Friday, September 28, 2012

ஒளியின் வேகத்தை மிஞ்சி நட்சத்திரங்களுக்குப் பயணிக்க முடியுமா?


Star Trek திரைப் படத்தில் காட்டப் படுவது  போல் விண்வெளியில் ஒளியின் வேகத்துக்கு சமீபமாக அல்லது அதை மிஞ்சும் வேகத்தில் பயணித்து நட்சத்திரங்களை அடைவது சாத்தியமே என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது warp drives எனப்படும் எனப்படும் Star Trek உயர் மாடல்கள் கொள்கை அடிப்படையிலும் சில மாடல்கள் செய்முறை அடிப்படை இலும் வருங்காலத்தில் இக்கனவை நிறைவேற்ற உள்ளன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.விண்வெளி ஆராய்ச்சியில் மனித இனத்தின் இலக்குகளை மட்டுப் படுத்துவதற்கு எந்த வரையறையும் கிடையாத நிலையில் ஒளியின் வேகத்தில் நாம் பயணித்தால் கூட நட்சத்திரங்களை நோக்கிச் செல்வது பல வருடங்களை அல்லது நூற்றாண்டுகளை அல்லது ஆயிரம் வருடங்களை எடுக்கக் கூடும் என்பதே யதார்த்தம்.

பிரபஞ்சத்தில் ஒளியின் வேகத்தை மிஞ்சும் பொருள் எதுவுமே இதுவரை இல்லை என்ற போதும் ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கைப் படி வெளியையும் காலத்தையும் வளைத்து அதன் ஓட்டைகளுக்கூடாக (loop holes) ஒளியின் வேகத்தில் பயணிக்கும் விண் ஓடங்களின் பல மாதிரிகளைப் பல கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர்.சார்புக் கொள்கைப் படியும் சில கணிதச் சமன்பாடுகள் கூறுவதன் படியும் warp speed எனும் இயற்கையை வளைத்துச் செல்லும் வேகத்தில் ஒரு சிறிய விண்வெளி ஓடம் பயணிப்பதற்கு சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமான வியாழனின் திணிவுக்குச் சமனான சக்தி தேவைப் படுகின்றது என கூறப்படுகிறது.

நிகழ்காலத்தின் மெக்ஸிக்கோவைச் சேர்ந்த வான் பௌதிக விஞ்ஞானியான Miguel Alcubierre , கோள வடிவமான விண்கலம் ஒன்று தனக்கு முன்னே உள்ள வெளியை இணைத்து தனக்குப் பின்னால் விரிவடையச் செய்யும் விதி முறையில் பயணிக்கக் கூடிய விதத்தில் சில கொள்கைகளை முன் வைத்துள்ளார்.குறித்த இவ் விண்கலம் ஒரு கிரகத்திடம் இருந்து அல்லது ஒரு சூப்பர் நோவாவிடம் இருந்து சக்தியைப் பெற்று விண்வெளியில் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF