Saturday, June 30, 2012

நாய் எப்படி மோப்பம் பிடிக்கிறது?


உலகம் முழுவதும், பிலட்த்ஹௌந்து எனப்படும் நாய்தான் துப்பறிவதற்கு அதிகம் பயன்படுகிறது. காணாமல் போன குழந்தைகளைப் பிடிப்பதற்கு பேர் போனது. பொதுவாக நாய்கள் மனிதனைவிட 50 மடங்கு மோப்ப சக்தி மிக்கது என்றாலும், பிலடுவிடம் ஏராளமான மோப்ப செல்கள் உள்ளன. மனிதனிடம் 10/ச.செ.மீ. பிலடுக்கு 170/ச.செ.மீ. பரப்பில் மோப்ப செல்கள் உள்ளன. நீங்கள் அடுப்பங்கரையில் நுழையும்போது கறிவாசனை வந்தால் அது கொஞ்ச நேரத்தில் நமக்குத் தெரியாமல் போய் விடுகிறது. ஆனால் மோப்ப நாய்க்கு அப்படி இல்லை. எப்படி இவை மோப்பம் பிடிக்கின்றன தெரியுமா..? நம் உடலிலிருந்து விழுந்த செல்களின் மூலம்தான்...!


உங்கள் உடலிலிருந்து தினமும் சுமார் 5,00,0000,00000000 செல்கள் ஏராளமான வியர்வையுடன் கொட்டுகின்றன. ஆனால் வியர்வை/தோலுக்கு அவ்வளவு வாசனை கிடையாது. வாசனையை தானம் செய்பவை செல்களில் படிந்துள்ள பாக்டிரியாக்கள்தான். 1.௧.செ.மீ பரப்பிலுள்ள தோலில் 100௦௦ முதல் 10௦,000௦௦௦ பாக்டிரியாக்கள் உள்ளன. இவைதான் உங்களுக்கான தனி மணத்தை உருவாக்குபவை. உங்களின் வாசனை, உங்கள் கைரேகை போல்தான். இதுவும் தனித்துவம் மிக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பனிக்கட்டி ரகசியமும் பனி ஊழிக்காலமும்!


நம் பூமியில் சுமார் 70 % நீர் உள்ளது. இந்த நீர்தான் உயிர்களின் ஆதாரம். நீரின்றி உயிரில்லை. வட தென் துருவங்களில் பனி உறைந்து போய் கிடக்கிறது. மனிதன் தவிர பிற உயிரினங்கள் அந்த வாழ்நிலைக்குத் தகுந்தாற்போல் தம்மை தகவமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பனிப்பாறை இன்றி பனிக்கரடி, பனி சிறுத்தை, பெங்குவின், பனி நரிகள், சீல், மற்றும் பனிக்கட்டிகளில், அந்த உறைப் பனிக்குளிரை அனுபவித்து, சந்தோஷமாய் விளையாடி வாழும் விலங்கினங்கள்,, ஏராளம், ஏராளம். அந்த விலங்கினங்கள் பற்றி இன்னும் முழுமையாக நமக்குத் தெரியவில்லை. வெப்பத்தை உண்டாக்கி உணவு தயாரித்து பழகிய மனிதனுக்குத்தான் உறைபனியை அனுபவிக்கத் தெரியவில்லை. உறைபனிப் பாறைகளுக்குள் கோடிக்கணக்கான பாக்டீரியா, வைரஸ், பூச்சி வகைகள் வாழுகின்றன. ஆனால் வெப்பம் அதிகரித்தால் உயிரோடு இருக்க முடியாது. நம்மால்தான் அங்கு போய் நிம்மதியாய் வாழ முடியாது. நாம் அப்பகுதியைப் பற்றி ஆராய்ச்சி செய்ய, சில காலம் போய் தங்கி பணி செய்யலாம்.


இந்த பூமி நமக்கு மட்டும்தான் சொந்தமானதா? நமக்கு முன்பே இப்புவியை தனதாக்கிக் கொண்டு வாழும் உயிரினங்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டாமா? நம்மைவிடவாழ்விட சீனியர்கள் அவை. அவை உரிமைப் பிரச்சனை எழுப்பினால் நம் நிலைமை என்ன? ஏதோ பூமி பந்து என்பது நமக்கு மட்டும்தான் சொந்தம் என்று நாம் நினைத்து செயல் பட்டுக்கொண்டு இருக்கிறோம். இது நியாயமா. ? பனிக்கட்டி என்றால் அது உலகை குளிர்ச்சி படுத்திக் கொண்டு இருக்கிறது என்றுதான் நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அவற்றின் பணி மனிதனைவிட மகத்தானது என தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. பனிப்பாறைகளும், பனிமலைகளும் உள்ளதால்தான், உயிரிகள் உலகின் அங்கமாக வாழுகின்றன. ஆறுகள் வற்றாத ஜீவநதியாய் ஓடி வருவதன் காரணி பனிப்பாறைகளே. உலகம் ஆதவனின் வெப்ப கதிர் வீச்சிலிருந்து உயிரிகளைப் பாதுகாப்பதும் இவைகளே.


இப்போது அவற்றிலிருந்து ஆதிகால உலகின் வெப்பநிலையை, வளிமண்டல நிலையை, மற்றும் கரியமில வாயுவின் அளவை புட்டு புட்டு வைக்கிறது பனிக்கட்டி துண்டுகள். அது மட்டுமா? அதைவிட முக்கியமாக, அப்போது பூமி எவ்வாறு தன் தாயகத்தை, சூரியனை சுற்றிவருகிறது என்ற இயற்பியல் தகவலையும் தருகிறது என்றால். . நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆனால் இதுதான் உண்மை !           புவிபரப்பின் மேலிருந்து கிழே செல்ல செல்ல அங்குள்ள பனிக்கட்டியில் காணப்படும் காற்றின் அளவு குறைகிறதாம். பூமியின் மேல் படிந்திருக்கும் பனிக்கட்டியில் காற்று ஏராளமாய் கலந்துள்ளது. 15 மீட்டர் ஆழம் வரை இதே கதைதான். ஆனால் அதை விட ஆழமாக கிழே போகப் போக பனிப்பாறையில் உள்ள காற்றின் அளவு குறைந்து கொண்டே வருகிற தாம். இந்நிலை 50 மீட்டர் ஆழம் வரைமட்டுமே. அதற் கும் கீழே உள்ள பனிப் பாறையில் இருந்து பனிக் கட்டியை எடுத்துப் பார்த்தால், அது சொல்லும் கதையே வேறாக இருக்கிறது.  இங்கே காற்று பனிக்கட்டிக்குள் சிறைப்பட்டு விட்டது. காற்றுக் குமிழியை சுற்றி பனிக்கட்டிதான்!


பூமியின் மேல் படிந்து கிடந்த பனிப்பாறையைக் குடைந்து, அதன் ஆழ் மடி யில் புதைந்து போன காற்று. . அது வாழ்ந்த காலத் தின் வரலாற்றை மிகத் தெளிவாக. . சொல்லுகிறது. ஒருக்கால் அப்போது பதிவு செய்ய சாதனங்கள் இருந்து பதிவு செய்து வைத்திருந்தால் கூட, இவ்வளவு துல்லிய மான பதிவு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.இந்த பனிக்கட்டி துண்டு அண்டார்டிக் பகுதியிலிருந்து எடுத்ததாகும். இவை 500 ஆண்டுகளுக்கு முன் இருந்த உலகின் வளிமண்டல நிலையை தெளிவாகச் சொல்கிறது. அப்போது கரியமில வாயுவின் அளவு 315 தான் . ஆனால் இன்று அதன் அளவு. 378 . கடந்த 30 ஆண்டுகளில், சுமார் 50 கரியமில வாயுவின் அளவு கூடி இருக்கிறது ஆழத்தில் இருந்து எடுத்த பனிப்பாறையின் சிறு துண்டு, அப்போது இருந்த வளிமண்டல காற்றின் அளவு, அதில் கலந்துள்ள வாயுக்கள், கரியமில வாயுவின் அளவு போன்றவற்றை, கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சூரியக் குடும்பம் – சில சுவையான தகவல்கள்!


சூரியக் குடும்பம் எவ்வாறு தோன்றியது? இதற்கு உறுதிப் பூர்வமான கொள்கையோ, பதிலோ இதுவரை கண்டறியப் படவில்லை. சூரியக் குடும்பம் தோன்றியது குறித்து இதுவரை பல்வேறான கருத்துக்கள் கூறப் பட்டு வந்துள்ளன. தொடக்கத் தில் 18-ஆம் நூற்றாண்டில் புகையுருக் கோட்பாடு என்ற தத்துவம் ஒன்று கூறப்பட்டது. பல வாயுக்களால் அமைந்த பெரும் தொகுதி ஒன்று, சுழற்சியினால் மெதுவாகக் குளிர்ந்து சுருங்கத் தொடங் கியது. அச்சுருக்கத்தின் காரண மாக, அந்தத் தொகுதி முழுவ தும் ஈர்ப்பு-சக்தியின் அணைப்பினால் சுழற்சி வேகம் மேலும் அதிகரித்தது; அதனால் அத்தொகுதியின் வெளிப்பரப்பின் வேகம்  மிகவும் அதிகமாக, ஈர்ப்பை மீறத் தொடங்கியது. இதிலிருந்து சிறு சிறு துண்டுகள் விடுபட்டுக் கோள்கள் உருவாயின. நடுப்பகுதி மட்டும் சூரியனாக ஒளியையும், வெப்பத்தையும் அளித்துக் கொண்டுள்ளது. இவ்வாறு புகையுருக் கோட்பாடு, சூரியக் குடும்பத்தின் தோற்றம் பற்றிக் கூறுகிறது.


பின்னாட்களில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியால் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஈர்ப்பு விசையை மீறி இடைப்பட்ட துண்டுகள் வெளியேற முடியாது என்று அறியப்பட்டது. இவற்றின் காரணமாக இக்கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.18 ஆம் நூற்றாண்டில் சூரியக் குடும்பத் தோற்றம் பற்றிய கொள்கை உருவானது. விண்வெளியில் திரியும் மற்றொரு விண்மீன் சூரியனின் அருகே வர நேர்ந்தபோது, ஈர்ப்பின் காரணமாக, சூரியனது வாயுக்களை விண்வெளியில் அது கவர்ந்து ஈர்த்தது;  அவ்வாறு சூரியனிலிருந்து பிரிந்த வாயுக்கள் குளிர்ந்து கோள்களாக உருவாயின என்று அக்கொள்கை விளக்கமளிக்கிறது. இரு விண்மீன்களுக்கு இடையேயுள்ள தூரம் மிக அதிகமாகையால் சூரியனை நோக்கி அதன் அருகே மற்றொரு விண்மீன் வந்திருக்கும் என்பது ஏற்புடையதாக இல்லை.


இறுதியாகத் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கொள்கை ஒன்று உள்ளது. அது பின்வருமாறு விளக்கமளிக்கிறது. வெகுகாலத்திற்கு முன் ஒரு மிகப் பெரிய விண் முகில் இருந்தது. அதன் ஒரு பகுதியில் நிறைச் செறிவு ஏற்பட்டது. இப்பகுதி ஏனைய பகுதிகளை ஈர்க்க ஆரம்பித்தது. அதாவது நியூட்டனின் ஈர்ப்பு விதியின் படி, இரு பகுதிகளான விண்முகிலில் நிறை ஈர்ப்புக் செறிவு மிகுந்த பகுதி, மறுபகுதியை ஈர்க்க ஆரம்பித்தது. இதன் பின் சொந்த நிறை ஈர்ப்பினால் விண் முகில் சுருங்கத் தொடங்கியது. இந்நிலையில் இது ஒரு வாயுப் பந்து போல் சுருங்கச் சுருங்கச் சுழலும் வேகமும் அதிகரித்தது. காலப்போக்கில் இதன் மையப் பகுதி குமிழ் போன்றும் சுற்றுப்பகுதி வட்டுப் போன்ற அமைப்பையும் பெற்றது. .இதன் பின்னர் வெளிப்புற வட்டின் சுழற்சி வேகம் அதிகரித்ததால் மையப் பகுதியில் உள்ள குமிழ் மேலும் சுருங்கியது. இதனால் மையத்தில் வெப்பம் அதிகரித்து மையப்பகுதி ஒரு விண்மீனாக (சூரியன்) மாறியது.  சுற்றியுள்ள வட்டு உடைந்து சிறு பகுதிகளாகப் பிரிந்து வெவ்வேறு கோள் மீன்களாக மாறின.


சூரியனுக்கு அருகில் உள்ள கோள்களான புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகியன மிக அதிகமான வெப்ப நிலையிலிருந்து குளிர்ந்து உருவானவை. இதனால் இவை திடக் கோளங்களாகக் காணப்படுகின்றன. இவற்றில் சிலிக்கான், இரும்பு போன்ற தாதுக்கள் காணப்படுகின்றன. இத்திடக் கோளங்களைச் சுற்றி மென்மையான வாயு மண்டலம் காணப்படுகின்றது. ஆனால் சூரியனிலிருந்து தொலைவில் உள்ள கோள்கள் உயர்வெப்ப நிலையை அடையாது குளிர்ந்த வாயு நிலையிலேயே சுழன்று வருகின்றன. இவை பெரும்பாலும் ஹீலியம், ஹைடிரஜன் ஆகிய வாயுத் தனிமங்களைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன.


சூரியனுக்கு அருகிலிருந்து இருக்கும் இடப்படி முறையே புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என அமைந்துள்ளன. சூரியனுக்கும் புவிக்கும் இடையே அமைந்துள்ள கோள்களான புதன், வெள்ளி ஆகிய இரண்டும் உட்கோள்கள் (Inner Planets) என்று அழைக்கப்படுகின்றன. புவியைத் தாண்டிச் சுற்றி வரும் கோள்களான செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியன வெளிக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. சூரியனைச் சுற்றி வரும் இக் கோள்மீன் அனைத்தின் பாதையும் நீள்வட்டமே. அதே வேளையில் இவை ஏறக்குறைய ஒரே தளத்தில் அமைந்துள்ளன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, June 12, 2012

ஏன் தூக்கம் வருகிறது?


தூக்கம் என்பது ஒவ்வொர் உயிருக்கும் இன்றியமையாதது. ஆனால் தூக்கம் என்பது எதனால் வருகிறது?மறுநாள் ஒருவர் சுறுசுறுப்புடன் வேலை செய்வதற்கும், உழைக்க ஆயத்தமாவதற்கும் இயற்கை அளித்த பரிசு தான் தூக்கம்.நம் தூக்கத்தில் தான் மூளை சுறுசுறுப்பாய் வேலை செய்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அடினோசின் என்கிற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் அதிகமாகும் போது நமக்குத் தூக்கம் வருவதாகவும், தூக்கத்தில் இந்த வேதிப்பொருட்கள் முற்றிலும் குறைக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.தூக்கத்தில் கண் அசையாத் தூக்கம், விரைவு கண் அசைவு தூக்கம் என இரண்டு வகைகள் உள்ளன. தூக்கத்தில் ஐந்து கட்டங்கள் உள்ளன. முதல் கட்ட தூக்கமான லேசான தூக்கத்தின் போது சத்தம் கேட்டதும் கலைந்துவிடும் அல்லது கூப்பிட்டவுடன் எழுந்து விடலாம். இரண்டாவது கட்டத் தூக்கத்தில் கண் அசைவுகள் முழுமையாக நின்று மூளையின் அலை வேகம் குறையும்.


மூன்றாவது கட்டத் தூக்கத்தில் மூளையின் அலை வேகமானது, மேலும் குறைந்து இடை இடையே அலையாக மாறுகிறது. நான்காம் கட்டத்தில் முழுக்க டெல்டா அலைகள் தூக்கத்தை ஆக்கிரமிப்பதால் மூன்றாம், நான்காம் கட்டம் ஆழ்ந்த தூக்கம் எனப்படுகிறது.இவ்வேளையில் உடல் அசைவோ கண் அசைவோ முற்றிலும் இருப்பதில்லை. இந்த நிலையிலிருந்து விழித்து எழுவோர் எழுந்த பின்னரும் தங்களைச் சுற்றி நடைபெறுவது ஏதும் அறியார்.ஆழ்ந்த உறக்கத்தில் தொலைபேசியில் பேசியது. அலாரம் அடித்தால் நிறுத்தி விட்டுத் தூங்கச் செல்வது போன்றவை பலருக்கு நினைவில் இருக்காது.


காபி, மூக்கடைப்பிற்கு போடப்படும் சில மாத்திரைகள் மருந்துகள் தூக்கத்தைக் கெடுக்கும். மன அழுத்தத்திற்கு மாத்திரை சாப்பிட்டால் கண்ணசைவு தூக்கம் வரும்.அதிகமாக புகை பிடிப்பவர்களுக்கும் கண்ணசைவு தூக்க பாதிப்பு ஏற்படும். உடலில் நிக்கோடின் அளவு புகை பிடிப்பவர்களுக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் குறைவதால் தூக்கத்திலிருந்து விழிப்பு வரும்.பிறந்த குழந்தைக்கு 16-20 மணி நேரம், வளரும் குழந்தைகளுக்கு 10-12 மணி நேரம் ஆண்களுக்கு 6 மணி நேரமும் பெண்களுக்கு 7 மணி நேரமும் தூக்கம் தேவைப்படும். கருவுற்ற பெண்கள் முதல் மாதங்களில் சற்று அதிகம் தூங்குவர்.ஒரு மணி நேரம் தூக்கம் கெட்டால் அதனை அடுத்த பகல் பொழுதிலோ அல்லது இரவிலோ அதிகமாக தூங்கி உடல் சரி செய்கிறது. இது போன்று முடியாத போது மற்ற வேலைகளை அது பாதிக்கிறது.


வயது ஏற ஏற ஆழ்ந்த தூக்கம் வருவது இல்லையெனில் சர்க்கரை நோய், இதய நோய் ஆகிய உடல் உபாதைகளே காரணம். பகலில் உட்கார்ந்தவாறு தூங்கி விழுந்தால் சிறு சிறு இடைவெளிகளில் தூங்கினால் சரியாகத் துங்கவில்லை என அர்த்தம்.மூளையும் நரம்புகளும் சரியாக வேலை செய்யத் தூக்கம் அவசியம். தூக்க குறைவினால் வேலையின்மை, கவனக்குறைவு, ஞாபக மறதி, மன உளைச்சல் ஆகியன ஏற்படும்.குழந்தைகள் ஆழ்ந்த தூக்கத்தில் தான் ஹார்மோன் வளர்ச்சி பெற்று வளர்கின்றனர். புரத உற்பத்தி தூக்கத்தில் தான் அதிகரிக்கும். தூங்குகிறவர்கள் தான் அழகாக இருக்க முடியும். வெயில் மழை அன அழுத்தப்பாதிப்புகளை ஆழ்ந்து தூங்கினால் தான் சரி செய்ய முடியும்.தூக்கம் கெடுவதால் ரத்தக்கொதிப்பு, இதய நோய், சர்க்கரை நோய், மன அழுத்தம் குழப்ப நோய் எதிர்ப்பு குறைவு -ஆகியன ஏற்படும். எனவே தூக்கம் அவசியம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, June 11, 2012

புயல் எப்படி உருவாகிறது ?

Burma cyclone, May 2008: Photo by Mohd Nor Azmil Abdul Rahman (CC)
புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்புதான்.ஒரு ஆரஞ்சுப்பழம் போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் உஷ்ணம் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை. இதன் காரணமாக பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும் இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கும். வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் காற்று விரிவடைந்து மேலே செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து ஒரு வெற்றிடம் உண்டாகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து காற்று வேகமாய் வீச ஆரம்பிக்கிறது. அப்போது பூமியின் சுழற்சியின் காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு சூறாவளியாக மாறி புயலாய் அதாவது குறைந்த காற்று அழுத்த மண்டலமாக உருவாகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மனித உடல்...


1. இதயத்தின் சராசரி எடை 300 கிராம்கள்
2. ஒரு நாள் இதயத் துடிப்பின் சராசரி அளவு 1,03,680 முறை.
3. நாம் ஒரு நாளைக்கு 25,900 முறைகள் சுவாசிக்கிறோம். சுவாசிக்கும் அளவு 400 கன அடி காற்று.
4. மூளைக்குத் தேவையான பிராணவாயு – உள்ளிழுக்கும் பிராணவாயுவில் 20 சதவிகித அளவு.
5. உடலின் வலது பக்க இயக்கங்களை இடப்பக்க மூளையும் இடதுபக்க இயக்கங்களை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகிறது.
6. உடலின் மொத்த எடையில் இரத்தம் எட்டு சதம் உள்ளது.
7. ரத்தத்தில் மூன்று வகை உள்ளன. இரத்த சிவப்பணு, வெள்ளை அணு, பிளேட்லெட்கள்.
8. இரத்த சிவப்பணு எரித்ரோசைட் என்றும், வெள்ளை அணு லியூக்கோசைட் என்றும் அழைக்கப்படுகிறது.
9. இரத்தக் குழாய்கள் இதயத்திற்கு இரத்த்த்தை ஒரு நிமிடத்திற்குள் கொண்டு போய் சேர்க்கின்றன.
10. மனித உடலில் ஐந்தரை லிட்டர் இரத்தம் உள்ளது.
11. ரெடினா என்பது விழித்திரை
12. ஹைப்போஜியுஸியா என்பது நாக்கில் ஏற்படும் நோய். இதன் அறிகுறி சுவை குறைந்து விடும்.
13. ஓரோபாரின்க்ஸ் என்பது வாயின் பின்பகுதி, தொண்டையில் சேருமிடம்.
14. கருவிலுள்ள குழந்தையின் இதயம் நான்காவது வாரத்திலிருந்து துடிக்கத் துவங்குகிறது.
15. மீடியாஸ்டினம் என்பது இரண்டு நுரையீரல்களுக்கு இடைப்பட்ட பகுதி
16. ப்ளூரா என்பது நுரையீரல் உறை
17. இன்சுலின் – இதன் வேலை ரத்த்த்தில் இருக்கும் சர்க்கரை அளவை சரியாக வைப்பது.
18. சிறுநீரகங்கள் கீழ் முதுகில், முதுகுத் தண்டிற்கு இருபக்கமும் உள்ளன.
19. அல்வியோலஸ் என்பது மெல்லிய சுவருடைய காற்று செல். மனித நுரையீரல்களில் 750,000,000 அல்வியோலஸ் செல்கள் உள்ளன.
20. ஒரு குழந்தை 330 எலும்புகளுடன் பிறக்கிறது.
21. உடலில் 206 எலும்புகள் உள்ளன.
22. பிபுல்லா என்பது முழங்காலையும் குதிகாலையும் இணைக்கும் எலும்பு
23. மனித உடலில் உள்ள நீளமான எலும்பு தொடை எலும்பு.
24. மனித உடலில் உள்ள சிறிய எலும்பு காது எலும்பு.
25. மனித உடலில் உள்ள முதுகெலும்புகள் 33.
26. முகத்தில் உள்ள எலும்புகள் 14.
27. கைகளில் உள்ள எலும்புகள் 27.
28. மனித உடலில் எளிதில் உடையும் பகுதி கழுத்துப் பட்டை எலும்பு.
29. மூளையில் பெரிய பகுதி பெரு மூளை – செரிப்ரம் என்று அழைக்கப்படுகிறது. இது பேச்சு, பார்வை, கேட்டல், நுகரல், சிந்தனை, ஞாபகம், செயல், உணர்வு, இயக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறத.
30. சிறு மூளை உடல் சமன்பாடு, அசைவுகளை இணைத்தல் பணியை செய்கிறது.
31. உணவுப் பாதையின் நீளம் – வாய் முதல் மலவாய் வரை 15 அடிகள்
32. நகமாக வளரும் புரதப் பொருள் கெரட்டின்.
33. எலும்பு மஜ்ஜை ஒரு நாளைக்கு 25000 கோடி இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது.
34. மூக்கில் 60 மில்லியன் உணர்வு செல்கள் உள்ளன.
35. மனித உடலிலுள்ள எலும்புகள் ஒன்பது கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
36. பெருவிரலுக்கும் மூளைக்கும் தொடர்பு அதிகமாக உள்ளது.
37. நம் தலையில் சுமார் 1,50,000 முடிகள் உள்ளன.
38. 30 வயதிற்கு மேல் புதிய தலை முடி உருவாகுவதில்லை.
39. குருதி உறைதலுக்கு காரணமான நொதி திராம்பின்
40. ஒரு மனிதன் உடலில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் சிறுநீர் உற்பத்தியாகிறது.
41. சிறுநீர்ப்பை 600 மிலி சிறுநீரை கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது.
42. இருமும் போது ஏற்படும் ஒலியின் வேகம் மணிக்கு 245 மைல்கள்.
43. இருதயப் பணியின் ஒரு சுழற்சி முடிய 0.8 வினாடி நேரமாகிறது.
44. உடலில் வளராத, மாறாத பகுதி கண்ணிலுள்ள பாப்பா.
45. ஒரு நாளில் இரத்தம் நமது உடலில் 1680 மைல் தூரம் அளவு ஓடும்.
46. குடலில் மொத்த நீளம் 9 மீட்டர்.
47. உடலில் வேர்க்காத பகுதி உதடுகள்
48. உடலில் குளிர்ச்சியான இடம் மூக்கின் நுனி.
49. மூளையின் எடை சராசரி ஒன்றரை கிலோ.
50. உடலின் சீரான வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட்.
51. ஒரு நாளில் 1200 முதல் 1500 மிலி வரை உமிழ் நீர் சுரப்பாகிறது.
52. வெஸ்டிபுலே – எனப்படுவது பற்கள், கன்னத்திற்கு இடைப்பட்ட பகுதி.
53. சைனஸ் என்பது முக எலும்புகளிலுள்ள காற்றறைகள். சுவாசிக்கும் காற்றை நுரையீரலுக்கு தகுந்தவாறு சீர்படுத்துவது இதன் பணியாகும். குரல் தெளிவாக இருக்க, முக எலும்புகள் கனம் குறைய இது உதவுகிறது.
54. இரத்தக் கசிவு 1 முதல் 3 நிமிடங்கள் இருக்கும்.
55. இரத்தம் உறைவதற்கான நேரம் 4 முதல் 8 நிமிடங்கள்.
56. உடலின் தோல் மூன்று அடுக்கால் ஆனது. தோலின் மேலடுக்கு எபிடெர்மிஸ், இதில் இரத்த ஓட்டம் இல்லை. தோலின் இரண்டாவது அடுக்கு டெர்மிஸ் பகுதி என்றும், அடிப்புற அடுக்கு அடித்தோல் என்றும் அழைக்கப்படுகிறது.
57. மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் ரிப்ஸ்.
58. நமது உடலில் மிகவும் கெட்டியான தோல் பாதத்தில் உள்ளது.
59. கழுத்து வலி மருத்துவத் துறையில் செர்விகல் ஸ்பான்டிலிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.
60. ஹைப்பர் தெரிமியா என்பது உடல் வெப்பநிலை அதிகமாகுதல்.
61. ரேணுலா என்பது நாக்குக்கு அடியில் தோன்றும் நீர்க்கட்டி
62. எலும்பு, பற்களில் உள்ள புரதம் ஆஸ்சின்.
63. மனித உடலில் வியர்வை சுரப்பிகள் சுமார் 3 மில்லியன்களுக்கு மேல் உள்ளன.
64. செரடோனின் – வேதிப்பொருள் குறையும் போது தலைவலி ஏற்படும்.
65. வேகஸ் நரம்பிற்கு இதயத் துடிப்பை குறைக்கும் தன்மை உள்ளது.
66. இரத்தத்திற்கு நிறம் கொடுப்பது ஹீமோகுளோபின்.
67. பெருங்குடலின் நீளம் 100 முதல் 150 செ.மீ ஆகும். சிறுகுடலின் நீளம் 5 மீட்டர்.
68. பெருங்குடலின் பணி தண்ணீர் மற்றும் தாது உப்புக்களை உறிஞ்சுதல்.
69. உடலின் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்.
70. பித்தப்பை கல்லீரலின் கீழ்ப் பாகத்தில் அமைந்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பறவைகளின் அறிவியல் பெயர்!!


•கொக்கு - குருயிடேகுரியுபோர்ம்ஸ்புறா - கோலம்புடே கொலம்தபிபோர்ம்ஸ்
•ஆந்தை - நாக்டர்நாவிஸ் ஸ்டிரிஜிபோர்ம்ஸ்
•காகம் - கோர்வஸ் கோரோன்
•பென்குயின் - பென்றாகோனிகா லன்சிபோர்ம்ஸ்
•அன்னம் - சிக்னஸ் கோஸ்கோராபா
•கறுப்பு அன்னம் - சிக்னஸ் அட்ராடஸ்
•குயில் - குகுலிடே குகுலிபோர்ம்ஸ்
•வாத்து - அனாடிடே ஆன்செரிபோர்ம்ஸ்
•மயில் - பாவாகிறிஸ்டாடஸ்
•சிட்டுக்குருவி - புளோசிடே பாசர்
•கழுகு - அக்குலா அசதிபிடிரிடே
•தீக்கோழி - ஸ்டுருதியோ கேமெலஸ்
•நாரை - பெலிகானிடே பெலிகானிபோர்ம்ஸ்
•பச்சைக்கிளி - பிதாண்டிடே சிட்டாசிபோர்ம்ஸ்
•கடல் காகம் - லாரஸ்கேனஸ்
•கிவி - அப்பெரிக்ஸ் அப்டெரிஜிபோர்ம்ஸ்
•சிங்காரப் பறவை - டிரையேசிலிடே அபாடிபோர்ம்ஸ்
•அல்பாடிரஸ் - போபெடிரியா புரோசெல்லாரிபோர்ம்ஸ்
•டோடோ - ராபிடே கொலம்பியோர்ம்ஸமூ
•காண்டார் - வல்டர் கிரைபஸ்
•பிஜியன் - கொலம்பிடே கொலம்பிபோர்ம்ஸ்
•ஹாக் - டையர்நஸ் அசிபிடிரிடே

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

எப்போது தாகம் ஏற்படுகின்றது..?


தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியானது மாறிமாறி வெப்பமும் குளிர்ச்சியும் வருகின்ற பருவ நிலைகளைக் கொண்டது.
கோடைக்காலங்களில் குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக தாகம் எடுக்கின்றது. அதன் காரணமாக அதிகமான தண்ணீரைப் பருகுவோம். பொதுவாகவே நம் உடலானது பருவநிலைச் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது உடல் வெப்பநிலையை உடல் உள்உறுப்புகள் சீராகவே வைத்திருக்கின்றன. கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்பம் நம் தோலின் மீது விழுகின்றபோது அதன் மூலமாக அதிகப்படியான நீர் வியர்வை மூலமாக வெளியேற்றப்படுகின்றன. உடம்பில் இருக்கும் நீரின் அளவு ஒரே மாதிரியாய் இருந்தால் நமக்கு தண்ணீரின் ஞாபகமே இருக்காது. நீரின் அளவு 2.5 சதவீதம் குறைந்தாலே போதும்.

அவ்வாறு குறைவு ஏற்படுகின்றபோது உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதற்காக மூளை நரம்பு செல்களுக்குக் கொடுக்கும் உணர்வு (தகவல்) தான் ‘தாகம்’ ஆகும்.மூளையின் ஒரு பகுதி ஹைபோதாலமஸ் (Hypothalamus) மிகமிகச் சிறிய அளவிலான நியூரான்கள் அடங்கியிருக்கின்றன. இந்த நியூரான்களின் முக்கியப் பணி உடல் வெப்பநிலை, பசி மற்றும் தாகம் இவைகளைக் கவனிப்பதுதான். ஹைபோதாலமஸ் உள்ள நியூரான்கள் பிட்யூட்டரி சுரப்பி வழியாக நரம்புகளோடு இணைந்து இருக்கின்றன. உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும்போது இந்த நியூரான்கள் மிக வேகமாக செயல்பட்டு நரம்பு உணர்வுகளைத் தெரிவிக்கின்றன. அந்த உணர்வைத்தான் ‘தாகம்’ என்கிறோம்.


தாகம் எடுக்கின்றபோது குளிர்ந்த நீர், குளிர்ந்த பானங்களைப் பருகக் கூடாது. காரணம், குளிர்ந்த பானங்களில் வேதிப்பொருட்கள் கலந்து இருப்பதால் உடலுக்கு நல்லதல்ல. அறை வெப்பநிலையில் (Room Temperature) நீரின் மூலக்கூறுகள் இயல்பான நிலையில் இருக்கும். ஆனால் இயல்பான நிலையில் இருக்கும் நீரை குளிர்விக்கின்றபோது நீரின் மூலக்கூறுகள் மிக நெருக்கம் அடைந்து தன்னுடைய ஆற்றலை வெளியேற்றிவிடுகின்றன. இப்படி ஆற்றல் குறைந்த குளிர்ச்சியான நீரை பருகுகின்றபோது உடல் உள்உறுப்புகள் தன் அதிகப்படியான ஆற்றலை செலவழித்து அந்தக் குளிர்ந்த நீரை இயல்பான நிலைக்குக் கொண்டுவர உடல் உள்ளுறுப்புகள் முயல்கின்றன. அவ்வாறு இயங்குகின்றபோது தாகம் எடுப்பது குறைந்துவிடும். இதனால் மனிதனின் உடல் வெப்பநிலை சீராக இல்லாமல் உடல் உபாதைகள் (சளி, ஜுரம்) ஆகியவை ஏற்படுகின்றன.
எனவே தாகம் எடுப்பது மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. எப்பொழுதெல்லாம் தாகம் எடுக்கிறதோ தண்ணீரைப் பருகுங்கள். ஆரோக்கியமாக வாழ்வோம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

முத்துகள் உருவாகுவது எப்படி?


முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. மிகப் பழங் காலத்திலிருந்தே முத்து விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இருந்து வந்துள்ளது.


உயர் தர முத்துகள் எப்படி உருவாகின்றன என்றால், கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன.அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. இது போல் இயற்கையாக உருவாகும் முத்துக்கள் தான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.
செயற்கை முத்து எவ்வாறு உருவாக்கப்படுகிறது?


கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்றுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிப்பியினுள் ஏதேனும் சிரியப் பொருள் சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை சுரந்து அதன் மீது மூடிவிடும். அதைத் தெரிந்துகொண்ட சீனர்கள் சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள் ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.


ஜப்பானியர்கள் சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு நல்ல விலைக்கு விற்பனையாகிறது.1896 இல் ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ என்பவர் செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை விருத்தி செய்து அதற்காக உரிமம் ஒன்றையும் பெற்றுக்கொண்டார். இம்முறையில் முசெல் வகை உயிரினத்தின் ஓட்டிலிருந்து செய்யப்பட்டுப் பளபளப்பாக்கப்பட்ட நுண்துகள் இன்னொரு முத்துச்சிப்பியின் திசுவினால் சுற்றப்பட்டு முத்துச்சிப்பியின் உடலுக்குள் செலுத்தப்படும். இச்சிப்பிகள் ஒரு கூட்டினுள் இடப்பட்டு நீருக்குள் இறக்கப்படும். இவை முத்துக்களை உருவாக்கச் சுமார் மூன்று தொடக்கம் ஆறு ஆண்டுகள் வரை எடுக்கும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி?


ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆனால், ஒரு பிரம்மாண்டமான கப்பல் தண்ணீரில் மிதக்கிறதே. மீனவர்கள் பயன்படுத்தும் படகு, மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டாலும், மிகப் பெரிய கப்பல்கள் இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன. அப்படியானால் அந்தக் கப்பல்கள் மூழ்கிவிட வேண்டுமே, எப்படி மிதக்கின்றன?கப்பல் தண்ணீரில் இருக்கும்போது, அதன் உடற்பகுதி ஓரளவு தண்ணீரில் அமிழ்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும். எனவே கப்பலின் குறிப்பிட்ட அளவு அடிப்பகுதி கடலில் அமிழ்ந்திருக்கும். 1000 டன் எடையுள்ள கப்பலின் உடற்பகுதி, அதே அளவு எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். இதை, ஒரு கப்பலின் வெளியேற்றும் திறன் என்று குறிப்பிடுவார்கள்.


தண்ணீரில் அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் இயற்கையாகவே உள்ள அழுத்தம் கப்பலின் உடற்பகுதி மீது செலுத்தப்படுகிறது. அதேநேரம் கப்பலின் எடையும் தண்ணீரை அழுத்துகிறது. இந்த இரண்டு அழுத்தங்களும் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன. செங்குத்தான நிலையில் உள்ள அழுத்தங்களின் சக்தியே, கப்பலின் எடையை சமநிலைக்குக் கொண்டு வருகிறது. அப்போது கப்பல் மிதக்கிறது. இது மிதத்தல் தொடர்பான ஆர்கிமிடீஸ் தத்துவம். ஒருநாள் குளியல் தொட்டியில் தன் உடலை அமிழ்த்தியபோது, அதே அளவு தண்ணீர் வெளியேறியதை வைத்தே ஆர்கிமிடீஸ் இதைக் கண்டுபிடித்தார். அப்போது ஏற்பட்ட உற்சாகத்தில் “யுரேகா, யுரேகா’ (நான் கண்டுபிடித்துவிட்டேன்) என்று கத்திக் கொண்டே குளியலறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.


மேலும், கப்பலின் உட்பகுதியில் குறிப்பிட்ட அளவு காற்று இருக்கிறது. காற்றுக்கு வடிவமில்லாததால், நாம் அதை கணக்கில் எடுக்கத் தவறுகிறோம். கப்பலில் உள்ள பொருட்களை வெறுமனே திரட்டி தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். அடர்த்தி குறைவாக இருக்கும் வகையில் கப்பல் வடிவமைக்கப்படுவதும் கப்பல் மிதப்பதற்கு முக்கிய காரணம்.ஒவ்வொரு கப்பலிலும், படகிலும் அதற்கான கொள்ளளவு உண்டு. அதை மீறினால் அது மூழ்கிவிடும். 

இதற்கு எடுத்துக்காட்டு, 1914-ல் உலகின் மிகப் பெரிய கப்பலாக இருந்த டைட்டானிக். டைட்டானிக் பனிப்பாறை மீது மோதியபோது, கப்பல் உடைந்து அதனுள் தண்ணீர் புகுந்துவிட்டது. அப்போது எடை தாங்காமல் அது மூழ்கிவிட்டது.ஒரு பேப்பரை தண்ணீரில் மிதக்கவிட்டு அதன் மீது குண்டூசியை வைத்தால், பேப்பர் முழுகினாலும் குண்டூசி முழுகாது. ஆனால், நேரடியாக குண்டூசியை தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். குண்டூசியை தண்ணீரில் போடும்போது, அது கிடைமட்டமாக விழாது. புவியீர்ப்பு சக்தியின் காரணமாக அதன் எடை கூடிய பகுதி கீழே வரும்படி விழுவதால் மூழ்கிவிடுகிறது.


அதேநேரம், பேப்பர் மீது தண்ணீரில் கிடைமட்டமாக இருப்பதால் அழுத்தம் சமநிலை அடைந்து மிதக்கிறது.மனிதர்களான நாமும் இதேபோல் மிதக்க முடியும். மெத்தையில் படுப்பது போல் காலை நேராக நீட்டி கிடைமட்டமாக தண்ணீரில் படுத்தால், நாம் மூழ்க மாட்டோம். இப்படிச் செய்யும்போது கப்பலில் செயல்படும் அதே அழுத்தம் நமது உடலிலும் செயல்பட்டு மிதப்போம். இப்படி மிதப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், நமது நுரையீரலில் அடைக்கப்பட்டுள்ள காற்று. அது ஒரு பலூன் போலச் செயல்படுகிறது.கப்பலைப் போலவே காற்றில் அமிழ்ந்துள்ள பொருள்களுக்கும் ஆர்கிமிடீஸ் தத்துவம் பொருந்தும். தனது எடைக்குச் சமமான காற்றின் எடையைவிடக் குறைவான காற்றைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு பலூன் பறக்கிறது. அதே அளவு காற்றை அதுவும் கொண்டிருந்தால், இரண்டிலும் ஏற்படும் அழுத்தம் சமநிலையை ஏற்படுத்திவிடும். அப்பொழுது பலூன் பறக்காது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, June 4, 2012

மனித இனத்தை விரைவாக அழிக்கப் புறப்படும் சூப்பர் வொல்கனோக்கள் : அமெரிக்க ஆய்வில் தகவல்


அமெரிக்கா உட்பட உலகின் முக்கியமான பல நாடுகளில் காணப்படும் சூப்பர் வொல்கனோ எனும் உயிர் எரிமலைகள் இதுவரை கணிக்கப் பட்டதை விட மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லதுடன் மனித இனத்தை மிக வேகமாக அளிக்கக் கூடியன என்றும் சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


இவ் எரிமலைகள் ஏற்படுத்தக் கூடிய ஆபத்து மிகப் பெரிய எரிகல் ஒன்று பூமியுடன் மோதினால் ஏற்படும் விளைவை விட மோசமானது என்றும் கூறப்படுகின்றது. மேலும் சுமார் 100 000 வருடங்களாக உயிர்ப்புடன் உறங்கிக் கிடக்க வல்லது என முன்னர் கருதப்பட இந்த எரிமலைகள் தற்போது 100 வருடங்கள் மட்டுமே உறங்கிக் கிடக்கும் என்று தெரிவிக்கப் படுகின்றது.இதேவேளை 2012 ஹாலிவுட் திரைப்படத்தில் காட்டப் படுவது போல் அமெரிக்காவின் யெல்லோ ஸ்டோன் எனப்படும் சர்வதேச பூங்கா வலயத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் சூப்பர் வொல்கனோவே உலகின் மிக ஆபத்தான எரிமலையாகும். இவ்வெரிமலை முழு வீச்சுடன் வெடித்தால் 2012 படத்தில் காட்டப்படுவது போல் அமெரிக்காவின் 2/3 பகுதியை அழித்து விடும் என்று கணிக்கப் பட்டுள்ளது.


கடைசியாக இடம்பெற்ற சூப்பர் வொல்கனோ வெடிப்பு 600 000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததாகவும் கடந்த 2.1 மில்லியன் வருடங்களில் 3 தடவை இவ் வெடிப்புக்கள் ஏற்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தோனேசியப் பிராந்தியத்தில் 74 000 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த இது போன்ற எரிமலை வெடிப்பில் அப்போது துளிர் விட்டிருந்த மனித இனம் முழுவதும் அழிந்து போனதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.யெல்லோ ஸ்டோன் உட்பட நிலத்துக்கு அடியில் மக்மா எனும் எரிமலைக் குழம்புடைய சூப்பர் வொல்கனோக்களில் கிட்டத்தட்ட 100 000 முதல் 200 000 வருடங்களில் பாரிய வெடிப்பு ஏற்படும் என புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF