Thursday, February 24, 2011

தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு காரணம் என்ன: விஞ்ஞானிகளின் பதில்கள்.


தூக்கத்தில் நடக்கும் நோயை சோம்னாம்புலிஸம் என்று அழைக்கின்றனர். இதற்கு என்ன காரணம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
குரோமோசோம் குறைபாடே இந்நோய்க்குக் காரணம் என்று கூறுகின்றனர். சிலரை தூக்கத்தில் நடக்க வைக்கும் "மரபணு சங்கேதக் குறியீட்டை" அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த சர்வதேச ஆய்வுக் குழு தூக்கத்தின் போது ஒருவரின் இது போன்ற நடத்தைக்கு குரோமோசோமில் ஏற்பட்டிருக்கும் பிழையே காரணம் என்று உறுதியாகக் கூறுகிறது.
ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையினரை அவர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது குரோமோசோமின் ஒரு பகுதியில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தக் குறைபாடான டி.என்.ஏ யின் ஒரு பகுதி அடுத்த தலைமுறைக்குப் போனால் போதும். அது தூக்கத்தில் நடக்கும் வியாதியை ஏற்படுத்திவிடும்.
தற்போது அந்த மரபணு சங்கேதக் குறியீட்டுப் பகுதியை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தி இருக்கிறார்கள். அதன்மூலம் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள், கிறிஸ்டினா கர்னட் என்பவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்கள்.
அவர்கள் பரம்பரையாக தூக்கத்தில் நடக்கும் வியாதி பாதிப்பு இருந்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஹன்னாவுக்குக் கூட குறிப்பிட்ட வியாதிப் பாதிப்பு இருந்தது. அவள் தூக்கத்திலேயே நடந்து வீட்டை விட்டு வெளியேறி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தாள்.
அந்தக் குடும்பத்தினரின் உமிழ் நீர் மாதிரிகளை ஆராய்ந்ததில் குரோமோசோம் 20 ன் சங்கேதக் குறியீட்டுப் பிழைதான் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. பெற்றோருக்கு இந்த ஜீன் இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கும் அது செல்லும் வாய்ப்பு 50 சதவீதம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தங்களின் கண்டுபிடிப்பு தூக்கத்தில் நடக்கும் வியாதியைக் குணப்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் அந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அதிவிசேட கமராக்களினால் எடுக்கப்பட்ட தத்ரூபமான துப்பாக்கிச் சூட்டுக் காட்சிகள்! அசத்திய படப்பிடிப்புக் கலைஞர்

படப்பிடிப்பு ஒரு கலை. வெவ்வேறு பொருள்களை வெவ்வேறு கோணங்களில் படம் பிடிப்பது பற்றி நிறைய கேள்விபட்டுள்ளோம். இங்கே மைக்ரோவேவ் பொறியியலாளரான 55 வயதான அலன்செய்லரின் கற்பனையும் முயற்சியும் முற்றிலும் வித்தியாசமானவை.பழங்களையும் காய்கறிகளையும் இலக்கு வைத்து குறிபார்த்து சுடுகிறார். துப்பாக்கித் தோட்டா அதை ஊடுருவிச் செல்லும்போது அதில் ஏற்படும் மாற்றங்களையும், விகாரங்களையும் தத்ரூபமாகப் படம் பிடிக்கின்றார். இதோ அவ்வாறு எடுக்கப்பட்ட சில காட்சிகள்....




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

54 கோள்களில் மனித வாசனை.


தினமும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்றுவிடுகிற நமது சூரியன் போல சின்னதும் பெரியதுமாய் ஒரு லட்சம் கோடி முதல் 4 லட்சம் கோடி நட்சத்திரங்கள் கொண்ட பிரமாண்ட ஏரியா ‘பால்வழித் திரள்’ (கேலக்சி) எனப்படுகிறது. மிகமிக அதிக தொலைவு என்பதால் இதன் தொலைவுகள் ‘ஒளி ஆண்டு’ அடிப்படையில் அளக்கப்படுகிறது. ஒளியின் வேகத்தில் அதாவது. கண்ணிமைக்கும் நேரத்தில் 2.99 லட்சம் கி.மீ. வேகத்தில் போனால்கூட கேலக்சியின் இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் போவதற்கு ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும்.

அவ்ளோ பெரிசு. இந்த கேலக்சி ‘ஏரியாவில்’ பூமி, புதன், சனி போல 5 ஆயிரம் கோடி கோள்கள் இருப்பதாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றில் சுமார் 50 கோடி கோள்களில் அதிக வெப்பம் மற்றும் குளிர் இல்லாத, மனிதர்கள் உயிர்வாழ உகந்த சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையம் (நாசா) அனுப்பிய கெப்ளர் விண்கலம் அனுப்பிய புகைப்படங்களில் இருந்து இத்தகவல்கள் தெரியவந்துள்ளது.

‘‘கெப்ளர் விண்கலம் இதுவரை அனுப்பிய லட்சக்கணக்கான புகைப்படங்களை ஆராய்ந்ததில் 1235 கோள்கள் மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கின்றன. 54 கோள்களில் ஏற்கனவே மனிதர்கள், உயிர்கள் இருந்திருக்கக் கூடும். கோள்களில் மனித உயிர்கள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. அண்ட வெளியில் உள்ள கோள்கள் குறித்து காஸ்மிக் கணக்கெடுப்பு நடத்துவதே ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம்’’ என்று கெப்ளர் விண்கலத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் வில்லியம் பெரூக்கி கூறியுள்ளார். மேலும் பல புதிய கிரகங்கள், மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய தொடர் ஆய்வில் தெரியவரும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இலங்கை கையடக்க தொலைபேசி எடிசலாட் வலையமைப்பு மூலம் ஸ்கைப் நண்பர்களை அழையுங்கள்.

Per minute package
இலங்கை கையடக்க தொலைபேசி வழங்குனர்களில் ஒன்றான எடிசலாட்(Etisalat) நிறுவனம் தற்போது புதிய சேவை ஒன்றினை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் பூராகவும் காணப்படும் ஸ்கைப் பாவனையாளர்களினை எடிசலாட் மூலம் இணைக்கும் சேவையே இது.
skypebanner

உலகம் பூராகவும் காணப்படும் ஸ்கைப் நண்பர்களுக்கு 3 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தில் எடிசலாட்டின் இந்த புதிய சேவையின் மூலம் அழைப்பினை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அழைப்பினை மேற்கொள்ள உங்கள் எடிசலாட் தொலைபேசியினூடாக நீங்கள் தொடர்புகொள்ள வேண்டியவரின் ஸ்கைப் பெயரினை 4545 எனும் இலக்கத்திற்கு SMS செய்தால் போதும்.
அவ்வாறு SMS இனை அனுப்பியதன் பின்னர் எமக்கு வழங்கப்படும் இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு 3 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தில் உங்கல் ஸ்கைப் நண்பர்களுடன் பேசலாம்.
இவ்வாறு நீங்கள் அழைப்பினை மேற்கொள்ள வேண்டுமாயின் குறித்த அந்த ஸ்கைப் பாவனையாளர் etisalatlk எனும் பெயரினை தனது contact list ல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது ஸ்கைப் அப்ளிகேசனில் காணப்படும் Privacy settings எனும் பகுதியில் Allow any one to contact me என்பதை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
எடிசலாட் நிறுவனத்தின் இந்தச் சேவையானது மிகப் பெரும் வரவேற்பை இலங்கையில் பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை.
skypebanner
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றைய செய்திகள்.

தெருக்களில் சிதறி கிடக்கும் பிணங்கள்; பதவி விலக கடாபி திட்டவட்ட மறுப்பு.

லிபியா கலவரத்தில் 2 ஆயிரம் பேர் பலியானதை தொடர்ந்து தெருக்களில் பிணங்கள் சிதறி கிடக்கின்றன. லிபியாவில் அதிபர் கடாபி பதவி விலக வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கும்படி ராணுவத்துக்கும், போலீசுக்கும் கடாபி உத்தரவிட்டுள்ளார்.


இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது ராணுவமும், போலீசும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. தொடக்கத்தில் பென்காஷி, டிரிபோலி ஆகிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பென்காஷியில் போராட்டத்தில் பலியானவர்களின் இறுதி ஊர்வலம் நடந்தது. அவர்கள் மீது ஹெலிகாப்டரில் பறந்தபடி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் பலியாகினர்.


அதை தொடர்ந்து டிரிபோலியில் போராட்டக்காரர்கள் மீது போர் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டு வீசப்பட்டது. இதிலும் எராளமானோர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்களில் இதுவரை 233 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாவு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குவதில் ராணுவமும், போலீசும் தீவிரமாக உள்ளது. ரோட்டில் கூடுபவர்களை அடித்து உதைத்து துப்பாக்கியால் சுட்டும் வருகின்றனர். எனவே ரோட்டில் கிடக்கும் பிணங்களை தூக்கி சென்று இறுதி காரியங்கள் நடத்த மக்கள் அஞ்சுகின்றனர். இதனால் தெருக்களில் கேட்பாரற்று பிணங்கள் சிதறி கிடந்தன. இருந்தும் போராட்டம் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது.

இதற்கிடையே அதிபர் கடாபி வென்சுலாவிற்கு தப்பி ஓடி விட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இதை அந்நாடு மறுத்தது. இந்த நிலையில் அதிபர் கடாபி டெலிவிஷனில் தோன்றி பேசினார். அப்போது நான் எங்கும் தப்பி ஓடவில்லை. லிபியாவில் தான் இருப்பேன். எனக்கு எதிராக சிலர் வதந்தியை பரப்புகின்றனர். அதை மக்கள் நம்ப வேண்டாம். போராட்டத்தைகை விட வேண்டும். இல்லாவிடில் லிபியா தெருக்களில் மேலும் ஏராளமானவர்களின் பிணங்களை சேகரிக்க வேண்டியது இருக்கும். நாட்டுக்காக உயிர் துறக்கும் தியாகியாக இருப்பேனே தவிர பதவி விலகவோ நாட்டை விட்டோ ஓட மாட்டேன் என்று பேசினார்.







தம்புள்ளை சந்தையில் குவிந்த யாழ்ப்பாண மரக்கறிகள் � எகிறிய விலைகள் சரிந்தன.

தம்புள்ளை சந்தையில் குவிந்த யாழ்ப்பாண மரக்கறிகளால் சிறிலங்காவின் தென்பகுதியில் மரக்கறிகளின் விலைகள் திடீரெனச் சரிவடைந்துள்ளன. அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் போன்ற சீரற்ற காலநிலையால் சிறிலங்காவில் மரக்கறிகளின் விலை எகிறி வந்தது.

இந்தநிலையில் நேற்று தம்புள்ளை மரக்கறிச் சந்தைக்கு பெருமளவு யாழ்ப்பாண மரக்கறிகள் எடுத்து வரப்பட்டன. ஒரு இலட்சம் கிலோ பீற்ரூட், 50,000 கிலோவுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு, ஒரு இலட்சம் கிலோ வெங்காயம் உள்ளிட்ட பெருமளவு யாழ்ப்பாண மரக்கறிகள் தம்புள்ளைச் சந்தைக்கு எடுத்து வரப்பட்டன.

இதன்காரணமாக தம்புள்ளை சந்தையில் 120 ரூபாவுக்கு விற்கப்பட்ட பீற்ரூட் 45 ரூபாவாகவும், 300 ரூபாவுக்கு விற்கப்பட்ட வெங்காயம் 100 ரூபாவாகவும், உருளைக்கிழங்கு 55 ரூபாவாகவும் சரிந்தது.யாழ்ப்பாணத்தில் இருந்து பெருமளவு பச்சைமிளகாய் வந்ததால் அதன் விலையும் 200 - 250 ரூபா வரை குறைந்தது.

தம்புள்ளை சந்தையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு உருளைக்கிழங்கு உள்ளிட்ட மரக்கறிகள் முன்னர் எடுத்து வரப்பட்டன. ஆனால் இப்போது யாழ்ப்பாண உருளைக்கிழக்கு போன்ற மரக்கறிகள் தம்புள்ளை சந்தையின் விலையை குறைக்கும் அளவுக்கு தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளன.



கொலைக் குற்றவாளியை விடுவிக்க வேண்டும்: அமெரிக்காவிடம் ஜேர்மனி நிபந்தனை.

கொலைக் குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனையை பெற்றுள்ள தமது நாட்டு நபரை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்க நிர்வாகத்தை ஜேர்மனி வலியுறுத்தி வருகிறது.ஜேர்மனியைச் சேர்ந்த நபர் ஜென்ஸ் சோரிங். இவர் கடந்த 1985 ம் ஆண்டு தமது அமெரிக்க பெண் நண்பிக்கு அவளது பெற்றோரை கொலை செய்ய உதவினார் என குற்றம் சாட்டப்பட்டது. அப்போது அவருக்கு 18 வயது ஆகும்.
ஜென்ஸ் சோரிங் மீதான குற்றச்சாற்று நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு விர்ஜினியா சிறையில் அடைக்கப்பட்டார். அவரை மனித உரிமை ஆணையம் மார்கஸ் லோனிங் சென்று பார்வையிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில்,"முன்னாள் ராஜிய அதிகாரியின் 44 வயது மகன் ஜென் சோரிங்கை சந்தித்தேன். அவர் நாடு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது" என அவர் கூறினார். அமெரிக்க பெண் நண்பியின் பெற்றோர் கொலை வழக்கில் தாம் நிரபராதி என ஜென்ஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஜென்ஸ் சோரிங்கிற்கு மன்னிப்பு அளிக்கவோ அல்லது அவரது தண்டனையை ரத்து செய்யவோ அமெரிக்க நிர்வாகம் மறுத்து வருகிறது. ஜென்ஸ் சோரிங் விடயத்தில் எங்களால் சிறிய அளவே செயல்பட முடிந்துள்ளது.கடந்த 25 ஆண்டுகளாக சோரிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தரப்பட்ட தண்டனையை நீண்ட காலம் அனுபவித்துள்ளார் என்றும் லோனிங் கூறினார்.
லிபியாவுக்கு தடை விதிக்க வேண்டும்: சர்கோசி.
மக்கள் போராட்டம் வெடித்துள்ள லிபியாவுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும் ஜரோப்பிய ஒன்றியம் ரத்து செய்ய வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி கூறியுள்ளார்.
லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக மோமர் கடாபி சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. கடாபியின் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கு ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 200 க்கும் மேற்பட்டவர்கள் உயரிழந்துள்ளனர்.
ஜனநாயகத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துவதை உறுப்பினர் நாடுகள் கண்டிப்பதுடன் லிபியா மீது தடைவிதிக்க வேண்டும் என சர்கோசி வலியுறுத்தியுள்ளார். லிபியாவில் கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக உறுதியான தடை நடவடிக்கையை ஜரோப்பிய நாடுகள் விரைவாக எடுக்க வேண்டும் எனவும் சர்கோசி தமது கேபினட் கூட்டத்தில் தெரிவித்தார்.
லிபியாவில் நடைபெறும் தாக்குதலை சர்வதேச சமூகம் பார்வையாளராக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கூடாது. லிபியாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என சர்கோசி கூறினார். எண்ணெய் வளம் மிக்க வடக்கு ஆப்பரிக்க தேசமான லிபியாவில் பெப்ரவரி 15 ம் திகதி முதல் மக்கள் ஜனநாயகம் கோரி போராட்டம் நடத்துகிறார்கள்.கடந்த 10 நாட்களில் 111 வீர்ர்கள் உள்பட 300 பேர் இறந்துள்ளதாக லிபியா அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூயஸ் கால்வாய்: தனது பலத்தைக் காட்டுவதாக ஈரான்.
தனது சக்தியை வெளிப்படுத்துவதன் ஒரு பகுதியாகத் தான் ஈரானின் போர்க் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து சென்றது என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கவலை தெரிவித்துள்ளார்.
ஈரானின் இரு போர் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து மத்தியத் தரைக் கடல் வழியாக சிரியா சென்றது. ஈரானின் போர் கப்பல்கள் 1979 ஆம் ஆண்டு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக்கு பிறகு குறைந்த காலம் கடந்து செல்ல எகிப்து அனுமதியளித்து உள்ளதாக ஈரானின் தூதரக பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கிறார்.
இதனைக் குறித்து தனது கேபினட் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, ஈரான் தனது சக்தியை வெளிப்படுத்துவதன் ஒரு பகுதியாகத் தான் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து சென்றது என கவலை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்தர் லிபர்மன், ஈரானின் இச்செயல் கோபத்தை தூண்டுவதாகும் என தெரிவித்துள்ளார். எகிப்தில் சமீபத்தில் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் வெளியேற்றப்பட்டதில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் பெரும் பங்கு வகித்தது.
இவ்வியக்கம் ஈரானுடன் நெருக்கமானது. எனவே இது நிகழ்ந்திருக்கலாம் என இஸ்ரேலிய அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும் இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி‌த்தொடர்பாளர் பிலிப் குரோவ்லே கூறுகையில்,"இதை அத்து மீறிய செயலாகவே கருதுகிறோம். இதனால் அக்கப்பல்கள் எங்கெல்லாம் செல்கின்றன என்பதை எச்சரிக்கையோடு கவனித்து வருகிறோம்" என்றார்.
புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு: பஹ்ரைன் மன்னர்.
பஹ்ரைனில் மன்னருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாக மன்னர் அறிவித்துள்ளார்.இந்த நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்றுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள வளமான பஹ்ரைனில் மன்னருக்கு எதிரான போராட்டத்தைக் குறைக்கும் முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளின் படி நேற்று 50 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் கடந்தாண்டு அக்டோபரில் சட்ட விரோத அமைப்பு ஒன்றை நிறுவி அதன் மூலம் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்து தவறான தகவலை பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 25 ஷியா பிரிவினரும் அடங்குவர்.
தொடர்ந்து "அல் ஹக்" என்ற எதிர்க்கட்சியின் தலைவர்களான ஹசன் முஷைமா மற்றும் ஷியா முஸ்லிம் அறிஞர் முகமது அல் மொக்தாத் இருவருக்கும் மன்னர் மன்னிப்பு அளித்துள்ளார். இவர்களில் முஷைமா தற்போது லண்டனில் உள்ளார். நேற்று முன்தினம் இவர் நாடு திரும்பி விட்டதாக செய்திகள் வெளியாயின. எனினும் அவர் இன்னும் லண்டனில் இருந்து பஹ்ரைனுக்கு வரவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.
பஹ்ரைனின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி,"பஹ்ரைனில் பேச்சு வார்த்தைக்கான அழைப்பு, அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய நடவடிக்கைகள் அந்நாட்டு மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு சாதகமானவை" என்று கூறியுள்ளார்.
எனினும் அல் வெபாக் கட்சியைச் சேர்ந்த இப்ராகிம் மட்டார் இது பற்றி கூறுகையில்,"இது ஒரு நல்ல நடவடிக்கை தான். எனினும் இன்னும் பலர் சிறையில் உள்ளனர். அவர்களையும் விடுவிக்க வேண்டும். மக்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும். முக்கியமாக உண்மையான அரசியல் சீர்திருத்தமான மன்னர் தலைமையிலான அரசியல் சாசன ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அதன் பின் தான் பேச்சுவார்த்தை சாத்தியம்" என்று தெரிவித்துள்ளார்.
பாப் பாடகிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய கடாபி மகன்.
லிபியாவில் போராட்டங்கள் வலுத்து வரும் இந்நிலையில், கடாபி மகன் பாப் பாடகிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய விவகாரம் அம்பலமாகியுள்ளது.
லிபியாவில் 41 ஆண்டுகள் அதிபராக இருந்த மும்மர் கடாபி பதவி விலக கோரி நாடு முழுவதும் பொது மக்கள் நடத்தி வரும் கிளர்ச்சி தீவீரம் அடைந்து வந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அரசு கருவூலத்தில் மோசடி செய்திருப்பதும், அரசு கஜானா‌வை ஊதாரித்தனமாக செலவு செய்திருப்பதும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணம் மூலம் அம்பலமாகியுள்ளது.
அதில் கடாபியின் மகன்களில் ஒருவரான சையீப் கடாபி தனது பிறந்த நாளன்று அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் மரியாக் கேரியினை அணுகி பாப் பாடல் இசைகேட்டுள்ளார். இதற்காக ரூ.10 லட்சம் பரிசாக வாரி வழங்கியுள்ளதாக விக்கிலீக்ஸ் ஆவணம் ‌வெளியிட்டுள்ளது.
இது குறித்த நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கடாபியின் 41 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சியில் அவரது குடும்பத்தினர் அரசு பண‌த்தை ஊதாரித்தனமாக செலவழித்துள்ளனர். கடந்த ஆண்டு ‌ஹெய்டி பூம்பம் ஏற்பட்டது. அப்போது அந்நாட்டிற்கு நிதி வழங்குவதாக அறிவித்தார் கடாபி. அதற்காக சர்வதேச கடாபி அறக்கட்டளை மேம்பாடு நிதியகம் ஒன்று அமைத்து கோடிக்கணக்கில் வசூலித்தார்.
ஆனால் நிதியினை முறையாக வழங்கவில்லை. இந்நிலையில் இவரது இளைய மகன் சையீப் கடாபி தனது பிறந்த நாளன்று கரீபியன் தீவில் நடந்த ஆடம்பர விழாவில் பிரபல அமெரிக்க பாப்பாடகி மரியாக் கேரியினை வரவ‌ழைத்து பாடச்சொல்லி மொத்தம் 4 பாடல்களுக்கு ரூ.10 லட்சம் பரிசாக வாரி வழங்கியுள்ளார். இவ்வாறு விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணம் குறித்து அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மரண தண்டனையை வரவேற்கும் இலங்கை மக்கள்!

இலங்கையில் மரண தண்டனை மீண்டும் அமுலுக்கு வருகின்றமையை நாட்டு மக்களில் 88 சதவீதமானவர்கள் விரும்புகின்றனர் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்து உள்ளது. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரிய வந்துள்ளது என்று இவ்வூடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மரண தண்டனை அமுல்படுத்தப்படாமல் இருப்பதால் 334 மரண தண்டனைக் கைதிகள் பல்லாண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் சிலர் ஆயுள் காலம் முழுவதும் சிறை வைக்கப்படுகின்றனர். படுகொலை, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களைப் புரிந்தவர்கள். 1815 ஆம் ஆண்டு பிரித்தானியர்களால் இலங்கைக்கு மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டது. 

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க மரண தண்டனையை 1956 ஆம் ஆண்டு இல்லாமல் செய்தார். இவர் 1959 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அதன் பின் மரண தண்டனை மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. .இறுதியாக 1976 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

லிபியாவின் 2 முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!

லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமாகி இருக்கிறது. தலைநகரம் திரிபோலியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டு நின்று போராடி வருகின்றனர். அவர்கள் மீது அதிபர் கடாபி ராணுவத்தை ஏவிவிட்டு உள்ளார். ஆனாலும் பொது மக்கள் பயப்படாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

இதை தவிர முக்கிய நகரமான மிஸ்ரதா, சப்ரதா, பென்காசி ஆகிய நகரங்களிலும் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது.இதில் மிஸ்ரதா நகரை போராட்டக்காரர்கள் தங்கள் பிடியில் கொண்டு வந்து உள்ளனர். அங்கிருந்த அரசு படைகள், மற்றும் போலீசார் வெளியேறி விட்டனர். 

அரசு அலுவலகங்கள் அனைத்தும் பொது மக்கள் கட்டுப் பாட்டில் உள்ளது. இதே போல இன்னொரு முக்கிய நகரமான பென்காசியையும் பொது மக்கள் பிடித்தனர். அவர்கள் மீது ராணுவம் விமானத்தில் பறந்தபடி குண்டுகளை வீசி வருகிறது.பதவி விலக மறுக்கும் அதிபர் கடாபி ராணுவ அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கருதுகிறார். எனவே சொந்த நாட்டு மக்கள் என்றும் பாராமல் அவர்களை ராணுவம் மூலம் கொன்று குவித்து வருகிறார். 

இதனால் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆனால் இப்போது பல இடங்களில் பொது மக்ககள் மீது தாக்குதல் நடத்த ராணுவ வீரர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.விமானப் படையினரும் குண்டு வீச மறுக்கின்றனர். பென்காசி நகரில் போராட்டக்காரர்கள் மீது குண்டு வீசுவதற்கு 2 போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இந்த விமானத்தை ஓட்டிய 2 பைலட்டுகளும் குண்டு வீச மறுத்து விட்டனர். 

மேலும் அவர்கள் இருவரும் நடுவானில் பறந்த போது விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்துவிட்டு விமானத்தை கீழே விழ செய்தனர். இதில் 2 விமானங்களும் கீழே விழுந்து நொறுங்கின. அந்த பைலட்டுகளில் ஒருவர் பெயர் அலி ஏமர் கடாபி. 

இவர் அதிபர் கடாபியின் பழங்குடியின ஜாதியை சேர்ந்தவர். ஆனாலும் கூட அவர் கடாபிக்கு எதிராக நடந்து கொள்வது ஆச்சரியம் அளிக்கிறது. ராணுவத்திலும் கடாபிக்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் கடாபி அரசு வீழ்ந்து விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஒபாமா பொது மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். 

அதிபர் கடாபி போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்ற அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.சர்வதேச விதிமுறைகளை பின்பற்றி கடாபி உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 

லிபியாவில் கலவரம் உச்ச கட்டத்தில் இருப்பதால் உயிருக்கு பயந்த மக்கள் பக்கத்து நாடான இத்தாலிக்கு அகதிகளாக செல்ல முயற்சிக்கின்றனர். 3 லட்சம் பேர் இத்தாலிக்கு செல்ல தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இத்தாலிக்கு அகதிகள் வந்தால் அந்த நாட்டுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று இத்தாலி வெளியுறவு மந்திரி பிராத்தினி கூறியுள்ளார்.






பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, February 23, 2011

ராக்கெட் சரித்திரத்தில் ஈடு இணை இல்லாத 363 அடிபூத ராக்கெட் சனி 5 .

ராக்கெட் சரித்திரத்தில் ஈடு இணை இல்லாத 363 அடி உயரம், 744 டன் உதைப்புத் [Thrust] திறமுடைய மகத்தான பூத ராக்கெட் சனி 5 [Saturn V]



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பூமியில் நடக்கப் போகும் இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே அறிய முடியும்: ஆராய்ச்சித் தகவல்.


வெயில், காற்று, மழை, புயல், சூறாவளி, காட்டுத்தீ என இயற்கை சீறும் போது மனிதகுலம் பெரிதாக பாதிக்கப்படுகிறது. இவற்றை தடுக்க முடியாது என்றாலும் தப்பிக்கும் வித்தையை தெரிந்து வைத்திருப்பது நமது தொழில்நுட்பத்தின் சாதனை.
கடல் அலை மட்டத்தில் ஏற்படும் விபரீத மாற்றத்தை வைத்து சுனாமியையும் முன் கூட்டியே உணரக்கூடிய அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். இதில் அடுத்தகட்ட முயற்சி வரப்போகும் நிலநடுக்கத்தை முன்கூட்டி தெரிந்துகொள்வது.
இங்கிலாந்து மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள், லண்டன் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆலன் ஸ்மித், விட்டாலி சிம்யேரெவ் ஆகியோர் தலைமையில் இணைந்து மாஸ்கோவில் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து செயல்பாடுகளையும் துவக்கியுள்ளனர்.
"ட்வின் சாட்" என்பது இந்த ஆய்வில் ஈடுபடப் போகிற செயற்கைக்கோள்கள். ஒன்று தொலைக்காட்சி பெட்டி  அளவில் இருக்கும். இன்னொன்று அதையும் விட சிறியது. விண்ணில் செலுத்தப்படும் இந்த இரண்டும் சில நூறு கி.மீ. தொலைவில் பூமியை வட்டமடித்துக் கொண்டே இருக்கும்.
எரிமலையின் செயல்பாடுகள் மற்றும் பூமியில் கணிசமான விபரீத மாற்றங்கள் தெரிந்தால் தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு செயற்கைகோளில் இருந்து தகவல் வரும். நில நடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள இடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதை 2015 ல் விண்ணில் செலுத்த உள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என்பதை கண்டறிய.


நமது கணணிகளுக்கு ஆண்டிவைரஸ் மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. சிலர் விலை கொடுத்து ஆண்டிவைரஸ் வாங்கி பயன்படுத்துவார்கள். சிலர் இலவச ஆண்டிவைரஸ் பயன்படுத்துவார்கள்.
எதுவாக இருந்தாலும் அது சரியாக இயங்கவில்லை எனில் பிரச்சனை தான். உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க European Institute for Computer Antivirus Research என்ற அமைப்பு EICAR test file என்னும் ஒரு முறையை கொடுத்துள்ளது.
இதற்கு முதலில் உங்கள் கணணியில் notepad (நோட்பேட்) திறந்து கொள்ளுங்கள். பின் கீழே உள்ளவற்றை உள்ளது போல் உங்கள் notepad ல் டைப் செய்யுங்கள் அல்லது காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
X5O!P%@AP[4PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*  காப்பி செய்த பின் உங்கள் notepad ல் File -> Save AS கொடுங்கள்.
Save செய்யும் போது .com என கோப்பு முடியுமாறு save செய்து கொள்ளுங்கள். பின் அந்த கோப்பை இயக்கினாலோ அல்லது save செய்யும் போதோ உங்கள் ஆண்டிவைரஸ் இந்த கோப்பை வைரஸ் என எச்சரிக்கை செய்து நீக்க வேண்டும்.
இல்லாவிடில் உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்கவில்லை என்று அர்த்தம். உடனே உங்கள் ஆண்டிவைரஸை தூக்கி விட்டு வேறு நிறுவுங்கள்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கைத்தொலைபேசிகள் மூளை செல்களை அழிக்கும்.

tumor dees Effects brain Effects of mobile phone on your brains
கைத்தொலைபேசிகளை உபயோகிப்பது மூளையை பாதிக்கும் என்றும், மூளை செல்களை அழிக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இது தான் புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகவும் காரணமாக அமைகிறது. நூற்றுக்கணக்கான கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் நடத்திய ஆய்வில் ஒவ்வொரு அழைப்பின் போதும் வெளிப்படும் சிக்னல்கள், மூளையின் இரசாயன மாற்றங்களை 7 சதவீதமாக அதிகமாக்குகின்றன என்பது தெரிய வந்துள்ளது.
இத்தகைய “மூளை மெட்டாபாலிசம்” கைத்தொலைபேசிகளின் ஆன்டனாவை தலைக்கு அருகிலோ, முகத்திற்கு அருகிலோ படும் படி வைத்தால் உண்டாகிறது. கைத்தொலைபேசிகள் கதிர்வீச்சை வெளியிடுவதாகவும், அவை மூளை செல்களின் வெப்பத்தை அதிகப்படுத்தவதாகவும் ஏற்கனவே ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன.
தூங்கும் போது தலைக்கு அருகில் கைத்தொலைபேசிகளை வைத்து தூங்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைத்தொலைபேசி நிறுவனங்களுமே இதைத்தான் பரிந்துரை செய்கின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றைய செய்திகள் 23/02/2011


நாட்டை விட்டு ஓடவில்லை; புறம்கூறும் நாய்களை நம்பாதீர்கள்! மறுக்கிறார் கடாபி.

லிபியாவில் எதிர்ப்பாளர்கள் மீது நேற்றும், போர்விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடந்தது. 

இந்நிலையில், கடாபி நாட்டை விட்டு ஓடிவிட்டதாக வெளி வந்த செய்தியை மறுக்கும் விதத்தில், நேற்று திடீர் பேட்டியளித்த கடாபி,"நான் டிரிபோலியில் தான் உள்ளேன்; நாய் போன்று அலையும் "டிவி' க்களின் செய்திகளை நம்ப வேண்டாம்' என்று கூறியுள்ளார்.

லிபியாவின் பல நகரங்களில் கடாபி எதிர்ப்பு போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. தலைநகர் டிரிபோலி, கிழக்கு நகரமான பெங்காசி உள்ளிட்ட, பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நேற்று முன்தினம், டிரிபோலியில் உள்ள பொதுமக்கள் காங்கிரஸ் எனப்படும் லிபியா பார்லிமென்ட் தீக்கிரையாக்கப்பட்டது. பல நகரங்களில் அரசு அலுவலகங்களுக்கும் இதே கதி ஏற்பட்டது.

போர் விமானம் மூலம் தாக்குதல்:இந்நிலையில் நேற்று முன்தினம் டிரிபோலியின் புறநகர்ப் பகுதியான பசுலும் மற்றும் டஜுரா மாவட்டங்களில், வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் மீது, போர்விமானங்களும், ராணுவ ஹெலிகாப்டர்களும் சரமாரியாகக் குண்டு வீசிக் கொன்றன. 

கடாபி ஆதரவாளர்களும் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளினர்.இச்சம்பவத்தில் 61 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒன்பது நாள் போராட்டத்தில் இதுவரை 400 க்கும் அதிகமானோர் பலியாகியிருக்கக் கூடும் என்று மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன. 

டிரிபோலியில் நேற்றும் போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகவலை இந்தியாவுக்கான லிபியா தூதராக இருந்து, தற்போது ராஜினாமா செய்து விட்ட அலி எல் எஸ்ஸாவி உறுதிப்படுத்தினார். மேலும் துப்பாக்கிச் சூடு, ஆப்ரிக்கக் கூலிப் படையினரைப் பயன்படுத்தல் ஆகியவற்றின் மூலம் லிபியா அரசு தனது மக்களைக் கொன்று வருவதாகத் தெரிவித்தார். 

அதேபோல, ஐ.நா.,வுக்கான லிபியா தூதர் இப்ராகிம் டப்பாசியும்,"லிபியாவில் மனிதப் படுகொலையை ஆரம்பித்து விட்டார் கடாபி' என்று கூறினார்.

ஆனால், கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகளை தான் போர் விமானங்கள் தாக்கின. குடியிருப்புகள் மீது தாக்குதல் நடக்கவில்லை. அதேபோல் டிரிபோலியிலும் பெங்காசியிலும் விமானத் தாக்குதல் நடக்கவில்லை' என்று மறுத்தார். 

பெங்காசி நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தும்படி, இரு விமானப் படைத் தளபதிகளுக்கு ராணுவம் உத்தரவிட்டது. 

அதேநேரம், பெங்காசி விமானப் படைத் தளத்தை மக்களும் கைப்பற்றிக் கொண்டதால், வேறு வழியின்றி அந்த இரு விமானப் படைத் தளபதிகளும், ஒரு போர் விமானத்தில் ஏறி, மக்கள் மீது தாக்குதல் நடத்த விரும்பாமல், மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மால்டாவில் தரையிறங்கினர்.

அங்கிருந்த போலீசார் அவர்களைக் கைது செய்து விசாரித்த போது, இத்தகவல் வெளியானது. இதன் மூலம் சயீப்பின் மறுப்பு பொய் என்பது தெரியவந்துள்ளது. கடாபி காட்டம்:இந்நிலையில், லிபியா தலைவர் மும்மர் கடாபி, வெனிசுலா நாட்டுக்கு ஓடிப் போய்விட்டதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக் நேற்று முன்தினம் தெரிவித்தார். 

இதையே சீனாவுக்கான லிபியாவின் துணைத் தூதர் முஸ்ரதியும் தெரிவித்திருந்தார்.ஆனால், நேற்று டிரிபோலியில் உள்ள தனது வீட்டின் முன் ஒரு வேனில் உட்கார்ந்தபடி, அரசு "டிவி'க்குத் திடீர் பேட்டி கொடுத்த கடாபி,"நான் இன்னும் டிரிபோலியில் தான் இருக்கிறேன். நாய் போலத் திரியும் "டிவி' செய்திகளை நம்ப வேண்டாம்' என்று மறுப்பு தெரிவித்தார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வெனிசுலா தூதரகமும் இதை மறுத்துள்ளது. பெங்காசி வீழ்ந்தது:லிபியாவின் கிழக்கு நகரமான பெங்காசி தற்போது மக்களின் கைகளுக்கு வந்து விட்டதாகவும், அங்கிருந்த ராணுவப் படைத் தளங்களை மக்கள் கைப்பற்றி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதத்தில், பெங்காசியில் உள்ள விமான ஓடுதளம் மக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு விமானங்கள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், டிரிபோலியில் உள்ள விமான நிலையமும் இழுத்து மூடப்பட்டு விட்டது. இதனால் லிபியாவில் உள்ள இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களின் மீட்பில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சிட்ரே, டொப்ருக், மிஸ்ரட்டா, கோம்ஸ், டர்கவுனா, ஜென்டன், அல் ஜாவியா மற்றும் ஜவாரா ஆகிய நகரங்களையும் மக்கள் கைப்பற்றி விட்டனர்.எகிப்து - லிபியா எல்லையில் இருந்த லிபியா ராணுவ வீரர்கள் அங்கிருந்து சென்று விட்டதால், எகிப்து எல்லையில் அந்நாட்டு ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. 

கடாபி மீது விசாரணை:லிபியாவில் நடந்த படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.,வின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் நவிபிள்ளை கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,"மனித இனத்திற்கு எதிரான குற்றத்தில் லிபியா அரசு ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். மக்கள் மீது இயந்திரத் துப்பாக்கிகள், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதை லிபியா அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.


நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்! 65 க்கும் மேற்பட்டோர் பலி.

நியூசிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் கிறிஸ்சர்ச் நகர் உள்ளது. நியூசிலாந்து நேரப்படி இன்று மதியம் 12.51 மணிக்கு கிறிஸ்சர்ச் நகரில் திடீர் என்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் அதிர்ந்தன. பல கட்டிங்கள் இடிந்து விழுந்தன. இதில் ஏராளமானோர் இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 


நிலநடுக்கத்தின் போது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்த ஆயிரக்கணக்கானோர் அலறியடித்துக் கொண்டு தெருவுக்கு ஓடினார்கள். நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 என்று பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜான்கி, “நில நடுக்கத்தால் 65 பேர் உயிர் இழந்தனர் என்று தெரிவித்தார்.

உயிர் இழப்பு மற்றும் சேதங்கள் அதிகம் இருக்கலாம் என்று கருதுவதாகவும், இந்த சம்பவம் தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்சர்ச் நகர மேயர், அங்கு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார். இது “நகரத்தின் கறுப்பு தினம்” என்றும் அறிவித்துள்ளார். இடிந்த கட்டிடங்களின் இடிபாடுகளிக்கிடையே ஏராளமான பொதுமக்கள் சிக்கி இருக்கிறார்கள். 


சாலைகளிலும், தெருக்களிலும் விரிசல்கள் காணப்படுகின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் தங்களை காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பியபடி உள்ளனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடம் விரைந்தனர். என்றாலும் கட்டிட இடிபாடுகள் காரணமாக தெருவில் விரைவாக செல்ல முடியவில்லை. எனவே, மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 


இந்த நிலநடுக்கம் காரணமாக கிறிஸ்சர்ச் நகர விமானநிலையம் மூடப் பட்டுள்ளது. காயம் அடைந் தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நகரில் மின்சாரம் துண்டிக் கப்பட்டுள்ளது.டெலிபோன் தொடர்புகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர் இணைப்பு குழாய்களும் உடைத்தன. நகரம் முழுவதும் சேதம் அடைந்து காணப்படுகிறது. 


ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நிலநடுக்கத்துக்கு பயந்து வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தங்கி இருக்கிறார்கள்.கட்டிட இடிபாடுகளில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். சாவு எண்ணிக்கை, சேத மதிப்பு பற்றிய விவரங்கள் உடனடியாக தெரியவில்லை

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, February 22, 2011

இன்றைய செய்திகள் 22/02/2011

உலகின் மிக மோசமான தலைநகரம் கொழும்பு! பிரித்தானிய சஞ்சிகை கணிப்பு.

உலகில் மிக மோசமான நிலையில் உள்ள பத்து தலைநகரங்களில் கொழும்பும் ஒன்று என்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகின்ற் The Economist சஞ்சிகை தெரிவித்து உள்ளது.இச்சஞ்சிகை சுகாதாரம், கலாசாரம், சுற்றாடல், கல்வி, தனி நபர் பாதுகாப்பு ஆகியன உட்பட 30 அம்சங்களின் அடிப்படையில் மிகவும் சிறந்த பத்து தலைநகரங்களையும், மிகவும் மோசமான நிலையில் உள்ள பத்து தலைநகரங்களையும் தெரிவு செய்து வைத்து உள்ளது.

மிக மோசமான நிலையில் உள்ள 10 தலைநகரங்களுக்குள்.இலங்கை உள்ளது என்கிறது இச்சஞ்சிகை.மிகவும் மோசமான நிலையில் உள்ள தலைநகரங்கள் என்று இச்சஞ்சிகையால் அடையாளம் காணப்பட்டு இருப்பவை வருமாறு:-

01) Harare - Zimbabwe
02) Dhaka - Bangladesh
03) Port Moresby - Papua New Guinea
04) Lagos - Nigeria
05) Algiers - Algeria
06) Karachi - Pakistan
07) Douala - Cameroon
08) Tehran - Iran
09) Dakar - Senegal
10) Colombo - Sri Lanka

400 இலங்கை அகதிகளை கனடாவுக்கு அனுப்பத் தயாராகும் கடத்தல்காரர்கள் - புலனாய்வு அதிகாரிகள் ஒட்டாவாவுக்கு தெரிவிப்பு.


400 ற்கும் அதிகமான இலங்கை அகதிகள் மற்றும் புலி உறுப்பினர்களை கனடாவுக்கு கப்பலில் அனுப்புவதற்கு ஆட்கடத்தல்காரர்கள் தயாராகி வருவதாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் கனடிய அரசுக்குக் கூறியுள்ளனர்.
தென்கிழக்காசியாவிலிருந்து கப்பலை அனுப்பத் தயார்ப்படுத்துவதாக புலனாய்வுத்துறையினர் கூறியுள்ளதாக ஒட்டாவா சிற்றிசன் பத்திரிகை நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது.
தென்கிழக்காசிய துறைமுகமொன்றிலிருந்து இரு படகுகளில் வெவ்வேறாக அனுப்பப்படவுள்ளதாகவும் பிரிட்டிஷ் கொலம்பியாக் கரைக்கே அனுப்பத் தயாராகிவருவதாகவும் உயர்மட்ட அரசு வட்டாரம் தெரிவித்ததாக சிற்றிசன் மேலும் குறிப்பிட்டிருக்கிறது.
அவர்கள் இன்னமும் கப்பலைப் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் கப்பலை அமர்த்தும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ஒவ்வொரு கப்பலும் 200 தொடக்கம் 300 பேரை ஏற்றிச் செல்லக்கூடியதாக இருக்கத்தக்கதாக அவற்றை அமர்த்துவதற்கு அவர்கள் முயற்சி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் அறிந்தவை இந்த இரண்டுமாகும். அதிகமாகவும் இருக்கக் கூடும். சில பயணிகள் கப்பலுக்காகக் காத்திருக்கின்றனர் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
வங்காளதேசத்தின் இராணுவத் தளபதி நாளை இலங்கை வருகை.
வங்காளதேசத்தின் இராணுவத் தளபதி் ஜெனரல் அப்துல் முபீன் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு விஜயம்  செய்யவுள்ளார்.இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அழைப்பிற்கிணங்வே வங்காளதேசத்தின் இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பிரதமர் டீ.எம். ஜயரத்தின, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், முப்படைகளின் பிரதானிகள் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.வங்க தேசத்தின் இராணுவத் தளபதிக்கு வரவேற்பு வழங்கும் வகையில் இலங்கை இராணுவத்தின் முக்கிய பிரமுகர்களுக்கான மரியாதை அணிவகுப்பொன்று எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ளது.
லிபியாவில் ரத்த ஆறு ஓடும்: கடாபி மகன் கொதிப்பு.
லிபியா தலைவர் கர்னல் முவாம்மர் கடாபி(68) தப்பி ஓடி விட்டதாகவும், நாட்டின் கிழக்கு பகுதிகளில் சில நகரங்கள் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் லிபியாவைத் துண்டாடுவதற்கு பிரிவினை சக்திகளை எதிர்த்து கடைசி நிமிடம் வரையிலும் நாம் போராடுவோம். இல்லையெனில் இங்கு ரத்த ஆறு தான் ஓடும் என்று கடாபியின் மகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லிபியாவில் கடந்த சில நாட்களாக அதன் தலைவர் முவாம்மர் கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த இரு நாட்களாக இந்த ஆர்ப்பாட்டங்கள் மேலும் வலுத்து வரும் நிலையில், எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.
நேற்று முன்தினம் பெங்காசி நகரில் உயர்ந்த கட்டடங்களில் இருந்த ராணுவ வீரர்கள் எதிர்ப்பாளர்கள் மீது இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று முன் தினமே நாட்டின் கிழக்கு பகுதியில் சில நகரங்களை மக்கள் கைப்பற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகின. அரசு தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிலையங்கள் சூறையாடப்பட்டன. தென்கொரிய நிறுவனம் ஒன்று சூறையாடப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் அரசு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது: லிபியா, துனிசியாவோ, எகிப்தோ அல்ல. நம் தலைவர் கடாபி தான் இப்போது ராணுவத்தை வழி நடத்துகிறார். நாங்கள் இத்தாலிக்கோ, துருக்கிக்கோ ஓடிப் போய்விட மாட்டோம்.
இந்த நாட்டைத் துண்டாட சில குழுக்கள் காத்திருக்கின்றன. பெங்காசியில் ஒரு குழு தனி அரசு அமைத்துள்ளது. அல் பெய்டாவில் ஒரு குழு இஸ்லாமிய எமிரேட் அமைத்துள்ளது. இன்னொரு தனி நபர் "டர்னா இஸ்லாமியக் குடியரசு" என்று அறிவித்துள்ளார். இந்த சிறு குழுக்கள் நாட்டைத் துண்டாட நினைக்கின்றன. இவர்களுக்கு மேற்கத்திய ஊடகங்கள் துணை நிற்கின்றன.
நாட்டின் அரசியலில் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது உண்மை தான். நாம் ஒவ்வொருவரும் ஆயுதம் ஏந்தினால் உள்நாட்டுப் போர் தான் உருவாகும். ரத்த ஆறு ஓடும். கடைசி ஆணும், பெண்ணும் இருக்கும் வரையிலும் நாம் போராடுவோம். இன்று அரசியல் சீர்திருத்தம் குறித்து மக்கள் காங்கிரஸ் கூடி விவாதிக்கும். இவ்வாறு சயீப் தெரிவித்தார்
நேற்று முன்தினம் இரவில் டிரிபோலி உள்ளிட்ட நகரங்களில் கடாபி லிபியாவில் இருந்து வெளியேறி வெனிசுலாவுக்கு ஓடிப் போய்விட்டதாக செய்திகள் பரவின. இதையடுத்து எதிர்ப்பாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடத் துவங்கினர். ஆனால் நேற்று காலையில் மக்களிடையே உரையாற்றிய கடாபி மகன் அவர் லிபியாவில் தான் உள்ளார் என்று தெரிவித்தார்.
அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்: சூடான் அதிபர்.
எகிப்து எழுச்சியை தொடர்ந்து வட ஆப்ரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் அரசுகளுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதன் எதிரொலி சமீபத்தில் சூடானிலும் கேட்டது.
அங்கு மாணவர்கள் தங்கள் குறைகளை தீர்க்காத அரசுக்கு எதிராக திரண்டு எழுந்தனர். பின்பு அடக்கப்பட்டனர். இந்நிலையில் சூடான் அதிபர் ஒமர் அல் பஷீரின், தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரபீ அப்தலாடி நேற்று பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது: அதிபர் தேர்தலில் அடுத்த முறை தான் நிற்கப் போவதில்லை என, ஏற்கனவே பஷீர் தெரிவித்து விட்டார். அவரது பதவிக் காலம் இன்னும் நான்காண்டுகள் இருக்கிறது. இந்த பிராந்தியத்தில் நடந்து வரும் போராட்டங்களால் அவர் இந்த முடிவுக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் தெற்கு சூடான் தலைநகரான ஜூபாவில் தேசிய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு கூட்டத்தில் ஊழல் ஒழிப்பு கமிஷன் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்க உதவிகள் எனப் பல்வேறு சலுகைகளை அதிபர் பஷீர் அறிவித்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
லிபியா தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்: கனடிய பிரதமர்.
லிபியா ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 200 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
பாதுகாப்பு படையினர் நடவடிக்கை கொடூரமானது இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் வலியுறுத்தினார். லிபியா பல ஆண்டுகளாக மோமர் கடாபி ஆட்சி நடைபெறுகிறது.
42 ஆண்டுகளாக இவரது ஆட்சியில் லிபியாவில் சர்வாதிகாரமே தலைதூக்கி உள்ளது. பொருளாதார வீழ்ச்சி, வேலை இல்லாத திண்டாட்டம் ஆகியவை மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. இதனால் லிபியா தலைநகர் திரிபோலி, பென்காசி ஆகிய பெரு நகரங்களில் மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பாதுகாப்பு படையினர் ஏவப்பட்டுள்ளனர். இவர்களது தாக்குதலில் ஏறக்குறைய 200 மக்கள் பலியாகி உள்ளனர். கொடூர தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என கனடா பிரதமர் ஹார்ப்பர் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து திங்களன்று வான் கூவரில் அவர் கூறுகையில் லிபியா அரசு உடனடியாக தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளோம் என்றார். கனடிய வெளியுறவுத் துறை அமைச்சர் லாரன்ஸ் கேன்ன் அமெரிக்கா ஜரோப்பிய நாடுகளுடன் விடுத்த அறிவிப்பை போன்று கனடிய குடிமக்கள் லிபியாவுக்கு தற்போது பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.
வேக் பீல்டிங் அவர் பேசுகையில் லிபியாவில் தற்போது இருக்கும் கனடியர்கள் மக்கள் கூடுமிடங்கள் மற்றும் விளக்க போராட்டம் நிகழ்ச்சி இடங்களுக்கு செல்ல வேண்டாம். அங்கு தீடீரென வன்முறை ஏற்படலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதி கசாபிற்கு மரண தண்டனை.
பயங்கரவாதி கசாபிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி  செய்து நேற்று உத்தரவிட்டது.

மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.
அஜ்மலிடம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அப்போது அவன் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுக்கும் போது தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 6-ந்திகதி அவனுக்கு மரண தண்டனை விதித்து விசாரணை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அஜ்மல் மும்பை கோர்ட்டில் மேல் முறையீடு செய்தான். அதை விசாரித்த ஐகோர்ட்டு அஜ்மலுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்து நேற்று உத்தரவிட்டது.


இதை எதிர்த்து அஜ்மல் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜ்மலுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படுவது தள்ளிக்கொண்டே போவதால், அவனை ஜெயிலில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.


பலத்த பாதுகாப்பு, மருத்துவச் செலவு மற்றும் உணவுக்காக தினமும் அரசு சராசரியாக 9 லட்சம் ரூபாய் செலவிடுகிறது. அந்த வகையில் அஜ்மலுக்காக இதுவரை ரூ.45 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அஜ்மல் தினமும் தனக்கு பிரியாணிதான் வேண்டும் என்று அடம் பிடித்து கேட்டு வாங்கி சாப்பிடுகிறான். அவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உயர்ரக சிகிச்சை கொடுக்கப்படுகிறது.
அஜ்மலுக்கு கொடுக்கப்படும் உயர் பாதுகாப்பு மற்றும் வசதிகள் மும்பை நகர மக்களை கடும் கோபத் தில் ஆழ்த்தி உள்ளது. அஜ்மலிடம் விசாரித்தது போதும். அவனை உடனே தூக்கில் போட வேண்டும் என்று மும்பை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


லிபிய கலவரத்தில் 300 பேர் பலி! போராட்டக்காரர் மீது தாக்குதல்.

லிபியாவில் 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் முவாம்மர் கடாபி பதவி விலக வலியுறுத்தி அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 6-வது நாளாக போராட்டம் நடந்தது. தலைநகர் டிரிபோலி, பென் காசி, கவுர்லி, கோபுரக், அல்-பாஸ்டா, மில்ரதா உள் ளிட்ட நகரங்களில் கலவரம் பரவியுள்ளது. 

கலவரத்தை அடக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் துப்பாக்கி மற்றும் கனரக ஆயுதங்களை போராட்டக் காரர்கள் மீது பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தவிர அதிபர் கடாபியின் ஆதரவாளர்களும் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடு படுபவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். 

தலைநகர் டிரிபோலிக்கு அடுத்த படியான பெரிய நகரமான பென்காசியில் கலவரத்தில் பலியானவர்களின் இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானவர்கள் மீது ஹெலிகாப்டரில் பறந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர். 

ஏராளமானோர் காயம் அடைந்தனர். அதே போன்று, நேற்று நடந்த இறுதி ஊர்வலத்திலும், ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். எந்திர துப்பாக்கிகளால் சுட்டதில் பலர் மடிந்தனர். நேற்று முன்தினம் வரை 84 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. 

தற்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது. இந்த தகவலை மனித உரிமை கமிஷன் தெரி வித்துள்ளது. இதற்கிடையே அங்கு போராட்ட செய்திகளை பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக சேகரிக்க முடிய வில்லை. 

கலவர செய்திகள், போட்டோக்கள் போன்றவை அங்கிருந்து நாடு கட்டத்தப்பட்டவர்கள் மூலம் டெலிபோன் மற்றும் வீடியோ ஆக கிடைக்கிறது. போராட்டக்காரர்களின் மிரட்டலுக்கு தாங்கள் அஞ் சப்போவதில்லை. 

போராட்டத்தை ஒடுக்கியே தீருவோம் என அதிபர் கடாபியின் மகன் சாய்ப் அல்-இஸ்லாம் தெரிவித்துள்ளார். அரசு டெலிவிஷனில் அவர் உரை நிகழ்த்தினார். அப்போது, லிபியாவில் உள்நாட்டு போர் ஏற்படும் என போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். லிபியாவை உடைத்து குட்டி நாடுகளை உருவாக்க முயற்சி நடக்கிறது. அவ்வாறு நடந்தால் லிபியாவுக்கு வெளிநாட்டு நிதி உதவி கிடைக்காது. இதனால் வளர்ச்சி திட்டம் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, February 21, 2011

உலகின் மிகப்பெரிய மீயூசியம் சுற்றிப்பார்க்க இந்தநிமிடமே கூகிள் இலவசமாக அழைத்து செல்கிறது.



பதிவின் தலைப்பை பார்த்ததும் ஆச்சர்யம் வரலாம் ஆனால் உண்மைதான் நம் கூகிள் உலகில் இருக்கும் பிரம்மாண்டமான மீயூசியத்தை எல்லாம் சுற்றிபார்க்க நேரடியாக இப்போதே நம்மை
இலவசமாக அழைத்து செல்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
உள்நாட்டில் இருக்கும் மீயூசியத்திற்கு செல்லக்கூட நேரம்
இல்லை அப்படியே நேரம் கிடைத்தாலும் அங்கு சென்று
கூட்டத்துடன் அதன் அழகை ரசிக்க முடியவில்லை என்ற
வருத்தம் அனைவரிடமும் இருக்கும் இந்த வருத்தத்தை
போக்குவதற்காக கூகிள் முக்கிய மீயூசியத்தை ஆன்லைன் மூலம்
முப்பரிமானத்தில் ( 3D ) சுற்றிகாட்டினால் எப்படி இருக்கும்
என்ற புதிய முயற்சியாக  ஒரு இணையதளத்தை
ஆரம்பித்துள்ளது, இதில் தற்போது உலகின் பிரம்மாண்டமான
மீயூசியத்தை பார்க்க நம்மை இப்போதே அழைத்து செல்கிறது,
இணையதள முகவரி : click here http://www.googleartproject.com

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மகளுக்கு ‘பேஸ்புக்’ எனப் பெயரிட்ட எகிப்தியர்.



எகிப்தைச் சேர்ந்த நபரொருவர் தனது மகளுக்கு பேஸ்புக் எனப் பெயரிட்டுள்ளார்.
ஜமால் இப்ராஹிம் (20) என்ற அந் நபர்அங்கு அண்மையில் நடந்த ஆர்ப்பாட்டங்களை நினைவு கூறும் முகமாகவே இப்பெயரினை தனது மகளுக்கு சூட்டியுள்ளார்.அப்பெண் குழந்தையின் முழுப்பெயர் பேஸ்புக் ஜமால் இப்ராஹிம் ஆகும்.
அந் நாட்டு முன்னாள் அதிபர் முபாரக் பதவி விலகக்கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பேஸ்புக் வலையமைப்பானது முக்கியமானதோர் பங்கை வகித்திருந்தது.ஆர்பாட்டக்காரர்களை ஒன்று திரட்டுவதிலும், செய்திகளை பரிமாறிக்கொள்வதிலும் அதன் சேவைகள் அளப்பரியதாக இருந்தன.
மத்திய கிழக்கில் உள்ள மற்றைய நாடுகளை விட எகிப்திலேயே அதிக பேஸ்புக் பாவனையாளர்கள் உள்ளனர்.அங்கு சுமார் 5 மில்லியன் பேர் பேஸ்புக் பாவனையாளர்களாக உள்ளதுடன் அவ்வார்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அவ்வெண்ணிக்கெகை வேகமாக அதிகரித்தும் வருகின்றது.
பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேக்கினை எகிப்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பங்கிற்காக எகிப்தியர் நன்றி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

விண்டோசில் விரும்பிய எழுத்துருவை கொண்டு வருவதற்கு.

கணணியில் உள்ள எழுத்துக்களின்  எழுத்துரு, அளவு, வண்ணம் ஆகியவற்றை உங்களது விருப்பத்திற்கு ஏற்ற படி மாற்றிக் கொள்ள முடியும்.இதற்கு டெக்ஸ்டாப்பின் காலி இடத்தில் வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள். அதில் Properties கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே உள்ள விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நான்காவதாக உள்ள Appearance டேபை கிளிக் செய்து அதில் உள்ள Advanced கிளிக் செய்யுங்கள்.
இதில் Item என்கின்ற விண்டோவில் உங்கள் கணிணியில் உள்ள அனைத்தும் பட்டியலிடப்படும். அதில் தேவையானதை தேர்வு செய்து அதன் எழுத்துரு, வண்ணம், அளவு தேர்வு செய்து ஓ,கே.தரவும்.
இப்போது உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த ஐட்டத்தின் எழுத்துக்களும் வண்ணங்களும் அளவுகளும் மாறி உள்ளதை காணலாம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கார்கள்.


ஜேர்மனியைச் சேர்ந்த அடானமஸ் லேப் மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இக்கருவி மூலம் மனித மூளையின் விருப்பபடி வாகனங்களை இயக்கலாம். வாகன ஓட்டி சென்சார் கேப் ஒன்றை அணிந்து கொள்வதன் மூலம் மூளையின் எலக்ட்ரோ மேக்னடிக் மின் காந்த அலைகளை வைத்து தங்கள் மூளையின் செயல்பாட்டை கம்ப்யூட்டர் அறிந்து கொள்ள முடியும்.
மூளையின் வலது இடது வழி முறைகளை, மூளையின் கட்டுப்பாட்டோடு இணைந்து கணணியின் மென்பொருள் செயல்படும். இது தவிர வேகப்படுத்தல், வேகத்தைக் குறைத்தல், போன்றவற்றை அடையாளம் கண்டுகொள்ளவும் பயிற்சி கொடுக்க ஆராய்ச்சியாளர்கள் வழிகளை கண்டுபிடித்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் இந்த சென்சார் கேப்பை தலையில் பொருத்தியவுடன் வாகனத்திற்கு உத்தரவிடத் தொடங்கும். அந்த வாகனமும் 360 கோணத்தில் தன்னைச் சுற்றியுள்ளவற்றை அறியும் விதமாக வீடியோ காமிராக்கள் ராடார்கள் லேசர் சென்சார்களைக் கொண்டிருக்கும்.
ஒரு புற மற்றும் இரு புற சந்திப்பு வரும் இடத்தில் கார் தன்னைத் தானே செலுத்திக் கொல்லும். பின்னர் வடது, இடது பக்கம் வாகன ஓட்டியின் உத்தரவுப்படி திரும்பும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இரத்த அழுத்தத்தை அளவிட புதிய கருவி கண்டுபிடிப்பு.


இரத்த அழுத்தத்தை அளவிடும் முறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் கருவி ஒன்றை லெய்செஸ்டர் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது உபயோகத்தில் இருக்கும் கருவிக்கு மாற்று கருவியாக இதை கண்டறிந்துள்ளனர். கடிகாரம் போன்ற இக்கருவியில் உள்ள சென்சார் இரத்த குழாயின் நாடித்துடிப்பு அலையை அளவிட்டு கணிக்கும் விபரங்களை பழைய தோள்பட்டை கருவி மூலம் அனுப்புகிறது.
இதன் மூலம் இதயத்துக்கு அருகிலுள்ள அழுத்தத்தை ஏயார்டா மூலம் அறியலாம். ஏயார்டா என்பது இதயத்திலிருந்து மில்லிமீட்டர் அளவு அருகில் இருப்பது. தோள்பட்டையை விட இவ்விடத்தில் அழுத்தம் அதிகம்.
ஏயார்ட்டாவின் அழுத்தத்தை அளவிட்டால் மாத்திரமே சிகிச்சை பூரணமாக இருக்கும் என்று பேராசிரியர் பிரையன் வில்லியம்ஸ் தெரிவித்தார். மூளை மற்றும் இதயத்திற்கு அருகில் உள்ள இரத்த அழுத்த அளவை அறிவது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு சிகிச்சைகளில் அவசியம்.
இது குறித்து மருத்துவர் சூன் மெங் டிங் கூறியதாவது: இந்த நோயாளிகளுக்கு தங்களின் சென்ட்ரல் ஏயார்டிக் சிஸ்டோலிக் பிரஷரை அளவிடவும், அதற்கான சிகிச்சைகளை வீட்டிலேயே செய்து கொள்ள முடியும் என்றார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF