Thursday, January 5, 2012

விரைவில் அறிமுகமாகவிருக்கும் புதிய ஐபேட்கள்!


எத்தனை வதந்திகள் வந்தாலும் அது ஆப்பிள் நிறுவனத்தைப் பாதிப்பதில்லை. ஆனால் ஆப்பிளின் ஐபேட் வாடிக்கையாளர்களை அவை மிக அதிகமாகவே பாதிக்கின்றன.குறைந்த காலத்திலேயே ஆப்பிள் உலக அளவில் மிகப் பிரபலமான நிறுவனம் ஆகும்.ஒவ்வொரு வருடமும் ஆப்பிளின் வருமானம்அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இத்தகைய உயர்ந்த பெயரைப் பெற்ற இந்த ஆப்பிளின் ஐபேட்களைப் பற்றி இப்போது ஏராளமான வதந்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.இந்த வதந்திகளில் சில அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. தற்போது ஆப்பிளின் ஐபேட்களைப் பற்றி வந்திருக்கும் வதந்தி சற்று ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்த வதந்திகளை இணையத்தளங்கள் விடாமல் பரப்பி வருகின்றன.


அதாவது புத்தாண்டில் ஐபேட்களுக்கான ஆப்பிளின் புதிய திட்டங்களைப் பற்றி இந்த வதந்திகள் வருகின்றன. டிஜிடைம்ஸ் கூறும் போது வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடக்கும் மேக் வேர்ல்டு அல்லது ஐ வேர்ல்டு கான்பரன்சில் வியக்கத்தக்க நிகழ்வுகள் நடைபெற இருப்பதாகக் கூறுகிறது.டிஜிடைம்ஸின் கூற்றுப்படி ஆப்பிள் ஐபேடு 2 எஸ் என்ற பெயரில் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபேட் 3 மற்றும் நடுத்தர டேப்லெட்டுகளை புத்தாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கிறது.
ஜனவரி மாதம் 2010ம் ஆண்டில் ஆப்பிள் தனது முதல் ஐபேடை அறிமுகப்படுத்தியது. அதுபோல் ஆப்பிள் ஐபேட் 2 மார்ச் மாதம் 2011ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது திடீரென்று ஒரு புதிய ஐஒஎஸ் டேப்லெட் ஸ்டீவ் ஜாப் அவர்களின் பிறந்த தினம் அன்று அறிமுகப்படுத்துகிறது என்ற வந்திருக்கிறது.மேலும் ஆப்பிள் ஐபேடு 2 டேப்லெட்டின் விலையைக் கணிசமான அளவில் குறைக்க இருக்கிறது. அதன் மூலம் அமேசான் கின்டில் பயர் ஆன்ட்ராய்டு டேப்லெட்டுடன் போட்டி போட முடியும் என நம்புகிறது. ஏனெனில் இந்த சீசனில் கின்டில் பயரின் விற்பனை ஐபேடின் விற்பனையத் தாண்டி இருக்கிறது.
மேலும் ஆப்பிளின் வரவிருக்கும் புதிய ஐபேடுகள் 2048 x 1536 பிக்சல் ரிசலூசன் கொண்டிருக்கும் ரெட்டினா டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும் என்ற வதந்தி வருகிறது.இது தற்போதைய ஐபேட்களை விட 4 மடங்கு அதிகமான சக்தியாகும். மேலும் டபுள் எல்இடி லைட் பார் கொண்டிருப்பதால் புதிய ஐபேட்களின் டிஸ்ப்ளே மிகவும் பளிச்சென்று இருக்கும். மேலும் இந்த புதிய மாடல்கள் ரிசலூசனைக் கொண்டிருக்கும் என்ற செய்தியும் வருகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அவுஸ்திரேலியா கடலில் வாழும் கலப்பினச் சுறாக்கள்!

உலகின் முன்னணி கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள குவின்ஸ் லேண்ட்டில் இருந்து நியூ சவுத் வேல்ஸ் கடலில் வாழும் உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.2ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்துக்கு இந்த ஆராய்ச்சி நடந்தது. அப்போது அங்கு 57 கலப்பின சுறா மீன்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.அவை பொதுவான பிளாக்டிக் சுறாக்களும், ஆஸ்திரேலியா பிளாக்டிக் சுறாக்களும் கலந்து உருவான கலப்பினமாகும். இவை மற்ற சுறா மீன்களை விட வலுவாகவும், உறுதியாகவும் உள்ளன.கடல் நீரின் தன்மை மற்றும் பருவ நிலை மாற்றத்துக்கு தக்கப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள அவை தாங்களாகவே கலப்பின சுறாக்களை உருவாக்கி கொண்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


பொதுவாக சுறாக்கள் இது போன்று கலப்பினத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடாது. ஆனால் பருவ நிலை மாற்றம் காரணமாக தான் அவை புதிய இனத்தை உருவாக்கியுள்ளதாக குவின்ஸ் லேண்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் ஜெஸ் மோர்கன் என்பவரும் ஒப்புக் கொண்டுள்ளார், இந்த சுறாக்களின் மரபணுக்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கொட்டாவி விடுவது ஏன் தெரியுமா? அறிவியல் விளக்கம்!

கொட்டாவி விடுவது ஏன் தெரியுமா?  அறிவியல் விளக்கம்.
ஒருத்தர் ஓவரா கொட்டாவி விட்டு கொண்டே இருந்தால் என்ன நினைப்பீர்கள்?  அவர் நாம் சொல்வதை கவனிக்கவில்லை, அல்லது அவர் தூக்கக்கலக்கத்திலோ, சோர்விலோ இருக்கிறார் என்று தானே நினைப்பீர்கள்!!?உங்கள் நினைபெல்லாம் தவறாக இருக்கலாம், என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி ஒன்று. கொட்டாவியை தூக்கக்கலக்கம் மற்றும் சோர்வுடன் மட்டும் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய மூளை ரொம்ப சூடாக இருக்கிறது’ என்பதன் அறிகுறி அது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.


பேராசிரியர் Andrew தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் நடந்த விரிவான ஆராய்ச்சியில் இது கண்டுபிடிக்கபட்டது . ப்ராண்டியர்ஸ் எனும் மருத்துவ நூல் இந்த ஆராய்ச்சி குறித்து விரிவாக பேசுகிறது. நமது மூளை சூடாகும் போது அதை குளிரச் செய்ய என்ன செய்யலாம் என உடல் யோசிக்கிறது. எனவே அது கொட்டாவி மூலம் நிறைய காற்றை உள்ளே செலுத்தி மூளையை குளிர வைக்க முயல்கிறது என்பது தான் இவர்களுடைய கண்டு பிடிப்பின் சாராம்சம் . குளிர்காலத்தில் அதிகம் கொட்டாவி விடுவதன் காரணம் இது தானாம். அதெப்படி குளிர்காலத்தில் அதிகம் கொட்டாவி? வெயில் காலத்தில் தானே மூளை அதிகம் சூடாகும்? அப்போது தானே அதிகம் கொட்டாவி தேவைப்படும்? என்று தானே நினைகிறீர்கள்?


ஆராய்ச்சி என்ன சொல்கிறதென்றால், நமது உடலுக்கு வெளியே உள்ள கற்று குளிரை இருக்கும் போது தான் அது மூளையை குளிர செய்ய முடியும். எனவே தான் குளிர் காலத்தில் அத்திட கொட்டாவி மூலம் அதிக குளிர்காற்றி உடல் உள்வாங்குகிறது. வெயில் காலத்தில் கொட்டாவி விட்டால் மூளை மேலும் அதிகள் வெப்பமடையும் ஆகையால் உடல் அதை அனுமதிக்க மறுத்து விடுகிறது. உடலின் தன்மைக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் கொட்டாவி வருகிறது எனும் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் ஒரு புதிய விஷயமாக கருதப்படுகிறது. நோய்களுக்கான மருத்துவ விளக்கத்துக்கும் இந்த ஆராச்சி பயன்படுமென கூறப்படுகிறது .குறிப்பாக M.N.T எனப்படும் மோட்டார் நியூரான் நோய்கள் அதிகம் கொட்டாவியை வர வைக்கும். அந்த நோயாளிகளின் மூளை அதிக வெப்பமாக இருப்பது கூட இதன் காரணாமாக இருக்கலாம் எனும் கோணத்தில் ஆராய்ச்சிகளுக்கு இந்த கண்டுபிடிப்பு வாசல் திறந்து வைத்திருக்கிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சந்திரனில் வேற்றுக்கிரக வாசிகளின் கால்தடங்கள் கண்டுபிடிப்பு!



சந்திரனில் மனிதர்கள் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் சந்திரனில் வேற்றுக்கிரக வாசிகள் உலா வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.


அப்போது சந்திரனின் மேற்பரப்பில் வேற்றுக்கிரக வாசிகளின் கால் தடங்கள் பதிந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது சந்திரனுக்கு நாசா விண்வெளி மையம் அனுப்பியுள்ள விண்கலம், ரேடியோ சிக்னல் எடுத்து அனுப்பிய வரை படத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

எலியின் உயிரணுக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!



ஜேர்மனியில் உள்ள முயன்ஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீபன் ஸ்கலாட் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஆய்வகத்தில் எலிகளின் உயிரணுவை உருவாக்க ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
எலிகளின் ஜெர்ம் செல்களில் இருந்து அவற்றை தயாரித்துள்ளனர். அவை நல்ல சத்தானவையாகவும், மரபணு பாதிப்பு இல்லாதவையாகவும் உள்ளன.


எனவே இவற்றின் மூலம் எலிக் குட்டிகளை உருவாக்க முடியும் என இக்குழுவின் இஸ்ரேல் விஞ்ஞானி மகமூத் ஹலேகெல் தெரிவித்துள்ளார்.மேலும் இதே முறையில் ஆண்களின் உயிரணுக்களையும் உருவாக்க முடியும் என்றும், இதன் மூலம் ஆண்மையற்ற ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.அதற்கான ஆய்வுகள் பரிசோதனை கூடத்தில் நடந்து வருகின்றன. தற்போது அவை தோல்வி அடைந்தாலும், விரைவில் அதில் வெற்றி பெறுவோம் என்று விஞ்ஞானி ஹலேகெல் தெரிவித்துள்ளார்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

விளையாடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்: ஆய்வில் தகவல்!


துறுதுறுவென ஓடியாடி விளையாடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நெதர்லாந்தில் உள்ள வியு யுனிவர்சிட்டி மெடிகல் சென்டரின் எம்கோ சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர் அமிகா சிங் தலைமையிலான குழுவினர் குழந்தைகளின் உடல் அசைவுக்கும் கல்வித் திறனுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தினர்.அமெரிக்காவில் ஏற்கனவே நடத்தப்பட்ட 10 ஆய்வுகள் மற்றும் கனடா மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட தலா 1 ஆய்வு முடிவுகளை ஆராய்ந்தனர்.


6 முதல் 18 வயதுக்குட்பட்ட வயதினரை உள்ளடக்கிய இந்த ஆய்வுகள் 53 முதல் 12,000 பேர் இந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உடல் இயக்கத்துக்கும் கல்வித் திறனுக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.அதாவது எப்போதும் துறுதுறுவென ஓடியாடி விளையாடும் சிறுவர்கள் விளையாட்டில் ஆர்வம் இல்லாதவர்களைவிட படிப்பில் சிறந்து விளங்குவது தெரியவந்தது.


விளையாடும்போது உடல் உறுப்புகள் இயங்கும். இதனால் அதிகப்படியான ரத்தம் மற்றும் ஆக்சிஜன் மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு நோர்பைன்பிரின் மற்றும் எண்டோர்பைன்ஸ் அளவு அதிகரித்து மூளை சுறுசுறுப்படைகிறது.
இதன்மூலம் புதிய நரம்பு செல்கள் உண்டாவதால் கல்வியில் சிறந்து விளங்க காரணமாகிறது. உடற்பயிற்சியும் இதுவிஷயத்தில் பலன் அளிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

NEWS OF THE DAY.

அரச பணியாளர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது- பிரதமர்.

இலங்கையில் அரசாங்க பணியாளர்கள், அரசாங்கத்தின் அரசியல் குறித்து விமர்சிக்க முடியாது என பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.பிரதமரின் காரியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரச பணியாளர்களுக்கு பொதுமக்களின் பணமே சம்பளமாக வழங்கப்படுகிறது. எனவே பொதுவான மனிதனாக கருதப்படும் அரச பணியாளர் ஒருவர் அரசாங்கத்தின் அரசியலை விமர்சிக்க முடியாது என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அரச பணியாளர்களால் அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்ட முடியும். எனினும், அரசாங்கத்தின் செயல் திட்டங்களை அழிக்கும் வகையில் செயற்படமுடியாது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.அரச சேவையில் கட்சி பேதங்கள் பார்க்ககூடாது அதேநேரம், நடுத்தர மக்களுக்கு நாட்டை முன்னேற்றும் திறமை உள்ளதாகவும் பிரதமர் ஜயரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கட்சி 20 தேர்தல்கள் தோல்வி! விசாரணை நடத்த வேண்டும்- சஜித் பிரேமதாச.
ஐக்கிய தேசியக் கட்சி கடந்த காலங்களில் இருபது தேர்தல்களில் தோல்வியடைந்திருப்பதாகவும், அது தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
அதன் பின்னரே கட்சியில் செயற்பாட்டு ரீதியாக பங்களிப்பு வழங்கி வரும் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட முடியும் என தெரிவித்துள்ளார்.
கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லுவோருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை. இந்நிலையில் எவ்வாறான ஒழுக்காற்று விசாரணை நடத்தினாலும் கட்சியின் வெற்றிக்காக பாடுபடப் போவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்..

ஐக்கிய தேசியக் கட்சியில் எவருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டால் அதற்காக முழுஅளவில் போராடப்போவதாகவும் அநீதியான முறையில் எவரேனும் பழிவாங்கப்படுவதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
பழிவாங்கும் எண்ணங்களை கைவிட்டு, கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என்று  ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களிடையே கேட்டுக்கொண்டார்.
அபிவிருத்திக்கான நிதியை அரசாங்கம் கொள்ளையிடுகின்றது - சரத் பொன்சேகா.
இலங்கை அரசாங்கம் அபிவிருத்திக்கென ஒதுக்கும் பணத்தில் பாதியை கொள்ளையிட்டு மீதிப் பணத்திலேயே அபிவிருத்தியை மேற்கொள்வதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். கிராமப் பகுதிகளின் குளங்கள், தொழிற்சாலைகள், பாதைகளை அமைக்க ஒதுக்கப்படும் பணத்தையே அரசாங்கம் களவாடுகின்றது. நாட்டு மக்களின் நலனுக்காக அபிவிருத்தி மேற்கொள்ளப்படவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களின் பணம் களவாடப்படுவதாகவும் அதனையே அபிவிருத்தி என அரசாங்கம் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு நேற்று சென்று திரும்பிய போதே  சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியாவிலேயே மிக உயர்ந்த தொலைத்தொடர்புக் கோபுரம் கொழும்பில்! சீனா நிதியுதவி.
ஆசியாவில் மிகவும் உயரமான தொலைத்தொடர்புக் கோபுரம் ஒன்று கொழும்பில் அமையவுள்ளது எனவும், அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொலைத்தொடர்புக் கோபுரம் ஒன்றையும் அதனுடன் இணைந்ததாக ஓய்வு நேர பூங்கா ஒன்றையும் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான நிதியுதவியனை சீனாவின் எக்ஸிம் வங்கி வழங்கியுள்ளது.நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் ஏழரை ஏக்கர் நிலப்பரப்பு இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
350 மீற்றர் உயரத்தை கொண்ட இக் கோபுரம் தாமரைக் கோபுரம் என அழைக்கப்படும். ஆசியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்புக் கோபுரமாக இது விளங்கவுள்ளது.இதன்மூலம் தொலைக்காட்சி மற்றும் தொலைதொடர்பு துறைகளில் பாரியளவு முன்னேற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கோபுரமானது 50 தொலைக்காட்சி சேவைகளுக்கும், 50 ஒளிபரப்பு சேவைகளுக்கும் 10 தொலைதொடர்பு சேவை வழங்குனர்களுக்கும் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது.100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 30 மாத காலத்தினுள் இக் கோபுரத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் காலமானார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவரும் மகாவலி அதிகாரசபையின் முன்னாள் தலைவருமான என்.ஜி.பி.பண்டிதரட்ன தனது 91ஆவது வயதில் இன்று காலமானார்.
இவர், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு நெருக்கமானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவரது இறுதிக்கிரியைகள் பற்றிய பின்னர் அறிவிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 பாதாள உலகக் குழுக்கள் அழிக்கப்பட்டுள்ளன: பொலிஸார்.
கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 50 பாதாள உலகக் குழுக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் நடவடிக்கைகளினால் 50 பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் ஒடுக்கப்பட்டுள்ளன.
பாதாள உலகக் குழுக்களை ஒழிக்கும் திட்டங்களை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வகுத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.குற்றச் செயல்களில் ஈடுபட்டு மறைந்து வாழ்வோரை கண்டுபிடிக்கும் நோக்கில் விசேட பிரிவொன்றை உருவாக்கியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.புலனாய்வுப் பிரிவினரும் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களினாலும், பொலிஸார் நடத்திய தாக்குதல்களினாலும் இவ்வாறு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு வலுவான நிலையில் உள்ளது: கோதபாய ராஜபக்ஸ.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் வலுவான நிலையில் உள்ளதாகவும், இவர்களிடம் பாரியளவு நிதி காணப்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், புலி ஆதரவாளர்கள், புலி அனுதாபிகள் பல்வேறு நாடுகளில் இயங்கி வருவதுடன் ஜனநாயகக் கட்டமைப்பில் இணைந்து கொண்டவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஆயுததாரிகள் என பல்வேறு போர்வையில் புலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருவதாகத் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தொழில்சார் நிபுணர்கள் ஒன்றிய ஒன்றுகூடல் வைபவத்தில் கலந்து கொண்ட போதே அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளின் வலுவான சக்திகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், சனல் 4 மற்றும் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் போன்ற ஊடக நிறுவனங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரசாரங்களில் இறங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.குறிப்பாக, கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் உள்ளக அரசியல் காய் நகர்த்தல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இனக்கலவரத்தை ஏற்படுத்தவும், ஸ்திரத்தன்மையை சீர் குலைக்கவும் தொடர்ந்தும் சில சக்திகள் முனைப்புக் காட்டி வருகின்றனர் என்பதனை தொழில்சார் நிபுணர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்குலக நாடுகளைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.பல்வேறு தியாகங்களைச் செய்து ஈட்டப்பட்ட சமாதானத்தை சீர்குலைக்கும் சக்திகள் குறித்து நாம் வழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக சில நாடுகள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாணவர் ஒருவரை ஜப்பானுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் - நீதிமன்றம் உத்தரவு.
ஜப்பானில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரை ஜப்பான் செல்ல அனுமதிக்கவேண்டாம் என்று கொழும்பு கோட்டை நீதிவான் நேற்று குடிவரவு குடியகல்வு திணைக்களக் கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.குறித்த மாணவர் கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக மையத்தில் இயங்கும் மாணிக்கக் கல் விற்பனை நிலையம் ஒன்றுடன் சிறந்த உறவை பேணி வந்துள்ளார்.இதனையடுத்து, 14.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கல்லை  ஜப்பானில் விற்பனை செய்து விட்டு குறுகிய காலத்தில் பணத்தை தருவதாக கூறி விற்பனை நிலையத்தில் இருந்து பெற்றுச்சென்றுள்ளார்.
எனினும், குறித்த பணத்தை மாணவர் இதுவரை செலுத்தவில்லை என்று மனுதாரர் நிறுவனம் பொலிஸின் ஊடாக நீதிமன்றத்தில் முறைப்பாட்டை செய்தது.தற்போது மாணவர் இலங்கையில் உள்ளபோதும் அவரின் தொடர்புகள் எவையும் கிடைக்கவில்லை என்றும் மனுதாரர் தரப்பு குறிப்பிட்டுள்ளது.இதன்போதே கோட்டை நீதிவான் நீதிமன்றம், சந்தேக நபரான மாணவரை ஜப்பானுக்கு செல்ல  அனுமதிக்கவேண்டாம்  என்று குடிவரவு குடியகல்வு திணைக்களக் கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களின் சம்பளம் குறைக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் அதன் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களின் சம்பளமும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் அரசால் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் பரிந்துரைகளை அடுத்து அமைச்சர்களின் சம்பளங்கள் குறைக்கப்படுகிறது.அந்தக் குழு நாட்டின் பிரதமர் லீ சியன் லூங் அவர்களின் சம்பளம் 36 சதவீதம் குறைக்கபட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதன்படி அவரது ஆண்டுச் சம்பளம் இனி 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைகிறது.
இருந்த போதிலும் அவர் தான் உலகிலேயே தேர்ந்தெடுக்கப்பட தலைவர்களில் அதிக ஊதியம் பெரும் தலைவராக இருப்பார். அவரது சம்பளம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சம்பளத்தைவிட நான்கு மடங்குக்கும் கூடுதலானது. பராக் ஒபாமா ஆண்டொன்றுக்கு 4 லட்சம் டொலர்களே சம்பளமாகப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் அரசால் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகளின் படி, அனைத்து அமைச்சர்களின் சம்பளமும் பிரதமரைப் போலவே 36 சதவீதம் குறையும். அவர்களின் ஆண்டுச் சம்பளம் இனி எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் டொலர்களாக இருக்கும்.அரசின் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொள்ளும் எண்ணம் இருந்தாலும், இது குறித்து இருவார காலம் விவாதங்கள் நடைபெறும் என்றும், பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய நபர் கைது.
நியூயார்க் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் இந்து வழிபாட்டு தலம், இஸ்லாமிய அறக்கட்டளை, பல்பொருள் அங்காடி உட்பட 4 இடங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்றது.
இந்த தாக்குதல் தொடர்பாக நியூயார்க் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். நேரில் பார்த்தவர்களின் சாட்சிகளின் மூலமும் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்த கார் எண்ணை வைத்தும் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள 40 வயதுள்ள அந்த நபர், நியூயார்க் நகரத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவன் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் திகதி பல்பொருள் அங்காடி ஒன்றில் திருடியதற்காக வெளியேற்றப்பட்டான். அதே அங்காடியில் இவன் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது தனிப்பட்ட வெறுப்பு காரணமாக இந்த தாக்குதல்களை நடத்தியதாக கூறியுள்ளான்.
77 வருடங்களுக்கு பின் தத்து கொடுத்த மகளை சந்தித்த 100 வயது தாய்.
பிறந்ததும் தத்து கொடுத்த தன் மகளை 77 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த 100 வயது தாய் அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைக்கிறார்.டச்சு நாட்டை சேர்ந்த மின்கா டிஸ்ப்ரோ மிக சிறிய வயதிலேயே டாக்காவின் தென் பகுதியில் அகதியாக குடிபெயர்ந்தார்.
குடும்பத்தை விட்டு அனாதையான அவர், 8ம் வகுப்பு வரை படித்திருந்தார். டாக்காவில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்தார்.கடந்த 1928ம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் மின்கா கொடுமைக்கு ஆளானார். இதில் கர்ப்பமுற்ற அவர் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
ஆனால் அந்த குழந்தையை வளர்க்க போதிய அனுபவம் மற்றும் வயது இன்மையால் தத்து கொடுத்தார். சமீபத்தில் தன் மகளை பார்க்கும் ஆர்வத்தில் தொடர்ந்து தேடி வந்தார்.அவரது தேடல்களுக்கு பலனாக 77 ஆண்டுகள் கடந்த நிலையில் தன் மகளை கண்டுபிடித்துள்ளார். பெட்டி ஜேன் என்ற தன் பெயரை ரூத் லீ என்று மாற்றி கொண்ட மின்காவின் மகளும் தனது தாயை பார்த்த மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.
லீ நார்வே நாட்டை சேர்ந்த பாதிரியார் குடும்பத்தாரால் வளர்த்து பராமரிக்கப்பட்டு வந்துள்ளார். மார்க் லீ விண்வெளி வீராங்கணையாக பணியாற்றி வந்துள்ளார்.தனது பணிக் காலத்தில் 4 முறை விண்கலத்தில் சாகச பயணம் மேற்கொண்டதாகவும் 517 முறை உலகை சுற்றி வந்துள்ளதாகவும் பெருமையுடன் தெரிவிக்கிறார் லீ.
கடந்த 2006ம் ஆண்டு தற்செயலாக பல முறை தாங்கள் இருவரும் சந்தித்து கொண்டதாக தெரிவிக்கும் லீ, ஆனால் உறவு முறை தெரியாமல் தான் இந்த சந்திப்புகள் நடந்ததாக கூறுகிறார்.தற்போது பேத்தி கொள்ளுப் பேத்திகளுடன் வாழ்ந்து வரும் லீ, 100 வயதில் தாயை சந்தித்த உற்சாகத்தில் இருக்கிறார். இவர்களுடைய சந்திப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சிஸ் நடைபெற்ற ஒட்டகங்கள் திருவிழா.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் ஒட்டகங்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு திருவிழா கடந்த 1ம் திகதி தொடங்கியது. நாளை வரை விழா நடக்கிறது. இந்த திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஒட்டகங்கள் கலந்து கொண்டுள்ளன.
ஒட்டகங்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில் வெற்றி பெறும் ஒட்டகங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.விழா அமைப்பாளர்கள் கூறுகையில், ஆண்டு தோறும் ஒட்டகங்கள் திருவிழா ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் 155 விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
வெற்றி பெற்ற ஓட்டகங்களை ஊக்குவிக்கும் விதமாக 8.16 மில்லியன் டொலர் மதிப்புள்ள பரிசுகள் அளிக்கப்படும். அழகு போட்டி, ஓட்ட பந்தயம் மட்டுமின்றி அவற்றின் ஆரோக்கியம், பாலின் தரம், தளிர் நடை என பல்வேறு கட்டங்களில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் ஒட்டகங்களுக்கு மட்டுமின்றி அதன் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் அளிக்கப்படும்.கடைசி நாளன்று ஒட்டகங்கள் ஏலமும் இந்த கொண்டாட்டங்களில் களைகட்டும் என்றனர்.
பாரீஸ் ரயில் நிலையத்தில் தனியாக கிடந்த சூட்கேஸ்: ஊழியர் அதிர்ச்சி.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நின்றிருந்த ரயிலில் கேட்பாரற்று ஒரு சூட்கேஸ் கிடப்பதை பார்த்த ஊழியர் வெடிகுண்டு இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு உடனே காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.இதையடுத்து வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். சோதனை செய்து பார்த்ததில் சூட்கேஸில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
சூட்கேஸை திறந்து பார்த்த போது அதில் 20 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.5 கோடி(இந்திய ரூபாய்) ஆகும். தங்க கட்டிகளில் அதிகாரபூர்வ முத்திரை எதுவும் இல்லை. எனவே காவல்துறை சோதனைக்கு பயந்து அவற்றை யாராவது விட்டு சென்றிருக்கலாம் என தெரியவந்தது.தங்கத்தை விட்டு சென்றவரை கண்டுபிடிக்க அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கமெராவில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். யாரும் வாங்க வரவில்லை என்றால் அரசுக்கு அந்த தங்கம் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கிலாந்தில் கடும் புயல்: இருவர் பலி.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழையுடன் கடும் புயல் வீசியது, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிக்கு 2 பேர் பலியானார்கள்.இங்கிலாந்தின் டன்பிரிட்ஜ் வெல்ஸ் நகரில் வேன் மீது மரம் விழுந்ததில் அதன் டிரைவர் இறந்தார். புயலால் எழுந்த ராட்சத அலைகளில் சிக்கி இங்கிலீஷ் கால்வாயில் சென்ற சரக்கு கப்பல் ஆட்டம் கண்டது.அப்போது படுகாயமடைந்த கப்பல் சிப்பந்தி இறந்தார். மேலும் இரு ஊழியர்கள் காயம் அடைந்தனர். அவர்களை கடற்படை ஹெலிகாப்டர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சரிந்தன. இவை சாலைகளிலும் ரயில் பாதைகளிலும் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சாலைகளில் சென்ற வாகனங்களை புயல் தலைகீழாக புரட்டி போட்டது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
துறைமுகங்கள் மூடப்பட்டன, கட்டிடங்கள் இடிந்தன, நாள் முழுவதும் விடாமல் மழை பெய்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.புயலுக்கு பிறகு மின்சாரம் இன்றி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஸ்காட்லாந்து அரசு தெரிவித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஈரானின் அணு சக்தி நிலையங்களை குண்டு வீசி அழிப்போம்: அமெரிக்கா எச்சரிக்கை.
ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டு வீசி அழிப்போம் என்று அமெரிக்க குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ரிக் சன்டோரம் எச்சரித்துள்ளார்.அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 6ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. குடியரசு கட்சி வேட்பாளர் ரிக் சன்டோரம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி அழிப்பேன். எனது காண்காணிப்பில் ஈரான் எந்த அணு ஆயுதத்தையும் தயாரிக்க முடியாது என்றார்.
ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஐ.நா உட்பட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. எனினும் ஆயுதங்கள் தயாரிக்கவில்லை.மின் உற்பத்திக்காக அணுசக்தி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று ஈரான் திட்டவட்டமாக கூறிவிட்டது. அத்துடன் யுரேனியத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட எரிபொருளையும் நேற்று முன்தினம் அணு உலையில் செலுத்தி பரிசோதனையும் செய்து விட்டது.
கத்தாரில் தலிபான்களின் இணைப்பு அலுவலகம் ஒன்றை நிறுவ அரசு சம்மதம்.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் கத்தாரில் இணைப்பு அலுவலகம் ஒன்றை அமைப்பது பற்றிய தலிபான்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில் கடந்த 10 மாதங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.தற்போது தான் இது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இருதரப்பிலான பேச்சுவார்த்தை தொடர கத்தாரில் இணைப்பு அலுவலகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற தலிபான்களின் கோரிக்கையை ஆப்கான் அரசு ஏற்றுள்ளது.
சவுதி அரேபியா அல்லது துருக்கியில் அந்த அலுவலகத்தை அமைக்கலாம் என்ற அரசின் பரிந்துரையை தலிபான்கள் நிராகரித்து விட்டனர்.மேலும் குவான்டனமோ சிறையில் உள்ள தலிபான்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும், தலிபான்கள் முன்வைத்துள்ளனர். ஆனால் அமெரிக்கா அவர்களை ஆப்கான் அரசிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
கனடாவில் நிதிநிலை சிறப்பாக உள்ளது: கருத்துக்கணிப்பில் தகவல்.
கனடாவில் 64 சதவீதம் பேர் தங்களின் தற்போதைய நிதிநிலை குறித்து திருப்தி அடைந்துள்ளதாக கனடாவின் இம்ப்பீரியல் வர்த்தக வங்கி(CIBC) நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
5 சதவீதம் பேர் மட்டுமே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் நிதிநிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகக் கருதுகின்றனர்.இந்த ஆய்வு கடந்த ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்டது. அதில் 72 சதவீதம் பேர் இந்த ஆண்டில் தங்களின் நிதிநிலை எதிர்பார்த்த இலக்கை எட்டும் என்று உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.
இந்த உறுதி 18-34 வயதினரிடையே 78 சதவீதமும், 55-64 வயதினரிடையே 68 சதவீதமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. வயது அதிகரிக்கும் போது அவர்களின் நம்பிக்கை குறைகிறது. மேலும் மாநிலத்துக்கு மாநிலம் இந்த நிதிநிலை பற்றிய நம்பிக்கை மாறுபடுகிறது.ஆயினும் கனடா நாட்டினர் பலரும் தங்களுக்கென தனியாக ஒரு நிதிநிலை இலக்கை நிர்ணயித்து அதை அடைவதில் முழுமூச்சாக செயல்படுகின்றனர் என்று பாராட்டுத் தெரிவித்தார்.
பிரான்ஸ் அணுசக்தி மையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.
பிரான்ஸ் நாட்டில் உள்ள அணு மின் நிலையங்களின் பாதுகாப்பை மட்டும் அதிகரித்தால் போதும், அணு உலைகளை மூட வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜப்பானின் புகுஷிமாவில் ஏற்பட்ட அணுக்கதிர் வீச்சு விபத்துக்குப் பிறகு உலகம் முழுவதும் அணு சக்தி குறித்து அச்சம் பரவியிருந்தது.அந்த அச்சத்தை விலக்கும் வகையில் அணுசக்தி மையங்களின் பாதுகாப்பு குறித்து ஒரு குழுவினர் பிரான்சில் ஆய்வு நடத்தினர்.
இதன் பிறகு அணு உலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை தற்பொழுது அதிகப்படுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அணுப் பாதுகாப்பு மையம்(ASN) அறிவித்துள்ளது.ஆறு மாதத்திற்குள் பாதுகாப்புக் குழுவினர் அறிவுறுத்திய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனால்  நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் ஏற்படும் போது அணுமின் நிலையங்களில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.
பிரான்ஸ் நாட்டில் 58 அணு மின் நிலையங்கள் உண்டு. இந்நாட்டின் 75 சதவீதம் மின்சாரத் தேவையை இந்த அணு மின் நிலையங்களே நிறைவேற்றுகின்றன.உலகிலேயே மின்சாரத் தேவைக்காக அணு மின் நிலையங்களையே அதிகமாக நம்பிக் கொண்டிருப்பது பிரான்ஸ் நாடு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
நாளிதழ் ஆசிரியரை மிரட்டிய ஜேர்மன் ஜனாதிபதி: உடனடியாக பதவி விலக வலியுறுத்தல்.
ஜேர்மன் ஜனாதிபதி வாங்கிய வீட்டுக் கடன் பற்றிய விவரங்களை வெளியிட்ட பத்திரிகையை மிரட்டியதால், ஜனாதிபதி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஜேர்மனி பத்திரிகைகள் குரல் எழுப்பியுள்ளன.ஜேர்மன் ஜனாதிபதி கிறிஸ்டியன் உல்ப்(52) கடந்த 2008ம் ஆண்டில் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் வீட்டுக் கடனாக ஐந்து லட்சம் யூரோ பெற்றார்.
அப்போது உல்ப் லோயர் சாக்சோனி மாகாண முதல்வராக இருந்தார். கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் உல்ப் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஜேர்மனியின் பிரபல பில்ட் என்ற நாளிதழ் உல்ப் வாங்கிய கடன் பற்றிய விபரங்கள் அனைத்தையும் வெளியிட்டது.கடன் விவரங்களை வெளியிட்டால் பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வாய்ஸ் மெயில் மூலம், பத்திரிகை எடிட்டரை மிரட்டியுள்ளார்.
கடன் விவரங்கள் வெளியான ஓரிரு நாட்களில் மீண்டும் எடிட்டருக்கு வாய்ஸ் மெயில் அனுப்பிய ஜனாதிபதி தனது முந்தைய மிரட்டலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.இந்த விவகாரத்தை பில்ட் பத்திரிகை தற்போது வெளியிட்டுள்ளது. இதையடுத்து நாட்டின் முக்கிய பத்திரிகைகள், ஜனாதிபதி மீது காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளன.
பினான்சியல் டைம்ஸ் டாயிட்ச்லேண்ட் பத்திரிகை, தனது தலையங்கத்தில் ஜனாதிபதி தனது பதவிக்கான அந்தஸ்தை காக்கத் தவறியதால் ராஜினாமா செய்ய வேண்டும்.இந்த தவறால் அவர் மீதான நம்பிக்கை போய்விட்டது. இப்படிப்பட்டவர் ஜனாதிபதியாக நீடிக்கக் கூடாது என கூறியுள்ளது, ஜனாதிபதி பத்திரிகை சுதந்திரத்தில் தலையிட்டதாக, பல பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சீனாவின் மீது ஆதிக்கம் செலுத்தும் மேற்கத்திய நாடுகள்: சீன ஜனாதிபதி குற்றச்சாட்டு.
மேற்குலக நாடுகள் தங்கள் பண்பாடு மற்றும் கொள்கைகளைப் பரப்புவதன் மூலம் சீனா மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றன. அதை சீனா அனுமதிக்காது என சீன ஜனாதிபதி ஹூ ஜிண்டாவோ கூறியுள்ளார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கான கொள்கை வடிவமைப்பு மாநாடு நடந்தது. அதில் சீன பண்பாட்டை கட்டிக் காப்பது, கட்சி மற்றும் மக்களின் கடமை என அறிவிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக அம்மாநாட்டில் பேசியதை சேர்த்து ஜனாதிபதி ஹூ ஜிண்டாவோ எழுதிய கட்டுரை ஒன்று கட்சி இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதில் ஹூ ஜிண்டாவோ எழுதியிருப்பதாவது: சர்வதேச விரோத சக்திகள் சீனாவை மேற்கத்திய மயமாக்கி அதன் மூலம் துண்டாடலாம் என கருதுகின்றன.அவை தமது ஊடுருவலுக்கு வாசலாக, பண்பாடு மற்றும் கொள்கையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. கொள்கை ரீதியிலான இந்த போராட்டம் பற்றி நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
சர்வதேச அளவில் சீனா தற்போது பலமாக இருப்பதைப் போன்று நமது பண்பாடும் சர்வதேச அளவிலான நமது செல்வாக்கும் அவ்வளவு பலமானதாக இல்லை.ஆனால் சர்வதேச அளவிலான மேற்கத்திய பண்பாடு மிகவும் வலுவாக இருக்கிறது. அதன் தாக்குதலை எதிர்கொள்ள சீனா தனது பண்பாட்டை கட்டிக் காக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.
எகிப்தில் மூன்றாவது இறுதி கட்டத் தேர்தல்.
எகிப்தில் நாடாளுமன்றத்திற்கான மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் நேற்று தொடங்கியது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மீதான விசாரணையும் தொடங்கியது.எகிப்தில் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் இரு கட்டங்கள் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், நேற்று மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் நடந்தது.
மொத்தம் ஒன்பது மாகாணங்களில் நடந்த இத்தேர்தலில் பெருவாரியான மக்கள் வாக்களித்தனர். இத்தேர்தல் இன்றும் தொடர்கிறது. முதல் இரு தேர்தல்களில், 62 சதவீதம் பேர் வாக்களித்தனர்.மூன்றாவது கட்ட தேர்தலில் ஒன்றரைக் கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மீதான வழக்கு நேற்று முன்தினம் கெய்ரோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கியது. சில காரணங்களால் நீதிபதி வழக்கை இன்று ஒத்தி வைத்தார். திட்டமிட்டபடி இன்று விசாரணை தொடங்கியது.
இதில் முபாரக், அவரின் இரு மகன்கள் கமால் மற்றும் அலா, முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல் அட்லி, ஆறு காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவ்விசாரணை மூன்று நாட்கள் நடக்கும் எனத் தெரிகிறது.கடந்தாண்டு எகிப்தில் நடந்த புரட்சியின் போது, மக்களைக் கொல்லும்படி இராணுவத்தை ஏவியதாக முபாரக் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மீண்டும் அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக ஓமன் வளைகுடாவுக்குச் சென்றுள்ள அமெரிக்காவின் போர்க் கப்பல் மீண்டும் பாரசீக வளைகுடா பக்கம் வரக் கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடைப்பட்ட குறுகலான கடல்வழிப் பாதை ஹோர்முஸ் நீரிணை என அழைக்கப்படுகிறது. இதன் வழியாக உலகின் 20 சதவீத எண்ணெய்க் கப்பல்கள் சென்று வருகின்றன.
ஈரான் மீது அமெரிக்கா சமீபத்தில் அடுத்தடுத்து பொருளாதாரத் தடைகளை விதித்ததை அடுத்து இந்த நீரிணையை மூடப் போவதாக ஈரான் மிரட்டியது. தொடர்ந்து அப்பகுதியில் கடந்த 10 நாட்களாக ஈரானின் கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டது.இந்த பயிற்சியின் போது தரையில் இருந்து கடலில் உள்ள இலக்கைத் தாக்கும் காதர் ஏவுகணை, குறுகிய தூரம் சென்று தாக்கும் நாசர் ஏவுகணை, தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் நூர் ஏவுகணை ஆகிய மூன்று ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக ஈரான் அறிவித்தது. அதேபோல் அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் அணு எரிபொருள் கம்பிகளையும், உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் தயாரித்து விட்டதாகத் தெரிவித்தது.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் போர் பயிற்சி மேற்கொள்வதாக தெரியவந்தவுடன் பாரசீக வளைகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்.ஜான் சி.ஸ்டென்னிஸ் என்ற போர் விமானந்தாங்கிக் கப்பல், ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து ஓமன் வளைகுடாவுக்குச் சென்று விட்டது.பஹ்ரைன் நாட்டில் அமெரிக்கா தனது ஐந்தாவது கடற்படைத் தளத்தை வைத்துள்ளது. அங்கிருந்தபடி வாரம் அல்லது மாதம் என்ற சுழற்சி முறையில் பாரசீக வளைகுடாவில் அமெரிக்கப் போர்க் கப்பல் ரோந்து மேற்கொள்வது வழக்கம். அதன் படி தான் ஸ்டென்னிஸ் போர்க் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்தது.
ஈரான் கடற்படை தனது 10 நாட்கள் போர்ப் பயிற்சியை முடித்துக் கொண்ட பின் அந்நாட்டு இராணுவ உயர் அதிகாரி அடாவுல்லா சலேஹி நேற்று விடுத்த அறிக்கையில், இந்த பயிற்சி காரணமாகத் தான் அமெரிக்க கப்பல் நீரிணையைக் கடந்து சென்றது. இனிமேல் அந்தக் கப்பல் பாரசீக வளைகுடா பக்கம் வரக் கூடாது. இதுகுறித்து அமெரிக்காவுக்கு ஈரான் அறிவுரை, பரிந்துரை மற்றும் எச்சரிக்கை விடுக்கிறது. ஏனெனில் மீண்டும் மீண்டும் இதுகுறித்து ஈரான் எச்சரிக்கை விடுக்காது என்றார்.இதற்கிடையில் ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளைப் போல, ஐரோப்பிய யூனியனும் இம்மாத இறுதிக்குள் விதிக்க வேண்டும் என பிரான்ஸ் கோரியுள்ளது. இம்மாதம் 30ம் திகதி ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் மாநாடு நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் ஏவுகணைகள் பரிசோதனை முடிந்துவிட்ட நிலையில் முதன் முறையாக ரஷ்யா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாடிம் கோவல் நேற்று அளித்த பேட்டியில்,ஈரானிடம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக் கூடிய ஏவுகணைகளைத் தயாரிக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் கிடையாது. இனி அதுபோன்ற ஏவுகணைகளை அந்நாடு எப்போதும் தயாரிக்கப் போவதுமில்லை என்றார்.
பாகிஸ்தான் இராணுவ வீரர்களை தாக்குவோம்: தலிபான்கள் அதிரடி.
பாகிஸ்தான் இராணுவத்தைத் தாக்க வேண்டாம் என தலிபான் தலைவர் முல்லா ஓமர் உத்தரவிட்டதாக வந்த செய்தியை பாகிஸ்தானி தலிபான் மறுத்துள்ளது.தலிபான் தலைவர் முல்லா ஓமரின் வழிகாட்டுதலின்படி தலிபான்களின் மூன்று முக்கிய பிரிவுகள் ஒருங்கிணைந்து ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளனர்.
இந்தக் குழுவுக்கு அறிவுரை கூறிய முல்லா ஓமர் பாகிஸ்தான் இராணுவத்தைத் தாக்க வேண்டாம். அமெரிக்க, நேட்டோ படைகளைத் தாக்குங்கள் என உத்தரவிட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதற்கு தாரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற பாகிஸ்தானி தலிபான் மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எசனுல்லா எசன் கூறியதாவது: மவுல்வி நஜீர் தலைமையிலான குழு, ஹபீஸ் குல் பகதூர் தலைமையிலான குழு மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான் ஆகிய தலிபான்களின் மூன்று முக்கிய பிரிவுகள் ஒன்றிணைந்து ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது உண்மை தான்.
இந்த ஒப்பந்தத்தின்படி இனி அப்பாவிகளைக் கடத்திக் கொல்வதை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளோம். ஆனால் பாகிஸ்தான் இராணுவம் மீதான தாக்குதல்களையோ, தற்கொலைத் தாக்குதல்களையோ நிறுத்த ஒப்புக் கொள்ளவில்லை.ஹக்கீமுல்லா மெசூத் தலைமையிலான பாகிஸ்தானி தலிபான் அமைப்பு, எவ்வித போர் நிறுத்தத்தையும் அறிவிக்கவில்லை. அப்படி ஒரு திட்டமும் இல்லை. எனினும் ஐந்து பேர் கொண்ட குழுவுடன் பாகிஸ்தானி தலிபான் இணைந்து செயல்படும்.
பணத்துக்காக அப்பாவிகளைக் கடத்திக் கொல்லுதல், அமெரிக்காவுக்காக உளவு பார்ப்போரை கடத்திக் கொல்லுதல் ஆகிய இரு பிரச்னைகளைத் தீர்க்கத் தான் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானில் எங்கள் தாக்குதல்கள் தொடரும் என்று தெரிவித்தார்.இதற்கிடையில் தலிபானுக்கும், பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையிலான ரகசிய அமைதிப் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விரைவில் ஒப்பந்தம் உருவாக்கப்படும். கடந்த காலத்தைப் போல் அல்லாமல், இப்போது மிகவும் கவனமாக இந்தப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.இதற்கு முன் தாரிக் இ தலிபானோடு பாகிஸ்தான் இராணுவம் மூன்று முறை ஒப்பந்தம் மேற்கொண்டு அத்தனையும் தோல்வி அடைந்தன. பேச்சுவார்த்தை குறித்து ஹக்கீமுல்லாவுக்கு தெரியாது என தெற்கு வஜீரிஸ்தானுக்கான தாரிக் இ தலிபான் தளபதி ரக்கீபுல்லா மெசூத் தெரிவித்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, January 3, 2012

தண்ணீரை வெளியிடும் நட்சத்திரம்!


எந்திர துப்பாக்கியிலிருந்து வெளியேறும் குண்டுகளின் வேகத்தைப்போல் 80 மடங்கு வேகத்தில் நீரை சிதற அடிக்கும் நட்சத்திரம் ஒன்றை நெதர்லாந்திலுள்ள லெய்டன் பல்கலை கழக விஞ்ஞானிகள், இன்ஃப்ராரெட் கதிர்களை பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளனர். 


பூமியிலிருந்து சுமார் 750 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அடையாளம் 
காணப்பட்டுள்ள இந்த நட்சத்திரத்தின் வயது 1 லட்சம் ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. அதனை ஒருவிதமான வாயு மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த வாயுக்கள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்கள் என தெரியவந்துள்ளது. இந்த ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் ஆயிரக்கணக்கான டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலையில் தண்ணீராக மாறுவதாக மேலும் ஆய்வில் கண்டறியபட்டுள்ளது. இந்த தண்ணீர், நட்சத்திரத்தின் துருவங்கள் வழியே வெளியேறும் போது 1 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை எட்டி வாயு நிலையை அடைகிறது. சுற்றியுள்ள வாயு மண்டலத்தில் மோதி, விரைவில் குளிர்ந்து மீண்டும் திரவ நிலையை அடைகின்றது. அமேசான் நதி 1 வினாடியில் எந்த வேகத்தில் பாய்கிறதோ அதைப்போல 100 மில்லியன் மடங்கு அதி வேகத்தில் தண்ணீரை சிதறியடிக்கிறது இந்த நட்சத்திரம் என்னும் ஆச்சரியமான உண்மையையும் இந்த குழுவினர் கண்டறிந்துள்ளனர். அதாவது, அதன் வேகம் மணிக்கு 2 லட்சம் கி மீ அல்லது ஒரு எந்திர துப்பாக்கியின் குண்டுகள் சீறிப்பாயும் வேகத்தைப்போல் 80 மடங்கு ஆகும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மனிதர்களை போன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தேனீக்கள்!


இங்கிலாந்து நாட்டிலுள்ள நியூகேசில் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மெலிசா பேட்சன் மற்றும் ஜெரி ரைட் ஆகியோர் தேனீக்களை பற்றி ஆராய்ந்ததில் அவை மனிதர்களை போன்று உணர்ச்சியை வெளிப்படுத்த கூடியவை என்று அறிந்தனர். 


பொதுவாக முதுகெலும்பற்ற வகையை சேர்ந்த பூச்சி 
இனமான தேனீக்கள் இதுவரையிலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தெரியாதவை என்றே கருதப்பட்டு வந்தன. இந்நிலையில் அவர்கள் பயிற்றுவித்த தேனீக்கள் வசித்த தேன் கூட்டின் மீது எதிராளிகள் தாக்குவது போன்று போலியான தாக்குதலை நடத்தினர். பின் அவற்றின் நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டன. மிக சிறிதளவே கொண்ட அவற்றின் மூளையில் அழுத்தத்தை தோற்றுவிக்கும் வேதிபொருள்களான டோபமைன், செரோடனின் மற்றும் ஆக்டோபமைன் ஆகியவற்றின் அளவுகள் மாறுபடுவதை கண்டறிந்தனர். இதனடிப்படையில் பார்க்கும் பொழுது தேனீக்களானது விலங்குகள் மற்றும் மனிதர்கள் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் தேனீக்களின் பிற உணர்வுகளையும் பற்றி அறிந்து கொள்ள ஆய்வானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

வியப்பூட்டும் விண்வெளி ஆய்வுகள்!

நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில் கணக்கிலடங்காத அறிவியல் ரகசியங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் நாமறிந்த, அறிவியலர்களால் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் மிகக் குறைவே. 


சுருங்கக் கூறின் அறிந்த உண்மைகளைவிட அறியாத ரகசியங்களே அதிகம். ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிவியலர் களின் பல்வேறு கண்டு பிடிப்புகளும், வெளிப்படுத்துதல்களும் அறிவியல் உண்மைகளை அறிந்துகொள்ள வழிவகை செய்துள்ளது. மனித அறிவினைப் பெருக்கிட தூண்டுகோலாக அமைந்துள்ளது.வானியல் சரித்திரத்தின் ஆரம்ப ஏடுகளை புரட்டும்போது, ""தட்டையான பூமி, நட்சத்திரங்கள் பொருத்தப்பட்ட வான் போர்வை'' என்பவைதான் வானியலைப் பற்றிய மனிதனின் எண்ணமாக இருந்திருக்கிறது. இந்த எண்ணத்தை மாற்றி சற்று வித்தியாசமாக சிந்திக்க துவங்கியவர்கள் கிரேக்கர்களே.


கி.மு. 500-இல் ஹெக்காடியஸ் என்ற கிரேக்கர் பூமி ஒரு வட்டம் என்ற கருத்தை முன்வைத்தார். இக்கருத்தினின்று சற்றே மாறுபட்டு கி.மு. 550-இல் அனாக்ஸிமாண்டர் முரண்பாடான பூமி உருளை வடிவமானது என்று கூறினார். இது சற்று முரண்பாடான கருத்தாக தோன்றியது. காரணம் கிரகணத்தின் போது சந்திரன்மீது விழும் வட்டவடிவ நிழல் பூமியின் நிழலோ என்ற சந்தேகம்தான். பூமி உருண்டை என்று முதன் முதலாக கூறியவர் ஃபைலோலாஸ் என்பவர்தான். கி.மு. 450-இல் அரிஸ்டாட்டில் போன்றவர்கள் இக் கருத்தினை ஆமோதித்து ஏற்றுக்கொண்ட பின்னர் இக்கருத்து இன்றுவரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் உண்மையாகவே இருந்து வருகிறது.


பூமி உருண்டையின் அளவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரட்டோஸ்தனிஸ் எளிய முறையில் கண்டுபிடித்தார். ஒரு இடத்தில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக இருக்கும்போது அவ்விடத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் ஒரு குச்சியின் மீது விழும் சூரியக்கதிர்கள் உண்டாக்கும் நிழல் விழும் சாய்வை கணக்கிட்டு பூமியின் சுற்றளவு 2500 மைல். அதன் விட்டம் 8000 மைல் என்றார். இது சற்று ஆச்சர்யமூட்டும் கணக்குதான். இன்றைய கணக்கு பூமத்திய ரேகையில் பூமியின் சுற்றளவு 24902.4 மைல். விட்டம் 7917.48 மைல்.


தன் இருப்பிடத்தை அறிந்துகொண்ட பண்டைய கிரேக்க அறிவியலர்களுக்கு வானில் நட்சத்திர அழகைப் பார்த்து இருப்பு கொள்ளவில்லை. இரவில் தெரிந்த நட்சத்திரங்கள் பகலில் மறைந்து கண்ணாமூச்சி காட்டியது. அவர்களின் மூளையை கிளறியது. வானில் நட்சத்திரங்கள் இடம் பெயரவில்லை. ஆனால் பெரிய நட்சத்திரமாக தெரிந்த கோள்கள் இடம்பெயர்ந்து செல்கின்றன என்பது புரியத்துவங்கியது. 


நமக்கு அருகில் உள்ள கோள் சந்திரன் தான். எனவே சந்திரனை சுற்றி கிரேக்கர்களின் சிந்தனை சுழலத் துவங்கியது. அரிஸ்டார்க்கஸ் (கி.மு. 320-250) முதன் முறையாக சந்திரனின் தூரத்தை அளக்க முயற்சி மேற் கொண்டார். கிரகணத்தின் போது சந்திரன் மேல் விழும் பூமியின் நிழல் இவ்வளவு சிறிய தாக இருப்பின் அது எவ்வளவு தொலைவில் இருக்கவேண்டும் என்று அதிசயித்தார் அரிஸ்டார்க்கஸ். அவருக்குபின் வந்த ஹிப்பார்க்கஸ் (கி.மு. 190- 120) என்ற மிகச் சிறந்த கிரேக்க வானியலர் சந்திரனின் தூரத்தை நுட்பமாக கணக்கிட்டு பூமியின் விட்டத்தைப்போல் முப்பது மடங்கு இருக்கலாம் என்றார். சுமார் 24000 மைல் இருக்கலாம் என்று கணக்கிட்டார். (தற்போதைய கணிப்பு 238, 854.7 மைல்). பிறகு சந்திரனின் விட்டமும் தெரிய வந்தது. சுமார் 2160 மைல்.

முக்கோணவியலில் கிரேக்கர்கள் அபாரதிறமை படைத்தவர்கள். அரிஸ்டார்க்கஸ், "சந்திரன் முதல் கால் பாகத்தில் இருக்கும்போது பூமி,சூரியன், சந்திரன் மூன்றும் ஒரு நேர்கோண முக்கோணமாக இருக்கிறது. பூமியிலிருந்து சந்திரனின் தொலைவு தெரிந்த ஒன்று. இவற்றிற் கிடையேயான ஒரேஒரு கோணத்தை கண்டுபிடித்து விட்டால் சூரியனின் தொலைவை கண்டுபிடித்து விட முடியும்' என்று முக்கோணவியல் மூலம் சூரியனின் தொலைவு சுமார் 50 லட்சம் என்று தவறாக கணக்கிட்டார். இவருடைய கணக்கீடு பிழையானதுதான். ஆனால் இவர் உபயோகபடுத்திய முக்கோணவியல் முறை மிகச் சரியான ஒன்று.



இதன்பிறகு சுமார் 1800 வருடங்களுக்கு மேலாக வானியலில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் நிகழ்ந்ததற் கான எவ்வித சான்றும் இல்லை. நவீன வானியல் 1543-இல் கோபர்நிக்கஸ் என்னும் போலந்துகாரரின் புத்தகக் குறிப்பிலிருந்தே துவங்குகிறது. விண்வெளியின் மையம் பூமியல்ல சூரியன் என்று எழுதியிருந்தார் கோபர் நிக்கஸ். சூரியனை கிரகங்களும் பூமியும் வட்டமாக சுற்றி வருகின்றன என்று விண்வெளியின் மையத்தை பூமி யிலிருந்து சூரியனுக்கு மாற்றி எழுதினார் நிக்கஸ். இவருக்கு அடுத்து வந்த கெப்ளர் (ஜெர்மனி) 1609-இல் செவ்வாய் கிரகத்தை மாதக் கணக்கில் கவனித்து "கிரகங்கள் சூரியனைச் சுற்றுவது வட்டவடிவில் இல்லை. நீள்வட்ட வடிவில்' என்றார். கெப்ளரின் கோள்களில் இயக்க விதி இன்றும் பயன்படக் கூடியவை. கெப்ளரின் ஆய்வுகள் கோள்கள் ஒன்றுக்கொன்று எத்தனை மடங்கு தூரத்தில் உள்ளன என்பது நுட்பமாக கண்டுபிடிக்க உதவின. ஆனால் சரியான தொலைவை கண்டறிய இயலவில்லை. இந்த தூரங்களை அளக்கத்தான் பின்னாளில் பாரலாக்ஸ்  (Parallax) என்கிற முறையை பயன்படுத்தினார்கள்.


1608-இல் கலிலியோ டெலஸ்கோப் (தொலைநோக்கி) என்னும் மாபெரும் அற்புதத்தை கண்டுபிடித்து நவீன வானியலின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டார். தொலைநோக்கியின் (Telescope) மூலம் விண்வெளியில் நிகழும் சிறுசிறு மாற்றங்களைக்கூட கூர்ந்து கவனிக்க முடிந்தது. வானியலர்களுக்கு மீண்டும் பாரலாக்ஸ் முறையே உதவிக்கு வந்தது. சூரியனின் கதிர்கள் ஏற்படுத்தும் நிழலுக்கு பதிலாக இருவேறு இடத்திலிருந்து கோளின் கோணங்களை பாரலாக்ஸ் முறையில் காணப்பட்டு தூரம் கணக்கிடப்பட்டது. ஜான் ரிஹர் என்ற பிரெஞ்சுக்காரர் கயானாவிலும், காஹினி என்பவர் பாரிஸிலும் ஒரே சமயத்தில் செவ்வாய் கிரகத்தின் கோணத்தை தூர நட்சத்திரத்துடன் ஒப்புநோக்கி கணித்தார்கள். அதிலிருந்து கெப்ளரின் மாடலை வைத்துக்கொண்டு சூரியனின் தூரம் எட்டுகோடியே எழுபது லட்சம் மைல் என்றனர். இது தவறான கணக்கீடு என்றாலும் சூரியனின் சரியான தொலைவினை படிப்படியாக நெருங்கிக் கொண்டிருந்தனர். இதே முறையைப் பயன்படுத்தி புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களின் தொலைவை கண்டுபிடித்தனர்.


கோள்களின் இயக்கங்கள் அனைத்தும் புரிந்தது. ஆனால், அதற்கு அப்பால் உள்ள நட்சத்திரங்கள் பற்றிய அறிவு அவ்வளவாக விரிவடையவில்லை. கோபர் நிக்கஸின் கற்பனை நட்சத்திரங்கள் அனைத்தும் வானில் நிலையாக இருக்கின்றன என்பதாகவே இருந்தது. 1718-இல் எட்மண்ட் ஹாலே நட்சத்திரங்கள் அனைத்தும் வானில் நிலையாக இல்லை. அது உண்மையில் நகருகின்றன என்று கூறி அறிவியலர்களின் சிந்தனையை கோள்களுக்கு அப்பால் அதிக தொலை விலுள்ள நட்சத்திரங்களுக்கு எடுத்துச் சென்றார்.

சனி கோள் வரை மனிதனின் தொலைநோக்குப் பார்வை சென்றடைந்தது. அதற்கும் அப்பால் விஞ்ஞானப் பார்வையை வீசியவர் சர் வில்லியம் ஹெர்செல் என்பவரே. 18-ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க வானவியலர். விண்வெளியின் ஏழாவது கோளான யுரேனஸ் 1781-ஆம் ஆண்டு இவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு முன்னர் 1690-இல் யுரேனஸ் என்பதை ஒரு நட்சத்திர மாகவே கருதி வந்தனர்.


1846-ஆம் ஆண்டு நெப்டியூன் கோள் ஜான் காலே என்பவரால் கண்டறியப்பட்டது. இவருக்கு முன்னர் விண் வெளியில் எட்டாவது கோள் இருக்கிறதென்ற கணிப்புகள் அறிவியலர்களால் கூறப்பட்டு வந்தபோதிலும் அதிகாரப்பூர்வமான கண்டுபிடிப்பு இவருடையதே. விண் வெளியில் சூரியக் குடும்பத்தை பற்றி சுமாரான ஒரு வடிவம் கிடைத்துவிட்டது.


18-ஆம் நூற்றாண்டிலும், 19-ஆம் நூற்றாண்டிலும் கெப்ளர் மற்றும் நியூட்டனின் வானியல் விதிகளே ஆதிக்கம் பெற்று விளங்கின. அதிக தொலைவிலுள்ள நட்சத்திரங்களின் தொலைவை கண்டறிய பாரலாக்ஸ் முறை உதவாது என்று தெரிந்து போனது. தொலை நோக்கிகள் பெரியதாக வடிவமைக்கப்பட்டன. அதன் தொலைநோக்கு எல்லைகள் விரிவாக்கப்பட்டன. அதன் வழியே தொலை தூரநட்சத்திரங்களின் தூரம் மற்றும் இயக்கங்களை அளவிட்டபோதுதான் அவை எண்ணால் எழுத முடியாத அளவிற்கு தூரத்திலிருப்பது புலனாயிற்று.

அறிவியல் உலகம் கண்டுபிடிப்பு புரட்சியின் உச்சக்கட்டத்தில் இருந்த சமயம். 1887-இல் மைக்கேல்சன் என்ற விஞ்ஞானி ஒளியின் வேகத்தை கண்டுபிடித்து விட்டார். ஒளியின் வேகம் வினாடிக்கு 1,86,282 மைல். இந்த வேகம் எந்த இடத்திலும் மாறவில்லை. எந்த திசையில் அளந்துபார்த்தபோதும் ஒரே மாதிரி இருந்தது. சாதாரணமாக, ஓடும் வாகனத்திலிருந்து ஒருவர் 10கி.மீ. வேகத்தில் ஒரு பொருளை எறிகிறார். அவர் அப்பொருளை எறியும் அவ்வினாடியில் வாகனம் 10 கி.மீ. வேகத்தில் நகருகிறது. இந்நிகழ்வை தரையிலிருந்து ஒருவரும், வாகனத்திலிருந்து ஒருவரும் பார்க்கிறார்கள். இப்போது வாகனத்திலிருப்பவருக்கு பொருள் செல்லும் வேகம் 10கி.மீ ஆகவும், தரையிலிருப்பவருக்கு 20கி.மீ. வேகமாகவும் இருக்கும். ஆனால், ஒளியின் வேகத்தில் இவ்வாறு இரண்டு விதமான வேகம் தெரிவதில்லை. 


விந்தையாகத்தானிருந்தது. இந்நிலையில் 1905-இல் ஐன்ஸ்டைன் சிறப்பு ஒப்புமைக்கோட்பாடு (Special Relativity Theory) என்ற புதிய கொள்கையை வெளி யிட்டு உலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தினார். அவர் கூறியது இதுதான். ஒளியின் வேகம் எங்கிருந்து அளவிடினும் மாறவில்லை என்பது பரிசோதிக்கப்பட்ட உண்மை. ஏன் மாறவில்லை என்பதற்கு விளக்கம் வேண்டுமானால் முதலில் சில கொள்கைகளை ஒப்புக் கொள்ள வேண்டும். ஒளியின் வேகத்தில் செல்லும்போது அளவில் சுருக்கம் ஏற்படும். எடைகூடும். காலம் சுருங்கும் என்ற வினோ தங்கள் நடைபெறும் என்றார். இந்த கொள்கை பைமெசான் என்ற நுண்ணிய துகளை ஒளியின் வேகத்தில் செலுத்தும்போது நிகழத்தான் செய்தது. ஆகவே ஒளியின் வேகம்தான் வேகத்தின் எல்லை.


அதற்கு அப்பால் ஒரு வேகமில்லை என்ற கருத்து வலுப் பட்டது. வேகம் மாறுவதில்லை என்பது நிரூபணமான உண்மையாகிவிட்டது. எனவே  ஒளி ஒரு வருடத்தில் பயணிக்கும் தொலைவினை ஒரு ஒளியாண்டு என்று வைத்துக் கொண்டு நட்சத்திரங்களின் தொலைவினை ஒளியாண்டுகளில் அளவிடலானார்கள். 1 ஒளி ஆண்டு = 9.46 ஷ் 1012 கிலோ மீட்டர் இந்த விதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் தூரத்தை கண்டுபிடித்தாயிற்று. நட்சத்திரக் கூட்டங்களுக்கு அப்பால் என்ன என்ற கேள்வி எழுந்தபோது அறவியல் உலகம் மறுபடியும் மூளையை கசக்கிக்கொண்டது. நட்சத்திர கூட்டங்களுடன் நம்முடைய பால்வீதி (மில்கிவே கேலக்ஸி) முடிந்துவிட்டால் அதற்கு அப்பால் வேறு ஏதேனும் இருக்க வேண்டுமல்லவா? 1920-இல் தூரத்தில் இயங்கிவரும் நட்சத்திரங்களின் பிறப்பிடமான நெபுலாக்களை கண்காணித்து அவை மற்றொரு பால்வீதிக்கு சொந்தமானது என்றார் எட்வின் ஹப்பிள் என்ற அறிவியலர். 46 புதிய கேக்லக்சிகளை கண்டுபிடித்தார். அவ்வகை கேலக்சிகளில் கோள்கள் நட்சத்திரங்கள், சூரியன் என அனைத்தும் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் வானியல் அறிஞர்கள். இதனை உறுதிப்படுத்த தேவையான உபகரணம் விஞ்ஞான உலகில் இல்லை.

முடிந்த தொலைவு வரை மனித மூளையை செலுத்தி யாகிவிட்டது. எவ்வாறு பூமி மற்றும் கோள்கள் அனைத்தும் விண்வெளியில் கீழே விழாமல் சுற்றி வருகின்றன என்ற கேள்விக்கு நியூட்டனின் ஈர்ப்பு விசையும், ஐன்ஸ்டீனின் ஒப்புமைக் கோட்பாடும் விளக்க மளித்தன. பிரபஞ்சத்தில் எந்தப் பொருளும் ஒன்றை ஒன்று கவர்கின்றது. அவற்றின் கவரும் சக்தி அவற்றுக் கிடையேயான நெருக்கத்தைப் பொருத்து அமையும். சூரியனுக்கும் பூமி கோளுக்கும் இடையேயான கவர்ச்சி விசைதான் பூமி விண்வெளியில் வீழாமல் இருக்கக் காரணம். சூரியனுக்கும் பூமிக்குமிடையேயான ஈர்ப்பு விசைக்கு செங்குத்தாக பூமியின் திசைவேகம் இருப்பத னால்தான் பூமி தன்னைத்தானே சுற்றுகிறது. இதே பிரபஞ்ச விதிகள் விண்வெளியில் இருக்கும் அனைத்து நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கு பொருந்தக்கூடியவை. பௌதிகத்தில் ஈர்ப்புவிசைத்தான் மிகவும் வலுவற்ற விசையாக கருதப்படுகிறது. மின்னியல், காந்த மற்றும் அழுத்த விசைகளை ஒப்பிடும்போது. ஆனால் நட்சத்திரங் களில் ஈர்ப்புவிசை அதிகமாகும்போது அவற்றின் அடர்த்தி அதிகமாகிறது. இதனால் எடை கூடும். அதன் அணுக்களில் இருக்கும் எலக்ட்ரான் புரோட்டான், நியூட்ரான் எல்லாம் கலந்து நியூட்ரான் நட்சத்திரமாக மாறும். மேலும் ஈர்ப்பு விசை அதிகரிப்பத னால் அதனுள் இருக்கும் துகள்களின் வேகம் அதிகரித்து ஒளியின் வேகத்தினை எட்டும். ஐன்ஸ்டைனின் விதிகளின்படி அதன் அடர்த்தி எல்லையற்றதாகி, அதன் அளவு புள்ளி யிலும் புள்ளியாகி, அதன் காலம் நின்று போய், அது கரும்பள்ளம் (Black hole)  என்னும் குழியில் காணாமல் போய்விடும். கரும்பள்ளத்தில் மிக மிக அதிகமான ஈர்ப்பு விசை காணப்படும். அதனால் ஒளி சென்றால் கூட தப்பமுடியாது. எத்தனை பெரிய கோள்களையும் தன்னுள்ளே ஈர்த்து ஒன்று மில்லாமல் செய்துவிடும். இந்த கரும்பள்ளம் பற்றிய எண்ணத்தை முதலில் வெளியிட்டவர்  ஜான்மிசெல் என்ற பிரிட்டிஷ் வானவியலர் (1783). எண்ணற்ற கரும் பள்ளங்கள் விண்வெளியில் இருப்பதாக வானியலர்கள் கணித்துள்ளனர். இத்தகைய கரும்பள்ளங்களின் ஈர்ப்பு எல்லைக்கு அருகில் வரும்போது நட்சத்திரங்கள் ஈர்க்கப்பட்டு, திடீரென காணாமல் போகின்றன. இதனை வானியலர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். கரும்பள்ளங்கள் ஒரு அச்சினை மையமாக வைத்து சுழலக்கூடியவை. அவ்வாறு சுழலும்போது அருகில் இருக்கக்கூடிய விண் வெளியை உள்ளிழுத்து ஒரு பிரபஞ்ச சுழலினை உண்டாக்குகிறது. இந்த சுழலினுள்ளே நட்சத்திரங்கள் காணாமல் போகின்றன என்கிறது விஞ்ஞான உலகம்.


கரும்பள்ளத்தில் சிக்கும் அனைத்து பொருள்களும் அதன் சூழல்மையத்தில் ஒரு ஒற்றை புள்ளியில் காணாமல் போகிறது என்ற கொள்கையினை விளக்க வல்லது ஈர்ப்பு விதிகளும் குவாண்டம் மெக்கானிக்ஸ் (பொருட்களின் மிக நுண்ணிய துகள்களின் பண்புகள் பற்றியது) கோட்பாடுகளே. இவ்விரு கோட்பாடுகளை இணைத்து குவாண்ட ஈர்ப்பு என்ற புதிய கோட்பாட்டை அறிவியலர்கள் உருவாக்கிவிட்டனர். ஆனால் இது எந்த அளவு சரியாக இருக்கும் என்பது புரியாத புதிராகவே உள்ளது.


ஐன்ஸ்டைனின் பொது ஒப்புமை கோட்பாடு (General relativity) கரும்பள்ளங்களின் விஷயத்தில் ஒரு அசாதாரண முக்கியத்து வத்தை கொடுக்கிறது. கரும் பள்ளங்களின் மையத்தில் உள்ள ஒற்றை புள்ளியானது வேறொரு பிரபஞ்சத்திற்கான பாலமாக செயல்படுகிறது. பாலம் மற்றொரு பள்ளமான வெப்ப பள்ளத்தினை  (Warm hole) இணைக்கிறது. இந்த இணைப்பு வழி அடுத்த பிரபஞ்சத்தில் பிரவேசிக்க முடியும். ஏன் காலம்   (Time)  போலும் இதன் வழி பயணிக்க முடியும் என்கிறது. அறிவியலர்களின் தற்போதைய புது கொள்கை.

நம்முடைய பால்வீதியின் மையத்தில் மிகப்பெரிய கரும்பள்ளம் உள்ளது. இது 4 மில்லியன் சூரியன்களின் எடைக்கு சமமானது. பயப்படத்தேவையில்லை. அதிர்ஷ்ட வசமாக அது 30,000 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளது.அண்மையில் ஸ்டீவன் வராக்கிங் என்பவர் ""கரும்பள்ளங்கள் கருமை யானவை அல்ல. அவற்றிலிருந்து கதிர்வீச்சு வெளிப்படுகிறது. கரும்பள்ளங்கள் கொண்டுள்ள ஆற்றல்தான் அவ்வாறு கதிர்வீசப்படுகிறது. இதனால் கரும்பள்ளங்கள் அதன் எடையை இழக்கின்றது. உண்மையில் கரும்பள்ளத்தில் விழும் பொருட்களை வேகமாக ஆவியாக்கி சுருங்கச் செய்கிறது'' என்ற புதிய சிந்தனையை வெளியிட்டள்ளார்


1954-ஆம் ஆண்டு ஹக் எவரெட்ஒஒ என்ற ஆராய்ச்சி மாணவர் இணைப் பிரபஞ்சத்தினை பற்றி தனது சிந்தனையை வெளியிட்டார். நம்முடைய பிரபஞ்சத்தினை போன்று பல பிரபஞ்சங்கள் நிலவுகிறது. அவை நம்முடைய பிரபஞ்சத்தின்று பிரிந்து சென்றவை. நம்முடைய பிரபஞ்சத்தில் இல்லாத வகை உயிரினங்கள் அங்கு இருக்கலாம். மனித உயிரனம் வேறு மாதிரி இருக்கலாம். 


விண்வெளி துறையில் மனிதர்களின் ஆராய்ச்சி ஒரு எல்லைக்கு அப்பால் செல்ல இயலவில்லை. விண்வெளியினைக் குறித்த எண்ணற்ற கொள்கைகளும் கருத்துக்களும் வானியலர்களின் சிந்தனையில் உதித்தவையே. வேற்றுகிரகங்கள் இருப்பதற்கான நிரூபணமும் இல்லை. அதே சமயம் சாத்தியம் இல்லை என்று கூறிவிடவும் முடியாது. சமீபத்தில் வேற்றுகிரக மனிதர்கள் அனுப்பும் தகவல் விண்வெளியில் கலந்து விடுவதால் அது நம்மை எட்டுவதில்லை என்ற புதிய கருத்தும் வானியலர்களிடையே நிலவுகிறது. விண்வெளித்துறையில் நாம் பயன்படுத்தும் கொள்கைகள் அனைத்தும் பழையவையே. எடுத்துக்காட்டாக ஐன்ஸ்டைனின் ஒளியின் வேகம் இறுதியானது என்ற கருத்தை தற்போது விஞ்ஞானிகள் நியூட்ரினோவின் வேகத்தினைக் கொண்டு மாற்றி எழுதியுள்ளனர். ஐன்ஸ்டைன் கொள்கை மாறுமா மாறாதா என சிறிது காலம் காத்திருந்து பார்க்கலாம். எனவே விண்வெளியினைக் குறித்து மனிதனின் சிந்தனைகள் எதிர் காலத்தில் மாறும் வாய்ப்புள்ளதோடு மட்டுமின்றி விரிவடையவும் செய்யும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மனிதனின் தோற்றம் குறித்து ஆராய்ச்சியில் புதிய தகவல்!

விலங்குகளிலிருந்து மாறுபட்டு, மனிதன் எப்போது தரையிலிருந்து கைகளை தூக்கி எழுந்து, நிமிர்ந்து கால்களை ஊன்றி நிற்கவும், நடக்கவும் ஆரம்பித்தான்? 


இதுவரையிலும் கிடைத்த ஆதாரங்களின்படி சுமார் 1.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என்பதுதான் நாமறிந்த தகவல். ஆனால் 3.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கால் தடம் பதித்த மனிதன் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றது. தான்சேனியாவிலுள்ள லேடோலி என்னுமிடத்தில் பாறைப்படிமங்களில் 11 மனித கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கால் தடங்கள் சிம்பன்சிக்கள், உரங்க்-உட்டான்கள் மற்றும் கொரில்லாக்களின் பாத 
அமைப்பிலிருந்து வேறுபடுகின்றன. இதற்கு முன்பு இதே போல் காணப்பட்ட காலடி சுவடுகள் ஒன்றே ஒன்றாக இருந்ததனால் அவற்றை ஒப்பிட்டுப்பார்ப்பது இயலாமல் போயிற்று. ஆனால், தற்போது கிடைத்துள்ள 11 சுவடுகளினால் ஒப்பிட்டுப்பார்ப்பது சுலபமாகி இருக்கிறது. 


இன்றைய நாகரீக மனிதனுக்கு இதுவே முன்னோடி என்று கருதப்படுகிறது. 
ஆதிமனிதன் இரண்டே பிரிவு தான் என்பது நாம் அறிந்தது. ஒன்று ஆப்பிரிக்காவை மையமாக கொண்டது. மற்றொன்று நியாண்டர்தாலை ஆதாரமாகக்கொண்டது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆதி மனிதனின் எக்ஸ் க்ரோமோசோம்கள் நியாண்டர்தால் மனிதனிடமிருந்து தோன்றியிருக்க வேண்டும் எனவும் அது நிச்சயமாக ஆப்பிரிக்காவை சேர்ந்த மனிதனுடையதல்ல என்றும் ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த இரண்டு பிரிவும் ஒரு கால கட்டத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்க வேண்டுமெனவும் அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது. 


நியாண்டர்தால் மனிதனின் முன்னோர்கள் சுமார் 4 லட்சத்திலிருந்து 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி தற்போதைய பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் ரஸ்யா பகுதிகளில் கடந்த 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்திருக்க வேண்டும் என அந்த ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் தற்போதைய நாகரீக மனிதன் சுமார் 50 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்துதான் வெளியேறியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. உடல் பலமும், பகுத்தறிவும் பெற்றிருந்த நியாண்டர்தால் மனிதனுக்கு தற்போதைய நாகரீக மனிதன் தோன்றிய இனத்தோடு தொடர்பு இருந்ததா? என்ற கேள்விக்கு ஆம் என்பது தான் பதில். நியாண்டர்தால் மனிதனும் தற்கால நாகரீக மனிதனும் ஒருவ்ருடன் ஒருவர் இரண்டற கலந்து போனவர்கள் தான் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

விண்டோஸ் இயங்குளத்தில் கடவுச்சொல்லை மாற்றம் செய்வதற்கு!


விண்டோஸ் இயங்குதளத்தில் பயனர் கடவுச்சொல்லை மாற்ற மிக எளிமையான வழி விண்டோஸ் இயங்குதளத்திலேயே உள்ளது.
நாம் சாதாரணமாக கடவுச்சொல்லை மாற்றும் போது முந்தைய கடவுச்சொல்லை உள்ளிட்ட பின்னரே நாம் புதிய கடவுச்சொல்லை உருவாக்கி கொள்ள முடியும்.ஆனால் முந்தைய கடவுச்சொல் இல்லாமலேயே புதிய கடவுச்சொல்லை உருவாக்க முடியும். இதனை செய்ய நாம் எந்த மூன்றாம் தர மென்பொருளின் உதவியையும் நாடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. விண்டோஸ் இயங்குதளத்தின் உதவியுடனே இதனை நாம் செய்ய முடியும்.


முதலில் my computer right side cick>அதில் Computer Management என்னும் சுருக்குவிசையை கிளிக் செய்யவும்.அடுத்து தோன்றும் விண்டோவில் Local Users and Groups > User என்னும் வரிசையை தெரிவு செய்யவும். அதில் உங்கள் கணணியில் உள்ள பயனர்களின் பட்டியல் தோன்றும். அதில் எந்த பயனரின் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமோ, அந்த பயனர் பெயர் மீது வலது கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Set Password என்பதை தெரிவு செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Proceed என்னும் பொத்தானை அழுத்தவும். பின் நீங்கள் மாற்ற நினைக்கும் கடவுச்சொல்லை உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும். அவ்வளவு தான் தற்போது கடவுச்சொல் மாற்றப்பட்டதாக செய்தி வரும். இதே போல் நீங்கள் எந்த பயனர் கணக்கின் கடவுச்சொல்லையும் மாற்றிக்கொள்ள முடியும்.தற்போது கணணியை மறுதொடக்கம் செய்யுங்கள், கடவுச்சொல் மாற்றப்பட்டிருக்கும். 
இதுபோல் உங்கள் நண்பர்கள் உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றிவிட முடியும், எனவே கவனமாக இருப்பது நல்லது!!!!!

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF