Sunday, March 6, 2011

பனாமா கால்வாய் தோற்றத்தின் வரலாறு.



ஐநூறு ஆண்டுகளுக்கு 
முன்பே, பொற்களஞ்சியம் தேடிப் புதிய கடல் மார்க்கத்தில் புகுந்து, 
அமெரிக்காவை நெருங்கிய கிரிஸ்டொபர் கொலம்பஸ் (1451-1506) 
முதன் முதலில் தரைவழியாக அதைக் கடக்க முயன்று தோல்வியுற்றார்! சுமார் 400 ஆண்டுகளாக பனாமா நாட்டின் குறுகிய தளப்பரப்பின் வழியே கால்வாய் ஒன்றை அமைத்திட ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் அடுத்தடுத்துத் தலையிட்டு முயற்சிகள் செய்தன! ஸ்பெயின் ராணுவக் கடல்தீரர் வாஸ்கோ நுனீஸ் தி பல்போவா 
[Vasco Nunez de Balboa (1475-1519)] 1513 இல் முதன்முதல் பனாமா நகரை 
அடைந்து, குன்று ஒன்றில் ஏறி நின்று பரந்து விரிந்த பசிபிக் கடலைப் 
பிரமிப்போடு கண்டு, உலகுக்கு அறிவித்த ஐரோப்பியர்! 1534 இல் ஸ்பெயின் 
மன்னர் முதலாம் சார்ல்ஸ், கால்வாய் அமைத்திட முதன்முதல் பனாமாவின் 
சுருங்கிய பீடத்தில் தளஆய்வு [Land Survey] செய்ய உத்தரவிட்டார். ஆனால் 
அவரது ஆணைக்குக் கீழ் பணியாற்றிய ஸ்பானிஸ் ஆளுநர் [Spanish Governor] ஓர் அதிருப்தியான தகவலை அனுப்பியதால், கால்வாய்த் திட்டம் கைவிடப்பட்டது. ஆயினும் பல்லாண்டுகளாக ஸ்பானிஸ் கடல்வணிகர் பனாமா நாட்டின் இரண்டு கடற்கரைகளையும் நீர்வழியாக இணைக்க முயன்று தோல்வி யுற்றனர்! 
பிரென்ச் பேரரசர் மூன்றாம் நெப்போலியன் (1808-1873) பிரான்சுக்கு
உரிமையான பனாமா தளப் பகுதியில் கால்வாய் ஆக்கிட 1860 இல் முயன்றார். கடல்மட்டக் கால்வாய் ஒன்றைப் பனாமா கட்டி முடிக்க, 1882 இல் பிரென்ச் கம்பெனி ஒன்று தயாரானது. 1855 இல் அமைத்த பனாமா ரயில் பாதையை ஒட்டியே, கால்வாயும் வெட்டத் திட்டமிடப் பட்டது. 1869 இல் வெற்றிகரமாக சூயஸ் கால்வாயைக் கட்டி முடித்து 'சூயஸ் கால்வாய் தீரர் ' [The Hero of Suez] எனப் பெயர் பெற்ற ஃபெர்டினட் தி லெஸ்ஸெப்ஸ் [Ferdinand De Lesseps], சில ஆண்டுகளுக்குப் பிறகு, 74 ஆம் வயதில் பனாமா கால்வாயை அமைக்க நியமனம் ஆனார்! ஃபெர்டினட் 
லெஸ்ஸெப்ஸ் ஏழு வருடங்கள் பணிசெய்த பின், 1889 இல் பிரென்ச் கம்பெனி 
நொடித்துப் போனது! காரணம், பனாமா தளத்தையும், பாறைகளையும் தோண்டிய 20,000 கூலியாட்கள் வேனிற்தள நோய்களால் மலேரியா, மஞ்சள் காய்ச்சல் செத்து மடிந்தனர்! பிரென்ச் கட்டிட, மருத்துவ நிபுணர்களுக்கு ஒருவிதக் கொசுக்கள் மலேரியா, மஞ்சல் காய்ச்சலை உண்டாக்குவது, அப்போது தெரியாமல் போனது பெருமழை பெய்து குட்டை, குளங்களில் நீர் நிரம்பி, வேனிற் தளப் பனாமாவின் ஈரடிப்புப் பூமியில் கொசுக்கள் கோடிக் கணக்கில் பெருகிப் பணியாட்கள் பலரது உயிரைக் குடித்தன.

அமெரிக்க அரசாங்கம் பனாமா அல்லது நிகராகுவா நாட்டின் வழியாகக் கால்வாய் ஒன்றை அமைக்க 1887 இல் முடிவு செய்து, 1889 இல் காங்கிரஸ் 'மாரிடைம் கால்வாய்க் கம்பெனி ' என்னும் ஒரு குழுவைத் தயாரித்தது. அப்போது நியமனமாகிய அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் [26th American President, Theodore Roosevelt (1858-1919)] பனாமா புதுக் குடியரசுடன் தொடர்பு கொண்டு, பிரான்ஸிடமிருந்து கால்வாய்த் திட்டத்தை வாங்க ஏற்பாடுகள் செய்தார். பிரான்ஸ் பனமா கால்வாய்த் திட்ட வேலைகளை 100 மில்லியன் டாலருக்குக் குறைவாக விற்கப் போவதில்லை என்று அறிவித்தது! அதே சமயம் நிகாராகுவாவில் கால்வாய் கட்டி முடிக்க 40 மில்லியன் டாலரே (1900 நாணய மதிப்பு) தேவைப்பட்டது! இறுதியில் 40 மில்லியன் டாலருக்கே பிரான்ஸ் பனாமா கால்வாயின் திட்டப் பணிகளையும் உரிமையையும் [ஆபீஸ், தளவாடங்கள், கருவிகள், உபகரணம், ரயில் வண்டிகள், தளப்படங்கள், தளவியல் ஆய்வுகள், 50 மில்லியன் 
குயூபிக் மீடர் தோண்டல் கால்வாய்] அமெரிக்காவுக்கு விற்றது! பனாமா 
குடியரசுக்குச் சொந்தமான குறுக்குத் தளத்தில் [Isthmus] 43 மைல் நீளமும் 
10 மைல் அகண்ட கால்வாய் அரங்கம் [Canal Zone] அமெரிக்க அரசின் பொறுப்பில் 100 வருடத் தொடர் ஒத்திக்கு [100 Year Perpetual Lease] விடப்பட்டது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, March 5, 2011

உலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் உன்னதமான பனாமா கால்வாய் .


மனிதர் படைத்த கடல்வழிக் கணவாய்! மலைமேல் கட்டிய அணைநீர்க் கால்வாய்! கடல்களை இணைக்கும்! கண்டத்தைப் பிரிக்கும்! கப்பலைத் தொட்டி நீரில் ஏற்றி இறக்கும், ஒப்பிலா விந்தை, பனாமா கால்வாய்!


இருபதாம் நூற்றாண்டின் உன்னதப் பொறியியல் படைப்புகளில் ஒன்றாகப் 
பனாமா கால்வாய் கருதப்படுகிறது. அலாஸ்காவிலிருந்து டெக்ஸஸ் வர பனாமா கால்வாய் வழியாகக் கப்பல் பயணம் செய்தால் 16 நாட்கள் ஆகின்றன. அவ்வித மின்றி கப்பல் தென்னமெரிக்காவின் ஹோர்ன் முனையைச் [Cape Horn] சுற்றி வந்தால் 40 நாட்கள் எடுக்கும்! பனாமா கால்வாய் இல்லாவிட்டால், நியூயார்க்கிலிருந்து கடல் மார்க்கமாகத் தென்னமெரிக்க முனையைச் சுற்றி, ஸான் ஃபிரான்சிஸ்கோவை அடைய 9000 மைல் மிகையாக 18,000 மைல் தூரமும், நீடித்த நாட்களும் எடுக்கும்! உலக வணிகப் பணிகளுக்குக் கடல் மார்க்கக் கதவுகளைத் திறந்து விட்ட பனாமா கால்வாய், கடந்த 90 ஆண்டுகளாக கோடான கோடி டாலர் மதிப்புள்ள வாணிபப் பண்டங்களையும், கார் வாகனங்களையும் இருபுறமும் பரிமாறி வந்துள்ளது! அனுதினமும் கடக்கும் சுமார் 32 கப்பல்கள் சராசரி ஒவ்வொன்றும் 28,000 டாலர் பயணக் கட்டணம் செலுத்துகின்றன.



ஒவ்வொரு ஆண்டும் 140 மில்லியன் டன் வணிகச் சுமைகள் [Commercial 
Cargoes] பனாமா கால்வாய் மூலமாகக் கடந்து செல்கின்றன. அவற்றில் 22% 
பெட்ரோலியம், பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட பண்டங்கள் 16% தானியங்கள் 
குறிப்பிடத் தக்கவை. எல்லாவற்றிலும் மேலாக 2.4 மில்லியன் டன் கார் 
வாகனங்கள், கால்வாய் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு, புதுக்கார் வணிகம் பெருகி வளர்கிறது. அமெரிக்கா கட்டி முடித்து பூர்வ ஒப்பந்தம் எழுதி 96 ஆண்டுகள் உரிமை கொண்டாடி 1999 டிசம்பர் 31 ஆம் தேதி, பனாமா கால்வாய் ஆட்சி உரிமையை, பனாமா குடியரசின் கைவசம் அளித்தது. சூயஸ் கால்வாயும், பனாமா கால்வாயும் சூயஸ் கால்வாய் உலகத்திலே நீளமானது பனாமா கால்வாயைப் போல் இருமடங்கு நீளமானது! 1869 ஆம் ஆண்டு நவம்பர் 17 இல் கட்டி முடித்துத் திறந்து விடப்பட்ட 100 மைல் நீளமான சூயஸ் கால்வாய் [Suez Canal] இயங்கி வரும் போது, புதுக் கண்டங்களான வட அமெரிக்கா, தென்னமெரிக்கா ஆகியவற்றின் நடுவில் குறுகிய தளமான [Isthmus] பனாமா நாட்டின் வழியே, அட்லாண்டிக் பசிபிக் கடல்களை இணைக்க 400 ஆண்டுகளாய்த் திட்டங்கள் உருவாகி இடையிடையே பலமுறைக் கைவிடப் பட்டன! இறுதியில் 1914 ஆம் ஆண்டில் பூர்த்தியான பனாமா கால்வாய் 50 மைல் நீளம் கொண்டது. மத்தியதரைக் கடலை விட 30 அடி உயர்ந்த செங்கடலை இணைக்க, கடல்மட்ட நேரடித் தொடர்புக் கால்வாய் வெற்றிகரமாய் வெட்டப் பட்டது. ஆனால் பனாமா நாட்டின் குறுக்கு வழியில் அட்லாண்டிக் கடலிலிருந்து ஐம்பது மைல் தூரத்தைக் கடந்து பசிபிக் கடலை அடைவது அத்தனை எளிதான பயணம் அன்று! மலை மீது செயற்கையாக உண்டாக்கப் பட்ட 90 அடி உயர ஏரியின் நீர் 
மட்டத்துக்கு முதலில் கப்பல் ஏறிப் பின்னால், 90 அடி உயரத்துக்குக் 
கீழிறங்கிக் கடல் மட்டத்துக்கு வர வேண்டும்.



சூயஸ் கால்வாயைப் பூர்த்தி செய்த பிரென்ச் நிபுணர் ஃபெர்டினென்ட் தி 
லெஸ்ஸெப்ஸ் [Ferdinand De Lesseps] பிரென்ச் அரசின் ஆணையில் பனாமா 
கால்வாயைக் கட்ட முன்வந்தார். அடிப்படை வேலைகளை ஆரம்பித்து ஏழாண்டுகள் உழைத்து, பலவித இன்னல்களால் முடிக்க இயலாமல் பிரென்ச் அரசாங்கம் திட்டத்தைக் கைவிட்டது! பின்னர் அமெரிக்க அரசு கால்வாய்த் திட்டத்தை வாங்கி அமெரிக்க எஞ்சினியர் மேஜர் ஜெனரல் கோதல்ஸ் [Goethals] 1914 இல் பூர்த்தி செய்தார். பனாமா கால்வாயைக் கட்ட பிரென்ச், அமெரிக்க மேற்பார்வைகளில் பணி செய்த 80,000 நபர்களில் 30,000 பேர் நோயிலும், விபத்திலும் மாண்டனர்! பயங்கர பனாமா மலைக் காடுகளில் 44 ஆண்டுகள் (1870-1914) சிக்கலான அந்த இமாலயப் பணியை முடிக்க எஞ்சினியர்கள் எவ்விதம் திறமையாகப் போராடினார்கள் என்பதைப் பற்றி விளக்கிறது.







Panama Canal Miraflores


Panama Canal Cruises
Panama Canal Cruise




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கோப்புகளில் உள்ள கடவுச்சொல்லை நீக்குவதற்கு.


சில சமயங்களில் நாம் இணையத் தளத்தில் நமக்கு மிகவும் தேவையான சில கோப்புகளை பதிவிறக்கம் செய்வோம்.
அந்த கோப்பில் நாம் நமக்கு பிடித்த சில மாற்றங்களை செய்யும் பொழுது, அதை செய்ய முடியாத படி அந்த கோப்பிற்கு கடவுச்சொல்லை கொடுத்திருப்பார்கள்.இப்படி பட்ட சமயத்தில் இந்த மென்பொருள் நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
இந்த மென்பொருளில் அனைத்து வகையான கடவுச்சொற்களையும் இந்த மென்பொருள் மூலம் மிக சுலபமாக நீக்கி விடலாம்.கீழே உள்ள அனைத்து வகையான கோப்புகளிள் உள்ள கடவுச்சொற்களை இந்த மென்பொருள் உதவியுடன் நாம் எளிதாக நீக்க முடியும்.
1. PDF Password Remover.
2. Windows XP Admin Password Remover.
3. Zip File Password Cracker.
4. SQL Password Remover.
5. Microsoft Office Password Remover.
6. Windows Vista Admin Password Recovery.
7. Windows Password Recovery.
8. RAR File Password Cracker.
9. EXE File Password Recovery.
10. Password Changer.
11. Password Memory.
12. Distributed Password Recovery.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஏழு பிரம்மாண்டங்கள் இணைந்த ஒரே தளம்.



தேடு பொறி என்றதும் நாம் உடனடியாக உடனடியாக சொல்வது கூகுள் மட்டும் தான். ஆனாலும் பல தேடு பொறிகள் கூகுளிடம் இல்லாத தகவல்களையும் நமக்கு கொடுக்கிறது.இதற்காக நாம் ஒவ்வொறு தளமாக சென்று தேட வேண்டாம். ஒரே தளத்தில் இருந்து கொண்டு நாம் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போதே பல தளங்களின் முடிவுகளை இந்த தளம் கொடுக்கிறது.
7 பிரம்மாண்ட தளங்களின் துணையுடன் நாம் தேடும் வார்த்தைக்கே உதவி செய்ய ஒரு தளம் இருக்கிறது. கூகுள், யாகூ, ஆஸ்க், விக்கிப்பிடியா, அன்சஸ்வர்ஸ்.கொம், யூடியுப், அமேசான் போன்ற அனைத்திலும் இண்ஸ்டண்ட் ஆக தேடக்கூடிய வார்த்தைக்கு உதவி செய்கிறது.இந்த தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேட வேண்டுமோ அதற்கான வார்த்தையை கொடுத்ததும், தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைகான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும்.
இதிலிருந்து நாம் எந்த தளத்தில் தேட வேண்டுமோ அந்த தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம். தேடுவதற்கு நேரம் இல்லை என்று சொல்லும் அனைவருக்கும் இந்த தளம் தேடும் நேரத்தை மிச்சப்படுத்திக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றைய செய்திகள்.

மின்சார அடுப்பில் எரித்து 3 வயது சிறுவனை கொன்ற தாய்.

அமெரிக்காவில் உள்ள மிஸ்சிசிப்பி மாகாணத்தில் கிரீன்வில்லே பகுதியை சேர்ந்த பெண் தெர்ரி ஏ.ராபின்சன் (24). இவருக்கு திரிஸ்டன் ராபின்சன் என்ற 3 வயது மகன் இருந்தார். சம்பவத்தன்று இவன் தெர்ரி ஏ.ராபின்சனின் வீட்டில் உள்ள ஓவனில் (மின்சார அடுப்பில்) வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான்.

தகவல் அறிந்ததும் கிரீன்வில்லே போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றினர்.இதுகுறித்து தலைமை போலீஸ் அதிகாரி பிரட்டீ கேனன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அப்போது தெர்ரி ராபின்சன் தனது மகனை எரித்து கொன்றது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.எதற்காக அவர் கொலை செய்தார் என தெரியவில்லை ஆகவே சிறுவன் திரிஸ்டன் ராபின்சனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.


இலங்கையில் முதல் தடவையாக விமான சேவை டிப்ளோமா கற்கைநெறி!

விமான சேவை வரலாற்றில் முதல்தடவையாக டிப்ளோமா கற்கைநெறியை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இதன்நிமித்தம் விமான நிலையம் மற்றும் இலங்கை விமான சேவைகள் சங்கம் ஆகியன இணைந்து இரத்மலானையில் உள்ள உள்நாட்டு விமானசேவைகள் பயிற்சி நிலையத்தில் இக்கற்கைநெறியை நடாத்தவுள்ளது. எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 30 பேரைக் கொண்ட குழுவிற்கு செயன்முறைப் பயிற்சியுடன் டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.
கேர்ணல் கடாபியுடன் மஹிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டார்.

லிபிய ஜனாதிபதி கேர்னல் மொஹமூர் அல் கடாபியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் இன்று கலந்துரையாடியுள்ளார். இந்த தகவலை ஜனாதிபதி ஊடக பணிமனை உறுதி செய்துள்ளது.
இதன்போது லிபியா நாட்டில்  சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை லிபிய ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.லிபியாவில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்குமாறும் ஜனாதிபதி, கடாபியிடம் கோரியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே லிபியாவில் பிரச்சினைகள் ஏற்படின் இலங்கையில் அடைக்கலம் வழங்க தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, செய்தியை அனுப்பியிருந்தார்.இந்த செய்தி தொடர்பில் அமெரிக்கா உட்பட்ட மேற்கத்தைய நாடுகள் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தன.
ரவூப் ஹக்கீம், அதாவுல்லா அக்கரைப்பற்றில் மோதல்: இராணுவத்தினர் தடியடிப் பிரயோகம்.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் அதாவுல்லா அணிகளுக்கிடையிலான அரசியல் மோதலொன்று நேற்று அக்கரைப்பற்றில் நடந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சித் தோ்தலில் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரசாரக் கூட்டமொன்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று அக்கரைப்பற்றில் நடைபெற்றது.அதன் போது அமைச்சர் அதாவுல்லாவின் ஆதரவாளர்கள் கூட்டம் இடம்பெற்ற இடத்தை நோக்கி  கற்களை வீசித் தாக்கியதுடன், அருகிலிருந்த பள்ளிவாசல் ஒலிபெருக்கியையும் பயன்படுத்தி கண்டபடி இடையூறு செய்யத் தொடங்கினர்.
பொலிசாரினால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது போகவே இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு, தடியடிப் பிரயோகம் மூலம் எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.அமைச்சர் அதாவுல்லாவின்  ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பெண்கள் சிலருக்கு சாதாரண காயங்கள் ஏற்பட்டிருந்தது. அமைச்சர் மற்றும் வேட்பாளர்களுக்கு காயங்களேதும் ஏற்படவில்லை.

லிபியாவில் தீவிரமடையும் கலவரம்! போராட்டக் காரர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு.

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


வெள்ளிக்கிழமையான நேற்று காலை திரிபோலி மாவட்டத்தில் தஜோரா என்ற இடத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் சுமார் 1500 பொதுமக்கள் தலைநகர் திரிபோலியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். எகிப்து கொடிகளையும், அதிபர் கடாபிக்கு எதிரான பேனர்களையும் ஏந்தியபடி வந்தனர். அதிபர் கடாபி ஆட்சியை விட்டு விலகு என்ற கோஷங்களை எழுப்பினர். 


அவர்களது பேரணி போராட்டம் நடைபெறும் சதுக்கத்தை நெருங்கியது. அப்போது, “கடாபி ஒழிக” தஜோரா உங்களுக்கு சவக்குழி தோண்டும் என்று சுவர்களில் எழுதினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குல் நடத்தினர். 


இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுரமும் சிதைந்து ஓடினர். இருந்தும் மீண்டும் ஒருங்கிணைந்து போராட்ட சதுக்கத்துக்கு பேரணியாக புறப்பட்டு சென்றனர். மேலும் குண்டுகளையும் வீசினர். மக்கள் மீதும், வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர். இருந்தும் திரிபோலியில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. 


எனவே, திரிபோலியை தக்க வைத்துக்கொள்ள கடாபி அரசு படா தபாடு படுகிறது. இதற்கிடையே, போராட்டக்காரர்கள் வசம் இருக்கும் ஷாரியா நகரை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கையில் கடாபி அரசு தீவிரமாக உள்ளது. 2-வது நாளாக நேற்றும் அந்த நகரம் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டது. 


இந்த தாக்குதல் கடாபியின் மகன் தலைமையில் நடந்தது. இவர்களுடன் சேர்ந்து கூலிப்படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். இவர்களை எதிர்த்து போராட்டக்காரர்களும் சண்டையிட்டனர். இதனால் கடும்போர் நடந்தது. இருபுறமும் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதால் போராட்டக்காரர்கள் தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டது. 


போராட்டக்காரர்கள் தரப்பை சேர்ந்த சீனியர் கமாண்டர் கொல்லப்பட்டார். 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. இக்காரணங்களால் ஷாவியா நகரில் போராட்டக்காரர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் லிபியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பக்கத்து நாடான துணிசியாவுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். 


இதுவரை சுமார் 1 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேறியிருப்பதாக கூறப் படுகிறது. இதற்கிடையே சொந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொன்று குவிக்கும் அதிபர் கடாபிக்கு இண்டர்போல் (சர்வதேச போலீஸ்) எச்சரிக்கை விடுத்துள்ளது. 


கடாபி, அவரது குடும்பத்தினர் மற்றும் நெருக்மானவர்கள் 15 பேருக்கு ஆரஞ்சு நோட்டீசு (எச்சரிக்கை நோட்டீசு) வழங்கியுள்ளது. ஆனால், அவர்களை வெளியேற விடாமல் கடாபியின் ராணுவம் தடுத்து நிறுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்தும் சொத்துக்களை முடக்கியும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் செல்போன் உபயோகிப்போர் 77 கோடி.

இந்தியாவில் செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 77.11 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஜனவரி மாத நிலவரமாகும். இது தவிர, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கூடுதலாக 1.89 கோடி பேர் செல்போன் சந்தாதாரர்கள் ஆகியுள்ளனர். 
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தகவலின் படி கம்பியில்லா தகவல் சாதனம் (செல்போன்) உபயோகிப்போர் எண்ணிக்கை 2.52 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் செல்போன் உபயோகிப்போர் எண்ணிக்கை 75.21 கோடியாக இருந்தது. ஜனவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 77.11 கோடியாக அதிகரித்துள்ளது. நகர்ப்புற சந்தாதாரர்களின் எண்ணிக்கை 66.65 சதவீதத்திலிருந்து 66.42 சதவீதமாகக் குறைந்துள்ளதாக டிராய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் கிராமப்புறங்களில் செல்போன் உபயோகிப்போர் விகிதம் 33.35 சதவீதத்திலிருந்து 33.58 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தரைவழி தொலைபேசி, செல்போன் உபயோகிப்போர் எண்ணிக்கை 80.61 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்தைக் காட்டிலும் 2.39 சதவீதம் கூடுதலாகும்.
மொத்தமுள்ள 77.11 கோடி வாடிக்கையாளர்களில் 54.86 கோடி பேர் மட்டுமே செல்போனை அதிகம் உபயோகிப்பவர்களாவர். மற்றவர்கள் எப்போதாவது உபயோகிப்பதாக தெரிவித்துள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு புதிதாக 33 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்ததில் இந்நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை 15.58 கோடியாக உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் புதிதாக 32 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்ததில் இந்நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை 12.87 கோடியாக உயர்ந்துள்ளது. வோடபோனில் புதிதாக 31லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்ததில் அந்நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை 12.73 கோடியாக உயர்ந்தது.
புதிய நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது. வீடியோகான் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 6.89 சதவீதம் சரிந்தது. 10 லட்சம் வாடிக்கையளர்கள் வெளியேறியதில் இப்போது 60 லட்சம் வாடிக்கையாளர்களே வீடியோகானில் உள்ளனர். லூப் டெலிகாம் நிறுவனத்தில் புதிதாக 17,541 வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிறுவனத்துக்கு 30 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இணையதளம் உபயோகிப்போரின் எண்ணிக்கை 2.70 சதவீதம் அதிகரித்து 1.12 கோடியாக உயர்ந்துள்ளது.

கொடிய விஷப் பாம்பு இரையைக் கவ்வும் தத்ரூபக் காட்சிகள்! 

இது அமஸோன் பிரதேசத்துக்குரிய ஒரு வகை கொடிய விஷப் பாம்பு. ஈக்குவேட்டர் காடுகளுக்குள் இவற்றைக் காணலாம். சுமார் 45 நிமிட நேரம் குறிவைத்து தனது இரையை கச்சிதமாகக் கவ்விக்கொண்டது. அவ்வளவு நேரம் காத்திருந்து அதை தத்ரூபமாகப் படம்பிடித்துள்ளார் லூயிஸ் பெர்ணாண்டோ எஸ்பின் என்ற படப்பிடிப்பாளர். இவற்றின் போராட்டம் அற்புதமான ஒரு காட்சி என்று அவர் வர்ணித்துள்ளார்.

மனிதர்களைப் போலவே நிமிர்ந்து நிற்கும் விலங்கு! 

கீரிப்பிள்ளை இனத்தைச் சேர்ந்த இந்த விலங்குகள் ஆபிரிக்க நாடுகளில் பெருமளவு காணப்படுகின்றன. 
நீண்டவால், பின்னங்காலை ஊன்றி நிற்றல் என்பன இவற்றின் சிறப்பம்சங்கள். முழு அளவில் வளர்ந்த இந்த வகை மிருகம் ஒன்று தனது குட்டியையும் தாவிக் கொண்டு கிட்டத்தட்ட மனிதர்களைப் போலவே நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் கொண்டது. தாங்கள் இருக்கும் சூழலில் தங்களுக்குஏதும் ஆபத்து உள்ளதா என்பதை அறிந்துகொள்ளத்தான் இவை இவ்வாறு நிற்கின்றன.

ஜெர்மனியைச் சேர்ந்த 48 வயதான தோமஸ் ரெட்டரத் என்பவர் பொட்ஸ்வானா காட்டுப்பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது இந்தக் காட்சிகளைப் படம் பிடித்துள்ளார். 


தொலைக்காட்சியில் இந்த விலங்குகள் பற்றிய விவரணம் ஒன்றைப் பார்த்த பின், அவற்றின் வாழ்வு முறை பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவர் இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார். தென் ஆபிரிக்காவுக்கும், பொட்ஸ்வானாவுக்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதியில் இவற்றைத் தாராளமாகக் காணலாம். இவை 14 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியவை.
 
நாசா அனுப்பிய செயற்கைகோள் கடலில் விழுந்தது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெள்ளிக்கிழமை அனுப்பிய செயற்கைகோளும், அதைச் சுமந்து சென்ற ராக்கெட்டும் சுற்றுப் பாதையை எட்ட முடியாமல் கடலில் விழுந்தன.
பூமியின் பருவநிலை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நாசாவின் குளோரி செயற்கை கோளை சுமந்தபடி டாரஸ் எக்ஸ்.எல் ராக்கெட் கலிபோர்னியா விமானப்படைத் தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
தரையிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ராக்கெட்டில் செயற்கைக் கோளை மூடியிருக்கும் பகுதி இரண்டாகப் பிரிந்து விட வேண்டும். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பகுதி பிரியவில்லை.
இதனால் ராக்கெட்டின் வேகம் படிப்படியாகக் குறைந்தது. குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுப் பாதையை எட்ட முடியவில்லை. ராக்கெட்டும், செயற்கைக்கோளும் பசிபிக் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


எகிப்து அதிபரின் மகன் தற்கொலை முயற்சி.

30 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்து வந்த எகிப்து அதிபர் ஹோஷினி முபாரக் மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை விட்டு விலகினார்.
இந்நிலையில் முபாரக்கின் இரண்டாவது மகன் காமல் முபாரக் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அல்ஜீரிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
காமல் முபாரக்கிற்கு உலகம் முழுவதும் உள்ள வங்கிகளில் மில்லியன் டொலர் அளவிற்கு சொத்துக்கள் உள்ளன. அவைகளை எகிப்து அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர்.
இதனை தாங்க முடியாததால் கமல் முபாரக் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முபாரக்கின் மனைவி சுஷானே 250 தங்க கட்டிகள் மற்றும் 3 பில்லியன் அமெரிக்க டொலருடன் பிரெஞ்ச் நாட்டில் தப்பியோடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிபிய அதிபர் கடாபி கைது ஆவாரா?


போராட்டக்காரர்கள் வசம் உள்ள லிபியாவின் எண்ணெய் வள பகுதிகளை மீட்க ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் தொடர்ந்தால் கடாபி கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
லிபியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ள பிரெகா, அஜ்படியா உள்ளிட்ட பகுதிகளை போராட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர். கச்சா எண்ணெய் வளம் மிகுந்த இப்பகுதியை மீட்பதற்காக இப்பகுதியில் கடந்த 3 நாட்களாக ராணுவம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
உலகில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் 12 வது இடத்தில் லிபியா உள்ளது குறிப்பிடத்தக்கது. தாக்குதலை முறியடிக்கும் வகையில் போராட்டக்காரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் மீதான தாக்குதலை முறியடிக்கவும், கடாபியை பதவியிலிருந்து தூக்கி எறியவும் அந்நாட்டு ராணுவம் மீது போர் தொடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. இதற்கு பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றத்துக்காக கடாபி, அவரது மகன்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் போவதாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் கடாபி கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் லிபிய அரசு மற்றும் அதிபர் கடாபிக்கு சொந்தமாக உள்ள 1.44 லட்சம் கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் திமோதி கெய்த்னர் தெரிவித்துள்ளார். இதில் அவரது மகன்கள் மற்றும் லிபிய மத்திய வங்கி, முதலீட்டு ஆணையம் உட்பட அரசுக்கு சொந்தமான சொத்துக்களும் அடக்கம்.
கடாபிக்கு சொந்தமான 1.33 லட்சம் கோடி சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 11 ஆயிரம் கோடி சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதையும் முடக்கி உள்ளோம் என கெய்த்னர் கூறியுள்ளார்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, March 4, 2011

அண்டார்டிகாவில் பாரிய பனிக்கட்டி படலம் கண்டுபிடிப்பு.


அண்டார்டிகாவின் அடிப்பகுதியில் அமைந்து உள்ள பனிக்கட்டி படலம் மிகப் பெரிதாக 4.2 கி.மீ உயரமுடையதை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.
இந்த வெள்ளைக் கண்டத்தின் நடுப்பகுதியை ஆய்வு செய்த போது திரவ நிலைத் தண்ணீர் உறைந்து பனிப்படலம் மீது ஏராளமாக குவிந்திருப்பதை கண்டறிந்தனர். சில இடங்களில் இந்தப் பனிப்படலம் நூற்றுக்கணக்கான மீற்றர் அடர்த்தி உடையதாகவும், மொத்தமுள்ள பனிக்கட்டில் பரப்பில் பாதி அளவுக்கு இருக்கிறது என ஆய்வு புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
வியக்க வைக்கும் பல உண்மைகளை தாங்கிய ஆய்வு முடிவுகள் தி ஜர்னல் சயின்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பனிப்படலங்கள் எவ்வாறு விரிவடைகின்றன மற்றும் நகருகின்றன என்பது ஆய்வின் மூலம் தெரிய வரும். மேலும் உலகம் வெப்பமயமாதலின் அண்டார்டிகா எவ்விதம் மாறும் என்ற உண்மையும் வெளிக் கொண்டு வரும்.
இந்த ஆராய்ச்சியின் போது கேம்பர்ட்சேவ் மலைகள் அண்டார்டிகாவின் அடி ஆழத்தில் புதைந்துள்ளன என தெரிய வந்துள்ளது. மேலும் தண்ணீர் எவ்வாறு மலைகளின் பள்ளத் தாக்குதல்களில் பாயும் என்பதை பற்றியும் இந்த ஆய்வு அறிக்கை புள்ளி விவரங்களை கூறுகின்றது.
பனிப் படலங்கள் எப்போதும் மேலிருந்து கீழாக தான் வளரும். ஆனால் இது கீழிருந்து மேலாக எவ்விதம் வளரும் என்பது மிகவும் ஆச்சரியம் தருவதாக உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விமான ராடார்கள் மூலம் பனியின் அடர்த்தி, அடுக்குகளாய் மாறும் நிலை மற்றும் பாறைப் படுக்குகளில் பனி படர்தல் கண்டறியப்பட்டது. இதன் மூலம் கடலின் கனிம வளம் பற்றியும் ஆய்வு செய்ய முடிந்தது.இவ்வாறு கண்டறியப்பட்ட பனிப்படலங்களில் டோம்சிக் பகுதியில் உள்ளவைகள் 800000 பழமையானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் வெந்தயம்.


உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
1. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து 200 மி.லி அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இது போன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் வராது.
2. இது தவிர உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன் சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
3. வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடி செய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
4. மூட்டு வலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால் வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
5. எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும் வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க சுவை கூடுவதுடன் உடல் உபாதைகளையும் போக்கும்.
6. மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால் நீரிழிவு, வயிற்றுப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
7. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியது ஐ பேட் 2: சாதனை படைக்குமா?


இவ்வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலத்திரனியல் சாதனமான அப்பிள் நிறுவனத்தின் ஐபேட் 2 டெப்லட் கணனி நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை அறிமுகப்படுத்தும் நிகழ்விற்காகஅப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குநர் ஸ்டீவ் ஜொப்ஸ் தனது சுகயீனத்தையும் பொருட்படுத்தாமல் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஐ பேட் & ஐ பேட் 2 

அப்பிளின் முதல் ஐ பேட்கள் உலகம் முழுவதும் சுமார் 15 மில்லியன் விற்பனையாகியதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் புதிய சில மாற்றங்களுடன் ஐபேட் 2 வெளியாகியுள்ளது. முன்னையதினை போல இதுவும் விற்பனையில் சாதனை படைக்குமென்பதே அப்பிளின் எதிர்ப்பார்ப்பு.

டெப்லட் கணனிகளின் சந்தை தற்போதைய சந்தை நிலைவரத்தின் படி டெப்லட் கணனிகளானது மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. முன்னர் இல்லாதவாறு இவற்றிற்கான கேள்விகள் தற்போது பெரிதும் அதிகரித்துள்ளன.

சாதாரண கணனிகள் மற்றும் மடிக்கணனிகளின் விற்பனையும் டெப்லட் கணனிகளின் வருகையினால் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். பெரும்பாலும் இவை அப்பிள் நிறுவனத்தினுடையதும், கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை கொண்டியங்குபவையுமாகும்.


அப்பிள் vs அண்ட்ரோயிட்

அப்பிள் போலவே கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை கொண்ட டெப்லட்கள் கணனிகளும் வேகமாக பிரபலம் பெற்று வருகின்றன. அண்ட்ரோயிடானது திறந்த மூல மென்பொருள் ( open source) ஆகும். தற்போது உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட் கணனிகள் இதனைக் கொண்டே இயங்குகின்றன. இது அப்பிள் நிறுவனத்திற்கு பாரிய சவாலாகும். இதனைக் கருத்தில் கொண்டே அப்பிள் தனது சந்தைப்பங்கினை தக்கவைப்பதற்கு பல புதிய நவீன சாதனங்களை தயாரித்து வருகின்றது.

இந்நிலையில் அண்மையில் மோட்டோரொலா நிறுவனம் அதன் எக்ஸூம் டெப்லட் கணனியை அறிமுகப்படுத்தியது. இது அண்ட்ரோயிட் 'அணிகோம்' இயக்குதளத்தினை இது கொண்டிருப்பதானது இதன் பெரும் பலமாகும். அண்ட்ரோய்டின் நவீன 3.0 பதிப்பான 'அணிகோம்' இயக்குதளத்தினை கொண்ட முதல் சாதனம் இதுவாகும். இவற்றைத்தவிர பல முக்கிய நிறுவங்களும் தங்களது டெப்லட் கணனிகளை அறிமுகப்படுத்தியவாறே உள்ளன. அவற்றில் எச்.பி மற்றும் பிளக்பெரி ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும்.

அப்பிள் vs மோட்டோரொல்லா vs எச்.பி vs பிளக்பெரி
சந்தையில் இவ்வாறு பல போட்டியாளர்கள் நுழையும் போது விலையிடல் போட்டித்தன்மையுடையதாகும். இது தனியுரிமையை நிலையையும், தன்னிச்சையான விலையிடலையும் தடுக்கும். இதன் மூலம் பொருட்களின் தரம் அதிகரிப்பதுடன், உற்பத்திப்பொருட்கள் தனித்துவம் பெறும் இதனால் வாடிக்கையாளர் நன்மையடைவர் என்பதே உண்மை.


தரம் மற்றும் தொழிநுட்பங்களில் தனித்துவம் மிக்க அப்பிளின் ஐ பேட் இப் பலமுனைப் போட்டியில் ஜெயிக்குமா என்பதினை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றைய செய்திகள்.


இணையப் பாவனைக்கு சிறுவர்களுக்கு தடை!

சிறுவர்கள் கபேகளில் இணையத் தளத்தை பயன்படுத்த குருணாகல் மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கபேகளில் இணையத் தளத்தை பயன்படுத்த முடியாது என்று குருணாகல் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தன அறிவித்து உள்ளார். 

இத்தடை தொடர்பான அறிவுறுத்தல்கள் கபே உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. பாடசாலைச் சிறுவர்கள் எவரேனும் கல்வித் தேவைக்காக கபேகளில் இணையத்தளத்தை பார்வையிட வரக் கூடும், அதிபரின் கடிதத்துடன் வருகின்றபோது மாத்திரமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

புதிய பாடத்திட்டத்தின் கீழ் உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு தற்போது தரம் 13 இல் கல்வி கற்பவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

கடந்த வருடங்களில் உயர்தரப் பரீட்சைக்கு பழைய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றியவர்கள் பாடசாலை பரீட்சார்த்தியாக புதிய பாடத்திட்டத்தின் கீழ் தோற்ற முடியாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை கண்டிப்பான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை நேரம் பிற்பகல் 3 மணிவரை நீடிக்கப்படுமாம்!

பாடசாலை இயங்கும் நேரத்தை பிற்பகல் 3 மணிவரை நீடிக்க கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தீர்மானித்துள்ளார். இதற்கு முன்னர் பாடசாலை நேரம் 2 மணி வரை இடம்பெற்றதுடன் அது பின்னர் 1.30 மணியாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

கல்வியமைச்சின் “சிறந்த பாடசாலைகள் ஆயிரம்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆயிரம் பாடசாலைகளில் கல்வி நேரத்தை பிற்பகல் 3 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கால வேளைக்குக்குள் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கப்படும். அரசாங்க ஊழியர்கள் பிற்பகல் 4.30 வரையும் பொலிஸார் 24 மணித்தியாலங்களும் கடமை புரிகின்றனர். 

ஆனால் அரசாங்க ஊழியர்களான ஆசிரியர்கள் மாத்திரம் 1.30 மணிக்கு வீடு செல்கின்றனர் என கல்வியமைச்சர் தெரிவித்தார். ஜப்பானில் உள்ள பாடசாலைகள் பிற்பகல் 4 மணி வரை இடம்பெறுகின்றமையால்தான் அங்குள்ளவர் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் 2012 இல் பூர்த்தி!

Airbus A380
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் 209 மில்லியன் அமெரிக்க டொலர் சீன நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அம்பாந்தோட்டை மத்தல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும் என சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார். 

இதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமான நிலையம் 75 மீற்றர் அகலமும், 3 ஆயிரத்து 500 மீற்றர் நீளமும் கொண்டதாக அமையவுள்ளது. 

மத்தல விமானப் பணிகளுக்கு 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விமான ரகமான ஏ-380 விமானத்தை புதிய விமான நிலையத்தில் தரையிறக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, March 3, 2011

Posts tagged ‘மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அள்ளிக்கொடுக்கும் இலவச மென்பொருள்கள்.




எதையும் புதிய கோணத்தில் ஆராயும் மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் புதிதாக ஒன்றை ஆரம்பித்துள்ளது. மாணவரின் படைப்பாற்றலைஇருகரம் நீட்டி வரவேற்கிறது.  இதற்காக மைக்ரோசாப்ட் டீரிம்ஸ்பார்க்என்று ஒன்றை ஆரம்பித்திள்ளது. படிப்பைத்தவிர மற்றவற்றில் நாட்டம்செல்லும் மாணவர்களுக்கு இது ஒரு தங்கமான வாய்ப்பு. உங்கள்கற்பனை படைப்பை எங்களிடம் சொல்லுங்கள் நாங்கள் வாய்ப்புதருகிறோம் என்கின்றனர்.

நீங்கள் இணையதள வடிவமைப்பாளராக இருக்கலாம். புதிய
கற்பனையில் விளையாட்டை உருவாக்குபவராகும் இருக்கலாம்.
உங்களுக்கு மைக்ரோசாப்ட் இலவசமாக மென்பொருள்களை தருகிறது.
இதில் எப்படி நாம் சேரலாம் என்று பார்ப்போம்.
https://www.dreamspark.com/Default.aspx இந்த இணையதளத்திற்கு
செல்லவும்.படம் 1- ல் காட்டியபடி ” GO ”  என்ற பட்டனை அழுத்தி
ஒரு புது கணக்கு துவக்கவும்.அல்லது Windows live Email ID
மூலமும் Sign in செய்து கொள்ளளாம். அப்புறம் என்ன உங்கள்
தகவல்களை கொடுத்து மைக்ரோசாப்ட் டீரிம்ஸ்பார்க்-ல் சேர்ந்து
கொள்ளவும்.என்னென்ன மென்பொருள்கள் எல்லாம் இலவசமாய்
கிடைக்கும் என்று படம் 2 -ல் காட்டியுள்ளோம்.
எல்லா மாணவர்களுக்கும் பயிற்ச்சியையும் அவர்களே
அளித்துவிடுகிறார்கள். அது மட்டுமின்றி நமக்கு எழும் அனைத்து
கேள்விகளுக்கும் விடை அளிக்கின்றனர்.
வருங்காலத்தில் மைக்ரோசாப்ட் டீரிம்ஸ்பார்க்-ல் பயிற்ச்சி பெற்ற
அனைவருக்கும் வேலை என்று வந்தாலும் வரலாம். அணைத்து
மாணவர்களுக்கும் இந்த தகவலை தெரியப்படுத்துங்கள்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

புதுவித சொற்களஞ்சியம் (Dictationary)!


பொதுவாக டிக் ஷனரியில் ஒரு சொல்லுக்குப் பொருள் தேடுகையில், அதே மொழியில் விளக்கம் அளிக்கப்படும். அல்லது ஒரு மொழி சொல்லுக்கு இன்னொரு மொழி சொல் மற்றும் விளக்கம் அளிக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஆங்கிலம் தமிழ் அகராதியில், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொல் தரப்பட்டு, இலக்கணக் குறிப்புகளுடன் விளக்கம் கிடைக்கும். இணையத்தில் இன்னொரு புதிய வகை டிக் ஷனரி ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. இது டிக்ட்ஸ் இன்போ (Dicts Info) என்று அழைக்கப்படுகிறது. இதன் இணைய தளம் சென்றால், அங்கு எந்த சொல்லுக்கு பொருளும் இன்னொரு மொழிச் சொல்லும் வேண்டுமோ, அந்த சொல்லை அதற்கான கட்டத்தில் அமைக்க வேண்டும். 

பின்னர், எந்த எந்த மொழிகளில் உங்களுக்கு பொருள் வேண்டுமோ, அந்த மொழிகளையும் தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக்காட்டாக, Computer என்ற ஆங்கிலச் சொல்லைக் கட்டத்தில் அமைத்து, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பொருள் வேண்டும் என இந்த இரண்டு மொழிகளைத் தேர்ந்தெடுத்து Search கட்டத்தில் கிளிக் செய்திட வேண்டும். 



உடன் Universal Dictionary என்ற தலைப்புடன் ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற மூன்று பிரிவுகளில் சொற்களும் பொருளும் காட்டப்படும். எடுத்துக்காட்டாக, அளிக்கப்பட்ட Computer என்ற சொல்லுக்கு, ஆங்கிலத்தில் அதற்கான விளக்கமும், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் அதற்கு இணையான சொற்களும் தரப்படுகின்றன. இத்துடன் இந்த டிக் ஷனரி நின்று விடவில்லை. 

உடன், கொடுக்கப்பட்ட சொல் தொடர்பான மற்ற சொற்களும் தரப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, Computer என்ற சொல் தரப்பட்டபோது, Program, Calculator, Software, Computer Science என்ற சொற்களும், பொருளும் தரப்பட்டன. இந்த டிக் ஷனரியைப் பெற http://www.dicts.info என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF