உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. நவீன காலத்திற்கு ஏற்றவாறு புதுப்புது தொழில்நுட்பங்களை புகுத்தி வரும் ஆப்பிள் நிறுவனத்திற்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் இறுதியில் அந்த நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 633.38 டொலர் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.
இது இன்னும் 12 மாத காலத்தில் மேலும் அதிகரிக்ககூடும் என்றும், அப்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்குகள் விலை நான்கு இலக்கு எண், அதாவது 1000 டொலருக்கு விற்கப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.இதனால் 2014ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1 டிரில்லியன் டொலராக உயரும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் உலகில் 1 டிரில்லியன் டொலரை எட்டும் முதல் நிறுவனமாக ஆப்பிள் உருவெடுக்க இருக்கிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்து வந்தால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் 21 சதவிகிதம் அதிகம் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.அதிக வேலைப்பளு போன்ற காரணங்கள் உட்பட பல்வேறு காரணங்களினால் காலை உணவை சாப்பிடாமல் பலரும் தவிர்த்து வருகின்றனர்.இவ்வாறு காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்து விட்டால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பொது மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு 30 ஆயிரம் ஆண்களிடம் நடத்தப்பட்டது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
பிரித்தானியாவில் ஹெய்டி ஹேன்கின்ஸ் என்ற நான்கு வயது சிறுமியின் அறிவுக் குறியீடு விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் அறிவுக் குறியீடை விட அதிகமாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹெய்டிக்கு அறிவுக் குறியீடு 159ஆக இருப்பதால் அவளால் இரண்டு வயதிலேயே ஏழு வயதினருக்குரிய கணக்குகளைச் செய்வதும், புத்தகங்களை வாசிப்பதும் எளிதாயிற்று.
ஹெய்டிக்கு முந்தைய சாதனையாளரான கேரல் வோர்டர்மேனின் அறிவுக் குறியீடு 154ஆகும். ஆக்ஸ்போர்டு பதிப்புகளில் உருவான புத்தகத்தில் உள்ள மரம் பற்றிய 30 புத்தகங்களை ஒரு மணி நேரத்தில் ஹெய்டி வாசித்து விடுவாள். இச்சாதனையை இவள் தனது இரண்டு வயதிலேயே நிகழ்த்தி விட்டாள்.பிரிட்டிஷ் மென்சாவின் தலைமை நிர்வாகியான ஜான் ஸ்டீவனேஜ் கூறுகையில், ஹெய்டியின் பெற்றோர் சரியான நேரத்தில் தங்கள் குழந்தையின் அறிவுக் கூர்மையை அறிந்து அவளை சரியான முறையில் வளர்த்து வருகின்றனர் என்றார். அவள் மென்சாவில் இணைந்து மேலும் சிறப்படையலாம் என்று வாழ்த்தினார்.
ஹெய்டியின் தாய் சோஃபி ஒரு கலைஞர், இவருக்கு ஐசக் என்ற 9 வயது மகனும் உண்டு. அவன் தேவாலயத்தின் பாடகர் குழுவில் இடம் பெற்றுள்ளான்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
பசிபிக் பெருங்கடலின் தென் மேற்குப் பகுதியில் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அவுஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியும், அதையொட்டிய நாடுகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என குவின்ஸ்லாந்து பல்கலைகழகம் கேட்டுக் கொண்டுள்ளது.19-வது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இப்பகுதியில் கடலில் நீர்மட்ட அளவு உயர்வது பிற இடங்களைவிட வேகமாக இருக்கிறது.
உலக அளவில் கடல் நீர்மட்டம் 1880ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 1.5 மில்லி மீட்டர் அளவு தான் உயர்ந்து இருந்தது. ஆனால் டாஸ்மேனியா நகருக்கு அருகில் நடத்திய கணக்கெடுப்போ 1900 முதல் 1950-ம் ஆண்டுக்குள் இப்பகுதியில் ஆண்டுக்கு 4.2 மில்லி மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்திருப்பதாகக் காட்டுகிறது.டாஸ்மேனியா அருகில் கடல் நீர்மட்டம் தொடர்ந்து 6,000 ஆண்டுகளாக ஒரே அளவில் நிலையாக இருந்திருக்கிறது. ஆனால் 1880ம் ஆண்டுக்குப் பிறகுதான் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியிருக்கிறது.
புவியின் வெப்ப சராசரி உயர்ந்து பனிப் பிரதேசங்களில் பனிமலைகள் உருகத் தொடங்கியதை அடுத்து கடல் நீர்மட்டம் பசிபிக்கில் உயரத் தொடங்கியது. இதன் வேகம் அதிகமாக இருக்கிறது.துருவப் பிரதேசங்களில் மிகப்பெரிய பனிப்பாறைகள் உடைந்து உருகத் தொடங்கியிருப்பதை நேரிலேயே பார்க்க முடிவதால் நீர்மட்டம் உயர எது காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் புவி வெப்பமடைவது இதே அளவு தொடர்ந்தால் அது பருவநிலைகளை மட்டும் அல்லாமல் கடல் நீர்மட்டங்களையும் பாதிக்கச் செய்யும் என்பதை ஆய்வு தெரிவிக்கிறது.இப்போது பருவநிலைகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்குக் காரணம் மனிதர்கள் தான் என்பதால் இந்த எச்சரிக்கை அரசுகளுக்கும் மக்களுக்கும் விடப்பட்ட எச்சரிக்கையாகவே கருதப்பட வேண்டும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஒக்லகோமா பல்கலைக் கழக வானியல் ஆராய்ச்சி உதவி பேராசிரியர் கிலிக் மற்றும் அவரது குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 1100 கோடி முதல் 1200 கோடி ஆண்டு பழமை வாய்ந்த 2 சிறிய நட்சத்திரங்களை கண்டுபிடித்தனர்.வெள்ளை நிறத்தினால் ஆன அவை பூமியில் இருந்து 100 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளன. இவற்றை மனிதர்கள் பார்க்க முடியும். இவற்றில் ஒன்று எரியும் அடுப்பு போன்று 'தக தக' வென வெப்பமாகவும், மற்றொன்று சிறிது குளிர்ச்சியாகவும் உள்ளன.
கிலிக் மற்றும் அவரது குழுவினர் 'நாசா'வின் சக்தி வாய்ந்த ஸ்பிட்சர் விண்வெளி டெலஸ்கோப் மூலம் இவற்றை கண்டுபிடித்து 3 ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
அண்மைக்காலமாக தனது புதிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் இருக்கும் நொக்கியா நிறுவனமானது தனது அடுத்த புதிய அறிமுகமான Lumia 610 NFC பற்றிய அறிவித்தலை வெளிவிட்டது.இது தொழில்நுட்ப ரீதியில் விண்டோஸ் இயங்குதளத்தையும், NFC வன்பொருட்களையும் ஒருங்கே கொண்டுள்ள உலகின் முதலாவது கைப்பேசியாகும்.
இவற்றின் திரையானது 3.7 அங்குலமான WVGA LCD திரைகளாகும். மேலும் 5 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, 800MHz processor, 256MB RAM, 8GB உள்ளக மெமரி ஆகியவற்றையும் கொண்டுள்ளன.இக்கைப்பேசிகள் முதற்கட்டமாக ஒரேன்ச் வலையமைப்பினூடு ஐரோப்பிய நாடுகளில் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பின்னர் படிப்படியாக ஏனைய நாடுகளிலும் கிடைக்கப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
நண்பரிடம் இப்படிச் சொல்லுங்கள் :
1 . ஏதாவது ஒரு எண்ணை நினைத்துக்கொள் .
2 . அதை இரு மடங்காக்கு .
3 . வரும் விடையுடன் 4 - ஐ கூட்டு .
4 . வரும் விடையை 2 - ஆல் வகு .
5 . வரும் விடையைச் சொல் ... நீ நினைத்த எண்ணைச் சொல்கிறேன் .
அவர் சொல்லும் எண்ணிலிருந்து 2 - ஐ கழித்துச் சொல்லுங்கள் ... '
ஒரு உதாரணம் :
நண்பர் நினைத்த எண் = 15 ; இரு மடங்காக்கினால் 30 ; 4 - ஐக் கூட்டினால் 34 ; 2 ஆல் வகுத்தால் 17 ; இதில் நீங்கள் 2 -ஐ கழித்தால் , நண்பர் நினைத்த எண் 15 .
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
* ஒன்றிலிருந்து 99 வரை ஆங்கிலத்தில் எண்களை எழுதினால் ஏ, பி, சி, டி என்ற நான்கு எழுத்துக்கள் வராது .
* ஒன்றிலிருந்து 999 வரை ஆங்கிலத்தில் எண்களை எழுதினால் ஏ, பி, சி, என்ற மூன்று எழுத்துக்கள் வராது .
* ஆயிரம் என்ற எண் பெயரில் மட்டுமே ஏ என்ற எழுத்து வரும் .
* ஒன்றிலிருந்து 99, 999,999 வரை ஆங்கிலத்தில் எண்களை எழுதினால் பி, சி, என்ற எழுத்துக்கள் இடம் பெறாது .
* பில்லியன் என்று எழுதும் போது மட்டுமே பி எழுத்து வரும் .
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
அண்மையில் பேஸ்புக் தனது மொபைல் பதிப்பில் இந்திய மொழிகளையும் கொண்டுவந்திருந்தது.அதில் தமிழ் மொழியும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.தற்போது பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கென அதன் புதிய மேம்படுத்தப்பட்ட மெஸெஞ்சர் வெளிவந்துள்ளது.
இனிமேல் இப்புதிய பேஸ்புக் மெஸெஞ்சர் மூலம் ஏனைய மெஸெஞ்சர் களைப் போலவே டெஸ்க்டாப்பில் இருந்தபடி அரட்டை அடிக்கலாம்.உலாவியைத் திறந்து லாகின் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பேஸ்புக் அப்டேட்கள் நியூஸ் பீட்ஸ்களாக மெஸெஞ்சரின் மேலே காட்டப்படும்.இந்தப் பதிப்பில் குழு அரட்டைக்கான வசதிகளை செய்திருக்கின்றது பேஸ்புக் நிறுவனம்.மேலும் கணினியில் மட்டுமன்றி மொபைல்களிலும் சாட்டிங்கை தொடர்வதற்கு மெஸெஞ்சர்கள் உள்ளன.
இதை கணினியில் நிறுவுவதற்கான இணைப்பு இங்கே
http://www.facebook.com/about/messenger
மொபைல் பதிப்பு -
http://www.facebook.com/mobile/messenger
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
நமது புகைப்படங்களில் வித விதமான Video Effects கொண்டுவர பலவிதமான மென்பொருட்கள் உள்ளன.ஆனால் சிறிய அளவில் நிறைவான பலன்களை தரக்கூடியதாக இந்த மென்பொருள் உள்ளது.முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் ஓபன் ஆகும் விண்டோவில், வலதுகை கீழ்புறம் + குறியீட்டுடன் புகைப்படம் இருக்கும்.
அதனை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தினை தெரிவு செய்யவும். அதன் கீழேயே இசைகுறியீட்டுடன் உள்ளதை தெரிவு செய்து உங்கள் புகைப்படத்திற்கு என்ன பாடல் வேண்டுமோ அதனை தெரிவு செய்யுங்கள்.இதில் உள்ள Visual effects கிளிக் செய்ய உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் மொத்தம் ஆறு டேப்புகள் உள்ளன. புகைப்படத்திற்கு பெயர் கொண்டு வருவதில் இருந்து தேவையான எபெக்ட்களை நாம் எடுத்து வரலாம். Framing வேண்டிய அளவில் கொண்டுவரலாம்.அனைத்தையும் செய்து முடித்தவுடன் இதிலிருந்து நேரடியாக சிடியாக மாற்றும் வசதியும் உள்ளது.
தரவிறக்க சுட்டி
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
எத்தனை வகையான கலைகள் இருக்கின்றன என்பதனை விட புதிய புதிய கலைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்ற இந்த உலகத்தில் இப்படியும் ஒரு கலை இருக்கின்றதா என பிரமிக்க வைத்துள்ளது இந்த மணற்கலையும் அதனை செய்த கைகளும்...இப்படியும் செய்யலாமா, இப்படியும் இருக்கின்றதா..... என மனசுக்குள் ஆயிரம் கேள்விகள் எழும்படியாக இருக்கின்றது இக்காணொளி.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆயுதங்களை கையாள்வதில் திறமை இருக்கும். ஆனால் இளைஞன் ஒருவன் ஹெட்டப் போலைப் பயன்படுத்தி இலக்குகளை சுக்கு நூறாக்குவதை Slow Motion காணொளியைப் பதிவு செய்துள்ளனர்.கிளாஸ், முட்டை, கோப்பை போன்றவற்றை தவிடுபொடியாக்கும் இளைஞனின் ஆற்றலை யூ டியூப்பில் கண்டு இதுவரை 2,00,000ற்கும் மேற்பட்டோரின் அபிமானத்தைப் பெற்றுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
உலகின் மிகவும் பழசான ஷூ அர்மீனியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு வயது 5500 ஆண்டுகள். அதாவது எகிப்தின் முதல் பிரமிடை விட 1000 ஆண்டு முன்பே தயாரிக்கப்பட்டது.மாட்டுத் தோலில் செய்யப்பட்ட இந்த ஷூவுக்கு லேஸ் உண்டு.வித்தியாசமின்றி எந்த பாதத்திற்கும் பொருந்தும் வகையில் மூதாதையர் உருவாக்கியது.உலகின் மிக பழைய ஷூவை கண்டுபிடித்துவிட்டோம். அது ஆணுடையதா, பெண்ணுடையதா என்பது தான் தெரியவில்லை என்கிறார் அயர்லாந்தின் கார்க் பல்கலைக்கழக விஞ்ஞானி ரான்பின்யாசி.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
கழிவுநீரில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை இங்கிலாந்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி உருவாக்கி வருகிறார்.உலக பணக்காரர் பில்கேட்ஸ் அளித்த நிதியுதவியுடன் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரும், உலக பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவருமான பில்கேட்ஸ், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான கண்டுபிடிப்பை ஊக்குவிக்க நிதியுதவி அறிவித்தார்.
உலகம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது ப்ராஜக்ட்களை அனுப்பினர். அதில் இங்கிலாந்தை சேர்ந்த நானோ தொழில்நுட்ப வல்லுனர் சாரா ஹே என்ற பெண்ணின் ப்ராஜக்ட் தேர்ந்தெடுக்கப்பட்டது.இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஸ்கூல் ஆப் மெட்டீரியல்ஸ் கல்வி நிலையத்தில் சாரா ஹே ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார்.லண்டனின் இம்பீரியல் கல்லூரி மற்றும் டரம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து அவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஆராய்ச்சிக்காக முதலில் அவருக்கு பில்கேட்ஸ் அண்ட் மெலிண்டா அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதி அளித்துள்ளது.
இதுபற்றி சாரா கூறியதாவது: கழிவுநீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, எரிபொருள் தயாரிப்பது என பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஆராய்ச்சியும் அதுபோன்ற முயற்சிதான்.இயந்திரத்திற்குள் செலுத்தப்படும் கழிவுநீருடன் பாக்டீரியா கலவை மற்றும் நானோ துகள்கள் வினை புரியும். இந்த ரசாயன வினைக்கு பிறகு, ஹைட்ரஜன் வாயு உருவாகும்.அதை ஹைட்ரசீனாக மாற்றுவது எளிது. அதுதான் ராக்கெட் எரிபொருளாக பயன்படுகிறது. கழிவுநீரில் இருந்து ஹைட்ரஜன் பிரிக்கப்பட்ட பிறகு, அந்த நீர் மேலும் மேலும் வடிகட்டப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக மாற்றப்படுகிறது.
உலகின் பல நாடுகளில், பல பகுதிகளில் குடிநீருக்கு மக்கள் திண்டாடுகின்றனர். சுத்தமான குடிநீர் தேடி பல கி.மீ. செல்கின்றனர். குடிநீருக்காக மக்கள் சிரமப்பட கூடாது என்பதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம்.இயந்திரத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி நடக்கிறது. அடுத்த ஆண்டில் பணி முடிந்து செயல் விளக்கம் அளிக்கப்படும். எங்கும் எளிதில் எடுத்து செல்லும் வகையில் இந்த மெஷின் இருக்கும் என்று கூறினார். அடுத்த ஆண்டில் இந்த ஆராய்ச்சிக்காக பில்கேட்ஸ் அறக்கட்டளை ரூ.5 கோடி நிதியை சாராவுக்கு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
வளைகுடாவில் நான்காவது மகிழ்ச்சிகரமான நாடாக கட்டார் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளினால் வெளியிடப்பட்டுள்ள முதலாவது உலக மகிழ்ச்சிகர அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.
மகிழ்ச்சிகரமான நாடுகளுக்கான உலகப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள 156 நாடுகளில் கட்டார் 31ஆவது இடத்தை வகிக்கின்றது. ஐக்கிய அரபு இராச்சியம்(UAE) 17ஆம் இடத்தை வகிப்பதுடன் சவூதி அரேபியாவும் குவைத்தும் முறையே 26ஆம், 29ஆம் இடங்களில் உள்ளன.
இந்தப் பட்டியலில் டென்மார்க், பின்லாந்து, நோர்வே ஆகிய ஸ்கண்டிநேவிய நாடுகளும் நெதர்லாந்து, கனடா ஆகிய நாடுகளும் முன்னிலை வகிக்கின்றன.டோகோ, பெனின், மத்திய ஆபிரிக்க குடியரசு, சியாரா லியொன் ஆகிய நாடுகள் மகிழ்ச்சி குன்றிய நாடுகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அறிக்கையின் பிரகாரம் மத்திய கிழக்கில் யெமன், பலஸ்தீனம் ஆகிய நாடுகளே மகிழ்ச்சி குன்றிய நாடுகளாக இனங்காணப்பட்டுள்ளன. நாடுகளின் ஒட்டுமொத்த செல்வம் மற்றும் மக்களின் மனோநிலை, சமூக உறவுகள், சுகாதார நலன் என்பன தரப்படுத்தலின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
மகிழ்ச்சி தொடர்பான ஐ.நா.வின் மாநாட்டில் பொதுச் சபையினால் பரிந்துரைக்கப்பட்டதற்கமைய இவ்வறிக்கை புவி மன்றத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையானது உலகம் முழுவதும் மகிழ்ச்சியைத் தோற்றுவிப்பதையும் துன்பத்தை துடைத்தெறிவதையும் அரசாங்கங்களின் கொள்கைப் பிரகடனங்களாகக் கொள்ள வேண்டும் என்ற ஓர் உன்னத விடயத்தைப் பிரதிபலிக்கின்றது.இன்றைய உலகில் மகிழ்ச்சியின் நிலை குறித்து அவ்வறிக்கை தெளிவுபடுத்துவதுடன் மகிழ்வுறும்போது தனிப்பட்டவர்களும் தேசத்தவர்களும் எவ்வாறு மாறுபடுகின்றார்கள் என்பதை மகிழ்ச்சி தொடர்பான விஞ்ஞான சாஸ்திரம் விளக்குகின்றது என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.
செல்வம் கொழிக்கும் நாடுகளே மகிழ்ச்சிகரமான நாடுகளாகத் திகழ்வதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தொழில்வாய்ப்பின்மை துயரத்திற்குக் காரணமாக அமைவதுடன் அபகரிப்பு மற்றும் பிரிவினை போன்றவற்றுக்கும் தூண்டுதலாக அமைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.ஒழுக்கசீலர்களாக இருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதுடன் எந்தவொரு நாட்டிலும் மகிழ்ச்சி பொங்குவதற்கு சிறந்த மனோநிலையே மிகப் பெரிய தனிக் காரணியாக அமைவதாகவும் அவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பெற்றோரும் பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு உறுதியான குடும்ப வாழ்க்கையும் நிலைத்திருக்கும் திருமணங்களும் மிக முக்கியம் என்பது இவ்வறிக்கை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஆண்களை விட பெண்களே மகிழ்ச்சி மிக்கவர்களாகக் காணப்படுகின்றனர். வறிய நாடுகளில் மகிழ்ச்சியும் துயரமும் கலந்திருப்பதுடன் மத்திய வயதினரிடையே மகிழ்ச்சி மிகக் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும், கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
உணவு உண்ட பின் ஜில்லென்று குளிர்பானம் அருந்துவது இதயபாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மாரடைப்பு நோய் உட்பட பல்வேறு இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும் போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.ஜில் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத்தும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன.எனவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள், அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
சில சமயங்களில் மிகப் பெரிய File களை எப்படி மின்னஞ்சல் மூலம் அனுப்புவது என்று யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால் மின்னஞ்சல் மூலம் 25MB க்கு மேல் அனுப்ப முடியாது. இதற்கு கண்டிப்பாக வேறு சில தளங்களின் உதவி நமக்கு கட்டாயம் தேவை. அப்படிப் பட்ட தளங்களைப் பற்றிய பதிவு இது.இதில் எந்த தளங்களிலும் நீங்கள் Register செய்யத் தேவை இல்லை.
1. We Transfer
We Transfer தளம் மிக அருமையாக இந்தப் பணியை செய்து தருகிறது. Add Files பகுதியில் File-ஐ தெரிவு செய்து விட்டு , இமெயில் முகவரி கொடுத்டு விட்டால் போதும். upload ஆகி உங்கள் File குறிப்பிட்ட நபருக்கு சென்று விடும். மிக அதிகம் பயன்படுத்தபடும் தளம் இது எனலாம்.
2. SizableSend
SizableSend தளமும் இந்தப் பணியை நல்ல முறையில் செய்து தருகிறது. இதில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு 2ஜிபி வரை அனுப்ப இயலும். Auto delete files after download என்ற வசதியை தெரிவு செய்தால் அனுப்பபட்ட File Download செய்யப்பட பின் Delete செய்யப்பட்டு விடும்.
3. supersizemail
இந்தத் தளமும் 2ஜிபி வரை File களை மின்னஞ்சல் செய்ய இயலும். 3 ஸ்டெப்களில் உங்கள் வேலை முடிந்து விடுகிறது.இதே போல அதிக Size உள்ள File களை அனுப்ப உதவும் மற்ற தளங்கள் சில,
4. LargeFilesASAP - 2ஜிபி வரை ஒருவருக்கு மட்டும் இலவசமாக அனுப்ப
5. Drop Send
இதே முயற்சியை நீங்கள் Team Viewer- File Transfer மூலமாக கூட செய்ய இயலும். ஆனால் குறிப்பிட்ட நபர் உங்களுக்கு நம்பிக்கையானவர் என்ற பட்சத்தில் இதை நீங்கள் செய்யலாம். இல்லை என்றால் என்றால் மேலே கூறிய வழிகளை பின் பற்றவும்.ஒன்றுக்கும் மேற்பட்ட File கள் என்றால் அவற்றை WinRar கொண்டு Compress செய்து கொள்ளவும். இங்கே File Size குறைக்க செய்யும் முயற்சிகள் தேவை இல்லை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
தினசரி இசை கேட்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவதோடு உடல் நலமும், மனநலமும் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.இசை கேட்பதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.கூடன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியல் துறை பேராசிரியர்கள் மனிதர்களின் மன அழுத்தம் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
207 நபர்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அதில் 21 நபர்கள் தாங்களாகவே தேர்ந்தெடுத்த இசையை அரைமணிநேரம் கேட்டனர்.இரண்டு வாரங்கள் அவர்கள் தொடர்ந்து இசையை கேட்டனர். அதே எண்ணிக்கையுள்ளவர்கள் இசையை கேட்காமல் வேறு வழிகளில் ரிலாக்ஸ் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.இதில் இசையை கேட்டவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து இருந்தது. மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹோர்மோன் சுரப்பு குறைவாக இருந்தது.
இதேபோல் இசையை கேட்காதவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தது. இசையானது மனதை லேசாக்குவதோடு உடல் நலத்தையும் பாதுகாக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே தினசரி அரைமணி நேரமாவது இசையை கேட்பவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF