Sunday, September 30, 2012
கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள்
இன்றைய அவசர உலகத்தில் உடல் ஆரோக்கியத்தை சரியாக கவனிக்க முடியாமல் இருக்கிறது. அதிலும் மற்றவைகளை பராமரிக்கிறோமோ இல்லையோ, கல்லீரலை முக்கியமாக சரியாக கவனிக்க வேண்டும்.
ஏனெனில் கல்லீரல் நமது உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.மேலும் இரத்தத்தில் உள்ள கழிவுகளையும் சுத்தப்படுத்துகிறது. அத்தகைய கல்லீரலின் வேலையை சரியாக நடத்துவதற்கு ஒரு சில உணவுகள் உதவுகின்றன. இத்தகைய உணவுகளை உண்டால் உடலில் உள்ள கழிவுகள் எளிதில் நீங்கி, கல்லீரலும் ஆரோக்கியமானதாக இருக்கும்.
பூண்டு:
உடலை நன்கு சுத்தப்படுத்த பூண்டு ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அந்த பூண்டு கல்லீரலில் உள்ள நொதிப் பொருளை சரியாக இயக்குகிறது.அதாவது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, டாக்ஸின்களை வெளியேற்றுகிறது. மேலும் பூண்டில் இருக்கும் அல்லீசின் மற்றும செலினியம் என்னும் பொருட்கள், கல்லீரலின் இயக்கத்திற்கு உதவுகிறது.
கிழங்கு வகை காய்கறிகள்:
உண்ணும் உணவில் கிழங்கு வகை காய்கறிகளான பீட்ரூட், கேரட், உருளைக் கிழங்கு போன்றவற்றை சேர்த்துக் கொண்டால், அந்த காய்கள் கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ள செல்களை புதுபிக்கும். ஆகவே இத்தகைய காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
பச்சை காய்கறிகள்:
உணவில் பயன்படுத்தும் காய்கறிகளிலேயே பச்சை காய்கறிகள் தான், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற சிறந்த உணவுப் பொருட்கள்.ஏனெனில் அவை சூரியகதிர்களிடமிருந்து ஒளிச்சேர்க்கையின் மூலம் குளோரோபிள்களை உற்பத்தி செய்கின்றன.அதனால் அவற்றை சாப்பிடுவதால், உடலில் உள்ள கழிவுகள் எளிதில் நீங்கிவிடுகின்றன. அதிலும் பாவற்காய், கீரைகள் மற்றும் முட்டை கோஸ் மிகவும் சிறந்த காய்கறிகள்.
கிரீன் டீ:
கிரீன் டீயில் அதிகமான அளவு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான கேட்டசின்கள் இருக்கின்றன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலில் உள்ள ரேடிக்கல்களை நீக்கி, டாக்ஸின்களை வேகமாக வெளியேற்றுகின்றன.
வெண்ணெய் பழம்:
வெண்ணெய் பழத்தில் உள்ள ஒற்றை நிறைவுறா கொழுப்புக்கள் இருக்கின்றன. அவை கல்லீரலில் உள்ள சுத்தப்படுத்தும் செயல்களில் மட்டும் ஈடுபடாமல், புதிய செல்களை புதுபிக்கவும் உதவுகிறது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், அதற்கான பலனை விரைவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆப்பிள்:
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் இதில் உள்ள அதிகமாக பெக்டின், செரிமானப் பாதையில் உள்ள டாக்ஸின்களை சரியாக, சுத்தமாக வெளியேற்றுகிறது.
ஆலிவ் ஆயில்:
ஆலிவ் எண்ணெயின் பயன்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் இந்த எண்ணெயில் உள்ள கொழுப்புக்கள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை சரியாக பிரிப்பதற்கு உதவுகிறது. மேலும் எந்த ஒரு டாக்ஸின்களும் அதிகமாக சேராமல் தடுப்பதோடு, இதன் வேலையை நன்கு செயல்படுத்துகிறது.
தானியங்கள்:
தானியங்களில் உள்ள வைட்டமின் பி- காம்ப்ளக்ஸ், கல்லீரலுக்கு மிகவும் நல்லது.அதிலும் ப்ரௌன் அரிசி, நவதானிய மாவுகள், சோயா மாவு போன்றவை அனைத்தும் அளவுக்கு அதிகமான நன்மையை கல்லீரலுக்குத் தருகிறது.
ப்ரோக்கோலி:
ப்ரோக்கோலியில் உள்ள க்ளுக்கோசினோலேட்ஸ்(glucosinolates), நொதிப் பொருள் உற்பத்திக்கு உதவுகிறது.இந்த நொதிப் பொருள் உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென் என்னும் பொருளை வெளியேற்றுகிறது.ஆகவே மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்ணும் உணவில் சேர்த்துக் கொண்டால், கல்லீரல் ஆரோக்கியத்துடன், உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
வங்கதேசத்தில் பௌத்த விகாரைகளுக்கு இஸ்லாமியர்கள் தீ வைப்பு!
வங்கதேசத்தில் தென் கிழக்கு பிராந்தியத்தில் பௌத்தர்கள் அதிகம் வாழும் கிராமங்கள் மீது நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தினர்.
இவர்கள் குறைந்தது ஆறு பௌத்த விகாரைகளுக்கு தீ வைத்துள்ளார்கள்.
மேலும் கொக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் தாக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பயந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளன.அந்த மாவட்டத்தில் பௌத்தர் ஒருவர், அவரது பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியதாக வெளியான குற்றச்சாட்டுகளை அடுத்தே இந்த வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.இந்நிலையில் தனக்கும், பேஸ்புக் பக்கத்தில் வெளியானதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தெரிவித்துள்ளார்.

Friday, September 28, 2012
ஒளியின் வேகத்தை மிஞ்சி நட்சத்திரங்களுக்குப் பயணிக்க முடியுமா?
Star Trek திரைப் படத்தில் காட்டப் படுவது போல் விண்வெளியில் ஒளியின் வேகத்துக்கு சமீபமாக அல்லது அதை மிஞ்சும் வேகத்தில் பயணித்து நட்சத்திரங்களை அடைவது சாத்தியமே என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது warp drives எனப்படும் எனப்படும் Star Trek உயர் மாடல்கள் கொள்கை அடிப்படையிலும் சில மாடல்கள் செய்முறை அடிப்படை இலும் வருங்காலத்தில் இக்கனவை நிறைவேற்ற உள்ளன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.விண்வெளி ஆராய்ச்சியில் மனித இனத்தின் இலக்குகளை மட்டுப் படுத்துவதற்கு எந்த வரையறையும் கிடையாத நிலையில் ஒளியின் வேகத்தில் நாம் பயணித்தால் கூட நட்சத்திரங்களை நோக்கிச் செல்வது பல வருடங்களை அல்லது நூற்றாண்டுகளை அல்லது ஆயிரம் வருடங்களை எடுக்கக் கூடும் என்பதே யதார்த்தம்.
பிரபஞ்சத்தில் ஒளியின் வேகத்தை மிஞ்சும் பொருள் எதுவுமே இதுவரை இல்லை என்ற போதும் ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கைப் படி வெளியையும் காலத்தையும் வளைத்து அதன் ஓட்டைகளுக்கூடாக (loop holes) ஒளியின் வேகத்தில் பயணிக்கும் விண் ஓடங்களின் பல மாதிரிகளைப் பல கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர்.சார்புக் கொள்கைப் படியும் சில கணிதச் சமன்பாடுகள் கூறுவதன் படியும் warp speed எனும் இயற்கையை வளைத்துச் செல்லும் வேகத்தில் ஒரு சிறிய விண்வெளி ஓடம் பயணிப்பதற்கு சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமான வியாழனின் திணிவுக்குச் சமனான சக்தி தேவைப் படுகின்றது என கூறப்படுகிறது.
நிகழ்காலத்தின் மெக்ஸிக்கோவைச் சேர்ந்த வான் பௌதிக விஞ்ஞானியான Miguel Alcubierre , கோள வடிவமான விண்கலம் ஒன்று தனக்கு முன்னே உள்ள வெளியை இணைத்து தனக்குப் பின்னால் விரிவடையச் செய்யும் விதி முறையில் பயணிக்கக் கூடிய விதத்தில் சில கொள்கைகளை முன் வைத்துள்ளார்.குறித்த இவ் விண்கலம் ஒரு கிரகத்திடம் இருந்து அல்லது ஒரு சூப்பர் நோவாவிடம் இருந்து சக்தியைப் பெற்று விண்வெளியில் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஹபிள் தொலைக்காட்டியால் எடுக்கப் பட்ட பிரபஞ்சம் பற்றிய அதியுயர் படங்கள்!!
விண்வெளியில் பூமியைச் சுற்றி வலம் வரும் அதியுயர் திறனுடைய ஹபிள் விண் தொலைக் காட்டி (HST) பிரபஞ்சம் பற்றிய அதி நுண்ணிய புகைப்படங்களைப் படம் பிடித்து சமீபத்தில் பூமிக்கு அனுப்பியுள்ளது. இப்புகைப் படங்கள் பிரபஞ்சத்தில் மிகுந்த தூரத்தில் உள்ள அண்டங்களையும் நட்சத்திரங்கள் தோன்றிய புதிதில் எவ்வாறு மின்னத் தொடங்கின என்பதையும் தெரிவிக்கின்றன.எனினும் இப்புகைப்படங்கள் மிக எளிமையாகவும் விளக்கமாகவும் அமையவில்லை. இதற்குக் காரணம் இப்புகைப்படங்களில் காணப்படும் சில அடையாளங்கள் அதிக தூரத்திலும் செறிவு குறைவாகவும் உள்ள நட்சத்திரங்களைக் குறிப்பதனால் ஆகும். மேலும் குறித்த இந் நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளியை கண்டு பிடிப்பதற்கு வானில் உள்ள ஒரு சிறிய புள்ளியில் 500 மணித்தியாலங்களுக்கு மேல் ஹபிள் தொலைக் காட்டி கவனம் செலுத்தியுள்ளது.
இவ்வாறு எடுக்கப் பட்ட புகைப்படம் மிகவும் தரமாக உள்ளது என பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினரான Dr. Michele Trenti கருத்துத் தெரிவித்துள்ளார்.இப்புகைப் படங்கள் யாவும் ஹபிளின் XDF (eXtreme Deep Field ) எனும் நவீன தொழிநுட்ப வசதியுடைய கமெராவால் சுமார் 22 நாட்களாக எடுக்கப் பட்டவையாகும். இத் தொழிநுட்பம் மூலம் அண்டங்கள் தோன்றி எவ்வாறு பரிணாமம் அடைந்து வருகின்றன என்பதை அவதானிக்க முடியும்.எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு விண்ணுக்கு செலுத்தப் படவுள்ள James Webb Space Telescope, ஹபிள் தொலைக்காட்டியை விட அதி உயர் தரமுடைய லென்ஸ் மற்றும் கண்ணாடியை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
இஸ்லாமியர்களுக்கு எதிரான படத்தை தயாரித்தவர் கைது : பிணை வழங்கவும் மறுப்பு!!
இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதத்தில் அண்மையில் வெளிவந்த Innocence of Muslims திரைப்படத்தை தயாரித்த நபரை, கலிபோர்னியாவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.பஸ்ஸெல்லி நகுலா எனும் 55 வயதுடைய இந்நபர் நேற்று கைது செய்யப்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் சமஷ்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிமன்றம் அவருக்கு பிணைவழங்க மறுத்துள்ளது. உலகளாவிய ரீதியில் கலகலங்களை தூண்டிவிடும் விதத்தில் நடந்துகொண்டமைக்காகவும், அனுமதி பெறாது, இணையத்தில் இப்படத்தை பதிவேற்றம் செய்து வெளியிட்ட குற்றத்திற்காகவும், இவருக்கு பிணை வழங்க முடியாது என நீதிபதி கூறியிருப்பதுடன் சமூகத்திற்கு ஆபத்தான விடயத்தை இவர் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நகுலா படம் தயாரிக்க வங்கி நிதி மோசடி செய்ததாக ஏற்கனவே சிறை சென்றிருந்த அவர் 2011 இல் விடுதலை ஆகியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் கலிபோர்னியாவில் உருவாக்கியிருந்த, 13 நிமிட வீடியோ திரைப்படம் Innocence of Muslims எனும் பெயரில் இணையத்தில் வெளிவந்தது.
இஸ்லாமியர்களையும், முகம்மது நபி அவர்களையும் அவமரியாதை செய்யும் வகையில் இத்திரைப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டதன் பின்னணியில் அமெரிக்க சூழலே இருப்பதால் அமெரிக்காவுக்கு எதிராகவும் மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான போராட்டம் வெடித்திருந்ததுடன் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. இதன்போது லிபியாவுக்கான அமெரிக்க தூதுவர் உட்பட நான்கு அமெரிக்கர்களும் 20 க்கு மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.
கடந்த இரு வாரங்களாக பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைந்து வாழ்ந்த நகுலா தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக நகுலாவின் வழக்கறிஞர் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மெட்ரோபோலிடன் தடுப்பு மையம் அதிகமான இஸ்லாமியர்கள் வாழும் இடம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நகுலாவை படுகொலை செய்பவருக்கு 100,000 அமெரிக்க டாலர் வழங்கப்படும் என பாகிஸ்தானின் ரயில்வே துறை அமைச்சர் குலாம் அஹ்மத் பிலோர் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Thursday, September 27, 2012
சமூக அமைதிக்கு வித்திட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்!
இன்றைக்கு சமூக நல்லிணக்கம் என்பது என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு சமூக மாச்சரியங்கள் மலிந்து காணப்படுகின்ற வேளையில், இஸ்லாம் சமூக அமைதிக்கு வழிகாட்டியிருக்கின்றது என்பது பற்றி அறிந்து கொள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வு நமக்கு பேருதவி புரிகின்றது.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மதினாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்த நேரமது. இஸ்லாமிய தலைமைக் கேந்திரமான மதினாவிலும், அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் பல்வேறு மதத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் எந்தக் காலத்திலும் எந்தச் சட்டத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்ந்த வரலாறு என்பதே கிடையாது. இந்த நிலையில், பல்வேறு குழுக்களையும் ஒப்பந்தங்கள் மூலம் ஒருங்கிணைத்து, அதன் மூலம் மதீனாவின் சமூக வாழ்வை அமைதி தவழும் இடமாகவும், மக்கள் தங்களுக்குள் கொள்கைகளில் வேறுபட்டிருந்தாலும், சமூக அமைதி என்ற ஒரே குறிக்கோளை முன்வைத்து அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் ஒருங்கிணைந்து வாழ்ந்ததை நாம் காண முடிகின்றது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் என்ற மதீனாவிற்கு நாடு துறந்து வந்த பொழுது, மதீனாவில் பல்வேறு கொள்கையைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் மிகவும் வலுவான சமூக அடித்தளத்தைக் கொண்ட யூதர்களும், மற்றும் கிறிஸ்தவர்களும், தங்களது மூதாதையர்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வருபவர்களுமாக, மதீனா நகரம் ஒரு குழம்பிய குட்டையாகத் தான் இருந்தது.
பல்வேறு கொள்கையைக் கொண்டிருந்த இந்த மக்களை ஒருங்கிணைத்து அமைதியான சமூக வாழ்வை ஏற்படுத்த விரும்பிய இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அந்த பல்வேறு குலத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நேரடித் தொடர்புகள் அல்லது எழுத்துப்பூர்வமான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள். இந்த ஒப்பந்தங்களின் நோக்கம் எதுவாக இருந்ததெனில், மதீனா நகரில் பல்வேறு குலத்தவர்கள் வாழ்ந்து வந்தாலும், பல்வேறு கொள்கையைக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தாலும், சமூக வாழ்வில் அந்தத் தாக்கங்கள் தலைகாட்டாது, சமூகம் அமைதி தவழும் இடமாக இருந்து வர வேண்டும் என்பதாக இருந்தது.
ஹிஜாஸ் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களிடம் சமூக அமைதியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், இதற்கு முன் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத அந்த மக்களை முழுவதுமாக ஒப்பந்தங்களின் மூலம் கட்டுப்பட வைத்ததன் மூலம், சமூக அரசியல் தளத்தில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினார்கள். இன்னும் அவர் கூறுகின்றார், சிறிய மற்றும் பெரிய குலத்தவர்களாக சிதறிக் கிடந்த அந்த மக்களை, தங்களுக்குள் எப்பொழுதும் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த அந்த மக்களை ஒருங்கிணைத்து, சமூக ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள்.
மக்காவின் வெற்றியைத் தொடர்ந்து, இதுவரை காலமும் முஸ்லிம்களை மரணப்படுக்கையில் தள்ளுவதற்குக் கூடத் தயங்காத இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத அந்த மக்களை மதச் சகிப்புத் தன்மையுடன் நடத்தியதோடு, அவர்களை இரக்கத்துடன் நடத்தினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இத்தைகய சகிப்புத்தன்மையை இதுவரை காலமும் அரபுக்கள் தங்கள் வாழ்நாளிலே என்றுமே கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. இத்தைகய நற்பண்புகள் முஸ்லிம்களின் மீது மிகப் பெரும் நன்மதிப்பை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
இஸ்லாம் ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த பிரதேசத்தில், இஸ்லாமிய நீதியையும், நெறிமுறைகளையும் அமுல்படுத்திக் காட்டுவதில், மற்றவர்களைக் காட்டிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தான் ஒரு முன்மாதிரிமிக்கவராகத் திகழ்ந்து காட்டினார்கள். அவர்கள் அந்த மக்கள் மத்தியில் மத சகிப்புத் தன்மையையும், நீதியையும் குர்ஆன் வகுத்துக் காட்டியிருக்கின்ற வழிமுறைப்படி ஆட்சி செய்து காட்டினார்கள். இந்த ஒரு காரணத்திற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு குலங்களையும், கோத்திரங்களையும் சேர்ந்த அந்த மக்கள், இஸ்லாத்தின் மதசகிப்புத் தன்மை, நீதி பரிபாலணம், அது வழங்கியிருக்கும் அமைதி தவழும் வாழ்க்கை நெறி ஆகியவற்றினால் கவரப்பட்டு, குறுகிய காலத்தில் தங்களை இஸ்லாத்தினுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு பல குலங்களையும் ஒருங்கிணைத்த இஸ்லாம், அவர்கள் அனைவரையும் சகோதரத்துவம் என்ற ஒரே கொள்கையின் கீழ் இணைத்து, நீதிபரிபாலணம் என்பது முழு அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கு திருமறைக் குர்ஆன் இவ்வாறு பின்புலமாக இருந்தது.
நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள். (7: 181)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்ற மக்களிடம் காட்டிய மதச் சகிப்புத் தன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, நஜ்ரான் பிரதேசத்துக் கிறிஸ்தவர்களிடம் அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் முஸ்லிம்களின் மத சகிப்புத் தன்மைக்கும், நீதி நெறிமுறைகளுக்கும் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன. இதனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த சமூகத்தில் முழுவதுமாக நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்.
அத்தகைய ஒப்பந்தங்களின் ஒருபகுதி இவ்வாறிருந்தது :
உயிர்களும், அவர்களது கொள்கைகளும், உடமைகளும், குடும்பங்களும், அவர்களது வழிபாட்டுத் தளங்களும், இன்னும் நஜ்ரானில் வாழ்கின்ற அனைத்து மக்களும், இன்னும் அவர்களுடன் வாழ்ந்து வருபவர்களும் அல்லாஹ்வினதும், அல்லாஹ்வினது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களினதும் பாதுகாப்பின் கீழ் இருக்கின்றார்கள்.
எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதுபோன்ற ஒப்பதங்கள் மூலமாக, இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளை எவ்வாறு சமூகத்தில் நடைமுறைப்படுத்திக் காட்டுவது என்பதற்கான நடைமுறையையும், இன்னும் முஸ்லிம்களுடன் முஸ்லிம் அல்லாத மக்களான வேதம் வழங்கப்பட்டவர்கள் எவ்வாறு இணக்கமான முறையில் வாழ முடியும் என்பதற்கான உதாரணத்தையும் காட்டி விட்டுச் சென்றுள்ளார்கள்.
முஸ்லிம்களின் நடைமுறைப்படுத்திக் காட்டும் ஒழுக்க மாண்புகள் நீதமானதும், நடுநிiயானதும், இன்னும் அமைதிப்பூர்வமானதும் கூட. இன்னும் அதிகமாக, இத்தகைய ஒப்பந்தங்கள் மூலமாக, அதற்குப் பிரதியீடான இஸ்லாமானது வாழ்நாள் முழுவதற்குமான அமைதியையும், மற்றும் தொல்லைகளற்ற வாழ்வுக்கும் உத்தரவாதம் தருகின்றது. இன்னும் இஸ்லாத்தின் ஒழுக்க மாண்புகளை அடிப்படையாகக் கொண்டதொரு முன்மாதிரி மிக்க சமூகத்தைப் பெற்று அதன் மூலம் கருணை, இணக்கம், சகிப்புத் தன்மை மற்றும் அமைதி மிக்க வாழ்க்கையை இந்தப் பூமிப் பந்தின் மீது நிறுவுதற்கு அனைவருக்கும் அழைப்பும் விடுக்கின்றது.
அனைத்து மக்களும், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் சரியே, அமைதியான சமூக வாழ்விற்கு ஒத்துழைப்பது அனைவரின் மீதுள்ள மிகவும் பொறுப்பு வாய்ந்த கடமையாகும். முஸ்லிம்கள் என்ற நிலையில், மற்ற மதத்தவர்ளைப் பொறுத்தவரை, முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுவது என்னவென்றால், ''அல்லாஹ்வைத் தனித்துவமாக வணங்குவதற்கும் இன்னும் அவனுடன் எந்தவித இணையாளர்களையும் ஆக்காதிருப்பதற்காவும்'', மேற்கண்ட நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக அவர்களுடன் தோள் கொடுத்துச் செயலாற்றும்படிக் கூறுகின்றான் :
(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹவீர்ர்hர்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' எனக் கூறும்; (மு.மின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)
முஸ்லிம்களும், யூதர்களும் மற்றும் கிறிஸ்தவர்களும் ஒரு பொதுவான கருத்தின் அடிப்படையில் அதாவது பரஸ்ர நல்லுணர்வு, அன்பு, அமைதி மற்றம் சகிப்புத் தன்மை ஆகியவற்றை பொதுவான நோக்கமாகக் கொண்டதன் அடிப்படையில் இணைந்து விட்டார்களென்று சொன்னால், இந்த உலகம் ஒரு வித்தியாசமானதொரு இடமாக மாறி விடும். பிளவுகளும், பிரச்னைகளும், அச்சமும், மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளும் மறைந்து, அவை எல்லாம் வரலாற்றில் தேடிப்பிடிக்க வேண்டிய நிகழ்வுகளாக ஆகி விடும், அன்பு, மதிப்பு மற்றும் அச்சமற்ற தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதியதொரு நாகரீகம் மலர்ந்து விடும்.
அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; ''நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர்; மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. (5:82)
சில இறுமாப்புக் கொண்டவர்கள் இந்த உண்மையை அறிந்து கொள்ள இயலாத காரணத்தால், இரு சமூகத்திற்கும் இடையே அவர்கள் மிகப் பெரும் யுத்தத்திற்கு வழி வகுத்து விட்டார்கள். உண்மையான கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இத்தகைய யுத்தத்தின் மூலம் இரத்தம் சிந்தப்படுவதை விரும்பக் கூடாது, தங்களுக்குள் பரஸ்பரம் ஒத்துழைத்து, அதனை தடுக்கவும் முயற்சி செய்ய வேண்டும்.
அமெரிக்காவில் நடந்து போன துரதிர்ஷ்டவசமான அந்த நிகழ்வுக்குப் பின், இத்தகைய ஒத்துழைப்புகளுக்கான விதைகள் தூவப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதை நாம் கண்டோம். வெறுக்கத்தக்க இந்த நாசகாரச் செயல்கள் நடந்து விட்ட பின், இரு சமூகத்திற்கும் இடையே மிகப் பெரும் இணைப்பை உருவாக்கி வைத்ததையும் நாம் பார்த்தோம். முன்னைக்காட்டிலும், இஸ்லாத்தின் பக்கம் மிக நெருக்கமாகச் சென்று அதனை ஆராய்ந்து அறிந்து கொள்ளும்படி பல கிறிஸ்தவர்கள் உற்காசமூட்டப்பட்டார்கள், அதனைப் போலவே முன்னைக் காட்டிலும் தங்களது மார்க்கத்தைப் பற்றி அதிகமான விளக்கத்தையும், குர்ஆன் கூறும் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் பற்றியும் அதிகமாக அளவில் விளக்கங்கள் கொடுக்க அதிக முயற்சியை முஸ்லிம்கள் எடுத்துக் கொண்டார்கள்.இந்த பூமிப் பந்தில் அமைதியை முழுமையாக நிறுவுவதற்கு இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளே உகந்தது என்ற உண்மையை இந்த 21 ஆம் நூற்றாண்டானது விரைவில் கண்டு கொள்ளும்.
ஒவ்வொரு சமுதாயத்திலும் சில ‘தறுதலைகள்’ இருப்பது போல் முஸ்லிம் சமுதாயத்திலும் சில தறுதலைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அறிவிழந்த தறுதலைகள் செய்யும் தவறை அந்த ஒட்டு மொத்த சமுதாயத் தவறாக வர்ணிப்பது, புண்பட்ட நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவது.
முஸ்லிம்களில் சிலர் செய்யும் வன்முறைச் செயல்களை “இஸ்லாமிய வன்முறை, தீவிரவாதம்” என்று மத முத்திரை குத்துவதும் வன்முறைச் செயல்களை வெறுக்கும் பெரும்பான்மை முஸ்லிம்களை துன்பத்திற்குள்ளாக்குவது. எரியும் புண் காக்கையறியாது, என்பார்களே அதை ஒத்திருக்கிறது.இஸ்லாம் ‘தீவிரவாதத்தை” ஆதாரிக்கிறதா..? என்பதைப் பார்ப்பதற்கு முன்..
மத ஆய்வு மனிதனுக்கு அவசியம். ஆய்வின் விமர்சனத்துக்கு அந்த மத ஆதார நூல்களே உரை கல்லாக இருக்க வேண்டும் என்பது அதைவிட அவசியம். எம்மத விமர்சனமும் அம் மதம் போதிக்கும் நூலை நேரடியாக விளங்கி விமர்சிக்க வேண்டும். மதத்தைப் பின்பற்றுபவர்களின் செயல்பாடுகளைக் கொண்டு ஒரு மதத்தை விமர்சிப்பது அறிவுடைமையல்ல! என்பதை மனதில் பதித்துக் கொண்டு தொடர்வோம்.
இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று குற்றம் சாட்டுபவர்கள், தமது விமர்சனத்துக்கு சான்றாக இறைவசனமோ, ஆதராப்பூர்வமான நபிமொழியையோ ஒன்றைக் கூட எவராலும் சமர்ப்பிக்க முடியாது. மாறாக தீவிரவாதத்தை வேரோடு, வேரடி மண்ணோடு துடைத்து எறிவதையே இஸ்லாம் விரும்புகிறது. என்பதை கீழ்காணும் வசனத்தில் விளங்கலாம்.
”நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை (த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான். மேலும் எவனொருவன் ஒரு மனிதரை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்”.. (அல்குர்ஆன் 5:32)
இந்த வசனத்தை ஒரு முறைக்குப் பலமுறைப் படித்துப் பாருங்கள். எந்த விளக்கவுரையும் தேவையில்லாத அளவிற்குத் தெளிவாக – வெளிப்படையாகவே மனிதநேயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக எடுத்து இயம்புகிறது. தீவிரம் – வன்முறை செயல்களுக்கு சாவு மணி அடிக்கிறது.
தனியொரு மனிதனை எவன் கொன்றானோ அவன் முழு மனித இனத்தையே கொலை செய்து விட்டான் – அதாவது மனிதத்தையே அழித்து விட்டான். அவன் மனிதனாக இருப்பதற்கே லாயக்கற்றவன் என்று ஒதுக்கி விடுகிறது.
எவனொருவன் தனி மனிதனை வாழ வைக்கிறானோ அவன் முழு மனித சமுதாயத்தையே வாழ வைத்தவன் போலாவான் அதாவது மனித இனத்தை – மனிதத்தைக் காப்பாற்றி விட்டான். இதைத்தான் இஸ்லாம் வரவேற்கிறது. இந்த வசனம் நேரடியாக மனிதர்கள் என்று மனித இனத்தை நோக்கிப் பேசுகிறது. விசுவாசம் கொண்டவர்கள், விசுவாசம் கொள்ளாதவர்கள் என பிரித்துச் சொல்லவில்லை.
ஒரு மனிதனை இறப்பிலிருந்து காப்பாற்றுவதற்கு பல வழிகள் உள்ளன. ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டவனாகவோ, காயம் பட்டவனாகவோ இருக்கலாம். அவன் எந்த நாட்டை, அல்லது எந்த இனத்தை, அல்லது எந்த நிறத்தைச் சார்ந்தவன் என்பது முக்கியமல்ல. அவனுக்கு உங்களது உதவித் தேவைப்படுகிறது என்று நீங்கள் அறிந்தால், அப்பொழுது அவனது நோய்க்கோ, காயங்களுக்கோ சிகிட்சை அளிக்கும் ஏற்பாடுகளைச் செய்வது உங்கள் மீது கடமையாகும்.அவன் பட்டினியால் செத்துக் கொண்டிருந்தால், அப்பொழுது அவனுக்கு உணவு வழங்கி அவனை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவது உங்கள் கடமையாகும். அவன் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தாலோ, உயிர் போகும் ஆபத்தில் சிக்கியிருந்தாலோ அந்த ஆபத்துகளிலிருந்து அவனைக் காப்பாற்றுவது உங்கள் மீது கடமையாகும்.
இப்போது சொல்லுங்கள், ‘ஜிஹாத்’(?) என்ற பெயரால் வன்முறைகளில் ஈடுபட்டு மனிதக் கொலைகள் புரியும் பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா? வன்முறைச் செயல்களால் தனக்கு அறிமுகமே இல்லாத மனித உயிர்களைப் படுகொலை செய்பவன் எப்படி உண்மை முஸ்லிமாக இருக்க முடியும்?
கொலைக்குப் பதிலாக கொலையாளியின் உயிரைப் பறிப்பதாக இருந்தாலும் சரி. அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பியதற்கான தண்டனையாக இருந்தாலும் சரி, அதற்காக அமைக்கப்பட்ட நீதிமன்றம்தான் இதைப் பற்றிக் கட்டளையிட வேண்டும். இந்த உரிமை தனிப்பட்ட மனிதனுக்கு வழங்கப்படவில்லை.
இது போல் பிற நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டுமென்றால் அதை முடிவு செய்யும் உரிமை முறையாக அமைக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே உண்டு. பூமியில் குழப்பங்களுக்கு காரணமாக இருந்ததற்காக ஒரு மனிதனின் உயிரை இன்னொரு மனிதன் தன்னிச்சையாகப் பறிப்பதற்கு எவ்வித உரிமையும், அதிகாரமும் இல்லை. எந்தச் சூழ்நிலையிலும் ஒரு மனிதன், உயிரைப் பறித்த குற்றத்திற்கு ஆளாகக் கூடாது என்பது ஒவ்வொரு மனிதன் மீதும் சுமத்துப்பட்டுள்ள கடமையாகும்.
யாராவது ஒருவன், ஒரு மனிதனைக் கொன்று விட்டால் அவன் மனித இனம் முழுவதையுமே வெட்டிச் சாய்த்ததுக்குச் சமமாகும். இதே கட்டளை அல்குர்ஆனின் வேறொரு இடத்தில் மீண்டும் சொல்லப்படுகிறது. ”அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை முறையான நீதி விசாரணையின்றி கொல்லாதீர்கள்” (அல்குர்ஆன் 6:151)
”இணைவைத்தலுக்கு அடுத்தபடியான மிகப் பெரும் குற்றம் மனித கொலையாகும்” என்று இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அடுத்து மனிதனின் நீதி பெறும் உரிமையை எவ்வளவு அழகாகச் சொல்கிறது பாருங்கள். இந்த உரிமை மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் பெரும் மதிப்பும் மிக்கதாகும். இம்மாபெரும் உரிமையை மனிதனுக்கு ‘மனிதன்’ என்ற அந்தஸ்திலேயே இஸ்லாம் வழங்குகிறது.
”ஒரு சாராரின் மீது நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பு உங்களை அத்துமீறலான செயல்களுக்குத் தூண்டிவிட வேண்டாம்”.
”நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்”. (அல்குர்ஆன் 5:2)
ஓ நம்பிக்கையாளர்களே!… ”எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள், இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமாகும்”. (அல்குர்ஆன் 5:8)
ஓ நம்பிக்கையாளர்களே! ”நீங்கள் நீதியைக் கட்டிக் காப்போராக விளங்குங்கள். உங்களுக்கோ, அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்”. (அல்குர்ஆன் 4:135)
இப்படி, மனித நேயத்திற்காக, மனித உரிமைக்காக, இஸ்லாம் வழங்கியுள்ள ”வழிகாட்டல்களை” எழுதிக் கொண்டே இருக்கலாம்.
சில அறிவிலி முஸ்லிம்களின் செயல்பாடுகளை வைத்து இஸ்லாத்தை மதிப்பீடு செய்வது அறிவு சார்ந்த வாதமல்ல. இஸ்லாம் என்பது ‘வழிகாட்டல்’ மாத்திரமே. அதைப் பின்பற்றுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. பின்பற்றாதது முஸலிம்களின் தவறே தவிர இஸ்லாத்தின் குற்றமாகாது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
மூன்றாவது பொருளாதாரத் திட்டம்!
முதலாளித்துவத்தின் கொடூரம்.
வட்டியும், ஏக போக உரிமையும் இல்லாமல் முதலாளித்துவம் வளர இயலாது. ஆனால் இவ்விரண்டையும் முதலாளித்துவம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் ஒழித்து விட்டது என்பதைச் சுட்டிக் காட்டுவதே போதியதாகும்.எனினும் இப்பிரச்னையைச் சிறிது ஆழமாக ஆராய்வோம். இயந்திரம் இஸ்லாமிய உலகில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதன் விளைவாக ஏற்படும் அபிவிருத்தியினை இஸ்லாம் எவ்வாறு எதிர்நோக்கியிருக்கும்? வேலையையும் உற்பத்தியையம் இஸ்லாமிய சட்ட வாக்கங்களும் சட்டங்களும் எவ்வாறு ஒழுங்குபடுத்தியிருக்கும்?
தொடக்கத்தில் முதலாளித்துவம் மனித சமுதாயத்தில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி குறிப்பிடத்தக்க சேவைகளை ஆற்றியது என்பதில், முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்களிடையே – கார்ல் மார்க்ஸ் உட்பட – கருத்தொற்றுமை இருக்கிறது. முதலாளித்துவத்தின் வருகையினால் உற்பத்தி பெருகிற்று. போக்குவரத்து தொடர்புகள் விருத்தியடைந்தன. தொழிலாள வர்க்கத்தினர் அநேகமான அல்லது முற்றாக விவசாயத்தை நம்பி வாழ்ந்த காலத்தை விட அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.ஆனால் இந்தப் பெருமைமிக்க காட்சி வெகுகாலம் நீடிக்கவில்லை. இதற்குக் காரணம் முதலாளித்துவத்தின் இயற்கையான வளர்ச்சி முதலாளிகளின் கைகளில் செல்வம் குவியவும், தொழிலாளர் வர்க்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் படிப்படியாக குறையவும் வழிவகுத்தது என்று கூறப்படுகிறது. இதனால் கம்யூனிஸ்டுகளின் நோக்கில் உண்மையான உற்பத்தியாளர்களான தொழிலாளர்களை பல்வேறு பொருட்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு முதலாளிகள் உபயோகிக்க இயலுமாயிற்று. ஆனால் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட கூலிகள் சீரான வாழ்க்கை நடாத்துவதற்குப் போதியதாக இருக்கவில்லை. எல்லா லாபத்தையும் முதலாளிகளே சுரண்டிக் கொண்டு தம் ஊழல் மிக்க ஆடம்பர வாழ்க்கைக்கு அதனைச் செலவிட்டதே இதற்குக் காரணமாகும்.
அதுவுமன்றி, தொழிலாளர்களுக்குக் கிடைத்த சொற்ப கூலியைக் கொண்டு, முதலாளித்துவ நாடுகளில் உற்பத்தியான எல்லா பொருட்களையும் அவர்கள் வாங்கி நுகரவும் இயலவில்லை. இதனால் மேலதிகமாக உற்பத்தியான பொருட்கள் சேர்ந்து குவியத் தொடங்கின. எனவே முதலாளித்துவ நாடுகள் தம் மேலதிக உற்பத்திப் பொருட்களை விற்பதற்குப் புதிய சந்தைகளைத் தேடின. இது, குடியேற்ற நாடுகள் தோன்றுவதற்குக் காரணமாய் அமைந்தன. இதனால் பல்வேறு நாடுகளிடையே சந்தைகள் சம்பந்தமாகவும் மூலம் பொருள் வளங்கள் சம்பந்தமாகவும் இடையறாத சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்பட்டன. இவை அனைத்தினதும் விளைவு பேரழிவை ஏற்படுத்திய யுத்தங்களாகும்.மேலும், குறைந்த கூலிகள் காரணமாகவும், அதிகரித்து வரும் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் பொருட்களை நுகர்வு சொற்பமாகவும் இருப்பதனாலும் பொருளாதார தளர்ச்சி ஏற்படுவதனால் முதலாளித்துவ முறையானது அடிக்கடி நெருக்கடி நிலையை எதிர்நோக்குகிறது.
முதலாளித்துவ முறையின் குறைகள் அனைத்துக்கும் காரணம் முதலின் தன்மையாகும் என்றும் முதலாளிகளின் தீய எண்ணமோ அல்லது சுரண்டல் புத்தியோ அல்லவென்றும் உலகாதாய வாதிகள் கூறுகின்றனர். இத்தகைய அப்பாவித்தனமான, விசித்திர சிந்தனையின் பொருள், பல விதமான உணர்ச்சிகளையும் சிந்தனா சக்தியையும் கொண்ட மனிதன், பொருளாதார பலத்தின் எதிரில் கையாலாகாத – எதுவும் செய்யச் சக்தியற்ற – ஒரு படைப்பாளன் என்பதாகும்.முதலாளித்துவம் முன்பு தேசியக் கடன்களிலேயே தங்கி இருந்தது. பின்பு இது வங்கிகள் உருவாவதற்கு வழி வகுத்தது. வங்கிகள், வட்டியைப் பிரதிபலனாகக் கொண்டு நிதி அலுவல்களை நடத்தியதோடு கடன்களையும் வழங்கின. இக்கடன்களும் வங்கிகள் ஈடுபடும் பெரும்பாலான வேறு பல அலுவல்களும் வட்டியை அடிப்படையாகக் கொண்டவை.
ஒருபுறம், முதலாளித்துவத்தின் மற்றொரு அம்சமான கடும் போட்டி சிறு கம்பெனிகளை ஒழித்து விடுகிறது. அல்லது அவற்றை ஒரு பெரிய கம்பெனியாக இணைத்து விடுகிறது. இது ஏகபோக உரிமைக்குத் தூண்டுகோலாக அமைகிறது.
இஸ்லாம் ஏக போக உரிமைக்கும் தடை விதித்துள்ளது. 'ஏக போக உரிமையை ஏற்படுத்திக் கொள்பவர் தவறு செய்தவராவார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.இஸ்லாம் வட்டியையும், ஏக போக உரிமையையும் தடை செய்து விட்டதனால், சுரண்டலையும், ஏகாதிபத்தியத்தையும் யுத்தத்தையும் கொண்ட இன்றைய தீய நிலைக்கு முதலாளித்துவம் வளர்வது சாத்தியமாகியிராது.
செல்வம் தனிநபர்களிடம் குவிவதை இஸ்லாம் ஊக்குவிப்பதில்லை. அவ்வாறு குவிவதற்கு அடிப்படையாக இருக்கின்ற வட்டியை முற்று முழுதாக இஸ்லாம் தடையும் செய்திருக்கின்றது. இன்னும் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் சரிசமமாக வழங்க வேண்டியது அரசின் கடமை என்றே இஸ்லாம் கூறுகின்றது. இதில் பாரபட்சப் போக்கை இஸ்லாம் தடை செய்கின்றது. வயது மற்றும் சுகவீனம் காரணமாக உழைக்க இயலாதவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு அரசினைச் சார்ந்ததே என்று இஸ்லாம் கூறுகின்றது. இன்னும் தங்களது வாழ்க்கைத் தேவைகளுக்கு உண்டான செலவினங்களை, பெற்றுக் கொள்ள இயலாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பும் அரசின் நிதியகத்தின் பணிகளே என்றும் இஸ்லாம் கூறுகின்றது.
மக்களின் உரிமைகளை சரிசமமாகப் பேணுவதும் மட்டுமல்ல, அரசின் லாப நட்டங்களை பகிர்ந்து கொள்ளும் பொறுப்பும் குடிமக்களுக்கு உண்டு என்றும் இஸ்லாம் கூறுகின்றது. இதன் மூலம் அனைத்து மக்களுக்கு கௌரவமான வாழ்க்கைக்கான உத்ரவாதத்தை இஸ்லாம் அளிக்கின்றது.தற்கால 'நாகரீக' மேல்நாடுகளில் காணப்படுவது போன்ற அரக்கத்தனமான நிலைக்கு முதலாளித்துவத்தை இஸ்லாம் வளர விட்டிருக்காது. தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டும் போக்கையும் அது வளர விட்டிருக்காது. குடியேற்றம், யுத்தம், மக்களை அடிமைப்படுத்துதல் என்பன உட்பட முதலாளித்துவத்தின் எல்லாத் தீமைகளையும் இஸ்லாம் தடுத்திருக்கும்.
வழக்கம் போல இஸ்லாம், பொருளாதார விதிகளையும் சட்டங்களையும் ஆக்குவதோடு திருப்தியடைந்து விடுவதில்லை. அது சட்டங்களுடன், தார்மீக, ஆன்மீகத் தூண்டுகோள்களையும் பயன்படுத்துகின்றது. ஆன்மீக, தார்மீகப் பண்புகளுக்கு ஐரோப்பாவில் செயல் ரீதியான பயனில்லை என்று காண்பதனால் கம்யூனிஸ்டுகள் அதனை ஏளனஞ் செய்கின்றார்கள்.ஆனால் இஸ்லாத்தில் தார்மீக, ஆன்மீகப் பண்புகள் மனிதனின் செயல்களுடன் தொடர்புபடுத்தியே நோக்கப்படுகின்றன. இஸ்லாம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலையும், சமூக அமைப்பைக் கட்டியெழுப்புவதையும் முரண்பாடற்ற வித்தில் ஒன்றிணைப்பதற்கு நிகரற்றதொரு வழியாகக் கையாள்கிறது.
ஒரு சிலரின் கைகளில் செல்வம் குவிவதன் தவிர்க்க முடியாத விளைவுகளான எல்லா வகை ஆடம்பர வாழ்க்கையையும் புலனின்பங்களையும் இஸ்லாம் தடுத்து விடுகிறது. ஊழியர்களுக்கு அநீதமிழைப்பதையும் தடுத்து விடுகின்றது.செல்வந்தர்கள் தங்களது செல்வங்களை இறைவனின் பாதையில் செலவிடுமாறு அறிவுறுத்துகின்றது. செல்வந்தர்கள் தங்களது செல்வங்களை தங்களுக்காகச் செலவிட்டுக் கொள்வதன் காரணமாகத் தான், பெரும்பாலான மக்கள் வறுமையாலும், இல்லாமையாலும் வாடுகின்றனர்.
இஸ்லாம் மக்களிடையே ஏற்படுத்தும் ஆன்மீக மேம்பாடானது, அவர்களை இறைவனுக்கு நெருங்கியவர்களாக ஆக்கி மறுவுலகில் இறைவனின் சன்மானத்தைப் பெற எதிர்பார்த்து, அவனது உவப்பைப் பெற முயற்சிப்பதில் உலக இன்பங்கள் இலாபங்கள் அனைத்தையும் துறக்குமாறு செய்கிறது. இறைவனின் கட்டளைகளை அனுசரித்து நடப்பவனும், மறுவுலகில் நரகம், சுவர்க்கத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளவனுமான ஒரு மனிதன், செல்வத்தைக் குவிப்பதில் தீவிரமாக ஈடுபடவோ, தனது சொந்த நோக்கங்களை அடைவதற்கு சுரண்டலிலும் அநீதியிலும் ஈடுபடவோ மாட்டான் என்பதில் ஐயமில்லை.இவ்வாறாக, தார்மீக, ஆன்மீக நெறிப்படுத்துகை, முதலாளித்துவத்தின் தீமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான சட்ட ஆக்கத்துக்கு வழிவகுக்கும். இத்தகைய சட்டங்கள் ஆக்கப்படும் போது, மக்கள் தண்டனைக்கு அஞ்சுவதன் காரணமாகவன்றி, மக்கள் தம் மனச்சாட்சியின்படி நடப்பதன் காரணமாக, அச்சட்டங்களைப் பேணிச செயலாற்றுவர் என்பது உறுதி.
அமெரிக்காவின் வறுமை விகிதம் அதிகரிக்கிறது.
அமெரிக்காவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சென்ற ஆண்டு மட்டும் 46.2 மில்லியன் அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
செப்டம்பர் 13 அன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் தரப்பட்ட புள்ளி விவரங்கள் அமெரிக்க ஏழைகளின் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. வறுமை விகிதம் 15.1 சதவீதமாக வளர்ந்து விட்டது. 4 கோடியே அறுபது லட்சம் அமெரிக்கர்கள் அன்றாடம் வெறும் வயிற்றோடு படுக்கப் போகிறார்கள். நடுத்தர மக்களின் ஆண்டு வருமானனும் 49445 டாலராகச் சுருங்கி விட்டது.
இந்தப் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படாத அமெரிக்கர்கள் மிகச் சிலரே. சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் டாக்ஸி ஓட்டுகிறார்கள். கல்லூரி பட்டாதாரிகளோ வேலை கிடைக்காமல் அலைகிறார்கள். லட்சக்கணக்கானோர் தங்களின் உடல்நலக் காப்பீட்டைத் திரும்பப் பெற்று விட்டார்கள். மருந்துகளின் விலை விண்ணைத் தொடுவதால் அவற்றை வாங்க முடியாமல், பென்ஷனில் காலம் தள்ளும் முதியவர்கள் தத்தளிக்கிறார்கள். கனடாவில் மூன்று ரூபாய்க்கு விற்கும் மருந்து அமெரிக்காவில் முப்பது ரூபாய்க்கு விலை போகிறது.
இது தொடர்பாக புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் எழுதியுள்ள விமர்சனம் சுவையானது, பொருள் பொதிந்தது.
'முதலாளித்துவத்தின் எழுச்சியாக இதனைச் சொல்ல முடியாது. இது பன்னாட்டு வணிக முதலைகளின் மோசமான பேராசையைத் தான் வெளிப்படுத்துகிறது. கட்டுப்பாடற்ற சுதந்திரச் சந்தையின் விளைவாக, மன்னிக்க முடியாத சமூக அநீதிகள் அமெரிக்காவை வாட்டத் துவங்கி விட்டன. 1980 களின் கடைசி ஆண்டுகள் கம்யூனிஸத்தின் முடிவுக்குக் கட்டியம் கூறின என்றால் 21 ம் நூற்றாண்டின் தொடக்கம் கிழடு தட்டிய முதலாளித்துவச் சிந்தனைக்கு சாவு மணி அடிப்பதாக அமைந்துள்ளது.
அமெரிக்காவின் வருமானப் பரம்பல்.
இதனைத் தானே மௌலான சையத் அபுல் அஃலா 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் நடந்த கூட்டத்தில் ஆற்றிய உரையில், 'ஒரு காலம் வரும். அப்போது கம்யூனிஸம், மாஸ்கோவில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவலை கொள்ளும். முதலாளித்துவ ஜனநாயம் வாஷிங்டன், நியூயார்க் நகரங்களில் தன்னுடைய பாதுகாப்புக்காக நடுநடுங்கத் தொடங்கும்' என்று சொல்லி இருந்தார்.இன்றைய உலகம், கம்யூனிஸமும் வேண்டாம், முதலாளித்துவமும் வேண்டாம், இவை அல்லாத மூன்றாவது பொருளாதாரத் திட்டம் ஒன்று தேவை என்பதில் குறியாக இருக்கின்றது.
அந்த மூன்றாவது திட்டத்தை வழங்குவதற்கு இன்றைய முஸ்லிம் உம்மத் தயாராக வேண்டும். தயாராகுமா? இல்லை இன்னும் விரல் நகத்தில் சாயம் பூசலமா? கூடாதா?, பிறையைப் பார்ப்பாதா? கணக்கிடுவதா?தொழுகையில் விரல் ஆட்டுவதா வேன்டாமா?.பெண்களுக்கு கல்வி கற்பிப்பதா வேன்டாமா? வீடுகளில் கணினிஇன்டர்நெட் இனைப்பு வேன்டுமாவேன்டாமா? (ஓருசிலதீவிரமுஸ்லீம்களின் கருத்து இன்றைய தொழில்நுட்பம் யஹூதிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான சதிஎன்ரு சில சக்திகலால் தினிக்கப்படுகின்ரமை)என்பதிலேயே தங்களது காலத்தைக் கழித்துக் கொண்டிருக்குமா!! சிந்திக்க வேண்டியது இன்றைய உம்மத்தின் பொறுப்பு.
உலகின் இன்றைய நிலைமை!

Subscribe to:
Posts (Atom)