Thursday, March 3, 2011

இன்றைய செய்திகள்.

சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவருக்கு குவைத்தில் பொதுமன்னிப்பு! 4000 இலங்கையருக்கு நன்மை.
குவைத் நாட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கி இருக்கும்  வெளிநாட்டவர்களுக்கு இம்மாதம் முதல் எதிர்வரும் ஜூன் மாதம் வரை பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது. இவர்கள் இப்பொதுமன்னிப்பை பயன்படுத்தி குவைத்தை விட்டு வெளியேற முடியும். தண்டனை எதுவும் வழங்கப்பட மாட்டாது.இப்பொதுமன்னிப்பால் 4000 இலங்கையர்கள் வரை நன்மை அடைவார்கள்.

விசா முடிந்தவர்கள், கடவுச்சீட்டை தொலைத்தவர்கள், சிறுகுற்றங்களுக்காக தேடப்படுபவர்கள் அவரவர் நாடுகளின் தூதரகங்கள் ஊடாக பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். குவைத் வெளிவிவகார அமைச்சால் தூதரகங்களுக்கு விண்ணப்ப படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை நிரப்பி கொடுக்க வேண்டும்.

1000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் தூதரகத்துக்கு இன்று சென்று பொதுமன்னிப்புக்கு விண்ணப்பித்து உள்ளனர்.இன்னும் 3000 பேர் வரையானோர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பண்டாரநாயக்கவின் சிலையை இடமாற்ற சந்திரிகா எதிர்ப்பு! இது ஒரு சதி எனவும் குற்றச்சாட்டு.

மறைந்த முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் சிலையை காலி முகத்திடலிலிருந்து அகற்றுவதையோ, வேறிடத்திற்கு மாற்றுவதையோ தான் முற்றாக எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
கொங்ஹொங் ஹோட்டல் நிறுவனம் ஒன்றினால் காலிமுகத்திடலில் உல்லாச ஹோட்டலொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதால் பண்டாரநாயக்கவின் சிலை அங்கிருந்து இடம் மாற்றப்படலாம் என ஊகங்கள் நிலவுகின்றன.
இது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் கேட்டபோது, இச்சிலையை இடமாற்றுவதற்கு அல்லது அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறினார்.
இச்சிலையை நிர்மாணிப்பதற்கு மேற்படி இடம் தெரிவு செய்யப்பட்டதற்கு கலை ரசனை, கட்டிட நிர்மாணக் கலை, சிற்பக் கலை விவகாரம் உட்பட பல காரணங்கள் உள்ளதாக தெரிவித்தார்.
இது பண்டாரநாயக்கவின் பெயரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான சிந்தனையின் ஒரு பகுதி. இது ஒரு சதியாகும்' என அவர் கூறினார்.




இச்சிலையை இடமாற்றும் திட்டத்திற்கு எதிராக எகிப்து மற்றும் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் நடைபெறுவதைப் போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு தான் ஏன் ஏற்பாடு செய்யவில்லை என பலர் தன்னிடம் தொலைபேசி மூலம் கேட்பதாகவும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
சிலையொன்றை இடமாற்றுவதற்கு எதிராக இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தேவை என நான் கருதவில்லை. அது அவசியமானால் ஊழல், வாழ்க்கைச் செலவு உயர்வு, தவறான பொருளாதார முகாமைத்துவம், இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் நடத்தப்பட்ட விதம் என்பனவற்றுக்கு எதிராகவே அது நடைபெறவேண்டும் என்றார்.
லாப் காஸின் விலையும் 96 ரூபாவால் அதிகரிப்பு.
இலங்கையில் இன்று முதல் லாப் காஸின்  விலை அமுலாகும் வகையில் 96 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி லாப் எரிவாயுவின் புதிய விலை 1,652  ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.முன்னர் 12.5 கிலோகிராம் நிறைறை கொண்ட லாப் காஸின் விலை 1,556 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை அரசாங்கத்தினால் அண்மையில் பொறுப்பேற்கப்பட்ட லித்ரோ சமையல் எரிவாயுவின் விலையில்,  எதுவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதன்படி, லித்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1,652 ரூபாவிற்கே தொடர்ந்தும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த வருடத்தின் இரண்டாவது விலை திருத்தத்திற்கு அமைவாகவே, லாப் காஸின் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களின் ஆடைகளைக் களையப் போவதாக இலங்கைக் கிரிக்கட் அதிகாரிகள் மிரட்டல்.
இலங்கைக் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையைச் சோ்ந்த அதிகாரிகள் சிலர் பலவந்தமாக ஊடகவியலாளர்களின் ஆடைகளைக் களையப் போவதாக மிரட்டியுள்ளனர்.இச்சம்பவம் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற இலங்கை மற்றும்  கென்ய அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டியின்போது நடைபெற்றுள்ளது. அதன் போது சில ஊடகவியலாளர்கள் தமது ஊடகத்தின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வண்ணமான டீசோ்ட்டுகளை அணிந்து போட்டியைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தனர்.
சற்றுநேரத்தில் இலங்கைக் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் டீசோ்ட் அணிந்த இரண்டு பெண் அதிகாரிகள் அவர்களை நெருங்கி வந்து தமது நிறுவனத்தின் விதிகளின் பிரகாரம் கிரிக்கட் போட்டிகளின் போது எந்தவொரு ஊடகவியலாளரும் அவர்களது நிறுவன இலச்சினை பொறித்த ஆடைகளை அணிய முடியாது என்றும், அது தமது தொலைக்காட்சி ஒளிபரப்பூடாக இலவச விளம்பர அனுகூலம்  பெறுவதற்கு ஒப்பானது என்றும் ஊடகவியலாளர்களுடன் வாக்குவாதப்பட்டுள்ளனர்.
அதன் பின் உடனடியாக குறித்த டீசோ்ட்களை கழற்றுமாறும் இல்லாது விடில் தாம் பலவந்தமாகக் கழற்றப்  போவதாகவும் அவர்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியுள்ளனர். ஆயினும் ஊடகவியலாளர்கள் அது குறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஊடகவியலாளர்கள் மத்தியில் இருந்து கிளம்பிய எதிர்ப்பலை காரணமாக குறித்த அதிகாரிகள் இருவரும் கடைசியில் மெதுவாகப் பின்வாங்கிச் சென்றுள்ளதாக அறியப்படுகின்றது.
ஐ.நா.மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு சாதகமான நிலை காணப்பட்டது – மஹிந்த சமரசிங்க
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 16ஆவது மாநாட்டில் இலங்கைக்கு சாதகமான நிலை காணப்பட்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
போரின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பில் உறுப்பு நாடுகள் திருப்தி வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.போர் நிறைவடைந்த பின்னர் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு நடவடிக்கைகளை சில நாடுகள் வியந்து பாராட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.பிரபல சிங்கள இணையமொன்றுக்கு அமைச்சர் அளித்த செவ்வியில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்துடன் இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம், விடுதலைப் புலி உறுப்பினர் புனர்வாழ்வு, அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மை போன்ற காரணிகள் தொடர்பில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விஜயத்தின் போது பல்வேறு நாடுகளின் உயர்ஸ்தானிகர்களை சந்தித்து இலங்கை தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் சந்தர்ப்பம் தனக்கு கிடைக்கப் பெற்றதாகவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கடாஃபிக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்.
லிபிய அதிபர் மம்மர் கடாபிக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.லிபியாவில் ராணுவ விமானங்கள் மூலம் மக்கள் மீது குண்டுகளை வீசி அவர்களை கடாஃபி கொலை செய்து வருவதாகவும், இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
லிபியாவில் விமானங்கள் பறப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தடை விதிக்க வேண்டுமெனவும் அமெரிக்க செனட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.கடாஃபிக்கு எதிரான தீர்மானத்தை நியூஜெர்சி செனட்டர் ராபர்ட் மெனின்டெஸ் முன்மொழிந்து பேசியது: லிபிய அதிபர் பதவியில் இருந்து கடாஃபி உடனடியாக விலகி நாட்டில் ஜனநாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். லிபியாவில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன. இதனை மிகமுக்கியப் பிரச்னையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.
சர்வாதிகாரியான கடாஃபிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஒற்றுமையாகப் போராடும் துணிவை பாராட்டுவதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.போராட்டக்காரர்கள் மீது கடாஃபி, கொடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப லிபியாவில் ஜனநாயகம் மலர வேண்டும். தேர்தல் மூலம் மக்கள் தங்கள் அரசை தேர்வு செய்ய வழிவகை காண வேண்டுமென்றும் அமெரிக்க செனட் தீர்மானம் தெரிவிக்கிறது.
கடாஃபி தனித்து விடப்பட்டுள்ளார், லிபிய மக்கள் மட்டுமின்றி சர்வதேச சமூகமே அவருக்கு எதிராகத் திரண்டுள்ளது. பல ஆண்டுகளாக அவர் மக்களை வதைத்து வந்துள்ளார். தன்னை எதிர்ப்பவர்களை கொன்று குவித்துள்ளார். இதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. இப்போது மக்கள் அவருக்கு எதிராக எழுச்சியடைந்துள்ளனர். அரசைத் தேர்வு செய்யும் உரிமை மக்களுக்கு உண்டு என்று செனட் உறுப்பினர்கள் தீர்மானத்தின் போது தெரிவித்தனர்.
ஐ.நா. குழுவில் இருந்து நீக்கம்: இதனிடையே ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் இருந்து லிபியா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. லிபிய அதிபர் கடாஃபி, போராட்டக்காரர்களுக்கு எதிராக மனித உரிமைகளை மீறி செயல்படுவதால் லிபியாவை இடை நீக்கம் செய்வதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. லிபியாவில் நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியாவில் போராட்டம் நடத்தி வருபவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. லிபியாவில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எகிப்து, டுனீசியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.லிபியாவைத் தாக்கக் கூடாது-ஈரான் எச்சரிக்கை: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் லிபியா மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதி நிஜாத் கூறியுள்ளார்.
முன்பு அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ், இராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினார். அப்போது இருந்த சூழ்நிலை இப்போது இல்லை. இப்போது லிபியா மீது தாக்குதல் நடத்தினால் அது, அவர்களுக்கு அவர்களே மரணக் குழியை தோண்டிக் கொள்வதற்கு சமமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். புறப்பட்டது கடாஃபியின் படை: இதனிடையே ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க அதிபர் கடாஃபியின் படைகள் புறப்பட்டு விட்டதாக கடைசியாக கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க கடற்படையினர் நிலைகொண்டுள்ள பகுதிக்கு அருகேயுள்ள பிரிகா நகரை இந்தப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. தலைநகர் திரிபோலியை நோக்கி வரும் கிளர்ச்சியாளர்களை இந்த படைகளைக் கொண்டு ஒடுக்க கடாஃபி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.வாஷிங்டன், மார்ச் 2: லிபிய அதிபர் மம்மர் கடாபிக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லிபியாவில் ராணுவ விமானங்கள் மூலம் மக்கள் மீது குண்டுகளை வீசி அவர்களை கடாஃபி கொலை செய்து வருவதாகவும், இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.லிபியாவில் விமானங்கள் பறப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தடை விதிக்க வேண்டுமெனவும் அமெரிக்க செனட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடாஃபிக்கு எதிரான தீர்மானத்தை நியூஜெர்சி செனட்டர் ராபர்ட் மெனின்டெஸ் முன்மொழிந்து பேசியது: லிபிய அதிபர் பதவியில் இருந்து கடாஃபி உடனடியாக விலகி நாட்டில் ஜனநாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். லிபியாவில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன. இதனை மிகமுக்கியப் பிரச்னையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.சர்வாதிகாரியான கடாஃபிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஒற்றுமையாகப் போராடும் துணிவை பாராட்டுவதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் மீது கடாஃபி, கொடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப லிபியாவில் ஜனநாயகம் மலர வேண்டும். தேர்தல் மூலம் மக்கள் தங்கள் அரசை தேர்வு செய்ய வழிவகை காண வேண்டுமென்றும் அமெரிக்க செனட் தீர்மானம் தெரிவிக்கிறது.
கடாஃபி தனித்து விடப்பட்டுள்ளார், லிபிய மக்கள் மட்டுமின்றி சர்வதேச சமூகமே அவருக்கு எதிராகத் திரண்டுள்ளது. பல ஆண்டுகளாக அவர் மக்களை வதைத்து வந்துள்ளார். தன்னை எதிர்ப்பவர்களை கொன்று குவித்துள்ளார். இதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. இப்போது மக்கள் அவருக்கு எதிராக எழுச்சியடைந்துள்ளனர். அரசைத் தேர்வு செய்யும் உரிமை மக்களுக்கு உண்டு என்று செனட் உறுப்பினர்கள் தீர்மானத்தின் போது தெரிவித்தனர்.
ஐ.நா. குழுவில் இருந்து நீக்கம்: இதனிடையே ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் இருந்து லிபியா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. லிபிய அதிபர் கடாஃபி, போராட்டக்காரர்களுக்கு எதிராக மனித உரிமைகளை மீறி செயல்படுவதால் லிபியாவை இடை நீக்கம் செய்வதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. லிபியாவில் நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியாவில் போராட்டம் நடத்தி வருபவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.  லிபியாவில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எகிப்து, டுனீசியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.லிபியாவைத் தாக்கக் கூடாது-ஈரான் எச்சரிக்கை: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் லிபியா மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதி நிஜாத் கூறியுள்ளார்.
முன்பு அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ், இராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினார். அப்போது இருந்த சூழ்நிலை இப்போது இல்லை. இப்போது லிபியா மீது தாக்குதல் நடத்தினால் அது, அவர்களுக்கு அவர்களே மரணக் குழியை தோண்டிக் கொள்வதற்கு சமமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
புறப்பட்டது கடாஃபியின் படை: இதனிடையே ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க அதிபர் கடாஃபியின் படைகள் புறப்பட்டு விட்டதாக கடைசியாக கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க கடற்படையினர் நிலைகொண்டுள்ள பகுதிக்கு அருகேயுள்ள பிரிகா நகரை இந்தப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. தலைநகர் திரிபோலியை நோக்கி வரும் கிளர்ச்சியாளர்களை இந்த படைகளைக் கொண்டு ஒடுக்க கடாஃபி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பூகம்பத்திற்கு பின் நியூசிலாந்தை தாக்கிய தூசிப் புயல்.
நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் கடந்த 22 ம் திகதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. பலி எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது.மீட்புப் பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்ட்சர்ச் நகரில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது.
பூகம்பத்தில் இடிந்த கட்டிடங்களின் தூசிகளையும் அள்ளி வீசுவதால் மீட்புப் பணிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.தூசிப் புயலாலும் ஆங்காங்கே இடிபாடுகளில் சிக்கி கிடக்கும் பிணங்களாலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முக மூடி அணிந்து கொண்டு மீட்பு பணிகளில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
ஆற்றில் காரை மூழ்க வைத்து மகளை கொலை செய்த தந்தை.
ஒரு ஆற்றில் தன்னுடைய இரு குழந்தைகளை காரோடு மூழ்க வைத்த குற்றத்திற்காக தந்தை கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டார்.கடந்த ஆண்டு பெப்ரவரி 11 ல் நடந்த இச்சம்பவம் இப்பொழுது நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. கிம் ஸ்மித், கிறிஸ்டோபர் தம்பதியரின் குழந்தைகள் கேப்ரியில்லா மற்றும் ரையான். இவர் இரும்பு பட்டறை தொழிலாளியாகவும், போதிய பண வசதி இல்லாதவராகவும் இருந்துள்ளார்.
தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக தனது வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவர் தனது குழந்தைகளையும் காரில் அழைத்து கொண்டு ஆற்றில் காரை செலுத்தினார். குழந்தைகள் இருவரும் பின்பக்கம் வழியாக கதறிக் கொண்டு தப்பிக் முயன்றுள்ளனர்.இருவருக்கும் நீச்சல் தெரியாததால் மூழ்கும் காருக்குள் சிக்கிக் கொண்டனர். காரில் மூழ்கிய மூவரையும் பொலிஸ் அதிகாரி ஒருவர் காப்பாற்றினார். அதன் பின் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி அவரது மகள் இறந்து விட்டார். எனது மனைவியால் நான் அனைத்து கஷ்டங்களையும் அடைந்து விட்டேன். அதனால் அனைவரையும் கொல்ல நினைத்தேன். இதன் காரணமாகவே காரை ஆற்றுக்குள் செலுத்தினேன் என்று கிறிஸ்டோபர் கூறினார்.
குடும்பச்சண்டையில் குழந்தைகளுடன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த பெண்!
பெங்களூரு, மாத நாயக்கன ஹள்ளியில், ஜனப்ரியா அடுக்கு மாடி குடியிருப்பில், வசித்து வருபவர் ஷியாம் சுந்தர். கேப்ஸ் டிரைவரான இவருக்கு மனைவி அனுராதா (23), மகள் பாவனா (5),மகன் விஸ்வநாத் (1) உள்ளனர். கணவனுக்கும், மனைவிக்கும் நேற்று முன்தினம் இரவு, சண்டை ஏற்பட்டது. வெறுத்து போன அனுராதா, நேற்று காலை, தான் வசித்து வரும் ஐந்தாவது மாடியிலிருந்து, இரு குழந்தைகளுடன் கீழே குதித்தார். 


அனுராதாவும், குழந்தை பாவனாவும் பலியாகினர். ஒரு வயது குழந்தை விஸ்வநாத் படுகாயமடைந்து, நிமான்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மாதநாயக்கனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குடும்பத் தகராறில் மனைவி, 3 குழந்தைகளையும் குத்திக் கொன்ற தொழிலாளி!

தர்மபுரி மாவட்டம் அரூர் தாதம்பட்டி தி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி சியாமளா. இவர்களுக்கு சுஜித்ரா (6) என்ற பெண் குழந்தையும், ஜெகன் (4), அன்பழகன் (3) என்ற 2 ஆண்குழந்தைகளும் இருந்தனர். 


சுரேஷ் குடிப்பழக்கம் உடையவர். இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பும் சுரேசுக்கும், அவரது மனைவி சியாமளாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயக்கம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று நேற்று வீட்டிற்கு திரும்பினார். தன்னை தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டிய மனைவி சியாமளா மீதும், குழந்தைகளின் மீதும் சுரே சுக்கு கொலைவெறி ஏற்பட்டது. நேற்று இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். அந்தநேரத்தில் சுரேஷ் அவரும் ஒரு கூர்மையான கல்லை எடுத்து வந்தார். அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்தார். பின்னர் படுத்து தூங்கினார். 


இன்று அதிகாலை திடீரென எழுந்த சுரேஷ் வீட்டை உள்பக்கமாக பூட்டினார். பின்னர் குழந்தைகள் மற் றும் மனைவி படுத்திருந்த அறைக்கு சென்றார். முதலில் ஒரு குழந்தையின் வாயை பொத்தி கூர்மையான கல்லால் கழுத்து, தலை, வயிறு உள்ளிட்ட இடங்களில் குத்தி கொலை செய்தார். அடுத்த குழந்தையையும் இதே போல் கொலை செய்தார். 3-வது குழந்தையை கொலை செய்த போது அந்த குழந்தை சத்தம் போட்டது. ஆனாலும் விடாமல் கொடூரமாக துடிக்க, துடிக்க கொலை செய்தார். 


அப்போது சத்தம் கேட்டு எழுந்த மனைவி சியாமளாவையும் கூர்மையான கல்லால் தலை, வயிறு, தொண்டை உள்ளிட்ட இடங்களில் குத்தினார். அவர் மயக்கம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் அவர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே கிடந்தனர். 


உடனே சுரேஷ் நான் என் மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொலை செய்து விட்டேன் என்று சந்தோசமாக சத்தம் போட்டப்படி சென்றார். இதைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். சுரேஷ் வீட்டிற்கு வந்து பார்த்த போது 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் படுக்கையிலேயே பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சியாமளாவுக்கு உயிர் இருப்பதை பார்த்த அவர்கள் அவசர அவசரமாக அவரை அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 


அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பி ஓடிய சுரேஷ் அந்த வழியாக வந்த லாரியில் மோதி தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த லாரி டிரைவர் திடீர் பிரேக் போட்டு லாரியை நிறுத்தினார். கை, தலையில் படுகாயம் அடைந்த சுரேசையும் பொதுமக்கள் மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பாகிஸ்தானை உலுக்கிய அமைச்சர் படுகொலை! சரமாரியாகச் சுட்ட மர்ம மனிதர்கள்.

பாகிஸ்தான் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஷாபாஸ் பட்டி, நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். 

இரண்டு மாதங்களில் நடந்துள்ள இரண்டாவது பெரிய அரசியல் படுகொலை இது. பாகிஸ்தான் அரசில், சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஷாபாஸ் பட்டி. 

பிரதமர் கிலானி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒரே கிறிஸ்தவரான இவர், சமீப காலமாக தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறி வந்தார். பாகிஸ்தான் அரசின் மத துவேச சட்டத்திற்கு எதிராகவும் அடிக்கடி குரல் கொடுத்தார். இறை தூதர் முகமது நபியை இழிவுபடுத்தியதற்காக, கடந்த ஆண்டில், பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்ணான ஆசியா பீவிக்கு ஆதரவாகவும் பேசி வந்தார். 

இந்நிலையில், நேற்று காலை 11.20 மணிக்கு இஸ்லாமாபாத்தில் செக்டார்-1பி-யில் உள்ள தன் வீட்டிலிருந்து ஷாபாஸ் பட்டி காரில் புறப்பட்டார். அவருடன் டிரைவரும், மற்றொரு அடையாளம் தெரியாத பெண்ணும் காரில் அமர்ந்திருந்தனர்.

பாதுகாவலர்கள் யாரும் இல்லை. ஷாபாஸ் பட்டியின் கார் வீட்டை விட்டு வெளியே வந்த போது, துப்பாக்கியுடன் வந்த ஒருவன் காரை நிறுத்தினான். டிரைவரையும், காரில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணையும் கீழே இறங்கும்படி கூறிய அவன், அவர்கள் இறங்கியதும், அமைச்சரை நோக்கி சரமாரியாக சுட்டான். 20 வினாடிகள் வரை சுட்டு விட்டு, தப்பினான். பலத்த காயம் அடைந்த அமைச்சர் ஷாபாஸ் பட்டியை, உடனடியாக அருகிலிருந்த ஷிபா சர்வதேச மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; அங்கு அவர் இறந்தார். 

அமைச்சரின் காரை துப்பாக்கியுடன் வந்த நான்கு பேர் பல கோணங்களில் இருந்து தாக்கியதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த ஜனவரி 4ம் தேதி, பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண கவர்னர் சல்மான் தசீன், அவரது தீவிரவாத பாதுகாவலரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அதன் பின், இரண்டு மாதத்திற்குள் இரண்டாவது பெரிய அரசியல் படுகொலை நடந்துள்ளது. அமைச்சரை துப்பாக்கியால் சுட்டவர்கள் உருது மொழியில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களையும் வீசிச் சென்றுள்ளனர். 

அதில், மத துவேச சட்டத்திற்கு எதிராக ஷாபாஸ் அடிக்கடி பேசி வந்ததால், கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொல்லப்பட்ட அமைச்சர் ஷாபாஸ் பட்டி, தனது உயிருக்கு ஆபத்து உள்ள விவரம் குறித்து, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் கிலானி ஆகியோரிடம் ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளார். இருந்தும் அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அமைச்சர் ஷாபாஸ் பட்டி படுகொலைக்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, March 2, 2011

புதிய பாதையில் பிரவேசிக்கும் இன்டர்நெட்!


இந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய வழி வகை தொடங்கப்பட உள்ளது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதனை தனி அடையாளம் காட்டும் முகவரி ஒன்று தரப்படுகிறது. இதற்கென உலக அளவில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

Internet Protocol version 4 (IPv4) என அழைக்கப்படும் இந்த முறையானது, 1981ல் தொடங்கப்பட்டது. தற்போது இதன் திறன் முழுமையும் பயன்படுத்தப் பட்டுவிட்டதால், இனிமேல் முகவரிகளை வழங்க இயலா நிலைக்கு நாம் நெருங்கி விட்டோம்.

சென்ற பிப்ரவரி 1 அன்று தான், முகவரிகளைத் தரும் தொகுதிகளில் இறுதி தொகுதி வழங்கப்பட்டது. ஆசிய பசிபிக் நாடுகளுக்கென ஒதுக்கப்பட்ட முகவரிகள் எண்ணிக்கை 2012ல் அல்லது அதற்கும் சற்று முன்னதாக மொத்தமாகக் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அடுத்து புதியதாக 128 பிட் அளவில் செயல்படும் IPv6 திட்டம் அமல்படுத்தப் பட இருக்கிறது. இந்த மாற்றம் நம் ஊரில் தொலைபேசிகளுக்கான எண்கள் ஏழு இலக்கத்திலிருந்து எட்டு இலக்கத்திற்கு மாறுவது போல் ஆகும்.

ஆனால் இன்டர் நெட்டில், முகவரிக்கான திட்ட மாற்றம் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் சம்பந்தப்பட்டதாகும். IPv6 திட்டத்தின் அடிப்படையில் தரப்படும் முகவரிக்கு, கம்ப்யூட்டர் கட்டமைப்பில் எட்டு ஸ்லாட்டுகள் தேவைப்படும்.

ஆனால் நாம் தற்போது பயன்படுத்தும் சாதனங்களும், சார்ந்த சாப்ட்வேர் தொகுப்புகளும் நான்கு ஸ்லாட்டுகள் என்ற அளவிலேயே இதற்கான வசதியைக் கொண்டுள்ளன. ஜப்பான் போன்ற நாடுகள் இந்த மாற்றத்திற்கு தேவைப்படும் கட்டமைப்பு மாற்றத்தில் 75% அளவு மேற்கொண்டு இப்போதே தயாராக உள்ளனர்.

ஆனால் இலங்கையில் இது குறித்த விழிப்புணர்வும் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை. இலங்கையில் உள்ள நெட்வொர்க்குகளில் 6% சாதனங்கள் தான் புதிய IPv6 திட்டத்திற்குத் தயாராய் உள்ளன. நெட்வொக்கில் பயன்படுத்தப் படும் ரௌட்டர்கள், ஸ்விட்ச்கள் மற்றும் சர்வர்கள் இந்த IPv6 திட்டத்தினை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அப்கிரேட் செய்யப்பட வேண்டும்.

இல்லை எனில், இணைய தளங்களுக் கிடையேயான இணைப்பு பிரிந்து செயல்படும் வாய்ப்பு ஏற்படும். இந்திய இணைய பயனாளர்கள், இணையத்தில் ஒரு பகுதியினைப் பயன்படுத்த இயலா நிலை ஏற்படும்.

வீடுகளில் கம்ப்யூட்டர்கள் மூலம் இணைய இணைப்பு பெறுபவர்கள் இந்த மாற்றம் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. இதில் பயன்படுத்தப் படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் IPv6 திட்டத்துடன் இணைவாகச் செயல்படும் வகையிலேயே இருக்கின்றன.

வீடுகளில் பயன்படுத்தப் படும் மோடம் அப்கிரேட் செய்யப்படும் நிலையில் இருந்தால், இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் நிறுவனங்கள் அவர்களுக்கு எச்சரிக்கை செய்தியினை வழங்கும். இந்த மாற்றத்தினால் அதிக சிக்கல்களை எதிர்நோக்குபவர்கள், நிறுவனங்கள் மற்றும் மத்திய நிலையில் இயங்கும் சில குழுமங்களாகும். அரசைப் பொறுத்தவரை, அரசின் இணைய தளங்கள், நெட்வொர்க் சாதனங்கள் அனைத்தும் இதற்கென அப்டேட் செய்யப்பட வேண்டும்.

இல்லை எனில் மக்களுக்கு சேவை கிடைக்காது என இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனக் கூட்டமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கென இன்டர்நெட் சேவை நிறுவனங்கள், நெட்வொர்க் நிறுவனங்கள் மற்றும் அரசுக்குக் கூடுதல் மூலதன நிதி தேவைப்படும்.

விரைவில் அரசும் நிறுவனங்களும் விழித்துக் கொண்டு செயல் பட்டால், சிக்கலை, அது வரும் முன் எதிர்கொண்டு நாம் தயாராகிவிடலாம்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றைய செய்திகள்.

பிரிட்டனுக்கான மாணவர் விசா: 230 இலங்கையர்கள் கடந்த மாதம் மோசடி!

பிரித்தானியாவுக்கான மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தபோது கடந்த மாதம் மாத்திரம் 230 இலங்கையர்கள் மோசடிகள் செய்து இருக்கின்றார்கள்.பிரித்தானிய எல்லைக் காப்புப் படையினர் இம்மோசடிகளை கண்டு பிடித்து இருக்கின்றார்கள்.

போலியான ஆவணங்களை பயன்படுத்தி மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கின்றமையில் இலங்கையர்கள் மிகவும் முன்னிலை உள்ளார்கள் என்று பிரித்தானிய எல்லைக் காப்புப் படைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார். மோசடியில் கடந்த மாதம் ஈடுபட்ட இலங்கையர்களின் பெயர்கள், விபரங்கள் ஆகியவற்றை இலங்கைப் பொலிஸாருக்கு சமர்ப்பிக்க உள்ளனர் என்றும் இவர் கூறினார்.

கனடா போர்க்கப்பல் லிபியாவை நோக்கி விரைந்தது.

லிபிய அதிபர் கடாபியின் பதவி விலகலை கோரும் சர்வதேச நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இணங்க கனடாவும் தன்னுடைய அதிவிரைவு போர்க்கப்பலை லிபியாவுக்கு அனுப்பியுள்ளது.
இது குறித்து பிரதமர் ஹார்ப்பர் கூறுகையில்,"இன்று போர்க்கப்பல் கிளம்பி 6 நாட்களில் 240 வீரர்களுடன் லிபிய கடல் எல்லைக்குள் நுழையும்" என்றார். கனடிய மக்களை லிபியாவிலிருந்து வெளியேற்ற வேண்டிய உதவிகளை இக்கப்பல் செய்யும்.
பாதுகாப்பு துறை அமைச்சர் பீட்டர் மெக்கே கூறியதாவது: நோட்டோவோ மற்றும் ஐக்கிய நாடுகளோ லிபியாவை முற்றுகையிட முடிவு செய்யுமானால் அப்பணிகளிலும் இக்கப்பல் உதவியாக இருக்கும் என்றார்.
மேலும் கனடா துருப்புகள் 13 பேர் பணி புரிவதாகவும், அவர்கள் கனடாவைச் சேர்ந்த 100 லிருந்து 200 பேர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ஒத்துழைப்பார்கள் என்றும் தெரிவித்தார். கனடா துருப்புகள் இப்போதுள்ள நிலையில் எந்த இராணுவ நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்றும் தன் நாட்டவரை பத்திரமாகவும், விரைவாகவும் அங்கிருந்து வெளியேற்றுவதே முக்கிய நோக்கம் என்றும் கூறினார்.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மக்கள் போராட்டங்களுக்கு கனடாவின் மிதமான அணுகுமுறை விமர்சனங்களுக்குள்ளானது. அதன் பின் கனடா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் படி கடாபியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் பயணத் தடையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோஸ்னி முபாரக் வெளிநாடு செல்லத் தடை.
எகிப்தில் அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் ஓட்டெடுப்பு, அதிபர் பதவிக்கு தேர்தல் நடக்கும் தேதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே சமயம் முபாரக் குடும்பத்தினர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எகிப்தில் சமீபத்தில் அரசியல் சாசனத்தின் 11 பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதிபரின் பதவிக் காலத்தைக் குறைப்பது, அவசர நிலைச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட முக்கியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து முன்பு முபாரக்கை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கூட்டணி என்ற அமைப்பின் ஜாயத் எல் எலய்லி என்பவர் இரு நாட்கள் முன்பு ராணுவ உயர் மட்டக் கவுன்சிலின் மூன்று உறுப்பினர்களைச் சந்தித்தார்.
அதன் பின் அவர் அளித்த பேட்டியில்,"அரசியல் சாசனத் திருத்தம் பற்றிய பொது ஓட்டெடுப்பு மார்ச் 19 ம் தேதியும், பார்லிமென்ட்டுக்கான தேர்தல் ஜூன் மாதமும் அதில் இருந்து ஆறு வாரங்கள் கழித்து அதிபர் தேர்தலும் நடக்கும் என்று என்னிடம் கூறினர்" என்று தெரிவித்தார்.
எனினும் இது குறித்து ராணுவக் கவுன்சில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. இதற்கிடையில் சமீபத்தில் முன்னாள் அதிபர் முபாரக்கின் மனைவி சூசன்னே மற்றும் இளைய மகன் கமால் இருவரும் தற்போது முபாரக் தங்கியுள்ள சினாய் தீபகற்பத்தின் ஷரம் எல் ஷேக் விமான நிலையத்தில் இருந்து தனியார் விமானம் ஒன்றின் மூலமாக வெளிநாடு செல்ல முற்பட்டனர்.
அப்போது எகிப்து அதிகாரிகள் அரசின் அனுமதியின்றி வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என்று தடுத்து விட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் எகிப்து அரசுத் தரப்பு வக்கீல் முபாரக் மற்றும் அவரது குடும்பத்தார் வெளிநாடு செல்லத் தடை விதித்தும், எகிப்தில் உள்ள முபாரக்கின் சொத்துக்களை முடக்கியும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
மக்களுக்கு போதை மருந்து வழங்கல்: கடாபி திடுக்கிடும் தகவல்கள்
லிபியாவில் கடாபிக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளன.அது மட்டுமின்றி வீதிகளில் பிணங்கள் கேட்பாரற்று கிடக்கிறது என்கிற செய்தி வரும் வேளையில் மக்கள் என்மீது அன்பாக உள்ளனர். எனக்காகத்தான் உயிர் துறக்கின்றனர் என்று பேட்டியளித்துள்ளார் கடாபி.
கடந்த 41 ஆண்டுகளாக அதிபராக இருந்து வரும் கடாபி எதிரான போராட்டத்தை அடக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்காவும், ஐ.நா.சபையும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந் நிலையில் அதிபர் கடாபி திரிபோலியில் வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: லிபியா மக்கள் அனைவரும் என் மீது அன்பாக உள்ளனர். அனைத்து தெருக்களிலும் எனக்கு எதிராக போராட்டம் நடைபெறவில்லை. அவர்கள் ஏன் என்னை எதிர்க்க வேண்டும். அனைத்து மக்களும் என் மீது அன்பாக இருக்கின்றனர். என்னை காப்பாற்றவே தங்கள் இன்னுயிரை துறக்கின்றனர்.
நான் எனது நாட்டை விட்டும், அன்பான மக்களை விட்டும் வெளியேற மாட்டேன். நான் ஏன் எனது தாய்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். போராட்டம் நடைபெறுவதற்கு அல்குவைதாதாவே காரணம். மக்களுக்கு போதை மருந்துகளை கொடுத்து எனக்கு எதிராக கிளப்பி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வித்தியாசமான உணவுகள் - நியூசிலாந்தில் நடைபெறும் காட்டு உணவுத் திருவிழா.
நியூசிலாந்தின் ஹொகிடிகா நகரில் வருடந்தோறும் காட்டு உணவுத் திருவிழா நடைபெறுகின்றது. இது 'ஹொகிடிகா காட்டு உணவுத்திருவிழா' என அழைக்கப்படுகின்றது. இங்கு பல வித்தியாசமான உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. நத்தைக் கறி, ஆட்டின் மூளை கறி, ஆட்டின் வால் கறி, பசுக் கன்றுகளின் உடல் உறுப்புக்களின் கறி, கடல் அட்டைக் கறி, மண்புழுக் கறி ஆகியன அங்கு பரிமாறப்படுபவற்றில் சிலவாகும்.



ஓமனில் போராட்டம் தொடர்வதால் பீதி!

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில், அரசுக்கு எதிரான போராட்டம் நேற்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது. நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் ஆறு பேர் பலியாயினர்.இதனால், அரபு நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன. டுனீசியா, எகிப்து, ஏமன், லிபியா, பக்ரைன், ஜோர்டான், சிரியா, மொராக்கோ, அல்ஜீரியா என அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நாடுகளின் வரிசையில் தற்போது, எண்ணெய் வளம் மிக்க நாடான ஓமனும் சேர்ந்துள்ளது.

அந்நாட்டை கடந்த 40 ஆண்டுகளாக கபூஸ் பின் சயீத் ஆண்டு வருகிறார். ஓமனில் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. கடந்த 26ம் தேதி, அந்நாட்டின் தொழில் நகரமான சோகாரில் நூற்றுக்கணக்கானோர் சம்பள உயர்வு, ஊழல் ஒழிப்பு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், ஊழல் அமைச்சர்களை பதவி நீக்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் இறங்கினர்.

போலீசார் இப்போராட்டத்தை தடியடி உள்ளிட்ட வழக்கமான "கவனிப்புகள்' மூலம் கலைத்து விட்டனர். ஏற்கனவே அரபு பிராந்தியத்தில் போராட்டம் நெருப்பாக பரவி வருவதால், பீதியடைந்த மன்னர் சயீத், உடனடியாக அமைச்சரவையில் இருந்து ஆறு அமைச்சர்களை நீக்கினார்.

ஆனால், நேற்று முன்தினமும் போராட்டம் தொடர்ந்தது. போலீசார் ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். இச்சம்பவத்தில் ஆறு பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், சுகாதாரத் துறை அமைச்சர் அகமது பின் முகமது அல் சயீத், "துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை; ஒருவர் மட்டுமே பலியானார்' என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் சோகாருக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. நேற்று, சோகாரில் உள்ள பிரதான சந்தைப் பகுதி கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. அந்நகரைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். எனினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க முற்படவில்லை. எண்ணெய் ஏற்றுமதி பாதிக்குமா?  "பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பில்' (ஓபெக்) ஓமன் இல்லை என்றாலும், உலகின் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் 24வது இடத்தில் உள்ளது.

ஒரு நாளைக்கு 8,50,000 பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் குறிப்பிடத்தக்க நாடு அது. அதன் முக்கியத் துறைமுகமான மினா அல் பஹல் வழியாக, எண்ணெய் ஏற்றுமதி நடக்கிறது. ஓமன் துறைமுகங்களின் வழியாகத் தான் உலகின் 40 சதவீத எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்து நடந்து வருகிறது.

சோகார் துறைமுகம் வழியாக ஒரு நாளைக்கு 1,60,000 சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பேரல்கள் கையாளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், "சோகார் துறைமுகம் வழியாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதி தொடர்ந்து நடக்கிறது.

போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் தான் போராடுகின்றனர். எனினும் போராட்டங்கள் தொடர்ந்தால், துறைமுகப் பணிகளுக்குச் செல்வோர் தடுக்கப்பட்டால் ஏற்றுமதி நிச்சயம் பாதிக்கப்படும்' என்று சோகார் துறைமுக செய்தித் தொடர்பாளர் கவலை தெரிவித்தார்.

பதற்றத்தில் லிபியா! எந்த நேரத்திலும் உக்கிர மோதல் வெடிக்கலாம்.

லிபியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜாவியா மற்றும் மிஸ்ரட்டா நகரங்களில் நேற்று, கடாபி ராணுவத்துக்கும், எதிர்ப்புப் படைகளுக்கும் இடையில் பயங்கர மோதல் நடந்தது. இதில் 10 பேர் பலியாயினர். 

இதற்கிடையில், லிபியாவைச் சுற்றியுள்ள தனது படைத் தளங்களில், கப்பல்படை மற்றும் விமானப் படைகளை அமெரிக்கா தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும் "நேட்டோ' கூட்டணி நாடுகளுடன் ராணுவ நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறது.லிபியாவில் அதன் தலைவர் மும்மர் கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தற்போது பெரும் மோதலாக வெடித்துள்ளது. 

நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ராணுவம் பொதுமக்களோடு சேர்ந்துள்ள நிலையில், மேற்குப் பகுதி ராணுவம் மட்டும், கடாபிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.இந்த ராணுவம், கடாபியின் மகன் கமீஸ் என்பவரின் கீழ் இயங்கி வருகிறது. 

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன ரக ஆயுதங்கள் இதன் வசம் இருப்பதால் மிகவும் சக்தி வாய்ந்ததாக இந்த ராணுவம் கருதப்படுகிறது.இதுதான் தற்போது கடாபிக்கு ஆதரவாகச் செயல்பட்டு, டிரிபோலியை தன் வசம் பிடித்து வைத்துள்ளது. நேற்று முன்தினம், டிரிபோலியில் இருந்து 50 கி.மீ., மேற்கில் உள்ள ஜாவியா நகரை, எதிர்ப்புப் படைகள் கைப்பற்றிய நிலையில், அந்நகரை 2,000 கடாபி ராணுவ வீரர்கள் முற்றுகையிட்டனர். 

ஜாவியா நகரில் மோதல்: ஜாவியா நகர் அருகில் உள்ள அஜ்தாபியா என்ற இடத்தில், எதிர்ப்புப் படையினர் கைப்பற்றிய வெடிபொருள் கிடங்கின் மீது கடாபி ராணுவம் குண்டு வீசி அழித்தது. இந்த கிடங்கில் குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் பல்வேறு வெடிபொருட்கள் இருந்தன. குண்டு வீச்சில் கிடங்கின் பாதிப் பகுதி சேதம் அடைந்தது.

ஆனால் லிபிய பாதுகாப்பு அமைச்சகம், இந்தத் தாக்குதல் நடக்கவில்லை என்று மறுத்துள்ளது. தொடர்ந்து இருதரப்புக்கும் கடும் மோதல் வெடித்தது. இதில் எதிர்ப்புப் படைகள் தீவிரமாகப் போரிட்டு கடாபி ராணுவத்தை முறியடித்தன.ஜாவியா நகரைச் சேர்ந்த ஒருவர் இந்த மோதல் பற்றிக் கூறுகையில்,"இந்தப் பகுதியின் செல்வாக்கு மிகுந்த பழங்குடியினத் தலைவர் முகமது அல் மக்துப்பிடம் பேசிய கடாபி, இன்று காலைக்குள் (நேற்று) எதிர்ப்புப் படைகள் ஜாவியாவை விட்டு போகாவிட்டால், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டியுள்ளார். 

நாங்கள் துணிந்து விட்டோம். அந்தப் போரைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று தெரிவித்தார்.ஜாவியா நகர் போரில், கடாபி ராணுவத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாயினர். ஆனால் எதிர்ப்புப் படையினரில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதை லிபிய அரசுத் தரப்பும் உறுதிப்படுத்தியது. 

மிஸ்ரட்டாவில் மோதல்:அதேபோல், மிஸ்ரட்டா நகரில் உள்ள ராணுவ விமான தளத்தை கடாபி ராணுவம் கைப்பற்றியது. ஆனால், எதிர்ப்புப் படைகளின் அதிரடி போரால் அந்த விமான தளத்தில் இருந்து கடாபி ராணுவம் பின் வாங்க வேண்டியதாகி விட்டது. விமான தளம், எதிர்ப்புப் படையினர் வசம் வந்தது.டிரிபோலி அருகிலுள்ள சப்ரத்தா நகரை கடாபி ராணுவம் கைப்பற்றியது. ஆனால் அங்கிருந்த மக்கள், போலீஸ் நிலையம் ஒன்றை தீக்கிரையாக்கி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து மக்கள் கூட்டம் போலீசாரால் கலைக்கப்பட்டது. 

"மக்கள் என்னை நேசிக்கின்றனர்':நேற்று முன்தினம் "ஏ.பி.சி.,' செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மும்மர் கடாபியிடம், அவர் பதவியை விட்டு விலகுவாரா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது பலமாகச் சிரித்துக் கொண்டே கூறியதாவது: லிபியாவின் அனைத்து மக்களும் என்னை நேசிக்கின்றனர்; என்னைக் காப்பதற்காக அவர்கள் தங்களையே பலி கொடுப்பர்; எனக்கு எதிராக யாரும் செயல்படவில்லை; பதவி விலகுவதற்கு நான் ஒன்றும் மன்னரோ, அதிபரோ அல்ல. 

நான் இருப்பது ஒரு கவுரவமான பதவி. என்னிடம் அதிகாரம் ஒன்றும் இல்லை. பிரிட்டனில், யாரிடம் அதிகாரம் உள்ளது? ராணி எலிசபெத்திடமா? பிரதமர் டேவிட் கேமரூனிடமா?வெளிநாட்டவரால் லிபியா அரசியலைப் புரிந்து கொள்ள முடியாது. இங்கு அதிகாரம் முழுவதும் மக்களிடம் தான் உள்ளது.மேற்கத்திய நாடுகள், லிபியாவை மீண்டும் காலனி நாடாக்க விரும்புகின்றன. 

அதனால் தான் அவை லிபியாவைக் கைவிட்டு விட்டன. அல் குவைதாவை எதிர்ப்பதற்காக நான் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்தேன்.இப்போது எங்களை கைவிட்டு விட்ட பயங்கரவாதிகளை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம். நான் வெளிநாடுகளில் பணம் வைத்திருப்பதாக பிரிட்டன் பிரதமர் கூறுகிறார். 

அப்படியானால் அவர் ஒரு ஆதாரத்தையாவது காட்டட்டுமே! நான் அவர்களின் கண்களில் விரல்களை விட்டு ஆட்டி விடுவேன்.அல் குவைதா கொடுத்த போதை மருந்துகளை உண்டதால் தான், லிபிய இளைஞர்கள் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.இவ்வாறு கடாபி தெரிவித்தார்.அவரது பேட்டி குறித்து கருத்து தெரிவித்த 

ஐ.நா.,வுக்கான அமெரிக்கத் தூதர் சூசன் ரைஸ்,"அவரது பேட்டி வெறும் வாய்ச் சவடால்தான். இதில் இருந்தே அவர் உண்மை நிலவரத்தை விட்டு விலகியிருக்கிறார் என்பது வெளிப்பட்டு விட்டது' என்றார். 

ஊடுருவ அமெரிக்கா தயார்: இந்நிலையில் லிபியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமெரிக்கா தனது கப்பல் மற்றும் விமானப் படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. தேவைப்பட்டால், லிபியா மீது அமெரிக்க விமானங்கள் ரோந்து வரும். மேலும் "நேட்டோ' கூட்டணியில் உள்ள நாடுகளுடன், லிபியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்தும் அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. லிபியா மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படும் என்றும், மக்களைக் குண்டு வீசிக் கொல்லும் லிபிய ராணுவ விமானங்களை போர் விமானங்கள் மூலம் தாக்க நேரிடும் என்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் எச்சரித்துள்ளார். 

நேற்று பி.பி.சி., செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கடாபி, நாட்டின் மிகச் சிறிய பகுதியை மட்டுமே தனது பிடியில் வைத்திருப்பதாகவும், அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

அமெரிக்காவைத் தடுக்க வெனிசுலா முயற்சி: கடாபிக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தான் அவ்வாறு செய்யப் போவதில்லை என்று வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி அவர் அளித்த பேட்டியில்,"நான் அவரைக் கண்டனம் செய்யப் போவதில்லை. ஆனால், இந்த சூழலை சாக்காக வைத்துக் கொண்டு, அமெரிக்கா எந்நேரம் வேண்டுமானாலும், லிபியாவுக்குள் ஊடுருவ முயலும் என்று எச்சரிக்க மட்டுமே விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார். கடாபியுடனான அவரது நெருக்கத்துக்கு வெனிசுலா நாட்டு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன
.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, March 1, 2011

ஸ்கைப் மிகவிரைவில் Sony BRAVIA இனை அலங்கரிக்கவிருக்கின்றது



இணைய தொலைபேசிச் சேவையில் கொடிகட்டிப்பறக்கும் ஸ்கைப் மிகவிரைவில் சொனி நிறுவனத்தின் BRAVIA தொலைக்காட்சியில் நிறுவப்பட்டு வெளிவர இருக்கிறது.இந்த வரிசையில் இன்னுமொரு தொலைக்காட்சி நிறுவனமான VIZIO ன் Vizio VIA TV இலும் ஸ்கைப் நிறுவப்படும் எனஸ்கைப் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இவ்வாறு ஸ்கைப் நிறுவப்பட்ட Samsung மற்றும் Panasonic நிறுவனங்களின் தொலைக்காட்சிகள் சந்தையில் விற்பனைக்காக காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இலத்திரணியல் சாதணங்கலின் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் சோனி நிறுவனத்துடன் ஸ்கைப் செய்துள்ள இந்த கூட்டுமுயற்சியானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்பது நிச்சயமே.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

நிறைவுக்குவரும் Sony கெசட் walkman தயாரிப்பு [Japan]



sony நிறுவனத்தின் பழம்பெரும் தயாரிப்புகளில் ஒன்றான   சொனி வோக்மேன் (கெசட் போட்டு பாவிக்கும் வோக்மேன் மாத்திரம்)  வினியோகம் ஜபானில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகாலமாக ஜப்பான் மக்களை மகிழ்வித்து வந்த இந்த கெசட் வோக்மேன்களை இனி ஜப்பான் சந்தையில் காணப்படாவிட்டாலும் ஏனைய நாடுகளில் இது விற்பனை செய்யப்படும் என சொனி தெரிவித்துள்ளது..
படு பயங்கரமாக வழர்ந்து வரும் ஜபான் மக்களுக்கு கெசட் பாவனை இன்னமும் தேவைதானா என்று நினைத்தார்களோ என்னவோ.. இந்த முப்பது ஆண்டு காலப்பகுதியில் சோனி நிறுவனம் 200 மில்லியனுக்கு(அண்ணளவாக 200,020,000) மேலான வோக் மேன்களை சந்தையில் விற்பனை செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Google cloud connect : இனி அனைவரும் பயன்படுத்தலாம். கூகிளின் மற்றுமொரு தயாரிப்பு


கடந்த சில வாரங்களுக்கு முன் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் Office மென்பொருளிற்கும் Google Docs இற்கும் இடையில் கூகிள் ஒரு பாலத்தினை ஏற்படுத்தி அதனை குறிப்பிட்ட பாவனையாளர்களிற்கு மாத்திரம் வழங்கியிருந்தது. தற்போது அந்த வசதியானது இனி அனைத்து கூகிள் பாவனையாளர்களாலும் உபயோகப்படுத்தும் வகையில்வெளிவந்துள்ளது.
இந்த Google cloud connect இனை கணணியில் நிறுவிக் கொள்வதன் மூலம் எமது கூகிள் கணக்கில் காணப்படும் ஆவணங்களினை மைக்ரோ சொப்ட் office மென்பொருளினைப் பயன்படுத்தி தொகுக்கும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும் நாம் ஆவணங்களை தொகுக்கும் போது அவற்றை நேரடியாக எமது கூகிள் டொக்ஸ் கணக்கில் சேமிக்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
google doc save
இந்த Google cloud connect இனை உங்கள் விண்டோஸ் கணணியில் நிறுவ இந்த முகவரியினை க்ளிக் செய்து நிறுவிக் கொள்ளலாம். இந்த சேவையானது தற்போதைக்கு விண்டோஸ் இயங்கு தளத்திற்கு மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறு நிறுவிய பின்னர் Microsoft office இல் ஏதாவது ஒரு மென்பொருளினை திறந்து Sign in என்பதை க்ளிக் செய்து கூகிள் கணக்கினை லாகின் செய்வதன் மூலம் எமது ஆவணங்களினை கூகிள் டொக்ஸ் இல் சேமித்துக் கொள்ள முடியும்.
google doc
இந்த புதிய சேவையினை பயன்படுத்தி உங்கள் ஆவணங்களினை இணையத்தில் சேமித்து வைப்பதன் மூலம் எங்கும் எப்போதும் ஆவணங்களினை பயன்படுத்தும் வசதியினை பெற்றுக்கொள்ளுங்கள்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பொலிவியாவில் பலத்த மழை: 400 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன

தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. ரோடுகள் சேதமடைந்துள்ளன. இந்த மழைக்கு மலை பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் லா பாஷில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 400 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. இதனால் பலர் சேற்றுக்குள் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். மண்ணுக்குள் புதைந்து கிடப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் லாபாஷ் நகரில் இது போன்ற கடுமையான நிலச்சரிவு இதுவரை ஏற்பட்டதில்லை என கவர்னரின் செய்தி தொடர்பாளர் எட்வின் ஹெரேரா தெரிவித்துள்ளார்.கடந்த சில வாரங்களாக இங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இது வரை 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஐக்கிய அமெரிக்க நாட்டுப் படைகள் லிபியாவைச் சுற்றிவளைக்க உள்ளன: ஹிலாரி கிளிண்டன்


தரை மற்றும் கடல் வழியாக லிபியாவைச் சுற்றிலும் அமெரிக்கப் படைகளை நிறுத்த அந்நாடு தீர்மானித்துள்ளது.
அவசர நிலைமைகள் ஏற்படும் போது அதற்கு முகம் கொடுக்கத்தக்க வகையில் அவ்வாறு இராணுவம் நிலைப்படுத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.
லிபியாவின் உள்நாட்டு நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதும் அதன் இன்னொரு நோக்கம் என்று கூறப்படுகின்றது. ஆயினும் கடாபியை ஆட்சியிலிருந்து அகற்றும் நோக்குடன் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளவே அமெரிக்கப் படைகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
செங்கடல் அருகே அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பல்கள் நகர்த்தப்பட்டுள்ளதுடன், இத்தாலியின் சிசிலியா தீவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படைக் கமாண்டோக்கள் முகாமிட்டுள்ளனர்.
அவர்களுக்கென விசேட முகாம்கள் இரண்டும் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கிடையே லிபியாவைச் சுற்றியுள்ள வான்பரப்பை தடைசெய்யப்பட்ட வலயமாக அறிவிப்பது குறித்தும் அமெரிக்காவின் கவனம் திரும்பியுள்ளது.
அதன் மூலம் வான் வழியாக கடாபி வெளிநாட்டுக்குத் தப்பியோடுவதைத் தடுப்பது அமெரிக்காவின் நோக்கம் என்று கருதப்படுகின்றது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

புதிய அப்பிள் MacPro கணணிகள்.


நேற்றைய தினம் அப்பிள் நிறுவனம் தனது மடிக்கணணிகளின் புதிய வடிவங்களினை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மேம்படுத்தப்பட்ட Processor மற்றும் தண்டர்போல்ட் (ThunderBolt) தொழிநுட்பம் மற்றும் மேம்படுத்தப்ப வீடியோ க்ரெபிக்ஸ் ப்ரொசெசர்(video graphics processor) மற்றும் இன்னும் தெளிவான HD Camera என்பவற்றை குறிப்பிடலாம்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அப்பிள் நிறுவனத்தின்இணைய தளத்திலும் அதன் படங்களை இங்கேயும் காண்க..
overview_gallery
ports
facetime_fullscreen

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பெரிய கோப்பை பிரித்து பின் இணைக்க.


கோப்பு ஒன்றை இன்னொரு இடத்திற்கு அல்லது வேறு ஒரு கம்ப்யூட்டருக்குக் கொண்டு செல்ல திட்டமிடுகிறீர்கள்.
ஆனால் அது அளவில் மிகவும் பெரியதாக இருந்தால் பிளாஷ் ட்ரைவ் அல்லது வேறு மெமரி சாதனங்களில் பதிய இயலவில்லை. அந்த வேளையில் கோப்பை பிரித்துப் பின் அவற்றை இன்னொரு கம்ப்யூட்டருக்கு ஒவ்வொன்றாகக் கொண்டு சென்று பதியலாம்.
அனைத்து பிரிவுகளும் பதியப்பட்ட பின் மீண்டும் அதனை ஒரு முழுமையான கோப்பாக இணைக்கலாம். இதற்கு உதவிடும் புரோகிராமின் பெயர் HJSplit. இந்த புரோகிராம் இணையத்தில் இலவசமாக டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது.
இந்த புரோகிராம் பைலின் அளவு 100 ஜிபி க்கும் மேலாக இருந்தால் கூட அதனைப் பிரித்துப் பின் இணைக்கிறது. இதனை நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை. இணையத்தில் கிடைக்கும் இதன் ஸிப் பைலை டவுண்லோட் செய்து, HJSplit.exe என்ற இந்த பைலை கம்ப்யூட்டரில் உள்ள ட்ரைவில் பதிந்திடவும்.
இந்த எக்ஸிகியூடிவ் பைலின் மீது டபுள் கிளிக் செய்து இயக்குங்கள். இப்போது கிடைக்கும் Split பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் Input File என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் நாம் பிரிக்க விரும்பும் பைலைத் தேர்ந்தெடுக்க வசதி கிடைக்கும். பைலைத் தேர்ந்தெடுத்த பின்னர் Output என்ற பட்டனில் அழுத்தவும்.
அதன் பின்னர் எந்த ட்ரைவ் அல்லது போல்டரில் பிரிக்கப்படும் கோப்புகள் சென்றடைய வேண்டும் என்பதைக் குறிப்பிடவும். பின்னர் இவை எந்த அளவில் பிரிக்கப்பட வேண்டும் அல்லது எத்தனை பைல்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து Start பட்டனை அழுத்தவும். அதன் பின் கோப்புகள் பிரிக்கும் வேலை மேற்கொள்ளப்படும்.
கோப்புகள் பிரிக்கப்படுவதனை ஒரு பார் சட்டம் கீழாகக் காட்டும். நீங்கள் பிரிக்கும் கோப்பின் அளவைப் பொறுத்து இந்த பணி மேற்கொள்ளப்படும் காலம் அமையும். முடிவில் ஒரு சிறிய அறிவிப்பு தரப்படும்.
இதனை அடுத்து நீங்கள் குறிப்பிட்ட ட்ரைவ் அல்லது போல்டரில் பிரிக்கப்பட்ட கோப்பு துண்டுகள் இருப்பதனைக் காணலாம். இந்த கோப்புகளுக்கான பெயரில் 001, 002 என இவை துணைப் பெயர்களைக் கொண்டிருப்பதனைக் காணலாம்.
இதனை இணைப்பதும் எளிது. அவற்றை நீங்கள் கொண்டு செல்ல விரும்பும் கம்ப்யூட்டருக்குக் கொண்டு செல்லவும். மீண்டும் இதே HJSplit.exe பைலை இயக்கவும். File Join டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இப்போது Input File என்ற பட்டனில் அழுத்தவும். டயலாக் பாக்ஸில் 001 என்ற துணைப் பெயர் கொண்ட கோப்பு மட்டுமே காட்டப்படும். அந்த பைலைத் தேர்ந்தெடுக்கவும்.
தொடர்ச்சியான மற்ற கோப்புகள் தானாகத் தேர்ந்தெடுக்கப்படும். எனவே பிரிக்கப்பட்ட பைல்கள் அனைத்தும் ஒரே போல்டரில் இருக்கு மாறு வைத்திடவும். அடுத்து Output பட்டனை அழுத்தி இணைக்கப்படும் பெரிய கோப்புகள் எங்கு பதியப்பட வேண்டும் என்பதனைக் குறிப்பிடவும். இவற்றை எல்லாம் முடித்த பின்னர் Start பட்டனை அழுத்தவும்.
இப்போது இணைக்கும் வேலை தொடங்கும். மீண்டும் ஒரு ஸ்டேட்டஸ் பார் ஒன்று கீழாகக் காட்டப்பட்டு எந்த அளவில் பிரிக்கப்பட்ட கோப்புகள் இணைக்கப்பட்டுள்ளன என்று காட்டப்படும். கோப்பு துண்டுகள் இணைக்கப்பட்டவுடன் வேலை முடிந்துவிட்டதற்கான அறிவிப்பு செய்தி காட்டப்படும்.
இதற்கான HJSplit என்ற அப்ளிகேஷன் கோப்பை பெற http://www.hjsplit.org/என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லவும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

விவாதிப்பதற்கு ஒரு இணையம் இருந்தால்.


அதிகம் பேசுபவர்களை விட்டு விடுங்கள். எதற்கெடுத்தாலும் எதிர்மறையாகவே கருத்து சொல்பவர்களையும் விட்டுத்தள்ளுங்கள். ஆனால் எந்த ஒரு பொருள் குறித்தும் மற்றவர்களின் கருத்தை அறிய முடிவது நல்ல விடயமே.
நண்பர்களோ, தெரிந்தவர்களோ அல்லது அறிமுகம் ஆகாதவர்களோ யாராக இருந்தாலும் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் நாம் நினைப்பதிலிருந்து மாறுபட்ட கருத்துக்களை முன் வைப்பதோடு குறிப்பிட்ட அந்த பொருள் குறித்து நமக்கு தோன்றாத அல்லது நாம் நினைத்து பார்த்திராத கருத்துக்களை எல்லாம் அறிந்து கொள்ள முடியும்.
தான் பிடித்த முயலுக்கு மூனே கால் என்று இருப்பதை விட மாற்று கருத்துக்களை தெரிந்து கொள்வது பல விதங்களில் பயனுள்ளதே. பிறருடன் விவாதிப்பதை விட இதற்கு சிறந்த வழி வேறில்லை. விவாதங்கள் நல்லது. விவாதிக்க நானும் தயார் என்று நீங்கள் நினைத்தால் அதற்காக என்றே அழகான ஒரு இணையதளம் இருக்கிறது.
திஸ்.இஸ் என்னும் அந்த தளத்தில் எந்த தலைப்பு குறித்தும் சுலபமாக விவாதிக்கலாம். எந்த விஷயம் குறித்து நீங்கள் விவாதிக்க விரும்புகிறீர்களோ அதற்கான பக்கத்தை இந்த தளத்தில் உருவாக்கி கொண்டு உங்கள் மனதில் உள்ள கருத்தை தெரிவிக்கலாம்.
விவாதத்திற்கான பக்கத்தை அமைப்பது மிகவும் சுலபம். பெயரையும், இமெயில் முகவரியையும் பதிவு செய்து விட்டு விவாதத்துக்கான தலைப்பை குறிப்பிட்டு விவாதத்திற்கான கருத்தை குறிப்பிட்டால் போதுமானது.
அதன் பிறகு இணையவாசிகள் யார் வேண்டுமானாலும் அந்த கருத்தை வெட்டியோ ஆதாரித்தோ த‌ங்கள் கருத்தை பதிவு செய்யலாம். அதற்கு நீங்கள் பதில் தெரிவிக்கலாம். வேறு ஒருவர் அதற்கு தன் கருத்தை பதிவு செய்ய‌லாம். இப்படியாக தொடர் பரிமாற்றமாக கருத்துக்கள், மாற்று கருத்துக்கள் பதிவாகி கொண்டே இருக்கும்.
நாம் நினைத்தை மாற்றி கொள்ள வைக்காவிட்டாலும் மற்றவர்களின் கோணங்கள் மற்றும் பார்வைகள் புதிய புரிதலை ஏற்படுத்தக்கூடும். சில நேரங்கள் மாற்று கருத்துக்கள் நம்முடைய கருத்து மேலும் வலுப்படவும் உதவலாம். அந்த வகையில் இந்த தளம் ஒருவருடைய கருத்துக்களை பட்டை தீட்டிக்கொள்ளவும், புரிதலை அதிகமாக்கி கொள்ளவும் கை கொடுக்கும்.
இணையத்தின் ஆதார பண்பே விவாதத்திற்கு வழி வகுப்பது தான் என்னும் போது விவாதிப்பதற்காகவே ஒரு தளம் இருப்பது திறந்த மனம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அதோடு இந்த தளத்தின் எளிமையான வடிவமைப்பு விவாதிப்பதை மேலும் சுலபமாக்குகிறது.
ஆனால் ஒன்று இந்த தளம் இப்போதைக்கு அறிமுக நிலையிலேயே இருக்கிறது. விவாதுப்பதற்கும் கருத்து சொல்லவும் ஆர்வம் கொண்ட ஆதரவாளர்கள் வட்டத்தை உருவாக்க முடிந்தாலே இந்த தளம் உண்மையில் பயனுள்ளதாக இருக்கும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றைய செய்திகள்.


நடுவானில் நேருக்கு நேர் மோதி வெடித்துச் சிதறிய கிபிர் விமானங்கள்!

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான கிபிர் ஜெட் விமானங்கள் இரண்டு காலையில் நடுவானில் நேருக்கு நேர் மோதி வெடித்துச் சிதறின. இவை கம்பஹா மாவட்டத்தில் வரண என்கிற இடத்துக்கு அருகில் வீழ்ந்தன. விமானப் படையின் அறுபதாவது ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கான ஒத்திகைகளில் ஈடுபட்டபோது 9.30 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்று உள்ளது. 

இவ்விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இருந்தன. ஒவ்வொரு விமானத்தையும் ஒவ்வொரு விமானி செலுத்தி இருக்கின்றார். விபத்து நேருகின்றமைக்கு முன்பாகவே விமானிகள் பரசூட் மூலமாக வெளியில் பாய்ந்து உயிர் தப்பி இருக்கின்றனர். 

இவர்களை தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்று விமானப் படை பேச்சாளர் தெரிவித்து உள்ளார். விமானங்கள் நொருங்கி வீழந்த இடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேரில் சென்று பார்வை இட்டார். விபத்துக்கான காரணி குறித்து புலனாய்வு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இலங்கை மக்களை தேங்காய்த் திருடர்களாக மாற்றும் மஹிந்த அரசு! பொன்சேகா கிண்டல்

அரசு கூறும் ஆசியாவின் ஆச்சரியம் அம்பாந்தோட்டைக்கு மாத்திரமே - இலங்கை மக்கள் தேங்காய்த் திருடர்களாக மாறி வருகின்றனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று தெரிவித்தார். 

வெள்ளைக் கொடிகளுடன் படையினரிடம் சரண் அடைந்த புலிகள் இயக்க தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக சன் டே லீடர் பத்திரிகைக்கு சரத் பொன்சேகாவால் வழங்கப்பட்டது என கூறப்படும் பேட்டி   தொடர்பான வழக்கு காலையில் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்றது. 

இவ்வழக்குக்கு  ஆஜராகிவிட்டு நீதிமன்றிலிருந்து வெளியே வந்த சரத் பொன்சேகா நீதிமன்ற வளாகத்தில் அவரைச் குழுமியிருந்த ஊடகவியலாளர்கள், மக்கள் ஆகியோரிடம் மேற்கண்டவாறு கூறினார்.ஒரு வேளை உணவுக்காக மக்களைத் தேங்காய்த் திருடர்களாக அரசு மாற்றி உள்ளது என்றும் அவர் சொன்னார்.

லிபியாவில் இருந்து படகு மூலம் கிறீஸ் நாட்டுக்கு தப்பி சென்ற இலங்கையர்களில் 16 பேர் மாயம்!

லிபியா நாட்டில் இருந்து  உயிர் தப்பி கிறீஸ் நாட்டுக்கு சென்ற இலங்கையர்கள் 36 பேரில் 16 பேர் மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளார்கள். லிபியாவில் அரசுக்கு எதிரான போராட்டக்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் வம்முறைகள் வெடித்து உள்ளன.

இந்நிலையில் லிபியாவில் உணவு விடுதி ஒன்றில் வேலை செய்து வந்த இலங்கையர்கள் 36 பேர் படகு 
மூலம் கிறீஸ் நாட்டை  சென்று அடைந்தனர்.ஆனால் இவர்களில் 16 பேர் காணாமல் போய் உள்ளனர்.

முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவை சீனக் கம்பனிக்கு விற்ற அரசு!

முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கவின் சிலை கொழும்பு காலிமுகத் திடலில் இருந்து அகற்றப்பட மாட்டாது, அரசின் மேல் நம்பிக்கை இருக்கின்றது என்று தெரிவித்து உள்ளார் அவரின் புதல்வியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநயக்க குமாரதுங்க. 

இராணுவ தலைமையகத்துக்கு சொந்தமாக காலிமுகத் திடலில் உள்ள காணி சீன நாட்டு நிறுவனம் ஒன்றால் ஹோட்டல் நிர்மாணப் பணிகளுக்கென வாங்கப்பட்டு உள்ளது. ஓரிரு மாதங்களில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. ஆனால் எஸ்.டபிள்யூ. ஆர். டி.பண்டாரநாயக்கவுக்கு எழுப்பப்பட்டு இருக்கும் சிலையும் இக்காணியில்தான் அமைந்து உள்ளது. 

இந்நிலையில் பண்டாரநாயக்க சிலையையும் சேர்த்து சீன கம்பனிக்கு அரசு விற்று விட்டது என்று குற்றஞ்சாட்டி உள்ளது எதிர்க்கட்சி. ஆனால் அரசின் மீது நம்பிக்கை இருக்கிறது, சிலை அகற்றப்பட மாட்டாது என்று கூறி உள்ளார் சந்திரிகா.

இலங்கையின் வட கடல் ஊடாக படையெடுக்க தயாராகும் புலிகள்! 'லக்பிம' பத்திரிகை அதிரடித் தகவல்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அணி ஒன்று இலங்கையின் வட பகுதிக் கடல் ஊடாக படை எடுத்து அடுத்த கட்ட ஈழப் போரை நடத்த உள்ளது என்று 'லக்பிம' வாரப் பத்திரிகை கட்டுரை ஒன்றை பிரசுரித்து உள்ளது. . 

அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு இருப்பவை வருமாறு:- 

"கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்கு சென்றுள்ள விடுதலைப்புலிகளின் படையணிகள் ஓரணி சேர்கின்றன. ஓரணி சேர்ந்த பின்னர் வடபகுதி கடற்கரை ஊடாக படை எடுக்க உள்ளன. அடுத்த கட்ட ஈழப் போர் இப்படையெடுப்புடன் இடம்பெறும் என்று புலம்பெயர் நாடுகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைக்கின்றன. தென்சூடான் போன்று ஒரு தனி நாட்டை உருவாக்க புலம் பெயர் தமிழ் சமூகம் முற்படுகின்றது. 

புலம்பெயர் தமிழ் சமூகத்தினரின் நிதி உதவிகளைப் பெற்றுக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகள் அதிதீவிரமாக செயல்பட்டு வருகின்றன. புலிகள் கனடாவைப் பிரதான தளமாக பயன்படுத்தக் கூடும். 

எம்.வி.சன்.சி கப்பலில் கனடா வந்திருப்பவர்களின் அநேகர் இலங்கையின் இறுதி யுத்தத்தில் தப்பிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பின்ர்கள் என்று க்னேடிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். விடுதலைப் புலிகளின் கனிஷ்ட தளபதிகள் ஏராளமானோர் கனடா சென்றுள்ளனர் என்று சிஇலங்கைப் புலனாய்வுத்துறையினர் தெரிவித்து உள்ளனர். 

கனடா 250,000 தமிழ் மக்களை கொண்டு உள்ளது. இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஊடாக விடுதலைப் புலிகளை தப்பிச் சென்று இருக்கின்றார்கள். பிரதானமாக தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் ஊடாகவே பல படை அணிகள் தப்பிச் சென்று உள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இரண்டு கப்பல்களில் 600 இற்கு மேற்பட்டோர் புலிகள் ஏற்கனவே கனடாவுக்கு தப்பிச் சென்று உள்ளனர். 

நிதி திரட்டும் பணிகள் நிறைவடைந்தமையுடன் இராணுவ கட்டமைப்பு நடவடிக்கைகளை புலிகள் ஆரம்பிப்பார்கள். தற்போது பல அரசியல் நகர்வுகள் அனைத்துலக மட்டத்தில் புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்படுகின்றனதான். ஆனால் இராணுவ நடவடிக்கையையே புலம்பெயர் தமிழ் சமூகம் விரும்புகின்றது என இலங்கை புலனாய்வுத் துறை தெரிவிக்கின்றது. புலிகள் முதலில் கொரில்லாத் தாக்குதல்களை நடத்தக் கூடும். 

ஆனால் அவர்கள் எப்போது, எப்படி, என்ன தாக்குதல்களை ந்டத்துவார்கள் என்பதை கள நிலைம், சுழ்நிலை ஆகியனவே தீர்மானிக்கும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக படையினரை இலங்கை அரசு குவித்துள்ளது. எனவே தென்னிந்தியாவில் வைத்துதான் போராளிகளை விடுதலைப்புலிகள் தயார்படுத்தக் கூடும்.தாக்குதல்களுக்கான திட்டங்களும் அங்கிருந்தே வகுக்கப்பட உள்ளன. 

விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் தற்போதும் அதிக ஆதரவுகள் உண்டு. தமிழகத்தின் காடுகளில் விடுதலைப்புலிகள் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர் என்று இந்திய புலனாய்வுப் பிரிவும் தகவல் வெளியிட்டு உள்ளது. விடுதலைப்புலிகளின் நிதிப் பிரிவும், வான் படையும் தமிழ் நாட்டில் பிரவேசித்து உள்ளன. விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படைகளும் அங்கு தயார் நிலையில் காத்திருக்கின்றன.

லிபியாவில் போராட்டக்காரர்களிடம் 3-வது நகரம் வீழ்ந்தது: கடாபிக்கு அமெரிக்கா எச்சரிக்கை.
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. போராட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் ராணுவத்தின் ஒரு பிரிவினர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பென்காசி உள்ளிட்ட 2 நகரங்கள் போராட்டக்காரர்கள் பிடித்தனர்.

அதன் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது, “மிசுரதா” என்ற 3-வது நகரத்தையும் போராட்டக்காரர்கள் பிடித்துள்ளனர். இது தலைநகர் திரிபோலியில் இருந்து சுமார் 200 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த நகரத்தை விட்டு அதிபர் கடாபியின் ஆதரவு படைகள் ஓடிவிட்டன. இந்த நகரின் சிறு பகுதி மட்டுமே ஆதரவு ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.

இதையொட்டியுள்ள பாப் ஆல்- அஷிஷியா நகரமும் போராட்டக்காரர்கள் வசம் செல்லும் நிலை உள்ளது. எனவே, அதை காப்பாற்றிக் கொள்ள கடாபி தனது டாங்கி படைகளை அரண்போல் நிறுத்தி வைத்துள்ளார். இதுவரை லிபியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 2000-க்கும் மேற்பட்டவர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

வன்முறையை முடிவுக்கு கொண்டு வருமாறு அதிபர் கடாபியை 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. மேலும், கடாபி அரசுக்கு ஆயுதத்தடை விதித்தும், கடாபியின் சொத்துக்களை முடக்கியும், அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை தடை செய்யும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போராட்டத்தின்போது கடாபி அரசால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் விசாரிக்கவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிபர் கடாபி லிபியாவை விட்டு விரைவில் வெளியேற வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, அதிபர் கடாபியின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். எனவே, அவர் மேலும் ரத்தம் சித்தாமல், வன்முறையை கைவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் பேர் லிபியாவில் இருந்து துனிசியாவுக்கு சென்றுவிட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் எகிப்தை சேர்ந்தவர்கள். இந்த தகவலை அந்நாட்டு பத்திரிகை தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் நாடாளுமன்றம் முற்றுகை.
பஹ்ரைனில் அரசு நிர்வாகத்துக்கு எதிராகப் போராடி வரும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டின் நாடாளுமன்றத்தை இன்று முற்றுகையிட்டனர்.
சன்னி முஸ்லீம்களையும், சன்னி அரசகுடும்பத்தாரையும் எதிர்த்து போராடும் ஷியா முஸ்லீம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யும் படி கேட்டுக் கொண்டனர். மத்திய மனாவில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் முன்பு கூடியுள்ள 500 பேர் கொண்ட போராட்டக் குழுவினரில் ஒருவரான மிர்சா அல் சிகாபி நாங்கள் இந்தப் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வந்தது எங்களை பிரதிநிதித்துவபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளத் தான்.
இராணுவத்தினர் சுட்டுக் கொன்றவர்களின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார். வெளிநாடுகளைச் சேர்ந்த சன்னி முஸ்லீம்களுக்கு இராணுவம், காவல் துறையில் பணியிடங்கள் தரப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பலவித சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஷியா முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்புகள் தராததையும், மருத்துவ உதவிகளும் மற்ற சலுகைகளும் தங்களுக்கு மறுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏமன், பாகிஸ்தான் மற்றும் ஜோர்டன் நாட்டினர் காவல்துறையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால் எங்கள் குழந்தைகளுக்கோ வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எதுவும் செய்யாத பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உம் ஜாசர் என்பவர் கூறினார்.
பஹ்ரைன் ஆட்சியாளர்களும் அமைதியாக போராட்டங்கள் நடத்தவும், பேச்சு வார்த்தைக்கு இசைவு தெரிவித்தும் உள்ளனர். சென்ற ஆண்டு கைது செய்யப்பட்ட 300 பேரை விடுதலை செய்தும் 4 புதிய அமைச்சர்களை நியமித்தும் மன்னர் உத்தரவிட்டிருந்தார்.
பேர்ல் ஸ்கோயர் மனாமா நீதிமன்ற வளாகப்பகுதிகளில் அரசு எதிர்ப்பாளர்கள் போராட்டம் தொடர்கிறது. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஆதரவு தரப்பினரும் தெருக்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.
பிரிட்டனில் விற்கப்படும் சிம்பன்ஸி குரங்குகளின் இறைச்சி.
பிரிட்டனின் சில இடங்களில் சட்ட விரோதமாக சிம்பன்ஸி குரங்குகளின் இறைச்சி விற்கப்பட்டு வருகின்றது.
மிட்லேன் பிரதேச சந்தைகளில் புஷ்மீட் என்ற பெயரில் இது விற்கப்படுகின்றது. விஷேட வைபவங்களுக்கு விஷேட இறைச்சியை வாடிக்கையாளர்கள் கேட்கின்ற போது இவை வழங்கப்படுகின்றன.வர்த்தக தரப்படுத்தலின் போது அதிகாரிகள் சில கடைகளைச் சுற்றி வளைத்த போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. முன்னர் எலி மாமிசம் விற்கப்பட்டமை அகற்றப்பட்டுள்ளது.
ஆனால் அதை விட இது அதிர்ச்சியாக உள்ளது. இது மிகவும் அரியது. இது ஆப்பிரிக்கச் சந்தைகளில் கூட கிடைப்பதில்லை என்று அதிகாரிகள் கூறினர்.4 கிலோ எடை கொண்ட ஒரு குரங்கை 85 பவுணுக்கு விற்கக் கூடியதாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களாக வெப்பமற்ற அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு.
68 வயதான பெண்மணி ஒருவரை அவருடைய மகனும், மருமகளும் சேர்ந்து சிறிதும் வெப்பமற்ற இன்சுலேட் பண்ணப்படாத அறையில் அடைத்து வைத்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல் சரியான முறையில் உணவு வழங்கப்படாமலும், வசதியற்ற சூழ்நிலையிலும் வைத்ததற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டார்கள். வெப்பமற்ற அறையில் பனிக்குளிர் தாக்குதலுக்கு ஆளான அப்பெண்மணி மயக்கமுற்ற நிலையில் மருத்துவர்களால் மீட்டெடுக்கப்பட்டார்.
உடனடியாக இன்சுலேட் பண்ணப்பட்ட அறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின் மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். பனிக்குளிரால் உறைந்து போன நிலையில் வெப்பக்காற்று சிறிதும் உள்ளே நுழையாத அறையில் சென்ற நவம்பரில் அடைத்து வைக்கப்பட்டார்.
இது ஒரு சிக்கலான விசாரணை. ஆனால் அப்பெண்மணி ஏன் அடைக்கப்பட்டார் என தெரியவில்லை என பொலிஸ் அதிகாரி டோனி வெள்ளா தெரிவித்தார். அடிப்படை வசதிகளை மறுத்ததற்காகவும், உடல் ரீதியாக துன்புறுத்தியதற்காகவும் அவரது மகனும் மற்றும் மருமகளும் கைது செய்யப்பட்டனர் என அவர் கூறினார்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர்கள் கூறுகையில்,"அந்த அறை மூன்று ஆண்டுகளாக திறக்கப்படவே இல்லை. இப்படி ஒரு பெண்மணியை பார்த்ததே இல்லை"என அவர்கள் கூறினர்.


அமெரிக்காவில் 1.1 கோடி பேர் சட்ட விரோதமாக குடியேற்றம்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் 1.1 கோடி பேர் என்று அந்நாட்டு உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றி அமெரிக்க குடியுரிமை புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி வசிப்பவர்களின் எண்ணிக்கை 1.1 கோடி. அதில் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் 62 சதவீதம் பேர். எனினும் 2007 ம் ஆண்டுக்குப் பிறகு சட்ட விரோதமாக குடியேறுவோர் எண்ணிக்கை 10 லட்சம் வரை குறைந்துள்ளது.
2000 முதல் 2010 ம் ஆண்டு வரை அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்தது. குடியுரிமை ஆவணம் இல்லாமல் வசிக்கும் வெளிநாட்டினரில் 39 சதவீதம் பேர் 2000 அல்லது அதற்கு பிறகு வந்த ஆண்டுகளில் குடியேறியவர்கள் என தெரிய வந்துள்ளது.
சோதனைக்கு உள்ளாகமல் நுழைந்தவர்கள், தற்காலிக குடியுரிமை அனுமதி பெற்று காலக்கெடு முடிந்த பிறகும் வசிப்பவர்கள் இந்த பட்டியலில் அதிகம். 2000 முதல் 2007 வரை சட்ட விரோதமாக குடியிருப்போரின் எண்ணிக்கை 33 லட்சம் அதிகரித்தது.
சட்ட விரோதமாக குடியேறியவர்களில் 80 சதவீதத்தினர் வட அமெரிக்க நாடுகள், மெக்சிகோ, கனடா, கரீபியன் கடல் தீவுகள் மற்றும் மத்திய அமெரிக்காவை சேர்ந்தவர்கள். ஆசியாவை சேர்ந்தவர்கள் அடுத்த இடம் பிடித்துள்ளனர். ஆசியர்களில் இந்தியர்கள் அதிகம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துனிஷிய பிரதமர் பதவி ராஜினாமா.
வட ஆப்ரிக்க நாடான துனிஷியாவில் பிரதமர் முகமது கன்னவுச்சிக்கு எதிரான போராட்டம் வலுவடைந்ததை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அல் செப்சி என்பவர் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. துனிஷியாவில் தான் அரசுக்கு எதிராக முதலில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து அங்கு 20 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஜைன் அல் அபிதின் பென் அலி சவுதிக்கு ஓடி விட்டார்.
அதையடுத்து அவரது கூட்டாளியும் அப்போதைய பிரதமருமான முகமது கன்னவுச்சி தலைமையில் புதிய அரசு அமைந்தது. கன்னவுச்சியே புதிய பிரதமராகத் தொடர்ந்தார். ஆனால் முன்னாள் அதிபர் அலியின் கூட்டாளிகள் எவரும் புதிய அமைச்சரவையில் இடம் பெறக் கூடாது என்று துனிஷிய மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக போராட்டம் வலுவடைந்தது. கடந்த 25, 26 மற்றும் 27 தேதிகளில் தலைநகர் துனிஷில் நடந்த போராட்டத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு நெருக்கடி முற்றியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பிரதமர் கன்னவுச்சி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர்,"நான் எனது பொறுப்பில் இருந்து ஓடவில்லை. எனது பதவி விலகல் புதிய பிரதமருக்கு வழி வகுக்கும். மேலும் போராட்டங்களில் ஏற்படும் இறப்புகளைத் தடுக்கும் வகையில் முடிவுகளை எடுக்க நான் தயாராகவில்லை" என்றார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் அல் பாஜி காயித் அல் செப்சி புதிய பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. கன்னவுச்சியின் ராஜினாமா குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றம் தான் என்றாலும் அதுவே போராட்டக்காரர்களை திருப்திப்படுத்தி விடாது. அமைச்சரவையில் முன்னாள் அதிபர் அலியோடு தொடர்புடையவர்கள் இருக்கும் வரை போராட்டம் நிற்காது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில் போராட்டத்தின் போது சிலர் பலியானது தொடர்பாக 188 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். முன்னாள் அதிபர் அலியின் நெருங்கிய அதிகாரிகள் சிலர் இவர்களுக்குப் பணம் கொடுத்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் கலவரம் ஏற்படுத்தி அதன் மூலம் சிலரை கொன்றுள்ளனர். இது குறித்து விசாரணை நடக்கிறது.
விமானப்படை விபத்து குறித்து மஹிந்த கடும் அதிர்ச்சி: சம்பவ இடத்துக்கு நேரில் விரைந்துள்ளார்! விமானி ஒருவர் பலி! மற்றையவர் படுகாயம்
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு கிபீர் விமானங்கள் இன்று முற்பகல் விபத்துக்குள்ளானது குறித்து கடும் அதிர்ச்சியுற்றுள்ள மஹிந்தா உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு  நேரில் விஜயம் செய்துள்ளார்.விமானப்படையின் கிபீர் விமானங்கள் விபத்துக்குள்ளானதை அறிந்தவுடன் ஜனாதிபதியின் இன்றைய நிகழ்ச்சி நிரல்கள் யாவும் உடனடியாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அதனையடுத்து ஜனாதிபதி விபத்து இடம்பெற்ற அத்தனகல்லைப் பிரதேசத்துக்கு விரைந்துள்ளார்.
விபத்தில் காயமானவர்களை கொழும்பு தேசிய மருத்துவமனை அல்லது கம்பஹா பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்காக ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் விசேட ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் இருக்கும் வதுபிட்டிவலை மருத்துவமனை மற்றும் கம்பஹா பொதுமருத்துவமனை என்பன காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிக்க உச்சகட்ட தயார்நிலைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
பிரஸ்தாப மருத்துவமனைகளிலிருந்து தலா இரண்டு வீதம் நான்கு அம்புலன்ஸ் வண்டிகளும் விபத்து இடம்பெற்ற பிரதேசத்தை நோக்கி துரித கதியில் அனுப்பப்பட்டுள்ளன. ஆயினும் விபத்தின் காரணமாக காயமுற்றவர்கள் தொடர்பான எண்ணிக்கை இதுவரை அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை.
விமானத்தின்  தானியங்கி பரசூட் காரணமாக விமானிகள் இருவரும் தெய்வாதீனமாக உயிர்தப்பிக் கொண்டுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப்  போரில் பெரும் பங்காற்றிய இரண்டு கிபீர் விமானங்களே விபத்துக்குள்ளாகியிருப்பதாக விமானப்படை வட்டாரங்களின் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இரண்டாம் இணைப்பு
விபத்துக்குள்ளான விமானங்களில் ஒரு விமானி உயிரிழந்துள்ளதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த விமானியும் கடும் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக விமானப்படை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த விமானி ப்ளைட் லெப்டினன்ட் தர அதிகாரியான மொனாத் பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  அவரது சடலம் கட்டுநாயக்க வான்படைத் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஸ்குவாட்ரன் லீடர் ஜயகொடி எனும் விமானியே விபத்திலிருந்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அவர் ஆரம்ப கட்டமாக வதுபிட்டிவலை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதன் பின் பெரும்பாலும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
விமான விபத்தின் போது ஒரு விமானம் அத்தனகல்லையின் நெல்லிகஹமுல பிரதேசத்தின் வீடொன்றின் மீது விழுந்துள்ளதால், வீடு பலத்த சேதமடைந்துள்ளது. மற்றைய விமானம் அதற்கு இருநூறு மீட்டர் தூரம் தள்ளி வனப்பகுதிக்குள் விழுந்துள்ளது.
இச்செய்தி எழுதப்படும் நேரத்திலும் விமானங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதுடன், அப்பிரதேசத்தின் பெரும்பாலான மரங்களும் விமானங்களின் தீச்சுவாலை காரணமாக கருகிப் போயுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.ஆயினும் விமான விபத்துக் காரணமாக சிவிலியன்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை.
லிபியாவில் இறுதி கட்ட மோதல்.
லிபியாவின் கிழக்குப் பகுதியை ஏற்கனவே கைப்பற்றிய கடாபி எதிர்ப்புப் புரட்சிப் படைகள் நேற்று முன்தினம் முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவைக் கைப்பற்றிவிட்டன.
தொடர்ந்து தலைநகர் டிரிபோலியை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. டிரிபோலியில் எந்நேரமும் கடாபி ஆதரவு மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கு இடையில் இறுதிக் கட்ட மோதல் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
பெங்காசி, அல்பைடா, டெர்ணா உள்ளிட்ட நாட்டின் கிழக்குப் பகுதிகளை கடாபி எதிர்ப்பாளர்கள் ராணுவத்தின் துணையுடன் கைப்பற்றினர். பெங்காசியில் முன்னாள் நீதித் துறை அமைச்சர் முஸ்தபா முகமது அப்த் அல் ஜலீல் தலைமையில் இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது.
இதற்கிடையில் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவில் கடாபி ராணுவம் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கு இடையில் மோதல் நடந்தது. இறுதியில் ஜாவியா நகரம் எதிர்ப்பாளர்கள் கைகளில் வீழ்ந்தது. ஜாவியா நகரைச் சுற்றியுள்ள ரிபாத், கபா, ஜடோ, ரோக்பன், ஜென்டன் உள்ளிட்ட பல்வேறு சிறு நகரங்களையும் எதிர்ப்பாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
எனினும் ஜாவியா நகரின் வெளிப் பகுதியில் 2000 ராணுவ வீரர்கள் எதிர்ப்பாளர்களைத் தாக்கத் தயார் நிலையில் உள்ளனர். மிஸ்ரட்டாவின் பெரும் பகுதியையும் எதிர்ப்பாளர்கள் கைப்பற்றி விட்டனர். டிரிபோலிக்கு வெளியே 28 கி.மீ., தூரத்தில் தற்போது எதிர்ப்பாளர்கள் நிலை கொண்டுள்ளனர்.
அந்நகரில் உள்ள அரசு வானொலி கட்டடம் மீது குண்டு வீசித் தாக்கிய விமானம் ஒன்றை எதிர்ப்பாளர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்கினர். இதனால் அந்த விமானம் வேறு வழியின்றித் தரையில் இறங்கியது. அதில் இருந்தவர்களை எதிர்ப்பாளர்கள் சிறை பிடித்தனர்.
பெங்காசியில் உள்ள ராணுவப் பிரிவின் தலைவர் கர்னல் ரமாதான், டிரிபோலியை நெருங்கிச் செல்லும் எதிர்ப்பாளர்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் டிரிபோலியில் எந்நேரமும் பயங்கர மோதல் ஏற்படலாம். டிரிபோலியின் புறநகர்ப் பகுதியான டஜோராவில் கடாபி ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிரிபோலியின் சில பகுதிகளில் பொதுமக்கள் தடுப்புகளை ராணுவ வீரர்கள் மீது தூக்கி எறிந்தனர். சிலர் ராணுவப் படைத்தளங்களைச் சூறையாடி ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்து வரும் ஐ.நா., மனித உரிமை அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடாபியை உடனடியாக லிபியாவில் இருந்து வெளியேற்றுவது குறித்து பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில் லிபியா மீது ஆயுதப் பரிமாற்றம், சொத்து முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய யூனியனும் நேற்று விதித்தது. லிபியாவின் மிக நெருங்கிய நட்பு நாடான இத்தாலி, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடாபி உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளன.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF