Saturday, January 29, 2011

இன்றய செய்திகள் 29/01/2011

பிரித்தானியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் அபார வளர்ச்சி.
A Kashmiri girl faces the crowd of women play as thousands attend the Eid-Al-Fitr prayer on October 1, 2008 in Srinagar, Kashmir in India. Today marks the first day of a three day holiday signaling the end of Ramadan, Islam's holiest month.
பிரித்தானியாவில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை எதிர்வரும் 20 வருடங்களில் இரு மடங்காக அதிகரிக்கும் என ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

முஸ்லிம்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 5.5 மில்லியன்களாகக் காணப்படும் எனவும் இத்தொகையானது குவைத்தில் உள்ள முஸ்லிம்களின் தொகையை விட அதிகம் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகப்படியான இடம்பெயர்வுகளே இதற்கான காரணமாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த காலப்பகுதியில் அமெரிக்காவில் உள்ள பிரித்தானியர்களின் எண்ணிக்கை சுமார் 6.2 மில்லியனாக இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின்படி பிரித்தானியாவில் குடியேறும் 4 பேரில் ஒருவர் முஸ்லிம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் உலகின் மொத்த சனத்தொகையில் 26 % முஸ்லிம்களாக காணப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



அவுஸ்திரேலிய தொழிற்சாலையொன்றில் பாரிய வெடிப்பு.

அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள வர்ணப்பூச்சுக்களை தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இதனால் ஏற்பட்ட தீயினால் அப்பிரதேசம் முழுவதும் கரும்புகையினால் சூழப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தொழிற்சாலையில் 20,000 லீற்றர் இரசாயன திரவியங்கள் கையிருப்பில் இருந்ததாகவும் இவையே வெடித்து தீப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தீயை கட்டுப்படுத்த சுமார் 6 தீயணைப்பு படைகள் கடுமையாக போராடி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




எகிப்து அதிபருக்கு எதிரான போராட்டம்: அமைச்சரவை கலைப்பு.

எகிப்தில் இடம்பெற்றுவரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தினால், அந்நாட்டு அதிபர் ஹொஸ்னி முபாரக் தனது அரசாங்கத்தைக் கலைத்து புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளார்.
டூனிசியாவில் இடம்பெற்ற போராட்டங்களினால் அந்த நாட்டு அதிபர் பென் அலி பதவியை விட்டு விலகினார். அதன் எதிரொலியாக எகிப்திலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எகிப்தின் முக்கிய நகரங்களான கெய்ரோ, சூஸ், அலெக்ஸ்சாண்ட்ரியா ஆகிய நகரங்களில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சூஸ் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 13 பேரும், கெய்ரோ நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 5 பேரும் உயிரிழந்தனர்.
இதேநேரம் அதிபர் ஹொஸ்னி முபாரக்கின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் அவரது மகன் காமல் முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளனர்.

30 ஆண்டுகளாக ஆட்சிசெய்து வரும் அதிபர் ஹொஸ்னி முபாரக்கின் அரசுக்கு எதிராக மக்கள் தீவிரமாக ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர். இதில் இளைஞர்கள் பேஸ்புக், டுவிட்டர் ஆகிய இணையத்தளங்கள் மூலமாக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இதனால் குறிப்பிட்ட இணையத்தளங்களை அந்நாட்டு அரசு தடைசெய்துள்ளது. இதேநேரம் எகிப்தில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு முபாரக் நிர்வாகத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கர்களையே ஆட்டிப்படைக்கும் பிரெஞ்ச் சிறுவன்.
விக்கிலீக்ஸ் தளத்திற்கு உதவி செய்யும் முகமாக அமெரிக்க இணையத்தளங்கள் சிலவற்றில் ஊடுருவல் செய்த குற்றத்திற்காக 15 வயது பிரெஞ்ச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
எந்தவிதமான குற்றச் செயல் பதிவுகளுமில்லாத இந்தச் சிறுவன் மாஸ்டர்கார்டு, வீசா, பேபால் போன்ற அமெரிக்க பணமாற்று தளங்களின் தரவுகளைத் திருடியுள்ளான்.
சமூக இணையத்தளங்களில் ஒரு குழுவாக இயங்கும் இவர்கள் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பாதுகாப்பதாகக் கூறி இத்தகைய பெருந்தளங்களுக்குள் ஊடுருவுகின்றனர். இப்படியான இலத்திரனியல் தகவற் திருட்டு பாரிய குற்றமாகக் கருதப்படுகின்றது. இதற்கு அடிப்படையில் 5 ஆண்டுகள் சிறையும் 75,000 யூரோக்கள் அபராதமாகவும் விதிக்கப்படும்.

ஆனால் ஒரு வயது குறைந்த சிறுவன், முன்பு எந்தவிதமான குற்றச் செயல்களும் புரியாத ஒரு சிறுவனைத் தண்டிப்பதற்குப் பொருத்தமான சட்டப்பிரிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை என அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார். ஆவணப் பாதுகாப்பு மற்றும் இலத்திரனியல் குற்றத்தடுப்புப் பிரிவினர் இப்படியான செயல்கள் குறித்து மேலும் கவனமெடுக்கப் போவதாகக் கூறியுள்ளது.

இவர்கள் தமது அதியுச்ச கணினியியல் அறிவைப் பயன்படுத்தி பல நூற்றுக்கணக்கான கணினிகளை வலைய அமைப்பில் இணைத்து ஒரே நேரத்தில் பல லட்சம் தகவல் கேள்விகளை ஒரு தளத்திற்கு அனுப்பி அதன் தகவல் மையத்தைத் தாக்கி அந்தத் தளத்தை முடக்கி வைக்கவும், தகவல் வங்கியிலுள்ள கோப்புகளை அழிக்க அல்லது தரவிறக்கம் செய்யவும் இவர்களால் முடிகின்றது.

ஆனாலும் அந்தச் சிறுவனின் வழக்கில் இவன் பல அமரிக்கத் தளங்களில் ஊடுருவியிருப்பினும் இது எந்தக் குற்றவியல் நோக்கங்களுக்காகவும் செய்யப்படவில்லை எனவும், இவன் தன்னால் என்ன முடியும் என்ற ஆர்வத்தில் மட்டுமே இதைச் செய்துள்ளான் எனவும் விக்கிலீக்ஸ் இணையத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் விக்கிலீக்ஸிற்கு உதவமறுத்த மாஸ்டர்கார்டு, வீசா, பேபால் போன்ற அமெரிக்க பணமாற்று தளங்களின் மீதே இவன் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் அரச தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவுக்கான நிபந்தனையை கைவிட்டது தென்கொரியா.
பேச்சுவார்த்தை துவங்க வேண்டுமானால், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் இயான்பியாங் தீவு மீதான தாக்குதல்களுக்கு வடகொரியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையை, தென்கொரியா கைவிட்டது.
இயான்பியாங் தீவு மீதான தாக்குதலுக்குப் பின், வடகொரியா பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. முதலில் இதை ஏற்க மறுத்த தென்கொரியா பின் சம்மதித்தது. முதல்கட்டமாக இருதரப்புக்கும் இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை, பிப்ரவரி 11ல் நடக்க உள்ளது.
அதேநேரத்தில், இருநாட்டு பார்லிமென்ட் உறுப்பினர்களும் ஒன்று கூடி, இருதரப்பு பிரச்னைகள் குறித்து பேசலாம் என்ற வடகொரியாவின் அடுத்த கட்ட அழைப்புக்கு தென்கொரியா பதிலளிக்கவில்லை. இதற்கிடையில், தென் கொரிய தலைநகர் சியோலில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில், "நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் இயான்பியாங் தீவு மீதான தாக்குதல் குறித்து வடகொரியா மன்னிப்புக் கேட்க வேண்டும்".
மன்னிப்பு கேட்டால் தான் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் துவக்கப்படும் என, தென்கொரிய அரசு வட்டாரங்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த நிபந்தனையை தற்போது தென்கொரியா வாபஸ் பெற்றுள்ளது.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, January 28, 2011

டிஜிட்டல் அடிமைகளா நாம் ?


வர்த்தகம், விளம்பரம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறை அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. நம்முடைய கம்ப்யூட்டர் இயங்காமல் போனாலோ, இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல் போனாலோ, ஒரு வித பதற்றம் நம்மைத் தொத்திக் கொள்கிறது. 

இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு தகவல் அல்ல. பல ஆய்வு நிறுவனங்கள் எடுத்த கணிப்புகளின் அடிப்படையில் எடுத்த முடிவுகளே. 

ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், மக்களிடம் இன்னமும் தொலைக்காட்சிப் பெட்டியில் காட்டப்படும் விளம்பரங்களின் ஆதிக்கமே அதிகமாயுள்ளன. 

இருந்தாலும் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் விளம்பரங்களும் அதிகரித்து வருகின்றன. தற்போது டிஜிட்டல் மீடியா வழி விளம்பரம் ரூ.1,000 கோடி அளவில் இருந்து வருகிறது. இது நடப்பு 2011 ஆம் ஆண்டில் ரூ.1,500 கோடி முதல் ரூ.1,600 கோடி வரையில் உயரும் வாய்ப்பு உள்ளது. 

இன்டர்நெட் விளம்பரத்தினைப் பொறுத்தவரை நான்கு விதமாக கிடைக்கிறது. டிஸ்பிளே விளம்பரம், சோஷியல் நெட்வொர்க் மீடியா விளம்பரம், தேடுதல் சாதன விளம்பரம் மற்றும் மொபைல் விளம்பரம் என நான்கு பிரிவுகளாக இதனைப் பார்க்கலாம். 

தற்போது ஸ்மார்ட் போன்களின் விலை குறைந்து, அதன் பயன்பாடு அதிக மக்களைச் சென்றடைவதால், மொபைல் வழி விளம்பரம் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இது 30% வளர்ச்சியினைப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐ ப்ராஸ்பெக்ட் என்னும் நிறுவனம் இது குறித்து மேற்கொண்ட ஆய்வின் இறுதியில், இணைய தேடல்களை மேற்கொள்பவர்கள் குறித்த்டு கீழ்க்காணும் தகவல்கள் கிடைத்துள்ளன. இன்டர்நெட் பார்ப்பவர்களில், 82% பேர், நாளொன்றுக்கு மூன்று முறை இணையத்தில் தேடலை மேற்கொள்கின்றனர். 

இது மற்ற ஆசிய பசிபிக் நாடுகளில் 77.4% ஆக உள்ளது. 92% பேர் நாளொன்றுக்குக் குறைந்தது ஒரு முறை தேடல் சாதனம் பயன்படுத்துகின்றனர். சென்ற 2010 ஆம் ஆண்டில் தேடல் பயன்படுத்துவது 93.6% பேருக்கு ஒரு முக்கிய பணியாக இருந்துள்ளது. 

மொபைல் பயன்படுத்து பவர்களில் தேடலை மேற்கொள்பவர்கள் 90% ஆவார்கள். இவர்களில் 67% பேர் இதனை மிக முக்கியமாக மேற்கொள் கின்றனர். இணையத்தில் தேடுகையில், 89.4% பேர் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்துவதனையே அதிகம் விரும்புகின்றனர். அடுத்தபடியாக, யாஹூ தேடல் சாதனத்தினை 7.5% பேரும், பிங் சாதனத்தினை 2.4% பேரும் பயன்படுத்துகின்றனர். 

சோஷியல் நெட்வொர்க் தளங்களை, மற்ற நாடுகளைப் போலவே,இளைஞர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைப்பு, இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் 67% பேர் சோஷியல் நெட்வொர்க் தளங்களைப் பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. 

அதிக அளவில் மக்கள் பார்க்கும் முதல் 20 தளங்களில், 7 தளங்கள் சமுதாய இணைய தளங்களாக உள்ளன. இணையம் வழியாக பொருட்கள் வாங்குவது தொடர்ந்து உயர்ந்து வருவதால், இணைய விளம்பரங்களும் அதிகரித்து வருகின்றன. 

கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான விளம்பரங்கள் 78.4%, கல்வி நிலையங்கள் குறித்து 71.8%, பொழுது போக்கு 65.5% என்ற அளவில் உள்ளன. தாங்கள் வாங்கிட விரும்பும் பொருட்களை, ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவதற்காக 80% பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். 

தேடல் மூலமாகக் கண்டறிந்த தளங்கள் வழியாகப் பொருட்கள் வாங்குவதையே பெரும்பாலானவர்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர். இணைய வழி வர்த்தகத்தில் மக்கள் அதிகம் நம்பிக்கை வைப்பது நிறுவனங்கள் பெற்ற பெயர் அடிப்படையில் தான். இந்த வகையில் மக்களின் வர்த்தக அடிப்படையை இணையம் மாற்றியுள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

புத்தக ஒற்றைகளில் கலை வேலைப்பாடு!

புத்தக ஒற்றைகளில் எழுத்துக்கள்,சொற்கள் போன்றன காணப்படுவதுதான் வழக்கம். ஆனால் புத்தக ஒற்றைகளை மடித்து சொற்களை உருவாக்கியிருக்கிறார் அமெரிக்க நாட்டின் வளர்ந்து வரும் புத்தாக்க கலைஞர்களில் ஒருவரான isaac salazar. 

தனித் தனிச் சொற்கள் உருவாகக் கூடிய வகையில் புத்தக ஒற்றைகளை ஆங்கில எழுத்துகளாக மடித்து இருக்கின்றார்.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மணலிலும் கலை வண்ணம் படைக்கலாம்!

மணலில் சிற்பங்களை தயாரிக்க வல்ல சர்வதேச சிற்பிகள் குழு ஆஸ்திரேலியாவின் பிரதான கடற்கரை வீதி ஒன்றில் மணல் சிற்ப கண்காட்சி ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் நடத்தியது. 

உலகம் பூராவும் இருந்து சிற்பிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினார்கள். 

வண்டுகள், மூட்டைப் பூச்சிகள், சிலந்திகள், வண்ணாத்துப் பூச்சிகள், தேள்கள் போன்ற ஜந்துகளின் உருவங்களை மணலில் சிற்பங்கள் ஆக்கினர். இவை பார்வையாளர்களின் கண்களுக்கு பெருவிருந்து ஆகின.






பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றய செய்திகள் 28/01/2011


பிப்ரவரி 14-ம் தேதி தெற்கு சூடான் தனி நாடு உதயம்.

ஆப்ரிக்க நாடன சூடான் இரண்டாக பிரிக்கப்படுவது குறித்த மக்கள் வாக்கெடுப்பு முடிவுகள் பிப்ரவரி 7-ம் தேதி வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின் கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட அமைதி ‌ஒப்பந்தத்தின் படி சூடானைவ தெற்கு, வடக்கு என இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. 

பின்னர் நிகழ்ந்த பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முன்னதாக சூடானை இரண்டாக பிரிக்கலாமா, வேண்டாமா என ஓட்டெடுப்பு நடந்தது. 

இதில் ‌பெரும்பாலான மக்கள் சூடானை பிரிக்க ஆதரவு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தெற்கு சூடான் மக்கள் வாக்கெடுப்பு கமிஷன் (எஸ்.எஸ்.ஆர்.சி) அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் கடந்த ஜனவரி மாதம் ஓட்டெடுப்பு நடத்தியது. மொத்தம் 99 சதவீதம் வாக்கெடுப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எஸ்.எஸ்.ஆர்.சி. யின் தலைவர் முகமது இப்ராஹிம் கஹாகிலி , கஹார்டூம் நகரில் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியதாவது: வாக்கெடுப்பு முடிவுகள் பிப். 7-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளன. 

முன்னதாக அதிபர் ஒமர் பஷீர் சூடானை இரண்டாக பிரிக்கும் வாக்கெடுப்பிற்கு ஓப்புதல் அளித்தார். இதன்படி தெற்கு சூடானின் தலைநகரமாக கஹார்டூம் , வடக்கு சூடானின் தலைநகரமாக ஜூபாவும் முறையாக அறிவிக்கப்படும். 

இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 14-ம் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு அன்று ம முதல் தெற்கு சூடான் என்ற சுதந்திர நாடு உதயமாகும். இவ்வாறு அவர் கூறினார்.


ஈராக்கில் பயங்கரம்: இறுதி சடங்கில் கார் குண்டு தாக்குதல்; 48 பேர் பலி.

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாபஸ் ஆக உள்ளன. இந்த நிலையில் அங்கு தற்போது குண்டு வெடிப்பு சம்பவங்கள் மற்றும் தற்கொலை தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நடந்த 4 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இத்தாக்குதல்கள் “ஷியாட்” பிரிவினர் வாழும் பகுதியில் தான் அதிகம் நடை பெறுகிறது. 

சமீபத்தில் பாக்தாத் நகரில் “ஷியாட்” பிரிவினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பலியானவர்களுக்கு நேற்று இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

அப்போது இறுதி சடங்கு நடந்து கொண்டிருந்த இடத்தில் தீவிரவாதிகள் கார்குண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். 

அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சமீபத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் பிரதமர் நூரி அல்-மாலிகி கூட்டணி அரசுக்கு எதிராக நடைபெறுவதாக கருதப்படுகிறது. 

இதற்கிடையே ஈராக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அரபு நாடுகள் முடிவு செய்துள்ளன. இது குறித்த மாநாடு வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 

இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் அதை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் எதிரொலியாக தான் இது போன்ற தாக்குதல்கள் நடை பெறுகின்றன என பாக்தாத் மாகாண கவுன்சில் தலைவர் சுமில் நசீர் அல்-சாய்தி தெரிவித்துள்ளார்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, January 27, 2011

இந்த இணையத்தளங்களை அலுவலக நேரங்களில் பார்வையிடாதீர்கள்

ஊழியர்கள் இணையத்தில் அளவுக்கதிகமாக நேரத்தினை விரையம் செய்வதினையும், அவர்களின் வினைத்திறன் இழப்பினை தடுக்கும் நோக்கத்துடனும் பல நிறுவனங்கள் குறிப்பிட்ட சில தளங்களை தமது ஊழியர்கள் உபயோகப்பதினை தடைசெய்துள்ளது.இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையில் அவ்வாறு தடைசெய்யப்பட்ட தளங்களே இவை.
 







பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அமெரிக்காவில் பாம்பு வீடு


பேய் வீடு என்று நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம்.ஆனால் பாம்பு வீடு என்றால் என்ன ? ஆச்சரியமாக உள்ளதா?
அமெரிக்காவின் Idaho மாநிலத்தில் உள்ள Rexburg என்கிற நகரில் உள்ள வீட்டில் ஆயிரக் கணக்கான பாம்புகள் வசிக்கின்றன. கார்டெர் என்கிற இனத்தைச் சேர்ந்தவை.இவ்வீடு The Chase Bank இற்கு அறுதியாக கிடைக்கப் பெற்று உள்ளது.வீட்டின் உண்மையான பெறுமதி 175,000 அமெரிக்க டொலர்.வங்கி இவ்வீட்டை விற்க தீர்மானித்து உள்ளது.வெறும் 66,000 டொலருக்கு விற்பனை செய்ய் உள்ளது.காரணம் பாம்புகள்தான்.இவ்வீட்டில் தற்போது வசிப்பவர்கள் Benjamin தம்பதிகள்.
வீட்டில் எங்கு பார்த்தாலும் பாம்புகள்தான் என்கின்றார்கள்.
ஆனால் இப்பாம்புகள் விசம் இல்லாதவை என்றும் மனிதருக்கு தீங்கு இல்லாதவை என்றும் கூறப்படுகின்றது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இரண்டாம் உலக யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட பங்கர்களின் அரிய படங்கள்

இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட பங்கர்களின் கிடைக்கப் பெற்று உள்ளன.இவை இரவு நேரங்களில் படப்பிடிப்பு செய்யப்பட்டு இருக்கின்றன.டச் நாட்டு புகைப்படக் கலைஞர்களில் ஒருவர் Jonathan Andrew. இவர் நெதர்லாந்தில் வசிக்கின்றார்.இந்த அரிய படங்களை இவர்தான் கமராவில் எடுத்துக் கொண்டார்.







பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

வானத்தில் புதிய சூரியன் தோன்றும்: விஞ்ஞானிகளின் அதிர்ச்சித் தகவல்!



தற்போதைய உலகில் விண்ணில் பல அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் வானில் மிகவும் சக்தி வாய்ந்த வெளிச்சம் ஒன்று ஏற்பட உள்ளது. பூமி தோன்றிய நாள் முதல் இது மாதிரியான நிகழ்வு ஏற்பட்டதில்லை.
இந்த வெளிச்சமானது இரவை பகல் போன்று மாற்றும். இந்த நிகழ்வானது ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அதிசக்தி வாய்ந்த விண் மீன் கூட்டமானது பூமியில் இருந்து 640 வெளிச்சம் ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த விண் மீன் கூட்டங்கள்  சிவப்பு நிறத்தில் ராட்சத வடிவிலானவை.
இவற்றின் ஆயுட்காலம் முடியும்போது அவை கூட்டம் கூட்டமாக வெடித்து சிதறும். இவ்வாறு வெடித்து சிதறும்போது வானில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அதிசக்தி வாய்ந்த வெளிச்சம் தோன்றும்.
இது மற்றொரு சூரியன் புதிதாக தோன்றியதை போன்ற தோற்றத்தை உருவாக்கும். இச்சம்பவம் இந்த ஆண்டு இறுதியில் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அப்படி இல்லாவிட்டால் அடுத்த 10 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு தான் உண்டாகும். இந்த தகவலை ஆஸ்திரேலியாவின் தெற்கு குவின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் "பிராட்கார்டர்" தெரிவித்துள்ளார்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

surf2gether: யூடியூப் வீடியோவை பார்வையிட்டவாறே நண்பருடன் சோ்ந்து அரட்டை அடிப்பதற்கு


இணையத்தில் யூடியூப் வீடியோ ஒன்றை நண்பருடன் சேர்ந்து பார்வையிட வேண்டுமெனில் நாம் செய்வது என்னவென்றால், அதன் முகவரியை கொடுத்து பார்வையிடச் சொல்வோம்.
ஆனால் இருவரும் ஒரே நேரத்தில் பார்வையிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த surf2gether என்ற இணையத்தளம் தரும் சேவையை பயன்படுத்தலாம்.
இதன் மூலம் இருவருக்கும் வீடியோ ஒரே மாதிரி ஒளிபரப்பபடுவதுடன், அந்த வீடியோவைப்பற்றிய கருத்துக்களையும் சாட் ரூமில் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு சென்று புதிய வீடியோவை பார்வையிடுவதற்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
பெயரை மட்டும் கொடுத்துவிட்டு நண்பரை இணையுமாறு அதன் முகவரியை வழங்கி அழைத்தால் அவரும் இணைந்தவுடன் வீடியோவைப்ப் பார்வையிடலாம்.
வலப்பக்கதில் சாட் செய்து கொள்ளவும் முடியும். குழுவினராக இணைந்துகொள்ளவும் முடிகிறது.
சாட்டில் இருக்கும் ஒருவர் வேறு வீடியோவை தேர்வு செய்தால் அனைவரும் அதையே பார்வையிடவும் முடியும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இலவச வயர்லெஸ் இணைப்பை பயன்படுத்த வயர்லெஸ் எயர் கிராக்கிங்(Wireless Air Cracking) முறை.



வயர்லெஸ் என்பது மின்சார கடத்திகள் அல்லது கம்பிகளின் பயன்பாடின்றி தகவல்களை பரிமாற்றுவது ஆகும். இந்த தூரங்கள் குறைந்த அல்லது அதிகமான தூரங்களாக கூட இருக்கலாம்.
வயர்லெஸ் வலையமைப்புகள் அதிகமாக கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது. வயர்லெஸ் அமைப்பு உள்ள எந்தவொரு இடத்தில் இருந்தும் நாம் இணையத்தை பயன்படுத்த முடியும்.
எனினும் அங்கீராமற்ற நபர்கள் பயன்படுத்தாத வகையில் கடவுச்சொல் கொடுக்கப்பட்டிருக்கும். இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி வயர்லெஸ் அமைப்பை பயன்படுத்த முடியும்.
இதில் ஒரு முறையே வயர்லெஸ் எயர் கிராக்கிங் முறை. இதற்கான மென்பொருளை தரவிறக்கம் செய்ய.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உங்கள் அடுத்த கம்ப்யூட்டராகும் "டேப்ளட் பிசி(Tablet PC)"


கம்ப்யூட்டர் உலகம் தற்போது நான்கு முனைச் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் எட்டு எடுத்து வைப்பது என்று புரியாமல் உள்ளது. இன்றைக்கு பலருக்கு, முதல் கம்ப்யூட்டர் எது என்றால் அது பெர்சனல் கம்ப்யூட்டராக இல்லை. ஸ்மார்ட் போனாகத்தான் உள்ளது.
ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் போன்கள் நாம் எங்கு சென்றாலும் உடன் வருகின்றன. அதன் மூலம் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. எவ்வளவுதான் திறனுடன் செயல்பட்டாலும், ஒரு ஸ்மார்ட் போன், பெர்சனல் கம்ப்யூட்டராக முழுமையாக இடம் பெறாது.
எனவே தான் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும், ஸ்மார்ட் போனுக்கும் இடையே ஒரு சாதனம் இரண்டின் பயன்பாட்டினையும் முழுமையாகத் தரும் வகையில் தேவையாய் இருந்தது. அந்த இடத்தில் டேப்ளட் பிசி வந்து நம் தேவைகளை நிறைவு செய்து வருகிறது.
இதனால், கம்ப்யூட்டர் பயன்பாடு தற்போது இரு வகை கணினிகளில் மேற்கொள்ளப்பட்டு, எதில் தொடர்வது என்ற கேள்விக் குறியுடன் தொடர்கிறது. ஆனால், அண்மையில் லாஸ்வேகாஸ் நகரில் நடந்து முடிந்த தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பட்டயக் கணிப்பொறிகளைக் (Tablet PC) காண்கையில், அதன் மாடல் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்கையில், இவை மொத்தமாக மக்களை சென்றடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது. எனவே நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அதன் சில அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
1. பழைய மாடலில் மாற்றம்: தற்போதைய டேப்ளட் பிசி இதன் முன்னோடிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. முதலில் ஒரு டேப்ளட் பிசி, லேப்டாப் கம்ப்யூட்டரில், சுழலும் திரை ஒன்றை இணைத்தது போல வடிவமைக்கப்பட்டது. ஆனால் மக்களிடம் இவை எடுபடவில்லை. பின்னர், ஸ்மார்ட் போன் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் சாதனம் உண்டாக்கிய சலசலப்பும், மக்களை புதிய கோணத்தில் பார்க்க வைத்தது. ஐ-பேட் இதுவரை டேப்ளட் பிசி குறித்து நிலவி வந்த அம்சங்களை மாற்றிப் போட வைத்தது. அந்நாளைய காம்போசிசன் நோட்டுப் போல தோற்றத்தில் பல டேப்ளட் பிசிக்கள் வடிவமைப்பு கொண்டுள்ளன. அனைத்தும் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
2. புதிய ஸ்லேட்கள்: பல டேப்ளட் பிசிக்கள் புதிய டிஜிட்டல் ஸ்லேட்டுகளாகத்தான் வடிவம் பெற்றுள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட். 9.5 அங்குல அகலத்தில், 7.5 அங்குல உயரத்தில், 0.5 அங்குல தடிமனில் இது வெளியான போது, இதுவே டேப்ளட் பிசிக்களின், வரையறுக்கப்பட்ட வடிவமாக அமைந்துவிட்டது. பின்னர் சாம்சங் கேலக்ஸி டேப் 7 அங்குல திரையுடன் அறிமுகமான போது, கைகளுக்குள் அடங்குவதற்கான சரியான அளவு அது என வரையறை செய்யப்பட்டது.
தற்போது நாம் விரும்பும் அளவில் திரையுடன் கூடிய டேப்ளட் பிசிக்களை தேர்ந்தெடுக்கலாம். டேப்ளட் பிசிக்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நிச்சயம் இது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
3. ஆப்பரேட்டிங் சிஸ்டம்: பிரியமான அளவில் டேப்ளட் பிசிக்கள் தயார் ஆவது மட்டுமின்றி, இவற்றின் இயக்கத்திற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில் ஐபோன், ஐபேட், ஐ பாட் டச் ஆகியவற்றில் இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முன்னணியில் உள்ளது. அடுத்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இடம் பெறுகிறது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன், 12க்கும் மேற்பட்ட புதிய டேப்ளட் பிசிக்கள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் சிஸ்டமும் 1.6, 2.0, 2.1 மற்றும் 2.2 எனப் பல பதிப்புகளில் கிடைக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, டேப்ளட் பிசிக்கானதாகக் கொண்டு வந்துள்ளது. பிளாக்பெரியைத் தயாரிக்கும் ஆர்.ஐ.எம். நிறுவனம், QNX என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு வகையாகும். டேப்ளட் பிசி தயாரிப்பில், பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறிய நிறுவனங்களும், தங்கள் பங்கைப் பிடிக்க பலத்த போட்டியில் இறங்கி உள்ளன.
4. நிறைய எதிர்பார்ப்புகள்: இத்தனை மாடல் டேப்ளட் பிசிக்களும் போட்டியில் இறங்கியுள்ள நிலையில், இவற்றில் மக்கள் எதிர்பார்க்கும் அம்சங்களும் அதிகரித்து வருகின்றன. எங்கும் எடுத்துச் செல்லுதல், நெட்வொர்க் இணைப்பு பெறுதல் ஆகிய ஸ்மார்ட்போன் வசதிகளுடன், லேப்டாப் ஒன்றின் செயல்பாடுகளையும் இணைத்துத் தருவதால், குறிப்பாக பெரிய திரை, அதிக திறனுடன் கூடிய ப்ராசசர் மற்றும் கேமரா மற்றும் துணை சாதனங்கள் கொண்டு இவை இருப்பதனால், பயன்படுத்துபவர்கள் இதில் இன்னும் பல வேலைகளை முடிக்கப் பயன்படுத்துமா என்று எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக, இயங்கும் இடத்திற்கேற்ற வகையில் இணைய தகவல்களைத் தரும் பணிகளில், டேப்ளட் பிசிக்கள் தங்கள் ஜி.பி.எஸ். திறனுடன் செயல்படுவதால், இவற்றின் பயன்களின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. மேலும் முன் பகுதியிலும் தரப்படும் கேமரா, வீடியோ கான்பரன்சிங் வசதியை மிக எளிதாகத் தருகிறது. இவை சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுடனான தொடர்பை இன்னும் எளிதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகின்றன.
டேப்ளட் பிசிக்கள், தற்போது கையாளப்படும் மொபைல் கேமிங் வசதிகளை இன்னும் சிறப்பாக்கும். ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர் மற்றும் கூகுள் ஆண்ட்ராய்ட் மார்க்கட் தளங்களில் ஹை டெபனிஷன் முப்பரிமாண விளையாட்டுக்கள் இதற்கெனவே குவிந்து கிடக்கின்றன. பலர் ஒரே நேரத்தில் வேறு வேறான இடங்களிலிருந்தவாறே விளையாடுவது டேப்ளட் பிசிக்கள் மூலம் மிக எளிதாகும். குறைந்த கட்டணத்தில், எப்போதும் இணைய இணைப்பில் இருக்கும் வகையிலான கம்ப்யூட்டர்களை, டேப்ளட் பிசிக்கள் தரும். பெரும்பாலான டேப்ளட் பிசிக்கள், வை-பி மற்றும் 3ஜி தொடர்பினைத் தரும் வகையில் வடிவமைக்கப்படுவதால், நெட்வொர்க் இணைப்பு எளிதாகும்.
ஆப்பிள், சாம்சங். எச்.பி. போன்ற நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்களுடன், டெல், ஏசர் நிறுவனங்களின் டேப்ளட்களும் தற்போது மார்க்கட்டில் இறங்குகின்றன. இதில் நெட்புக் கம்ப்யூட்டர் விற்பனையில், உலக அளவில் 36% பங்கினைக் கொண்டுள்ள ஏசர் நிறுவனம் , 4.8 மற்றும் 10 அங்குல திரைகளுடன் இவற்றை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதே வகையில் டெல் நிறுவனமும் இறங்கியுள்ளது.
பெயர் பெற்ற நிறுவனங்களின் டேப்ளட் பிசியின் விலை ரூ.70,000 முதல் ரூ. 90,000 வரை செல்கிறது. அதிகம் பிரபலமாகாத சீனத்து டேப்ளட் பிசிக்கள், இணைய தளம் மூலமாகவும் சில ஏஜன்சிகள் மூலமாகவும் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ. 20,000 முதல் ரூ.50,000 வரை உள்ளன. இந்திய சேர்ந்த நோஷன் இன்க் (Notion Inc) என்ற நிறுவனம், ஐ-பேடில் உள்ளதைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் கொண்ட டேப்ளட் பிசி ஒன்றை ரூ. 45,000 என்ற அளவில் தருவதாக அறிவித்துள்ளது.
இதே போல ஆலிவ் பேட் என்ற 3ஜி வசதி கொண்ட 7 அங்குல திரை கொண்ட டேப்ளட் பிசி ரூ. 50,000க்குக் கிடைக்கிறது. இவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்தால், நிச்சயம் இந்த சந்தையில் வெற்றி பெறும். முதல் வெற்றி பெற்றால், லாபமும் அடையும். மக்களும் பயன் பெறுவார்கள். பெரிய நிறுவனங்கள், இந்த டேப்ளட் பிசிக்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை அதிக அளவில் சந்தையைப் பிடிக்கும் போட்டியில் இனி பலமாக இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும், டேப்ளட் பிசி ஒருவரின் இரண்டாவது கம்ப்யூட்டராகத்தான் மக்களால் முதலில் ஏற்றுக் கொள்ளப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. பெரும்பான்மை யானவர்களால் இயக்கப்படும் விண்டோஸ் இயக்கம் முழுமையாக, டேப்ளட் பிசியில் இயங்கும் நிலை வரும்போதுதான், டேப்ளட் பிசிக்கள் பெரிய அளவில் பெருகும்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இந்தியா, சீனா முந்தும் அபாயம்: அமெரிக்கர்களுக்கு ஒபாமா எச்சரிக்கை


விரைவான வளர்ச்சியை அடைய கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி போன்றவற்றிற்காக  இந்தியா போன்ற வளரும் நாடுகள் அதிகம் செலவிடுகின்றன. எனவே புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று ஒபாமா கூறினார்.
அமெரிக்க பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய ஒபாமா, இது குறித்து பேசியதாவது: உலகத்திற்கு சாதகமான அமைதி மற்றும் வளத்துக்காக, தெற்காசிய நாடுகளுடன் புது உறவை மேற்கொண்டுள்ளோம். வேலை வாய்ப்பை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியாவும், சீனாவும் வளர்ந்துள்ளன.
கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி ஆகியவற்றில் நாம் இந்த நாடுகளை விட பின் தங்கும் அபாயம் உருவாகி வருகிறது. காலச்சூழலுக்கு ஏற்ப கல்வியில் புதுமையை புகுத்துவதால், அவர்கள் உலக போட்டிகளை சமாளிக்கும் திறன் பெற்றுள்ளனர். இளம் வயதிலேயே அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிவியல், கணிதங்களை கற்பிக்கின்றனர். கல்வித் துறையில் அதிக முதலீடுகளை செய்கின்றனர். இதனால், அவர்கள் வேகமாக முன்னேறுகின்றனர்.
இந்தியா மற்றும் சீனாவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவில் இரண்டரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. சீனா, இந்தியா போன்ற நாடுகள் கல்வியில் நமக்கு போட்டியாக இருப்பதால் கல்வியில் புதுமையும், சீர்திருத்தமும் செய்ய வேண்டியது அவசியமாகிறது. அவற்றை ஈடு கட்டி சமாளிப்பதில் அரசு அக்கறை காட்டி வருகிறது.
பத்து ஆண்டுகளுக்குள் அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கணிதம் ஆகிய துறைகளில் ஒரு லட்சம் ஆசிரியர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அல் - குவைதா பயங்கரவாதிகள் தொடர்ந்து அமெரிக்காவை தாக்க திட்டமிட்டுள்ளனர். அமெரிக்க புலனாய்வுத் துறையினர், பயங்கரவாதிகளின் திட்டத்தை புரிந்து கொண்டு அதை முறியடித்து வருகின்றனர். அமெரிக்க குடும்பத்தில் முஸ்லிம்களும் ஒரு அங்கம்.
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள அல் - குவைதாவினர், அந்நாட்டு அரசினால் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், பாகிஸ்தானில் அல் - குவைதாவினரின் செல்வாக்கு குறைந்து விட்டது. ஆப்கன் மற்றும் அரபு நாடுகள் எங்கிருந்தாலும் பயங்கரவாதிகளை முறியடிப்போம். அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் பனிப்போர் காணப்பட்ட காலத்தில் சோவியத் யூனியன் ஸ்புட்னிக் விண்கலத்தை நிலவுக்கு செலுத்தி சாதனை படைத்தது.
அன்று "நாசா' என்ற அமைப்பு இல்லை. ஆனால், கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் அதிக முதலீடு செய்து பலனைக் கண்டோம். விளைவு, சந்திரனுக்கு பயணம் உட்பட சாதனைகள். இன்று, நாம் புதிதாக ஸ்புட்னிக் யுகத்தைக் காண வேண்டும். இவ்வாறு ஒபாமா பேசினார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

எகிப்து அதிபரை எதிர்த்து போராட்டம்: மகன் பிரிட்டனில் தஞ்சம்


எகிப்து நாட்டில் 30 ஆண்டுகளாக அதிபராக  இருந்து வரும் முபாரக், சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். எகிப்தில் விலைவாசி உயர்வு அதிகமாக உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது.
இதனால் அதிபர் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் இப்போது அதிபருக்கு எதிராக தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். எகிப்தின் பக்கத்து நாடான துனுசியாவில் அந்த நாட்டு அதிபருக்கு எதிராக நடந்த போராட்டத்தால் அதிபரே நாட்டை விட்டு ஓடி விட்டார். அங்கு நடந்த சம்பவம் எகிப்து மக்கள் மனதிலும் எதிரொலித்து இருக்கிறது.
எனவே துனிசியா அதிபரை போல எகிப்து அதிபரையும் பதவியை விட்டு விலக வைக்க வேண்டும் என தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகரம் கெய்ரோ, சூயஸ் மச்சாலா, அலெக்சான் டிரியா உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கலவரம் வெடித்துள்ளது.
சூயஸ் நகரில் அருங்காட்சி அலுவலகம் மற்றும் அரசு கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தை ஒடுக்க போலீசார் பல இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயம் அடைந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இது வரை 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலவரம் தீவிரமடைந்திருப்பதைத் தொடர்ந்து அதிபரின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் அவரது மகன் காமல் முபாரக், மனைவி, மகளுடன் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார். போராட்டம் தீவிரம் அடைந்ததால் அதிபர் முபாரக் பதவியை இழக்க வேண்டியது வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சிக்கன நடவடிக்கையால் பி.பி.சி வானொலியின் 7 மொழிகள் ஒலிபரப்பு நிறுத்தம்! 650 பேர் வேலை இழப்பு


லண்டன் அரசு ஒலிபரப்பு நிறுவனமான பி.பி.சி. நிறுவனம் ரேடியோ மற்றும் டி.வி. ஒலிபரப்புகளை நடத்தி வருகிறது. நீண்ட காலமாக பி.பி.சி. ரேடியோ 32 மொழிகளில் ஒலிபரப்பி வந்தது. 

இந்திய மொழிகளான இந்தி, தமிழ், வங்காளம், நேபாளி மொழிகளிலும் ரேடியோ ஒலிபரப்புகள் உள்ளன. இவற்றில் ஆயிரக் கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

பல்வேறு மொழிகளிலும் ஒலிபரப்பு செய்வதில் அதிக அளவில் செலவாகிறது. இதை கட்டுப்படுத்த பி.பி.சி. நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 7 மொழிகளின் ஒலிபரப்பை நிறுத்த பி.பி.சி. முடிவு செய்துள்ளது. 

அல்பேனியன், வெசிடோனியன், போர்ச்சுகீஸ், ஆப்ரிக்கன், செர்பியன் மொழிகள் உள்ளிட்ட 7 ஒலிபரப்புகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த துறைகளில் பணியாற்றிய 650 ஊழியர்களும் வேலை இழக்கின்றனர். 

பி.பி.சி. ஒலிபரப்பு செலவுக்கு இங்கிலாந்து வெளியுறவு இலாகா மூலம் பணம் ஒதுக்கப்பட்டு வந்தது. இப்போது செலவுக்கு தேவையான பணம் ஒதுக்கப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஈராக்கில் பயங்கர குண்டு வெடிப்பு: 37 பேர் பலி


ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாக்தில் இன்று மதியம் நடைபெற்ற பயங்கர கார்குண்டு வெடிப்பில் 37 பேர் பலியானார்கள். 

78 பேர் படுகாயம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் நடந்த தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, January 24, 2011

கனேடியப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் நாள் அறிவிப்பு!


ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள கனேடியப் படைகள் அங்கிருந்து ஜூன் மாத நடுப்பகுதி முதல் வெளியேற ஆரம்பிக்கும். 

ஜூலை மாத இறுதிக்குள் கனடா படையினர் யாவரும் கந்தஹார் விமானப் படைத் தளத்தை அல்லது கனடாவை வந்தடைந்து விடுவார்கள் என்று ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள கனேடியப் படைகளின் பிரதம கட்டளையிடும் அதிகாரி லெப்னினன்ட் கேர்ணல் ஹென்றி மைக்கல் சென்லூயிஸ் அறிவித்துள்ளார். 

எனக்கு இது சம்பந்தமான திட்டவட்டமான உத்தரவுகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் இதில் தான் நாம் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது என்று அவர் கூறினார். 

ஞாயிற்றுக் கிழமை ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார். 2006 முதல் ஆப்கானிஸ்தானில் மாறிமாறி இருந்து வரும் கனடா இராணுவத்தின் 10 யுத்தப் பிரிவுகளுக்கு இவர் தலைமை தாங்கி வருகின்றார். 

எமது சிப்பாய்கள் மனதிலும் இதே எண்ணம் தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொருவரும் அந்த நாளுக்காகக் காத்திருக்கின்றனர், கனடா, அமெரிக்கா மற்றும் நேட்டோவின் தென் பிராந்தியக் கட்டளையகம் என்பன இப்போது இது பற்றி விரிவான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளன.

கடந்த பல மாதங்களாகவே பேச்சுவார்த்தைகளில் நாம் ஈடுபட்டு வருகின்றோம், என்று அவர் மேலும் கூறினார். ஜூலை மாதத்துக்குள் தனது பணிகளைப் பூர்த்தி செய்யுமாறு கனடாவிடம் ஏற்கனவே வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. 

கனடா படைகள் தற்போது நிலை கொண்டுள்ள சில இடங்களை ஏப்பிரல் மாதமளவில் அமெரிக்கப்படைகளிடம் ஒப்படைக்க முடியுமா என்பது பற்றி தற்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ரஷியாவில் 12 வயது சிறுவனுக்காக பள்ளியில் படிக்கும் ரோபோ


ரஷிய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவன் ஸ்டீபன் சுபின் (12). இவன் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தான். திடீரென அவன் “லுகேமியா” (ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவினால் ஏற்படும் விசித் திர நோய்) நோயினால் பாதிக்கப்பட்டான். எனவே அவன் பள்ளிக்கு சென்று படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அவனது படிப்பு பாதிக்காத வகையில் புதிய வகை ஏற்பாடு செய்யப்பட்டது.

அதாவது, அவனுக்கு பதிலாக ஒரு “ரோபா” (எந்திரமனிதன்) பள்ளிக்கு சென்று பாடம் படிக்கிறது. வகுப்பில் இருந்த படியே அந்த “ரோபோ” பாடங்களை கவனித்து தனது “மொமரியில்” பதிவு செய்து கொள்கிறது. அவற்றை சிறுவன் ஸ்டீபன் வீட்டில் இருந்தபடியே இன்டர் நெட் மூலம் படித்து வருகிறான். ரோபோவுக்கும், ஸ்டீபன் வீட்டில் உள்ள இண்டர் நெட்டுக்கும் இடையே “ரிமோட் கண்ட்ரோல்” இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோவை கடந்த 2008-ம் ஆண்டு மாஸ்கோ நிறுவனம் வடிவமைத்தது. அதில் ஒரு வெப் கேமரா, ஒரு மைக்ரோ போன் மற்றும் லவ்டு ஸ்பீக்கர் மற்றும் ரோபோ கிரகித்த செய்திகளை ஒளிபரப்பும் வசதி போன்றவை உள்ளன. பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட அதன் விலை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம். வகுப்பறையில் இந்த “ரோபோ” மற்ற சிறுவர்களை போன்று நடந்து கொள்கிறது.

ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை உன்னிப்பாக கவனித்து அவற்றை வீட்டில் இருக்கும் ஸ்டீபனுக்கு அனுப்புகிறது. வகுப்பு நடைபெறும் போது ரோபோவில் உள்ள திரையின் வாயிலாக பாடங்களின் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் ஸ்டீபன் கேட்டு தெரிந்து கொள்கிறான்.

இந்த தகவலை ஆசிரியர் அல்லா ஜீவக் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் கணிதம், ரஷியன், வரலாறு, புவியியல், ஆங்கிலம், பிரெஞ்ச், உள்ளிட்ட அனைத்து பாடங்களையும் இந்த “ரோபோ” படித்து அதை ஸ்டீபனுக்கு வழங்குகிறது என்றும் கூறினான்.

இதற்கிடையே இந்த “ரோபோ” தனது நண்பன் என்றும் அது தனக்கு சிறந்த முறையில் உதவிபுரிகிறது என்றும் ஸ்டீபன் தெரிவித்துள்ளார். தனது வீட்டில் இருந்தபடியே “ரோபோ”வை அதிவேகமாகவும், வேகம் குறைக்கவும் இயக்க முடியும். அதன் தலையை வலது புறமும், இடது புறமும் திருப்பி பாடத்தை கவனிக்க செய்ய முடிகிறது. இதன் மூலம் நானே வகுப்பறையில் இருந்து பாடம் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று சிறுவன் ஸ்டீபன் தெரிவித்தான்.

இந்த “ரோபோ”பை இன்டர்நெட் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் இயக்க முடியும்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

விக்கிபீடியா நிறுவுனருக்கு சுவிட்சர்லாந்தில் விருது


விக்கிபீடியா எனப்படும் இணைய தகவல் களஞ்சிய நிறுவுனர் ஜிம்மி வேல்ஸிற்கு சுவிட்சர்லாந்தில் விருது வழங்கப்படவுள்ளது.
விக்கிபீடியா பத்தாவது ஆண்டு நிறைவை அண்மையில் கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 26ம் திகதி விக்கிபீடியா நிறுவுனர் ஜிம்மி வேல்ஸ் சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
"கொட்டலிப் டொட்வெய்லர்" என்ற விருது ஜிம்மி வேல்ஸிற்கு வழங்கப்படவுள்ளது.
இந்த விருதுடன் 100,000 சுவிஸ் பிராங்குகளும் ஜிம்மி வேல்ஸிற்கு வழங்கப்படவுள்ளது.
விக்கிபீடியா தகவல் களஞ்சியத்தில் 270 மொழிகளில் 17 மில்லியனுக்கும் மேற்பட்ட தரவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவி;க்கப்படுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

"மோனாலிசா" ஓவியத்தின் பிண்ணனி: புதிய தகவல்கள்


இத்தாலியின் புகழ்பெற்ற லியானார்டோ டாவின்சியின் பிரபலமான மோனாலிசா ஓவியத்தைப் பற்றி,பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஓவியத்துக்கு யார் "மாடலாக' இருந்தனர், ஓவியத்தின் பின்னணிக் காட்சிகள் கற்பனையா? அல்லது உண்மையா?
லியானார்டோ டாவின்சி வரலாற்றுப் புகழ்பெற்ற ஓவியர். இவரது ஓவியங்களுள் இன்று வரை மிகுந்த வரவேற்பை பெற்றது, மோனாலிசா ஓவியம். இப்படத்தில் லிசாவின் பின்னணியில் ஒரு பாலம் மற்றும் சாலை மங்கலாகக் காட்டப்பட்டிருக்கும். இந்த ஓவியத்தைப் பற்றி இதுவரை பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன.
இதுவரைக்கும் அனைவரும் லிசாவைப் பற்றி மட்டுமே ஆய்வு செய்தனர். அவரின் பின்னணியில் உள்ளதை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலமும் சாலையும் டாவின்சியின் கற்பனைச் சித்திரங்கள் என்றே கருதினர்.
இந்நிலையில், இதுகுறித்து கர்லா க்ளோரி என்பவர் விரிவான ஆய்வுகளைச் மேற்கொண்டார். பொதுவாக, மோனாலிசா ஓவியத்துக்காக, இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரில் வாழ்ந்த லிசா டெல் ஜியோகாண்டோ என்ற பெண்ணைத் தான் டாவின்சி "மாடலாக' பயன்படுத்தினார் என்று நம்பப்படுகிறது.
ஆனால் 15ம் நூற்றாண்டில், இத்தாலியின் மிலன் நகரத்து இளவரசியாக இருந்த பியங்கா கியோவன்னா போர்சா என்ற பெண்ணையே டாவின்சி, தனது ஓவியத்துக்கான "மாடலாக' பயன்படுத்தியுள்ளார் என்று கர்லா தனது ஆய்வில் கண்டறிந்துள்ளார்.
இந்த ஆய்வில் அவர் ஈடுபட்டிருந்த போதுதான், லிசாவின் பின்னணியில் உள்ள காட்சிகள், இத்தாலியின் வடபகுதியில் உள்ள போபியோ என்ற சிறு நகரத்தில் உள்ளன என்பதையும் கண்டறிந்தார். அந்நகரத்தின் மத்தியில் உள்ள அரண்மனை ஜன்னல் வழியாகப் பார்த்தால் லிசாவின் பின்னணிக் காட்சிகள் அப்படியே தெரிவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவரது ஆய்வு உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இன்றும் அந்நகரத்தில் லிசாவின் பின்னணியில் தெரியும் பாலம் ஒன்று உள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF