Saturday, November 6, 2010

அதே தாஜ் ஹோட்டலில் தங்குகின்றேன் - தீவிரவாதிகளுக்கு சவால் விடுத்தார் ஒபாமா!


மும்பைக்கு இன்று நண்பகல் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், அவரது மனைவி மிச்சேலும் தாஜ் ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த மும்பை தாக்குதல் நினைவு புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.
பின்னர் மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஒபாமா 6 நிமிட உரையாற்றினார். மும்பைக்கு வந்ததற்கும், தாஜ் ஹோட்டலில் தங்குவதற்கும் முக்கிய காரணம் இருக்கிறதென்றார்.
கடந்த 2008 செப்டெம்பர் நவம்பர் 26 ம் திகதி தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர். அதே ஹோட்டலில் இப்போது தங்குகிறேன். இது தீவிரவாதிகளுக்கு சவால் விடுவதற்காகவே என்றார்!
மேலும் அன்றைய தாக்குதலை நாம் என்றும் மறக்க முடியாது. அந்த தாக்குதலை இந்திய மக்கள் மிகுந்த மன பலத்துடன் எதிர்கொண்டார். அந்த கொலையாளிகளிடம் மக்கள் பணிந்து விடவில்லை. அந்த தாக்குதலுக்கு அடுத்த நாளிலேயே மும்பை நகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது. தாக்குதலால் முடங்கிவிடாமல் மக்கள் தத்தமது பணிகளை கவனிக்க தொடங்கிவிட்டனர்.

ஹோட்டலும் முடங்கிவிடாமல் மீண்டும் எழுச்சி கொண்டு நின்றது. இது இந்திய மக்களின் பலத்தை வெளிக்காட்டியது.

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும். மும்பை போன்ற மற்றொரு தாக்குதல் நடந்துவிடாமல் தடுக்க இரு நாடுகளும் தேவையான உளவு ரகசியங்களை பகிர்ந்து வருகிறோம் என்றார்.
இதேவேளை ஒபாமாவின் இப்பயணத்தின் போது, இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்பு துறையிலும், அணு சக்தி துறையில் மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

12 பில்லியன் டாலர் அளவுக்கான இந்த ஒப்பந்தங்கள் மூலம் அந்த நாட்டிடமிருந்து இந்திய போர் விமானங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை வாங்கவுள்ளதுடன், இந்தியாவில் அமெரிக்க எரிசக்தி துறை நிறுவனங்கள் அணு உலைகளை அமைக்கவுள்ளன.

இதனால் அமெரிக்காவில் புதிதாக 60,000 வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்


இயந்திர உறுப்புகளை Hard ware என்றும் அதனை இயக்க வைக்கும் புறொக்கிறாம்களை (மென்பொருள்களை) Soft Ware என்றும் அழைப்பர். ஒபறேற்ரிங் சிஸ்ரம் (மென்பொருள்) குழப்பம் அடைய நேரிட்டால் கணினி வேலை செய்ய மறுக்கின்றது.
கணினியில் Hard ware (கடுமயான உறுப்பு) இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன. Soft ware என அழைக்கப் பெறும் புறொக்கிறாம்கள் (மென்பொருள்கள்) மிக இலகுவில் குழம்பி விடுகின்றது. அவறில் உள்ள சிறு பிழைகளை கணினியே சீர் செய்யக்கூடிய வசதிகள் ஒபறேற்ரிங் சிஸ்ரம் வழங்குகின்றது. அதற்கான வழிமுறைகள் இங்கே தரப்பெற்றுள்ளன.
நாம் ஒரு பொருளை உரிய முறையில் பராமரிக்காது விட்டால் அவை செயலிழந்து பயனறறதாகி விடுகின்றது. கணிணி அதற்கு விதிவிலக்கல்ல. எல்லாமே கணினி மயம் ஆகிவிட்ட இக்காலத்தில் கணினி பழுதடைந்து விட்டால் பல நஷ்டங்களையும், மன வேதனைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது.
ஒரு கணினியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். நாம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு வேலைகளை செய்யாமல் விடுவதும், தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (புகை, தூசு, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம்.
சில இனையத் தளங்களில் இலவசமாக கிடைக்கும் சில மென்பொருள்களை (programs) உங்கள் கணினியில் (install) உட்புகுத்தியதும்; அவை உங்களின் முக்கியமான இரகசியங்களை வேவு பார்த்து உங்களுக்கு தெரியாமலே உரியவர்களுக்கு அனுப்பி விடுகின்றது. அத்துடன் சில மென்பொருகள் உங்கள் கணினிக்கு நோய் வரக்கூடிய வைரஸ்சுகளை உட்புகுத்தி கணினியை செயலிளக்கச் செய்கிறது.
எமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்து கிடைக்கும் ஈ-மெயில் கூட வைரசை பரப்பும் ஒரு காவியாக இருக்கலாம். அதனால் சில வேளைகளில் நீங்கள் சேமித்து வைத்த முக்கிய குறிப்புகளை இழக்கவும் நேரிடலாம். அவற்றை கண்டுபித்து அதனைச் செயலிழக்கச் செவதற்கான வளிமுறைகளைக் கைப்பிடிப்பது அவசியமாகும்.
நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் ஈ-மெயிகளை மாத்திரம் திறந்து பாருங்கள். வைரஸ் இல்லாத கணினிகளில் பிரதிசெய்த கோப்புகளை மாத்திரம் உங்கள் கணினியில் திறந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலமும் நோய் பரவாமல் தடுக்கலாம்.
கணினிகளை மாதம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்யுங்கள்.
கணினியில் பதியப்பெற்றிருக்கும் ஒபறேற்றிங் சிஸ்ரம்; கணினி தன்னைத் தானே தன்னிச்சையாக சரி செய்யக்கூடிய மென்பொருளை (programs) கொண்டுள்ளது. ஆனால் அவை தானாக இயங்க மாட்டாது. அவற்றை தேவைக்கேற்ப நாமே இயக்கிக் கொள்ளல் வேண்டும். அப்படி உள்ள ஒரு முறைதான் ஸ்கனிங் செய்தல்.
எப்படிச் செய்வது?
உங்கள் கணினியில் My computer என்ற பகுதியை திறவுங்கள். அதில் உங்கள் ஹாட் டிஸ்க் (C:) என காட்டப்பெற்றிருக்கும். அதில் உங்கள் மவுசின் அம்புக்குறியை பதிய வைத்து (Right Click) மௌசின் இரண்டாவது பொத்தானை அழுத்துங்கள். அப்போது ஒரு மெனு தோன்றும். அதில் கடைசியாக உள்ள Properties என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ திறபடும்.
அதில் General, Tools, Hardware, Sharing, Quota என்னும் ரப்ஸும் கீழே Disk Clanup என்ற பொத்தானும் இருக்கும். அவற்றுள் Tools என்ற ரப்ஸை கிளிக் செய்யுங்கள். அங்கே Check Now, Defragment Now, Backup Now என மூன்று பொத்தான்கள் காணப்படும். அவற்றுள் Check Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியை ஸ்கான் செயலாம்.
Defragment Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியின் ஹாட் டிக்கை ஒழுங்கு படுத்தலாம். Backup Now எனபது பாதுகாப்புக் கருதி பிரதி செய்ய பாவிக்கலாம்.
Check Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிய ஒரு விண்டோ திறபடும். அதில் Automatically fix files system errors எனவும், Scan for and attempt recovery of bad sectors எனவும் இரு பெட்டிகள் இருக்கும். அவை இரண்டையும் கிளிக் செய்வதன் மூலம் சரி போடுங்கள். பின் Start என்ற பொத்தானை அழுத்துங்கள். ஸ்கன்னிங் உடனே ஆரப்ப மாகும்.
சில ஒபறேற்றிங் சிஸ்ரம் கணினி திரும்ப ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பமாகும். அதற்கும் உங்கள் அனுமதி கேட்க்கும். அதற்கும் Yes பொத்தனை அழுத்தவும்.
இப்போது கணினியில் பதியப்பெற்ற எல்லா கோப்புகளும் ஸ்கான் செய்யப்பெற்று அவற்றில் குழப்பம் இருந்தால் தன்னிச்சையாக அவை திருத்தப்படும். அத்துடன் நாம் நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காகப் பாவிக்கப்பெறும் ஹாட்டிஸ்க்கில் உள்ள சிறு பகுதிகளிள் (Sectors) பழுதடைந்து இருந்தால் அவற்றில் இருக்கும் பதிவுகளை வேறு பகுதிக்கு மாற்றி கணினியை சீராக இயங்கக் கூடியதாக அமைக்கின்றது. கணினி ஸ்கான் செவதற்கு அதில் பதிந்து வைத்துள்ள பைல்களின் அளவையும், ஹாட்டிஸ்கின் அளவையும் பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, November 5, 2010

இணையத்தில் உலாவிய போது கிடைத்த மென்பொருள்

[videocapture_smallboxshot.jpg]
இணையத்தில் உலாவிய போது கிடைத்த மென்பொருள் இது , பலருக்கும் நம் computer desktop இல் இருப்பதை அப்படியே copy செய்ய தெரிந்திருக்கும்.ஆனால் இது சிறிது வித்தியாசமானது .freez video screen capture இந்த மென்பொருளின் மூலம் உங்கள் computer screen இல் என்ன நடக்கிறதோ அதை அப்படியே video வாக எடுக்கலாம் .youtube தவிர்த்து பல தளங்களில் video டவுன்லோட் செய்யும் வசதி இல்லை ஆனால் இந்த மென்பொருள் மூலம் எப்பேர்ப்பட்ட தளத்தில் இருந்தும் video வை எளிதாக copy செய்யலாம் .
தரவிறக்கம் செய்வதற்கு கீழே சொடுக்குங்கள்
download

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உலகின் அதிக எடை கூடிய பூசணிக்காய் கின்னஸ் சாதனை


அமெரிக்காவின் நியூ ரிச்மன்ட் மாகாணத்தைச் சேர்ந்த கிரிஸ் ஸ்டீவன்ஸ் பயிரிட்ட பூசணிக்காய் உலகில் அதிக எடை கூடிய பூசணிக்காயாக கின்னஸ் சாதனை படைத்துள்ளத

கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காய் 821 கிலோ (1810 பவுண்) நிறையாகும். இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு உலகின் அதிக எடை கூடிய பூசணிக்காயின் நிறை ஆயிரத்து 725 பவுண்களாகும்.

கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காயின் சுற்றளவு 4.74 மீற்றர்களாகும். 

2009 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை படைத்த பூசணி. இது ஆயிரத்து 725 பவுண் நிறையாகும். ஒஹியோவைச் சேர்ந்த கிரிஸ்டி என்பவரது தோட்டத்தில் விளைந்ததே இப்பூசணிக்காய்.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

புகைப்பதால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் இழப்பு: அதிர்ச்சித் தகவல்!


புகைபிடிப்பதால் தனது வாழ்நாளில் 10 ஆண்டுகள் வரை புகைப் பழக்கம் கொண்டவர்கள் இழக்கக் கூடும் என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவல், அண்மையில் பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. புகைப் பழக்கத்தோடு பிற உடல்நலக்கேடான பழக்கங்களும் இருந்தால் 15 ஆண்டுகள் வரை வாழ்நாள் இழப்பு ஏற்படும் என்றும் அதில் தெரியவந்துள்ளது. 
குறிப்பாக 35 வயதைத் தாண்டியவர்கள் புகைப் பிடிக்கும் பழக்கும் வழக்கத்தைத் தொடர்ந்தால் கேடு பன்மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

புகைப்பழக்கம் இதயத்தின் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை விரைவாக்குகிறது என்றும், அதிக கொலஸ்ட்ரால் உள்ள உணவுகளை உட்கொள்வதாலும், சோம்பிய வாழ்க்கைப் பழக்கத்தாலும் மாரடைப்பு ஏற்படுவது விரைவுபடுத்தப்படுவதாகத் தெரிகிறது.

புகைப்பழக்கத்தை நிறுத்தியவர்கள் தமனி அடைப்புகள் நீங்கி வாழ்நாள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்தது.

இந்த ஆய்வு குறித்த கருத்து தெரிவித்த புகைபிடிப்பவர் ஒருவர் "புகைக்காமல் வாழ்பவர்கள் அனைவரும் நீண்ட நாள் வாழ்கிறார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை" எனத் தெரிவித்தார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஈராக் மீது போர் தொடுத்தது தவறு : ஜார்ஜ் புஷ்



ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போது ஈராக் மீது போர் தொடுத்தார். இப்போதும் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து அங்கே இருக்கிறது. போரில் ஏராளமான ஈராக் நிருபர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க தரப்பிலும் ஏராளமான போர் வீரர்கள் பலியானார்கள். பல ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு அமைதியை நாட்ட முடியவில்லை. இந்த நிலையில் ஜார்ஜ்புஷ் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அதில் அவர் ஈராக் போர் தொடர்பாக தகவல்களையும் குறிப்பிட்டு உள்ளார்.
அதில் ஜார்ஜ் புஷ் கூறியிருப்பதாவது:-
ஈராக் மீது போர் தொடுத்ததில் நான் பல தவறுகளை செய்து விட்டேன். போர் தொடுத்ததன் மூலம் நான் மூழ்கிய கப்பலின் கேப்டன் போன்ற நிலயில் இருந்தேன்.
ஈராக் தொடர்பான பிரசாரத்திலும் தவறு நடந்து விட்டது. பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்து வதிலும் தவறு நேர்ந்து விட்டது. போர் நடந்தது முறையிலும் தவறு செய்து விட்டோம்.
இவ்வாறு அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகள் என்று பெயரிட்டுள்ள இந்த புத்தகம் அடுத்த வாரம் முறைப்படி வெளியிடப்பட இருக்கிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

தேர்தல் தோல்வியால் பாடம் கற்று கொண்டேன் : ஒபாமா வேதனை


அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபை (பாராளுமன்றம்) செனட் சபை (மேலவை) மாகாண கவர்னர் தேர்தல்கள் நடந்தன. அனைத்து தேர்தல்களிலும் ஒபாமாவின் ஜனநாயக கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது.
பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சி 239 இடங்களையும், ஜனநாயக கட்சி 185 இடங்களையும் பிடித்தன. செனட் சபையில் 52 இடங்கள் பெற்று ஜனநாயக கட்சி பெரும் பான்மை பெற்றது. கவர்னர் தேர்தலில் குடியரசு கட்சிக்கு 23 இடங்களும், ஜனநாயக கட்சிக்கு 9 இடங்களும் கிடைத்தன.
ஜனநாயக கட்சி படுதோல்வி அடைந்தது ஒபாமாவுக்கு ஏற்பட்ட தோல்வியாக கருதப்படுகிறது. ஒபாமாவின் பொருளாதார கொள்கை எடுபடாததாலும் அவர் கொண்டு வந்த சுகாதார மசோதா தோல்வி அடைந்ததும் தான் அவரது தோல்விக்கு காரணம் என்று கருதப்படுகிறது.
இது தொடர்பாக ஒபாமா கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-
ஜனநாயக கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியால் நான் பெரிதும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறேன். இதை ஜீரணித்து கொள்வது எளிதானது அல்ல.தேர்தல் தோல்வி எனக்கு ஒரு பாடமாக அமைந்து உள்ளது. மக்களின் மனதில் உள்ள அதிருப்தியை போக்கவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என நான் நம்புகிறேன். இன்னும் அதிக வளர்ச்சி தேவை.
கடந்த 2 ஆண்டாக வளர்ச்சி நிலை உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதை உணரவில்லை. நாட்டின் அதிபர் என்ற முறையில் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
நாட்டின் வளர்ச்சிக்கு குடியரசு கட்சியினரின் ஒத்துழைப்பையும் கேட்கிறேன். அவர்களுக்கு திட்டங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். இது தொடர்பாக வரும் ஆலோசனைகளை நான் கவனத்தில் கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, November 4, 2010

ஹாட்டிஸ்க்கை முழுவதுமாக குளோனிங்க் செய்ய உதவும் டூல்.

HDClone Free Edition

கணனியில் ஹாட்டிஸ்க் ஐ முழுவதுமாக குளோன் செய்வதற்கென்று உருவாக்காப்பட்ட ஒரு சிறந்த டூல் Hdclone இன் இலவச பதிப்பாகும். எல்லா ஆப்பிரேட்டிங்க் சிஸ்டத்திலும் மற்றும் எல்லா ஹாட்டிஸ்க் பார்மட் களிலும் பயன்படுத்தகூடியதாக இருக்கின்றமை இதன் சிறப்பம்சமாகும்.
 இந்த டூலின் மூலம் ஒரு ஹாட்டிஸ்க்கில் இருந்து மற்றொன்றுக்கு அப்படியே முழு டேட்டாக்களையும் காப்பி செய்ய முடிவதனால் கணனியின் ஆப்பிரேட்டிங்க் சிஸ்டத்தை வேறொரு ஹாட்டிஸ்க்குக்கு மாற்ற வேண்டிய சந்தர்ப்பத்தில் மிகவும் உதவியாக இருக்கின்றது.
Hd clone அதற்கென்றே உருவாக்கப்பட்ட இயங்குதளத்தில் இயங்குவதால் உங்கள் கணனி பூட் ஆகாத போதும் இந்த டூலினால் டேட்டாக்களை பாதுகாத்து கொள்ள முடிகிறது..

டவுண்லோட் செய்ய இங்கே :
 http://www.miray.de/products/sat.hdclone.html
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

வேற்று கிரகவாசிகள் - ஒரு பார்வை


பூமியில் வாழும் ஜீவராசிகளைத் தவிர, பிற கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்ற கேள்வி காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வுகள், வேற்று கிரக உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன.
எனினும் இன்று வரை உறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆதாரங்கள் எப்போது கிடைக்கும் என்பதும் நமக்குத் தெரியாது. எனினும், வேற்றுகிரக ஜீவராசிகள் உருவாவதற்கும், வாழ்வதற்கும் உள்ள சூழல் குறித்து அறிவுஜீவியான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் தன்னுடைய இயற்பியல் மற்றும் பிரபஞ்ச அறிவைப் பயன்படுத்தி வேற்று கிரக உயிரினங்கள் எப்படியிருக்கும் என்று தர்க்க ரீதியில் விளக்குகிறார்.
நமது அறிவை தட்டி எழுப்பும் அவரது கருத்துக்களின் சாராம்சம் இதோ: 
வேற்று கிரக உயிரினங்கள் நட்சத்திர மண்டலங்களுக்குள் இருக்கலாம். அல்லது பிரபஞ்சத்தின் மேகக்கூட்டங்கள் போன்ற பகுதிகளில் நுண்ணுயிர்களாக இருக்கலாம். கண் இமைக்கும் நேரத்தில் வாழ்ந்து மறைந்துவிடக் கூடிய நுண்ணுயிரிகள் கூட இருக்கலாம். ஆகவே பிரபஞ்சத்தில் உயிரினங்களில் எதைத் தேடுவது எங்கு தேடுவது என்ற கேள்விகள் முக்கியமானவை.பிரபஞ்சத்தில் இயற்பியல் விதிகள் எல்லாம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், உயிர் வாழ்க்கைக்கான விதிகளும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். அப்படியானால் நாம் வாழும் இந்த தாய் பூமியில் உயிரினம் தோன்றியது பற்றி நாம் அறிந்து கொண்டால், இந்த தேடலைத் தொடங்க முடியும்.45 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு எது காரணமாக அமைந்தது என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது.
ஆனால் இங்கு அபரிமிதமாக இருந்த அமினோ அமில குட்டைகளில், அணு மூலக்கூறுகள் ஒரு கச்சிதமான ஒருங்கிணைவு நிகழும் வரை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தன. பிறவி எனும் ஓர் உயிர் தோன்றும் வரை இந்த மோதல்கள் நடந்தன. எந்த தூண்டலும் இன்றி, உயிர் தோன்றியிருக்க முடியுமா என்பது தெரியவில்லை.பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்பாக, வேற்று கிரகங்களில் தோன்றிய உயிர்கள் இங்கு பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பூமியில் விழுந்த கற்களின் இடைப்பகுதியில் அந்த உயிரினங்கள் இருந்து, இங்கு வந்து சேர்ந்திருக்கலாம். அந்த உயிரினங்கள் விண்வெளியின் வெப்பத்தையும், வெற்றிடத்தையும் தாங்கும் திறனைப் பெற்றிருந்திருக்கும்.உயிர் தோன்றிவிட்டால், அதற்கடுத்து உள்ள அம்சம், உயிர் வாழ்தல். உயிர் வாழ்தலுக்கு ஓர் ஆதாரம் தேவைப் படுகிறது. அதை நாம் உணவு என்கிறோம். ஒருமுறை ஊட்டம் பெற்ற உயிர், அடுத்து சூழ்நிலைக்கு ஏற்ப வாழ தன்னை மாற்றிக் கொள்கிறது. இனப் பெருக்கம் செய்கிறது.
பரிணாம வளர்ச்சிக்கும் வித்திடுகிறது. பரிணாம வளர்ச்சி என்பது பூமிக்கு மட்டும் பொதுவானது அல்ல. அது வேற்றுகிரகவாசிகளுக்கும் பொதுவானது. வேற்று கிரகங்களில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டால் அங்கு, ஜீவராசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு இந்த பிரபஞ்சத்தில் அபரிமிதமாக உள்ள தண்ணீர் நல்ல பதில் அளிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. தண்ணீர் இருந்தாலும் அந்த கோளின் இருப்பிடம், அதிக வெப்பம் மற்றும் குளிர் இல்லாத இடங்களாக இருக்க வேண்டும். அப்படியானால், சூரியனைச் சுற்றி உள்ள இரு கோள்களான பூமி மற்றும் செவ்வாய் அந்த வாய்ப்பைப் பெறுகின்றன. 1970களிலிருந்து மனிதர்கள் செவ்வாயை ஆராய்ந்து கொண்டிருந்தாலும், அங்கு உயிர் இருப்பதை உறுதி செய்யவில்லை. நாசா தண்ணீருடன் இணைந்த ஓர் வெண்ணிற உப்பை கண்டறிந்தது. உயிர் வாழ்வதற்கான ஈரப்பதம் அங்கு இருக்கிறது.
ஆகவே அந்த முயற்சியை விஞ்ஞானிகள் கைவிடமாட்டார்கள். இதைத் தவிர நமது சூரிய குடும்பத்தில், உயிர் இருப்பதாகக் கருதக்கூடிய இன்னொரு இடம் வியாழன் கோளை சுற்றி வரும் துணைக்கோளான ஐரோப்பா. இது 3,200 கி.மீ., விட்டமும் மைனஸ் 260 டிகிரி குளிர்நிலையும் கொண்ட சிறிய துணைக் கோள். இக்கோள் சுற்றிவரும் பாதை வட்ட வடிவமாக இருப்பதால், வியாழனின் ஈர்ப்பு விசையால் துணைக்கோளின் இயக்கத்தின் போது, உள்புறமாக வெப்பம் உருவாகியிருக்கலாம். அதனால், பனிக் கட்டிகளுக்கு கீழே கடல் இருக்கலாம். அங்கு வாழத்தகுந்த உயிரினங்கள் உருவாகியிருக்கலாம். நமது ஆழ்கடல் உயிரினங்களைப் போல் அங்கு உயிரினங்கள் இருக்கலாம். அங்கு மேம்பட்ட உயிர்கள் வாழ்ந்தாலும், அவை அவற்றுக்கு மேலே 25 கி.மீ., பனி உறைந்த நிலையில் இருப்பதால், அவற்றுக்கு பிரபஞ்சம் இருப்பது தெரியாது. அவர்கள் நம்முடன் தொடர்பும் கொள்ள மாட்டார்கள்.நமது சூரிய மண்டலத்தைத் தவிர வேறு இடங்களில் உயிர்கள் இருக்கிறதா என்பதையும் நாம் தேட வேண்டும். 1995ம் ஆண்டில் முதலில் ஒரு வேற்று கிரகம் இருப்பது கண்டறியப்பட்டது.
அதன்பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட கோள்கள் கண்டறியப்பட்டு விட்டன. அந்த கோள்களில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கலாம். பரிணாமத்தின் சக்தியால் அங்கு வேற்றுகிரக ஜீவராசிகள் நமக்கு அறியப்பட்டவைப் போலக் கூட இருக்கலாம்.தரையில் வாழக்கூடியவையாக இருந்தால் அவற்றுக்கு கால்கள் இருக்க வேண்டும். கண்கள் அமைந்திருந்தால் அது பூமியில் உள்ள ஜீவராசிகளை ஒத்த அமைப்பை உடையதாக இருக்கும். பரிணாமத்தின் உச்சகட்ட எல்லைகளை நம்மால் உணரமுடியாது. வேற்று கிரக வாசிகள் நம்மவர்களை கடத்திச் செல்வதாக நிறையக் கதைகள் வந்திருக்கின்றன. ஆனால், அவர்கள் ஏன் நம்மைக் கடத்த வேண்டும். நாம் 40 ஆண்டுகளாக விண்வெளியை கவனித்துக் கொண்டிருக்கிறோம். ஒரே ஒரு மர்மமான வாய்ப்பைத் தவிர, வேறு எந்த அறிகுறியையும் வேற்று கிரகவாசிகளிடம் இருந்து நாம் பெறவில்லை. 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி ஒஹயோவில் இருக்கும் ஒரு ரேடியோ டெலஸ்கோப் ஒரு சமிக்ஞையை கிரகித்தது. ஒரு கம்ப்யூட்டர் 6 எழுத்துக்களும் எண்களும் கொண்டதாக அதை பதிவு செய்தது. ஆங்கிலத்தில் இது "வாவ்' என்று அறியப்பட்டது.
இது வேற்று கிரகவாசிகள் இந்த சமிக்ஞை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இந்த "வாவ்' சமிக்ஞை 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திர மண்டலத்திலிருந்து வந்ததாக தோன்றியது.அதற்கு நாம் ஒரு பதில் அனுப்பினால் அது அவர்களை சென்றடைய 200 ஆண்டுகள் ஆகும். அந்த காலத்திற்குள் அவர்கள் தகவல் அனுப்பியதே மறந்து அதற்கு பதில் வருகிறதா என்று கவனிப்பதையே விட்டுவிடுவார்கள். அதை விட மோசமாக அவர்கள் தங்களையே அழித்துக் கொண்டும் விடலாம். மனித இனம் மிக விரைவாக அணுகுண்டின் சக்தியை கண்டறிந்து கொண்டது. அதே விஷயம் அந்த வேற்று கிரகவாசிகளின் விஷயத்திலும் நடந்தால் அவர்களும் நீண்ட நாள் வாழமுடியாது. வேற்றுகிரகவாசிகளை தேட, நாம் அவர்களது செய்திகளை கவனிக்கலாம். அல்லது நாம் பேசத்தயாராக இருப்பதாக நம்முடைய ஆர்வத்தை ஒலிபரப்பு செய்யலாம். ஆனால் நாம் என்ன சொல்ல போகிறோம் என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அவர்கள் முதுமை அடைவதை வெற்றிகொண்டு சாகா நிலைமையை கூட அடைந்திருக்கலாம். அதற்கும் மேலாக இந்த மேம்பட்ட நிலையை அவர்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்திருக்கலாம். இது நடக்காது என்று தோன்றினாலும், நீங்கள் இதை தர்க்க ரீதியாக சிந்தித்தால், ஒரு குகைவாசிக்கு அல்லது ஆதிவாசிக்கு ராக்கெட் விண்கலம் எப்படியோ அப்படி அவர்களுடைய தொழில்நுட்பமும் நமக்கு இருக்கும். அவர்கள் வாழும் கிரகங்களுக்கு ஆபத்து வரும் போது, அல்லது அவர்கள் கிரகங்களில் வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது, அவர்கள் மற்ற கிரகங்களில் உள்ள தண்ணீர் உள்ளிட்ட இயற்கைப் பொருட்களை பிரம்மாண்டமான விண்வெளிக் கப்பல்களுடன் வந்து அவர்கள் சூறையாடலாம். எனவே நாம் காலத்தை வெல்லும் வயதை அடைவதையும், வேற்று கிரகங்களில் சென்று குடியேறும் அளவுக்கான திறமையும் ஒரு காலத்தில் நாமும் பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அமெரிக்க இடைத்தேர்தல் - ஒபாமாவின் ஆளும் கட்சிக்கு பாரிய பின்னடைவு?



அமெரிக்காவில் அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில், குடியரசு கட்சி அதிக இடங்களை  கைப்பற்றியிருப்பதுடன், ஒபாமா தலைமையிலான ஆளும் ஜனநாயக கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த செவாய்க்கிழமை, அமெரிக்காவின், 37 மாகாண கவர்னர், நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 437 மேல் சபை  உறுப்பினர்கள் மற்றும் 37 செனட் உறுப்பினர்கள் பதவிக்கான இடைத்தேர்தல் நடந்தது.

நேற்று காலை முதல் இத்தேர்தலின் முடிவுகள் வெளிவரத்தொடங்கின. இதில் பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சி  பெரும்பாலான இடங்களை கைப்பற்றியிருப்பதுடன், செனட் சபை உறுப்பினர்களின் பெரும்பான்மையையும் கைப்பற்றியுள்ளது.

இக்கட்சியை சேர்ந்த ஜான் போயனர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
இதனால் குடியரசு கட்சியின் ஆதரவின்றி எந்த ஒரு சட்டத்தையும் செனட் சபையில் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிதி நெருக்கடியால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சமயம், பல இலட்சக்கணக்கான அமெரிக்கர்கள்  வேலையிழந்தனர். இந்நிலையில் அதிபராக பதவியேற்ற பாரக் ஒபாமா இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என  எதிர்பார்க்கப்பட்ட போதும் நினைத்தளவுக்கு, அவரால் சாதிக்க முடியாமல் போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன.

மேலும் வேலைவாய்ப்பு வழங்கலிலும்  பெரிய அளவில் மாற்றம் வரவில்லை. இந்த அதிருப்தி காரணமாகவே, தங்களது ஹீரோ என  கருதிய ஒபாமாவையும் உதறித்தள்ள மக்கள் முடிவெடுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மெராபி எரிமலை வெடித்ததன் தாக்கம் - அஸ்திரேலியா விமானத்தில் இயந்திர கோளாறு


Qantas Airbus A380 after making emergency landing at Singapore's Changi airport
அஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஜெட்லைனர் பயணிகள் விமானத்தில் தீப்பிடித்துவிட்டதாக வெளியான பரபரப்பு தகவலால், குறித்த விமானம் சிங்கப்பூரில் அவசரமாக தரையிறங்கியது.
இன்று (வியாழக்கிழமை) காலை அஸ்திரேலியாவை நோக்கி 459 பயனிகளுடன் குவாண்டாஸ் விமானம் சென்றுகொண்டிருந்தது. இந்தோனேசியாவுக்கு மேலாக பறந்துகொண்டிருக்கையில் விமானத்தின் நான்கு இன்ஜினில் ஒன்று கோளாறினால் நின்று விட்டது. அண்மையில் இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்ததன் தாக்கத்தால் விமான எஞ்சின் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக குறித்த விமானம் சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டு என்ஜின் மாற்றப்பட்டது. பின்னர் அஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டது.

எனினும் குறித்த விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டதாகவும், தீப்பிடித்து விட்டதாகவும் முன்னர் வந்திருந்த செய்திகளை அஸ்திரேலியா முற்றாக மறுத்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இரசாயன கழிவுகளினால் பாரிய விளைவுகள் ஏற்படக் கூடிய ஆபத்து

இரசாயன கழிவுகளினால் பாரிய விளைவுகள் ஏற்படக் கூடிய ஆபத்து நிலவுவதாக சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இரசாயன கழிவுகளினால் உலகின் 18 – 22 மில்லியன் வரையிலான மக்கள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் கிறீன் க்ரொஸ் அமைப்பும், அமெரிக்காவின் பிளக் ஸ்மித் நிறுவகமும் இணைந்து ஆய்வுகளை நடத்தியுள்ளன.
எரிவாயு போக்குவரத்து, பற்றரி பாவனை, ஏனைய இலத்திரனியல் கழிவுகள் போன்றவற்றினால் ஆபத்து ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரசாயன கழிவுகளினால் சுமார் 100 மில்லியன் மக்கள் சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்கக் கூடுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புற்று நோய், உள ரீதியான நோய்கள், உறுப்புக்கள் செயலிழக்கின்றமை போன்ற பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கண்பார்வையற்றோர் இனிப் பார்க்கலாம்: ஆச்சரியம் !

Magic_Eye.jpg Paige-eye image by theGXchild143
கண்பார்வை அற்றோரின் கண்களுக்குள் (ரெட்டினா வுக்குள்) 3 மில்லி மீட்டர் விட்டமுடைய எலக்ரானிக் கருவி ஒன்றை இடுவதன் மூலம் கண்பார்வையற்றோர் பார்க்கலாம் என தற்போது நிரூமபனமாகியுள்ளது. பிரித்தானியாவில் இத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டாலும் முதல் முதலாக ஜெர்மனியில் பரீச்சிக்கப்படுப் பார்க்கப்பட்டுள்ளது. 3 மி.மி விட்டம் கொண்ட இச் சிறிய எலக்ரானிக் கருவி, சுமார் 1,500 ஒளிக் கீற்றுகளை உள்வாங்கி, அதனை விம்பமாக மாற்றி மூளைக்குச் செல்லும் உணர்வு நரம்புகளுக்கு நேரடியாகச் செலுத்துகின்றன. இந்த அதீத கண்டுபிடிப்பால் பல பார்வையற்றோர் பயன்பெற இருக்கின்றனர்.
மனித குலமே வியக்கும் வண்ணம் இக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளதாக வியக்கப்படுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, November 3, 2010

சூரிய சக்தியில் வயர்களற்ற கணினி 'கீபோர்ட்' : லொஜிடெக் அறிமுகம்

logitech dinovo mac edition wireless keyboard
லொஜிடெக் (Logitech) நிறுவனம் அண்மையில் கணினிகளுக்கு பயன்படுத்தப்படும் சூரியசக்தியில் இயங்கக்கூடிய வயர்களற்ற கீபோர்ட்டை (K750) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் இருந்த வயர்களற்ற (Wireless) கீபோர்ட்கள், பற்றரிகளின் மூலமே இயங்கி வந்தது. ஆனால் லொஜிடெக்கின் புதிய கீபோர்ட்கள் சூரிய ஒளியின் மூலம் இயங்குகிறது.
ஒரு தடவை முற்றாக 'சார்ஜ்' செய்தால், சுமார் 3 மாத காலம் வரை தொடர்ச்சியாக இதனைப் பயன்படுத்த முடியுமென லொஜிடெக் உறுதியளிக்கின்றது.
இது 80 அமெரிக்க டொலர்களில் விற்பனையாகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இந்தோனேசியாவில் மீண்டும் குமுறியது எரிமலை : விமானங்கள் ரத்து


இந்தோனேசியாவில் மீண்டும் எரிமலை குமுறத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மெளன்ட் மெராபி எரிமலை கடந்த சில வாரங்களாக வெடித்து குமுறி வருகிறது. ஆனால் இந்த முறை எரிமலை குமுறலால் ஏற்பட்ட புகை அதிக அளவில் வெளியாகி வருவதால் பல்வேறு விமானங்களை ரத்து செய்துள்ளன இந்தோனேசிய விமான நிறுவனங்கள்.
மலேசியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா மற்றும் சிங்கப்பூரின் சில்க் ஏர் ஆகியவை தங்களது சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளன. இருப்பினும் விரைவில் தங்களது சேவை தொடங்கும் என அவை தெரிவித்துள்ளன.
இந்தோனேசியாவைச் சுற்றிலும் தற்சமயம் சர்வதேச விமானப் போக்குவரத்து லேசான பாதிப்பை சந்தித்துள்ளதாக அமெரிக்காவும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட கடும் புகை காரணமாக ஐரோப்பாவின் பெரும் பகுதிக்கு விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உலகின் மிகப்பெரிய பெரிய முதலையொன்று புளோரிடாவில் பிடிக்கப்பட்டுள்ளது.


உலகின் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவைகளில் மிகப்பெரிய பெரிய முதலையொன்று புளோரிடாவில் பிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த முதலையானது 41 நீளமும் 3.5 உயரமும் ஆகும். இதன் மூலம் இது பிடிக்கப்பட்ட முதலைகளில் மிகப் பெரிய முதலையாக கருதப்படுவதோடு உலக சாதனை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த முதலையின் 650 பவுண்ஸ் எனவும் 50 தொடக்கம் 60 வயது என நம்பப்படுகின்றது. இதன் மூலம் உலகத்தில் மிக நீளமாக கருதப்பட்ட 14 நீளமுடைய முதலையின் சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. 



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இராட்சத தவளையிடம் சிக்கிய எலியின் பரிதாப நிலை.....!


ஒரு இராட்சத தவளை எலியொன்றை விழுங்கும் புகைப்படமானது தற்போது இணையத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தவளையின் வாயில் சிக்கிய எலி பரிதாபமாக பார்க்கும் அப்புகைப்படமானது நெஞ்சை நெகிழவைப்பதாக உள்ளது. 

எனினும் ' தக்கன பிழைத்தல் ' ( Survival of the fittest) - மிகத் தகைமையுடைவையே உலகில் வாழும் என்ற சார்ள்ஸ் டார்வினின் கொள்கைக்கேற்ப இது சாதாரண விடயமாகும்.

எனினும் இத்தவளைகள் தொடர்பில் எழுந்த ஆர்வமேலீட்டால் இது தொடர்பாக ஆராயமுற்பட்டபோது நமக்கு கிடைத்த சுவாரஸ்யமான தகவல்கள் சில இதோ உங்களுக்காக ........

பொதுவாக எமது சூழலில் காணப்படும் தவளைகள் உருவத்தில் மிகவும் சிறையவை. சாதாரண பூச்சி புழுக்களை மட்டுமே உணவாகக் கொண்டு உயிர்வாழ்பவை.

ஆனால் ஆபிரிக்க காடுகளில் வாழும் புல் ஃப்ரொக் ( Bull Frog ) என்றழைக்கப்படும் எருமைத் தவளைகள் உருவத்தில் பெரியவை. சுமார் 2 கிலோகிராம் வரை நிறை கொண்டவை.

இரை வேட்டையாடுவதில் மிகத்திறமைசாலிகளான இவை பாம்புக்குட்டிகள், பறவைகள் ஆகியவற்றையே உணவாக்கிக் கொள்பவை.

தனது (தவளை) இனத்தைக் கூட இவை விட்டு வைப்பதில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

கூரிய பற்களைக் கொண்டுள்ள இவை சிலவேலைகளில் மனிதர்களையும் கடித்து விடுவதுண்டு. 

சுமார் 12 அடிவரை உயரம் வரை பாய்ந்து இரையைப் பிடிக்கும் திறன் கொண்டவை இந்த இராட்சத தவளை. இதன் பிடியில் சிக்கிய எலி மட்டும் தப்பிக்கவா முடியும்?

உலகில் மிகப்பெரிய தவளையினமான கமரூன் நாட்டில் அதிகளவில் காணப்படும் 'கோலியாத்' எனப்படும் தவளையினம் ஆகும் .

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

டிஸ்கவரி விண்கலம், தனது கடைசி பயணத்தை மேற்கொள்கிறது


சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்காக சேலஞ்சர், கொலம்பியா, டிஸ்கவரி, அட்லான்டிஸ், எண்டவர் என்ற 5 விண்கலங்கள் அமெரிக்க விண்வெளி மையம் நாசா பயன்படுத்தி வந்தது.
இதில் சேலஞ்சர் கடந்த 1986ம் ஆண்டும், கொலம்பியா கடந்த 2003ம் ஆண்டும் வெடித்து சிதறியது. மீதமுள்ள 3 விண்கலங்கள், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டு வந்தது.

கடந்த 30 ஆண்டுகளாக பணியில் இருந்த அனைத்து விண்கலங்களும் அடுத்த ஆண்டுக்குள் பணியிலிருந்து விடுவிக்கப்படுகின்றன. புதிய மாடல் விண்கலங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இந்நிலையில் டிஸ்கவரி விண்கலம், தனது கடைசி பயணத்தை  மேற்கொள்கிறது. இதற்காக இந்த விண்கலம் நேற்று புளோரிடாவில் உள்ள கேப்கேனவரால் ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

கடைசி பயணத்துக்காக டிஸ்கவரி விண்கலம், எடுத்துச் செல்லப்படுவதை, நாசா ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் நேற்று ஒருவித சோகத்துடன் பார்வையிட்டனர். எண்டவர் விண்கலம் தனது கடைசி பயணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கவுள்ளது.
விண்கலங்களின் பயன்பாடு ஒவ்வொன்றாக முடிவுக்கு வருவதால், நாசாவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஒப்பந்த ஊழியர்களும் அடுத்த மாதம் 1ம் தேதியுடன் வேலையிழக்கின்றனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஒபாமா வருகைக்கு ஒரு நாள் செலவு ரூ. 900 கோடி


அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையை முன்னிட்டு அமெரிக்க அரசு ஒரு நாளைக்கு ரூ. 900 கோடி செலவு செய்ய உள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் ஒபாமாவுடன் இந்தியா வருகிறார்கள். ஒபாமாவின் பாதுகாப்பு, அவருடன் வரும் குழுவினருக்கான செலவுகள் என அனைவருக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு மொத்தம் ரூ. 900 கோடியை அமெரிக்க அரசு செலவிட உள்ளது.


இந்த தகவலை, ஒபாமா வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் மகாராஷ்டிர மாநில உயர் அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.


நவம்பர் 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை 4 நாள்கள், ஒபாமா இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஒபாமாவுக்காக அதிநவீன வசதிகளுடன் சூப்பர் கார் இந்தியா வருகை அணுகுண்டு தாக்குதலுக்கு உத்தரவிடும் சிறப்பு பட்டனும் உள்ளது


அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியா வருவதை முன்னிட்டு அவருடைய அதிநவீன `சூப்பர்' காரும் இந்தியா வருகிறது. ரசாயன, உயிரி தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தாலும் பாதுகாப்பாக இருக்கும் அந்த காருக்குள் அணுகுண்டு போட உத்தரவிடும் `விசை' இடம் பெற்றுள்ளது.

7 டன் எடை

அமெரிக்க அதிபர் ஒபாமா, வருகிற சனிக்கிழமையன்று இந்தியா வருகிறார். இந்தியாவில் 4 நாட்கள் தங்கி இருக்கும் அவர், மும்பை மற்றும் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். எனவே, அவர் பயணம் செய்வதற்காக அமெரிக்க அதிபரின் பிரத்தியேக கார் இந்தியா வருகிறது. மொத்தம் ஏழு டன் (7 ஆயிரம் கிலோ) எடை கொண்டது, அந்த கார்.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த கார், `காடிலாக் ஒன்' என அழைக்கப்படுகிறது. மிக, மிக அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை கொண்டதாக அந்த கார் உள்ளது. ரசாயன தாக்குதல், உயிரி தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல் என எந்தவித தாக்குதலும் அந்த காரை ஒன்றும் செய்ய முடியாது.

அணுகுண்டு போட உத்தரவிடலாம்

காரின் மேற்புறத்தில் ராணுவ தரத்திலான பாதுகாப்பு ஸ்டீல் கவசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, துப்பாக்கிக் குண்டுகளும் காரை துளைக்காது. கார் ஜன்னல் கண்ணாடிகள் ஒவ்வொன்றும் 5 அங்குலம் தடிமன் கொண்டவை. மேலும், உடைக்க முடியாத தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இந்த பிரபஞ்சத்திலேயே உச்சகட்ட பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஒரே சூப்பர் வாகனம், அமெரிக்க அதிபரின் கார் என்றால் மிகையாகாது.

அந்த காருக்குள் இருந்தபடியே அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை, துணை ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ஆகியோரை எந்த நேரமும் ஒபாமா தொடர்பு கொள்ளும் வகையில் அதிநவீன தொலைத் தொடர்பு வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, காருக்குள் இருந்தபடியே அணு ஆயுத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவிடும் வகையில் `சிறப்பு பட்டன்' (விசை) காருக்குள் உள்ளது.

40 விமானங்கள், 6 கார்கள்

இந்தியாவுக்கு அதிபர் ஒபாமா வருவதால் இந்த காரும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி நகரத் தெருக்களில் இது வலம் வரும். இது தவிர, ஒபாமா வருகையை முன்னிட்டு அமெரிக்காவில் இருந்து 40 விமானங்கள், 6 ஆயுதம் தாங்கிய கார்கள் ஆகியவையும் வருகின்றன. அமெரிக்க உளவுப் பிரிவு சார்பாக மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இரண்டு சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்குள் அதிபர் ஒபாமா செல்லும் ஒவ்வொரு அங்குல இடத்தையும் அந்த உளவுப் பிரிவினர் உன்னிப்பாக கண்காணிப்பார்கள். ஒபாமா மற்றும் அவருடைய மனைவி செல்வதற்காக 3 கடற்படை ஹெலிகாப்டர்களும் நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒபாமா பாதுகாப்பு பணிகளில் 30 மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்படுகின்றன.

மாநிலங்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் ஒபாமா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுத் துறை உஷார் படுத்தியுள்ளது. எனவே, மராட்டியம், டெல்லி மற்றும் காஷ்மீர் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

தீபாவளி விழாக்காலம் என்பதால் டெல்லியில் உள்ள முக்கிய சந்தைகளில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது, ஒபாமா வருகையும் இருப்பதால் கூடுதலாக 10 சந்தைகளில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், அனைத்து மாநில அரசுகள் மற்றும் �னியன் பிரதேச அரசுகளுக்கும் தீவிரவாத தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, November 2, 2010

யாழில் நீண்டு கொண்டு செல்லும் அதிசய வாழைக்குலை


யாழ்ப்பாணத்த்தின் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மணற்காடு - குடத்தனைப் பகுதியிலுள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்திலுள்ள வாழையொன்று 10 அரை அடி நீளமான வாலைக்குலையொன்றை ஈர்ந்துள்ளது.

கடந்த சில கிழமைகளுக்கு முன்னர் சாதாரணமாகவே இக்குலை காணப்பட்டது. ஆனால் பின்னர் குலையின் அளவு நீண்டு வ்ரத் தொடங்கியது.

எனினும் விவசாயி யாருக்கும் தெரியாமல் இவ்வளவு நாட்களும் இவ்வதிசயத்தை மறைத்து வைத்திருந்தார்.

தற்போதும் இக்குலை தொடாச்சியாக நீண்டு கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏராளமான பொது மக்கள் இவ்வதிசயத்தை அறிந்து நேரில் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஜேர்மனி வீதியொன்றின் நடுவில் பாரிய குழி! மக்கள் அதிர்ச்சி


ஜேர்மனியின் Schmalkalden நகரைச்சேர்ந்த மக்கள் இன்று காலை எழுந்து தமது வீடுகளின் கதவுகளையும் யன்னல்களையும் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

இரவோடு இரவாக அந்த நகரின் வீதியில் பாரிய குழி ஏற்பட்டிருந்தது தான் அவர்களது அதிர்ச்சிக்குக் காரணம்.

இந்தக் குழியால் வீதி இரண்டாகப் பிளந்து காணப்பட்டது. வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு கார் இந்தப் பாரிய குழியின் அந்தரத்தில் தொங்கியபடி காணப்பட்டது. வழமையான வாழ்விட நகரமான இந்த நகரில் பல கராஜுகள் திடீரென இடிந்து விழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இது ஒரு மண்சரிவு அல்லது நில அதிர்வு போல் காணப்படுகின்றது. 20 மீட்டர் ஆழமும், 40 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்தக் குழி காணப்படுகின்றது. அண்மையிலுள்ள 23 கட்டிடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதற்கான காரணத்தை கண்டறிவதில் சம்பந்நப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆச்சரியத்தக்க வகையில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, November 1, 2010

இந்தோனேசியாவில் இன்று மற்றுமொரு எரிமலை வெடிப்பு


இந்தோனேசியாவில் மற்றுமொரு பயங்கர சக்தி வாய்ந்த எரிமலை வெடிப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
எரிமலை வெடிப்பினால், ஆயிரம் அடி உயரத்துக்கு சாம்பல் புகைமூட்டம் காணப்படுகின்றது. பாரிய சத்தத்துடனான இந்த எரிமலை வெடிப்பு பற்றிய புதிய அறிக்கைகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் மவுண்ட் மெராபி என்னுமிடத்தில் கிட்டத்தட்ட 20 எரிமலைகள், சாம்பலைக் கக்கிய வண்ணம் காணப்படுகின்றன எனவும் 6 கிலோ மீற்றர் தூரத்திற்கு சாம்பல் புகை வெளியேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வடபகுதி சார்ந்த மலைச்சரிவில் ஏற்கனவே 38 பேர் வரை உயிரிழந்துள்ளதாக நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.
மென்டாவி தீவின் மேற்குப் பகுதிகளில் படகுகளும், ஹெலிகொப்டர்களும் மக்களை மீட்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தன.
வெடிப்பையடுத்து ஏற்பட்ட சுனாமி தாக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள், பாடசாலைகள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டிருந்தன.
மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து, இராணுவ ஹெலிகொப்டர்கள் மூலம் படுகாயமடைந்தோர் அழைத்து வரப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மீட்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், வைத்தியர்கள், படையினர் அனைவருக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாக இந்தோனேசியாவின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி எட்வேர்ட் தெரிவித்தார்.
10FKC04362.jpg image by nishanthi_04
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF