Sunday, November 28, 2010

இந்தியா, பிரிட்டனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை



நியூயார்க் : ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் நடத்திய அட்டூழியத்தை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய, "விக்கி லீக்ஸ்' இணையதளம், இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் பல்வேறு ரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக அறிவித்ததையடுத்து, அமெரிக்கா தன் கூட்டணி நாடுகளான இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு, இது தொடர்பாக முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜூலியன் அசேஞ்ச் என்பவர் நிறுவிய, "விக்கிலீக்ஸ்' நிறுவனம், கடந்த அக்டோபரில் ஈராக்கில் அமெரிக்கா நடத்திய போர் அட்டூழியங்கள் குறித்த நான்கு லட்சம் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது. அதன்பின், ஆப்கனில் அமெரிக்காவின் போர் குறித்த 90 ஆயிரம் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது.இதையடுத்து, ஜூலியன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஒருவாரம் முன்பு அவரைக் கைது செய்வதற்கு, ஸ்விட்சர்லாந்து கோர்ட் ஒன்று அனுமதி அளித்தது.

இந்நிலையில், இவ்வார ஆரம்பத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜூலியன், "அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் பற்றிய ரகசிய ஆவணங்கள் விரைவில் வெளியிடப்படும். இதுவரை வெளியிட்டதை விட அவை ஏழு மடங்கு அதிகமாக இருக்கும்' என தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார். கூட்டணி நாடுகளுக்கு முன்னெச்சரிக்கை:ஆனால் எப்போது அந்த ஆவணங்கள் வெளியிடப்படும் என்ற தகவலை அவர் கூறவில்லை.

அவரது பேட்டிக்குப் பின், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மத்தியில் கிலி பிடித்துள்ளது.அதனால், தன் கூட்டணி நாடுகளான இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல், ஜெர்மனி, ரஷ்யா, துருக்கி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு அமெரிக்கா நேற்று முன்னெச்சரிக்கைத் தகவல் ஒன்றை இது தொடர்பாக விடுத்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பி.ஜே. கிரவுலி கூறியதாவது:

ரகசிய ஆவணங்கள் வெளியிடப்படக் கூடும் என இந்தியாவை எச்சரித்துள்ளோம். ஆனால், "விக்கிலீக்ஸ்' தன்னிடம் வைத்திருக்கும் ஆவணங்கள் குறித்து எங்களுக்கு சரியாக எதுவும் தெரியவில்லை. இந்த ஆவணங்கள் வெளியிடப்படக் கூடாது.

இந்த ஆவணங்களை வெளியிடுவது அமெரிக்க பாதுகாப்பு மற்றும் நாட்டு நலன்களுக்கு ஆபத்தையே விளைவிக்கும். இணையம் மூலம் ஒவ்வொரு அரசும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றன. அதன் மூலம் பரஸ்பரம் நம்பிக்கையும் ஏற்படுகிறது. இந்தக் கருத்துக்கள் பத்திரிகைகள் மற்றும் "டிவி', ரேடியோக்களில் தலைப்புச் செய்தியாக வரும் போது அந்த நம்பிக்கை போய்விடுகிறது.இப்படி வெளியிடுவதன் மூலம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கிடையில் ஒரு வித பதட்டத்தை உருவாக்கலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர்.இவ்வாறு கிரவுலி தெரிவித்தார்.

"விக்கிலீக்சின் தொடரும் இந்த நடவடிக்கைகள் மிகவும் அபாயகரமானவை' என, ராணுவ அதிகாரிகளின் தலைவர் அட்மிரல் மைக் முல்லன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு பயம் ஏன்?"விக்கிலீக்ஸ்' வெளியிட்ட ஈராக் தொடர்பான ஆவணங்கள், அமெரிக்க வீரர்கள் ஈராக்கியர்களை எவ்விதம் சித்ரவதை செய்தனர் என்பதை விரிவாக விளக்குகின்றன.

மேலும் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி படைகள் நடந்து கொண்டதையும் அவை காட்டுகின்றன.இந்நிலையில், ஈராக்கிலுள்ள அல்-குவைதா பயங்கரவாதிகளுக்கு துருக்கி உதவியது, ஈராக்கில் உள்ள ஓர் இனமான குர்திஷ் இனத்தவரை துருக்கிக்கு எதிராக கலகத்தில் ஈடுபடும் படி அமெரிக்கா தூண்டியது, இஸ்ரேலுக்கு அமெரிக்கா செய்யும் ரகசிய உதவிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இத்தகவல்கள் வெளியானால், ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படை வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றுதான் அமெரிக்கா பயப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கொரியாவுக்குள் நுழைந்தால் நடப்பதே வேறு: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை



தென்கொரியா, தனது மக்களை போர்க் கேடயமாக பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ள வடகொரியா, "அமெரிக்காவின் "ஜார்ஜ் வாஷிங்டன்,' கொரியாவின் மஞ்சள் கடல் எல்லைக்குள் வந்தால் அதன்பின் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது' என்று, புதிய மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து விடுத்துவரும் எச்சரிக்கைகளால் தென்கொரிய மக்களிடையே மேலும் மேலும் கோபம் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில், தென்கொரியாவுக்கு சொந்தமான இயான்பியாங் தீவு மீது வடகொரியா நடத்திய தாக்குதலில் தென்கொரிய கடற்படைவீரர்கள் இருவர், 60 வயதுள்ள இரண்டு பேர் என நான்கு பேர் பலியாயினர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.நேற்று தென்கொரியத் தலைநகர் சியோல் அருகில் உள்ள சியோன்க்னம் நகரின் ராணுவ மருத்துவமனையில், பலியான இரு கடற்படை வீரர்களுக்கான இறுதியஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்கொரிய பிரதமர் கிம் ஹ்வாங் சிக் உட்பட அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய புதிய ராணுவ அமைச்சர் கிம் க்வான் ஜின் கூறுகையில், "வடகொரியாவின் இச்செயலுக்கு நாம் இரண்டு மடங்கு பதிலடி கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.அதேநேரம், சியோலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் கடற்படை வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வடகொரியாவின் கொடி மற்றும் அதிபர் படங்களை எரித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

வடகொரியா புதிய மிரட்டல்:

இந்நிலையில், வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது: கொரியாவின் மேற்குக் கடற்பகுதியில் அமெரிக்கா தன் போர்க்கப்பலை கொண்டு வருமானால், அதன் விளைவுகள் என்ன என்று யாராலும் கணிக்க முடியாது. வடகொரியாவின் தாக்குதலில் இறந்து போன பொதுமக்களை வைத்து தென்கொரியா தீவிரப் பிரசாரம் செய்கிறது. தாக்குதலுக்கு முன், அதிகாலையில் தென்கொரியாவுக்கு போன் மூலம் வடகொரியா நோட்டீஸ் விட்டது. கடைசி நேர மோதலைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடுக்கப்பட்ட அந்த நோட்டீசை தென்கொரியா புறக்கணித்து விட்டு, மேலும் மேலும் வடகொரியாவைத் தூண்டிவிடும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.இவ்வாறு அதில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சீனா முயற்சி:

இவ்விவகாரத்தில் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தும் படி சீனாவுக்கு பலதரப்பில் இருந்தும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சி, வடகொரியா தூதரை நேரில் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, அமெரிக்க மற்றும் தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களுடன் போனில் உரையாடினார். இவ்விவகாரத்தில், வடகொரியாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அமெரிக்கா, இந்த கூட்டு ராணுவப் பயிற்சி வடகொரியத் தாக்குதலுக்கு முன்பே திட்டமிட்டதுதான் என்று கூறியுள்ளது.அமெரிக்காவுடன் தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ள சில மணி நேரங்களே இருந்த நிலையில் வடகொரியா விடுத்துள்ள இச்செய்தியும், சியோலில் நடந்த கடற்படை வீரர்களின் இறுதியஞ்சலி நிகழ்ச்சியும் தென்கொரியாவில் மேலும் பதட்டத்தை அதிகப்படுத்தியுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கொ‌ரிய ‌‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் போ‌ர் மூளு‌ம் அபாய‌ம் : வட கொ‌ரியா எ‌ச்ச‌ரி‌க்கை


அமெ‌‌ரி‌க்காவு‌ம், தெ‌ன் கொ‌ரியாவு‌ம் இணை‌ந்து போ‌ர் ஒ‌த்‌திகை நட‌த்துவதா‌ல் கொ‌‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் போ‌ர் மூளு‌ம் அபாய‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக வட கொ‌‌ரியா எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.
தெ‌ன் கொ‌ரியா‌‌வி‌ன் ‌லியோ‌ன் ‌பியோ‌ல் ‌தீ‌வி‌ல் வட கொ‌ரியா கு‌ண்டுகளை ‌வீச‌ி தா‌க்‌கியது. இ‌தி‌ல் 4 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். இத‌ற்கு ப‌‌திலடியாக தெ‌ன் கொ‌‌ரியாவு‌ம், வட கொ‌ரியா ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தியது.
இதை‌த் தொட‌ர்‌ந்து வட கொ‌ரியா ‌மீது போ‌ர் தொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌ன் கொ‌ரியாவை சே‌ர்‌‌ந்த நூ‌ற்று‌க்கண‌க்கான மு‌ன்னா‌ள் போ‌ர் ‌வீர‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.
இ‌ந்‌நில‌ை‌யி‌ல் 75 போ‌ர் ‌விமான‌ங்க‌ள், 6 ஆ‌யிர‌ம் ‌வீர‌ர்களுட‌ன் அமெ‌ரி‌க்கா‌வி‌ன் யு.எ‌‌ஸ்.எ‌ஸ் வா‌‌ஷி‌ங்ட‌ன் எ‌ன்ற போ‌ர் க‌ப்ப‌ல் கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌திற‌்கு வ‌ந்து‌ள்ளது. த‌ற்போது தெ‌ன் கொ‌ரியாவு‌ம், அமெ‌ரி‌க்காவு‌ம் இணை‌ந்து இராணுவ ஒ‌த்‌திகை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன.
மேலு‌ம் அமெ‌ரி‌க்க இராணுவ தளப‌தி வா‌ல்ட‌‌ர் ஷா தா‌க்குதலு‌க்கு ஆளான ‌லியோ‌ன் ‌‌பியோ‌ல் ‌தீ‌வி‌ற்கு செ‌ன்று‌ள்ளா‌ர். இதையடு‌த்து கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் எ‌ந்த ‌நி‌மிட‌த்‌திலு‌ம் போ‌ர் மூளு‌ம் அபாய‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக வட கொ‌‌ரிய அர‌சி‌ன் செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பு தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.
வட கொ‌ரியா‌வி‌ன் மே‌ண்மை‌க்கு‌ம், இறையா‌ண்மை‌க்கு‌ம் ப‌ங்க‌ம் வ‌ந்தா‌ல் தெ‌ன் கொ‌ரிய படைக‌ள் நொறு‌க்க‌ப்படு‌ம் என செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல் எ‌ச்ச‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
வட கொ‌ரிய ம‌க்க‌ள் எ‌தி‌‌ரி படைகளை தோ‌‌ற்கடி‌க்க தயாராக இரு‌ப்பதாகவு‌ம், வா‌ய்வா‌ர்‌த்தைகளா‌ல் மோ‌தி‌க் கொ‌ள்ளு‌ம் சூ‌ழ‌ல் முடி‌ந்து‌வி‌ட்டதாகவு‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

டுபாயில் புஜ்ரி கலிஃபா அருகில் மற்றுமொரு பிரமாண்ட கட்டிடம்


உயரமான கட்டிடங்களால், உலகின் உயரத்தை எட்டிப்பிடித்துள்ள டுபாய், 2011 இல் தனது புதிய பல கட்டிடத்தொகுதிகளை திறக்கவுள்ளது.
இதில் முதன்மையானது, பொதுமக்கள் பாவணைக்கான உலகின் மிக உயரமான கட்டிடமாக இடம்பிடிக்க போகும், பிரின்ஸெஸ் டவர். டுபாயின் புஜ்ரி கலிஃபா கட்டிடத்திற்கு அருகாமையில் 107 மாடிகளை கொண்டதாக அமைக்கப்படும் இக்கட்டிடம் அடுத்தவருடம் திறக்கப்படவிருக்கிறது.
உலகின் உயரமான கட்டிடங்கள், மற்றும் தங்குமிடவசதிகொண்ட கட்டிடங்களுக்கான கவுன்சிலால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் படி இதுவரை பொதுமக்கள் பாவனைக்கான உயரமான கட்டிடமாக, அஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் கட்டிடம் திகழ்கிறது. 323 மீற்றர் கொண்டதும் 78 மாடிகளை கொண்டதுமாக இக்கட்டிடம் கட்டப்பட்டது.
தற்போது இதை முறியடிக்கும் முயற்சியில் டுபாயின் பிரின்ஸெஸ் டவர் நிறுவப்பட்டுள்ளது. இதைவிட, 91 மாடிகளை கொண்ட எலைட் ரெசிடென்ஸ் எனும் கட்டிடமும் டுபாய் மரியானாவில் கட்டிமுடிக்கபப்ட்டுள்ளது. இதுவும் அடுத்தவருட ஆரம்பத்தில் திறக்கப்படவிருக்கிறது. இவற்றின் மூலம் அடுத்த வருட முடிவுக்குள் டுபாய் நகரம் மிகப்பெரும் அபிவிருத்தி தேசமாக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உள்ளேயே இருங்கள்; வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் - பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

நேற்றிரவு பிரிட்டனின் பல இடங்களில் வெப்பநிலை -10 டிகிரிக்கும் மேல் போனது. எதிர்பார்த்ததை விட மிக அதிகமான பனிப்பொழிவும் இருந்தது. ஸ்காட்லாந்து , வட கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் அண்ணளவாக 15 அங்குல பனிப்பொழிவு நேற்று பதிவாகியுள்ளது


மேலும் வானிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் இந்த பகுதிகளில் 40 செண்டிமீட்டர் அளவிற்கு பனிபொழிவு இருக்கும் என்ற எச்சரிக்கைகளும் வெளியாகியுள்ளன
தேவையின்றி சாலைகளுக்கு வருவதை தவிர்த்து உள்ளேயே இருக்குமாறு பொதுமக்களுக்கு போலீஸ் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது


மோசமான் வானிலையினால் பல இடங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகியும் வருகின்றன. ஷெப்பீல்டு அருகே எம்.1 நெடுஞ்சாலையில் நேற்று நடந்த சாலை விபத்தில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாயை காப்பாற்றச் சென்ற ஒருவர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று விடுமுறை நாள் என்பதால் ஷாப்பிங் சென்ற மக்கள் பனிப்பொழிவினால் மிகுந்த அவதிக்குள்ளாகினர்


இன்றிரவு பிரிட்டன் -17 டிகிரி வெப்பநிலையில் நடுங்கும் - பலத்த வானிலை எச்சரிக்கை

இதுவரை கண்டிராத அளவிற்கான உறைய வைக்கும் வெப்பநிலை இன்றிரவு பிரிட்டனை தாக்கவிருப்பதால் மக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும் தேவையான முன்னேற்பாடுகளுடனும் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1985 க்கு பின் இன்று தான் வெப்பநிலை சாதனை அளவையும் விட குறைந்திருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. இன்றிரவு பயணங்களை தவிர்க்குமாறும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் போலீஸ் எச்சரித்துள்ளது.

ஆர்டிக் பகுதிகளில் காணப்படும் பறவை ஒன்று இன்று பிரிட்டனிலும் காணப்பட்டதால் இந்த வாரத்தில் வெப்பநிலை மேலும் குறையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்தின் பிற்பகுதியில் ஸ்காட்லாந்தில் வெப்பநிலை -20 டிகிரியை நெருங்கும் என்பதால் ஸ்காட்லாந்தில் வசிக்கும் மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனே இந்த மாதம் முழுவதும் இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதற்கு முன்னர் நவம்பர் 14, 1919 இல் ஸ்காட்லாந்தில் மிகவும் குறைந்த பட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வருடம் அதையும் விட வெப்பநிலை குறைவாக பதிவாகலாம் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்






பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பாகிஸ்தானில் சரக்கு விமானம் மோதி விபத்து: 8 பேர் பலி

கராச்சியிலிருந்து சூடான் தலைநகர் கார்ட்டோம் நோக்கி புறப்பட்ட ரஷ்ய சரக்கு விமானம் புறப்பட்ட சில விணாடிகளிலேயெ கட்டிடம் ஒன்றில் மோதி நொறுங்கி, தீப்பிடித்து எறிந்தது. இதில் விமான ஊழியர்கள் 8 பேரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

உயிரிழந்தவர்கள் ரஷ்ய ஊழியர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்ப்படுகின்றது. மேலும் 7 பேர் இதில் காயமடைந்துள்ளனர். 

யு.ஏ.இ.-யிலிருந்து புறப்பட்டு கராச்சி வழியாக சூடான் செல்லவிருந்த இந்த சரக்கு விமானம் இன்று அதிகாலை 1.45 மணிக்கு விபத்துக்குள்ளானது. 

கடந்த ஒரு மாதத்திற்குள் கராச்சியில் ஏற்படும் இரண்டாவது விமான விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, November 27, 2010

பளீர் வெளிச்ச ஸ்டார்களுடன் பிரமாண்ட நட்சத்திர கூட்டம்



பாஸ்டன்: சூரியன் போன்ற பல லட்சம் கோடி நட்சத்திரங்கள் கொண்ட தொகுப்பு பால்வழித் திரள் அல்லது கேலக்சி எனப்படுகிறது. வானத்தில் பார்த்தால் தெரியக்கூடிய வரை உள்ளதே இந்த கேலக்சி. இதுபோல சுமார் 10 மடங்கு வரை பெரிதான மற்றும் 1200 கோடி வயதான நட்சத்திரக் கூட்டங்களை அமெரிக்க
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலத்தில் உள்ள டஃப்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மிகப் பழமையான, பெரிதான நட்சத்திரக் கூட்டங்களை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து தலைமை ஆராய்ச்சியாளர் டேனிலோ மார்செசினி கூறியதாவது: நமது கேலக்சி தோன்றியபோதே மேலும் பல நட்சத்திரக் கூட்டங்கள் விண்வெளியில் இருந்துள்ளது. நமது கேலக்சியில் இருந்து வெகு தொலைவில் ஏராளமான நட்சத்திரக்கூட்டங்கள் மிக பிரமாண்டமான அளவில் இருக்கின்றன.

இவை சுமார் 1200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானவையாக இருக்கலாம் என்று தெரிகிறது. நம் கேலக்சியைவிட இவை 5 முதல் 10 மடங்கு பெரிதாக இருக்கும் என்றும் தெரிகிறது. இதில் உள்ள நட்சத்திரங்கள் பல மடங்கு பிரகாசமாகவும் உள்ளன. இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. இவ்வாறு டேனிலோ கூறினார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

“சனி கிரகத்தில் ஆக்சிஜன் உள்ளது” நாசா விஞ்ஞானிகள் தகவல்




அமெரிக்காவின் விண் வெளி மையமான “நாசா” சனி கிரகத்துக்கு காசினி விண்வெளி ஓடத்தை கடந்த 2004-ம் ஆண்டு அனுப் பியது. அந்த ஓடம் சனி கிர கத்தை சுற்றி பறந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சனி கிரகத்தின் அருகேயுள்ள ரியா விண்வெளி பாதையில் ஆக்சிஜன் இருப்பது தெரிய வந்துள்ளது.

இப்பாதையில் காந்த சக்தி உள்ளது. அது தான் ஆக்சிஜனை தாங்கி பிடித்துள்ளது. அது ஐஸ் கட்டி நிலையில் உள்ளது என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இவை ஐஸ் கட்டிகளில் மூலக்கூறுகளாக உள்ளன என்றும் கூறியுள்ளனர். இதனால் சனி கிரகத்தை சுற்றியுள்ள பகுதிகள் ஐஸ் கட்டிகளால் உள்ளது. மேலும் அங்கு கார்பன்டை ஆக்சைடு உள்ளது என்றும் அறிவித்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, November 26, 2010

வடகொரியாவிடம் சொல்லி வையுங்கள்:சீனாவுக்கு அதிபர் ஒபாமா வேண்டுகோள்



வாஷிங்டன்:""வடகொரியா விவகாரத்தில், சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அங்கு நிலவும் பதட்டத்தை குறைக்க வேண்டும்,'' என, அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.வடகொரியா - தென்கொரியா நாடுகளின் எல்லையையொட்டிய கடல் பகுதியில், தென்கொரியாவுக்கு சொந்தமான பியாயோங் தீவு உள்ளது. இங்கு தென்கொரியாவின் ராணுவ தளம் உள்ளது.

இத்தீவின் மீது, வடகொரியா அண்மையில் குண்டுகளை வீசி, திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, வடகொரியா மீது தென்கொரியா தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதட்டம் உருவாகியுள்ளது. இதுபற்றி, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:கடந்த சில மாதங்களாக வடகொரியா, இத்தகைய எரிச்சலை மூட்டும் செயலை செய்து வருகிறது.

நான் இரு நாடுகளின் அதிபர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். இச்சந்திப்பின் போது, இருநாடுகளும் ஒற்றுமையுடன் இருக்கும்படி வலியுறுத்தப்படும்.வடகொரியா நடத்திய தாக்குதல் கண்டனத்திற்குரியது. சர்வதேச நாடுகள் ஓரணியில் திரண்டு, வடகொரியாவுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். பசிபிக் பிராந்தியத்தில், தென்கொரியா நமது முக்கிய நண்பனாக திகழ்கிறது. வடகொரியாவில் தனக்குள்ள செல்வாக்கை சீனா பயன்படுத்தி, அங்கு நிலவும் போர் சூழலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, வழிகாட்ட அமெரிக்கா தயாராக உள்ளது.இவ்வாறு ஒபாமா கூறினார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பலஸ்தீனத்திற்குள் இஸ்ரேல் அத்துமீறல் : பள்ளிவாசல் அழிப்பு

மேற்குக்கரையில் உள்ள பலஸ்தீன கிராமமொன்றில் இருந்த பள்ளிவாசல் ஒன்றையும், கட்டிடங்கள் சிலவற்றையும் இஸ்ரேலிய இராணுவம் இடித்து அழித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் சுமார் 200 சிப்பாய்கள் மற்றும் 3 புல்டோசர் வாகனங்கள் ஆகியன 'கிர்பர்ட் யார்சா' என்ற மேற்படி கிராமத்திற்குள் புகுந்து இவற்றை அழித்ததாக அக்கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சுமார் 90,000 அமெரிக்க டொலர் வரை நட்டமேற்படுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரேல் மேற்படி பகுதி தமது இராணுவத்திற்குரியதென்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்றதெனவும் தெரிவித்துள்ளது.

இச்சம்பவமானது இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கிடையிலான முறுகல் நிலையை மேலும் அதிகரித்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, November 25, 2010

விண்வெளியை சுத்தம் செய்ய 9,000 கோடி



பூமியைச் சுற்றியுள்ள விண்வெளி பகுதியை சுத்தம் செய்ய ரஷ்யா 9,000 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக, உலக நாடுகள் அவ்வப்போது செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகின்றன. இவை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு செயலிழந்து விடுகின்றன.

இன்னும் சில செயற்கைக் கோள்கள் தோல்வியடைகின்றன. இதனால் ஏற்படும் கழிவுப் பொருட்கள் வானத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக, உடைந்த செயற்கைக் கோள்களின் பாகங்களை அகற்றுவதற்காக ரஷ்ய விண்வெளி கழகம் (எனர்ஜியா) திட்டமிட்டுள்ளது.

இதற்காக, 9 ஆயிரம் கோடி செலவில் ஒரு அணுசக்தியில் இயங்கும் ஒரு செயற்கைக் கோள் விண்வெளிக்கு அனுப்பப்படும். இது மிதக்கும் கழிவுகளை பூமியை நோக்கி தள்ளிவிடும். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சுமார் 600 செயற்கைக் கோள்களின் உடைந்த பாகங்கள் விண்வெளியிலிருந்து அகற்றப்படும் என எனர்ஜியா தெரிவித்துள்ளது. 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

நியூசிலாந்து சுரங்கத்தில் இரண்டாவது வெடிவிபத்து : அனைவரும் பலியாகியிருப்பதாக அச்சம்



கிரேமவுத் : நியூசிலாந்து நாட்டில், 29 பேர் சிக்கிக் கொண்ட சுரங்கத்திற்குள் மீண்டும் ஒரு பயங்கரமான வெடிவிபத்து நிகழ்ந்ததால் அவர்கள் அனைவரும் பலியாகியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. இத்தகவல் அந்நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நியூசிலாந்தின் மேற்குக் கடற்கரையோரப் பகுதியில் அமைந்துள்ள "பைக் ரிவர்' நிலக்கரி நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்திற்குள் கடந்த வாரம் சிலர் பணியில் இருந்த போது வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் 29 பணியாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இவர்களில் 17 வயது முதல் 62 வரையிலான பலதரப்பட்ட வயதுடையவர்கள் இருந்தனர்.

பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு பேரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு பேரும் அதில் இருந்தனர். அனைவருக்கும் தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளேயே இருந்தன. எனினும், சுரங்கத்திற்குள் பயங்கரமான விஷவாயுவின் தாக்கம் இருந்ததால், மீட்புப் படையினர் உள்ளே செல்ல இயலவில்லை. இரண்டு ரோபோக்கள் மூலம் விஷவாயுவின் அளவைக் கணக்கிட நேற்று முன்தினம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதேநேரம், மற்றொரு வழியாக, துளையிட்டு விஷவாயுவை அளவிடும் பணியும் நடந்தது. பாறைகள் மிகவும் கடினமாக இருந்ததால், துளையிடும் பணி தொய்வடைந்தது. இந்நிலையில், நேற்று மற்றொரு மோசமான வெடிவிபத்து சுரங்கத்திற்குள் நிகழ்ந்துள்ளது. இது முதலில் நிகழ்ந்த வெடிவிபத்தை விட இரண்டு மடங்கு சக்தி வாய்ந்ததாக இருந்தது.

இவ்விபத்தில் உள்ளே சிக்கியிருந்தவர்கள் அனைவரும் சிக்கி இறந்து போயிருக்கலாம் என்று போலீஸ் உயரதிகாரி காரி நோயல்ஸ் தெரிவித்தார். சுரங்கம் அமைந்துள்ள மாவட்டத்தின் மேயர் டோனி கோக்ஷ்ரூனும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஐந்து நாட்களாக, சிக்கிக் கொண்டவர்கள் மீட்கப்படுவர் என்ற நம்பிக்கையுடன் அவர்களின் உறவினர்கள் சுரங்கத்திற்கு வெளியே பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இச்செய்தி வெளியானவுடன் அவர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து பேட்டியளித்த போலீஸ் உயரதிகாரி காரி நோயல்ஸ்,"இரண்டாவது முறையும் வெடிவிபத்து நிகழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் பார்த்தால் உள்ளே ஒருவரும் உயிருடன் இருக்க முடியாது என்று தான் நம்ப வேண்டியிருக்கிறது' என்று தெரிவித்தார்.

மேயர் டோனி கூறுகையில்,"நியூசிலாந்தின் கருப்பு நேரம் இது. இதை நம்பவே முடியவில்லை. அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை. அவர்கள் கதறி அழுகின்றனர். தரையில் விழுந்து புரள்கின்றனர். சிலர் கோபத்தில் கூச்சலிடுகின்றனர்' என்று கூறினார். அந்நாட்டின் மின்துறை அமைச்சர் கெர்ரி ப்ரவுன் லீ, இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 1914ல் வடபகுதியில் ஒரு சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட 43 பேர் பலியாயினர். அதையடுத்து நியூசிலாந்தில் கடந்த ஒரு நூற்றாண்டில் நடந்த இரண்டாவது மிகப் பெரிய சோக சம்பவம் இது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

விரைகிறது அமெரிக்க போர்க்கப்பல் : பதிலடிக்கு தென்கொரியா தயார்



சியோல் : தென்கொரியத் தீவின் மீதான வடகொரியாவின் திடீர் தாக்குதலால் கொரிய தீபகற்பத்தில் பதட்டம் நிலவி வரும் சூழலில், தென்கொரியாவுடன் ராணுவ கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு விமானம்தாங்கி போர்க்கப்பலை அது தென்கொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. தென்கொரியாவுக்கு சொந்தமான இயாங்பியாங் தீவு மீது, வடகொரியா நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் தென்கொரிய கடற்படை வீரர்கள் இருவரும், பொதுமக்கள் இருவரும் பலியாயினர். இச்சம்பவத்தை அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக கண்டித்தன.

இந்நிலையில், நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமா, தென்கொரிய அதிபர் லீ மியுங் பாக்குடன் தொலைபேசியில் பேசிய போது, "அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவு தென்கொரியாவுக்கு உண்டு. மேலும் இதுபோன்ற பிரச்னைகளில் உலக சமுதாயத்துடன் இணைந்து அமெரிக்காவும் தோளோடு தோள் கொடுத்து தென்கொரியாவுக்கு ஆதரவாகப் போராடும்' என்று உறுதியளித்தார். இதையடுத்து, ஜப்பான் தலைநகர் டோக்கியோ கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலான "ஜார்ஜ் வாஷிங்டன்' நேற்று அங்கிருந்து புறப்பட்டு சியோலை நோக்கிச் சென்றுள்ளது.

இதில் 90 போர்விமானங்களும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களும் உள்ளனர். இதுகுறித்து தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில்,"இந்த வார இறுதியில் சியோலில் இருநாட்டு ராணுவமும் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றன. இந்த தற்காப்பு முயற்சி இயல்பானதுதான்' என்று தெரிவித்தனர். நேற்று சியோலில் இத்தாக்குதல் தொடர்பாக, ராணுவ உயரதிகாரிகளுடன் தென்கொரிய அதிபர் லீ நடத்திய கூட்டத்திற்குப் பின் விடுத்த செய்தியில்,"இதுபோன்ற எரிச்சலூட்டும் காரியங்களை வடகொரியா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மீண்டும் ஒருமுறை இதுபோன்ற தாக்குதல் நடந்தால், மிக மோசமான பழிவாங்கலை அது எதிர்கொள்ள வேண்டி வரும்' என்று எச்சரித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள வடகொரியா,"இருநாடுகளுக்கு இடையிலான கடல் எல்லையை மி.மீ., அளவு தென்கொரியா தாண்டினால் கூட கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தாக்குதலுக்குப் பின், நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட இரண்டு கப்பல்களை இயாங்பியாங் தீவுக்கு தென்கொரியா அனுப்பி வைத்துள்ளது. அத்தீவில் குடியிருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தாக்குதல் நடந்த பின், அத்தீவை அதிகாரிகள் சோதனையிட்டதில் பொதுமக்கள் இருவரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டன. இயாங்பியாங் தீவை ஒட்டி உள்ள ஐந்து தீவுகளுக்கு ராணுவத்தை அனுப்புவது குறித்து நேற்று தென்கொரிய ராணுவ அமைச்சர் கிம் டே யங் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"வடகொரியா இனிமேல் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தென்கொரிய ராணுவம் தயார் நிலையில் உள்ளது' என்று தெரிவித்தார். வடகொரியாவுக்கு தென்கொரியாவில் இருந்து அனுப்பத் தயார் நிலையில் இருந்த 240 லட்ச ரூபாய் மதிப்புடைய சிமென்ட், மருந்து உள்ளிட்ட உதவிப் பொருட்கள் அடங்கிய கப்பல்களை தென்கொரிய அரசு நிறுத்தி வைத்து விட்டது. இந்நிலையில், ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் இப்பிரச்னையில் சீனாவின் தலையீட்டை கோரியுள்ளன.

ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் கெவின் ரூத் தன் அறிக்கையில், "இப்பிரச்னையில் சீனா தலையிட்டுத் தன் செல்வாக்கின் மூலம் வடகொரியாவுக்கு அறிவுறுத்த வேண்டும். இதுவரை சீனாவின் பேச்சை அது கேட்டதில்லை. எனினும் அந்த பிராந்தியத்தில் அமைதி நீடிப்பதற்காக சீனா இதை செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பத்திரிகைகள் கொந்தளிப்பு:

வடகொரியாவின் திடீர் தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள தென்கொரியப் பத்திரிகைகள், பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளன. தென்கொரியாவில் இருந்து வெளிவரும் பல பத்திரிகைகள், "வடகொரியாவுக்கு சரியான உறுதியான பலத்த அடி கொடுக்க வேண்டும். வடகொரியா எப்போதும் தனது ஆக்கிரமிப்பு புத்தியை விட்டதில்லை. சர்வதேச விதிகளை மீறி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது மன்னிக்க முடியாத குற்றம். அது நெருப்போடு விளையாட ஆரம்பித்து விட்டது. நாம் அதை சுட்டுப் பொசுக்கினால் தான் நெருப்பின் தன்மை அதற்கு புரியும்' என்று கொந்தளித்து எழுதியுள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அதிக சக்தி வாய்ந்த வைரஸ்கள் மூலம் பிரிட்டன் அணுசக்தி நிலையங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி



ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றிலுமாக தகர்க்க பயன்படுத்தப்பட்ட சூப்பர் வைரஸ் தற்போது கள்ளச் சந்தையின் மூலமாக தீவிரவாதிகளுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டக்ஸ்நெட் எனப்படும் இந்த வைரஸ் கணினிகளை முற்றிலுமாக அழித்து விடும் ஆற்றல் கொண்டது.

இதை பயன்படுத்தி அணுசக்தி நிலையங்கள் , உணவு வழங்கும் கட்டமைப்புக்கள், மருத்துவமனைகள், போக்குவரத்து மின்விளக்குகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் உள்ள கணினிகளை முற்றிலும் செயலிக்கச் செய்து விட்டு பின்னர் அவற்றை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிடுகின்றனரோ என்ற ஐயம் புலனாய்வுத் துறையினரிடம் காணப்படுகிறது.

தவறான நோக்கமும் , பண பலமும் , மதிநுட்பமும் கொண்ட தீவிரவாதிகளின் கையில் இந்த வைரஸ் தற்போது கிடைத்துள்ளது மிகவும் வருந்தத்தக்க ஒரு விடயம் எனவும் இதை பயன்படுத்தி தற்போதைய போலீஸ் தொடர்பு எண்ணான 999 , மருத்துவமனைகள் ஆகியவற்றை உடனடியாக செயலிழக்கச் செய்து விட முடியும்.

எந்த நேரமும் தீவிரவாதிகள் இதனை அழிவிற்கான ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என தகவல் தொழில்நுட்ப பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த முக்கியப்புள்ளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, November 24, 2010

வை-பை கதிர்கள் மனிதர்களை தாக்குகின்றதா?


வை-பை ( wi-fi) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் , சிலவேளைகளில் இவை மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வெகனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர். 

இதன்போது வை-பை கதிர்களுக்குஅண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.. 

இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளதெனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, கையடக்கத்தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றமை நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

புல்லட் ரெயிலை விட வேகம் 1600 கி.மீ. வேகத்தில் ஓடும் அதிநவீன கார்



உலகிலேயே அதிவேகமாக இயங்கும் புல்லட் ரெயில் சீனாவில் செயல்பாட்டில் உள்ளது. இது மணிக்கு 1200 கி.மீ. வேகத்தில் பாய்ந்து செல்கிறது. ஆனால் அதைவிட அதிவேகமாக செல்லக்கூடிய கார் தயாரிக்கப்பட உள்ளது. மணிக்கு சுமார் 1600 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லத்தக்க இக்காரை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்க உள்ளனர். இக்கார் தயாரிக்கும் பணியில் ரிச்சர்ட் நோபல் என்பவர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இப்பணி வருகிற ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.

அதில், அதிசக்தி வாய்ந்த ஜெட் என்ஜின் மற்றும் ராக்கெட் பொருத்தப்படுகிறது. மேலும், இதன் பாகங்கள் மிக மெலிதான உலோக கலவையினால் அமைக்கப்பட உள்ளது. மேலும் 4 அலுமினிய சக்கரங்களும் பொருத்தப்பட உள்ளன. இக்கார் வருகிற 2012-ம் ஆண்டு பயன்பாட்டில் வரும். அப்போது அதிவேகமாக இயங்கி உலக சாதனை படைக்கும் என விஞ்ஞானி ரிச்சர்ட் நோபல் தெரிவித்துள்ளார். ரிச்சர்ட் நோபல் ஒரு என்ஜினீயர் ஆவார்.

இவர் சாதனை படைப்பதில் ஆர்வம் படைத்தவர். கடந்த 1983-ம் ஆண்டு மணிக்கு 1,019 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் டர்போ ஜெட் காரை நிவேதா பாலைவனத்தில் ஓட்டி கடந்து சாதனை படைத்துள்ளார். 1997-ம் ஆண்டு ஆண்டில் கிரீன், மணிக்கு 1228 கி.மீட்டர் வேகத்தில் ஓட்டி சாதனை படைத்த சூப்பர் சோனிக் கார் இவர் தலைமையில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF