் புளூ கலர் ஸ்கிரீனில் உங்கள் எக்ஸ்பி சி.டி ரீட் ஆகும் (நீங்கள் இதுவரை கேள்விபடாத வார்த்தைகள் எல்லாம்கூடஉங்கள் ஸ்கிரீனில் கீழ் பாகத்தில் வந்து வந்து போகும் அதைப்பற்றி கவலைபடாதீர்கள்) 


இதில் To setup Windows XP now, Press ENTER 
என்ற ஒரு வார்த்தை இருப்பதை பார்ப்பீர்கள். இப்பொழுது நீங்கள் விண்டோஸ் புதிதாக இன்ஸ்டால் செய்ய இருப்பதல் Enterஎன்ற பட்டனை உங்கள் கீபோர்டில் அழுத்துங்கள். 
இதில் To continue install a fresh copy of Windows XP press ESC என்றவார்த்தை இருக்கும் உடனேநீங்கள் ESC என்ற பட்டனைஉங்கள் கீ போர்டில் அழுத்துங்கள். 
அடுத்து உங்கள் விண்டோஸ் எக்ஸ்பிக்கான Agreement பக்கம் ஓப்பன் ஆகும். 

இதில் F8  அழுத்தி நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்வதற்க்கான மைக்ரோசாப்ட் நிறுவணத்தின் கண்டிசனுக்குஒப்புக்கொண்டதாக அடுத்த பக்கத்துக்கு செல்லுங்கள். 
அடுத்ததாக நீங்கள் முக்கியமான இடத்திற்க்கு வருகிறீர்கள். 
இங்குதான் உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள ஹார்ட் டிஸ்க் பற்றிய தகவல்கள் இருக்கின்றது. 


இப்பொழுது உங்கள் கணினியில் புதிய ஹார்ட் டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளதால் unpartitioned space என்ற குறிப்போடு உங்கள் ஹார்ட்டிஸ்க்கின் அளவை உங்கள் கம்ப்யூட்டர் உங்களுக்கு தெரியப்படுத்தும். 
நீங்கள் 80 GB ஹார்ட் டிஸ்க் பொருத்தி இருந்தால் இங்கு unpartioned space 80000 MB என்று இருக்கும. 
சரி. இந்த பார்டிசன் டிஸ்பிலேயில் மேலே மூன்று வரியில் குறிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. 
அவை 
-To setup windows xp on the selected item, press ENTER 
(
நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்யவேண்டும் என்றால் Enter அடிக்க வேண்டும்) 
-To create a partition in the Un partitioned space press C 
(
நீங்கள் புதிதாக பார்டிசனை உருவாக்க வேண்டும் என்றால் உங்கள் கீ போர்டில் C என்ற பட்டனை அழுத்தவேண்டும்) 
- To delete the selected partition press D 
(
நீங்கள் தவறுதலாக உருவாக்கிய இந்த பார்டிசனை அழிக்கவேண்டுமென்றால் உங்கள் கீ போர்டில் D என்ற பட்டனை அழுத்தவேண்டும்) 
சரி.. இப்பொழுது நீங்கள் பார்டிசன் இதுவரை உருவாக்கப்படாத உங்கள் ஹார்டிஸ்கில் புதிதாக பார்டிசனை உருவாக்கவேண்டும். 
அதற்க்கு என்ன செய்வது. 
இரண்டாவதாக எழுதப்பட்ட 
-To create a partition in the Un partitioned space press C 
என்ற குறிப்புதான் இப்பொழுது உங்களுக்கு தேவை. 
அப்படி என்றால் நிங்கள் இப்பொழுது உங்கள் கீ போர்டில் C என்ற எழுத்தை அழுத்துங்கள். 
உடனே உங்கள் கம்ப்யூட்டரில் 80 GB ஹார்டிஸ்க் இடம் இருப்பதால் 80000 MB என்று எழுதப்பட்டதுபோல அதில் நீங்கள் டைப் செய்து மாற்றும் விதமாக ஒரு டிஸ்பிளே ஓப்பன் ஆகும். 
இங்கு நீங்கள் முடிவு செய்யுங்கள். என்ன ? 

உங்களுக்கு ஒரே பார்டிசனில் விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்யவேண்டுமா அல்லது இரண்டு பார்டிசனாக பிரித்துவிட்டு அதில் ஒரு பார்டிசனில் விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்யவேண்டுமா என்று. 
ஒரே பார்டிசனில் இன்ஸ்டால் செய்யவேண்டுமென்றால் வேறு எதுவும் செய்யாமல் எண்டர் பட்டனை அழுத்துங்கள். 
இரண்டு பார்டிசன் வேண்டுமென்றால் அந்த 80000 MB என்று எழுதப்பட்ட இடத்தில் நீங்கள் 40000 என்று மாற்றி எண்டர் அழுத்துங்கள். 
பிறகு பாக்கி இருக்கும் Un partitioned space பகுதிக்கு உங்கள் கர்சரை மாற்றி அதில் செலெக்ட் ஆகி இருக்கும் நேரத்தில் மறுபடி C என்ற பட்டனை அழுத்தி பாக்கி உள்ள MB யை அப்படியே எண்டர் அழுத்துங்கள். 
ஓகே இப்பொழுது இரண்டு பார்டிசன் C & D உங்களூக்கு உருவானது உங்கள் டிஸ்பிளேயில் தெரியும். 
அடுத்து மறுபடியும் உங்கள் கீ போர்டில் உள்ள ஆரோ மூலம் C டிரைவை செலெக்ட் செய்து எண்டரை அழுத்துங்கள். இப்பொழுது
Formate the partition using NTFS file system (Quick) 
Formate the partition using FAT file system (Quick) 
Formate the partition using NTFS file system 
Formate the partition using FAT file system 
என்று குறிப்பிடப்பட்ட நான்கு வரிகள் எழுதப்பட டிஸ்பிளே உங்களுக்கு தெரியும். 


இப்பொழுது நீங்கள் புதிதாக இன்ஸ்டால் செய்வதால் முதலாவதாக உள்ள Formate NTFS Quick என்ற இடத்தை தேர்வு செய்து எண்டர் அழுத்துங்கள். 
சிறிது நேரத்தில் பார்மெட் முடிந்து விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் ஆக ஆரம்பித்துவிடும். 
விண்டோஸ் எக்ஸ்பி சிறிது நேரம் காப்பி ஆன பிறகு உங்கள் கம்ப்யூட்டர் தானாக ரீ ஸ்டார்ட் ஆகும். அப்பொழுது மறுபடியும் உங்கள் கம்ப்யூட்டரில் போடப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி சி.டியை கம்ப்யூட்டர் டிடெக்ட் செய்து Enter Continue... என்று வந்தால் எண்டரை அழுத்த வேண்டாம். அது தானாக ஓப்பன் ஆக விடுங்கள். 
உடனே விண்டோஸ் எக்ஸ்பி லோகோ வந்த பிறகு கீழ் கானும் டிஸ்பிளே வந்துவிடும். 

20 முதல் 25 நிமிடம் இன்ஸ்டால் ஆனதும் உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி கியை உங்களிடம் டைப் பன்னச்சொல்லி கேட்க்கும். உங்கள் சி.டியின் கீயை அதில் டைப் செய்யுங்கள். பிறகு எண்டர் அடித்து தொடருங்கள். 

பிறகு உங்கள் கம்ப்யூட்டருக்கு பெயர் மற்றும் கம்பெணியின் பெயர் கேட்க்கும். அதனையும் டைப் செய்து தொடருங்கள்.
 அடுத்து எந்த டிஸ்பிளே வந்தாலும் எண்டர் அழுத்துங்கள். சிறிது நேரத்தில் விண்டோஸ் இன்ஸ்டால் புரோக்ராம் முடிந்துவிடும். 

இப்பொழுது நீங்களே உங்கள் கம்ப்யூட்ருக்கு விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்துவிட்டீர்கள்.
 
அடுத்து விண்டோஸ் எக்ஸ்பி சி.டியை எடுத்துவிட்டு உங்களிடம் உள்ள டிரைவர் CD யை போட்டு ஆடியோ மற்றும் வீடியோ டிரைவர்கள் அனைத்தையும் இன்ஸ்டால் செய்துவிடுங்கள். 
இதில் ஏதேனும் குழப்பம் இருந்தால் தயங்காமல் என்னை தொடர்புகொள்ளலாம். 

என் ஈமெயில் முகவரி -ZMR2597@YAHOO.COM
விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்துவிட்டீர்கள் அடுத்து விண்டோஸ் எக்ஸ்பியில் உங்களுக்கு தேவைப்படும் சின்ன சின்ன குறிப்புகள் பற்றி பார்ப்போம். 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF