Monday, March 19, 2012

50 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் எலும்பு கூடு!


அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள குவின்கேன்யான் தேசிய கற்கால ஆராய்ச்சி மையத்தின் நிபுணர் எரிகா கிளிட்ஸ் தலைமையிலான குழுவினர் தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதியில் பூமியை தோண்டி ஆய்வு செய்தனர்.அப்போது அங்கு ஒருவித கடல்வாழ் உயிரினத்தின் எலும்பு கூடுகள் கண்டெடுக் கப்பட்டன. நூற்றுக்கணக்கான அந்த எலும்பு கூடுகளை அவர்கள் ஆராய்ச்சி செய்தனர்.அது 0.6 இஞ்ச் உயரமும், 0.9 இஞ்ச் அகலமும் கொண்டதாக இருந்தது. அதன் உடல் மிகவும் மிருதுவானதாக இருந்திருக்க வேண்டும். அது கடல் நீரில் வாழும் மிக நுண்ணிய உயிரினங்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்திருக்கின்றன.


மேலும் இவை சுமார் 55 கோடி முதல் 56 கோடி ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்து இருக்க வேண்டும். இதற்கு கரோனா கோலிகா அகுலா என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். உலகம் உருவாகிய போது தோன்றிய உயிரினங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உடல்நிலையை கண்காணிக்கும் ஸ்மார்ட் போன்கள்!



உங்களது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் ஸ்மார்ட் போன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவசர சிகிச்சைகளை எளிதில் மேற்கொள்ளலாம்.கமெரா, படம் பார்ப்பது, விளையாடுவது என பொழுதுபோக்காக மட்டுமின்றி, மருத்துவ ரீதியாகவும் ஸ்மார்ட் போன்கள் அதிகம் பயன்படுகின்றன.


இதன் மருத்துவ பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பாக நியூசிலாந்தின் மனுகாவ் தொழில்நுட்ப கழகத்தின் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறை ஆராய்ச்சியாளர்கள் ஹெலன் ஷூ, டிம் ராபர்ட்ஸ் ஆய்வு நடத்தி வருகின்றனர்.அவர்கள் கூறியதாவது: ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகியவற்றை தற்போது ஸ்மார்ட் போன்கள் மூலமாகவே தெரிந்து கொள்ள முடிகிறது. எக்ஸ்ரே, இசிஜிகூட வந்துவிட்டன.


இந்நிலையில் ப்ளூடூத்,Wifi வசதி, ஸ்மார்ட் போன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மைக்ரோ கன்ட்ரோலர் அடிப்படையிலான வயர்லெஸ் சிஸ்டம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம்.இதய துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகியவற்றை ஸ்மார்ட் போன் தொடர்ச்சியாக கண்காணிக்கும். உடன் இணைக்கப்பட்டிருக்கும் ப்ளூடூத் மூலம் இதுபற்றிய தகவல் வைஃபி அல்லது இன்டர்நெட் இணைப்பு மூலமாக உங்களது மருத்துவரின் ஸ்மார்ட் போனுக்கு உடனுக்குடன் அனுப்பப்படும்.இருந்த இடத்தில் இருந்தே அவர் கண்காணிக்க முடியும். இதனால் அவசரகால சிகிச்சைகளை உடனுக்குடன் செய்வது சாத்தியமாகும் என்று தெரிவித்துள்ளனர்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

விரைவில் Nokia Lumia 719 கைபேசிகள் அறிமுகம்!


முதன் முதலாக ஆசியாவிலும், அமெரிக்காவிலும் Nokia Lumia 719 என்ற கைபேசி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.விண்டோஸ் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட இவை தற்போது சந்தையில் காணப்படும் Nokia Lumia 710 என்ற கைப்பேசியை விடவும் மெலிதானதாக வடிவமைக்கப்படுகின்றது.


மேலும் இதன் திரையானது 3.7 அங்குலமுடைய AMOLED வகைக்குரியதாக காணப்படுவதுடன் 5 மெகா பிக்சல் கமெராவை கொண்டுள்ளது.இதன் மூலம் அதி உயர் பிரிதிறன் கொண்ட வீடியோ பதிவையும் மேற்கொள்ள முடியும். இக்கைபேசி தொடர்பாக மார்ச் 28ம் திகதியளவில் சீனாவில் வைத்து அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, March 18, 2012

அறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்…


ஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் மறந்துவிட்டாலோ பிறரிடம் இருந்து முதலில் வரும் கேள்வி என்ன புத்தி மழுங்கிப் போச்சா என்பதுதான். அந்த அளவிற்கு மனிதர்களுக்கு கட்டளையிடும் தலைமைச் செயலகமான மூளையின் பங்கு முக்கியமானது.


மனிதர்களுக்கு வயசாக வயசாக, ஞாபக மறதி, தோல் சுருக்கம், நடை தளர்ச்சி, மூட்டுவலி இப்படி எத்தனையோ பிரச்சினைகள் வரத்தொடங்கும். அவற்றை தவிர்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முதுமையினால் ஏற்படும் நோய்களை ஏற்றுக்கொள்ளும் மனமானது வயசு ஏற ஏற அறிவும் கூட வளறவேண்டும் என்றுதான் நினைக்கிறது.எனவே வயது முதிர்ச்சியுடன் சேர்த்து, அறிவு முதிர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதற்காக விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களோட, பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில முத்தான 08 வழிகளை சமீபத்துல ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 
அவைகளை உங்களுக்காகக் கொடுத்துள்ளோம்.


1. ஒரு நாளைக்கு 4 கப் காஃபி
காலையில் எழுந்த உடன் ஆற அமர ருசித்து காஃபி குடியுங்கள். ஏனெனில் காஃபியில் உள்ள கெஃபீன் என்னும் வேதிப்பொருள், மூளையை பாதுகாக்கிறது. நாளொன்றுக்கு நான்கு கப் காஃபி குடித்தால் அல்ஷெய்மர்ஸ் என்ற நினைவாற்றலை பாதிக்கும் நோய் வராமல் தடுக்கப்படுகிறதாம். இந்த மருத்துவத்தன்மையானது, காஃபியில இருக்குற கெஃபீன் லேர்ந்து கிடைக்கிறதா ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் என்னும் வேதிப்பொருள்லேர்ந்து கிடைக்கிறதா என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.


2. மூளைக்கு வேலை
எவ்வளவுக்கு எவ்வளவு உங்க மூளையை கசக்கி ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவும் உங்க முதுமைக் காலத்துல அறிவு முதிர்ச்சிக்கு வித்திடுமாம்!. ஒரு புது கணக்குக்கு விடை கண்டுபிடிக்கிறதுல மூளைக்கு கிடைக்குற பலனைவிட, சிக்கல் விளையாட்டுல எல்லா பகுதியையும் ஒன்னா சேர்க்குறதுல கிடைக்குற பலன் ரொம்பக் குறைவாம். குறுக்கெழுத்துப் போட்டியோ அல்லது அதற்கு இணையான மூளைப் பயிற்ச்சி விளையாட்டுகளோ, இவை எல்லாம் மூளையை பெரிதாக மேம்படுத்துகின்றன.!


3. மன உளைச்சல் வேண்டாம் (No Tension)
மன உளைச்சலினால் நினைவாற்றல் சக்திக்கு அடிப்படையான மூளையின் ஹிப்போகேம்பஸ் மற்றும் இன்னும் சில பகுதிகளில் விஷத்தன்மையுள்ள பல ரசாயனப் பொருள்கள் கொட்டப்படுகிறதாம். யோகா, நண்பர்களுடன் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், மன உளைச்சல் குறைந்து, நினைவாற்றல் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு


4. நிம்மதியான உறக்கம்
கனவு காண்பதால் மூளை வளர்ச்சியடையும் என்ற அதிசயிக்கத்தக்க உண்மை கண்டறியப்பட்டுள்ளது. கண்களை திறந்து கொண்டே பகல் கனவு காண்பதால் எந்த பிரயோசனமும் இல்லை. சரியான நேரத்தை ஒதுக்கி, உறங்கும்போது, வரும் கனவுகள் ஒருவரின் நினைவாற்றல் மீதான மேற்பார்வை செய்யும் மூளை, தேவையில்லாதவற்றை அழித்து, முக்கியமானவற்றை செப்பனிட்டு பாதுகாக்கிறதாம். ஆனால் சரியான தூக்கமின்மையால் நம் நரம்புத் தொடர்புகளின் (synapses) மீது, ஒரு வித புரதங்கள் தேங்கி, சிந்திக்கும் மற்றும் கல்வி கற்கும் திறன் குறைந்து போகிறதாம். முக்கியமா, வருடக்கணக்கில் சரியான தூக்கமில்லாதவர்களுக்கு, அவர்களின் முதுமையில் அறிவுத்திறன் பெரிதும் குறைந்துவிட வாய்ப்புகள் இருக்கிறதாம்!


5. சுறுசுறுப்பான செயல்பாடு
நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்யவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது மூளை ஆரோக்கியத்தை மிகவும் மேம்படுத்துகிறதாம். நடப்பது, தோட்ட வேலை செய்வது, ஓடுவது இப்படி எதுவாக இருந்தாலும் அரைமணி நேரம் தொடர்ந்து செய்தால் மூளை வளர்ச்சி அதிகரிக்குமாம்.


6. உடல் நலனில் அக்கறை
வருமுன் காத்துக்கொள்ளக் கூடிய நோய்களான, நீரிழிவு நோய் (Type II diabetes), உடல்பருமன், ரத்தக் கொதிப்பு போன்றவை கூட ஒருவரின் மூளையை பாதிக்கின்றனவாம்! உடலளவிலான எல்லா உபாதைகளுமே, மூளையின் கற்கும் திறனையும், நினைவுத்திறனையும் பெரிதும் பாதிக்கின்றனவாம். எனவே உடலை பேணுவதன் மூலம் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம்.


அதிகமாக உண்ணுவதன் மூலம் மூளை சோர்வடைந்து நினைவாற்றல் பாதிக்கிறதாம். அதேசமயம், உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் மிகவும் குறைவாக உட்கொண்டாலும் மூளை பாதிக்கப்படுகிறதாம். அவர்கள் கவனச்சிதறல், குழப்பம் மற்றும் நியாபகச் சக்தி குறைவு போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்களாம். எனவே அதிக நார்ச்சத்துள்ள மிதமான அளவில் கொழுப்பும் புரதமும் உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் செரிமானச் செயல்பாடானது சீராக நடைபெற்று உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை நீண்டகாலம் பாதுகாத்து சரியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.


7. மீன் சாப்பிடுங்க
மூளைவளர்ச்சியை அதிகரிப்பதில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பிற்கு முக்கிய பங்குண்டு. இது மீன்களில் அதிகம் காணப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த விதைகளையும் அதிகம் உண்ணலாம். மீன் எண்ணெய் மாத்திரைகள் தேவையில்லை.


8. மாத்திரைகளை தவிருங்கள்
வைட்டமின், தாது மாத்திரைகள் அப்புறம் சில நினைவாற்றல் மாத்திரைகள் எல்லாம் மூளைவளர்ச்சியை மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் ரத்தக் கொதிப்பு, செரிமானக் கோளாறு, மலட்டுத்தன்மை பிரச்சினைகள், மன உளைச்சல் போன்ற நோய்களும் தோன்றுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பல் வலியை குணப்படுத்தும் புதிய தாவரப் பசை!

தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகளில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட அரிய வகை செடிகள் இருக்கின்றன.இந்த செடிகளில் பல் வலியை நீக்கும் சக்தி இருப்பதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இதில் இருந்து பசை தயாரிக்க காப்புரிமையை கோரி இருக்கிறார்கள்.மேலும் இந்த பற்பசை தயாரிக்கப்பட்டால் அது கடுமையான பல் வலிக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கூகுளின் புதிய டேப்லெட்!


கூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய டேப்லெட் வரும் மே மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளிவருகிறது. இந்த டேப்லெட்டை கூகுள் ஆசஸோடு இணைந்து தயாரிக்க இருக்கிறது.இந்த டேப்லெட்டை 7 இன்ச் திரையைக் கொண்டிருக்கும். மேலும் இது ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும். மேலும் இதன் விலையும் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.


கூகுளின் ப்ளே ஸ்டோரிலிருந்து வரும் எல்லா ஓடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இந்த டேப்லெட் இயக்கும் சக்தி கொண்டது.கூகுள் இந்த டேப்லெட்டைத் தயாரிக்க முதலில் எச்டிசி நிறுவனத்துடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் வந்தன.ஆனால் இறுதியில் இப்போது ஆசஸிடம் கூட்டணி வைத்திருக்கிறது.இந்த புதிய டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் குறைந்த விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, March 17, 2012

குளோனிங் மூலம் வெள்ளாட்டை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!


காஷ்மீர் மாநிலம் சுகாமா என்ற இடத்தில் உள்ள ஷெர்-காஷ்மீர் வேளாண்மை விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ரியாஸ் அகமது ஷா தலைமையிலான குழுவினர் குளோனிங் மூலம் பஷ்மினா வகை வெள்ளாடு குட்டியை உருவாக்கி உள்ளனர்.நூரி என்ற பெயருடனும், 1.3 கிலோ எடையுடனும் காணப்படுகிறது. மேலும் குளோனிங் மூலம் இந்த வகை வெள்ளாடு உருவாக்கப்படுவது இதுவே முதல் தடவை ஆகும்.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Interest: பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி!


உலகம் முழுவதும் 800 மில்லியனுக்கும் அதிகமான வாசகர்களை கொண்ட ஒரே சமூக இணையதளம் பேஸ்புக் ஆகும்.எனவே பேஸ்புக் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே உள்ளது. தற்போது பேஸ்புக்கில் Interest வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த வசதியின் மூலம் உங்களுக்கு மிகவும் விருப்பமான நபர்களின் பகிர்வுகளை மட்டும் பார்க்கலாம்.இதற்கு முதலில் உங்கள் பேஸ்புக் தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் இடது பக்கத்தில் கீழ் பகுதியில் Interest என்ற புதிய வசதி இருக்கும், அதன் மீது க்ளிக் செய்யவும்.


அடுத்ததாக ஓபன் ஆகும் விண்டோவில் CREATE LIST என்ற பட்டனை அழுத்தவும்.அடுத்து ஒரு Pop-up விண்டோ ஓபன் ஆகும், அதில் நீங்கள் பின்தொடரும் பக்கங்கள், நண்பர்கள், Subscribe செய்யும் பட்டியல் இருக்கும் காணப்படும்.அதில் உங்களுக்கு பிடித்த நபர்களை மட்டும் தெரிவு செய்து கொள்ளவும்.உங்களுக்கு பிடித்த நண்பர்களை தெரிவு செய்தவுடன் கீழே உள்ள Next என்ற பட்டனை அழுத்தவும்.அடுத்து ஓபனாகும் விண்டோவில் உங்களுக்கு பிடித்த தலைப்பை கொடுத்து உங்கள் பட்டியல் யாருக்கு தெரிய வேண்டும் என்பதை தெரிவு செய்து கொள்ளவும்.அடுத்து கீழே உள்ள Done என்பதை க்ளிக் செய்தால் போதும் தெரிவு செய்தவர்களின் பதிவுகளை மட்டும் இனி தனியாக பார்த்து கொள்ளலாம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, March 11, 2012

மனிதர்களை உணவாக உட்கொல்லும் ராட்சஸ சிலந்தி நண்டுகள்!

ஜப்பானை ஒட்டியுள்ள பசிபிக் கடல்பகுதியில், 1200 அடி ஆழத்தில், ராட்சச சிலந்தி நண்டுகள் காணப்படுகின்றன.இவை சுமார் 12 அடி அகலத்தில் கால்களை பரப்பிக் கொண்டு, ஒட்டகச்சிவிங்கியைப் போல் நடந்து பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது.இது 4 அடி உயரம் வரை வளர்கிறது. கடலுக்குள் ஆராய்ச்சி செய்யும் ரோவர் என்ற நீர்மூழ்கிக் கருவிகள் மூலம் இந்த நண்டுகளை ஆராய்ச்சிக்காகப் பிடிக்கின்றனர்.இந்த ராட்சஸ சிலந்தி நண்டுகள் 50 ஆண்டுகாலம் வரை உயிர்வாழ்கின்றன. இது கடல் விபத்தில் இறந்துபோன மனிதர்களையும் உணவாக உட்கொள்கிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, March 10, 2012

முப்பரிமாண வடிவில் மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!



எலி, முயல் உட்பட பல்வேறு விலங்குகளை மருத்துவ பரிசோதனைகளுக்காக விஞ்ஞானிகள் உருவாக்கினர்.அதே போன்று தற்பொழுது இங்கிலாந்து அறிவியல் அறிஞர்கள் அவதார் திரைப்பட தோற்றத்திலான முப்பரிமாண வடிவில் கணணி மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இதன் மூலம் மருத்துவத் துறையில் புதிய முன்னேற்றங்களும், கண்டுபிடிப்புகளும் அதிகரிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மிக மோசமான நிலையில் சிரியா: வெளிநாட்டு இராணுவ தலையீடு கூடாது என்கிறார் கோபி அனான்!


சிரியாவில் எந்தவொரு வெளிநாட்டு இராணுவ தலையீடும் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று சிரியாவுக்கான ஐ.நா மற்றும் அரபு லீக்கின் சிறப்புத் தூதுவரான கோபி அனான் எச்சரித்துள்ளார்.டமாஸ்கசுக்கான தனது விஜயத்துக்கான திட்டம் குறித்து கோபி அனான் கூறுகையில், சிரியாவின் தற்போதைய நிலைமையை அரசியல் ரீதியாக மட்டுமே தீர்த்து வைக்கப்பட முடியும் என்று கூறியுள்ளார்.


மேலும் சிரிய மக்களின் ஆசைகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில், தீர்வு காண சிரியாவின் அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்நிலையில் சிரியாவில் ஜனாதிபதிக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் 8500 பேர் பலியாகி இருப்பதாக பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.இறந்தவர்களில் 6,195 பேர் பொதுமக்கள் என்றும், 1,835 பேர் இராணுவ வீரர்கள் மற்றும் பொலிசார் என்றும், 428 பேர் புரட்சி படையை சேர்ந்தவர்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஜப்பானில் அடிக்கடி சுனாமி ஏற்படுவதற்கு காரணம் என்ன? ஆராய்ச்சியில் ஜேர்மன் ஆய்வாளர்கள்!


ஜப்பானில் சுனாமி ஏற்பட்டு ஓராண்டு முடிவடையவுள்ள நிலையில், ஜேர்மன் விஞ்ஞானிகள் சுனாமி மையம் கொண்ட இடத்தை ஆராய்வதற்காக அவ்விடத்தை நோக்கி பயணிக்கின்றனர்.கடலுக்குக் கீழே 23000 அடி ஆழத்தில் கடல் தளத்தில் சுனாமி மையம் கொண்ட இடத்தை நோக்கி ஜேர்மானிய விஞ்ஞானிகளும், ஜப்பானிய ஆராய்ச்சியாளரும் இணைந்து செல்கின்றனர்.


இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான ஜெரால்டு வெபெர் என்பவர் மிரெமென் பல்கலைக்கழகத்தில் கடலின் காலநிலை மாற்றத்தை ஆராயும் ஜேர்மானிய ஆய்வு மையத்தின் இயக்குனர் ஆவார்.இந்த ஆராய்ச்சிக் குழுவினர் தங்களது ஆராய்ச்சிக்காக 18 அடி ஆழ நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்கின்றனர். இந்தச் சிறு கப்பல் ஹான்ஷீ தீவை(பசிபிக் பெருங்கடலில் சுனாமி ஏற்படும் மையப்புள்ளியில் அமைந்துள்ளது) அடைந்த பின்பு, ஆழ்கடலினை படம் எடுக்கின்றது.


இந்த படங்களுடன், ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிடுவர். இதன் பின்பு எதிர்காலத்தில் நில அதிர்ச்சி ஏற்படுவதை அறிந்து கொள்ளும் வகையில், ஏற்கெனவே தோண்டப்பட்ட ஆழ்துளைகளுக்குள் சில கருவிகளை வைக்கும் முயற்சிகளில் இந்த விஞ்ஞானிகள் ஈடுபடுவர்.ஜப்பானில் உள்ள கடல் மற்றும் பூமி அறிவியல் தொழில்நுட்ப மையத்தினைச் சேர்ந்த ஆய்வாளர் ஷீயிச்சி கொதாயிரா கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் நம்மிடம் இருக்கக் கூடிய தொழில்நுட்பத்தையும், கிடைக்கும் தகவல்களையும் வைத்துக் கொண்டு நிலநடுக்கத்தினை முன்கூட்டியே அறிவது மிக மிகக் கடினமான செயலாகும்.


ஆனால் இப்போது நாம் மேற்கொண்டுள்ள இந்த ஆழ் கடல் பயணத்தின் மூலம் கிடைக்கப் பெறும் தகவல்களைப் பயன்படுத்தி ஜப்பானில் ஏன் திரும்பத் திரும்ப பெரிய நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்றார்.ஜப்பானில் தற்போது மிகப்பெரிய அளவில் நில அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதால் விரைவில் பேரழிவை ஏற்படுத்த கூடிய இன்னொரு நில அதிர்ச்சி உண்டாகலாம் என்று விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

புற்றுநோய் ஏற்படுவதன் எதிரொலி: தயாரிப்பு முறையை மாற்ற கொக்ககோலா நிறுவனம் முடிவு!


கொக்ககோலா நிறுவனத்தின் குளிர்பானங்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, அதன் தயாரிப்பு முறையை மாற்றி அமைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.பொதுவாக நாம் அன்றாடம் சுவைத்து பருகும் பல குடிபானங்களிலும், திண்பண்டங்களிலும் காணப்படும் ஒருவகை நிறக்கலவைப் பதார்த்தம் தான் 4மீ எனப்படும் 4மெத்யில் இமிடாசோல் என்ற இராசயனப் பொருள்.


எலிகளில் ஏற்படும் ஒருவகைப் புற்றுநோய்க்கும் இந்த இரசாயனப் பொருட்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவை மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.ஆனால் பொதுவாக கார்சினோஜன் பொருட்கள், அதாவது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் என சில இரசாயனப் பதார்த்தங்களை அமெரிக்காவின் கலிபோர்னியா அரசு பட்டியல்படுத்தியுள்ளது. அந்தப் பட்டியலில் தற்போது 4மெத்யில்இமிடாசோல்ஐயும் சேர்த்துள்ளது.


இதனால் இந்தப் பொருட்கள் காணப்படும் குடிபானங்கள் குறிப்பாக கொக்ககோலா மற்றும் பெப்சி போன்ற பானங்களும் புற்றுநோய் எச்சரிக்கை அறிவித்தலை தாங்கிவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த அறிவித்தலை விஞ்ஞான ரீதியில் உறுதி செய்யப்படாதது என்று சுட்டிக்காட்டியிருக்கின்ற கொக்ககோலா நிறுவனம், அப்படியான எச்சரிக்கையை தாங்கி வருவதை தவிர்ப்பதற்காக அவற்றின் தயாரிப்பு முறையை மாற்றியமைக்குமாறு அதன் தொழிற்சாலைகளுக்கு அறிவித்துள்ளது.


இதேவேளை இந்த புற்றுநோய் சோதனையை மனிதரில் நிகழ்த்தி பார்ப்பதற்கு 1000 கான்களுக்கும் அதிகமாக கொக்ககோலா பருகியிருக்க வேண்டும் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு நிறுவனம் கூறியுள்ளது.இப்போதைக்கு கலிபோர்னியாவில் தமது தயாரிப்புகளில் மாற்றம் கொண்டு வந்திருப்பதாகக் கூறியிருக்கும் கொக்ககோலா மற்றும் பெப்சிகோ நிறுவனங்கள், அவற்றின் மற்ற ஆலைகளிலும் தயாரிப்பு முறையில் மாற்றம் வரும் என்று அறிவித்துள்ளன.இதேவேளை புதிய மாற்றத்தால் தமது தயாரிப்புகளின் சுவையில் எந்த வித்தியாசமும் இருக்காது என்றும் இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பு!


பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.அவ்வாறு கட்டுப்பாடுகளை மீறும் பட்சத்தில் தலிபான்களின் தாக்குதலுக்கு ஆளாகுகின்றனர்.பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்வாபியில் கல்லூரியில் தலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் பெண்கள் கல்லூரி தரைமட்டமாக்கப்பட்டது, அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் இழப்பும் ஏற்படவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் தீவிரவாதிகள் கல்லூரி கட்டிடத்துக்கு வெளியே வெடிகுண்டை வைத்து வெடிக்க செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

'ஒரு பிள்ளை பருவத்தின் கற்பனை நிஜமாகப்போகும் தருணம்' : ஜேம்ஸ் கெமரூனின் புதிய முயற்சி!


அவதார் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் தனது புதிய 3D டாக்குமெண்டரிக்காக, பூமியின் உட்புறமாக மிக ஆழமான பகுதிக்கு செல்ல தயாராகிவருகிறார்.இதற்காக அவர் தெரிவு செய்திருக்கும் இடம் ஜப்பானுக்கு அருகில் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்திருக்கும் Marizana Trench கடல் பகுதி. மனிதன் செல்லக்கூடியளவு உலகின் மிக ஆழமான கடல் பகுதியாக இது இணங்காணப்பட்டுள்ளது.  இக்கடல் பரப்பு சுமார் 11,035 மீற்றர் (6 மைல்கள்) ஆழமுடையது. எவரெஸ்ட் சிகரத்தை இங்கு முழுதாக மூழ்கடித்து விடலாம்.


1960ம் ஆண்டு Jaques Piccard, Don Walsh எனும் இரு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே Marizana Trench இன் அடித்தட்டு பகுதிவரை  வெற்றிகரமாக சென்று வந்துள்ளனர். சுமார் 52 வருடங்களுக்கு பிறகு ஜேம்ஸ் கெமரூன் இப்பகுதிக்கு செல்ல போகிறார்.


எனினும் இதுவரை எந்தவொரு நீர்மூழ்கி கப்பல்களும் (Submersible) கெமரூனின் துணிச்சலான சாகச பயணத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த தயக்கம் காட்டியதால், கெமரூனே தனது குழுவினரை கொண்டு சிறப்பு Submersible ஐ, உருவாக்கியிருக்கிறார்.கைகள் கூட அசைக்க முடியாதளவு நெருக்கான சோலோ கப்பலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த Submersible மூலம், கெமரூன் பபுவா நியூகினியா பகுதியில் 5 மைல் ஆழத்திற்கு ஒத்திகை பயணமும் மேற்கொண்டு திரும்பியுள்ளார். 'உலகின் மிக ஆழமான கடல் பகுதியில் டைவிங் செய்ய வேண்டுமென்பது எனது சிறியவது கனவு. என்னை பொறுத்தவரை, ஒரு பிள்ளைப்பருவத்தின் கற்பனை, உண்மையான தேடலை நோக்கி செல்லும் பயணமிது' என்கிறார் கெமரூன். அடுத்த வாரத்தில், அவருடைய கனவு பயணம் நிஜமாக போகிறது. 



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, March 9, 2012

ஆரோக்கியமா​ன எலும்பு, தசைகளை உருவாக்க உதவும் கொக்கோ!


கொக்கோவானது ஆரோக்கியமான எலும்புகளையும், தசைகளையும் உற்பத்தி செய்வதற்கு பெரிதும் உதவி புரிவதாக புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.அத்துடன் இதயம் சம்மந்தமான நோய்களிலிருந்தும், நீரிழிவு நோய்களிலிருந்தும் பாதுகாப்பதாகவும் மேலும் கண்டறியப்பட்டுள்ளது.


இவை உடைந்த எலும்புகளிலுள்ள கலங்களில் காணப்படும் மைரோகொன்ரியா என்ற பதார்த்தத்திற்கு அதிகளவு சக்தியை வழங்கி வளர்ச்சியடைய செய்வதன் மூலம் திடமான எலும்புகளை உருவாக்குகின்றன.அதே போன்று இரசாயன சக்தியை கொண்ட குறித்த கலங்களின் செயற்பாடு மூலம் மந்தமான இதயத்துடிப்பை அதிகரிக்க செய்கின்றது.மேற்குறிப்பிட்ட குறைபாடுகளை உடையவர்கள் நாள்தோறும் 100 மில்லிகிராம் கொக்கோ வீதம் மூன்று மாதங்களிற்கு தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அக்குறைபாடுகளிலிருந்து விடுதலை கிடைக்கின்றது எனவும் குறித்த ஆராய்ச்சியிலிருந்து தெரியவந்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Chat for Google: நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு!


இணையத்தில் பெரும்பாலான நபர்கள் உபயோகிப்பது ஜிமெயில் தான். அதே போன்று கூகுள் பிளஸ் தளமும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.இவை இரண்டிலும் உள்ள ஒரு பொதுவான வசதி நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் chat வசதியாகும். இதுவரை இந்த தளங்களுக்கு சென்று தான் அதில் ஓன்லைனில் உள்ள நண்பர்களிடம் சாட் செய்து வந்தோம்.


இனி நீங்கள் சாட் செய்ய அந்தந்த தளங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. அந்த தளங்களை திறக்காமலே ஜிமெயில் மற்றும் கூகுள்+ நண்பர்களுடன் சாட் செய்யலாம்.குரோம் பயனாளர்கள் மட்டுமே இந்த வசதியை பெற முடியும்.முதலில் கீழே உள்ள லிங்கில் க்ளிக் செய்து Chat for Google என்ற நீட்சியை நீட்சியை தரவிறக்கம் செய்து உங்கள் உலவியில் நிறுவிக் கொள்ளுங்கள்.


நீட்சி உங்கள் உலவியில் இணைந்தவுடன் குரோம் பார் அல்லது system tray பகுதியில் உள்ள ஐகானை க்ளிக் செய்யவும்.நீங்கள் ஏற்கனவே ஏதேனும் கூகுள் கணக்கில் நுழைந்து இருந்தால் அந்த கணக்கில் உள்ள நண்பர்களை காட்டும். இல்லை எனில் கூகுள் கணக்கில் நுழைய Sign In வசதியை காட்டும்.அதில் நுழைந்து உங்கள் விருப்பமானவர்களுடன் அரட்டை அடித்து மகிழலாம்.
தரவிறக்க சுட்டி.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உடலை கெடுக்கும் ஐஸ்கிரீம்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!


மது, கோகைன் போதை பொருள் போல ஐஸ்கிரீமும் உங்களை அடிமையாக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.உணவு பழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக அமெரிக்காவின் ஆரிகன் மாகாண ஆய்வு கழக பேராசிரியர் கைல் பர்கர் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடந்தது.


இதுபற்றி பர்கர் கூறியதாவது: பலர் மது குடிக்கிறார்கள், சிலர் மட்டுமே அடிமையாகிறார்கள். இந்த வேறுபாட்டுக்கு காரணம் மூளையின் திருப்தித்தன்மை.ஆரம்பத்தில் கொஞ்சம் குடித்ததுமே போதும் என்ற உணர்வு ஏற்பட்டுவிடும். நாளடைவில் சற்று அதிகம் குடித்தால்தான் இந்த திருப்தி உணர்வு ஏற்படும்.இதுதான் லிமிட் என்று தீர்மானித்து நிறுத்துபவர்கள் தப்பிவிடுகின்றனர். அந்த திருப்தித்தன்மையுடன் மல்லுக்கட்டுபவர்கள் மேலும் மேலும் குடித்து அடிமையாகின்றனர்.மது, கோகைன் மட்டுமல்ல தொடர்ந்து சாப்பிட்டால் ஐஸ்கிரீமுக்கும் அடிமையாகிவிடும் அபாயம் இருக்கிறது. கொழுப்பு சத்து, சர்க்கரை அதிகம் உள்ள ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருள்களை தொடர்ச்சியாக சாப்பிடும் போது, மூளையின் திருப்தித்தன்மையில் மாற்றம் உண்டாகிறது.


ஐஸ்கிரீமை மூளை அடிக்கடி எதிர்பார்க்கத் தொடங்கும். இது ஏறக்குறைய கோகைன் போன்ற போதை பொருளுக்கு அடிமையானவரின் மனநிலை ஆகும் என்று கூறினார்.தொடர்ச்சியாக ஜங்க் புட் சாப்பிடுவதால் அதற்கு அடிமையாகும் ஆபத்து இருப்பதாக ஏற்கனவே நடந்த ஆராய்ச்சிகளில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் பால்!


ஒவ்வொரு மனிதனுக்கும் மூளை வளர்ச்சியை அதிகரிக்க பால் மிகுந்த அவசியம் என புதிய ஆய்வறிக்கை ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் இணைந்து இளமைப்பருவம் உடைய 1000 பேரை வைத்து மேற்கொண்ட இந்த ஆய்வின் போது தொடர்ச்சியாக பால், சீஸ், யோகட் போன்ற பாலுணவுகளை உள்ளெடுப்பதனால் சிறந்த மனநிலைக்கு துணையாக இருப்பதுடன் சிறந்த மூளைவளர்ச்சிக்கும் பயன் தருவதாக கண்டறிந்துள்ளனர்.


இதே போன்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பிறிதொரு ஆய்வின் மூலம் கொழுப்பு அதிகரிப்பதனால் அல்சீமர் நோயினால் அவதிப்பட நேரிடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.இதற்காக 104 வயதானவர்களை பயன்படுத்திய குறித்த ஆராய்ச்சியாளர்கள் குழு கொழுப்பினால் தீமைகள் காணப்படுகின்ற போதிலும் ஒமேகா - 3 வகையை சேர்ந்த கொழுப்பு அவசியமானது, உடல் ஆரோக்கியத்திற்கு அவசிமானது எனவும், இது மீன் உணவுகளில் அதிகம் காணப்படுவதாகவும் பரிந்துரைத்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'ஐ பேட்' இனை வெளியிட்டது அப்பிள்!


அப்பிள் தனது அடுத்த 'ஐ பேட்' டெப்லட்டினை நேற்று சென் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தியது
ஆரம்பத்தில் இதன் பெயர் 'ஐ பேட் 3' அல்லது ஐ பேட் எச்.டி ஆக இருக்குமெனக் கூறப்பட்டது.எனினும் இது 'ஐ பேட்' என பெயரிடப்பட்டுள்ளமையானது பலருக்கும் வியப்பாக இருந்தது .காரணம் அப்பிளின் முதல் டெப்லடின் பெயரும் 'ஐ பேட்' ஆகும்சில சாதனங்கள் வெளியாகிய பின்னரே ஆர்வத்தை ஏற்படுத்தும் .ஆனால் சில தயாரிப்புகள் வெளியாவதற்கு முன்னரே ஆர்வத்தை ஏற்படுத்தும் அப்பிளின் தயாரிப்புகளும் அவ்வாறானதே.


அப்பிள் தயாரிப்புகள் வெளியாவதற்கு முன்னரே அது தொடர்பில் பல்வேறு வதந்திகள் வெளியாகும்.கடைசியாக வெளியாகிய ' ஐ பேட்' உம் இதற்கு விதிவிலக்கல்ல.ஐ பேட் வெளியாகும் முன்னரே அது தொடர்பில் பல்வேறு செய்திகள் கசிந்தன.எனினும் தற்போது வெளியாகியுள்ள ஐ பேட்டுடன், அச்செய்திகளை ஒப்பிடும் போது சில உண்மையாகவுள்ளன.அப்பிளின் முன்னைய வெளியீடுகளான ஐ பேட், மற்றும் ஐ பேட் 2 வரிசையிலேயே இதுவும் வெளியாகியுள்ளது.


முன்னைய மாதிரிகளின் தோற்றத்துடன் ஒப்பிடும் போது பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் காணப்படவில்லை.எனினும் இதில் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தது ''ஐ பேட் "டின் திரையாகும்.அப்பிளின் ஐ போன் கொண்டுள்ள ' ரெட்டினா' வகை திரையையே இதுவும் கொண்டுள்ளது. இதன் ரெசலூசன் 2048 x 1536 என்பதுடன் இத்திரையின் படவணு அடர்த்தி (Pixel density) 264 ஆகும்.


இது தற்போது சந்தையில் உள்ள பல எச்.டி. தொலைக்காட்சிகளை விடத் துல்லியமானதாகும்.இது Dual-core 1 GHz Cortex-A9 புரசசரின் மூலம் இயங்குகின்றது.இதனுடன் 1080 p வீடியோ ரெக்கோர்டிங் செய்யக்கூடிய 5 மெகா பிக்ஸல் கெமராவையும் கொண்டுள்ளது.
இதன் மற்றைய தொழில்நுட்ப அம்சங்கள் சில.


Apple A5X Chipset
Dual-core 1 GHz Cortex-A9 CPU
PowerVR SGX543MP4 GPU
5 MP, 2592 x 1944 pixels, autofocus Touch focus, geo-tagging, HDR, face detection Camea
HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 Mbps, LTE, 73 Mbps; Rev. A, up to 3.1 Mbps


இவை 16 ஜி.பி, 32 ஜி.பி, 64 ஜி.பி உள்ளக மெமரியைக் கொண்ட புதிய ஐ பேட்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன.இவ்வருட ஜனவரி மாதம் வரை சுமார் 55 மில்லியன் ஐ பேட்களை அப்பிள் விற்பனை செய்துள்ளது. அதன் முன்னைய டெப்லட்களுக்கும் சந்தையில் நல்ல கேள்வி நிலவுகின்றது.இந்நிலையில் தற்போது புதிய 'ஐ பேட்' டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது விற்பனைக்கு வர இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.எனவே பொறுத்திருந்து பார்ப்போம், இது சந்தையில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றதா என!
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF