Sunday, July 11, 2010

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர். தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனிகளில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன்மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.
எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது. அன்றாட வேலைகளின்போது ஏற்படும் சக்தி இழப்பை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுபற்றி வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மைய பேராசிரியர்கள் கூறுகையில்,
‘‘ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய வந்துள்ளது. இந்த பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது’’ என்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, July 10, 2010

உலகின் அதிவேக கார் புகாட்டி வெய்ரான்!


உலகின் அதிவேக காராக உருவெடுத்துள்ளது புகாட்டி வெய்ரான். இதன் வேகம் மணிக்கு 268 மைல்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பூமியிலேயே அதிவேகமான காராக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
காரை ஸ்டார்ட் செய்து கிளம்பியதும் மணிக்கு 60 மைல்கள் என்ற வேகத்தை எட்ட இந்தக் கார் எடுத்துக் கொள்ளும் நேரம் வெறும் 2.5 விநாடிகள்தான். அதேபோல 124 மைல்கள் என்ற வேகத்தை எட்ட 7.3 விநாடிளையும், 186 மைல்கள் என்ற வேகத்தைப் பிடிக்க 15 விநாடிகளையும் மட்டுமே இது எடுத்துக் கொள்கிறது.
புகாட்டி கார் ஏற்கனவே கின்னஸ் சாதனையையும் மேற்கொண்டுள்ளது. அந்தக்காரை ஓட்டிய டிரைவர் பியரி ஹென்றி ரபேனல் அதிகபட்சம் மணிக்கு 265.9 மைல்கள் மற்றும் 269.8 மைல்கள் வேகத்தில் காரை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
புகாட்டி வெய்ரான் சூப்பர்ஸ்போர்ட் கார், 8 எல் டபிள்யூ 16 என்ஜினில் இயங்குகிறது. இந்த என்ஜின் 12000 குதிரை சக்தியில் இயங்கக் கூடியதாகும்.
ரேஸ்களில் பயன்படுத்தக் கூடிய கார்களுக்கான வடிவமைப்புடன் கூடியதாக இந்த கார் உள்ளதாலேயே இந்த அளவுக்கு மின்னல் வேகத்தில் பயணிக்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்

கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை?
1. Boot Sector Viruses:
அதாவது, பூட் செக்டார் வைரஸ் என்பது, நமது கணினியின் BIOS என சொல்லிப்படும் "அடிப்படை உள்ளீட்டு அல்லது வெளியீட்டு முறை" எனும் சிஸ்டம் மீது தான் தாக்குகின்றன. பொதுவாக வைரஸ் வந்ததை உண்ர்ந்தால் உடனே இயங்குதள நிறுவி குறுந்தகட்டை தேடி எடுத்து, மறு நிறுவல் செய்து விடுவோம். அப்படி எல்லாம் செய்தால் இந்த பூட் செக்டார் வைரஸை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. நீங்கள் புதியதாக ஒரு HDD வாங்கி வந்து வைத்தாலும் சரி, அதுவும் பாதிக்கப்படும். காரணம் இது தாக்குவது பாதிப்பது எல்லாம் MBR (MBR என்றால் Master Boot Record ஆகும். இது இயங்குதளத்தை கண்டுபிடித்து இயங்க வகை செய்யும்) எனும் தகவலைச் சேமித்துவைத்திருக்கும் BIOS-இன் பகுதியைத் தான். அதனால் BIOS ரெகவரி டிஸ்க் ஒன்று உருவாக்கி BIOS-ஐ மீள்-நிறுவல் செய்து, HDD-இனையும் அழித்து, இயங்குதளம் மீள்-நிறுவல் செய்து தான் கணினியைக் காப்பாற்ற முடியும்.
2. கூடாத நிரல் அல்லது கோப்புகள்:
இந்த வகை வைரஸ்கள், நிரல்களாகவோ அல்லது கோப்பாகவோ ஹார்ட் டிஸ்கில் இயங்குதளத்தின் பார்ட்டீசனில் உட்கார்ந்துக் கொள்ளும். இவை, இயங்குதளம் தொடங்கும் போதே, தானும் தொடங்கி தன் கூடாத செய்கையினால் கணினியை பாதிப்புக்குள்ளாக்கும். அந்த நிரல்/கோப்பு எதுவென்று தெரிந்தாலே, Task Manager கொண்டு நிறுத்திவிடலாம். பின்னர், அழித்தும் விடலாம்.
3. Stealthy Virus:
இவையும் இரண்டாவதாக சொல்லப்பட்ட வைரஸ் போலத் தான். ஆனால், இந்த வகை வைரஸ்கள் தனது அடையாளத்தைக் காட்டிக் கொள்வதே இல்லை. இதனால், இதனைக் கண்டுபிடித்து முடக்க/அழிக்க மிகவும் கடினமானதும் கூட. Anti-Virus இருக்கிறதே என தப்புக் கணக்குப் போடாதீர். வேட்டியாடும் Anti-Virus-களிடம் தான் இதன் விளையாட்டே. நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்யத் தொடங்கியவுடன் தனது கோப்பிற்கு, ஒரு நல்ல நிரல் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டுத் தானே தற்காலிகமாக முடங்கிக்கொள்ளும். இதனால், Anti-virus-களிடம் இது அகப்படாது தப்பித்துவிடும்.
4. MultiPartite:
இந்த வகை வைரஸ்கள் மேலே சொல்லப்பட்ட மூன்று வகையிலும் சார்ந்தவை. இதனால், இது பாதிக்காத இடமே கணினியில் இருக்காது. இவ்வாறான வைரஸ்கள் பெரும்பாலும் தாக்குவது குறைவாக இருந்தாலும், தாக்கப்பட்டால் பெரும்பாதிப்பு உண்டாகும்.
5. Polymorphic:
பாலிமார்பிக் வைரஸ்கள், தங்களைத் தாங்களே திருத்தி எழுதிக்கொள்ளும் வல்லமைக் கொண்டவை. இதனால் வைரஸ் ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு ஸ்பைவேராகவும், ஸ்பைவேருக்கு ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு வைரஸாகவும் மாற்றிக் கொண்டு பாதிப்பை உண்டாக்கிய வன்னம் இருக்கும்.
6. Macro
மேக்ரோ என்பது, சொல் திருத்திகளில் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும் ஒரு பணியை தானே செய்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் நிரலாக்கம் தான். அதையே தீங்கிழைக்கும் ஒரு பணியை இயக்க நிரலாக்கப் படுவது தான் மேக்ரோ வகை வைரஸ்கள். பெரும்பாலும், நமது மின்னஞ்சல் முகவரியில் இருந்து எல்லோருக்கும் மெயில் அனுப்புவது போன்ற சிறு சிறு தொந்தரவு தரும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, July 9, 2010

கண் வைத்தியர்களுக்கு ஆப்பு : மொபைல் மூலம் கண் பரிசோதனை

கண்களை பரிசோதித்து கண்ணாடி அணிவது எல்லாம் ஒரு காலம் ஆனால் இப்போது மொபைல் மூலம் எளிதாக மருத்துவமனைக்கே செல்லாமல் நம் கண்னை பரிசோதிக்கலாம்.
கண்களை பரிசோதிக்க எத்தனையோ பல புதிய வழிமுறைகள் இருந்தாலும் அத்தனையும் தாண்டி இப்போது புதிதாக ஒரு மொபைல் போன் மற்றும் சிறிய கருவி துனை கொண்டு நம் கண்ணை பரிசோதித்துக்கொள்ளலாம் எந்த மருத்துவரும் தேவையில்லை எந்த மருத்துவமனைக்கும் செல்ல வேண்டாம் காலத்தின் வேகமான வளர்ச்சியால் விஞ்ஞானிகள் இந்த புதுவித கருவியை உருவாக்கியுள்ளனர்.
இந்த கருவியை நம் மொபைல் போனில் பொருத்திவிட வேண்டும் இதற்க்கான அப்ளிகேசனும் இலவசமாக கிடைக்கிறது. இதை நிறுவிக்கொண்டு நம் கண்னை எளிதாக சோதிக்கலாம். எந்த கண்ணாடி லென்ஸ் அளவு என்ன என அனைத்தையும் நமக்கு காட்டிவிடும் இந்த கருவியின் ஹார்டுவேர் சிக்கிராப் 2010 கொண்டும் இதற்க்கான பெயர் நெட்ரா என்றும் வைத்துள்ளனர்.
அனைத்து ஸ்மார்ட்போன் மற்றும் சேம்சங்,கூகுள் நெக்சஸ் போனிலும் இது சோதிக்கப்பட்டு சோதனை ஓட்டத்திலே அனைவரின் கவனத்தை மட்டுமல்ல நம்பிக்கையையும் பெற்றுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த கருவி விலைக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

History Of Microsoft

30 years ago, Bill Gates and a group of friends enjoyed working with computers. Today, Microsoft is a multibillion dollar company and rides the crest of the internet wave.


It is hard to broach the subject of the birth of Microsoft without mentioning the name of Bill Gates, the founder and leader of Microsoft Corporation. Bill Gates was born William Henry Gates III on October 28, 1955. He was born to a family that was successful in business, living a comfortable upper middle class life in Seattle, Washington.

Early in his elementary school days, Bill Gates quickly shot to the head of the class, consistently outscoring his peers in most subjects, but especially math and science. His parents soon enrolled him in Lakeside Prep School, where the atmosphere was intellectual enough to stimulate the young Gates. This move to Lakeside would prove historic, for it was here, in the spring of 1968, that he was introduced to computers.

At that time, computers were still too large and expensive for the school to purchase one of its own. Over the next ten months or so, the school struck agreements with various corporations who allowed the students to use their computers. Bill Gates, his buddy Paul Allen and a handful of others quickly took to computing. In fact, they began to skip classes, opting instead to stay in the computer room and write programs, read computer books and find out exactly how these machines worked. They soon learned to hack the system, and altered and crashed valuable files until they were banned from the computer. Soon, however, Bill and his friends were actually hired by the computer company to find bugs and explore weaknesses in the system, which kept causing the computers to crash. Instead of paying the boys for their time, they were granted something even better--unlimited computer time.

Gates has been quoted as saying that that was the time when he got into computers fulltime. "I mean, then I became hardcore. It was day and night," he said. The boys used their time eating, drinking and breathing computers. They studied manuals, explored the system, and hounded the employees with questions until they had formed a base of knowledge that would eventually lead to the formation of Microsoft.

The computer company that was hiring the group went out of business in 1970, and the boys had to find alternate sources for computer time. They were soon hired by Information Sciences Inc. to write a program for payroll. This time they actually earned money as well as enjoying the unlimited computer time. It was during this time that the group gained notoriety for their skill in computer programming. They were hired or contracted by various organizations to find bugs and fix them. Each job helped Gates and his friends learn their skill and delve ever deeper into the world of programming.


In the fall of 1973, Gates left for Harvard University. He enrolled as a prelaw student, but spent most of his time in the campus computer center, programming away. He stayed in touch with Paul Allen and they continued to talk about future projects and the possibility of one day having their very own business. Allen even moved to Boston to be closer to Gates, so they could continue working on projects. Allen continually urged Gates to quit school and work with him full-time, and Gates was unsure of what he wanted to do. This was soon to change.

One year later, Paul Allen saw the first microcomputer on the cover of a magazine. He bought the magazine and went immediately to show it to Gates. They realized the time was right. The home PC business was about to explode and someone would need to provide software for the machines. By stretching the truth somewhat, Gates arranged for a meeting with the Altair manufacturers. He had called them to let them know he had a program written for them. After the appointment was made, Gates and Allen stayed up for nights, feverishly writing the program he had promised. It worked perfectly at the meeting, and everyone was impressed. They sold the program, and saw that this was something they could do for real. Within a year, Gates had dropped out of Harvard and Microsoft was formed.

The company went through some rough first years, but eventually were able to license MS-DOS to IBM. The IBM PC took the public by storm, and its success signaled the success of Microsoft. Microsoft continued writing software, for businesses as well as the consumer market. In 1986, the company went public, and Gates became a 31-year old billionaire. The next year, the first version of Windows was introduced, and by 1993 a million copies per month were being sold.

In 1995, Gates knew that the Internet was the next area of focus, and the course of Microsoft shifted dramatically. The popular Internet Explorer browser soon became a bestseller. Today, Microsoft software is everywhere, and indeed, is almost synonymous with the terms "computer" and "Internet." 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஊழியர்களை குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு

பிரபல சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோ சாப்டிலும், ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பல முன்னணி நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையை கையாளத் துவங்கியுள்ளன.
பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க துவங்கியுள்ளன.
சிறிய அளவில் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 5,000 பேரை வேலை நீ்க்கம் செய்தது. இந் நிலையி்ல் இந்த வாரத்தில் மேலும் பலரை நீக்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.எத்தனை பேர் நீக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை.
ஆனால், அது மிகச் சிறிய அளவிலேயே இருக்கும் என்று அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாப்ட் கிளைகள் முழுவதிலும் இந்த பணி நீக்கம் அமலாக்கப்படும் என்று தெரிகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஸ்பெயின் அணி வெற்றி பெறும்-அக்டோபஸ் கணிப்பு


ஜேர்மன் பெர்லினில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் போல் (Paul )என்ற அக்டோபஸ் உதைப்பந்தாட்ட போட்டிகளின் முடிவுகளை சரியாக குறிப்பிட்டு அனைவரையும் பிரமிக்க வைத்து வருகிறது.

இந்த வகையில் வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் உதைப்பந்தாட்ட போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெறும் என அக்டோபஸ் (Paul ) தெரிவித்துள்ளது.

தொடர்ந்து போட்டி வெற்றி தோல்வியை சரியாக கணித்து வரும் அக்டோபஸ் இறுதி போட்டியின் போது என்ன சொல்லப் போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இந்தது.இந்நிலையில் இறுதியில் ஸ்பெயின் வெற்றி பெரும் என அக்டோபஸ் கணித்துள்ளது .இது நெதர்லாந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, July 8, 2010

சுவிஸில் தயாரிக்கப்பட்ட சூரியகல விமானம் முதல் தடவையாக இரவில் பயணத்தை ஆரம்பித்துள்ளது அங்கிலம்


Solar Impulse, which is the first airplane designed to fly day and night without fuel, is attempting to fly for the first time at night. The plane took off at 6:51 this morning, local time from the Payerne airbase in Switzerland, and as of this writing, everything was proceeding as planned, and night was just beginning to fall. "It's not just a question of flying the plane, but the team working together on the strategy of making the profile of flying through the night," said Bertrand Piccard, president and founder of the Solar Impulse project, during awebcast update on the flight. "For now, cross fingers, everything is going well. The sky is completely clear, (pilot) Andre (Borscherg) is warm, and so he is looking forward to getting to a higher atmosphere, of 13,000 feet. "

Piccard said the entire flight is a choreography of timing and execution. They don't want the plane to reach the desired altitude too quickly, because the batteries need to be fully charged exactly when night falls, and at the top of the airplane's climb. The lightweight lithium batteries also need to stay within a certain temperature range.

Borscherg will stay at the highest altitude for awhile, then descend during the night. "We have to manage energy and efficiency," Piccard said. "If everything works well, Andre will be asked to continue the flight through the night. But if there is any problem before night, we want to bring the plane down to land before 10 pm local time."
Piccard said this effort is not just about flying an airplane on solar power, but "to show everyone on this planet that we are not so dependent on non-renewable energies as we may think."
The ultimate goal of this project is to fly the plane around the world without stopping, which the team hopes to do in 2012. The plane made its maiden voyage in April of 2010.
You can watch the webcast at this link."You can really follow it and really experience the suspense," said Piccard.
"For 7 years now, the whole team has been passionately working to achieve this first decisive step of the project", said André Borschberg a few minutes before easing himself into the cockpit for a flight expected to last until Thursday morning.
The plane has a 61 meter wingspan, and the wings are covered with 12,000 state-of-the-art photovoltaic solar cells that power the plane. Using so-called intelligent light materials and new energy storage, the plane will be able to fly both night and day, completely on solar power. Solar impulse weights 1,600 kg and can fly at speeds up to 70 kmh at a maximum altitude of 8,500 m (27,900 ft).
Here is the flight profile for Solar Impulse HB-SIA:
The plane will slowly ascend all day to an altitude of 8,500 meters, while at the same time charging its batteries in preparation for the night flight. When the sun’s rays stop being strong enough to supply the solar cells (about two hours before sunset) with energy, the HB-SIA will start a slow descent, reaching an altitude of around 1,500 meters by 23:00. It should then carry on flying, using the energy stored in its batteries, until the next sunrise. The big question is whether the pilot can make efficient use of the battery energy to fly throughout the night. If this mission is successful, it will be the longest and highest flight ever made by a solar plane.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சுவிஸில் தயாரிக்கப்பட்ட சூரியகல விமானம் முதல் தடவையாக இரவில் பயணத்தை ஆரம்பித்துள்ளது


சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட சூரியகல விமானம் முதல் தடவையாக இரவு நேரத்தில் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு சுவிட்சர்லாந்தின் பேய்ரென் விமான தளத்திலிருந்து குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
குறித்த விமானத்தில் இரவு நேர வெள்ளோட்டம் கடந்த வாரம் நடத்தப்படவிருந்த போதிலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.
பகல் வேளையில் சூரிய கலங்களில் சக்தியை சேமித்து அதனை இரவு நேரத்தில் பயன்படுத்தி குறித்த விமானம் இயங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் வாரங்களில் தொடர்ச்சியாக 36 மணித்தியாலங்கள் வானில் பறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மனநோய் ஒரு சமூக வியாதியா!

மனநோய் ஒரு சமூக வியாதி. ஆடையை கிழித்துக் கொண்டு அலைபவர்கள் மட்டும் மனநோயாளிகள் அல்ல. ஆசைகள் நிறைவேறாதவர்கள், விருப்பங்களை அடக்கிக் கொண்டவர்கள், அடக்கபடுபவர்கள் என எல்லோரும் எப்போதாவது மனநோய் அறிகுறிகளை வெளிபடுத்துவார்கள்.
சமுதாயத்தில் ஏற்ற இறக்கங்கள் பின்பற்றப்படும்வரை மனவியாதிகள் இருக்கும் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். உளவியலின் தந்தையாக போற்றபடும் சிக்மட் பிராய்டு, `பண்பாட்டு உணர்ச்சியால் (பாலின) உணர்வை கட்டுபடுத்துவதும் மனநோய் பாதிப்புக்கு காரணம்’ என்று கூறினார். மனிதன் ஒரு இன்பம் விரும்பி. அவனுக்கு துன்பம் பிடிக்காது. ஆனால் இன்பமும் துன்பமும் மனதால் வருகிறது என்பதை உணராதபோது அவன் சுயநிலை இழக்கிறான். உளவியல் பாதிப்பு வெளிபடத் தொடங்குகிறது. மற்றவர்களால் மனநோயாளி என ஒதுக்கபடுகிறான். உடல் திடகாத்திரமாக இருந்தும் மனம் திடமாக இல்லாவிட்டால் அவனை சமுகம் மனிதனாகக் கருதாது.
மனவியாதியும் மற்ற வியாதிகள்போல குணபடுத்தக் கூடியதே. ஆனால் சமுகம், பாதிக்கபட்டவருடன் அவரது குடும்பத்தையே ஒதுக் குவதால் யாரும் துணிந்து மனநல சிகிச்சையை முதலிலேயே நாடுவதில்லை. சிந்தனை, உணர்ச்சி, பண்பியல் இவற்றின் குறைபாடுகளே மன நோயின் அறிகுறிகளாகும். வழக்கத்துக்கு மாறாக பேசுவது, சொன்னதையே சொல்வது சிந்தனை குழப்ப அறிகுறிகளாகும். கல்வி அறிவிற்கும், கலாச்சாரத்திற்கும் பொருந்தாத முடநம்பிக்கை, அச்சம் காரணமாக எழும் தேவையற்ற பயம், நம்பிக்கை, இயல்பான உணர்வுகள் அடங்காமல் வெளி படுவது மனநோய் வெளிபாடுகளாகும்.கடவுள் தோன்றுவதாகவும், ஏதோ ஒலி கேட்பதாகவும், வாசனை வருவதாகவும், யாரோ தங்களை தொட்டுத் துன்புறுத்துவதாகவும் கூறுவதும் சில அறிகுறிகள் தாம். ஞாபகசக்தி குறைவதும், தூக்கம் குறைவதும் மன பாதிப்புகளின் வெளிபாடுகளே. அறிகுறிகளை சரியாக கவனிக்காவிட்டால் மனநோய் முதிர்கிறது. இதில் எண்ணம் தொடர்பான முதிர்ந்த மனநோய்கள் இருவகைபடும். அவை: மூளை பாதிப்பது, மூளை பாதிக்காத மனம் சார்ந்த பாதிப்பு.
இதன் முதல்கட்டமாக மனச் சிதைவு ஏற்படுகிறது. குழந்தைகளிடம் அதிக எதிர்பார்பை காட்டுவதால் குமர பருவ மனச்சிதைவு உண்டாகிறது. இளமையில் விரைப்பு சார்ந்த மனச்சிதைவு நோய் ஏற்படுகிறது. பகை, வெறுப்பு, அலட்சியம், அகம்பாவ எண்ணம் கொண்டவர்களுக்கு பின்னாளில் சந்தேகம் சார்ந்த மனச் சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மனநலக் குறைவு உடல் நோய்களையும் தோற்றுவிக்கும். ஏனெனில் மனமும், உடலும் இணைபுள்ளவை. உடலில் நோய் ஏற்பட்டால் கோபம், எரிச்சல், சோர்வு போன்ற மன பாதிப்புகள் வெளிபடும். அதுபோல மனஅதிர்ச்சி ஏற்படும்போது வியர்வை, நடுக்கம் போன்ற உடல்பாதிப்புகள் ஏற்படும்.
எனவே உளவியல் மாற்றங்களால் சில வியாதிகளும் தோன்றும். உணர்வு கொந்தளிப்பால் ஆஸ்துமா, குடற்புண் உள்ளிட்ட ஜீரண மண்டல வியாதிகள் ஏற்படும். பயம், நாணம், கோபம் போன்ற உணர்வு அடக்கத்தால் தோல் வியாதி, ரத்த அழுத்தமும், சுரப்பிகளில் பாதிப்பும் ஏற்படுகிறது. பயம், அதிர்ச்சி போன்றவற்றால் மூளை நாளங்கள் பாதிப்பு,  மூளையில் ஏற்படும் பலவித நோய்களாலும் மனநோய் உருவாகும். ஜன்னி நோய் ஒரு வித பிதற்ற நிலை மனவியாதியே. மதுபழக்கம், நாளமில்லாச் சுரப்பிகளின் பாதிப்பு இதற்கு காரணமாகும். சிலருக்கு நினைவுகள் அடிக்கடி மாறுவதால் மனக்குழப்பம் ஏற்படலாம். ரத்த ஓட்டம் குறைவு, மூளையில் உருவாகும் கட்டியால் நாள்பட்ட மூளைபாதிப்பு நோய் ஏற்படலாம். இதனால் மனம் ஆற்றல் இழந்துபோகும். உணர்ச்சி வசப்படுவதால் பலவித வலிப்பு நோய்கள் ஏற்படுகின்றன. இதை மருந்துகளால் குணபடுத்தலாம்.
ஜன்னி, மனக்குழப்பம், வலிப்பு இவற்றுக்கு மதுபழக்கம் மற்றும் பழக்கவழக்கங்களே முக்கிய காரணம். ஒருவர் நலமாக இருக்க வேண்டுமென்றால் அவரது குழந்தை பருவம் சரியாக அமைந்திருக்க வேண்டும். குழந்தைகள் நோயற்ற நிலையில் சாப்பிட மறுத்தால் மனபாதிப்பாக இருக்கும். கவன ஈர்ப்புக்காக அல்லது, எதிர்ப்புக்காக, பயத்தால் உண்ண மறுத்து அடம் பிடிக்கலாம்.
மிரட்டும் கனவுகளால் தூக்கம் இழப்பது, தூக்கத்தில் சிறுர் கழிப்பது போன்றவற்றுக்கு மன பாதிப்புகளே காரணம். திக்கிபேசுவது மனநோய் இல்லை. ஆனால் அதனால் மனஇறுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மனவளர்ச்சி மற்றும் சூழ்நிலைக் குறைபாடுகள் குழந்தைகளின் கற்றல் திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பின்னாளில் வேறு மனநோய்களை தோற்றுவிக்கலாம். பொய், களவு, சண்டைக்குச் செல்லுதல், தீ வைத்தல் போன்றவற்றில் ஈடுபடும் குழந்தைகள் சமுக விரோதிகளாக வளரும் ஆபத்து உண்டு. இதற்கு காரணம் மனபாதிப்புகளே. இவர்கள் புத்திசாலிகளாகக் காணப்படுவார்கள். ஆனாலும் தாங்கள் விரும்பியதை அடைவதிலேயே குறியாக இருப்பார்கள். பாரம்பரியம், சுற்றுச்சூழல், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் அவர்கள் பாதிக்கபட காரணமாக அமைகின்றன.
குழந்தை பருவ ஏக்கங்கள், கோபங்கள், பெற்றோரின் கண்டிப்பு ஒருவரை மதுபழக்கத்திற்கு அடிமையாக்கலாம். மது மன நிலையை மாற்றுவதால் மனநோய் தோன்றும். ஒவ்வொரு மனநோயாளிக்கும் மிகவும் தேவையானது ஒரு நண்பனே என்கிறார் உளவியல் நிபுணர் கிளிபோர்டு பியர்ஸ். இக்காலத்தில் மனநோய்களுக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் இருக்கின்றன. வீரிய மருந்து மாத்திரைகள் மதம் பிடித்தவர்போல் இருக்கும் நோயாளியை கட்டுபடுத்த உதவுகிறது. மின் அதிர்ச்சி முறை மற்றொரு முக்கியமான சிகிச்சையாகும். மருத்துவர்கள் செர்லெட்டி, பினி இருவரும் 1938-ல் இம்முறையை அறி முகபடுத்தினர். அதிக பாதிப்புள்ளவர்களுக்கு மூளை அறுவைச் சிகிச்சையும் செய்யப்படுகிறது. இதுதவிர பேச்சு வழியில் மனபகுப்பு மருத்துவம், மனோவசிய சிகிச்சை, நடத்தை மாற்று மருத்துவம் போன்றவையும் உள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்தாவிட்டாலும், சிலவற்றை அதிலிருந்து தான் பெற முடியும். ஏனென்றால், மைக்ரோசாப்ட் தான் உருவாக்கிய விண்டோஸில் இருந்து கொண்டு மற்ற பிரவுசர்களைப் பயன்படுத்துகிறாயா!

இது வேண்டுமென்றால், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குச் செல் எனச் சொல்கிறது. சில வேளைகளில், குறிப்பிட்ட இணைய தளம், அது உங்களின் தளமாகவே இருக்கலாம், எப்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் செயல்படுகிறது என நீங்கள் அறிய விரும்பலாம்.
அந்த வேளையில், பயர்பாக்ஸ் பிரவுசரிலிருந்து வெளியேறி, இன்டர்நெட் எக்ஸ்புளோரரைக் கிளிக் செய்து, பின் உங்கள் வேலையைத் தொடர வேண்டியதில்லை. பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசரிலேயே, ஒரு டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை வைத்துக் கொள்ளலாம்.
இந்த டேப்பில் கிளிக் செய்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விரிந்து, உங்கள் பயன்பாட்டிற்குக் காத்திருக்கும். இவை IE Tab for Firefox, IE tab for Chromeஎன அழைக்கப்படுகின்றன.
நீங்கள் பயன்படுத்தும், ஒவ்வொரு பிரவுசரிலும், ஒவ்வொரு கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசரிலும் பல புக்மார்க்குகளை வைத்திருக்கிறீர்களா! இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்க முடிவதில்லையா! உங்களுக்காகவே, எக்ஸ் மார்க்ஸ் (XMarks)என்ற ஒரு ஆட் ஆன் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், அனைத்து பிரவுசர்களிலும் அல்லது நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் உள்ள புக்மார்க்குகளை, இது தேடி எடுத்து இணைத்துத் தந்துவிடும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பைனலில் நுழைந்தது ஸ்பெயின்! ஆக்டோபஸ் இனது ஆருடம் பலித்தது (வீடியோ இணைப்பு)


உலகக் கோப்பை கால்ப்பந்தாட்டத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.

மிகவும் விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 1:0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் ஜெர்மனியைத் தோற்கடித்து பைனலுக்குள் நுழைந்தது.

ஆக்டோபசின் ஆருடமும் பலித்துள்ளது. எந்த பக்கம் "ஆக்டோபஸ்' ஜெர்மனியின் ஓபர்ஹாசினில் கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சியகம் உள்ளது. இங்குள்ள "ஆக்டோபஸ்', உலக கோப்பை தொடரில் ஜெர்மனியின் வெற்றி, தோல்வியை சரியாக குறிப்பிட்டு வருகிறது. லீக் சுற்றில் ஜெர்மனி அணி, ஆஸ்திரேலியா, கானாவை வீழ்த்தும் என்றும் செர்பியாவிடம் தோற்கும் என்றும் குறிப்பிட்டது.

"ரவுண்டு-16' போட்டியில் இங்கிலாந்தை வென்று, காலிறுதிக்கு முன்னேறும் என்று சொன்னது. பின் காலிறுதியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறும் என சரியாக சொன்னது.

தற்போது அரையிறுதியில் வெற்றி யாருக்கு என்பதை கணிக்க, வழக்கம் போல ஜெர்மனி, ஸ்பெயின் கொடிகள் அடங்கிய கண்ணாடி பெட்டிகள் வைக்கப்பட்டன.

இம்முறை "ஆக்டோபஸ்' ஸ்பெயின் கொடி வரையப்பட்ட பெட்டியில் இருந்த சிப்பியை எடுத்தது. இதன் மூலம் ஸ்பெயினுக்கு வெற்றி வாய்ப்பு என்பதை சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம்.

நேற்று முன்தினம் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர். இங்கு இன்னும் மறுமம் நிலவுகிறது. சுற்றுலாக் கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, July 5, 2010

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்

கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை நடத்தினர்.அதில், கம்ப்யூட்டர், லேப்-டாப், ஐபாட் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு, நாளடைவில், தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிய வந்தது.கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள், மனித மூளையின் வழக்கமான செயல்பாடுகளை பாதிப்பதும் தெரிய வந்தது.மனித மூளை, காலை சூரிய வெளிச்சம் வந்தவுடன் இயங்க ஆரம்பித்து இரவு சூரிய ஒளி மங்கியவுடன் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும் வகையில் செயல்படுகிறது.இதை, மெலட்டோனின் என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது.
இது அறிவியல் விந்தையாக கருதப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல நிற வெளிச்சம், மெலட்டோனின் ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து, தூக்கத்தை கெடுப்பதாக தெரிவிக்கின்றனர்.
மனிதனின் கண்கள், நீல நிறத்தை பகல் பொழுதாக எடுத்துக் கொள்ளும் தகவமைப்பை பெற்றுள்ளது என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.இரவில் நிம்மதியாக தூங்க, நல்ல புத்தகங்களை படிப்பது சிறந்த வழி. தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்க்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை கொண்டு மெலட்டோனின் ஹார்மோன் இரவில் தூக்கம் வருவதை தவிர்த்து, விழிப்புடன் இருக்க, மூளையை தூண்டும். இதனால், தூக்கம் வருவதில் நாளடைவில் சிக்கல் எழும் என, நார்த்வெஸ்ட் பல்கலைக் கழக மூளை அறிவியல் துறை பேராசிரியர் பில்லீஸ் சீ தெரிவித்துள்ளார்
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, July 4, 2010

இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள்


இதய நலம் பற்றிப் பேசும் போது, உடல் ஆரோக்கியத்தோடு மிக மிக நெருக்கமான தொடர்புடைய உணவுப் பழக்கம் பற்றியும் நாம் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
நமது உடல் நலமும், மனநலமும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. நாம் சாப்பிடும் உணவின் தன்மை மற்றும் அளவை அடிப்படையாகக் கொண்டுதான் நம்முடைய வாழ்க்கை அமைந்துள்ளது. எனவேதான் ஆங்கிலத்தில் You are what you eat என்று சொல்வார்கள். அதாவது நீ சாப்பிடும் உணவின் தன்மைத்தான் நீ யார் என்று தீர்மானிக்கிறது என்று பொருள்.
நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களைச் சர்க்கரைப் பொருள்கள் புரதம், கொழுப்புச்சத்து, உயிர்ச்சத்து, தாது உப்புகள் என பலவகைகளாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் இனி விளக்கமாகப் பார்க்கலாம்.
கொழுப்புச் சத்து
கொழுப்புச் சத்து என்பது நீரில் கரையும் இயல்புடையது. அதே சமயம் ஆல்கஹால், ஈதல் போன்றவற்றிலும் கரையக் கூடியது.
கொழுப்புச் சத்துகள்தான் நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கின்றன. எனவேதான் கொழுப்புச் சத்தை ஆற்றலின் பெட்டகம் (Store house of energy) என்று சொல்கிறார்கள். ஒரு கிராம் கொழுப்புச் சத்தானது 9 கலோரிகள் வெப்ப ஆற்றலைத் தருகிறது.
நமது ஒரு நாளைக்கான கொழுப்புச் சத்து தேவையானது நம் வயது, உடல் அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. தினசரி ஒரு தனி மனிதனுக்கான மொத்தக் கலோரிகள் தேவையில் 10 முதல் 15 சதவீதம், கொழுப்புச் சத்துகளில் இருந்து கிடைக்க வேண்டும். தனி மனிதனின் அன்றாட உணவில் கொலஸ்ட்ராலின் அளவு 150 மில்லி கிராமுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமாகக் கொழுப்புப் பொருள்களை நம் அன்றாட உணவில் சேர்ப்பதால் நமது இதயம் பாதிக்கப்படுவது பற்றியும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாவது பற்றியும் ஏற்கெனவே பார்த்தோம். ரத்தக்குழாய்களில் கொழுப்புப் படிவங்கள் சேர்வதன் மூலமாக மூளைக்குப் போகும் ரத்தத்தின் அளவு குறைந்து ஸ்ட்ரோக் (Stroke) போன்ற ஆபத்தான பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.
கொழுப்பு வகை உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது மூன்று அம்சங்களைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். இந்த வகையான கொழுப்பு முதலில் தேவைதானா என்பதை யோசிக்க வேண்டும். நாம் சாப்பிடப்போகும் கொழுப்பின் தன்மையைப் பார்க்க வேண்டும். இறுதியாகக நாம் சாப்பிடப் போகும் கொழுப்பின் அளவை கவனிக்க வேண்டும்.
தினசரி உணவில் கொழுப்பு வகை உணவுகளைச் சேர்க்கும்போது, செறிவற்ற கொழுப்பையும், செறிவுற்ற கொழுப்பையும் 2: 1 பங்கு என்ற விகிதத்தில் பயன்படுத்துவது நல்லது.
அன்றாட உணவில் செறிவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளான ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய், நெய், வனஸ்பதி, பாமாயில், முட்டை மஞ்சள் கரு, பால், பால் சார்ந்த பொருள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது உங்கள் இதய நலனைப் பாதிக்காத வகையில் மிகவும் குறைவான அளவில் சேர்த்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது.
வனஸ்பதி
தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் அணுக்களைச் செயற்கையாகச் செலுத்தி, அவற்றைச் செயற்கையாக உறையவைத்து உருவாக்கப்படும் கெட்டியான எண்ணெய் வகைதான் வனஸ்பதி. இவ்வாறு தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் Trans fat எனப்படும்.
ஆனால் வனஸ்பதியை அதிகம் சேர்த்துக் கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
அண்மையில், வனஸ்பதிக்கும், இதய நோய்க்குமான தொடர்பு பற்றி ஆய்வு செய்த உணவியல் வல்லுநர்களும், இதய மருத்துவர்களும், செறிவுற்ற கொழுப்பைவிட மிக அதிக அளவில் இதயத் தமனிகளைச் சிதைக்கும் ஆற்றல் வனஸ்பதிக்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளனர்.
எனவே உலகெங்கும் வனஸ்பதியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்க ஒரு இயக்கத்தையே தொடங்கியுள்ளார்கள். இதய நலத்தைக் காக்க விரும்புபவர்களும், ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களும், அன்றாட உணவில் டிரான்ஸ் கொழுப்பு வகையில் வருகிற வனஸ்பதியைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது இதயத்தக்கு நல்லது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

வந்தாச்சு MS-Office 2010

அலுவலக பயன் பாட்டிற்கான ஒபிஸ் மென்பொருள் தொகுப்புக்கள் அனைத்திலும் முனனணியில் இருப்பது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் ஒபிஸ் தொகுப்பு என்பது யாவரும் அறிந்த விடயம்.
ஸ்டார் ஒபிஸ், கொரல் ஒபிஸ், ஓபன் ஒபிஸ் என பல ஒபிஸ் தொகுப்புக்கள் வெளி வந்தாலும் எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்புக்கு நிகரானது என எதனையும் குறிப்பிட முடியாது. இதற்கு நிகரான ஒரு ஒபிஸ் தொகுப்பு இது வரையில் வெளிவரவில்லை எனலாம்.
உலகில் பலராலும் அதிகம் பயன் படுத்தப்படும் இந்த மைக்ரோஸொப்ட் ஒபிஸ் தொகுப்பின் புதிய பதிப்பு ஒபிஸ் 2010 இம்மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டது. எனினும் இது Microsoft Office 2010 Technical Preview எனப்படும் துறை சார்ந்த வல்லுனர்களுக்கான விசேட பதிப்பாகும். பொதுமக்கள் பாவனைக்கு அடுத்த மாதமே (ஜூன்) கிடைக்கப் பெறும் என மைக்ரோஸொப்ட் அறிவித்துள்ளது. இது ஒபிஸ் தொகுப்பின் 14 வது வெளியீடாகும்.
எம்.எஸ்.ஒபிஸ் 2010 தொகுப்பின் சோதனைப் பதிப்பை (Beta Version) கடந்த வருடம் மைக்ரொஸொப்ட் நிறுவனம் இணையத்தினூடு வெளியிட்டது. இதனை இன்று வரை பல லட்சக் கணக்கான கணினி பயனர்கள் இணையத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்துள்ளனர்.
எம்.எஸ்.ஒபிஸ் 2010 பார்வைக்கு ஒபிஸ் 2007 போன்று தோன்றினாலும் அதில் ஏராளமான மாற்றங்களுடன் புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை உள்ளே நுளைந்து பார்க்கும் போதுதான் அறிந்து கொள்ள முடிகிறது.
இதிலுள்ள சிறப்பம்சங்களைச் சுருக்கமாகச் சொன்னால் பவர்பொயிண்டில் வீடியோ படங்களை எடிட் செய்தல், போட்டோ எடிட் செய்தல், மற்றும் அவுட்லுக்கில் இமெயில்களைக் கையாள்வதற்கான புதிய வசதிகள், போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
பழைய ஒபிஸ் பதிப்புகளில் இருந்த மெனு, சப்மெனு கொண்ட இடை முகப்புக்குப் பதிலாக முன்னைய ஒபிஸ் 2007 பதிப்பில் ஓரளவு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த ரிப்பன் இடைமுகப்பு (Ribbon Interface) முழுமையாக இந்த புதிய ஒபிஸ் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒபிஸ் 2010 தொகுப்பிலுள்ள வர்ட், எக்ஸல் என அனைத்து மென்பொருள்களிலும் ரிப்பன் இடை முகப்பே முக்கிய இடம் பிடித்துள்ளது.
கணினி ஆவணங்களில் அடோபி (Adobe) நிறுவனம் உருவாக்கிய பீடிஎப் பைல் (PDF) வடிவம் அதிகம் பிரபல்யமானது. ஒபிஸ் 2010 ல் உள்ள அனைத்து மென்பொருள்களும் பீடிஎப் பைலை உருவாக்கும் வசதி தரப்பட்டுள்ளது. உதாரணமாக எம்.எஸ்.வர்டில் உருவாக்கிய ஒரு பைலை ஒரே க்ளிக்கில் பீடிஎப் பைலாக மாற்றிக் கொள்ளலாம்.
பவர் பொயிண்ட் ப்ரசண்டேசனில் நீங்கள் பயன் படுத்தும் வீடியோ க்ளிப் ஒன்றை எடிட் செய்ய வேண்டுமானால் வேறு வீடியோ எடிட்டிங் மென்பொருள்களைப் பயன் படுத்த வேண்டிய அவசியமில்லை. அதனைப் பவர் பொயிண்டிலேயே எடிட் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது, வீடியோ பைல்களில் தேவையற்ற பகுதிகளை வெட்டி நீக்குவது மட்டுமன்றி மேலும் பல மெருகூட்டும் வசதிகளும் தரப்பட்டுள்ளன.
உங்கள் ஆவணங்களை விண்டோஸ் லைவ் (Windows Live) வழங்கும் ஸ்கை ட்ரைவ் (SkyDrive) எனும் இணையம் சார்ந்த சேமிப்பகங்களுக்கு அப்லோட் செய்து விட்டு அந்த பைல்களை உலகின் எப்பகுதியிலிருந்தும் அணுகக் கூடிய வசதியையும் ஒபிஸ் 2010 தருகிறது.
யூ டியூப் ( YouTube) போன்ற இணைய வீடியோக்களை பவர் பொயிண்ட் டில் இணைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. அதனையும் இலகுவாக கொப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம். இணைக்க வேண்டிய வெப் வீடியோவின் Embed Code ஐ பிரதி செய்து ஒட்டி விட்டாலே போதுமானது.
இந்த ஒபிஸ் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பிரதான மாற்றமாக அதன் இணையம் சார்ந்த பயன்பாட்டைக் குறிப்பிடலாம். அதாவது ஒபிஸ் தொகுப்பிலுள்ள வர்ட், எக்சல் போன்ற பயன்பாட்டு மென்பொருள்களை கணினியில் நிறுவாமலேயே இணையத்தினூடு இலவசமாக பயன் படுத்தும் வசதியை வழங்க விருக்கிறது.
இவ்வாறு இணையத்தினூடு அணுகி அதனைப் பயன்படுத்துவதை வெப் எப் (Web App) எனப்படுகிறது. இது போன்ற சேவையை கூகில் நிறுவனம் ஏற்கனவே கூகில் டொக் (Google Doc) எனும் பெயரில் வழங்கி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
Screen Capture எனும் கருவி மூலம் திரையில் தோன்றுவதை முழுமையாகாவோ பகுதியாகவோ பட்ம் பிடித்து வர்ட், எக்ஸல் போன்ற எப்லிகேசன்களில் நுளத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
Office Home and Business 2010, Office Professional 2010, Office Professional Plus 2010 என பல வேறு பட்ட பயனர்களுக்கென ஒபிஸ் பதிப்பை வெளியிடவுள்ளது மைக்ரோஸொப்ட். அத்தோடு கையடக்கத் தொலைபேசி மற்றும் கையடக்கக் கணினிகளில் பயன் படுத்தக் கூடிய ஒபிஸ் 2010 பதிப்பையும் வெளியிடவிருக்கிறது.
முன்னைய ஒபிஸ் பதிப்புகள் Windows Mobile இயங்கு தளம் கொண்ட கையடக்கக் கணினிகளை மட்டுமே ஆதரித்தது. எனினும் தற்போதைய பதிப்பை ஐபோன் (iPhone) போன்ற விண்டோஸ் மொபைல் அல்லாத கையடக்கத் தொலைபேசிகளிலும் கையடக்கக் கணினிகளிலும் பயன் படுத்தலாம்.
ஒபிஸ் 2010 ஐ விண்டோஸ் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் 7 பதிப்பு இயங்கு தளங்களில் நிறுவ முடியும்.. இதை நிறுவுவதற்கான விசேட தேவைகள் ஏதும் கணினியில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒபிஸ் 2007 பதிப்பு உங்கள் கணினியில் நிறுவ முடியுமானால் ஒபிஸ் 2010 ஐயும் இலகுவாக நிறுவி விடலாம்.
பீட்டா பதிப்பைப் பயன் படுத்திப் பார்த்ததில் எம்.எஸ்.ஒபிஸ் பல வருடங்களாக காத்து வரும் தன் பிரபல்யத்தை மேலும் பல தசாப்தங்கள் தக்க வைத்துக் கொள்ளும் என்பதே என் கருத்து.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

விண்டோஸ் 7 : உலகில் அதிகமாக பயன்படுத்தும் இயங்குதளம்?!

விண்டோஸ் 7 இயங்குதளம் (Operating System) கடந்த அக்டோபர் 22 2009 அன்று வெளியிடப்பட்டது. விண்டோஸ் 7 வெளியிடப்பட்ட 6 மாதங்களில் உலகத்தில் 10 ல் ஒரு கணினியில் பயன்படுத்தும் இயங்குதளமாக மாறியுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இயங்குதள வரலாற்றில், விண்டோஸ் 7 தான் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்ட மற்றும் செய்யபட போகும் இயங்குதளமாக இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் கருதுகிறது.
மைக்ரோசாப்ட் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில், $14.5 bn மார்ச் 31 வரையுள்ள காலாண்டிற்கான வருவாயாக தெரிவித்திருக்கிறது. மேலும் அந்நிறுவன தலைமை கணக்கு அலுவலர் (CFO) Peter Klein “continues to be a growth engine” என்றும் கூறியுள்ளார்.
பெரும்பாலான முன்னணி கணினி நிறுவனங்கள் விண்டோஸ் 7 ஐ தங்கள் கணினிகளுக்கு இயங்கு தளமாக்க (OS) திட்டமிட்டுள்ளனர்.
விண்டோஸ் 7 இதற்கு முந்தய version விஸ்டாவை விட மிகவும் எளிதாக மற்றும் வேகமாக இயங்கும் தளமாக (OS) இருப்பதே இதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, July 3, 2010

சூரியனை ஒத்த விண்மீனைச் சுற்றும் கோளின் 'முதல்' படம் உறுதிப்படுத்தப்பட்டது

எமது சூரியனை ஒத்த விண்மீனைச் சுற்றி வரும்புறக்கோள் ஒன்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதல் தடவையாகப் படம் பிடித்ததாக உரிமை கோரும் வானியலாளர்கள், இப்போது அதனை உறுதி செய்துள்ளனர

புறக்கோள்ஹவாயில் உள்ள ஜெமினை வடக்கு நுண்காட்டி மூலம் 2008 செப்டம்பரில் 1RXS 1609 என்ற புறக்கோளின் படத்தை வானியலாளர்கள் எடுத்தனர். அப்போது விண்மீனுக்கு முன்னால் தெரிந்த அந்த பிரகாசமான புள்ளி உண்மையில் அந்தப் புறக்கோளுடையது தானா என்தை உறுதியாகக் கூறுவதற்கு அவர்களிடம் போதுமான தரவுகள் இருக்கவில்லை.
இதற்குப் புன்னர் சில மாதங்களின் பின்னர் வேறு வானியலாளர்கள் பலர் புறக்கோள்கள் பலவற்றைப் படம் பிடித்ததாகக் கூறியிருந்தனர்.
1RXS 1609 புறக்கோளை ஆய்ந்த குழுவினர் ஜெமினையில் இருந்து பெறப்பட்ட புதிய படங்கள் மற்றும் தரவுகளைக் கொண்டு தமது 2008 ஆம் ஆண்டு புகைப்படம் உண்மையில் 1RXS 1609 உடையது தான் என உறுதியாகத் தெரிவித்திருக்கின்றனர்.
"ஆரம்பத்திலேயே இந்தப் புறக்கோளும் அதன் விண்மீனும் பொடுவான ஒரு ஈர்ப்பினால் பிணைக்கப்பட்டிருந்ததை நாம் ஊகித்தோம். இப்போது அதற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன," என்றார் கனடாவின் மொண்ட்றியால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் லாஃப்ரெனியேஎர் தெரிவித்தார்.
"இரண்டும் உண்மையில் ஈர்ப்பினால் பிணைக்கப்பட்டு இரண்டும் ஒரே திசையில் ஒரே வேகத்தில் விண்ணில் சுற்றி வருகின்றன."
இத்தரவுகள் மூலம் இந்தக் கோளின் திணிவு, மற்றும் சுற்றுத்தூரம் போன்றவற்றை அறியக்கூடியதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
வியாழனை விட இக்கோள் 8 மடங்கு எடை கூடியதாகவும், ஏனைய புறக்கோள்களை விட இது எடையில் குறைந்ததாக இருப்பதாகவும் இக்கோளை ஆயும் குழுவினர் தெரிவித்தனர். தனது சூரியனில் இருந்து 31 பில்லியன் மைல் துரத்தில் அதனைச் சுற்றி வருகிறது. இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரத்தை விட 330 மடங்கு அதிகம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அமெரிக்காவின் சிறந்த அதிபர் : ஒபாமாவுக்கு 15 ஆவது இடம்

அமெரிக்காவின் சிறந்த அதிபர் பட்டியலில் பராக் ஒபாமா 15 ஆவது இடத்தில் உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட இது தொடர்பான கருத்துக்கணிப்பில், ஒபாமாவுக்கு முன்பு அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு 39 ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 43 பேர் கொண்ட அமெரிக்க அதிபர்கள் பட்டியலில் ரொனால்டு ரீகனைவிட 3 இடங்கள் முன்னணியில் உள்ளார் ஒபாமா.ரீகனுக்கு 18 ஆவது இடமே அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, July 1, 2010

இதயநலம் காக்கும் உடற்பயிற்சிகள்

உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுங்கள் என்றால் அந்தப் பட்டியலின் முதன்மையான இடத்தில் உடற்பயிற்சி என்பது இருக்கும்.
உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம்காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அப்படி உணர்ந்திருந்தால், இதய நோயானிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்திருக்காது.
பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் பாதுகாப்பு அரண்களாக உடற்பயிற்சிகள் அமைகின்றன. இதய நோய்களால் பாதிக்கப்படாமல் தப்பிப்பதற்கும் உடற்பயிற்சிகள் எத்தகைய நன்மைகளை அளிக்கின்றன என்பதை இந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
இதயம் வலுவான தசைகளால் ஆன விசை அமைப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். இதயம் நன்கு செயல்பட வேண்டும் என்றால், தமனிகளின் மூலமாக ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ரத்தம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் தசைகள் வலுவாக இருந்து இதயத்தை நன்றாக இயங்க வைக்க முடியும். இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க ஒருவரின் வயது உடல் அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப உடற்பயிற்சிறைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்யலாம் என்பதைப் பார்க்கும் முன்பு உடலுக்கு எந்த வகையில் அவை உதவுகின்றன என்பதைப் பார்த்தவிடலாம்.
உடற்பயிற்சியின் பயன்கள்
இதயத்தில் இருந்து ரத்தம், ரத்தக் குழாய்களின் மூலமாக நமது உடலில் உள்ள உறுப்புகளுக்குப் போய்ச் சேர்கிறது. எதிர்பாராத காரணங்களால் அதாவது, ரத்தக் குழாய்களில் தடை இருந்தாலோ அல்லது அவை பாதிக்கப்பட்டிருந்தாலோ ரத்தம் சரிவர உறுப்புகளுக்குப் போய்ச் சேராது. இந்த இக்கட்டான நிலையை ஈடுகட்டும் வகையில் முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடாமல் இருக்க மாற்று ரத்தக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரத்தக் குழாய்களை இணை ரத்தக்குழாய்கள் (Collateral Circulation) என்று சொல்வார்கள்.
அதெல்லாம் சரிதான். உடற்பயிற்சிக்கும் இந்த இணை ரத்தக் குழாய்களுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இருக்கிறது.
இந்த இணை ரத்தக் குழாய்கள் இதயம் உருவாகும்போதே உருவாகிவிடுகின்றன. ஆனால் முக்கியமான வேலைகளை முதன்மை ரத்தக் குழாய்களே முழுநேரமும் செய்துவிடுவதால் இணை ரத்தக் குழாய்கள் செயலற்றுத்தான் காணப்படும். அவசர காலத்தில் தானே நமது சேவை தேவை என்ற அலட்சியத்தில் இவை அளவில் சுருங்கியும், வளைந்தும், நெளிந்தும் காணப்படும். அந்த நிலையில் திடீரென முதன்மை ரத்தக் குழாய்கள் செயலற்றுப் போகும்போது இவை விழிப்படைந்து வேலை செய்ய சற்று நேரம் பிடிக்கும்.
ஆனால் இளமைப் பருவத்தில் இருந்து நாம் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம், இந்தத இணை ரத்தக் குழாய்களை நன்கு இயக்கி அவற்றை எப்போதுமே தயார் நிலையில் வைத்திருக்கலாம். அதன் மூலமாக திடீரென இதயத்தின் முதன்மை ரத்தக் குழாய்கள் அடைபடும்போது, இந்த இணை ரத்தக்குழாய்கள் விரைவாகச் செயல்பட்டு, மாரடைப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளால் மரண ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
நீங்கள் தொடர்ச்சியாகத் தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்புக்கான வாய்ப்பையும் பெருமளவு குறைத்துவிடலாம். மாரடைப்புக்கு அடிப்படை காரணம் இதயத் தமனிகள் முழுமையாக அடைபட்டு இதயத்தசைகள் சுருங்கி, இதயம் இயங்கத் தேவையான உயிர்வளி சத்துகள் போன்றவை கிடைக்காததுதான். அன்றாட உடற்பயிற்சிகள், இதயத் தசைகளின் சுருங்கும் ஆற்றலை அதிகமாக்குகின்றன. அதோடு உடற்பயிற்சி செய்யும் போது அதிக அழுத்தத்துடன் ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்கிறது.
இதயத் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை அதிக அழுத்தத்துடன் வரும் ரத்தமானது ஓரளவுக்கு அகற்றுகிறது. இதன் மூலமாக மாரடைப்புக்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது. அன்றாட உடற்பயிற்சியின் மூலமாக இதயத் தமனி நோய்களையும், மாரடைப்பையும் கணிசமான அளவு தடுக்க முடியும்.
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சரிவர இயங்க வேண்டும் என்றால் தேவையான உயிர்வளி, சத்துகள் போன்றவை தொடர்ந்து கிடைக்க வேண்டும். ரத்தத்தின் மூலமாகவே இவை செல்களைப் போய்ச் சேருகின்றன. அன்றாடம் குறிப்பிட்ட கால அளவில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகமாக்குவதோடு, உடலில் உள்ள பல்வேறு ரத்தக் குழார்களை விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடவும் துணைபுரிகின்றன.
இதயத்துக்கு ஏற்ற உடற்பயிற்சிகள்
உடலின் உயிர்வளித் தேவையைப் பெருக்கும் உடற்பயிற்சிகளை உயிர் வளி பெருக்கும் உடற்பயிற்சிகள் (Aerobic Exercise) என்று சொல்வதுண்டு.
இத்தகைய உடற்பயிற்சிகளின் மூலமாக உடலில் உள்ள உறுப்புகளுக்குத் தேவையான உயிர்வளியைப் பன்மடங்காக பெருக்க முடியும். இதனால் இதயமானது தனக்குத் தேவையான ரத்தத்தையும், சத்துகளையும் பெற முடியும்.
பொதுவாக இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை நடைப்பயிற்சி (Walking), மெல்லோட்டம் (Jogging), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் உங்கள் வயது, உல் அமைப்பு, ஓய்வு நேரம், உடல் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.
நடைப்பயிற்சி
நடைப்பயிற்சியில் Trekking, Leiú§re Walking, Race Walking, Power Malking என பலவகைகள் உள்ளன. இவற்றில் உங்களுக்கு எந்த வகைப் பயிற்சி ஒத்துவருகிறதோ அதைத் தொடர்ச்சியாகச் செய்து வர வேண்டும்.
மற்ற வகையான உடற்கயிற்சிகளுடன் ஒப்பிடும்போது நடைபயிற்சி மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்தப் பயிற்சியை எந்த இடத்திலும் மிகவும் எளிமையாக மேற்கொள்ள முடியும். இப்பயிற்சியை மேற்கொள்ள ஒரு ஜோடி காலணிகள் இருந்தால் போதும்.
எளிமையான உடற்பயிற்சியாக இருந்தாலும் இதனால் கிடைக்கும் நன்மைகள் பல. அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடலின் எடையைக் குறைக்க துணை புரிவதோடு தெளிவாகச் சிந்திக்கவும் உதவுகிறது. மேலும் இதயத் தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
நடைப்பயிற்சியில் ஏற்படும் முழுப்பயனைப் பெற வேண்டும் என்றால், தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அன்றாடம் நடக்கும் தூரத்தைப் படிப்படியாக உடலின் ஆற்றலுக்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும். நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது நடக்கும் இதயத் துடிப்பின் அளவானது நிமிடத்துக்கு 100&க்கு மேல் இருக்க வேண்டும்.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் 10,000 காலடிகள் (Sˆepv) நடக்க வேண்டும் என இதய மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனால் நாம் அதிகபட்சம் 3,000 காலடிகளுக்கு மேல் நடப்பதில்லை. பத்தடிகூட நடக்காமல் இருப்பதைவிட 3,000 காலடிகள் நடப்பது நல்லதுதானே.
நடைப்பயிற்சியின் அவசியத்தை இவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்லியும் சிலர், நடப்பதற்கு எனக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கவே இல்லை என புலம்புவார்கள். அவர்களுக்கு சில அறிவுரைகள்…
நீங்கள் டி.வி.பார்க்கும் பழக்கம் உள்ளவர் என்றால் டி.வி. சேனல்களை மாற்ற ரிமோட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எழுந்து சென்று நேரிடையாக மாற்றலாம்.
காய்கறி மார்க்கெட்டுக்கும், பலசரக்குக் கடைக்கும் செல்ல இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக நடந்து சென்று பொருட்களை வாங்கலாம்.
உங்கள் அலுவலகம், மூன்றாவது அல்லது நான்காவது மாடியில் இருந்தால் லிஃப்ட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மாடிப்படிகளில் ஏறிச் செல்லலாம்.
நீங்கள் அலுவலகத்துக்கு பஸ்ஸில் செல்பவராக இருந்தால் அலுவலகத்தில் இருந்து பஸ்ஸில் வீட்டுக்குத் திரும்பி வரும்போது இரண்டு ஸ்டாப்புக்கு முன்னால் இறங்கி நடந்து வாருங்கள்.
நீங்கள் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் பழக்கம் உடையவர் என்றால் கோயிலில் பிரகாரங்களை நன்கு சுற்றி வாருங்கள்.
மெல்லோட்டம்
மெல்லோட்டம் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும். இதை ஆங்கிலத்தில் ஜாக்கிங் (Jogging) என்பார்கள். உடலுக்கு ஏற்ற சீரிய உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இந்தப்பயிற்சியும் மாரடைப்பைத் தடுக்க உதவியாக இருக்கிறது. மேலை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மருத்துவர்கள் தங்களை மாரடைப்பில் இருந்து காத்துக்கொள்ள தினமும் மெல்லோட்டத்தை மேற்கொள்கிறார்கள்.
மெல்லோட்டத்தின் பயன்கள்
இதயமானது சுருங்கும்போது உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவானது சாதாரண நிலையைவிட மெல்லோட்டத்தின்போது அதிகமாகிறது.
இதய ரத்தக் குழாய்களையும், ரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புகளையும் வலுவாக்குகிறது.
ரத்தக் குழாய்களின் உள்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கிறது.
ரத்தமிகு அழுத்த நிலையைக் குறைக்கத் துணைபுரிகிறது.
இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவானது அதிகமாவதால், இதயத் தமனிகளில் ரத்தம் உறைவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது.
ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், டிரை கிளிசரைடையும் குறைக்க உதவுவதால், மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது.
மெல்லோட்டத்துக்கான விதிமுறைகள்
விதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.
நம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.
மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மலச்சிக்கலால் உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம்.
மெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.
சைக்கிள் பயிற்சி
இதயத்துக்கு உகந்த, உயிர்வளியைப் பெருக்கும் உடற்பயிற்சிகளில் சிறந்தது சைக்கிள் பயிற்சி. இது, குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த எளிமையான உடற்பயிற்சியாகும்.
அமெரிக்காவில், பால் டட்லி ஒயிட் என்ற மருத்துவர் சைக்கிள் பயிற்சியில் ஒரு மிகப்பெரிய புரட்சியைச் செய்திருக்கிறார். உடல் நலத்துக்கான சைக்கிள் பயிற்சி (Cycling for Health) என்ற நல இயக்கத்தைத் தொடங்கியதோடு அல்லாமல், இந்த இயக்கத்தின் விளைவாக, அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையான தேசியப் பூங்காக்களில் கார்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவும் இவர் காரணமாக இருந்தார்.
அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையான தேசியப் பூங்காக்களில் அங்கு வரும் மக்கள் பயன்படுத்துவதற்காக சைக்கிள்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் மக்கள் தங்களுடைய உடல் நலத்தைப் பேணுவதற்காகப் பல மணிநேரம் இயற்கையான சூழலில், திறந்த வெளியில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வது வழக்கமாகும்.
பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் சைக்கிள் பயிற்சியைப் பல வகையான நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். உடல் பருமன், ரத்தமிகு அழுத்த நோய், குடல் இறக்கம், மூட்டுச்சிதைவு நோய், வாதக் காய்ச்சல் நோய், முதுகுத் தண்டுவடம் நழுவுதல், கால் பெரு நரம்பு அழற்சி போன்ற நோய்களைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சையில், சைக்கிள் பயிற்சியையும் ஒரு முக்கியமான அம்சமாக வைத்திருக்கிறார்கள்.
மேலை நாடுகளில் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் சைக்கிள் பயிற்சியை ஒருவகையான மருத்துவமுறையாகக் கையாள்கிறார்கள். சிலவகையான நோயாளிகளுக்கு அவர்கள் தங்கள் உடல் நலத்தை மீண்டும் பெற சைக்கிள் பயிற்சியைப் பரிந்துரைக்கிறார்கள். மேலும் நீண்டநாள்களாகப் படுக்கையில் இருக்கும் நோயாளிகளின் வலுவிழந்த தசைகள் மீண்டும் உயிர்பெற, சைக்கிள் பயிற்சியை அளிக்கின்றனர்.
ஹாலந்து நாட்டில் உள்ள பள்ளிகளில் சைக்கிள் பயிற்சியை விளையாட்டுக் கல்வியில் ஒரு பாடமாக வைத்துள்ளனர். தினமும் பள்ளி நேரத்தில் மாணவ& மாணவிகள் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இத்தகைய முயற்சியின் காரணமாக நடல் நலக்குறைவால் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவ& மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகச் சொல்கின்றனர்.
அன்றாடம் சிலமணி நேரம் மேற்கொள்ளும் சைக்கிள் பயிற்சியானது, இதயத் தசைகளை நன்கு வலுவாக்குவதோடு அல்லாமல், இதயத் தசைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவைப் பன்மடங்கு அதிகமாக்குகிறது என்கிறார் பால் டட்லி ஒயிட்.
நீச்சல் பயிற்சி
நீச்சல் பயிற்சியாலும் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன.
நீச்சல், முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற உடற்பயிற்சியாகும்.
உடல் ஊனமுற்றவர்களுக்குக்கூட இது மிகச்சிறந்த உடற்பயிற்சி.
உடலை வலுவாக்கவும், கிடைத்த வலுவைப் பாதுகாத்துக்கொள்ளவும் உதவுகிறது.
நீச்சல் பயிற்சி, உடலில் உள்ள பலவகையான உள் உறுப்புகளுக்கும் நரம்பு அமைப்புகளுக்கும் வலுவை அளிக்கிறது.
குறைந்த காலத்தில் உடலில் உள்ள பலவகையான தசைகளுக்கு நல்ல வலுவை அளிக்கிறது.
உடலின் தேவையற்ற, அதிகமான எடையைக் குறைக்க துணை புரிகிறது.
நீச்சல் பயிற்சியின்போது நீர் உடலுக்கு இயற்கையின் தடுப்பாற்றலை அளிக்கிறது.
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் தேவையற்ற கலோரிகளை எரிக்க முடியும்.
நீச்சலானது உள்ளத்துக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாத மனப்பக்குவத்தையும், எந்தச் செயலையும் நிதானத்துடன் செய்யும் மனப்பக்குவத்தையும் அளிக்கிறது.
நீச்சல் பயிற்சியின் சிறப்புகள்
நீச்சல், கவலையை மறக்க மிகச்சிறந்த மருந்தாகும். ஏனென்றால், நீந்தும்போது கவனம் முழுவதும் நீச்சலில் ஒரு முகப்படுவதால், மனிதன் தன்னுடைய கவலையை மறக்க நீச்சல் துணைபுரிகிறது.
நீச்சல், முதுகெலும்புப் பகுதியில் உள்ள தசைகளை வலுப்பெறச் செய்வதோடு, முதுகெலும்பு அமைப்புகளை வலுப்படுத்த துணைபுரிகிறது.
கடல் நீரிலும், ஆற்று நீரிலும் இயற்கையாகப் பொதிந்திருக்கும் அயனிகள, உடலுக்கு நன்மை அளிப்பதாக மருத்துவ அறிஞர்கள் சொல்கின்றனர்.
நீச்சல், உடலில் உள்ள மேற்புறத் தசைகளுக்கு மட்டுமின்றி உடலின் கிழ்ப்புறப் பகுதியில் உள்ள தசைகளுக்கும் ஒரே சமயத்தில் நல்ல பயிற்சியைத் தரக்கூடியது.
இதயத் தசைகள் நன்கு வலுப்பெற நீச்சல் உதவி செய்கிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF