Saturday, August 25, 2012
பழைய சோற்றில் உள்ள மருத்துவ குணங்கள்!!!
நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழையசோற்றில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.
தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!
"காலையில் சிற்றுண்டியாக இந்த பழையசோற்றைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".கொஞ்சம் சைனஸ் நோய் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது ஏன் என்றால் பழையசோற்றில் உடலுக்கு அதிகமான குளிர்ச்சி தரும் .
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
அமெரிக்கா முஸ்லிம் நாடுகளை குறி வைப்பது ஏன்?
ஒரு பரவலான கருத்து நம்மிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது அது அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முஸ்லிம் நாடுளின் மீது போர்தொடுப்பது எண்ணெய் வளத்திற்க்காகத்தான் என்பதாகும் .ஆனால் உண்மை அப்படி அல்ல . வரலாறு அதை வேறு விதமாக நமக்கு கூறுகிறது . எண்ணெய் வளம் மட்டுமே காரணம் என்றால் சிலுவை போர்களே தேவைப்பட்டு இருக்காது .
உண்மை என்னவென்றால் எண்ணெய் வளங்களை அவர்கள் கைப்பற்றுவதன் மூலம் முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான போர்களை முன்னெடுத்து செல்வதற்கு அவர்களுக்கு பொருளாதார பலம் கிடைக்கிறது .பின்னர் ஏன்தான் அவர்கள் முஸ்லிம் நாடுகளின் மீது தொடர் போரை நிகழ்த்துகிறார்கள் ?அத சோசலிசம் என்னும் பொதுவுடைமை சித்தாந்தம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் மக்கள் ஆதரவை பெருமளவில் பெற்றது . ரஷ்யாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் கி.பி 1917 ஆம் ஆண்டு அதன் அரசு அமைக்கப்பட்டபோது சர்வதேச அரங்கில் அது ஆதிக்கம் பெற்றது .இந்த அரசுதான் பிற்காலத்தில் சோவியத் யூனியன் என்றழைக்கப்பட்டது .
சோவியத் யூனியன் வீழ்ச்சி அடையும் வரை அது சர்வதேச அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்தது . சோவியத் யூனியன் வீழ்ச்சியுற்றதும் மக்கள் பொது உடமை சித்தாந்தங்களை புறக்கணிக்க ஆரம்பித்தனர் . இதன் விளைவாக முதலாளித்துவ சித்தாந்தம் தொடர்ந்து சர்வதேச அளவில் கொள்கைகளையும் முடிவுகளையும் மேற்கொள்ள போட்டியாக வேறு எந்த சித்தாந்தமும் இல்லை என ஆயிற்று . முதலாளித்துவ சித்தாந்தத்தின் தலைவனாக அமெரிக்க இருக்கிறது .
அது ஒவ்வொரு நாட்டிலும் தனது கொள்கைகளை திணிக்கிறது . அல்லது சில சாதிகளின் மூலம் அரங்கேற்றுகிறது .சோஷலிச கொள்கைகளில் வாழ்ந்த மக்கள் அது வீழ்ச்சியுற்றதும் அதனை முற்றிலுமாக கைவிட்டு வேறு பாதைக்கு திரும்பினர் . ஆனால் முஸ்லிம் நாடுகளில் கிலாபத்துக்கு கீழ் வாழ்ந்த முஸ்லிம்கள் கிலாபத் வீழ்ச்சியுற்றாலும் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக இன்னும் தொடர்து கொண்டுதான் இருக்கிறார்கள் .
முதலாளித்துவ கோட்பாட்டை உலக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் தவிர வேறு எங்கும் அவ்வளவு எதிர்ப்புகள் காணப்படவில்லை . ஏனென்றால் முதலாளித்துவ கோட்பாட்டை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொண்டதை பின்பற்றி மேற்கு ஐரோப்பாவும் அதன் வழி நடக்கும் கனடா ,ஆஸ்த்ரேலியா , நியுசிலாந்து மற்றும் ரஷ்யாவும் கிழக்கு திசை நாடுகள் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட நாடுகள், பொது உடமை கோட்பாட்டை துறந்துவிட்டு முதலாளித்துவ கோட்பாட்டை தங்களது கொள்கையாக மாற்றிகொண்ட நாடுகளும் அடங்கும் . இந்தநாடுகள் முதலாளித்துவ கோட்பாட்டை எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுகொண்டார்கள் . மேலும் லத்தீன் அமெரிக்கா தூரக்கிழக்கு நாடுகள் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பழங்குடி இன நாடுகள் ஆகியவைகளுக்கு எந்த வித சித்தாந்தமும் கிடையாது . முதலாளித்துவ கோட்பாட்டிற்கு அங்கு எந்த எதிர்ப்பும் வருவதற்கு வாய்ப்பே இல்லை .
ஆகவே சித்தாந்தே ரீதியாக இஸ்லாமிய சமூகமே முதலாளித்துவ கோட்பாட்டை ஏற்றுகொள்ளாத நாடுகளாக உள்ளன .இந்த சமூகம் தன் வசம் இஸ்லாம் என்ற உயரிய சித்தாந்தத்தை வைத்திருக்கிறது .நாடோடி கூடங்களாக சரித்திரத்தின் மூலையில் நின்று கொண்டிருந்த காட்டரபி இன மக்களை இஸ்லாம் எவ்வாறு பண்பு நிறைந்தவர்களாகவும் , தனித்தன்மை உடைய சமூகமாகவும் , உலகிற்கு சத்திய ஒளியை எடுத்துசென்றவர்களாகவும் உருவாக்கியதை என்பதை முதலாளித்துவ வாதிகள் நன்கு அறிவார்கள் . அந்த முஸ்லிம்களின் தலைமைத்துவம் பலநூற்றாண்டுகள் கடந்து நின்றது . அவர்களது ஆட்சிகால்த்திலதான் நீதியும் நேர்மையும் , பாதுகாப்பும் நல்ல பண்புகளும் செழித்து வளர்ந்தது .
எனவே முஸ்லிம் சமூகம் மறுமலர்ச்சி பெற்று இந்த உலகில் மீண்டும் தலைமைத்துவம் பெற்றுவிடும் என அஞ்சியே முதலாளித்துவ வாதிகள் முஸ்லிம் நாடுகளை குறி வைத்து இயங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பதை சிந்தித்து பார்த்தால் இன்னும் பல பல உண்மைகள் வெளிப்படும் .......
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஈஸ்டர் தீவின் மர்மங்கள்!
ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகையான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலைகள் இருக்கின்றன.இத்தீவுக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், இந்த சிலைகள் எல்லாம் எவ்வாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது புரியாத புதிராக இருந்ததது.
இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். 2000 மக்கள் கி.பி. 200 ஆண்டிலே வசித்தால் இப்பொழுதுஅதற்கும் அதிகமாக மக்கள் வசிக்க வேண்டும் அல்லவா? மக்கள் தொகை குறைவதற்கான காரணம் என்ன? மற்றும் எவ்வாறு இந்த சிலைகளை தொழில்நுட்பமோ கொண்டு சென்றனர்? என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.கேள்விக்கு பதில் தேடும் விதமாக, அத்தீவில் தொல்பொருள், தாவரவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நிறைய மரங்களும், உயிரினங்களும் அத்தீவில் இருந்தன என்பதைக் கண்டறிந்தனர். புவியைத் தோண்டி ஆராய்ந்தபோது, நிறைய விதைகள், பறவைகள் மற்றும் வேறு பல உயிரினங்களின் எச்சங்களும், தொன்மங்களும் கிடைத்தன.
இவையெல்லாவற்றையும் விட உருளை வடிவிலான மரம் ஒன்றின் விதையும் கிடைத்தது. இன்று அம்மரம் இவ்வுலகில் இல்லை. அவற்றின் வழி தோன்றலான, சில மரங்களும், அம்மரத்தின் குடும்ப மரங்களும் உள்ளன. எவ்வாறு உருளை மரம் காணாமல் போனது? பல வகை உயிரின்ஙகள் என்ன ஆயின என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. பல்வேறு ஆய்வு முடிவுகளை மேற்கொண்ட பின், சில உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஈஸ்டர் தீவு பழங்குடியினர் டால்பின் மீன்களை விரும்பி உண்டனர். கடலின் ஆழப் பகுதியில் தான் டால்பின்கள் கிடைக்கும். ஆழப்பகுதியில் மீன் பிடிப்பதற்காக உருளை மரங்களை வெட்டி, கட்டு மரம் செய்வதற்கு பயன்படுத்தினர்.டால்பின் கறி சுவை காரணமாக, நிறைய கட்டுமரங்கள் செய்தனர். அதிகமான கட்டுமரங்கள் தேவைப்பட்டதால், நிறைய மரங்களை வெட்டினர்.
நாகரீகத்தின் உச்சமாக கலைகள் வளர ஆரம்பித்தன. ஈஸ்டர் தீவு மக்கள் சிற்பக் கலையில் கை தேர்ந்து விளங்கினர். அவர்கள் மிகவும் பிரம்மாண்டமான சிலைகளை செய்தனர்.அவர்கள் செய்த சிலைகளின் எடை 200 டன்னிற்கும் மேலாக இருந்தது. சிலைகளை தீவின் எல்லையோரங்களில் நிறுவினர். சிலைகளை நகர்த்தி செல்வதற்கு அவர்கள் உருளை மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். மனித பேராசை காரணமாக, அளவு தெரியாமல் உருளை மரங்களை வெட்டினர். உருளை மரங்கள் மீண்டும் இனப்பெருக்கம் செய்து பெருக முடியாத அளவிற்கு வெட்டிச் சாய்த்தனர்.அத்தீவில், ஒரு கால கட்டத்தில் உருளை மரங்களே இல்லாமல் போனது.உருளை மரங்கள் அழிந்தபின், அத்தீவில் இருந்த ஆறு பறவை இனங்கள் அழிந்து போயின. அவை அழிந்த பின் தான் தெரிந்தது; அப்பறவை இனங்கள் அனைத்தும் உருளை மரங்களைச் சார்ந்து இருந்தன. பறவை இனங்கள் அழிந்தபின், தீவில் இருந்த தாவரங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. பறவைகள் உண்டு போட்ட பழத்தில் இருந்த விதைகளினால் தான், பெரும்பாலான செடி, கொடிகள் மற்றும் தாவரங்கள் வளர்ந்தன. தாவரங்கள் இனப் பெருக்கத்திற்கு காரணமான, பறவை இனங்கள் அழிந்ததால் அனைத்து தாவரங்களும் அழிய ஆரம்பித்தன. தாவர இனங்களை நம்பி வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிய ஆரம்பித்தன.
உருளை மரங்கள் இல்லாததால், பழங்குடியின மக்களால் டால்பின்களை வேட்டையாட முடியவில்லை. தாவரங்களும் மற்ற அனைத்து பயிர் வகைகளும் அழிந்ததால், உணவு உற்பத்தியே இல்லாமல் போனது. உணவு தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து ஏற்பட்ட பசி, பட்டினியாலும், உணவிற்கு ஏற்பட்ட சண்டையாலும் மக்கள் நிறைய பேர்கள் இறந்தனர்.இங்கு ஒரு உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.உருளை மரங்களை பழங்குடியின மக்கள் உணவிற்காக பயன்படுத்தவில்லை. உணவிற்காக பயன்படாத ஒரு மரத்தை வெட்டியதாலே, ஒரு தீவில் மனித இனம் அழிந்தது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Friday, August 24, 2012
மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்…
1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர் களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2. மிக அதிகமாகச் சாப்பிடுவது:
...
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்:
இது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
4. தூக்கமின்மை :
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்டகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
5. மாசு நிறைந்த காற்று :
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6. புகை பிடித்தல் :
மூளை சுருங்கவும், அல்ப்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
7. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது :
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
8. தலையை மூடிக்கொண்டு தூங்குவது :
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள், சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
9. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது :
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
10. பேசாமல் இருப்பது :
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Thursday, August 16, 2012
மணிக்கு 4,500 கி.மீ வேகத்தில் செல்லும் விமானம்: அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்திற்கு ஒருமணிநேரத்தில் செல்லலாம்!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 1 மணி நேரத்தில் விமானத்தில் செல்ல முடியுமா? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.அமெரிக்காவின் நாசா மற்றும் பென்டகன் நிதி அளிப்புடன் 140 மில்லியன் டொலர் செலவில் “எக்ஸ்-51-ஏ வேவ் ரைடர்” என்ற ஜெட் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் மணிக்கு 4,500 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஹைப்பர் சோனிக் என அழைக்கின்றனர். இந்த விமானத்தில் பி-52 குண்டு வீசும் விமானத்தின் இறக்கை பொருத்தப்பட்டுள்ளது.இந்த விமானம் இன்று தெற்கு கலிபோர்னியாவின் எட்வர்டு விமானப்படை தளத்தில் இருந்து சோதனை ஓட்டத்தை தொடங்குகிறது. இது 70 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் பெற்றது.இச்சோதனை வெற்றி பெற்றால் விமான வரலாற்றில் இது புதிய மைல் கல் ஆக கருதப்படும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
சோமாலியாவில் மனித வெடிகுண்டுகளாக மாற்றப்படும் குழந்தைகள்: அல்கொய்தா அட்டூழியம்!
சோமாலியாவில் குழந்தைகளைக் கடத்தி, அவர்களை கட்டிப் போட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைப் படைக்கு தயார்படுத்தி வருவது தற்போது தெரியவந்துள்ளது.வன்முறை மற்றும் வறுமை தலைவிரித்தாடும் சோமாலியாவில் இஸ்லாம் உண்டு, உறைவிடப் பள்ளி என்ற பெயரில், அல்கொய்தா அமைப்பு தீவிரவாத பயிற்சியை அளித்து வருகிறது.
அதுவும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கடத்தி வந்து சங்கிலியால் படுக்கையில் கட்டி வைத்து கொடுமைப்படுத்துகின்றனர்.மேலும் தற்கொலைப் படையாக மாறி உயிர்விடுவதன் மூலம், சொர்க்கத்திற்கு போக முடியும் என்று கூறி தங்களுக்கு ஏற்றவாறு குழந்தைகளை தயார்படுத்துகின்றனர்.இதுபற்றி தகவல் அறிந்த அந்நாட்டு அரசு, மதப்பள்ளிகளை சோதனையிட உத்தரவிட்டது. இதையடுத்து நடந்த சோதனையில், சர்ச்சைக்குரிய மதப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபற்றி தீவிரவாத துப்பறிவாளர் நெயில் டோயில் என்பவர் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.ஆனால் தீவிரவாத பயிற்சி என்பதை ஆசிரியர்கள் மறுத்ததுடன், வகுப்புக்கு ஒழுங்காக வராததால் அவர்கள் கட்டி வைக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
Subscribe to:
Posts (Atom)