பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Wednesday, March 7, 2012
சுனாமிக்கு பின்னர் ஒரு வருடங்களில் ஜப்பான் மீண்டெழுந்த போதிலும்.. புகைப்படங்கள்!
சுனாமிக்கு பின்னர் ஒரு வருடங்களில் ஜப்பான் மீண்டெழுந்த போதிலும்.. புகைப்படங்கள் Photographs by James Nachtwey.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
பயனுள்ள விண்டோஸ் கணினி ஸ்கீரின் சேவர்ஸ்!
நீங்கள் வசிக்கும் இடத்தில் மாறுகின்ற காலநிலைக்கு ஏற்ப டெஸ்க்டாப் ஸ்கீரின் சேவரும் அனிமேஷன் வடிவில் தெரியச் செய்கின்றது யூவிண்டோ.
உலகில் 89 சதவிகித மக்களுக்கு சுத்தமான குடிநீர்: ஐ.நா அறிவிப்பு!
உலகில் மாசுபடாத தண்ணீர் கிடைக்காதவர்களுடைய எண்ணிக்கையை பாதியாக குறைப்பது என்ற புத்தாயிரம் வளர்ச்சி லட்சியங்களில் முதலாவது இலக்கு எட்டப்பட்டுள்ளது என ஐ.நா மன்றம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த இலக்கு 2015ம் ஆண்டு காலக்கெடுவைத் தொடுவதற்கு முன்பாக தற்பொழுதே எட்டப்பட்டுள்ளது என்றும் ஐ.நா மன்றம் கூறியுள்ளது.
உலகின் 89 சதவிகித மக்களுக்கு தற்போது சுத்தமான குடிநீர் ஆதாரங்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது.அப்படியானால் உலகில் இன்னும் கிட்டத்தட்ட 80 கோடிப் பேர் இன்னும் அசுத்தமான குடிநீரை அருந்த வேண்டிய நிலையில் உள்ளனர்.இந்த எண்ணிக்கையில் 40 சதவிகிதம் பேர் சஹாராவுக்கு தெற்கில் அமைந்துள்ள நாடுகளில் வாழக்கூடியவர்களாக இருக்கின்றனர்.இந்த புத்தாயிரம் லட்சியத்தின் மறுபாதியான சுகாதாரமான கழிப்பிட வசதிகள் என்ற இலக்கை எட்ட வாய்ப்பு இல்லை என்று ஐ.நா தெரிவித்துள்ளது.ஏனென்றால் இந்தியாவில் மட்டுமே சுமார் 60 கோடிப் பேர் இன்னும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருந்து வருகின்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
புலம் பெயர்ந்தவர்களின் நாடாக மாறப்போகும் இங்கிலாந்து: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
இங்கிலாந்தில் எதிர்வரும் காலங்களில் புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.உலகின் பல நாடுகளை தங்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்து ஆட்சி நடத்திய இங்கிலாந்தின் நிலைமை, தற்பொழுது முற்றிலுமாக மாறி வருகிறது.உலகின் பல நாடுகளில் இருந்து பிரித்தானியாவில் மக்கள் குடியேறி வருகின்றனர். குறிப்பாக இந்துக்களும், முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் வேலை, படிப்புக்காக இங்கிலாந்தில் குடியேறுகின்றனர்.இதனை தடுப்பதற்காக விசா வழங்கும் நடைமுறைகளை கடுமையாக்கி வருகிறது இங்கிலாந்து அரசு. எனினும் எதிர்வரும் 2030ம் ஆண்டில் கிறிஸ்தவ நாடாக இங்கிலாந்து இருக்காது என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது.
ஹவுஸ் ஆப் காமன்ஸ் லைப்ரரி நடத்திய ஆராய்ச்சியில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. ஆய்வின் முடிவு குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் 5 லட்சம் கிறிஸ்தவர்கள் மதத்தின் மீது நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.ஆனால் மற்ற மதத்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 37 சதவிகிதமும், இந்துக்களின் எண்ணிக்கை 43 சதவிகிதமும், பௌத்த மதத்தவர்களின் எண்ணிக்கை 74 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சீக்கியர்கள், யூத மதத்தவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீவிரம்: சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா!
ஈரானின் அணு சக்தி விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை, இஸ்ரேல் பிரதமர் பென்யமின் நெதென்யாஹு சந்தித்து பேசினார்.ஈரான் ரகசியமாக அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டு வருகின்றன.ஈரான் அணு குண்டு தயாரித்தால் அது தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இஸ்ரேல் கருதுகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ அமெரிக்கா சென்றார். பெஞ்சமின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது ஈரான் அணுசக்தி திட்டம், மத்திய கிழக்கு நாடுகள் பிரச்சினை ஆகியவை இடம் பெற்றதாக தெரிகிறது.மேலும் ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் முன்கூட்டியே தாக்குதல் தொடுப்பது பற்றியும் முக்கியமாக பேசப்பட்டதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இஸ்ரேல் பிரதமர் தெரிவிக்கையில், ஈரானின் நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதது. எங்கள் நாட்டை பாதுகாக்க ஈரான் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று வலியுறுத்தி கூறி இருக்கிறார். எந்த மிரட்டலையும் சந்திக்கவும், மக்களை பாதுகாக்கும் பொறுப்பும் பிரதமரான தனக்கு இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக ஒபாமா கூறுகையில், ஈரான் அணு குண்டு தயாரிப்பதை தடுக்க சுமூகமான பேச்சுவார்த்தை, பொருளாதார தடைகள் உட்பட பல அம்சங்கள் விவாதத்தில் இருக்கின்றன என தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில், அமெரிக்காவை பொறுத்தவரையில் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுப்பதும், அவை தீவிரவாதிகளின் கைகளுக்கு சென்று விடக்கூடாது என்பதையும் கவனத்துடன் அணுகுவதாகவும் தெரிவித்தார்.இஸ்ரேலுடன் இராணுவம், புலனாய்வு துறை ஒத்துழைப்பு மட்டுமின்றி, அனைத்து நடவடிக்கைகளிலும் ஒத்துழைப்பு தொடரும் என்றும் ஒபாமா உறுதி அளித்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஈரானின் அணுத் திட்டம் சர்வதேச சமூகத்திற்கு உகந்தது அல்ல[IAEA]!
ஈரானின் அணுத் திட்டம் சர்வதேச சமூகத்திற்கு உகந்தது அல்ல என்று ஐ.நா.வின் சர்வதேச அணு சக்தி முகமை(ஐ.ஏ.இ.ஏ) தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.இது தொடர்பாக சர்வதேச அணு சக்தி முகமையின் குழுவினர் ஈரான் சென்று ஆய்வு நடத்தினர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சர்வதேச அணு சக்தி முகமையின் தலைவர் யூகியா அமோனா கூறுகையில், ஈரானின் அணு திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஆய்வு குழுவினர் கடந்தாண்டு நவம்பர் மாதம் ஈரான் சென்று தீவிர சோதனை நடத்தினர்.
மீண்டும் ஒரு முறை ஐ.நா.வின் தலைமை ஆய்வாளர் ஹெர்மான் நெக்ட்ரஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் பார்ச்சின் பகுதிக்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இப்பகுதி தலைநகர் டெஹரான் அருகே உள்ளது. பார்ச்சின் பகுதியில் உள்ள இராணுவ தலைமையக வளாகத்தில் தான் அணு ஆயுதங்களை மேம்படுத்தும் நோக்கில் ரகசியமாக பயங்கர வெடிபொருட்களை தயாரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.இது சர்வதேச அணு சக்தி முகமைக்கு கவலை அளிப்பதாக உள்ளது. மேலும் இது சர்வதேச சமூகத்திற்கு உகந்தது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஈரான் அணுத் திட்டம்: அமெரிக்கா- இஸ்ரேல் பேச்சுவார்த்தை!
ஈரானின் சர்ச்சைக்குரிய அணுத் திட்டம் குறித்து பேசுவதற்காக அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா, இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெதென்யாஹுவை வெள்ளை மாளிகையில் வைத்து சந்திக்கிறார்.ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
ஆனால் அது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இருநாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.ஈரானின் அணு சக்திக் கூடங்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும் என இஸ்ரேல் கூறி வருகிறது.ஆனால் அவசரப்பட்டு இராணுவ நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரத் தடைகள் மற்றும் எடுக்கப்பட்டுவரும் புதிய முயற்சிகள் பலன் அளிப்பதற்கு சற்று கால அவகாசம் வழங்க வேண்டும் என ஒபாமா தெரிவித்துள்ளார்.
Tuesday, March 6, 2012
பாக்டீரியா சக்தியில் இயங்கும் விண்வெளி ரோபோக்கள்!

நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்தது மனிதன் தான் என்றாலும் நிலவு, செவ்வாய் உள்ளிட்ட பல கோள் களை மனிதர்களுக்காக ஆய்வு செய்வது விண்வெளி ரோபோக்களே. தொடக்கத்தில் பெரிய பெரிய பெட்டிகளாக இருந்த வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட பல மின் சாதனங்களை கையடக்க அளவுகளிலும், எடை குறைவான தாகவும் மாற்றிய பெருமை தொழில்நுட்பத்தையே சேரும்.மனிதனுக்கு தேவையான மின் சாதனங்களில் பலப்பல புதுமைகளை செய்து கொண்டிருக்கும் தொழில்நுட்பம், இப்போது விண்வெளி ஆய்வில் ஈடுபடும் ரோபோக்களில் ஒரு அட்டகாசமான புதுமையை செய்திருக்கிறது.
தற்போதுள்ள விண்வெளி ரோபோக்களை சூரிய ஒளி சக்தி (சோலார்) மற்றும் அணு சக்தி இவை இரண்டும்தான் இயக்குகின்றன. ஆனால் அமெரிக்காவின் நாசா ஆய்வு மய்யத்தின் புதிய ஆய்வு ஒன்றில் ஜியோபாக்டர் சல்பர் ரெடிசன்ஸ்’ என்னும் ஒரு வகை பாக்டீரியாக்களை கொண்டு சிறிய விண்வெளி ரோபோக்களை இயக்க முடியுமா என்று முயற்சித்துள்ளனர். சூரிய ஒளி மற்றும் அணு சக்தியில் எப்படி ரோபோக்கள் இயங்குகின்றனவோ அதே போல ஜியோபாக்டர் வகை பாக்டீரியாக்களில் இருந்து பெறப்படும் சக்தியை கொண்டு இயங்கும் சிறிய வகை ரோபோக்களை நாசா விஞ்ஞானிகள் உருவாக்க தொடங்கியுள்ளனர்.
உயிருள்ள பாக்டீரியாக்களே ஒரு மின்கலம் போல செயல்படுவதால், சிறிய ரோபோக்கள் இயங்க தேவையான சக்தி தொடர்ந்து நீண்டகாலம் கிடைத்து கொண்டே இருக்கும். அதாவது, அந்த பாக்டீரியாக்களுக்கு தேவை யான உணவு கிடைத்து, அவை உயிரோடு இருக்கும் வரை. இந்த பாக்டீரியாக்களில் இருந்து கிடைக்கும் சக்தியின் அளவு மிக குறைவு என்பதால் இதை பயன்படுத்தி சிறிய வகை ரோபோக்களை மட்டுமே இயக்க முடியும். மார்ஸ் ரோவர் போன்ற பெரிய விண்வெளி ரோபோக்களை இயக்க இந்த சக்தி போதாது.ஜியோபாக்டர் சல்பர் ரெடிசன்ஸ் வகை பாக்டீரியாக் களில் ஒரு சிறப்பு என்னவென்றால், இவை வாழ ஆக்சிஜன் தேவையில்லை! இந்த காரணத்தினால்தான் இவை விண்வெளி ரோபோக்களை இயக்கும் நுண்கிருமி மின்கலமாக (மைக்ரோபியல் பிவல் செல்) தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பத்து வருடங்களுக்குள் உருவாக்கப்படும் என்று நம்பப்படும் இந்த அதி நவீன ரோ போக்களின் எடை சுமார் ஒரு கிலோ.
அட்டகாசமான இந்த நுண்கிருமி மின் கல ரோபோக்களை உருவாக்குவதில் சில பல தொழில்நுட்ப சவால்களும் இருக்கின்றன. அந்த சவால்களில் முக்கியமானது நுண்கிருமி தொற்று சார்ந்தது. பொதுவாக, செவ்வாய் உள்ளிட்ட வேற்று கோள்களுக்கு செல்லும் விண்வெளி ரோபோக்களில் நுண்கிருமிகள் எதுவும் இல்லாதவாறு `ஸ்டெரிலைஸ்’ (சுத்தம்) செய்து விடுவது வழக்கம். இது பூமியில் உள்ள நுண்கிருமிகள் வேற்று கிரகங்களுக்குள் ஊடுருவாமல் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் சோதனைகளுள் ஒன்று. அப்படியானால் நுண்கிருமிகளின் சக்தியில் இயங்கும் ரோபோக்கள் விண்வெளிக்குப் போனால் என்னவாகும்?
ரோபோக்கள் இயங்க தேவையான சக்தியை கொடுக் கும் ஜியோபாக்டர் சல்பர் ரெடிசன்ஸ் மாதிரியான நுண் கிருமிகளை விண்வெளிக்கு கொண்டு செல்வது ஒரு வகையில் நன்மைதான் என்கிறார் நாசாவின் விண்வெளி ஆய்வாளர் க்ரிகரி ஸ்காட். ஏனென்றால் இந்த நுண் கிருமிகள் சாதாரண நுண்கிருமிகள் போலல்லாமல் விண்வெளி ரோபோக் களை இயக்கும் எரிசக்தியாக பயன்படுகின்றன. இருந்தபோதும் பாக்டீரியாக்களை எரிசக்தியாக பயன்படுத்தும் எந்தவொரு விண்வெளி எந்திரமும், விபத்துகளின்போது அவை வெளியேறி விடாத வண்ணம் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். ஏனென்றால் செவ்வாய் போன்ற கிரகங்களில் இத்தகைய பாக்டீரியாக்கள் பிழைத்துக்கொள்வதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.
அப்படி அவை பிழைத்துக்கொண்டால் அந்த கிரகம் மாசடைந்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் விண்வெளி ஆய்வாளர்கள். அணு சக்தி மற்றும் சூரிய ஒளி சக்தி ஆகியவற்றின் தேவையை தவிர்க்க உதவும் நுண்கிருமி மின்கல ரோபோக்களின் வருகை விண்வெளி ஆய்வில் ஒரு புதிய மைல்கல். இந்த புதிய தொழில்நுட்பம், தற்போதுள்ள விண்வெளி ரோபோக்கள் இயங்குவதற்குப் பயன் படுத்தப்படும் தொழில்நுட்பத்தில் உள்ள பல சிக்கல்களுக்கு தீர்வளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
விண்கற்கள் இணைந்து பூமி உருவானது: விஞ்ஞானிகள் தகவல்!
வானில் சுற்றித்திரியும் விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பூமி உருவாகி இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.நாம் வாழும் கிரகமான பூமி சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.ஆனால் எவ்வாறு உருவானது என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் விண்கற்கள் ஒன்றுடன் ஒன்றி மோதி பூமி உருவாகி இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்கற்கள் மோதியதால் உருவான துகள்கள் புவி ஈர்ப்பு விசை காரணமாக இணைந்து பூமி உருவாகி உள்ளது. விண்கற்களின் பாறைகளையும், பூமியின் பாறைகளையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தததில் இவை இரண்டிலும் ஆக்சிஜன், நிக்கல், குரோமியம், சிலிகான், கார்பன் போன்ற உலோகங்கள் உள்ளது தெரியவந்துள்ளது.எனவே விண்கற்கள் இணைந்து பூமியை உருவாக்கி இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
விளம்பரத்துக்கே விளம்பரம்பரமா..?

மேற்குலக பிரமாண்ட சினிமாக்களையே தூக்கி அடித்துவிடுவது போல் பிரமாண்டமாக வெளிவந்திருக்கிறது இந்த விளம்பரப்படம்.விளம்பரத்துக்கே விளம்பரம் என்ற கணக்கில் இந்த விளம்பரப் படத்துக்கான தகவல் விளம்பரங்கள் ஏராளம். அப்படியென்ன சிறப்பு இந்த விளம்பரத்தில்...?
பொதுவாகவே விளம்பரப்படங்கள் ஒரு நிமிடத்துக்கும் குறைவானவையே. ஆனால் இந்த விளம்பரப்படம் ஒரு குறும்படம் போல் நிமிடம் தாண்டி மூன்று நிமிடங்களுக்குச் செல்கிறது. மூன்று நிமிடத்துக் விளம்பரம் ஒன்றைப் பார்ப்பார்களா என்றால், பார்க்க வைப்பது மட்டுமல்ல, மிரளவும் வைக்கிறது.
சுமார் இரண்டு வருடகால உழைப்பினைக் கொட்டி உருவாக்கியிருக்கிறார்களாம் இந்த விளம்பரப்படத்தை. நிஜம் எது, கிராபிக்ஸ் எது எனக் கண்டுபிடிக்க முடியாதவாறான தொழில்நுட்ப நேர்த்தி, தொட்டு நகர்ந்து செல்லும் திரைக் கதையோட்டம், காட்சிக்குக் காட்சி கண்ணுக்கு விருந்தாகும் காட்சிப் பிரமாண்டம் என அசத்தியிருக்கிறார்கள்.ஒரே நேரத்தில் நேரத்தில் 80 நாடுகளில் ஒரே நேரத்தில் இந்த விளம்பரத்தைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி விளம்பரத்துக்கே விளம்பரம் என்ற வகையில், வெளியிடலில் பிரமாண்டத்தைக் காட்டி இருக்கின்றார்கள்.
L'Odyssée de Cartier நிறுவனம் அன்மையில் வெளியிட்ட இவ் விளம்பரம், இனிவரும் நாட்களில் பெரிதும் பேசப்படக் கூடும். 28ந் திகதி யூட்டிப்பில் வெளியிடப்பட்ட இப் படத்தை, இதுவரையில் பார்த்திருப்போர் தொகை இரண்டரை இலட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.விளம்பரப் படமாக இருந்த போதும், படத்தின் ஓட்டத்தில் உறுத்தல் ஏதுமின்றி, இயல்பாக வந்து போகின்றன விளம்பரப்படுத்தும் பொருட்கள். அதுவே இவ் விளம்பரத்தின் சிறப்பு. அந்தச் சிறப்புக்குக் காரணமானவர் இப்படத்தின் இயக்குனர் Bruno Aveillan.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Monday, March 5, 2012
சூழலை பிரதிபலிக்கும் கார்: தொழில்நுட்பத்தின் பிரம்மாண்ட படைப்பு!
பொதுவாக காரின் மேற்பரப்புக்கள் நீலம், வௌ்ளை, கறுப்பு போன்ற பல்வேறு விதமான வர்ணங்களால் அலங்கரிக்கப்படும்.ஆனால் தற்போதைய தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாக காரானது பயணிக்கும் சூழலின் தோற்றத்தில் தென்படக்கூடியவாறு அமைத்து சாதனை படைத்துள்ளனர்.முதன்முறையாக Mercedes Benz வகை கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நவீன தொழில்நுட்பத்தில் வீடியோ கமெரா, LED மின்குமிழ்கள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.இதனால் வீடியோ கமெராக்கள் சூழலை படம்பிடிக்கும்போது அது LED திரையின் மூலம் விம்பமாக விழுத்தப்படுகின்றது.
இந்த தொழில்நுட்பமானது ஜப்பானின் டோக்கியோவிலுள்ள பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் முன்மொழியப்பட்டிருந்த போதிலும், தற்போது ஜேர்மன் பொறியிலாளர்கள் இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர்.இந்த கார்கள் எதிர்வரும் 2015ம் ஆண்டளவில் சந்தைக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
தோல் புற்றுநோயை தடுக்கும் வைட்டமின் ஏ!
தினசரி வைட்டமின் ஏ எடுத்துக் கொண்டால் தோல் புற்றுநோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.உலகம் முழுவதும் பல்வேறு புற்றுநோயால் அவதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. புற்றுநோயை நிரந்தரமாக தடுக்க மருந்து கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றன.வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கெய்சர் பெர்மனன்ட் என்ற ஆய்வு மையம், புற்றுநோய் தாக்குதல் பெரும்பாலும் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது.இதற்காக 70 ஆயிரம் ஆண், பெண்களை தெரிவு செய்து ஆய்வில் இறங்கியது. அவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் எடுக்கப்பட்டன.
உணவு முறைகள் மாற்றப்பட்டன. குறிப்பாக பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்னர் வைட்டமின் ஏ சத்தை உணவாகவும் மருந்தாகவும் கொடுத்து ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர்.இவர்களில் பலருக்கு ஏ சத்து குறைவாக வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் அன்றாடம் வைட்டமின் ஏ எடுத்துக் கொண்டவர்களுக்கு தோல் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்தனர்.அனைத்து விதமான சத்துகளும் அடங்கிய ஊட்ட சத்துள்ள உணவும் இத்தகைய பாதுகாப்பை அளிப்பது கண்டறியப்பட்டது. வைட்டமின் ஏ சத்துகள் குறைவாக இருந்தால் தோல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தோன்றுவதையும் கண்டுபிடித்தனர்.
குறிப்பாக பெண்களை எளிதில் தோல் புற்றுநோய் தாக்காமல் இருக்க வைட்டமின் ஏ உள்ளிட்ட சரிவிகித ஊட்ட சத்துணவு அவசியம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், ரெடினால் என்ற வைட்டமின் ஏ மூலப்பொருள் குறையும் போது புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.இந்த இழப்பை சரிசெய்வதன் மூலம் புற்றுநோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். பால், கேரட், முட்டை உள்ளிட்டவற்றில் வைட்டமின் ஏ மற்றும் ரெடினால் மூலப்பொருள் அதிகம் உள்ளது. இவற்றை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
நீரிலிருந்து பாதுகாப்பை உடைய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியது Panasonic!
அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஸ்மார்ட் போன்களை ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கின்ற போதிலும் அவை தமக்கென்ற சில விஷேட அம்சங்களை இணைத்தே அறிமுகப்படுத்துகின்றன.அதற்கிணங்க Panasonic நிறுவனம் நீரில் நனைந்தாலும் பழுதடையாத தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளன.
Eluga என்ற பெயருடன் சந்தைக்கு வந்துள்ள இந்த போன்கள் அரோயிட்டின் 2.35ம் பதிப்பில் இயங்குகின்றன. எனினும் அன்ரோயிட் 4.0 பதிப்பிலும் இயங்கக்கூடியன. இவை 8 மெகா பிக்சல் கமெராவை கொண்டுள்ளதுடன் 8GB நினைவகத்தை கொண்டுள்ள போதிலும் அவை 32GB வரை நீடிக்கப்படக்கூடியன. இதன் திரையானது 5inch x 4.3 inch அளவிடையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஸ்மார்ட் போனில் காணப்படும் மின்கலமானது 57 நிமிடங்களில் 80 வீதம் சார்ஜ் ஆக கூடியவை. இதன் ஆரம்ப பெறுமதி 399 யூரோவிற்கும் 449 யூரோவிற்கும் இடையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
குழந்தையின் நடத்தைகளை கண்காணிக்க ஸ்மார்ட் பேபி மொனிட்டரை பயன்படுத்தலாம்!
குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டு போகவேண்டிய தருணங்களில் அவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு தற்போது ஸ்மார்ட் ஸ்மார்ட் பேபி மொனிட்டர் என்னும் உபகரணத்தை அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்மார்ட் பேபி மொனிட்டர்கள் திரை, கண்காணிப்புக் கமெரா என்ற இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. இதன் கமெராவானது 3 மெகா பிக்ஸல்களை கொண்டுள்ளதுடன், 4X zoom வசதியையும் கொண்டுள்ளது. பரந்த பரப்பை கண்காணிக்கக்கூடிய இந்த கமெராவானது infrared LED தொழில்நுட்பத்தில் தானாகவே இயங்கும் தன்மையை கொண்டுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது.இவை குழந்தைகள் அழுதல், வெப்பநிலை மாற்றத்தால் அவதிப்படுதல் போன்ற சந்தர்ப்பங்களை அவற்றிலுள்ள சென்சார்களின் மூலம் உணர்ந்து தெரிவிக்க வல்லன. அத்துடன் இந்த கருவியை இணையத்தினூடாகவும், Wi-Fi, Bluetooth மூலமாகவும் இணைத்து பயன்படுத்தமுடியும். இதன் பெறுமதி 299 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

பிரான்சின் ஆயுதக்கிடங்கில் வெடி விபத்து: 200 பேர் பலி, 1500 பேர் படுகாயம்!
பிரான்சின் இராணுவத் தலைமையகமான காங்கோவில் உள்ள ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 200 பேர் பலியாகி உள்ளனர், 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.காங்கோ நாட்டின் தலைநகர் பிரேசாவில்லேயின் கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ வெடிமருந்து கிடங்கில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து அங்கிருந்த வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. நீண்ட நேரம் அவை வெடித்துக் கொண்டே இருந்தன.
இந்த வெடிவிபத்தில் 200 பேர் பலி ஆனார்கள். மேலும் 1500-க்கும் அதிகமான பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இந்த வெடிவிபத்தில் அருகில் உள்ள சில கட்டிடங்களும் சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
இந்த வெடிவிபத்தில் 200 பேர் பலி ஆனார்கள். மேலும் 1500-க்கும் அதிகமான பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இந்த வெடிவிபத்தில் அருகில் உள்ள சில கட்டிடங்களும் சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
Sunday, March 4, 2012
Android VS Windows Phone எது வேகமானது? சவாலில் வென்றால் 100 USD!
நீங்கள் வைத்திருக்கும் Smart Phones கைத்தொலைபேசிகள் Android சேவையை கொண்டதா?அப்படியாயின் Windows Phone ஐ விட ஏதாவது ஒரு செயற்பாட்டில் அது வேகமகாக இருக்கிறது என நிரூபித்து விட்டீர்கள் எனில் உங்களுக்கு 100 USD டாலர் சன்மானம்! சவாலை ஏற்றுக்கொள்கிறீர்களா என்கிறார் இந்நபர்.
புதிதா ஐ.டி சந்தைக்குள் தன்னை இணைத்து கொண்ட Windows Phone ஐ பிரபலப்படுத்துவதற்கு இப்படி ஒரு யுக்தி. போட்டி நிறுவனத்தின் லோகோ, பிராண்ட் பெயரை தமது விளம்பரத்திற்குள் நேரடியாக இழுத்து தாக்கும் புதிய வகை டிரெண்ட், யூடியூப், சமூக வலை தளங்கள் ஊடாக வேகமாக உருவாகி வருவது ஆரோக்கியமானதா? போட்டி வியாபார மோகத்திற்கு அடிமைப்படுத்துவதா? எனும் கேள்விகளுக்கு அப்பால் இவ்வீடியோக்களை தரவேற்றம் செய்திருப்பதும் Windows Phone உத்தியோகபூர்வ சேனல் தான் என்பது கவனிக்க வேண்டிய விடயம்.
Windows Phone இல் நன்கு பரீட்சயமானவரை கொண்டு திட்டமிட்டு இவ்வீடியோவை உருவாக்குகிறார்கள். மற்றும் படி வேகத்தில் ஒன்றுமில்லை என இவ்வீடியோ பதிவுகளுக்கு எதிர்கருத்துக்கள் குவிகின்றன.உங்களது கைத்தொலைபேசி என்பதால் நீங்களும் நன்கு கைப்பழக்கம் உடையவராக இருப்பீர்கள்தானே என மறு கேள்வி கேட்கிறார் இந்நபர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Saturday, March 3, 2012
ஸ்கைப் (Skype) புதிய பதிப்பு!
உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பு மூலம் மற்றவருடன் தொடர்பு கொள்ளும் வசதியைத் தருவதில் ஸ்கைப் அப்ளிகேஷன் தொகுப்பு முன்னணியில் உள்ளது.இதில் P2P (peertopeer) என்னும் தொழில் நுட்பம் கையாளப்படுகிறது. தொலைபேசிக் கட்டணமாக அதிகம் செலுத்தும் சுமையிலிருந்து விடுபட பலரும் இதனையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த அப்ளிகேஷன் புரோகிராமின் புதிய பதிப்பு ஸ்கைப் 4.2.0.152 அண்மையில் பிப்ரவரி 25ல் வெளியானது. அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம் பைலின் அளவு 1.6 எம்பி தான்.இதனைப் பெற ஸ்கைப் தளம் சென்று அங்குள்ள டவுண்லோட் பட்டனை அழுத்தவும். இதற்கான பைல் உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் ஆகும். இதனை இறக்கிய பின், அதற்கான இன்ஸ்டலேஷன் பைலில், டபுள் கிளிக் செய்திடவும். தானாகப் பதியப்படும்.
இந்த புதிய பதிப்பு, ஸ்கைப்பைப் பயன்படுத்த தெளிவான யூசர் இன்டர்பேஸ் தருகிறது. மிக எளிதாகப் பயன்படுத்தலாம். புதிதாக ஸ்கைப் இணைய தளத்தில் புதிய ஹெல்ப் பிரிவு தரப்பட்டுள்ளது. இதில் அக்கவுண்ட் வைத்துள்ள தனிநபரின் தகவல்களை எளிதாக அவ்வப்போது அப்டேட் செய்திடலாம். பிற பயனாளர்களை விரைவாகத் தேடி தொடர்பு கொள்ள முடிகிறது.இதில் பல பைல்களை ட்ரான்ஸ்பர் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் பேச்சொலி மிகத் தெளிவாக உள்ளது. சேட் வசதி, ஒரே நேரத்தில் ஐந்து பேர் கலந்துரையாடும் கான்பரன்ஸ் வசதி ஆகியவையும் மேம்படுத்தப்படுள்ளன.இதனை விண்டோஸ் 2000 சிஸ்டம் முதல் இன்றைய சிஸ்டம் வரை உள்ள கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். வீடியோ அழைப்புகளைப் பெற எக்ஸ்பி தேவை. பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு இருந்தால், தொடர்பு மிகச் சிறப்பாக இருக்கும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
பார்ப்பவர்களை வியக்கவைக்கும் இராட்சத உயிரினம்!
”Attacus" என்று அழைக்கப்படும் உயிரினம் உலகின் மிகப் பெரிய உயிரினமாகும். இவ் உயிரினமானது இந்தியாவின் இமாலயப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் பூச்சியினங்களில் மிகப் பெரியதாக காணப்படும் இந்த உயிரினத்தின் இறக்கை ஒன்று 25 சென்டி மீற்றர்கள் நீளமானதாக உள்ளது.வண்ணத்துப்பூச்சி போன்ற வடிவில் தோற்றமளிக்கும் இந்த இராட்சத உயிரினமும் 2 வாரங்கள் மட்டுமே உயிர்வாழும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
யானைகளை கதிகலங்க வைத்த குருவிகள்!
காண்பவர்களை கதிகலங்க வைக்கும் இராட்சத உருவம் கொண்ட யானைகள் குருவிகளை கண்டு கதிகலங்கியுள்ளன. இந்த சுவாரஸ்யமான சம்பவம் கென்யாவின் ரிசாவோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.ஒவ்வொன்றும் வெறும் 10 கிராம்களே அளவுடைய குருவிகள் எனினும் அவை பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்து பறந்தமையால் அந்த காட்சியை கண்டும், பறக்கும் ஒலியையும் கேட்டும் அதிர்ச்சியடைந்த யானைகள் தமது நகர்விலிருந்து பின்வாங்கியுள்ளன.இந்த கண்கொள்ளாக் காட்சியினை 60 வயதுடைய அன்ரெறோ ரொப் என்ற புகைப்படக்கலைஞர் தனது கமெராவுக்குள் சிறையெடுத்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
இந்த மீனிற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
அது 1938 ஆம் வருடம்.
கிறிஸ்துமசுக்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன (Dec 22). தென் ஆப்ரிக்காவின் கிழக்கு கடல் பகுதியில், சாலும்னா ஆற்றின் வாயிற்பகுதியில் தன் குழுவினருடன் மீன் பிடித்து கொண்டிருந்தார் கேப்டன் கூசன்.
அப்போது வலையில் சிக்கியது ஒரு வினோதமான மீன்!
ஆம், அது மிகவும் வினோதமான மீன். ஏனென்றால் அப்படிப்பட்ட மீனை இதுவரை அவர் பார்த்ததில்லை. தன்னுடைய வலையில் சிக்கிய அந்த மீன் இன்னும் சிறிது நாட்களில் உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்த போகின்றது என்பதையும் அவர் உணர்ந்திருக்கவில்லை.அப்போது அவருக்கு தோன்றியதெல்லாம் இந்த வினோதமான மீனைப் பற்றி கிழக்கு லண்டன் (East London - தென் ஆப்ரிக்காவில் உள்ள ஒரு நகரம்) அருங்காட்சியகத்திற்கு தகவல் கொடுப்போம் என்பதுதான்.
அப்போது கிழக்கு லண்டன் அருங்காட்சியகத்தின் டைரக்டராக இருந்தவர் கோர்ட்னி லாடிமர் (Miss Marjorie Courtney-Latimer) அவர்கள். மீனின் உடலமைப்பு அவருக்கு வியப்பை கொடுக்க, அந்த மீனை தன்னுடைய அருங்காட்சியகத்திற்கு கொண்டு வந்தார்.படு சுவாரசிய காட்சிகள் நடந்தேற ஆரம்பித்தன.மீன்கள் பற்றிய ஆய்வில் தனித்துவம் பெற்றவரான டாக்டர் ஸ்மித் (Dr.J.L.B Smith) அவர்களை தொலைப்பேசியில் அழைத்தார் லாடிமர். பதிலில்லை.தன் அலுவலகத்திலிருந்து சுமார் 350 மைல்கள் தொலைவில் உள்ள தன்னுடைய மற்றொரு வீட்டிற்கு சென்றிருந்தார் ஸ்மித்.
தொலைப்பேசியில் அழைத்து பார்த்து பதில் இல்லாததால், தான் பார்த்த அந்த மீன் குறித்து குறிப்புகள் எழுதி அந்த மீனை படமாக வரைந்து ஸ்மித்திற்கு கடிதம் எழுதினார் லாடிமர்.ஜனவரி மூன்றாம் தேதி அலுவலகம் வந்து கடிதத்தை பார்த்த ஸ்மித்திற்கோ பேரதிர்ச்சி. இது குறித்து அவர் "என்னுடைய மூளையில் குண்டு வெடித்தது போல உணர்ந்தேன். நிச்சயமாக இது மற்ற மீன்களை போல இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த கடிதம் வந்து 11 நாட்கள் ஆகிவிட்டதை உணர்ந்த அவர், அந்த மீனின் உடல் அழுகிவிடப்போகின்றது என்று அஞ்சி உடனடியாக லாடிமருக்கு தந்தி அடித்தார்.அதில் "மிக முக்கியமானது. பாதுகாக்கவும் (MOST IMPORTANT PRESERVE SKELETON AND GILLS [OF] FISH DESCRIBED)" என்று குறிப்பிட்டிருந்தார்.
பிறகு வீட்டிற்கு சென்று லாடிமருக்கு கடிதம் எழுதினார், அதில்
மிஸ் லாடிமர்,
உங்களுடைய 23ஆம் தேதியிட்ட கடிதம் கிடைத்தது. நன்றி. நான் கிரஹம்ஸ்டவுனில் இல்லாததால் உங்களது கடிதத்தை பார்க்க முடியவில்லை. உங்களிடம் உள்ள மீனை வெகு விரைவில் வந்து பார்க்கமுடியும் என்றும் எனக்கு தோன்றவில்லை. நான் தற்போது பணி நிமித்தமாக வேறு ஒரு இடத்திற்கு செல்ல இருப்பதால் அந்த மீனை பாதுகாத்து வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
உங்களுடைய படம் மற்றும் குறிப்புகளிலிருந்து எனக்கு தெரிய வருவது என்னவென்றால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த மீன் பல காலங்களுக்கு முன்னதாகவே அழிந்து விட்டதாக கருதப்படும் ஒரு உயிரினத்தை ஒத்திருக்கின்றது. எனினும் நான் அதனை பார்க்கும் வரை எந்த முடிவுக்கும் வர விரும்பவில்லை.நான் வரும் வரை அதனை மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். --- (Extract from the Original quote of) Dr.J.L.B. Smith's Letter to Miss.Latimer, 3rd January 1939. அவரால் இந்த ஆச்சர்யத்தை சாதாரணமாக எடுத்து கொள்ளமுடியவில்லை. அடுத்த நாள் லாடிமரை தொலைப்பேசியில் அழைத்து பேசினார்.
ஸ்மித் அவர்கள் கிழக்கு லண்டனுக்கு அந்த மீனை பார்க்க சென்றது பிப்ரவரி 16ஆம் தேதி. ஆனால் அதற்கு முன் வரை பல கடிதங்களை அவர் லாடிமருக்கு எழுதியுள்ளார். லாடிமர் அவர்களும் ஸ்மித்திற்கு பல தகவல்களை கடிதங்கள் மூலம் தெரிவித்துள்ளார். இவ்வளவு ஏன்? அந்த மீனின் செதில்கள் சிலவற்றை கூட ஸ்மித்திற்கு அனுப்பி வைத்துள்ளார் லாடிமர்.ஆனால், தான் மனதில் நினைத்திருக்கும் மீனாக அது நிச்சயம் இருக்காது என்றே நம்பினார் ஸ்மித். ஒருவேளை அந்த மீன் தான் நினைத்த மீனாக இருந்தால், அது உயிரியல் உலகையே ஸ்தம்பிக்க வைக்க போகின்றது என்பதையும் நன்கு உணர்ந்தே இருந்தார்.ஆனால், எது நடக்க வாய்ப்பே இல்லை என்று அவர் கருதினாரோ அது தான் கடைசியில் நடந்தது.

ஆம். அந்த மீனைப் பார்த்த ஸ்மித் அவர்களுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. ஆச்சர்யம் என்பதை காட்டிலும் திகைப்பு என்பதே சரியான வார்த்தையாக இருக்க முடியும். எந்த மீனை அவர் கற்பனை செய்து வைத்திருந்தாரோ அதே மீன் தான் அது.தான் அந்த மீனை முதல் முறை பார்த்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பின்னர் எழுதிய ஸ்மித் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
Although I had come prepared, that first sight [of the fish] hit me like a white-hot blast and made me feel shaky and queer, my body tingled --- Dr.J.L.B Smith in his book "The four Legs"
நான் அனைத்திற்கும் தயாராகி தான் வந்தேன். இருந்தாலும் அந்த மீனை முதலில் பார்த்த போது எனக்குள் நடுக்கம் ஏற்படுவது போல உணர்ந்தேன். என் உடல் சிலிர்த்தது --- (Extract from the original quote of) Dr.J.L.B Smith in his book "The four Legs"
ஸ்மித் அவர்கள் என்ன நினைத்தாரோ அது தான் நடந்தது. "அந்த மீன் தான் இது" என்று அவர் உறுதிப்படுத்தியதும் உயிரியல் உலகம் பரபரப்புக்கு உள்ளானது. அவர்கள் இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். அறிவியல் உலகே ஆச்சர்யத்தில் மூழ்கியது.இந்த மீன் கண்டுபிடிப்பு இன்றளவும் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விலங்கியல் கண்டுபிடிப்பாக கருதப்படுவதாக ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் கூறுகின்றது.
பத்திரிக்கைகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த செய்தியை வெளியிட்டன.அன்றிலிருந்து இன்று வரை இது போன்ற பல மீன்கள் பிடிக்கப்பட்டிருக்கின்றன.இதுவரை பார்த்ததை வைத்து, இந்த மீனிற்கான முக்கியத்துவம் எந்தளவிற்கு இருந்திருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்திருப்பீர்கள்.இனி, ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம்? எந்த மீன் இது? அறிவியலாளர்களுக்கு, அதிலும் குறிப்பாக பரிணாமவியலாளர்களுக்கு ஏன் மிகுந்த அதிர்ச்சியை இது அளித்தது? என்று பார்ப்போம்.

இந்த மீனிற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
பின்னே இருக்காதா என்ன? 65-80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே அழிந்து விட்டதாக கருதப்பட்ட இந்த மீன் இனம், இன்றளவும் உயிரோடு தான் இருக்கின்றன என்று தெரிய வந்தால் யார் தான் ஆச்சர்யப்படாமல் இருப்பர்? (அழிந்து விட்டதாக கருதப்படும் டைனாசர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றன என்று தெரிய வந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?, அது போன்றதொரு சூழ்நிலை தான் இது)
எந்த மீன் இது? பரிணாமவியலாளர்களுக்கு ஏன் அவ்வளவு அதிர்ச்சி?

இந்த மீனிற்கு பெயர் சீலகந்த் (Coelacanth). சுமார் நூறு கிலோ எடை வரை, சுமார் இரண்டு மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய இந்த மீன் பரிணாம வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருந்தது.
மீன்கள் படிப்படியாக நிலவாழ் உயிரினங்களாக (Tetrapods - eg. amphibians, reptiles, mammals) மாறியிருக்க வேண்டுமென்று கூறுகின்றது பரிணாம கோட்பாடு.
அதன்படி, பரிணாமவியலாளர்களால், மீன்களுக்கும் நிலவாழ் உயிரினங்களுக்கும் இடைப்பட்ட உயிரினமாக (Transitional form or Missing Link) நம்பப்பட்டு வந்தது சீலகந்த்.அதாவது, மீன்கள் சிறுக சிறுகச் சீலகந்த்தாக மாறி பின்னர் இவற்றிலிருந்து நிலவாழ் உயிரினங்கள் வந்திருக்கவேண்டுமென்று அப்போது பரிணாமவியலாளர்களால் நம்பப்பட்டு வந்தது.சீலகந்த்கள் இடைப்பட்ட உயிரினமாக கருதப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. எல்லோருக்கும் புரியும் ஒரு முக்கிய காரணமென்றால், இவற்றின் துடுப்புகள் (Fins) கால்கள் போன்று இருந்ததுதான்.
It was once thought to be a missing link between fishes and amphibians because of its leg-like lobed fins - Natural History Museum, London. ஒரு காலத்தில் இவை மீன்களுக்கும், நிலநீர்வாழ் உயிரினங்களுக்கும் இடைப்பட்ட உயிரினமாக கருதப்பட்டு வந்தன. அதற்கு காரணம், இவற்றுடைய துடுப்புகள் கால்கள் போன்று இருந்தது தான் - (Extract from the original quote of) Natural History Museum, London. ஆக, மீன்களுக்கு கால்கள் வளர்ந்து (சீலகந்த் ஆக மாறி) நிலத்திற்கு வந்ததாக நம்பப்பட்டு வந்தது.

400-360 மில்லியன் ஆண்டுகள் பழமையான சீலகந்த் மீன்களின் உயிரினப்படிமங்கள் (Fossils) காணக்கிடைக்கின்றன. சுமார் 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான நிறைய படிமங்கள் கிடைத்திருக்கின்றன.1938 ஆம் ஆண்டு இந்த மீன் பிடிக்கப்படும் வரை, சுமார் 65-80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மீன் இனம் அழிந்து விட்டதாக கருதப்பட்டது. இந்த கால கட்டத்தில் தான் டைனாசர்களும் அழிந்து போனதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஏன் இவற்றுடைய இடைப்பட்ட கால படிமங்கள் கிடைக்கவில்லை?
இதற்கு என்ன விளக்கம் சொல்லுகின்றார்கள் என்றால், பழங்காலத்திய சீலகந்த்கள், படிமம் உருவாகுவதற்கு ஏற்ற சூழ்நிலையில் வாழ்ந்தனவாம். ஆனால் தற்காலத்திய (சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து இன்று வரை) சீலகந்த்களோ படிமம் உருவாகுவதற்கு சாதகமான இடங்களில் வசிக்க வில்லையாம்.
How could Coelacanths disappear for over 80 million years and then turn up alive and well in the twentieth century? The answer seems to be that the Coelacanths from the fossil record lived in environments favouring fossilisation. Modern Coelacanths, both in the Comoros and Sulawesi were found in environments that do not favour fossil formation. They inhabit caves and overhangs in near vertical marine reefs, at about 200 m depth, off newly formed volcanic islands --- Coelacanth, Latimeria chalumnae Smith, 1939. australianmuseum.net.au
ஆக, 80 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே அழிந்து விட்டதாக கருதப்பட்ட இந்த இனம் இன்றளவும் உயிரோடு தான் இருக்கின்றன என்று தெரியவந்தால் எந்த அறிவியலாளர் தான் ஆச்சர்யமடையாமல் இருப்பார்?பரிணாமவியவியலாளர்களுக்கோ, ஆச்சர்யம் என்பது சாதாரண வார்த்தையாகவே இருக்க முடியும். ஏனென்றால், எதனை பரிணாம கோட்பாட்டிற்கு மிக வலிமையான ஆதாரம் என்று காட்டி வந்தார்களோ அது அன்றோடு மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டது.சீலகந்த் உயிரோடு காட்சியளித்து பரிணாமவியலாளர்களின் நம்பிக்கையை குழி தோண்டி புதைத்து விட்டது.
(80 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய) சீலகந்த்களுடைய படிமங்களை வைத்து தான் அவைகளை இடைப்பட்ட உயிரினமாக அவர்கள் கருதினார்கள். இன்று உயிரோடு உள்ள இந்த இனத்தை ஆராய்ந்து பார்த்ததில் பரிணாமவியலாளர்களின் இந்த மீன் பற்றிய கருத்துக்கள் தவறு என்று தெரிய வந்தன.உதாரணத்துக்கு, படிமங்களை வைத்து இந்த மீனினுடைய துடுப்புகளை கால்களாக எண்ணிக்கொண்டிருந்தனர் என்று மேலே பார்த்தோமல்லவா? உயிரோடு உள்ள இந்த மீன் இனத்தை ஆய்வு செய்து பார்த்ததில், ஆழ்கடல் மீன்களான இவை, அந்த துடுப்புகளை கால்களாக உபயோகப்படுத்துவதில்லை என்று தெரிய வந்தது. அதாவது, கடலின் தரைப்பகுதியில் கூட இவை அந்த துடுப்புகளை வைத்து சீல்களை போல நடந்து போவதில்லை என்று தெரிய வந்தது. அந்த துடுப்புகள் கால்களில்லை, அவை துடுப்புகள் மட்டுமே.
ஆக, ஆய்வுகளின் மூலம் இவை இடைப்பட்ட உயிரினம் இல்லை என்பது தெளிவானது.இதில் இன்னொரு முக்கிய செய்தியும் அடங்கியிருக்கின்றது. சற்று யோசித்து பாருங்கள், இந்த மீன் இனம் இந்நேரம் காட்சியளித்திருக்காவிட்டால், இன்றளவும் இடைப்பட்ட உயிரினமாக இவை கருதப்பட்டிருக்கும். ஆக, படிமங்களை வைத்து எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்றும் நிரூபித்தது சீலகந்த்.தான் இடைப்பட்ட உயிரினமில்லை என்று நிரூபித்ததோடு மட்டுமல்லாமல் சில கேள்விகளையும் பரிணாமவியலாளர்கள் முன் தூக்கி போட்டது சீலகந்த்.
மிகவும் சிக்கலான உடலமைப்பை கொண்டிருக்கும் ஆழ்கடல் மீன்களான சீலகந்த், சுமார் 150-400 மீட்டர்கள் ஆழத்தில் வாழ்பவை. இவைகளை தூண்டில் மூலம் கடலின் மேல்மட்டத்திற்கு இழுத்து வர செய்து சோதித்து பார்த்ததில், இவை அங்கு சில மணி நேரங்களே உயிரோடு இருப்பது தெரிய வந்தது (இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன). இதனாலேயே இவைகளை மீன் காட்சியகத்தில் வைப்பதென்பது முடியாத காரியமாய் இருக்கின்றது. கடலின் மேல்மட்டத்திற்கு கொண்டு வரப்பட்டால் சில மணி நேரங்களில் இறந்துவிடும் இவை, பிறகு எப்படி கரைக்கு வர முயற்சித்து சிறுக சிறுக மாறி நிலவாழ் உயிரினமாக மாறியிருக்க முடியும்?ஒருவேளை மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சீலகந்த் மீன்கள் கடற்கரைக்கு அருகில் வரக்கூடிய தகுதியை கொண்டிருந்திருக்கலாமோ? அப்படி இருந்தால் அதற்கு ஆதாரம் என்று ஒன்றுமில்லை. பரிணாமவியலாளர்களின் கற்பனையில் மட்டுமே அது உண்மையாக இருக்க முடியும்.இந்த மீன் பல ஆச்சர்ய தன்மைகளை தன்னகத்தே கொண்டது. ஆய்வு செய்து பார்த்தால் அறிந்து கொள்வீர்கள்.

அப்பென்டிக்ஸ் எம்மாதிரியான பாதிப்புகளை அது ஏற்படுத்தலாம்!
APPENDIX - இந்த உடல் உறுப்பு குறித்து ஏதோ ஒரு வகையில் நாம் நன்கு அறிந்திருக்கவே செய்வோம். இந்த பகுதியில் வரக்கூடிய வீக்கம் (Appendicitis) கொடுக்கக்கூடிய வலியை நாம் உணர்ந்தோ/கேள்விப்பட்டோ இருப்போம். இந்த பதிவானது, இந்த உறுப்பு குறித்த நவீன அறிவியல் தகவல்களை அலசுகின்றது. அதுமட்டுமல்லாமல், இந்த உறுப்பை அகற்றினால் நம்முடைய வாழ்க்கையில் எம்மாதிரியான பாதிப்புகளை அது ஏற்படுத்தலாம் என்பதையும் விளக்க முயற்சிக்கின்றது.
சென்ற மாதம் "Scientific American" ஆய்விதழின் தளத்தில், அப்பென்டிக்ஸ் குறித்து வெளிவந்த ஒரு கட்டுரை என்னை வெகுவாக கவர்ந்தது. "அப்பென்டிக்ஸ் உங்கள் உயிரை காப்பாற்றலாம் (Your Appendix Could Save Your Life)" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரை, என்னுடைய கவனத்தை ஈர்த்ததற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கிய காரணம் என்றால், இந்த உடல் உறுப்பு நீண்ட காலமாகவே உபயோகமற்ற அல்லது மிக குறைவான பயன்பாட்டை கொண்ட உறுப்பு என்பதாக கருதப்பட்டு வந்தது.
உடலின் எந்தவொரு பாகத்தையும் உபயோகமற்றதாக நான் கருதியதில்லை. பரிணாம கோட்பாட்டின் பல யூகங்கள் காலப்போக்கில் நிலைத்ததில்லை. அது போல, இந்த அப்பென்டிக்ஸ் குறித்த புரிதல்களும் ஒரு நாள் மாறும் என்பதாகவே என்னுடைய எண்ணம் இருந்தது.இம்மாதிரியான நேரத்தில், இந்த கட்டுரையை பார்க்க நேர்ந்ததால் ஒருவிதமான ஈர்ப்பு இயல்பாகவே வந்துவிட்டது தலைப்பை பார்த்தவுடன் நான் கேட்டுக்கொண்ட கேள்வி இது தான், உயிரையே இந்த உறுப்பு காப்பாற்றும் என்றால் இது எப்படி பயனற்ற ஒரு உறுப்பாக இருக்க முடியும்?டியுக் பல்கலைகழக மருத்துவ கழகத்தை (Duke University Medical Center) சேர்ந்த ஆய்வாளரான பில் பார்க்கர், அப்பென்டிக்ஸ் ஒரு உபயோகமற்ற உறுப்பு என்ற கருத்தை நிராகரித்தார். மேலும் இதுக்குறித்த ஒரு சுவாரசியமான யூகத்தை முன்வைத்தார். ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை (Beneficial bacteria) சேமித்து வைக்கும் ஒரு பெட்டகமாக அப்பென்டிக்ஸ் செயல்படுகின்றது என்ற யூகம் தான் அது.

சற்றே தெளிவாக கூற வேண்டுமென்றால் இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். காலரா போன்ற நோய்கள் தாக்கும் போது, அவை குடல் பகுதியில் உள்ள ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை அழித்து/செயலிழக்க செய்து விடுகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில், தான் சேமித்து வைத்துள்ள நல்ல பாக்டீரியாக்களை கொடுப்பதின் மூலம் குடல் பகுதி மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப அப்பென்டிக்ஸ் உதவுகின்றது.
இன்னும் சுருக்கமாக சொல்லுவேன்றால், நல்ல பாக்டீரியாக்களின் சரணாலயமாக அப்பென்டிக்ஸ் திகழ்கின்றது. அப்பென்டிக்ஸ் இருப்பவர்கள், அது இல்லாதவர்களை காட்டிலும், குடல் ரீதியான பாதிப்புகளில் இருந்து எளிதாக மீண்டு விடுகின்றனர். பார்க்கரின் இந்த ஐடியா நிச்சயம் புரட்சிகரமானது. சில ஆண்டுகளுக்கு முன்பாக, அரிசோனா பல்கலைகழகம் மற்றும் அரிசோனா மாநில பல்கலைகழக ஆய்வாளர்களுடன் சேர்ந்து இதுக்குறித்த ஆய்வை முன்னெடுத்து சென்றார்கள் டியுக் பல்கலைகழக ஆய்வாளர்கள். ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்கவும் செய்தார்கள். அப்பென்டிக்ஸ் குறித்த டார்வினின் எண்ணம் தவறு என்றும், இந்த உடல் உறுப்பு பயனற்றது இல்லை என்றும் தெரிவித்தார்கள். ஆனால் ஒரு தீர்மானமான முடிவிற்கு அனைத்து ஆய்வாளர்களாலும் வர முடியவில்லை. காரணம், இந்த ஐடியா இன்னும் தெளிவாக சோதிக்கப்பட வேண்டும்.
எப்படி சோதிப்பது?
யார் முன்வருவார்கள், காலரா போன்ற நோய் கிருமிகளை தங்கள் உடலில் செலுத்திக்கொண்டு ஆய்வுக்கு உட்பட யார் தான் முன்வருவார்கள்? எலி போன்ற உயிரினங்களில் சோதிக்கலாம் என்றால் அவற்றிற்கு அப்பென்டிக்ஸ் கிடையாது.வேறு வழி?.... ஒரே ஒரு வழி தான் இருக்கின்றது. மனிதர்களில் தான் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். குடல் ரீதியான நோய்களால் பாதிக்கப்பட்டோரை கணக்கிட வேண்டும். பின்னர் அவர்களை அப்பென்டிக்ஸ் உள்ளவர்கள், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்கள் என்று இரண்டாக பிரிக்க வேண்டும். பின்னர் இவர்களை கண்காணிக்க வேண்டும். கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் இதுவும் செயல்முறை ரீதியாக கடினமான ஒன்றே.இம்மாதிரியான சூழ்நிலையில் தான், Clinical Gastroenterology and Hepatology என்ற ஆய்விதழில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பரவசமூட்டும் ஆய்வு முடிவுகள் வெளிவந்தன. பார்க்கரின் ஐடியா செயல்முறை ரீதியாக சோதிக்கப்பட்டு விட்டதாக தெரிய வந்தது.
எப்படி?
C.difficile எனப்படும் படுஆபத்தான நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்ட சுமார் 254 நோயாளிகளை கண்டெடுத்தனர். இவர்கள் அனைவரும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களை அப்பென்டிக்ஸ் உள்ளவர்கள், அகற்றப்பட்டவர்கள் என்று பிரித்துக்கொண்டார்கள். பிறகு கண்காணிக்க ஆரம்பித்தார்கள். இந்த நுண்ணுயிரிகள் இயல்பான நிலையில் குடல்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுடன் போட்டியிடாது. குடல்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிய ஆரம்பித்துவிட்டால் இவை வேகமாக வளர/திரும்ப (recurrence) ஆரம்பித்துவிடும். பயிர்களுக்கு நடுவே இருக்கும் களை போன்றவை இவை. பார்க்கரின் யூகம் சரியென்றால், அப்பென்டிக்ஸ் இருப்பவர்களின் உடலில் இந்த நோய் கிருமிகள் திரும்பக்கூடாது. ஏனென்றால், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குறைந்தால், தான் சேமித்து வைத்துள்ள பாக்டீரியாக்களை அப்பென்டிக்ஸ் தரும். இந்த பாக்டீரியாக்கள் அந்த நுண்ணுயிரிகளை திரும்பவிடாமல் தடுக்கும். அதே நேரம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்களின் குடல்களில் இந்த நுண்ணுயிரிகள் திரும்ப வேண்டும்.
கண்காணிக்கப்பட்டு முடிவுகள் வெளிவந்தன.
பார்க்கர் எதனை கணித்தாரோ அது தான் முடிவாக இருந்தது. ஆம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்ட 48% நோயாளிகளில் C.difficile நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன. அதேநேரம், அப்பென்டிக்ஸ் உள்ளவர்களில் 11% பேரில் மட்டுமே இந்த நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன. ஆக, அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்கள் இந்த நோய் கிருமியால் நான்கு மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த முடிவுகள் நிச்சயம் பார்க்கரையும், அவரது சக ஆய்வாளர்களையும் ஊக்கப்படுத்தியிருக்கும்.
ஆனால், இங்கு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விசயங்களும் இருக்கின்றன. அதாவது, இந்த சோதனை முடிவுகள் அப்பென்டிக்ஸ் குறித்த தெளிவை தருகின்றனவா என்ற கேள்விக்கு இன்னும் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும். காரணம், அறிவியல் இப்படியாக வேலை செய்வதில்லை. ஒரு ஆய்வு முடிவை வைத்துக்கொண்டு நாம் எதையும் சொல்ல முடியாது. இன்னும் நிறைய ஆய்வுகள் இதில் செய்யப்பட்டாலே தெளிவான பார்வை கிடைக்கும். அதே நேரம், அப்பென்டிக்ஸ் நம் உடலில் மிகவும் பயனுள்ள உறுப்பு என்ற யூகத்தை இந்த ஆய்வு முடிவுகள் ஊக்கப்படுத்தியிருக்கின்றன. மேற்கொண்டு இந்த திசையில் பயணிக்க இந்த ஆய்வுகள் வழிவகை செய்திருக்கின்றன. சரி, அப்பென்டிக்ஸ் வீக்கத்தால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? இந்த வீக்கம் உண்டாக்கும் வலியை அதனை அனுபவித்தவர்களை கேட்டால் தெரியும். துடிதுடித்து போய் விடுவார்கள். காலங்காலமாக இதனை உபயோகமில்லாத உறுப்பு என்று அகற்றிக்கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Friday, March 2, 2012
தண்ணீரால் ஆபத்தும் உண்டு!

மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர் மிகவும் அவசியமானது. உடம்பில் நீர் சத்து குறைந்தால் சிறுநீரகக்கல், தலைசுற்றல், மயக்கம், ரத்தக் குழாய்களில் பாதிப்பு போன்ற பல விதமான நோய்கள் வருகின்றன. அதே போல் தண்ணீரை கடகடவென ஒரே மூச்சில் ஒரு சொம்பு நீரை அருந்துவது சில போதுகளில் மாரடைப்பை ஏற்படுத்தி ,மரணம் கூட சம்பவிக்கலாம்.
உணவு வேளைக்கு அரை மணி நேரம் முன்பும், உண்ட அரை மணி நேரம் பின்பும் தண்ணீரை அருந்துவது கூடாது. உண்பதற்கு அரை மணி முன்பே நமது உடலில் உள்ள செரிமாண சம்பந்தமான சுரப்பிகள் சுரப்பி நீரை சுரந்து கொண்டு, வேலை செய்வதற்கு தயாராக இருக்கும். அப்போது நீரை அருந்துவதால் சுரப்பி நீர்கள் நீர்த்துப் போகும். அதனால் உண்ணும் உணவு சரியாக செரிமாணம் ஆகாது. மேலும் குடலில் தேங்கும் உணவுகளால் வயிற்றுக் கோளாறு, மலச்சிக்கல், வாயு தொந்தரவுகள் போன்றவையும் ஏற்படும்.
உணவு உண்ட பின் வயிற்றில் உள்ள உணவு கூழ் போல் இருக்க வேண்டும் . இதற்காக தான் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்போதுதான் செரிமாணம் சரியான படி நடக்கும். அச்சமயமும் நீரை அருந்திவிட்டால் கூழ் போல் இருக்கும் உணவு நீர்த்து கஞ்சி போல் ஆகிவிடுவதால் குடல் உறிஞ்சிகளால் உணவிலிருந்து சரியாக சத்துக்களை நமது உடலுக்கு எடுத்து செல்ல முடியாமல் போகிறது. இதனால் சத்தான உணவுகளை உண்டாலும், நமக்கு தேவையான மினரல்கள், சத்து ஊக்கிகளும் உடலுக்கு கிடைக்காமல் போகின்றன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
எனக்கு பிடித்த வரிகள்!
1. சண்டை போட கற்றுக்கொள்.
2. சரியாகச் செய்.
3. விளைவுகளை எதிர் பார்த்திரு.
4. வந்த பாதைகளை அழித்து விடு.
5. ஒன்றாகச் சேர்.
6. மற்றவர்களுக்கு வழி காட்டு.
7. உண்மையை கடைபிடி.
8. காலத்தை சரியாக பயன்படுத்து.
9. சிறப்பாகச் செய்.
10. உன் நடவடிக்கைகளை மற்றவர்கள் ஊகிக்காத அளவு பார்த்துக்கொள்.
11. பழக்கங்கள் முதலில் ஒட்டடைகள், பின்னர் இரும்புக் கம்பிகள்.
12. பயத்தினால் பயன் உள்ளது ஆனால் கோழைத்தனத்தினால் பயன் ஒன்றுமில்லை.
13. நாளை கொடுப்பதாக இருந்தால் இன்றே கொடுத்துவிடு.
14. நேரத்தை தள்ளிப்போடதே, தாமதங்கள் அபாயமான முடிவைக் கொண்டுள்ளன.
15. குருடனுக்கு குருடன் வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் தான் விழுவார்கள்.
16. அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்.
17. இரகசியங்களை காப்பாற்று.
18. பிறர் கேட்காமல் எதையும் செய்யாதே.
19. உறவுகளை காப்பாற்று.
20. சட்டத்தின் துணையை நாடுபவன் ஆட்டுக்காக பசுவை இழக்கிறான்.
21. பணம் அறிவாளிக்கு தொண்டு புரிகிறது. முட்டாளை ஆட்சி செய்கிறது.
22. நீ யாரை வேண்டுமானாலும் சந்தேகி ஆனால் உன்னையல்ல்.
23. நல்ல தருணம் இரண்டு முறை உன் கதவை தட்டும் என்று எண்ணாதே.
24. தேளிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் அது கொட்டிக் கொண்டே தான் இருக்கும்.
25. சொர்க்கத்தில் அடிமையாய் இருப்பதை விட நரகத்தில் அரசனாய் இருப்பது மேல்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Subscribe to:
Posts (Atom)