Tuesday, January 3, 2012

NEWS OF THE DAY.

எந்தவொரு நாடும் எமக்கு உத்தரவிட முடியாது: அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா.

இலங்கையை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்று, இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ எமக்கு உத்தரவிட முடியாது என அமைச்சரும் அரச பேச்சுக்குழுவின் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்திற்கிடையே இடம்பெறும் பேச்சுவார்த்தையில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பற்றி பி.பி.சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை, எந்த விடயங்கள் குறித்தும் பேசத் தயாராக இல்லை, பேசமாட்டோம் என்று மறுக்கவில்லை. காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் குறித்து மட்டுமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் பற்றிக் கூட நாங்கள் பேசமாட்டோம் என்று நிராகரிக்கவில்லை. இருந்தாலும் நாங்கள் பேச்சு நடத்துகிறோம். இவை மிகவும் நுணுக்கமான சிக்கலான விடயங்கள். இவற்றை ஓரிரு நாட்களில் தீர்த்துவிட முடியாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு சில பிரச்சினைகள் உள்ளன. அதுபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் பேசித் தான் தீர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பின் 13வது திருத்தப்படி, அதிகாரங்களை முழுமையாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு பகிர தயாராக இருப்பதாக தமக்கு உறுதியளித்துள்ளதாக இந்திய அரசு அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக, இந்தியா எமக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை. இலங்கையை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்று இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ எமக்கு உத்தரவிட முடியாது என குறிப்பிட்டுள்ளார். அவர்களின் விருப்பப்படி எம்மால் நடந்து கொள்ள முடியாது. இந்தப் பிரச்சினைகளை உள்ளுக்குள் தீர்ப்பதற்கே பேச்சுக்கள் நடக்கின்றன.இந்திய அழுத்தம் என்று எதுவும் கிடையாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பிரதேசங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்குவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கூறுவது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்தே ஒருமனதான தீர்மானத்துக்கு வரமுடியும். எமக்கு ஒவ்வொரு கட்சியினதும் நிலைப்பாடு அவசியம். தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியமானது. அதேவேளை ஈ.பி.டி.பியினது கருத்தையும் அறிய வேண்டும். என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொலிஸ் நிலையங்களில் இணையத்தளங்கள் அமுல்படுத்த திட்டம்.
இலங்கையின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இணையத்தளங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் இவ்வருடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தமக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பொதுமக்கள் தமது தகவல்களை பரிமாறிக்கொள்ளமுடியும் என்றும்  இதனால், நாட்டின் நடைபெறுகின்ற விடயங்களை அனைவரும் தெரிந்துக்கொள்ளக்கூடிய வசதி ஏற்படும் என்றும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பொதுமக்களின் முறைப்பாடுகளை இணையங்களின் மூலம் பெற்றுக்கொள்ளும் நடைமுறை அமுலுக்கு வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, அபராதங்களை குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்) மூலம் செலுத்தும் முறை ஒன்றையும் இலங்கையின் பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  தெரிவித்துள்ளார். 
அதிகார பகிர்விற்கு இடமே இல்லை: அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என மின்வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ அல்லது வேறும் சர்வதேச சக்திகளுக்கோ இந்த நாட்டின் அதிகாரத்தை பகிர்வதற்கு ஜாதிக ஹெல உறுமய கட்சி இடமளிக்காது என்றும் தற்போதைய அரசாங்கத்தை ஆட்டுவித்தோ அல்லது அச்சுறுத்தியோ அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ள முடியும் என எவரேனும் நினைத்தால் அதனை ஓர் நகைச்சுவையாகவே கருத வேண்டும் என அமைச்சர் சம்பிக்க தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிறந்த பின்னணியைக் கொண்டு விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.இந்த நாட்டில் இனப்பிரச்சினை ஒன்று இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தள்ளார்.
இலத்திரனியல் வீசா முறை புதுவருட தினத்தில் அமுல்! விமானநிலையத்தில் இரண்டு கருமபீடங்கள்.
வருகைக்கு பின்னர் வீசா வழங்கும் நடைமுறையை இலங்கை நேற்று புதுவருட தினத்திலேயே முடிவுறுத்தியது. அதற்கு பதிலாக, இலத்திரனியல் இணைய வீசா முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.வீசா இல்லாமல் இலங்கைக்கு வரும் பயணிகள் ஈ வீசாவை 50 அமெரிக்க டொலர்களை செலுத்தி பெற்றுக்கொள்ளமுடியும்.
இதன்கீழ் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு வீசாவை பெற்றுக்கொள்வதற்கென விமானநிலையத்தில் இரண்டு கருமபீடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அனைத்து நாடுகளுக்குமான ஈ வீசாக்களுக்கு 20 அமெரிக்க டொலர்களும், தென்னாசிய நாடுகளுக்கு 10அமெரிக்க டொலர்களையும் அறவிடவுள்ளதாக குடிவரவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் வழமைபோலவே சிங்கப்பூர், மாலைதீவு போன்ற நாடுகளின் பயணிகள் வீசா இன்றியே நாட்டுக்குள் பிரவேசிக்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை புறக்கணிக்க ஜனாதிபதி மகிந்த தயார்!- ஆங்கில இணையத்தளம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைப் புறக்கணிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பலரும் தொடர்ச்சியாக கொடுத்த அழுத்தத்தை அடுத்தே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இருந்து  அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், யுத்தக் குற்ற விவகாரங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்குமான யோசனைகள் சிலவற்றையும் இந்தக் குழுவினர் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும் அவ்விணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை சந்தித்த இந்தக் குழுவினர், அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதானது, விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும், உயிர்த் தியாகம் செய்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திய படையினருக்கும் இழைக்கப்படும் அநீதியாகவே அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்கவையும், விமல் வீரவன்சவையும் களமிறக்கி உள்நாட்டில் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர்களான ரோகித போகொல்லாகம மற்றும் மிலிந்த மொறகொட போன்றோரை அனைத்துலக பரப்புரைகளில் ஈடுபடுத்துமாறும் இவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்  எனவும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முக்கியமான எதிர்க்கட்சி அரசியல்வாதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளதுடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக மட்டுமன்றி, அதில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களைக் குறிவைத்தும் பரப்புரைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் மத்தியஸ்தம் வகிக்குமாறு கோரி அமெரிக்காவிடம் மகஜர்.
சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பான விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிக்குமாறு கோரி 25,638 பேரிடம் கையொப்பம் திரட்டப்பட்ட மகஜர் அமெரிக்க வெள்ளைமாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பொன்சேகா தரப்பு கூறியுள்ளது. இதனை வெள்ளைமாளிகை இணையதளமும் உறுதிப்படுத்தியுள்ளது.இதனையடுத்து, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலைக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளைப் பரிசீலிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. 
மகஜர் கிடைக்கப் பெற்றதையடுத்து அதுகுறித்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளைப் பரிசீலிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.மகஜரில் ஒப்பமிட்ட அனைவருக்கும் பொன்சேகாவின் தரப்பு நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் இலங்கையர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த 57 வயதான இலங்கையைச் சேர்ந்த ஆண்ணொருவர் கடந்த மாதம் 19 ம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் கடந்த 10 வருடங்களாக குறித்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என இலங்கையில் உள்ள அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவரின் மகன் இது குறித்து தெரிவிக்கையில், தமது தந்தைக்கு ஏற்பட்ட நிலையை அடுத்து  தமது குடும்பம் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.குறித்த இலங்கையர் விபத்து ஒன்றில் சிக்கியதாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.
தமது தந்தையின் நிலை குறித்து அவருடன் தொழில்புரிந்த பிறிதொருவர் ஊடாகவே அறிந்து கொண்டதாக மகன் தெரிவித்துள்ளார்.எனினும், தொழில்புரிந்த நிறுவனத்தில் இருந்து எந்த வித உத்தியோகபூர்வ தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.
பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவதில் அரசாங்கத்திற்கு சிக்கல் என்கிறார் கெஹலிய.
அரசியல் தீர்வு செயற்பாட்டில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதில் அரசாங்கத்துக்கு கொள்கையளவில் மிகப்பெரிய சிக்கல் காணப்படுகின்றது. என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.ஆனால் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களின் சில எல்லைகள் மற்றும் வரையறைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது.
ஆனால் எந்த விடயத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டும். காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்காவிடின் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை என்று கூறி விலகிச் செல்வதால் ஏற்படப்போவது ஒன்றுமில்லை.
குறித்த அதிகாரங்களின் சில விடயங்கள் குறித்து பேச அரசாங்கத்தின் கதவுகள் திறந்தேயுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தத் தயார் என்று அரசாங்க பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்துள்ளதாக வெளிவரும் தகவல்கள் குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகள் மஹாவம்சத்தை திரிபுபடுத்த முயற்சிக்கின்றனர் – சரத் பொன்சேகா.
அரசியல்வாதிகள் மஹாவம்சத்தை திரிபுபடுத்த முற்சிக்கின்றனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.மஹாவம்சத்தில் எனது பெயரை எழுதமாட்டார்களாம், கோமாளிகளின் பெயர்களுடன் இணைத்து எனது பெயரையும் எழுதுவதனை விடவும் எழுதாமல் இருப்பது நல்லது.
பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மானின் பெயர்கள் மஹா வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், எனது பெயர் உள்ளடக்கப்படவில்லை.
இந்தக் கீழ்த்தரமான அரசியல்வாதிகள் மஹா வம்சத்தையும் திரிபுபடுத்த முயற்சிக்கின்றனர்.வைத்திய சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவாரி பட்டப்படிப்பினை நாய்கள் கூட மதிப்பதில்லை – உயர்கல்வி அமைச்சர்.
இலங்கையின் வெளிவாரி பட்டப்படிப்பினை நாய்கள் கூட மதிப்பதில்லை என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.தேர்தல் காலத்தில் அரசியல் நியமனங்களை வழங்கும் போது தவிர பட்டப்படிப்பினை எவரும் கண்டுகொள்வதில்லை.
பிலியந்தலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.வெளிவாரி பட்டப்படிப்பினால் எவருக்கும் எந்தவித நன்மையும் கிடையாது.
உயர் நீதிமன்றத்தையும் நாய்களையும் தொடர்புபடுத்தி கடந்த காலத்தில் எஸ்.பி. திஸாநாயக்க வெளியிட்ட கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், நீண்ட சிறைத்தண்டனையை அனுபவிக்கவும் வழிகோலியது.தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதில் உயர்கல்வி அமைச்சர் தீவிரம் காட்டி வருவதாக ஆளும் கட்சி உறுப்பினர்களே குற்றம் சுமத்தி வருகின்ற சந்தர்ப்பத்தில், வெளிவாரி பட்டக் கற்கைநெறிகளை நாய்களும் விரும்பாது என வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தினர் அரசாங்கத்திற்கு 3.7 பில்லியன் ரூபாவினை சேமித்துக் கொடுத்துள்ளனர்: ஜகத் ஜயசூரிய.
அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் பங்களிப்புச் செய்து, 3.7 பில்லியன் ரூபாவினை படையினர் சேமித்துக் கொடுத்துள்ளதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.இராணுவத் தலைமையகத்தில் புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வீதிகள், சர்வதேச மைதானங்கள், பூங்காக்கள் போன்றவற்றை நிர்மாணிக்கும் பணிகளும், நகரை அழகுபடுத்தும் நடவடிக்கைகளிலும் படையினர் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கல்வி, விவசாயம், பொருளாதாரம், சுயதொழில் முயற்சிகளுக்கு படையினர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவி வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அணு உலை எரிபொருளை சொந்தமாக தயாரித்த ஈரான்: ஏவுகணை சோதனையும் நிகழ்த்தப்பட்டது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு உலை எரிபொருளை ஈரான் அரசு முதல் முறையாக சோதனை செய்துள்ளது.
ஈரான் அரசு அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடுவதாக ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன, அத்துடன் பொருளாதார தடையும் விதித்துள்ளன.
அணுசக்திக்கு தேவையான யுரேனியம் மூலப்பொருளையும் ஈரானுக்கு விநியோகம் செய்ய கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. எனினும் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் யுரேனியம் மற்றும் யுரேனிய கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரித்து, அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று ஈரான் கூறிவந்தது.
இந்நிலையில் டெஹ்ரானில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைக்கு தேவையான எரிபொருளை யுரேனியத்தின் மூலம் தயாரித்துள்ளது ஈரான். இதை அணு உலையில் செலுத்தி முதல் முறையாக விஞ்ஞானிகள் பரிசோதனையும் செய்து பார்த்துவிட்டனர் என்று ஈரான் அணுசக்தி கழகம் தனது இணையத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
கென்யாவில் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி.
கென்ய நாட்டின் லாமு ரிசார்ட் பகுதியில் படகு கவிழ்ந்து விழுந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
82 பேர் இந்த படகில் பயணித்ததாகவும், இதுவரை 48 பேர் உயிரோடு மீட்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஈரான் மீது பொருளாதார தடைகள், பாகிஸ்தானுக்கு நிதியுதவி நிறுத்தம்: ஒபாமா அதிரடி.
ஈரான் மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்கக் கூடிய மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதியுதவியை குறைக்கக் கூடிய பாதுகாப்பு பிரேணணையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.குறுகிய தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையை ஈரான் நேற்று வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. அத்துடன் அணுமின் நிலையங்களுக்கான யுரேனிய எரிபொருளையும் தயாரித்துள்ளது.
இந்த இரண்டையுமே உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் ஈரான் சாதித்துள்ளது. ஈரான் குறித்த இச்செய்திகள் நேற்று தான் வெளியாகின. ஆனால் இந்த இரண்டும் எப்போது, எங்கே நடந்தன என்பது குறித்து ஈரான் தேசிய செய்தி நிறுவனம் எதுவும் குறிப்பிடவில்லை.இந்த அதிரடி சம்பவங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு, இவை பற்றிய செய்திகள் முதலில் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
அதை உறுதிப்படுத்தும் விதத்தில் கடந்தாண்டு டிசம்பர் கடைசி வாரத்தில் ஈரான் மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்கும் பாதுகாப்பு பிரேணணை ஒன்று அமெரிக்க காங்கிரசில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.அதன்படி அமெரிக்காவின் அரசு மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் ஈரான் மத்திய வங்கி உட்பட நிதி நிறுவனங்களுடன் எவ்வித உறவும் வைத்து கொள்ளக் கூடாது. மீறி உறவு கொள்ளும் வங்கிகள், அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து விலக்கி வைக்கப்படும்.
அதேபோல் பயங்கரவாதத்துக்கெதிரான போரில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும், 850 மில்லியன் டொலர் நிதியுதவியில் 60 சதவீதம் அதாவது 510 மில்லியன் டொலர் நிறுத்தி வைக்கப்படும்.பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் நாட்டு வெடிகுண்டுகள் மூலமாக ஆப்கானில் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலியாகி வருகின்றனர். அதனால் நாட்டு வெடிகுண்டு உற்பத்தியைத் தடுக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் முழுமூச்சுடன் ஈடுபட்டால் ஒழிய இந்த தடை நீக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை.
ஹவாய் தீவில் ஓய்வு பெற்று வரும் ஜனாதிபதி ஒபாமா இந்த பிரேணணையில் நேற்று கையெழுத்திட்டார். ஈரான் தனது தொலை தூரம் சென்று தாக்கும் ஏவுகணைப் பரிசோதனையை நிறுத்தி வைப்பதாகவும், அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயார் எனவும் அறிக்கை வெளியிட்டதற்கு சில மணிநேரங்கள் கழித்து ஒபாமா இந்த பிரேணணையில் கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து பிரேணணை சட்டமாகியுள்ளது.
அதேநேரம் குவான்டனாமோ சிறையில் உள்ள வெளிநாட்டுக் கைதிகளை விசாரணைக்காக அமெரிக்காவிற்கோ அல்லது உடல்நலம் காரணமாக அவரவரின் நாடுகளுக்கோ அனுப்பி வைப்பதில் இந்த சட்டம் சில கெடுபிடிகளை வலியுறுத்தியுள்ளது.உலகளவில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள இந்நிலையில் ஈரான் மீதான தற்போதைய தடைகள் எண்ணெய் வர்த்தகத்தில் மேலும் பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் எனவும், கைதிகள் பரிமாற்றத்தில் செய்யப்பட்டுள்ள கெடுபிடிகள் தேவையில்லை எனவும் ஒபாமா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில், இந்த பிரேணணையில் நான் கையெழுத்திட்டேன் என்பதற்காக இதன் எல்லா அம்சங்களையும் ஏற்றுக் கொண்டேன் என்பது அர்த்தமல்ல என்றார்.ஆனால் பாகிஸ்தானுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அர்ஜென்டினாவின் மாகாண ஆளுநர் சுட்டுக் கொலை.
அர்ஜென்டினாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற மாகாண ஆளுநர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் ரியோநெக்ரோ மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் கார்லோஸ் சோரியா(61). நேற்று முன்தினம் புத்தாண்டு என்பதால் தனது மனைவியுடன் புத்தாண்டினை கொண்டாட ஜெனரல்ரூக்கா நகரில் உள்ள தனது வீட்டில் முக்கிய நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
சம்பவத்தன்று உள்நாட்டு நேரப்படி இரவு 8 மணியளவில் அவரது படுக்கையறையிலிருந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கவே அறையில் சென்று பார்த்த போது அவரது தலையில் குண்டுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கார்லோஸ் சோரியாவின் மனைவி சுஸானாபெர்ரிடோஸிடம் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட ஆளுநர் கார்லோஸ்சோரியா ஆளும் பெர்னோஸிட் தேசிய கட்சி சார்பில் கடந்த ஆண்டு(2011) டிசம்பர் 10ம் திகதி தான் ரியோநெக்ரோக மாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிட்டு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆளுநராக பதவியேற்றார்.
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்.
இந்தோனேஷியாவின் வடபகுதியில் உள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலை 5.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சுமத்ரா தீவில் பந்தா அசே பகுதிக்கு தென்மேற்கில் 160 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையை ஒட்டியுள்ள கட்டடங்கள் குலுங்கின. இதன் காரணமாக சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்படும் என்பதால் சிறிது நேரம் பரபரப்படைந்த மக்கள் அதன் பின் தங்கள் பணிகளை தொடர்ந்தனர். முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு சுமத்ரா தீவில் ரிக்டர் அளவுகோலில் 9.9 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டு 2,20,000 மேற்ப்பட்ட மக்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு வாழ்த்துக்களால் முடங்கி போன ட்விட்டர்.
அதிகளவில் புத்தாண்டு வாழ்த்துக்கள் குவிந்ததால் பிரிட்டனில் ட்விட்டர் சமூக வலைத்தளம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி விட்டது.ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலமாக நேற்று முன்தினம் உலகம் முழுவதிலும் உள்ளோர் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில் பிரிட்டனில் நேற்று முன்தினம் மதிய நேரத்தில் ட்விட்டர் முடங்கி விட்டது.
அந்த நேரத்தில் ஜப்பானில் புத்தாண்டு தொடங்கி விட்டதால் ட்விட்டரில் வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்து விட்டன. அதாவது நிமிடத்துக்கு 16 ஆயிரத்து 197 வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.இதனால் ட்விட்டர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி விட்டது. இதனால் ஏற்கனவே வாழ்த்து தெரிவித்தவரும், வாழ்த்து தெரிவிக்கப்பட்டவரும் தங்கள் செய்திகளைக் காண முடியாமல் தவித்தனர். இதன் காரணமாக பயனாளிகள் கடும் எரிச்சல் அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் அனுப்பிய செய்திகளில், ட்விட்டர் ஈஸ் ஓவர் கெபாசிட்டி என்ற மூன்று வார்த்தைகள் எனது இன்றைய நாளை வீணாக்கிவிட்டன எனவும், இந்த புத்தாண்டில் ட்விட்டர் எடுக்க வேண்டிய உறுதிமொழி என்னவென்றால் இனி நான் எப்போதும் ஓவர் கெபாசிட்டி என்ற நிலைக்குப் போக மாட்டேன் என்பது தான் எனவும் கிண்டல் செய்துள்ளனர்.
அதேநேரம் பேஸ்புக் சமூக வலைத்தளம் புத்தாண்டு தினத்தன்று 100 கோடி செய்திகள் மற்றும் புகைப்படங்கள் உலகம் முழுவதிலும் பரிமாறப்படும் என்பதால், அதைச் சமாளிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது.
மெமோகேட் விவகாரம் மீதான விசாரணை இன்று தொடக்கம்.
மெமோகேட் விவகாரத்தில் நேரில் ஆஜராகும்படி அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் உசேன் ஹக்கானி மற்றும் ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது சுஜா பாஷா ஆகியோருக்கு விசாரணைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தானில் அரசைக் கவிழ்க்க இராணுவம் சதித் திட்டம் தீட்டியதாக சந்தேகப்பட்ட ஜனாதிபதி ஸர்தார, கடந்தாண்டு மே மாதம் அமெரிக்காவுக்கான அப்போதைய பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி மூலம் அமெரிக்காவின் அப்போதைய இராணுவ தளபதி மைக் முல்லனுக்கு ஒரு கடிதம் கொடுத்தார்.அக்கடிதத்தில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி கயானியை கண்டிக்கும் படி ஜனாதிபதி ஸர்தாரி கூறியிருந்தார். இத்தகவலை அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் தொழிலதிபர் மன்சூர் இஜாஸ் வெளியிட்டார்.
இதனால் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக உசேன் ஹக்கானி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாடு திரும்பினார். இதுகுறித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.இதற்காக மூன்று நபர் கொண்ட விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இவ்விவகாரம் தான் மெமோகேட் விவகாரம் என்று பத்திரிக்கைகளால் அழைக்கப்படுகிறது.இந்நிலையில் தொழிலதிபர் மன்சூர் இஜாஸ், ஐ.எஸ்.ஐ தலைவர் பாஷா, முன்னாள் தூதர் உசேன் ஹக்கானி, முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோம்ஸ் ஜோன்ஸ் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் விளக்கங்களை அளிக்கும்படி விசாரணைக் குழு நேற்று முன்தினம் சம்மன் அனுப்பியுள்ளது.
மெமோகேட் விவகாரத்திற்கு காரணம் எது? ஜனாதிபதி ஸர்தாரியின் வேண்டுகோள் உண்மைதானா? இந்த வேண்டுகோளின் நோக்கம் என்ன? ஆகியவை குறித்து இந்த விசாரணைக் குழு இன்னும் நான்கு வாரங்களில் தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும். விசாரணைக் குழு தனது விசாரணையை இன்று தொடங்குகிறது.
பிலிப்பைன்சில் சோகமாக முடிந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள்.
பிலிப்பைன்சில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட சக்தி வாய்ந்த பட்டாசுகள் வெடித்து 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 205 பேர் படுகாயமடைந்தனர்.உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் கோலாகலமாக கொண்டாடினர்.
ஆனால் பிலிப்பைன்சில் அரசின் எச்சரிக்கையையும் மீறி சட்ட விரோதமாக சக்திவாய்ந்த பட்டாசுகளை வெடித்தும், துப்பாக்கி குண்டுகள் முழங்கவும் விபரீதமாக கொண்டாடினர்.காது செவிடாகும் வகையில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடித்த விபத்துகளில் 197 பேரும், குண்டடிபட்டு 8 பேரும் படுகாயமடைந்தனர்.
இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள், படுகாயத்தால் 14 சிறுவர்களின் கை விரல்களை துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வெடி விபத்து குறித்த விழிப்புணர்வு மற்றும் அரசின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் நடந்த இந்த விபத்தால் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
சட்ட விரோதமாக செயல்பட்டு பலர் காயமடைய காரணமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.வெடிவிபத்தின் தீமைகள் பற்றிய பிரசாரம், வெடிவிபத்துகளின் கோர காட்சி அடங்கிய படங்கள் மூலம் அதன் கொடூரத்தை சுட்டிக் காட்டியும் விபத்துகள் தொடர்ந்து நடக்கின்றன.கொண்டாட்டத்தின் போது வெடி வெடிக்கும் பழக்கத்தை மக்கள் மனதில் இருந்து அகற்றினால் மட்டுமே எதிர் காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.
பாகிஸ்தான் அரசை கண்டித்து வர்த்தகர்கள் உண்ணாவிரதம்.
பாகிஸ்தான் அரசை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள வர்த்தகர்கள் எல்லையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விளையும் பொருட்கள் பாகிஸ்தானுக்கு டிரக்குகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
அந்த டிரக்குகளை வழிமறிக்கும் பாகிஸ்தான் சுங்க துறை அதிகாரிகள், வரி கட்ட சொல்லி கட்டாயப்படுத்தி வருகின்றனர்.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் வர்த்தகர்கள் கடந்த சனிக்கிழமை எல்லையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். அதனால் சரக்குகளுடன் 120 டிரக்குகள் ஜீலம் பள்ளத்தாக்கு சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து வர்த்தகர்கள் கூறுகையில், பாகிஸ்தான் சுங்க துறை அதிகாரிகளின் கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். அதுவரை எங்கள் பொருட்களை மார்க்கெட்டுக்கு அனுப்ப மாட்டோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வங்கி சேவை இல்லை, தகவல் தொடர்பு வசதி இல்லை, பொருட்களை கொண்டு செல்ல ஏகப்பட்ட கெடுபிடிகள் உள்ளன என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வர்த்தக சங்க செய்தித் தொடர்பாளர் பெர்வேஸ் அகமது கூறுகையில், கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் அறிவித்த பிறகும், எங்கள் டிரக்குகளை சுங்க துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வர்த்தகர்களிடம் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்யும் சுங்க துறை அதிகாரிகள் மீது காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளோம் என்றார்.
பிரிட்டனில் இந்திய மாணவர் கொலை: விசாரிப்பதற்காக அதிகாரிகள் இந்தியா வருகை.
பிரிட்டனில் இந்திய மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மான்செஸ்டர் காவல்துறை அதிகாரிகள் இருவர் இந்தியா வந்து மாணவரின் பெற்றோரைச் சந்திக்க உள்ளனர்.
பிரிட்டனில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி மான்செஸ்டர் நகரில் அனுஜ் பித்வே(23) என்ற இந்திய மாணவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இக்கொலையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர், இவர்களில் மூன்று பேருக்கு பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இன்னும் காவல்துறையினரால் கைப்பற்றப்படவில்லை.
கொலையாளியைக் கண்டுபிடிப்போருக்கு 50 ஆயிரம் பவுண்டு பரிசளிக்கப்படும் என மான்செஸ்டர் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். பித்வேயின் உடலை இந்தியா கொண்டு வருவதற்காக அடுத்த வாரம் அவரின் பெற்றோர் மான்செஸ்டர் செல்லவுள்ளனர்.இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விபரங்களை பித்வேயின் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் பேசுவதில், காவல்துறை அதிகாரிகளுக்கு சில சிரமங்கள் இருப்பதால் அவர்களில் இரு உயர் அதிகாரிகள் விரைவில் பித்வேயின் பெற்றோரை நேரில் சந்தித்து தகவல்களைப் பெறவுள்ளனர்.
தெற்கு சூடானில் கலவரம்: 1000 பேர் பலி.
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சூடானில் இருந்து விடுதலை பெற்று கடந்த ஆண்டு(2011) ஜூலை மாதம் 9ந் திகதி தெற்கு சூடான் உதயமானது.அங்கு ஜாஸ்லே மாகாணத்தில் உள்ள பைபோர் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே அதிகாரத்தை கைப்பற்றுவதில் மோதல் ஏற்பட்டது. தற்பொழுது இந்த வன்முறை வெடித்து கலவரமாக மாறியது.
பல மாதங்களாக நடைபெற்று வரும் இந்த கலவரத்தில் இதுவரை 1000 பேர் உயிரிழந்தனர். எனவே கலவரத்தை அடக்க அங்கு கூடுதலாக மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும், பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே இரு பிரிவினரும் சமாதானத்துடன் அமைதி காக்கும் படி ஜனாதிபதி சால்வா கீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகின் முதல் 3டி சேனல் சீனாவில் தொடக்கம்.
உலகின் முதல் 3டி தொலைக்காட்சி சேனலை சோதனை முறையில் சீனா தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சீனாவில் உள்ள சில தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த 3டி தொலைக்காட்சி சேனலை தொடங்கியுள்ளன.ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1ம் திகதி முதல் தொடங்கப்பட்ட இந்த 3டி சேனல் தினமும் 13.5 மணி நேர நிகழ்ச்சிகளை சோதனை முறையில் ஒளிபரப்பு செய்து வருகிறது.
இந்த சேனலை சீனாவின் மத்திய தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வருகிறது. வரும் ஜனவரி 23ம் திகதி சீனாவில் வசந்த விழா கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய நாளில் இந்த 3டி சேனல் அதிகராப்பூர்வமாக ஒளிபரப்பப்படும்.முப்பரிமாண முறையில் காட்சிகளை கண்முன்னே நிறுத்தும் இந்த 3டி சேனல் உலகின் முதன் முதலாக தொடங்கப்பட்டது என்ற பெருமையைப் பெறுகிறது.
வேலைவாய்ப்புகளில் புதிய சாதனை நிகழ்த்திய ஜேர்மனி.
கடந்த 2011ம் ஆண்டு ஜேர்மனி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. ஐரோப்பிய மண்டலத்தின் பொருளாதாரத்தால் ஜேர்மனியில் அரை மில்லியன் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் மட்டும் 41.04 மில்லியன் மக்கள் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 1.3 சதவீதம் அதிகமாகும்.
தற்பொழுது தான் முதன் முறையாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜேர்மனியின் மொத்த மக்கள் தொகை 82 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் மற்றும் நிதித்துறை அமைச்சர் கூறுகையில், இந்த ஆண்டு கடந்த 2011ம் ஆண்டைக் காட்டிலும் மிக கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளனர்.
6 மாதமாக மலசலகூடத்தில் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்ட சிறுமி.
ஆப்கானிஸ்தான் நாட்டில் 15 வயதுடைய சிறுமி ஒருத்திக்கு அவளது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.அவளை மணந்த கணவர் அந்த பெண்ணை துன்புறுத்தியுள்ளதுடன் அவரும், அவரது தாயாரும் இணைந்து மலசல கூடத்தில் அடைத்து வைத்து சித்திரவதைகள் புரிந்துள்ளனர்.
அவளை விபசாரத்திற்கு நிர்பந்தித்துள்ளனர், உரிய முறையில் உணவுகள் வழங்கப்படாமல் ஆறுமாதங்களாக மலசல கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தபட்டுள்ளார்.சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் முறையிட்டதை அடுத்து பலத்த நோய் வாய்பட்ட நிலையில் நிகங்கள் அழுகிய நிலையிலும் உடல் முழுவதும் தொப்பளங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது குறித்த சிறுமிக்கு விசேட சிகிச்சை வழங்க காபூலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார். இந்த சிறுமிக்கு சிறுவயதில் திருமணம் செய்து வதைக்கப்பட்டது உலகில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
பிரான்சில் மென்பானங்கள் மீது புதிய வரி விதிப்பு.
பிரான்சில் இவ்வாண்டின் தொடக்கம் முதல் கொக்ககோலா போன்ற மென்பானங்கள் மீது ஐரோப்பாவிலேயே முதல் முறையாக புதிய வரி விதிக்கப்படுகிறது.ஐரோப்பாவின் பிற நாட்டினரைப் போலவே இந்த காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக மற்றவர்களைக் காட்டிலும் சற்று கூடுதலான பாதிப்புகள் பிரெஞ்சு மக்களுக்கு வருகிறது என்று கூறலாம்.
அந்நாட்டில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து மென்பானங்கள் அதிக அளவில் விலை ஏறுகின்றன.கடன் சுமையை சமாளிப்பதற்காக அந்நாட்டின் அரசாங்கம் “சோடா வரி” என்ற ஒரு புதிய வரியை கொண்டுவந்துள்ளது.
பிரான்சில் மென்பானங்கள் மீதான இந்தப் புதிய வரி விதிப்பை அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று அறிவிக்க வேண்டுமென அந்நாட்டின் மென்பான உற்பத்தி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஆனால் அந்த வழக்கில் அவர்களுக்கு சாதகமான முடிவு வரவில்லை.இந்த வரி விதிப்பின் மூலம் பிரான்சுக்கு ஒரு வருடத்தில் சுமார் 28 கோடி யூரோ வருவாய் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
மென்பானங்களால் உடல்நலத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள், நாட்டு மக்களிடம் உடற்பருமன் பிரச்சினை அதிகரித்து வருவது போன்றவற்றை கருத்தில் கொண்டுதான் இந்த வரியை தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளதாக பிரெஞ்சு அரசாங்கம் கூறுகிறது.இந்த வரியின் மூலம் பெறக்கூடிய வருவாய் பிரான்சின் பொதுசுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பிலேயே முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரியை நியாயப்படுத்துவதற்காக தங்களது உற்பத்திப் பொருட்களை மோசமான விஷயங்களாகக் காட்ட அரசாங்கம் முயற்சிக்கிறது என்று கூறி கொக்ககோலா போன்ற மென்பான உற்பத்தியாளர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.வெவ்வேறு பெயர்களில் சிறிய அளவில் மென்பானங்களை தயாரித்து விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள், தங்களுக்கு கிடைக்கக்கூடிய சொற்ப லாபத்தைக் குறைத்துக்கொண்டோ, உற்பத்திச் செலவுகளைக் குறைத்தோ இந்த வரியை தங்களால் செலுத்த முடியாது. ஆகவே வரிக்கு ஏற்ப பொருட்களின் விலையை ஏற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியிருக்கின்றனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, January 1, 2012

2011 உலகப் பார்வை!!!!!




ஜனவரி 1
எஸ்தோனியா நாடானது யூரோ நாணயத்தை முதன் முதலாக ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து 17வது நாடாக ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இணைந்தது.


ஜனவரி 9 - 15
தெற்கு சூடான் தன்னை ஒரு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்திக் கொள்ள வாக்கெடுப்பு நடத்தியது.


ஜனவரி 14
ஒருமாத கால போராட்டத்திற்கு பிறகு துனிஷியா நாட்டின் ஜனாதிபதி பதவி விலகினார்.
பெப்ரவரி 14
எகிப்து ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பதவி விலகினார். அதன் பின் இராணுவம் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு நாடாளுமன்ற தேர்தல் முறைப்படி நடைபெறும் என அறிவித்தது.
  • எகிப்திய போராட்டத்தில் புதிய திருப்பம்: முபாரக் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதிப்பு
  • எகிப்து அதிபரை பதவியிலிருந்து விலக்க அமெரிக்காவின் புதிய திட்டம்: சுலைமானை இடைக்கால அதிபராக்க முடிவு
  • எகிப்தில் திடீர் திருப்பம்: சீர்திருத்த குழு அமைக்க சம்மதம்
  • எகிப்து கலவரங்கள்: முபாரக்கிற்கு அமெரிக்காவின் அழைப்புகள்
  • எகிப்து போராட்டம் முடிவுற்ற நிலையில் ஏமனில் போராட்டம் தொடங்கியது
  • எகிப்து அதிபர் முபாரக்குக்கு மாதம் ரூ.15 ஆயிரம் உதவித் தொகை: ராணுவ ஆட்சி வழங்குகிறது
மார்ச் 11
ஜப்பானில் 9.1 ரிக்டர் அளிவில் நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில் 15,480 மக்கள் பலியானார்கள், 3,296 பேரைக் காணவில்லை. இதன் பின் உலக அளவில் 50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் அணுக்கதிர்வீச்சு ஏற்பட்டது.
  • ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: ஆழிப்பேரலையால் 40லட்சம் மக்கள் வீடிழந்து தவிப்பு இறந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை
  • ஜப்பானைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை
  • ஜப்பானில் அணுசக்தி வாயு கசிவு: மக்கள் வீடுகளை காலி செய்ய உத்தரவு 
  • ஜப்பானில் 12 ஆயிரம் பேர் பலி: மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பு
  • ஜப்பானில் 4வது அணு உலையும் வெடித்தது
மார்ச் 17
லிபியாவில் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். லிபியாவின் இராணுவ வீரர்கள் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தனர். இதனால் ஐ.நா.வில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு லிபியாவின் வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.
லிபியாவில் விமானங்கள் பறக்க தடை: பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றம்
ஏப்ரல் 11
ஐவெரி கோஸ்ட் நாட்டு ஜனாதிபதி லாரண்ட் காக்கோ கைது செய்யப்பட்டார்.
  • லோரன்ட் பக்போ கைது செய்யப்பட்டுள்ளார்
ஏப்ரல் 29
இங்கிலாந்து நாட்டு இளவரசர் வில்லியம் அவரது காதலியான கேத் மிடில்டனை மணந்தார்.
  • அரச திருமணம்: விழாக்கோலம் பூண்டது லண்டன்
  • இன்று இளவரசர் வில்லியமின் திருமணம்

மே 1
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொலை!
  • இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்: ஒபாமா மகிழ்ச்சி1
  • ஒசாமா கொல்லப்பட்டதை நேரடியாக பார்த்த ஒபாமா!
மே 26
போஸ்னியா நாட்டின் இராணுவத் தளபதி ராட்கோ மிலாடிக் இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில் செர்பியாவில் கைது செய்யப்பட்டார்.
  • 8 ஆயிரம் பேரை கொன்று குவித்த அதிபர்: செர்பியாவில் கைது
  • மிலாடிக் கைதானதை தொடர்ந்து செர்பியாவில் போராட்டம் வெடிக்கும் அபாயம்
யூன் 4
சிலி நாட்டில் வெடிமலை வெடித்து சிதறியது. இதன் காரணமாக தென் அமெரிக்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாட்டில் விமானப் போக்குவரத்து தடைபட்டது.
யூன் 5
ஏமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே போராட்டக்காரர்களின் தாக்குதல் காரணமாக காயமடைந்ததை தொடர்ந்து வைத்திய சிகிச்சை மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
  • மாளிகை மீது குண்டு வீசித் தாக்கியதில் ஏமன் அதிபர் காயம்: சவுதியில் சிகிச்சை
  • ஏமனில் மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்
யூலை 7
உலகில் முதன் முதலாக செயற்கை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
யூலை 9
தெற்கு சூடான் தனி நாடாக உதயமானது.
  • இன்று புது நாடாக உதயமாகும் தெற்கு சூடான்
யூலை 20
வரலாற்றிலேயே முப்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் சோமாலியா நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது.
  • சோமாலிய நாட்டில் கடும் வறட்சி: பலி எண்ணிக்கை அதிகரிப்பு
யூலை 22 
நோர்வேயில் குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டின் காரணமாக 76 பேர் கொல்லப்பட்டனர்.
  • நோர்வேயின் தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு
  • நோர்வேயின் தலைநகரில் துப்பாக்கிச் சூடு: பலி எண்ணிக்கை 80ஆக அதிகரிப்பு
ஓகஸ்ட் 5
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது புகைப்படங்களின் மூலமாக நாசாவால் உறுதி செய்யப்பட்டது.
  • செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
ஓகஸ்ட் 20 - 28
போராட்டக்காரர்களால் லிபியாவின் தலைநகரான திரிபோலி கைப்பற்றப்பட்டது.
  • கடாபியின் சொந்த ஊர் சுற்றி வளைப்பு: புரட்சிப் படைகள் தீவிரம்
செப்ரெம்பர் 19
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 434 பேர் உயிரிழந்தனர்.
  • பாகிஸ்தானில் பயங்கர வெள்ளம்: 10 லட்சம் வீடுகள் சேதம்
அக்டோபர் 18
1027 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
  • 447 பாலஸ்தீன கைதிகள் விடுதலை
  • இஸ்ரேல் வீரர் விடுதலை: காசா, ரமல்லாவில் கொண்டாட்டம்
அக்டோபர் 20
லிபியாவின் ஜனாதிபதி மும்மர் கடாபி சிர்தே நகரில் போராட்டக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • லிபிய அதிபர் கடாபி சுட்டுக் கொலை
  • மிக கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட கடாபி 
  • சிகரெட் பிடித்தபடி உயிரை விட்ட கடாபியின் மகன் 
அக்டோபர் 23
துருக்கியில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 604 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2200 கட்டிடங்கள் சேதமடைந்தது.
  • துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
  • துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: 1000 பேர் பலி 
  • துருக்கி நிலநடுக்கம்: இரண்டு நாட்களுக்கு பின் குழந்தை உயிருடன் மீட்பு
அக்டோபர் 27
பிரஸ்ஸல்ஸ் மாநகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் யூரோ கடன் நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்புக்கான தொகையானது 1 டிரில்லியான உயர்த்தப்பட்டது.
  • யூரோ பிரச்னைக்கு தீர்வு காண போராடும் ஐரோப்பியத் தலைவர்கள்
  • யூரோ மண்டலப் பிரச்னை: சீனாவின் உதவியை நாடும் ஐரோப்பிய அமைப்பு
அக்டோபர் 31
உலகத்தில் மொத்த மக்கள் தொகையானது 7 பில்லியனைத் தொட்டது.
  • உலகின் 700வது கோடி குழந்தை பிறப்பு
யுனெஸ்கோ பாலஸ்தீனத்தை தனி உறுப்பு நாடாக அங்கீகரித்தது. இதற்காக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக 107 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன.
  • யுனெஸ்கோவில் முழு நேர உறுப்பினராக பாலஸ்தீனம் தேர்வு: அமெரிக்கா கடும் கண்டனம்
டிசம்பர் 15
ஈரான் போர் முடிவடைந்தது என அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டது.
  • ஈராக்கில் போர் முடிவடைந்து விட்டது: ஒபாமா
டிசம்பர் 16
பிலிப்பைன்சில் வாஷி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 1500 பேர் உயிரிழந்தனர்.
  • பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல், மழைக்கு 130 பேர் பலி
டிசம்பர் 19
வடகொரியா தலைவர் கிம் ஜாங் மரணம் அடைந்ததாக அரசு தொலைக்காட்சி தகவல் வெளியிட்டது.
  • வட கொரிய தலைவர் மரணம்
  • வட கொரிய தலைவர் மறைவு: ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி
  • வட கொரிய ஜனாதிபதியின் இறுதிச் சடங்கு

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

NEWS OF THE DAY.

ஜே.வி.பி மேலும் பிளவடையக் கூடிய அபாயத்தில்!- விமல் வீரவன்ச.

ஜே.வி.பி கட்சி மேலும் பிளவடையக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும் கட்சியிலிருந்து வெளிநாடுகளுக்கு தகவல்களை வழங்கும் உளவாளி ஒருவர் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச தரப்பைச் சேர்ந்த ஒருவரே வெளிநாடுகளுக்கு தகவல்களை வழங்கி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எனவே விரைவில் கட்சிக்குள் மற்றுமொரு பிளவு ஏற்படுவதனை தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பிளவடைந்து சென்றுள்ள சிலரை வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் வழிநடத்தி வருகின்றதாகவும் கட்சியை விட்டு தாம் விலகிச் செல்வதற்கும் வெளிநாட்டு உளவுப் பிரிவுகளின் செயற்பாடுகள் காரணமாக அமைந்தது என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
எனவே பதவி ஆசைகளை துறந்து கட்சியை பாதுகாத்துக்கொள்ள சோமவன்ச, ரில்வின் போன்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளையும் எதிர்கொள்ள தயார்- ஐ.தே.கட்சியின் பா.உ தயாசிறி.
தனக்கு எதிராக மேற்கெொள்ளப்படும் எந்தவெொரு ஒழுக்காற்று விசாரணைகளையும் எதிர்கெொள்ளத் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சிக்காக உண்மையாக உழைக்கும் தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக தான் கவலையடைவதாகவும் எந்தவொரு தலைவருக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவிக்க தான் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி முதியவர்களைக் கொண்ட கட்சியாக மாறி விட்டதெனவும் அரசுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே இதனை இளைஞர்கள் உள்ள கட்சியாக மாற்ற முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்காக சிறிகொத்தவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மோசடியானது என தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியிருந்தார். இக்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம், சிரேஷ்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயர்தர பெறுபேற்றில் குழறுபடி! பரீட்சைகள் ஆணையாளர் மீது ஜனாதிபதியின் குழு விசாரணை.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் முறைகேடான முடிவுகள் தொடர்பில், நாளை பரீட்சைகள் ஆணையாளரிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைத்துள்ள ஐவரடங்கிய குழு விளக்கம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு கடந்த வெள்ளிக்கிழமை கூடி விசாரணைகள் தொடர்பில் ஆராயந்துள்ளதுடன், அதன் அடிப்படையில் நாளை பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்கவிடம் விளக்கத்தை பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் கணணி தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே பிழையாக பதிவு செய்யப்பட்டதாக, முன்னர் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர், தகுதி வாய்ந்த பணியாளர்கள் இல்லைமை காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டது என்றும் அவர்  குறிப்பிட்டிருந்தார்.
இதனடிப்படையிலேயே பரீட்சைகள் ஆணையாளரிடம் அது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட குழு தமது விசாரணை அறிக்கையை இரண்டு வாரத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மலேசியாவிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற 12 இலங்கையர் கைது.
மலேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முற்பட்ட 12 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, மலேசிய எல்லை பாதுகாப்பு பிரதி தளபதி என். கலைசெல்வன் தெரிவித்துள்ளார்.
பந்தார் பெனாவர் மாகாணத்தில் உள்ள பன்டாய் சுங்காய் டெனாங் பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைதானவர்கள் 17 தொடக்கம் 40 வயதுடையவர்கள் என, மலேசிய எல்லை பாதுகாப்பு பிரதி தளபதி என். கலைசெல்வன் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பந்தார் பெனாவர் காவற்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறு சட்ட விரோதமான முறையில் மலேசியா ஊடாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 985 பேர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் சேவை ஜனவரி 3ஆம் திகதி ஆரம்பம்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் சேவை ஜனவரி 3 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, இ.போ. சபையின் தலைவர் எம்.டி. பந்துசேன தெரிவித்துள்ளார்.
இச்சேவைக்காக இரண்டு சொகுசு வசதிகளைக் கொண்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சேவையானது, காலி தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமாகி மஹரகம பஸ் தரிப்பிடத்தை வந்தடையும் எனவும் இதற்கான ஒரு வழிப் பயணக் கட்டணமாக ரூபா 400 அறவிடப்படும் எனவும் எம்.டி. பந்துசேன தெரிவித்துள்ளார்.
காலி நகரிலிருந்து காலை 6.00, 8.00, 10.00 மற்றும் நண்பகல் 12 மணிக்கும் மாலை 2.30 மணிக்கும் சேவைகள் ஆரம்பமாகும்.
மஹரகமவிலிருந்து காலை 6.00, 8.00 10.00 நண்பகல் 12.30 மற்றும் 2.30 மாலை 4.30 மணிக்கு பஸ் புறப்படும். காலியிலிருந்து மஹரகமவை வந்தடையும் பயணிகள் அங்கிருந்து புறக்கோட்டைக்கு வருவதற்கு விசேட இ.போ.ச. பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இச்சேவையை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம எதிர்வரும் 3 ஆம் திகதி மஹரகம பஸ் தரிப்பிடத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளாரென்றும் இ.போ. சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இலங்கை 5ஆம் இடத்தில்.
பிரித்தானியாவில் பிரபல சுற்றுலா சஞ்சிகையான 'கொன்டே நாஸ்ட் ட்ரவலரின்' 2012 ஆம் ஆண்டில் பார்க்கப்பட வேண்டிய உலகின் முதல் 5 சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் சுற்றுலா பயணிகளுக்களின் ஈர்ப்புமிக்க புதிய சுற்றுலாத் தளமாக இலங்கை விளங்கும் என அச்சஞ்சிகை எதிர்வு கூறியுள்ளது.
இப்பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தில் உள்ளது. பிரிட்டன், அவுஸ்திரேலியா, அபுதாபி ஆகியவற்றைவிட இலங்கை முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் முஷாரப்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் இந்த மாதம் நாடு திரும்ப போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியை பிடித்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப் நாடு கடத்தப்பட்டார்.
துபாய் மற்றும் இங்கிலாந்தில் தங்கி பல கூட்டங்களில் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார். தற்போது லண்டனில் தங்கியுள்ள அவர் அங்கிருந்தபடியே “அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்” என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் இந்த மாதம் இறுதியில் தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்புகிறார் மற்றும் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
முஷாரப் ஜனாதிபதியாக இருந்த போது லண்டனில் தங்கியிருந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நாடு திரும்பினார். கராச்சியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் பங்கேற்ற போது துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் கொல்லப்பட்டார். முஷாரப் போதிய பாதுகாப்பு கொடுக்காததால் தான் அவர் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் பெனாசிர் கொலை வழக்கில் இவரும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு அவர் இதுவரை நேரில் ஆஜராகாத காரணத்தினால், கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் பாகிஸ்தான் திரும்பும் பட்சத்தில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலில் தீ விபத்து.
ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த அணு விசை நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.
எகாடெரின்பர்க் என்ற டெல்டா-4 வகையைச் சேர்ந்த அணுவிசை நீர்மூழ்கிக் கப்பல் ரஷ்ய இராணுவத்துக்குச் சொந்தமானது.
இது நோர்வே அருகில் அமைந்துள்ள ரஷ்யக் கடற்படைத் தளமான ரோஸ்லியாகோவோவில் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இக்கப்பல் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக் கூடியது.
சம்பவ தினத்தன்று இதன் இரு அணு உலைகளின் செயல்பாடும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் இதிலுள்ள அணு ஆயுதங்கள் உள்ளிட்ட ஏனைய ஆயுதங்களும் முன்னதாகவே அப்புறப்படுத்தப்பட்டு இருந்தன.
இந்நிலையில் கப்பலின் மேற்புறத்தில் உள்ள மரக் கட்டுமானத்தில் தீ பிடித்தது. இது கப்பலின் உள்புறத்திலும் பரவியது.
11 தீயணைப்புப் படைப்பிரிவுகளும், கப்பற்படையைச் சேர்ந்த தீயணைப்புப் படகு ஒன்றும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீயின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டர் ஒன்றும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. நீண்ட நேர முயற்சிக்குப் பின் தீ அணைக்கப்பட்டது.
மீண்டும் தீப்பிடிக்கா வண்ணம் கப்பல் கடலின் உள்ளே இழுத்துச் சென்று நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று தெரிவித்த அவர்கள், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் கப்பலிலுள்ள அணு உலைகளின் செயல்பாடு முன்னதாகவே நிறுத்தப்பட்டு இருந்ததால், கதிர்வீச்சு அபாயம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவை மிரட்டும் ஈரானின் ஏவுகணை சோதனை.
ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெர்சியன் வளைகுடாவில் உள்ள ஸ்ரெயிட் ஆப் ஹார்மோஷ் துறைமுகம் வழியாக அமெரிக்கா எண்ணெய் கப்பல்களை செல்ல விட மாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
தற்போது அமெரிக்காவை மிரட்டுவதற்காக ஸ்ரெயிட் ஆப் ஹார்மோஷ் துறைமுக பகுதியில் ஏவுகணை சோதனையை ஈரான் நடத்தியது.
குறைந்த தூரம் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், நிலத்தில் இருந்து கடலுக்குள் பாய்து சென்று தாக்கும் ஏவுகணைகள், விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணைகள் என அனைத்து ரக ஏவுகணைகளையும் சோதனை செய்தது.
இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக ஈரான் கப்பற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் முகமது மவுசவி தெரிவித்துள்ளார். ஆனால் இதை அமெரிக்கா பொறுமையுடன் நிதானமாக கவனித்து வருகிறது.
அதே நேரத்தில் ஈரானின் இந்த மிரட்டலை சகித்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்த பதட்டமான சூழ்நிலையில் ஈரானின் எதிர் நாடான சவுதி அரேபியா அமெரிக்காவிடம் இருந்து 84 புதிய போர் விமானங்களை வாங்குகிறது. அதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
பாகிஸ்தானில் கார்குண்டு தாக்குதல்: 9 பேர் பலி.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலூசிஸ்தான் மாகாண முன்னாள் முதல் மந்திரி மிர்முகமது நசீர் மெஸ்காலின் மகன் ஷபீப் மெஸ்கால் வீட்டின் அருகே சக்தி வாய்ந்த கார்குண்டு வெடித்தது.
இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையாக அதிர்ந்ததில் 9 பேர் பலியானார்கள், 20 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. குண்டு வெடிப்பு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அதில் தீவிரவாதிகள் காரில் குண்டு வைத்து வெடிக்க செய்தது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் முன்னாள் முதல் மந்திரி மிர் முகமது நசீர் மெஸ்காலின் மகன் ஷபீப் மெஸ்காலை குறி வைத்து நடந்தது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பேஸ்புக் நட்பு வட்டாரத்திலிருந்து தோழி பிரிந்ததால் வாலிபர் தற்கொலை.
பேஸ்புக் நட்பு வட்டத்தில் இருந்து தோழி பிரிந்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இங்கிலாந்தின் குளோஸ்டெர்ஷைர் பகுதியில் உள்ளது ஹைட். இங்கு வசித்தவர் சைமன் பாக்ஸ்லே(21).
சமூக இணையதளமான பேஸ்புக்கில் இவர் பலருடன் நட்பு வைத்திருந்தார். அவர்களில் இளம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் மீது சைமனுக்கு காதல் ஏற்பட்டது.
தனது எண்ணத்தை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்தினார். அவ்வளவு தான், தனது பேஸ்புக்கில் இருந்து நண்பர் என்ற தொடர்பை அந்த பெண் துண்டித்துக் கொண்டார்.
விரக்தி அடைந்த சைமன், மற்ற நண்பர்கள் மூலம் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அந்த நண்பர்களும் சைமனை தரக்குறைவாக பேசினர்.
அதில் மனம் உடைந்த சைமன் வீட்டு தோட்டத்தில் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அந்த பெண்ணுக்கு எழுதிய கடிதத்தில், எனக்காக நீ செய்த எல்லாவற்றுக்கும் மிகவும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரெஞ்சு நபர்களுக்கு மட்டுமே இனி பிரான்சில் இடம் உண்டு.
பிரான்ஸ் நாட்டில் இனி குடியுரிமை கேட்டுவரும் வெளிநாட்டவர்கள் பிரெஞ்சு மொழியையும், கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொண்டிருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும் என்று உள்துறை அமைச்சர் கிளாடி குயெண்ட் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை கேட்டுவரும் நபர்கள் தனது உரிமை மற்றும் பொறுப்புணர்வுக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
குடியுரிமை விண்ணப்பதாரர்கள் பிரான்சில் இருந்து கொண்டே இன்னொரு நாட்டில் குடியுரிமையைப் பெறக்கூடாது. ஆனால் இரட்டைக்குடியுரிமைக்கு அனுமதி உண்டு.
பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியின் ஆளுங்கட்சி உறுப்பினரான குயெண்ட் கூறுகையில், பிரெஞ்சு மொழியின் சமூக மதிப்புகள் மற்றும் குறியீடுகளை ஏற்றுக்கொள்கின்ற இந்த நடைமுறை ஒரு நிகழ்வாகும் என்றார். இத்தகைய நடைமுறையைப் புகுத்தவேண்டிய அவசியம் இப்போது பிரான்சுக்கு எழுந்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1,00,000 முஸ்லீம்கள் பிரான்சு குடியுரிமை பெறுகின்றனர். இவர்கள் பிரெஞ்சுக்காரராக மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று மனைவியுடன் வாழ்பவருக்கு பிரெஞ்சு குடியுரிமை அளிக்கக்கூடாது என்றார்.
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: கனடாவுக்கு 23வது இடம்.
மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் கனடா 23வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆய்வு 58 நாடுகளில் உள்ள 53,000 நபர்களிடம் நடத்தப்பட்டது.
ஃபிஜி தீவுகள் முதலிடத்தைப் பெற்றன. அமெரிக்க மக்களைவிட அதிக மகிழ்ச்சியுடன் வாழ்பவர்கள் ஆப்கானிஸ்தானியர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கனடா மக்களில் 1003 பேரிடம் மகிழ்ச்சி பற்றிக் கேட்கப்பட்டதில் 60 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தனர். 13 சதவீதம் பேர் வருத்தமாக இருக்கின்றனர். 26 சதவீத பேருக்கு எப்படி இருக்கிறோம் என்று சொல்லத் தெரியவில்லை.
இதுகுறித்து ஷீல்சு கருத்து தெரிவிக்கையில், கனடாவில் எதிர்பார்ப்புகள் ஏராளம். குறைந்த உழைப்பில் நிறைந்த லாபம் கிடைப்பதையே மகிழ்ச்சி என்று நாம் கொள்கிறோம். மற்ற நாட்டினரைவிட அதிகமாக நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.
ஐக்கிய அரபு நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுத விநியோகம்.
ஐக்கிய அரபு நாடுகளுடன் 34 லட்சம் டொலர் மதிப்பிலான ஆயுத விநியோக ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
ஈரான், அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் அதிகரித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா இடையிலான இந்த ஆயுத விநியோக ஒப்பந்தம் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி மொத்தம் 34 லட்சம்  டொலர் மதிப்பிலான பல்வேறு ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா ஐக்கிய அரபு நாடுகளுக்கு விற்கிறது.
சமீபத்தில் தான் அமெரிக்கா, சவுதி அரேபியாவுடன் 3 கோடி டொலர் மதிப்பிலான ஆயுத விநியோக ஒப்பந்தத்தை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகி போட்டியிட முடிவு..
மியான்மர் நாட்டில் நாடாளுமன்றத்திற்கான இடைதேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 1ந் திகதி நடைபெற உள்ளது.
நாட்டில் உள்ள 48 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் 40 தொகுதிகள் நாடாளுமன்ற கீழ் சபையாகும்.
இந்த இடைத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சி தலைவரும், தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவருமான ஆங் சான் சூகி தலைநகர் அருகிலுள்ள காவாமூ தொகுதியில் கீழ் சபைக்கு போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானில் நிலநடுக்கம்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டு நேரப்படி மதியம் 2.28 ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.
கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை.
கனடாவில் கடை முதலாளி குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் கொண்டாட சென்றதால் வியாபாரத்தை கவனித்த இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநில பஞ்சகுலா பகுதியை சேர்ந்தவர் ஹரிவன்ஷ் குப்தா. அவரது மகன் அலோக் குப்தா(27).
சண்டிகரில் பள்ளி படிப்பை முடித்து, டிஏவி கல்லூரியில் பட்டம் பெற்று, நொய்டா ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றினார். பிறகு எம்பிஏ படிக்க 6 மாதங்கள் முன் கனடா சென்றார்.
அங்குள்ள கல்லூரியில் படித்த அலோக் குப்தா, பகுதி நேரமாக வான்கோவரின் சர்ரே பகுதியின் பலசரக்கு கடையில் பணியாற்றினார். கிறிஸ்துமஸ் நாளில் விடுமுறை என்ற போதிலும், முதலாளி குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் கொண்டாட சென்றதால், கடையை பார்த்துக் கொண்டார்.
அப்போது யாரோ குப்தாவை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இதில் குப்தா படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் அவர் சாலையில் ஓடினார். உதவி கேட்டார். பக்கத்து வீட்டினர் வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எனினும் வழியில் அவர் பலியானதாக டாக்டர்கள் அறிவித்தனர். கிறிஸ்துமஸ் தினத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூடு பற்றி வான்கோவர் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. துப்பாக்கி சூட்டை பார்த்த நேரடி சாட்சிகள் யாரும் இல்லாததால் கொலையாளி ஒருவரா அல்லது கும்பலா, கொள்ளை அடிக்க நடத்தப்பட்டதா என துப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
கல்லூரியிலும் வசிப்பிடத்திலும் நற்பெயர் கொண்ட அலோக் குப்தா சுட்டுக் கொல்லப்பட்டது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தொந்தரவு செய்த பெண் கைது.
இங்கிலாந்தில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 800க்கும் அதிகமான முறை போன் செய்து டார்ச்சர் செய்த டீன் ஏஜ் இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
லண்டனை சேர்ந்தவர் கெர்ரி ஆன் மோதே(18). இவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஏதாவது பரபரப்பாக பேசி வந்துள்ளார்.
கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்றும், அதற்கடுத்த நாட்களிலும் கட்டுப்பாட்டு அறை எண் 999க்கு 756 முறை போன் செய்து ஏதேதோ தகவல் தெரிவித்துள்ளார். அதற்கு முன் கடந்த டிசம்பர் 11ம் திகதியில் இருந்து 13ம் திகதிக்குள் 44 முறை போன் செய்து பேசியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த லண்டன் காவல்துறையினர் கெர்ரியை கைது செய்து ஹன்டிங்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அடிக்கடி போன் செய்து தொந்தரவு கொடுத்ததை நீதிபதியிடம் கெர்ரி ஒப்புக் கொண்டார். இந்த வழக்கு விசாரணை முடிந்து விரைவில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று காவல்துறையினர் கூறினர்.
1000 பேருக்கு எயிட்ஸ் நோயை பரப்பிய மர்ம ஆசாமி கைது.
அமெரிக்காவை சேர்ந்த 51 வயது ஆசாமி ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எயிட்ஸ் நோயை பரப்பியது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் டீன்ஸ்மித்(51). சந்தேகப்படும்படி இவருடைய நடவடிக்கைகள் இருந்ததால், மிச்சிகன் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது இதுவரை ஆண்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு எயிட்ஸ் நோய் பரப்பி இருக்கிறேன் என்று டேவிட் கூறியதை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மிச்சிகன் காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட டேவிட் பல ஆண்டுகளாக ஆண்கள், பெண்கள் என 3,000க்கும் அதிகமானவர்களுக்கு எயிட்ஸ் நோயை பரப்பியுள்ளார்.ஆனால் எப்போது எச்ஐவி பரிசோதனை செய்தார், எப்போது நோயை உறுதி செய்தார் என்ற விவரங்கள் இல்லை. எயிட்ஸ் பாதிப்பு இருப்பது தெரிந்து அதை மற்றவர்களுக்கு பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்துடனே செயல்பட்டுள்ளார்.
இதனால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. எனினும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
முன்கூட்டியே தேர்தல் நடைபெறாது: கிலானி.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்றும், தனது ஆட்சிக் காலத்தை ஆளுங்கட்சி பூர்த்தி செய்யும் என்றும் அந்நாட்டு பிரதமர் கிலானி தெரிவித்துள்ளார்.
தனது சொந்த ஊரான முல்தானில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.திட்டமிட்டபடி 2013-ம் ஆண்டே பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்புச் சட்டப்படியே தனது அரசு இயங்குவதால், அடுத்த பொதுத்தேர்தல் சட்டப்படியே நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது: நாங்கள் ஆட்சியில் நீடிப்பது சிலருக்குப் பிடிக்கவில்லை. அப்படிப்பட்டவர்களே தேர்தல் குறித்துப் பேசி வருகின்றனர். ஆனால் நாங்கள் சட்டப்படியும், அரசியலமைப்புப்படியும் இயங்கி வருவது அவர்களுக்குத் தெரியவில்லை.
கருத்தொற்றுமையின் அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஜனாதிபதி ஆஸிப் அலி ஸர்தாரியுடனும், ராணுவத் தலைமைத் தளபதி பர்வேஸ் கயானியுடனும் சுமூகமான உறவு நிலவுகிறது.கயானியை 3 வருட பதவி நீடிப்பில் இருக்கும்படி கடந்த ஆண்டு நான் கெஞ்சியதாக வந்த தகவலில் உண்மையில்லை. உருது மொழியி நான் தெரிவித்த கருத்துகளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசு ஸ்திரமாக உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் பூர்த்தி செய்யப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மேலவைத் தேர்தலை சீர்குலைக்கவே, பொதுத்தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வேண்டும் என்ற கூக்குரல் எழுப்பப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் நேட்டோ குறித்து மறுசீரமைக்கப்பட்ட கொள்கைகளை நாடாளுமன்றம் அங்கீகரிக்கும். அமெரிக்காவுடனான உறவுகள் குறித்த பரிந்துரைகளை தேசியப் பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழு தயார் செய்கிறது.அது குறித்து நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுவில் விவாதிக்கப்படும். ஸ்திரமான, வலிமையான ஆப்கானிஸ்தான் அமைவதையே பாகிஸ்தான் விரும்புகிறது. அந்நாட்டுடன் நட்புறவையே நாங்கள் விரும்புகிறோம்.
பஞ்சாபில், செராய்கி மாகாணத்தை உருவாக்குவதில் கூட்டணிக் கட்சிகளுடன் கருத்தொற்றுமை எட்டுவதில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியினால் எவ்வித ஆபத்துமில்லை. இது போன்று ஒரே இரவில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் ஒரே இரவிலேயே காணாமல் போய்விடும் என்றார் கிலானி.
பிரான்சின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆப்கானிஸ்தானுக்கு திடீர் வருகை.
ஆப்கானிஸ்தானுக்கு பிரான்சின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெரார்டு இரு நாள் பயணமாக திடீரென வருகை புரிந்தார்.இந்த பயணத்தில் ஆப்கானின் ஜனாதிபதி ஹமீது கர்சாய் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம் வர்தாக்கையும் ஜெரார்டு சந்திப்பார்.நேட்டோ தலைமையில் இயங்கும் சர்வதேச பாதுகாப்பு உதவிப்படையின்(ISAF) தளபதி ஜான் ஆலனையும் லோங்குவே சந்திப்பார். பின்பு பிரெஞ்சுப் படைகளைப் பார்வையிடுவார்.
கடந்த 2001ம் ஆண்டு முதல் பிரெஞ்சு படையினர் ஆப்கானிஸ்தானில் தங்கி போர்ப்பயிற்சி அளித்து வருகின்றனர். இவர்களில் இதுவரை 78 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டில் 400 வீரர்கள் பிரான்ஸ் திரும்பி விட்ட நிலையில் இன்னும் 3600 பேர் பயிற்சியளித்து வருகின்றனர்.பத்தாண்டுப் போரில் கடந்த 2011ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எதிர்வரும் 2014ஆம் ஆண்டிற்குள் நேட்டோ படையைச் சேர்ந்த இந்த வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தம் தாய்நாட்டிற்குத் திரும்பி விடுவர்.
யூரோ மண்டலத்திற்கு எந்தவித ஆபத்தும் இல்லை: ஜேர்மனியின் நிதியமைச்சர்.
யூரோ மண்டலம் சிதறிப் போகும் அளவுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்று ஜேர்மனியின் நிதியமைச்சர் கூறியுள்ளார்.ஐரோப்பியத் தலைவர்கள் யூரோ மண்டலத்தை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். மேலும் அடுத்த 12 மாதங்களில் இந்த யூரோ மண்டல கடன் தொல்லை தீர்ந்து நிதிநிலைமை சீராகிவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஐரோப்பாவின் நாடுகளான கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்றவை கடனில் மூழ்கித் தத்தளிக்கும் சூழ்நிலையில் ஜேர்மனியின் பொருளாதாரம் சிறப்பாகவே இருந்து வருகிறது.யூரோ பத்திரங்கள் ஐரோப்பிய ஒப்பந்தங்களுக்கு எதிரானவை என்பதால் இவற்றை நம்புவது ஆபத்தானது என்று ஷாபிள் எச்சரித்தார்.அடுத்த ஆண்டுக்குள் ஐரோப்பிய அரசுகளுக்கு நிதிச்சீரமைப்பு செய்யப்பட வேண்டியது அவசியமானது என்பதால் இந்தக் கடினமான முயற்சியில் அனைவரும் கண்டிப்பாக ஈடுபடவேண்டும்.
தேவைப்பட்டால் அரசுப் பத்திரங்களுக்கு வட்டிவிகிதத்தை அதிகரிக்கலாம். இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படாது, மாறாக மக்களுக்கு தங்களின் நிதிநிலையை உணர்த்த உதவும்.பொதுநிதியைப் பெருக்கும் முயற்சியில் அடித்தள மக்களின் பங்களிப்பும், பங்கேற்பும் அவசியம் என்பதை ஷாபிள் சுட்டிக் காட்டினார்.
அணு சக்தி திட்டங்கள் குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை.
அணுசக்தி திட்டங்கள் குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.அணுசக்தி திட்டங்கள் என்ற பெயரில் பயங்கர அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்து வந்தது.மேலும் சர்வதேச அணுசக்தி கழகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் ஈரானில் ஆய்வு நடத்த அனுமதிக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அதிகரித்தது.
இதையடுத்து ஈரான் மீது தேவைப்பட்டால் போர் நடவடிக்கையும் எடுப்போம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. எனினும் அணுசக்தி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று ஈரான் கூறியது.இந்நிலையில் ஈரான் மீது ஐ.நா அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. பரபரப்பான சூழ்நிலையில் அணுசக்தி திட்டங்கள் குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சு நடத்த தயார்.
ஆனால் அந்த பேச்சு இருதரப்பு ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் என்று ஈரான் சமரச பேச்சு பிரதிநிதி சயீத் ஜலில் கூறினார்.டெஹ்ரானில் பலநாட்டு தூதர்களின் சந்திப்புக்கு பிறகு இதை அவர் அறிவித்தார். இதுகுறித்து ஜேர்மனிக்கான ஈரான் தூதர் அலிரெசா ஷேக் அட்டார் கூறுகையில், பேச்சு நடத்த தயார் என்பது குறித்து விரைவில் கடிதம் அனுப்புவோம் என்றார்.
நைஜீரியாவில் தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம்.
நைஜீரியா நாட்டின் எபோனி மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தும்ஸ் தினத்தன்று 2 பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது.
தலைநகர் அபுஜா அருகேயுள்ள மாடல்லா என்ற இடத்தில் கிறிஸ்துமஸ் அன்று “போகோ காரம்” என்ற அமைப்பினரால் கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.இச்சம்பவத்தில் 44 பேர் உயிர் இழந்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமும், வன்முறையும் நிலவுகிறது. மேலும் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி வருகின்றனர்.
எனவே பிரச்சினைகளை சமாளிக்க போர்னோ மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை ஜனாதிபதி குட்லக் ஜோனாதன் பிறப்பித்துள்ளார்.இதுகுறித்து ஜனாதிபதி கூறுகையில், நைஜீரியாவில் போகோ காரம் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவதால் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அதை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.எனவே போர்னோ மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்வது அத்தியாவசியமாகி விட்டது என்று தெரிவித்துள்ளார்.
சீனாவில் எலியின் மூலமாக பரவும் காய்ச்சலுக்கு 24 பேர் பலி.
சீனாவில் எலியின் மூலமாக பரவும் காய்ச்சலுக்கு இந்த ஆண்டில் 24 பேர் பலியாகி உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒருவித காய்ச்சல் பரவியது.
இது எலியால் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காய்ச்சலால் இதுவரை 938 பேர் பாதிக்கப்பட்டதில் 24 பேர் பலியாகி உள்ளனர். இது 2010ம் ஆண்டைவிட 1.88 சதவீதம் குறைவு.இதில் துறைமுக நகரான க்விங்டாவில் மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டில் எலி காய்ச்சலுக்கு 13 பேர் மட்டுமே பலியானது குறிப்பிடத்தக்கது.இந்த காய்ச்சலுக்கு பெரும்பாலும் கிராம மக்களே பாதிக்கப்படுவதாகவும், அவர்கள் வசிக்கும் பகுதியில் எலி நடமாட்டம் இருப்பதே இதற்குக் காரணம் என்றும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மூன்றில் ஒரு விவாகரத்துக்கு பேஸ்புக் தான் காரணம்.
உலகம் முழுவதும் நடக்கும் மூன்றில் ஒரு விவகாரத்துக்கு சமூக இணையதளமான பேஸ்புக் தான் காரணம் என்று இங்கிலாந்து சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விவாகரத்து சட்ட ஆலோசனை அளிக்கும் டைவர்ஸ் ஆன்லைன் நிறுவன நிர்வாக இயக்குனர் மார்க் கென்னன் கூறியுள்ளார்.இதுபற்றி டெய்லி மெயில் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த ஓராண்டில் பெறப்பட்ட விவாகரத்துகளில் 33 சதவீத வழக்குகளின் நீதிமன்ற வாதங்களில் பேஸ்புக் இடம்பெற்றது.
எங்களிடம் வந்த விவாகரத்து தொடர்பான 5,000 முறைப்பாட்டில் மூன்றில் ஒன்றில் பேஸ்புக் பற்றி மனுதாரர்கள் குறிப்பிட்டனர். பேஸ்புக் பக்கங்களில் தங்கள் நண்பர்களுடன் பலர் மனம் திறந்து தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர்.அவற்றில் தங்கள் முன்னாள் காதல், கள்ளக் காதல், அலுவலக நட்பு ஆகியவை பற்றி தெரிவிக்கின்றனர். இவை வாழ்க்கை துணைக்கு தெரிய வரும் போது குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது. விவாகரத்தில் முடிகிறது.
மேலும் பேஸ்புக் தொடர்பு மூலம் கள்ளத் தொடர்பு ஏற்படுத்தவும், காதலை வெளிப்படுத்தவும் எளிதாக முடிகிறது. அதை வாழ்க்கை துணையிடம் இருந்து மறைக்க முயன்றாலும் நண்பர்கள் அல்லது பேஸ்புக் பக்கத்தில் தேடுவதன் மூலம் கணவர் அல்லது மனைவியால் கண்டுபிடித்து விட முடிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரனின் ஈர்ப்பு விசை குறித்த ஆய்வு: நாசாவால் செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டது.
சந்திரனின் ஈர்ப்பு சக்தியை கண்டறிய அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கிரைல்- ஏ, கிரைல்- பி என்ற இரண்டு செயற்கைகோள்களை கடந்த வாரம் விண்ணுக்கு அனுப்பியது.
இந்த இரண்டு செயற்கைகோள்களும் ஒரு வாரத்தில் சந்திரனின் நீள்வட்ட சுற்றுப்பாதையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.அதன் படி கிரைல்- ஏ செயற்கைகோள் நேற்றும், கிரைல் -பி செயற்கைகோள் இன்றும் குறிப்பிட்ட இலக்கை சென்றடைந்தன.
அவை சந்திரனின் ஈர்ப்பு சக்தி குறித்த புதிய தகவல்கள் மற்றும் ஒளிப்படங்களை எடுத்து விஞ்ஞானிகளுக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த செயற்கைகோள்கள் பல புதுவித கண்டுபிடிப்புகளை கண்டறிய உதவியாக இருக்கும் என நாசாவின் முன்னணி விஞ்ஞானி முனைவர் மரியா ஷுபேர் தெரிவித்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

2012 ஐ வரவேற்கும் உலகம்!

2011 ஐ வழி அனுப்பு 2012ம் ஆண்டுக்குள் நாம் காலடி எடுத்து வைக்கின்றோம். இந்நிலையில் பல நாடுகளில் Fireworks விடப்பட்டிருந்தன.
இதனில் சில வீடியோ காட்சிகள் உங்கள் பார்வைக்கு.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF