கௌதமாலா நாட்டில் கடந்த வாரம் பெய்த புயலுடன் கூடிய கடும் மழையின் போது நடந்த விபரீதம் இது. இந்தக் கடும் மழையில் 179 பேர் வரை பலியானார்கள்.
இந்நிலையில் தலைநகரின் கட்டட நெரிசல் மிக்க பகுதியில் நான்கு வீதிகள் சந்திக்கும் சந்திப் பகுதி ஒன்றில் பாரிய குழி ஏற்பட்டுள்ளது.
இதன்போது மேலே அமைந்திருந்த 3 மாடிக் கட்டடம் ஒன்றும் அதில் இருந்தவர்களுடன் குழியினுள் விழுந்து காணாமல்போயுள்ளது. இந்தக் குழி 60 அடி விட்டமும் 330 அடி ஆழமும் கொண்டதாக அமைந்துள்ளது.
இது எதனால் ஏற்பட்டது என்பது குறித்து தற்போது புவியலாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இதேபோன்றதொரு பாரிய குழி அந்நாட்டில் 2007ம் ஆண்டு பெய்த மழையின்போதும் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Tuesday, June 22, 2010
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் வடிவம் அறிமுகம்
ஆப்பிள் நிறுவனம் தனது வெற்றிகரமான ஐபோனின் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்" புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் 40 சதவீத வருவாய் ஐபோன் விற்பனை மூலம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. "ஐபோன்"கள் 2007ல் சந்தைக்கு வந்தன. இதுவரை 5 கோடி போன்கள் விற்பனையாகியுள்ள நிலையில், தற்போது மேலும் பல புதிய அம்சங்களுடன் அதன் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்-4" மாடல் சந்தைக்கு வந்துள்ளது.
ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல்போன் சகல வசதிகளையும் கொண்டதாகத் திகழ்கிறது. OS 4 எனும் இயங்குதளத்தில் அதிவேகமாக இயங்கும் திறன் கொண்ட இந்த புதிய செல்போனில், Video Calling, Retina high-resolution display, 5 மெகா பிக்ஸல் கேமரா, லெட் ஃப்ளாஷ், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு வசதி, வை-ஃபி என ஏராளமான வசதிகளை உள்ளடக்கியது இந்த புதிய செல்போன்.
முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையதளத்தை பயன்படுத்தவும் முடியும்.
ஜூன் 24 முதல் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளில் விற்பனை செய்ய உள்ளது. ஜூன் 15 முதல் இந்த ஐபோன்-4 க்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கெனவே ஐபோன் வைத்திருப்பவர்கள், புதிய சாஃப்ட்வேர்களை ஐ ட்யூன் தளத்தில் வரும் ஜூன் 21 முதல் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்..
சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா உள்பட 21 நாடுகளில் ஜூலையில் விற்பனைக்கு வருகிறது ஐபோன். இந்தியா உள்ளிட்ட 88 நாடுகளில் வரும் செப்டம்பரில்தான் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும்.. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல்போன் சகல வசதிகளையும் கொண்டதாகத் திகழ்கிறது. OS 4 எனும் இயங்குதளத்தில் அதிவேகமாக இயங்கும் திறன் கொண்ட இந்த புதிய செல்போனில், Video Calling, Retina high-resolution display, 5 மெகா பிக்ஸல் கேமரா, லெட் ஃப்ளாஷ், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு வசதி, வை-ஃபி என ஏராளமான வசதிகளை உள்ளடக்கியது இந்த புதிய செல்போன்.
முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையதளத்தை பயன்படுத்தவும் முடியும்.
ஜூன் 24 முதல் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளில் விற்பனை செய்ய உள்ளது. ஜூன் 15 முதல் இந்த ஐபோன்-4 க்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கெனவே ஐபோன் வைத்திருப்பவர்கள், புதிய சாஃப்ட்வேர்களை ஐ ட்யூன் தளத்தில் வரும் ஜூன் 21 முதல் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்..
சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா உள்பட 21 நாடுகளில் ஜூலையில் விற்பனைக்கு வருகிறது ஐபோன். இந்தியா உள்ளிட்ட 88 நாடுகளில் வரும் செப்டம்பரில்தான் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும்.. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Monday, June 21, 2010
சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கான காரணம்..
சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு, அரிசி கஞ்சியால் உருவாக்கப்பட்ட சாந்து கலவையே காரணமென விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக, சீனப் பெருஞ்சுவர் கருதப்படுகிறது. இந்த நீண்ட சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், இயற்கை சீற்றங்களையெல்லாம் எதிர்த்து இன்றும் உறுதியுடன் உள்ளது. இது தொடர்பாக, பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சீஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு, அரிசி கஞ்சி, சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புக்கல் கலந்த சாந்து பொருள் தான் காரணமென தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது:பழங்கால சீன கட்டட கலைக்கு சான்றாக, சீனப் பெருஞ்சுவர் விளங்குகிறது. இந்த சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், அதே உறுதியுடன் இருப்பதற்கு, அரிசி கஞ்சியுடன், சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, உருவாக்கப்பட்ட கலவையால், கற்களை இணைத்துள்ளது தான் காரணம்.
இந்த கலவையில், தாவர பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயிரற்ற பொருளான சுண்ணாம்பில், கால்சியம் கார்பனேட் உள்ளது. தாவரத்திலிருந்து எடுக்கப்படும் அரிசி கஞ்சியில், “அமிலோபெக்டின்’ என்ற மாவுச்சத்து உள்ளது.சுண்ணாம்பு மற்றும் அரிசி கஞ்சி உள்ளிட்ட பொருட்களை கலந்து கலவை உருவாக்கும்போது, அரிசி கஞ்சியில் உள்ள “அமிலோபெக்டின்’ கலவைக்கு ஒட்டும் தன்மையை கொடுக்கிறது. இந்த கலவையை, கற்களுக்கு இடையில் வைத்து கட்டும்போது, அந்த சுவர் மிகவும் உறுதியாக மாறுகிறது. மேலும், சுவர்களில், விரிசல் ஏற்படாமலும், அதில் காளான், பூஞ்சை போன்றவை ஏற்படாமலும் சுவரை பாதுகாக்கிறது.
இந்த கலவையை கொண்டுதான், சீனப்பெருஞ்சுவரும், அதில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இது கட்டப்பட்ட பின், பல்வேறு போர்களை சந்தித்துள்ளது. பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களால், இதை உடைக்கும் முயற்சிகள் எல்லாம் தோற்றன.மேலும் நிலநடுக்கம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களையும் தாங்கி, அதே உறுதியுடன் இந்த சுவர் நீடித்து நிற்கிறது.பழங்கால கட்டடக்கலை வல்லுனர்கள், எத்தகைய பொருட்களை பயன்படுத்தினர் என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்குமா என்பது தெரியாது. இருப்பினும் தொடர்ந்து எங்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Sunday, June 20, 2010
ஒரேயொரு மூளையுடன் வாழும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
உலகில் ஒட்டிப் பிறந்திருக்கும் இரட்டைக் குழந்தைகள் எல்லோரையும் விட இவர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். ஏனெனில் இவர்கள் இருவருக்கும் ஒரேயொரு மூளை மாத்திரம் பொதுவாக இருக்கின்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஒரேயொரு மூளையுடைய ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இந்த உலகத்திலேயே இவர்கள் மாத்திரம்தான். ரரிஅனா-கிரிஸ்ரா இருவரும் கனடாவில் வாழ்கின்றார்கள். இவர்களுக்கு தற்போது மூன்று வயது.இருவருக்கும் ஒரேயொரு மூளை மாத்திரம் இருப்பதால் ஒருவரிடம் இருந்து மற்றவரை அறுவைச் சிகிச்சை மூலம் பிரிக்கின்றமை சாத்தியம் அல்ல என்று வைத்தியர்கள் திட்டவட்டமாகக் கூறி விட்டனர். இவர்களுக்கு வேறு யாரிடமும் காணவே முடியாத தனித்துவமான சிறப்புத் தன்மைகள் பல இருக்கின்றன என்று பெற்றோர் கூறுகின்றனர்.
குறிப்பாக ரரிஅனாவின் கண்களால் கிரிஸ்ராவும், கிரிஸ்ராவின் கண்களால் ரரிஅனாவும் காட்சிகளைக் காண முடிகின்றது என்று அவர்கள் தெரிவித்தனர்.சாதாரணமாக ஒட்டிப் பிறந்த ஏனைய இரட்டைக் குழந்தைகளால் செய்ய முடியாத இவ்வாறான பல செயல்களை இந்த இருவரும் செய்கின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் மருத்துவ உலகம் இவர்களைப் பார்த்து அதிசயிக்கின்றது.
உலகத்தின் மாறுபட்ட அபிப்பிராயங்களையும் தாண்டி இவர்கள் இருவரும் எப்போதும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். இவர்களால் நன்றாகவே நடந்து திரிய முடிகிறது.இவர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் உண்டு. உதரணமாக எந்தப் பாதையால் நடக்கலாம்?, என்ன செய்து கொள்ளலாம்? போன்ற விடயங்களில் இவர்களுக்குத் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் எழுந்துவிடத்தான் செய்கின்றன.
Delta IV உந்துகணை
உந்துகணைகளும் அவற்றின் பயன்பாடுகளும் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படும் தேவைகளுக்கேற்ப காணப்படுகின்றன. இன்றைய விண்வெளிப் பயணங்கள் அனைத்தும் உந்துகணைகளின் உதவியுடனேயே மேற்கொள்ளப்படுகின்றன.
விண்வெளிப் பயணங்களிலும் குறிப்பிட்டதொரு விண்வெளிப் பயணத்தின் தேவையினைப் பொறுத்து அத்தேவைக்குப் பொருத்தமான உந்துகணை பயன்படுத்தப்படுகின்றது.
இவ்வாறு விண்வெளிக்குச் செயற்கைக் கோள்களை ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் உந்துகளை வகையைச் சார்ந்ததே இந்த DeltaIV உந்துகணையாகும். இந்த Delta IV ஏவுகணையானது காவிச்செல்லும் நிறை மற்றும் காவிச்செல்லும் உயரம் என்பவற்றிற்கேற்ப மேலதிக உந்துசக்தியைப் பெறுவதற்கான மேலதிக உந்துகணை ஊக்கிகளை (additional rocket boosters) பொருத்திப் பயன்படுத்தவல்லதாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக இந்த உந்துகணை விரிவுபடுத்தவல்ல ஏவு தொகுதி (expandable launch system) என்றழைக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனமான போயிங் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட இந்த உந்துகணை, அமெரிக்க வான்படையினால் பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்கான செயற்கைக் கோள்களை சுற்றுப்பாதையில் ஏவுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த உந்துகணைகள் ஐந்து வெவ்வேறு வடிவங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையிலேயே இவ்வுந்துகணைகள் உற்பத்தி செய்யப்பட்டன. 63 மீற்றர் தொடக்கம் 72 மீற்றர் வரையான உயரங்களில் காணப்படும் இவ்வுந்துகணை, 5 மீற்றர் விட்டத்திலும் 249500 – 733400 கிலோகிராம் நிறையுடையதாகவும் காணப்படுவதுடன், இரண்டு தொகுதிகளால் ஆனதாகவும் காணப்படுகின்றது.
Delta IV உந்துகணை ஒன்று பல்வேறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது தொகுதியே பிரதான தொடக்கநிலை உந்துகணை இயந்திரத்தைக் (rocket engine) கொண்டுள்ளது. உந்துகணையின் வடிவத்திற்கேற்ப இவ்வுந்துகணையின் முதலாவது தொகுதி RS-68 உந்துகணை இயந்திரத்தைக் கொண்டிருக்கும். பொதுவாக உந்துகணைகளின் முதலாவது தொகுதி இயந்திரங்கள் திண்ம எரிபொருள் (solid fuel) இல்லது மண்ணெய் (kerosene) பயன்படுத்தியே இயக்கப்படும். ஆனால் இந்த Delta IV உந்துகணை முதலாவது தொகுதி இயந்திரத்திற்கு திரவ ஐதரசன் மற்றும் திரவ ஒட்சிசன் கலவையையே எரிபொருளாகப் பயன்படுத்துகின்றது.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட உந்துகணை இயந்திரங்களில் மிகவும் பெரியது, இந்த Delta IV உந்துகணையின் முதலாவது தொகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் RS-68 உந்துகணை இயந்திரமேயாகும். இவ்வுந்துகணை இயந்திரத் தயாரிப்பின் பிரதான நோக்கம் குறைந்த செலவில் அதிக வலுவைப் பெறவல்லதாக இவ்வியந்திரத்தை உருவாக்குவதே. இவ்வுந்துகணையின் இரண்டாவது தொகுதி RL-10B2 உந்துகணை இயந்திரத்தைக் கொண்டுள்ளது.
இந்த Delta IV இன் சிறிய வடிவத்தில் RS-68 வகை இயந்திரம் முதல் சில நிமிடங்களுக்கு 102% உந்துவிசையை உந்துகணைக்கு வழங்குகின்றது. முதல் நிலை இயந்திரத்தின் உந்துவிசை 58% ஆகக் குறைவடைந்து இதன் இயக்கம் செயலிழந்ததும், முதல்நிலைத் தொகுதி உந்துகணையிலிருந்து பிரிந்துவிட, அடுத்தநிலை இயந்திரம் தொடர்ந்து உந்துகணையை உந்திச்செல்லும். அதேபோன்று இவ்வுந்துகணையின் கனரக வடிவத்தில் முதற்தொகுதியின் இயந்திரம் முதல் 50 செக்கன்களுக்கு 120% உந்துசக்கியை உந்துகணைக்கு வழங்கி 50 செக்கன்களின் முடிவில் உந்துவிசை 58% ஆகக் குறைவடைந்து இயந்திரம் செயலிழக்கின்றது. இயந்திரங்களின் இந்தச் செயற்பாடுகள் யாவும் வழிநடத்தற் தொகுதியிலிருந்து (guidance system) கிடைக்கும் கட்டளைகளுக்கேற்ப இடம்பெறுகின்றன.
Delta IV உந்துகணையில் பயன்படுத்தப்படும், L3 Communication நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட, வழிநடத்தற் தொகுதியானது, சுழல்காட்டி (gyroscope) மற்றும் முடுக்கமானி (accelerometer) ஆகியவற்றின் துணையுடன் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தின் கட்டளைகளையும் உள்வாங்கி மிகவும் மிகவும் துல்லியமாக உந்துகணையினை வழிநடாத்திச் செல்கின்றது.
இந்த உந்துகணையானது தேவைக்கேற்ப பல்வேறு வகையான சுமைகளைக் (payload) காவிச்செல்லவல்லது. இதன் சுமையேற்றும் பகுதியானது வெவ்வேறு வகையான சுமைகளை ஏற்றக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சுமைகளின் தன்மைக்கேற்ப, சுமையேற்றும் பகுதியையும் மாற்றக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டிலிருக்கும் உந்துகணைகளிலேயே, இந்த Delta IV உந்துகணையே மிகவும் உயரம் கூடிய உந்துகணையாகும். விண்வெளிப் பயணத்துறையினுள் இந்த Delta IV உந்துகணை அறிமுகப்படுத்தப்பட்டபொழுது, விண்ணுக்கு செய்மதிகள் மற்றும் பிற பொருட்களை அனுப்புவதற்குத் தேவையான உந்துகணைகள் போதுமானளவிற்குப் பயன்பாட்டில் இருந்தன. அதீத திறனுடன் இந்த உந்துகணை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இதனை ஒருதடவை ஏவுவதற்கு ஆகும் செலவு, வர்த்தக நிறுவனங்களுக்குக் கட்டுபடியற்றதாக இருந்தது. இதன் காரணமாக வர்த்தக நோக்கில் இந்த உந்துகணை எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இருப்பினும் அமெரிக்க அரசு இந்த உந்துகணையினை தேவைக்கேற்ப பயன்படுத்தியே வருகின்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Saturday, June 19, 2010
மெக்சிக்கோ எண்ணெய்க்கசிவு : பிரி. ரூ. 92 ஆயிரம் கோடி நஷ்டஈடு
மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுக்கு ரூ. 92 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க பிரிட்டிஷ் பெற்றோலிய நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து பெருமளவில் மெக்ஸிகோ கடலில் எண்ணெய்க் கசிந்து வருகிறது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்தான் இதனை ஓரளவு அடைக்க முடியும் எனக் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மெக்ஸிகோ கடலில் பெரும் பரப்பளவில் பரவிக் கிடக்கும் இந்த எண்ணெயால் சுற்றுச் சூழல் பாதிப்பு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எண்ணெய்க் கசிவைச் சுத்தம் செய்யும் பணியை இப்போதைக்கு ஆரம்பித்துள்ளனர். ஆனால் கசியும் எண்ணெயின் அளவில் 1 சதவீதத்தைக் கூட நாள்தோறும் சுத்தம் செய்யமுடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு பிரிட்டிஷ் பெற்றோலிய நிறுவனம் 1.6 பில்லியன் டொலர் மட்டுமே முதலில் செலவிட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் எச்சரிக்கை மற்றும் நெருக்குதல் காரணமாக 20 பில்லியன் டொலர் (ரூ. 92,000 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது மேற்படி நிறுவனம்.
இந்தத் தொகையை மேலும் அதிகரித்துத் தரவும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டோனி ஹேவர்ட் ஒப்புக் கொண்டுள்ளார்.
பிரிட்டிஷ் பெற்றோலிய நிறுவன அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்துக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஒபாமா இத்தகவலை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"தற்போதைய அமெரிக்க சட்டத்தின் படி, இத்தகைய எண்ணெய்க் கசிவு விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் ரூ. 345 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால், இது மிகவும் குறைவான நிதி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மெக்சிகோவில் தற்போது நிகழ்ந்துள்ள இந்த மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேட்டால், பொதுமக்கள், வணிகம் செய்வோர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய இழப்புகளை ஈடுசெய்யும் வகையில், ரூ.92,000 கோடி அளிக்க பிரிட்டிஷ் பெற்றோலியம் முன்வந்துள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த முடிவுக்கு அமெரிக்க அரசியல் தலைவர்களும் தலைவர்களும் வரவேற்பளித்துள்ளனர்.
"இது பகுதி அளவு இழப்பீடுதான், சேதங்கள் அதிகமாகும் பட்சத்தில், பாதிக்கப்படும் மக்களுக்கான முழு இழப்பீட்டையும் பிரிட்டிஷ் பெற்றோலிய நிறுவனம் அளிக்க வேண்டியிருக்கும்" என அமெரிக்க நாடாளுமன்ற தலைவர் நான்சி பெலோசி தெரிவித்தார்.
இதற்கிடையே, கசியும் எண்ணெயின் அளவு தினசரி 50,000 பேரல்களுக்கும் அதிகம் என்பதை முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது அமெரிக்கா.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Friday, June 18, 2010
சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் : அறிவியலாளர்கள் எச்சரிக்கை
கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது.
வாசிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 8 ஆம் நாளன்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழிநுட்ப உபகரணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.
“நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது, இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்,” என நாசாவின் ஈலியோஇயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் ஃபிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக்கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை எற்படுத்தும். இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரியக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும், தொழிநுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக்கும்.
இருந்தாலும் "பெரும் ஒளிவட்ட வெளித்தள்ளுதல்" (coronal mass ejections, CMEs) மனித இனத்தைப் பாதிக்கும் எனக்கூறப்படுகிறது. இது 2012 ஆம் ஆண்டில் நிகழலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும்.
அதிதொழிநுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை எற்ற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
வியாழனில் இடம்பெற்ற மோதுகையை அடுத்து பெரும் தீப்பந்து அவதானிக்கப்பட்டது
விண்கல் அல்லது சிறுகோள் ஒன்று வியாழனில் சென்ற வியாழக்கிழமை மோதியதை அடுத்து அப்பகுதியில் பெரும் தீப்பந்து ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீப்பந்து ஜூன் 3 2031 UTC மணிக்கு பிலிப்பீன்சைச் சேர்ந்த கிறித்தோபர் கோ, மற்றும் ஆத்திரேலியாவைச் சேர்ந்த ஆந்தனி உவெசுலி ஆகிய இரண்டு தனிப்பட்ட வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. உவெஸ்லி என்பவரே சென்ற ஜூலை மாதத்தில் வியாழன் கோளில் இடம்பெற்ற மோதுகையை அவதானித்து நாசாவுக்கு அறிவித்தவர். இம்முறை பூமியைப் போன்ற அளவுள்ள தீப்பந்து மோதுகையின் பின்னர் எழும்பியதை அவதானித்துள்ளார். விண்கல் ஒன்று கோள் ஒன்றில் மோதியதை காணொளி மூலம் பதிவு செய்யப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.
சென்ற ஆண்டு வியாழன் மோதுகையைப் பற்றிய மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டு சில மணி நேரத்தில் புதிய மோதுகை அவதானிக்கப்பட்டுள்ளது. சென்ர ஆண்டு 500 மீட்டர் அகலமுள்ள சிறு கோள் ஒன்று 2009, ஜூலை 19 இல் மோதியதென்றும், இதன் மூலம் பசிபிக் பெருங்கடல் போன்ற அளவுள்ள காயம் வியாழனில் தோன்றியுள்ளதாகவும் ஹைடி ஹம்மெல் என்பவரின் தலைமையில் வானியலாளர்கள் அறிவித்துள்ளனர். இதன் தாக்கம் பல ஆயிரம் அணுகுண்டுகளின் தாக்கத்துக்கு ஒப்பானதாகும்.
1994 ஜூலையில் ஷூமேக்கர்-லீவு 9 என்ற வால்வெள்ளி வியாழனைத் தாக்கியிருந்தது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
மனிதர்கள் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம் கெபிட்டல் கேட்: கின்னஸ் சாதனையில் பதிவு
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள'கெபிட்டல் கேட்'என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி தொடங்கப்பட்டது.
இதற்கு 'கெபிட்டல் கேட்'எனப் பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டது.
இந்த கட்டடம், 18 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது, பைசா கோபுரத்தின் சாய்மானத்தை விட நான்கு மடங்கு அதிகம். (பைசா கோபுரத்தின் சாய்மானம் 3.99 டிகிரி). இந்த கட்டடத்தின் 12 மாடிகள் செங்குத்தாக உள்ளன.
அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள், படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த அளவில் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் இந்த கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்டபோது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
இதைக் கட்டுவதற்கு, 10 ஆயிரம் தொன் இரும்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நட்சத்திர ஓட்டல் மற்றும் அலுவலகங்கள் இதில் இயங்கவுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள், இந்த கட்டடத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி தொடங்கப்பட்டது.
இதற்கு 'கெபிட்டல் கேட்'எனப் பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டது.
இந்த கட்டடம், 18 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது, பைசா கோபுரத்தின் சாய்மானத்தை விட நான்கு மடங்கு அதிகம். (பைசா கோபுரத்தின் சாய்மானம் 3.99 டிகிரி). இந்த கட்டடத்தின் 12 மாடிகள் செங்குத்தாக உள்ளன.
அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள், படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த அளவில் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் இந்த கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்டபோது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
இதைக் கட்டுவதற்கு, 10 ஆயிரம் தொன் இரும்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நட்சத்திர ஓட்டல் மற்றும் அலுவலகங்கள் இதில் இயங்கவுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள், இந்த கட்டடத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Thursday, June 17, 2010
தசை நார்களும் நீரிழிவு நோயும்!!
சர்க்கர நோய் உடலில் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புக்களில் தசை நார் பாதிப்பும் ஒன்று. பொதுவாக நாம் உண்ணும் உணவு சக்தியாக உபயோகப்படுத்தப்பட வேண்டும். அன்றாட நடவடிக்கைகளுக்கும், சிறு சிறு வேலைகளைச் செய்வதற்கும் நம் உண்ணும் உணவு செரித்து அதிலிருந்து கிடைக்கும் சக்தியே உபயோகப்படுத்தப்படுகிறது.
நம்மால் உபயோகப்படுத்தப்பட்டது போக மீதமான சக்தி அல்லது சர்க்கரை இரத்த்த்தில் இருக்கும்.
தசைகளில் வலியானது இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையானது தசை நார்களில் படிவதால் ஏற்படுகிறது.
நம் உணவின் சக்தியில் 60% தசை நார்களின் செயல்பாட்டுக்கு, அதாவது உடல் உழைப்பு, உடற்பயிற்சி ஆகியவற்றால் செலவழிக்கப்படவேண்டும். இதில் குறைவு ஏற்பட்டால்
தசைப்பிடிப்பு
கால், கை வலி
கெண்டைக் கால் வலி
குடைச்சல்
உடல் வலி
ஆகியவை ஏற்படும்.
கால், கை வலி
கெண்டைக் கால் வலி
குடைச்சல்
உடல் வலி
ஆகியவை ஏற்படும்.
இவ்வாறு ஏற்படும்போது சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் வலி அதிகம் ஏற்பட்டு கை கால்களைப் பிடித்து மசாஜ் செய்து விட்டால் வலி குறைவது போல் தோன்றும். இவற்றைச் சரிசெய்ய:
இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
தினமும் நடைப்பயிற்சி அவசியம்.
கை, கால்களை நீட்டி மடக்கிச் செய்யும் உடற்பயிற்சிகளையும் சேர்த்துச் செய்ய வேண்டும்.
தினமும் நடைப்பயிற்சி அவசியம்.
கை, கால்களை நீட்டி மடக்கிச் செய்யும் உடற்பயிற்சிகளையும் சேர்த்துச் செய்ய வேண்டும்.
நடைப் பயிற்சியைத் துவங்குவது எப்படி? நடைப் பயிற்சியை எப்படித் துவங்குவது என்பது மிக முக்கியம். நாம் ஏற்கெனவே தினசரி நடைப் பயிற்சி செய்யும் நண்பரிடம் ”நாளை முதல் நானும் உங்களுடன் நடக்க வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அதன்படி காலை 5 அல்லது 5.30 க்கு எழுந்து, அவருடன் நடப்போம். இரண்டு நாள் அல்லது சில நாட்களில் இந்த முடிவுக்கு வந்து விடும். ஏனென்றால் அவர் ஏற்கெனவே நடை பழகியவர்.
அவர் வேகத்துக்கு நாம் ஈடு கொடுக்க முடியாது
அவர் செல்லும் தூரம் நாம் நடக்க முடியாது.
அப்படியென்றால் எப்படி நடைப்பயிற்சியை ஆரம்பிப்பது?
நடைப்பயிற்சியை மெதுவாகவும் எளிமையாகவும் ஆரம்பிக்க வேண்டும்,
முதலில் 10 ந்மிடம் நடந்து வீடு திரும்புங்கள்.
1 வாரம் இது போல் செய்யவும்.
அடுத்த வாரம் 5 நிமிடம் கூட்டிக் கொள்ளவும்.
அவர் செல்லும் தூரம் நாம் நடக்க முடியாது.
அப்படியென்றால் எப்படி நடைப்பயிற்சியை ஆரம்பிப்பது?
நடைப்பயிற்சியை மெதுவாகவும் எளிமையாகவும் ஆரம்பிக்க வேண்டும்,
முதலில் 10 ந்மிடம் நடந்து வீடு திரும்புங்கள்.
1 வாரம் இது போல் செய்யவும்.
அடுத்த வாரம் 5 நிமிடம் கூட்டிக் கொள்ளவும்.
நடப்பது த்ற்போது எளிமை ஆகிவிடுகிறது அல்லவா? ஒவ்வொரு வாரமும் 5 நிமிடம் கூடுதலாக நடந்து பழகினால் உங்கள் இலக்கை எந்தக் கஷ்டமும் இன்றி விரைவில் அடையலாம்.
நடப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டுவருவது சிரமமாக இருக்கும், ஆனாலும் அதைக் கடைப்பிடிப்பது அவசியம்.
பொதுவாக உடல் நலனுக்காக நடப்பவர்கள் 20-30 நிமிடங்கள் குறைந்த பட்சம் வாரத்தில் 4-5 நாட்கள் என்ற இலக்கை எட்டுமாறு வைத்துக் கொள்ளலாம்.
பேச்சு வேகத்தில் நடப்பது என்றால் என்ன? நாம் நடக்கும் போது மூச்சின் வேகம் அதிகரிக்கும். நடப்பது சிரமமாகத்தோன்றும். அப்படிப்பட்ட நேரத்தில் பேசிக்கொண்டே நடப்பது எளிதாக இருக்காது. நாளடைவில் பேசிக் கொண்டே நடப்பது எளிதாகி விடும். இது உங்கள் உடல் தகுதி அதிகரித்திருப்பதைக் குறிக்கும்.
பிட்னெஸ் நடைப் பயிற்சி: ஏற்கெனவே நடைப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்போருக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் புதிதாகப் நடைப் பயிற்சியில் ஈடுபடும் முன் மருத்துவரின் ஆலோசனை அவசியம். நல்ல நடைபயிற்சிக்கான காலணி ஷூ அவசியம்.
அதே போல் நடப்பதற்கு முன் உங்கள் சர்க்கரை அளவு 100 மி.கி க்குக் கீழ் இருந்தால் ஏதாவது சிறு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். நடப்பதற்கு முன் இரத்தத்தில் சர்க்கரை 100 க்கு மேல் இருப்பது அவசியம்.
பிட்னெஸ் வாக்கிங்க் என்றால் என்ன? கை,கால் மூட்டுக்களுக்கு அதிக பழு ஏற்படுத்தாமல் செய்யும் நடைப் பயிற்சியே இது. சாதாரண நடையையே கொஞ்சம் கால் எட்டிப் போட்டு நடக்க வேண்டும்.
இன்னொரு வகையில் கீழ்க்கண்டவாறு மாறி மாறி நடப்பதும் மிகப் பலன் தரும்:
மிதமான நடை- 5 நிமிடம்,
கொஞ்சம் வேகம் கூட்டிய நடை-2 நிமிடம்
அதிவேக நடை –1 நிமிடம்
20 நிமிடங்கள் இது போல் நடப்பது உங்கள் உடல் தகுதியைக் கூட்டும்.
கொஞ்சம் வேகம் கூட்டிய நடை-2 நிமிடம்
அதிவேக நடை –1 நிமிடம்
20 நிமிடங்கள் இது போல் நடப்பது உங்கள் உடல் தகுதியைக் கூட்டும்.
மெதுவாக உங்கள் நடை வேகம், நடக்கும் நேரம், நடக்கும் தூரம் ஆகியவற்றைக் காலப்போக்கில் உங்கள் உடல் தகுதிக்கேற்றவாறு கூட்டிக் கொள்ளலாம்.
நடைப் பயிற்சி என்பது நீரிழிவு நோயாளிகள் மட்டுமில்லாமல் அனைவருக்கும் அவசியமான ஒன்று. தொடர்ந்து நடந்து நலம் பெறுவோம்!
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிம புதையல்!
உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான்.
அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் ‘ஸ்மெல் பண்ணவர்கள்’ அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் பேரளவில் கண்டுபிடித்துள்ளனர்.
இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் போரிலும் மதத் தீவிரவாதத்திலும் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும்.’இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்’ என்கிறார் ஒரு அதிகாரி.
லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில்,
”ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும் என்றார்.இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?:அதைத் தெரிந்து கொள்ளும் முன், ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் எவ்வளவு என்று பார்க்கலாம்.
இந்த நாட்டின் பொருளாதாரம் பெருமளவு சார்ந்திருப்பது… விவசாயத்தையோ, தொழிற்சாலைகளையோ அல்ல. ஓப்பியம் மற்றும் அபின் தயாரிப்பை!சர்வதேச அளஷவில் கொடிய போதைப் பொருள்கள் அனைத்துக்கும் தாயகமாகத் திகழ்கிறது ஆப்கானிஸ்தான். மேற்கு ஆசியாவின் போதை மருந்து முக்கோணத்தின் மையப் பகுதி ஆப்கானிஸ்தான். இன்று நேற்றல்ல…பண்டைய காலத்திலிருந்தே ஓப்பியம் தயாரிப்பது ஆப்கானிஸ்தானில் குடிசைத் தொழில் மாதிரி.இதற்கடுத்த வருவாய் ஆதாரம், முன்பு ரஷ்ய உதவி. இப்போது அமெரிக்கா தரும் நிதியுதவி.இப்படி சகல வழிகளிலும் ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் அளவே 12 பில்லியன்கள்தான்! அதாவது இந்த 12 பில்லியன் டாலர்தான் ஆப்கானிஸ்தானின் ஜிடிபி (gross domestic production!).
ஒரு சர்வதேச நடுத்தர ஐ.டி. நிறுவனத்தின் லாபத்தின் அளவும் இதுதான்.ஆனால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஜிடிபியே 1.23 ட்ரில்லியன்தான்!!.இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள ‘பில்லியன் டாலர் கேள்வி’!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் ‘ட்ரில்லியன் டாலர் கேள்வி!’ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் தலைதூக்கும் நிலை.
நாட்டின் ஒரு பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது.இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப் பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில், இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியலறிஞர்கள்.இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது.ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.
நாட்டின் ஒரு பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது.இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப் பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில், இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியலறிஞர்கள்.இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது.ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.
ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30 மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர் அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப் பார்த்தால், ‘தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா அல்லது தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா என்பது தெரியவில்லை.கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா.’Unobtanium’ என்ற கற்பனையான கனிமத்தை எடுக்க பண்டோரா கிரகத்தையே அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து, அதன் மக்களை ஒழித்துக் கட்டும் கற்பனைக் கதையைத் தான் ‘avathar’ என்ற படமாக எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன்.
3 டி சமாச்சாரம், அன்னிய கிரகவாசிகள் என்று கதை போனதால் கேமரூன் சொல்ல வந்த விஷயம் (கதையின் கரு ) பெரிதாகப் பேசப்படவில்லை.இப்போது ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிம வளம் கிட்டத்தட்ட பண்டோரா கிரக கதை மாதிரி ஆகிவிடுமோ என்ற அச்சம் இப்போதே பரவ ஆரம்பித்துவிட்டது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Tuesday, June 15, 2010
350 கோடி ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் தண்ணீர் : ஆய்வில் தகவல்
ஹலோ ரொபோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வின் படி 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.
அதன் வடக்கு துருவத்தில், அட்லாண்டிக் கடல் அளவு தண்ணீர் இருக்கிறது. இது பூமியில் உள்ள அளவுக்கு சமமானதாகும்.
செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா, இல்லையா என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஹலோ ரொபோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வெளியிட்ட செவ்வாய்க் கிரகத்தின் படங்களை வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
தவிர, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க செயற்கைகோள் வெளியிட்ட தகவல்கள் மூலமும் ஆராய்ச்சி செய்தனர்.
செவ்வாய்க்கிரகத்தில் 54 ஆறுகளின் டெல்டா படுகைகள் உள்ளன. இதனால் அங்கு ஆறுகள் உற்பத்தியாகி ஓடிக்கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
அதன் வடக்கு துருவத்தில், அட்லாண்டிக் கடல் அளவு தண்ணீர் இருக்கிறது. இது பூமியில் உள்ள அளவுக்கு சமமானதாகும்.
செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா, இல்லையா என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஹலோ ரொபோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வெளியிட்ட செவ்வாய்க் கிரகத்தின் படங்களை வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
தவிர, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க செயற்கைகோள் வெளியிட்ட தகவல்கள் மூலமும் ஆராய்ச்சி செய்தனர்.
செவ்வாய்க்கிரகத்தில் 54 ஆறுகளின் டெல்டா படுகைகள் உள்ளன. இதனால் அங்கு ஆறுகள் உற்பத்தியாகி ஓடிக்கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Thursday, June 10, 2010
பூமியை சூரியன் விழுங்கி விடுமா?
இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமி இருக்காது. அதை சூரியன் விழுங்கி விடும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்தின் சஸ்ஸக்ஸ் பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஸ்மித் தலைமையிலான நிபுணர் குழு ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
சூரியன் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டு வருகிறது. இப்படியே போனால் இன்னும் 760 கோடி ஆண்டுகளில் அது பூமியை விழுங்கி விடும். சூரியனின் வெப்பம் காரணமாக பூமியில் எதுவும் இருக்காது எல்லாம் சாம்பலாகி விடும். சூரியனின் வெப்பத்தால் கடல்கள் அனைத்தும் ஆவியாகி முற்றிலுமாக வற்றிப் போய் விடும் என்கிரார் ராபர்ட் ஸ்மித்.
இதைத் தவிர்க்க முடியாதா பூமியைக் காப்பாற்ற முடியாதா என்ற கேள்விக்கு ஸ்மித் பதிலளிக்கையில் இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது.வான்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு பெரிய விண்கல்லை பூமியின் புவி வட்டப் பாதைக்கு இழுத்து அதனுடன் பூமியை மோத விட வேண்டும். அப்படி மோதினால் நமது புவி வட்டப் பாதை மாறி வேறு பாதைக்கு நாம் வீசப்படுவோம். அப்படிச் செய்தால் சூரியனின் கோரப் பிடியிலிருந்து பூமி தப்பலாம்.
இது சாத்தியமா பேத்தலாக இருக்கிறதே என்று நினைக்கக் கூடாது. இன்னும் சில நூற்றாண்டுகளில் இப்படி ஒரு மோதலை ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பத்தை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே பூமி அழியலாம் என்று பயப்படுவதை விட தப்பி விடும் என்ற நம்பிக்கையுடன் நாம் இருக்கலாம் என்கிறார் ஸ்மித்.
அதற்குள் புதிதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள புவி போன்ற மற்றைய கிரகங்களுக்கு மனிதன் புலம் பெயர்ந்துவிடுவான். 760 கோடி ஆண்டுகள் எதற்கு? இன்றுள்ள மனிதர் எவரும் மேலும் 150 ஆண்டுகளுக்கு பின்னர் உயிருடன் இருக்கமாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Wednesday, June 9, 2010
3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating System
கணணியை செயற்படுத்தவென உருவாக்கப்பட்டவைதான் இயங்குதளங்கள் (Operating System). இன்னும் சொல்லப்போனால் கணணி வன்பொருட்களுக்கும்(Hardwares) பயனாளர்களுக்கும்(users) இடையிலான ஒரு இடைமுகமாக(Interface) செயற்படுபவை.
இவ்வாறான பல இயங்குதளங்கள் இன்றைய உலகில் பல உருவாக்கப்பட்டுள்ளன உருவாக்கபட்டுக்கொண்டிருக்கின்றன. அவ்வாறான பல இயங்குதளங்களாக Windows XP, Windows Vista, Windows 7 , Apple OS, Ubuntu OS, Linux, Google Chrome OS, RISC OS, Amiga OS, MAC OS, போன்ற இன்னும் பல இயங்குதளங்கள் இன்று காணப்படுகின்றன.
அவ்வாறான இயங்குதளங்கள் இருக்கின்ற போதிலும் இவற்றைவிட மிகச்சிறிய அளவில் உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஒன்றும் உள்ளது.
KOLIBRI OS எனப்படும் இந்த இயங்குதளமானது 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது Windows,Linux, Mac போன்ற பிற இயங்குதளங்களை அடிப்படையாகக்கொண்டு அமையாமல் CPU நிரலாக்கமொழி எனப்படும் முதலாம் தலைமுறை( First Generation language) மொழியான கணணி இயந்திர மொழியின்(Machine Code) துணையுடன் உருவாக்கப்பட்ட இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது மிகச்சிறிய அளவில் மென்பொருள் பொதிகளையும் கொண்டுள்ளது. Games, Tables Editor, Compiler,Text Editor, Demos, Web Browser போன்ற மென்பொருட்கள் உள்ளடங்கலாக இந்த இயங்குதளமானது உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பான மிகச்சிறிய மென்பொருளாகும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
கூகிளிடமிருந்து புதிய இரண்டு சேவைகள்
கூகிள் மெப்ஸ்(google maps), கூகிள் பஸ்(google buzz), ஜிமைல்(gmail) என்பவற்றின் கலவையாகவே இந்த புதிய சேவை அமைந்துள்ளது.
நமது நண்பர்களின் ஊரையோ அல்லது அவர்களின் வீட்டுக்கு செல்லும் பாதையையோ அல்லது அவர்களின் வீட்டையோ தேடி அலைய வேண்டிய சிரமத்தை கூகிள் மெப்ஸ்(maps) நமக்கு போக்கியது. தற்போது குறித்த ஒரு அமைவிடத்தை ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளும் வழிமுறையை கூகிள் இலகுவாக்கித்தந்துள்ளது.
முன்பெல்லாம் ஒரு இடத்தை கூகிள் மெப்ஸ்(maps) மூலம் நமது நண்பர்களுக்கு காட்ட வேண்டுமானால், அந்த மெப் ன் லின்க்கினை(link) எடுத்து மைல்(mail) பண்ணுவோம்.அந்த லின்கினை கிளிக்(click) செய்து அந்த இடத்தை பார்க்கக் கூடியதாக இருந்தது ஆனால் தற்போது எமது inbox ல் வைத்தே பார்க்க கூடியதாக இருக்கும். இதனை செயற்படுத்த gmail setting ற்கு சென்று Labs என்பதை க்ளிக் செய்து Google Maps previews in mail என்பதை enable செய்து save பண்ணிக்கொள்ளவும்.
அடுத்தது google buzz ல் மெப்ஸ் இனை சேர்த்துக்கொள்ளல். நீங்கள் பகிரப்போகும் மெப்ஸ் ன் லின்கினை எடுத்து paste செய்து கொண்டால் போதும். google maps இனி google buzz இலும் தெரியும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Saturday, June 5, 2010
2019வது ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?
2002 என்.டி.7 (2002 N.T.7) என்ற விண்கல் ஒன்று விநாடிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது 2019வது ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி பூமியைத் தாக்கும் என்று விஞ்ஞானிகள் நாள் குறித்தனர்.
இந்த விண்கல்லின் அகலம் 3 கிலோமீட்டர். இது பூமியின் மீது மோதினால் 77 லட்சம் அணுகுண்டுகள் வெடித்தது போன்ற பேரழிவு ஏற்படும், பூமியில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்துவிடும், கடல்பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வற்றிவிடும், தொடர்ந்து 16 மணிநேரம் வானம் இருட்டாக இருக்கும், 12 கோடி பேர் இறந்து போவார்கள், ஓசோன் படலத்தில் பெரிய ஓட்டை விழுந்து பகலில் அதிக வெப்பமும், இரவில் அதிக குளிரும் இருக்கும்’ என்று ஆல்ஸ்டர் அப்ஸர்வேஷன் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஆனால் பின்னர் வெளியான ஆராய்ச்சி முடிவுகள் இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் என்றும் அப்படியே பூமியின் பாதையில் வந்தாலும் அதைத் தாக்கி அழிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளன. விண்கற்கள் பூமியின் பாதையில் வருவதும், பின்பு அவை விலகிச் செல்வதும் விண்வெளி வரலாற்றில் அவ்வவப்போது நடைபெறும் நிகழ்வுகளே. எனவே பயம் கொள்ளத் தேவையில்லை. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
இந்த விண்கல்லின் அகலம் 3 கிலோமீட்டர். இது பூமியின் மீது மோதினால் 77 லட்சம் அணுகுண்டுகள் வெடித்தது போன்ற பேரழிவு ஏற்படும், பூமியில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்துவிடும், கடல்பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வற்றிவிடும், தொடர்ந்து 16 மணிநேரம் வானம் இருட்டாக இருக்கும், 12 கோடி பேர் இறந்து போவார்கள், ஓசோன் படலத்தில் பெரிய ஓட்டை விழுந்து பகலில் அதிக வெப்பமும், இரவில் அதிக குளிரும் இருக்கும்’ என்று ஆல்ஸ்டர் அப்ஸர்வேஷன் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஆனால் பின்னர் வெளியான ஆராய்ச்சி முடிவுகள் இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் என்றும் அப்படியே பூமியின் பாதையில் வந்தாலும் அதைத் தாக்கி அழிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளன. விண்கற்கள் பூமியின் பாதையில் வருவதும், பின்பு அவை விலகிச் செல்வதும் விண்வெளி வரலாற்றில் அவ்வவப்போது நடைபெறும் நிகழ்வுகளே. எனவே பயம் கொள்ளத் தேவையில்லை. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Thursday, June 3, 2010
தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.
இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும்.
அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.
கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.
மூளை வளர்ச்சிக்கு முக்கியமான omega-3 fatty acids’ (docosahexaenoic acid)மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம்.
தாய், சிசுவின் உடலில் ‘omega-3 fatty acids’ அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.
32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்டியாக சீனா புதிதாக ஐபெட் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது
மடிக்கணினிகளின் விற்பனையை பின்னுக்கு தள்ளி தற்போது முதலிடம் பிடித்து வரும் ஐபேட் போலவே இப்போது புதிதாக ஐபெட் என்ற ஒன்றை சீன தொழில் நுட்ப வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர். ஐபேட் -ல் என்ன வெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் இந்த ஐபெட்-லும் பயன்படுத்தலாம்.
மடிக்கணினிகளின் விற்பனையை பின்னுக்கு தள்ளி தற்போது முதலிடம் பிடித்து வரும் ஐபேட் போலவே இப்போது புதிதாக ஐபெட் என்ற ஒன்றை சீன தொழில் நுட்ப வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர். ஐபேட் -ல் என்ன வெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் இந்த ஐபெட்-லும் பயன்படுத்தலாம்.
பயன்படுத்துவதற்க்கு எளிது மட்டுமல்ல விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வண்ணம் எளிதில் உடையாதவாறு இதன் மேல்பாகம் வடிமமைக்கப்பட்டுள்ளது. இதிலும் ஆண்டிராய்டு அப்ளிகேசன் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 128 MB RAM , 16 GB சேமிக்கும் வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் விலை $105 டாலர் தான்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Wednesday, June 2, 2010
இதயம் எப்படி இயங்குகிறது?
| இதயம் எப்படி இயங்குகிறது? இந்தக் கேள்விக்கான பதிலைச் சொன்னால் எளிமையாக இருப்பதுபோல்தான் தோன்றும். ஆனால் அதன் நடைமுறை மிகவும் நுட்பமானது, நுண்ணியமானது. பயன்படுத்தப்பட்ட அசுத்தமான ரத்தம், நமது உடலின் பல பகுதிகளில் இருந்து பலவகையான சிறிய சிரைகளின் (Veins) வழியாக இதயத்தின் வலப்பக்க மேல் அறைக்குக் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வலப்பக்க கீழ் அறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. பிறகு இந்த ரத்தமானது நுரையீரல் தமனியின் வழியாக நுரையீரல்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. நுரையீரல்களில் என்ன நடக்கிறது? நுரையீரல்களில் ரத்தமானது தூயமையாக்கப்பட்டு உயிர்வளி (அ) பிராண வாவு (அ) ஆக்ஸிஜன் (oxygen) சேர்க்கப்படுகிறது. பிறகு சுத்தம் செய்யப்பட்ட ரத்தமானது நுரையீரல் சிரையின் வழியாக இதயத்தின் இடப்புறம் உள்ள மேல் அறையை அடைந்து அடுத்து இதயத்தின் கீழ் அறையை அடைகிறது, இதயம் சுருங்கும்போது கீழ் அறையில் இருந்து ரத்தம் வெளியேறி மகா தமனியின் வழியாக ஆங்காங்கே உள்ள பலவகையான கிளைகளின் வழியாக உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதயம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் அதில் உள்ள உயிர் தரும் அமைப்புகளும், கழிவுகளை அகற்றும் அமைப்புகளும் நன்றாகச் செயல்பட வேண்டும். தமனிகள்தான் உயிர் தரும் அமைப்புகள் (LIFE GIVERS) என குறிப்பிடப்படுகின்றன. ஏனென்றால் இந்த வகை ரத்தக் குழாய்கள்தான் நமது உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உயிர்வளி, உயிர்சத்துகள், ஹார்மோன்கள், உணவு ஆகியவற்றை இடைவிடாது 24 மணி நேரமும் அளிக்கின்றன. சிரைகள்தான் கழிவுப் பொருள்கள் அகற்றும் அமைப்புகள் (GARBAGE DISPOSAL PARTS) எனப்படுகின்றன. இந்த வகை ரத்தக் குழாய்களும் நன்றாகச் செயல்பட வேண்டும். ஏனென்றால் இந்த அமைப்புகள்தான் உடலில் உள்ள பல கோடிக்கணக்கான திசுக்களில் தேங்கியிருக்கும் கழிவுப் பொருள்களை ரத்தத்தின் மூலமாக இதயத்துக்குக் கொண்டு வருகின்றன. இந்த இரண்டு அமைப்புகள் மட்டுமல்லாது. இதயத்தின் வால்வுகளும் நன்றாகச் செயல்பட வேண்டும், அப்போதுதான் இதயத்தின் பணி சிறப்பாக நடக்கும். மேலோட்டமாகப் பார்த்தால் ஒற்றை விசை அமைப்புபோல் இதயத்தின் இரண்டு பக்கங்களையும் சுருங்கி விரிந்து ரத்தத்தைப்பெறும் வேலையையும், அனுப்பும் வேலையையும் செய்வதுபோல் தோன்றும். ஆனால் இதயத்தின் வலப்பக்கம் தனி விசையாகவும், இடப்பக்கம் தனி விசை அமைப்பைக் கொண்டதாகவே கருதப்படுகிறது. இதயம் துடித்துக் கொண்டிருப்பது ஒன்று. அப்படியானால் இதயம் எந்நேரமும் இயங்கிக் கொண்டேதான் இருக்குமா? அதற்கு ஓய்வு என்பதே கிடையாதா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். பொதுவாக நம் இதயம் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து செயல்படுவது போல் தோன்றும். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. எந்த உறுப்பாக இருந்தாலும் அது நீண்ட நாள்களுக்கு நன்றாகச் செயல்பட சற்று ஓய்வு தேவை. இதயத்துக்கும் இந்த விதி பொருந்தும். ஆனால் மற்ற உறுப்புகளைப்போல் இதயம் ஓய்வு எடுத்தால் நமது நிலை என்னவாகும்? இதயம் இயங்கிக் கொண்டே ஓய்வு எடுத்துக் கொள்ள இயற்கையே சில விந்தையான வழிமுறைகளை வகுத்துள்ளது. ஒவ்வொரு முறையும் சுருங்கி விரியும்போது கிடைக்கும். அரை நொடிப் பொழுதை (Half a second) இதயம் ஓய்வுக்காக பயன்படுத்திக் கொள்கிறது. இதுபோல் இரவில் தூங்கும் போது நம் உடலில் உள் மிகவும் நுண்ணிய ரத்தக் குழாய்களுக்குத் தேவையான ரத்தத்தை அனுப்புவதை ஓரளவு குறைத்துக் கொள்வதன் மூலமாகவும், இதயமானது தன்னுடைய வேலைத்திறனை குறைத்து ஓய்வு எடுத்துக் கொள்கிறது. லப், டப்& இவை இதயத்தின் துடிப்பைக் குறிக்கும் சொற்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இதயத்தில் இருந்து எழும் இந்த ஒலிதான் அது இயங்குவதற்கான அறிகுறி. அமைதியான நேரத்தில் மற்றவரின் நெஞ்சுப் பகுதியில் கூர்மையாக உங்கள் காதை வைத்தோ அல்லது மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதாஸ்கோப் என்ற கருவியை உங்கள் மார்பில் இடப்பக்கத்தில் வைத்தோ உன்னிப்பாகக் கவனித்தால் இதயத்தின் லப், டப் சத்தத்தை கேட்கலாம். முதலில் ஏற்படுவது லப் என்ற ஒலியாகும். இந்த ஒலி ஒரு நொடியில் 10&ல் ஒரு பங்கு நேரம் கேட்கும். இந்த ஒலியை கதவை மூடும் சத்தத்துக்கு ஒப்பிடலாம். இந்த ஒலியானது இதயத்தின் மேல் அறைக்கும், கீழ் அறைக்கும் இடையே உள்ள இரண்டு வால்வுகள் மூடுவதாலும் இந்த அறைகளில் உள்ள தசைகள் சுருங்குவதாலும் ஏற்படுகிறது. இரண்டாவது ஒலியான டப் இதயத் தமனிகளில் உள்ள வால்வுகள் மூடுவதால் ஏற்படுகிறது. இதயம் தொடர்பாக இன்னோர் ஆச்சரியமான தகவலைச் சொல்லட்டுமா? இதயம் என்பது மின் ஆற்றலால் இயக்கப்படும் ஓர் உறுப்பு. இன்னும் டெக்னிக்கலாகச் சொல்லப்போனால் மின்சாரத்தால் இயக்கப்படும் பம்பிங் (pump) எந்திரம். நம் உடலுக்குள் ஏது மின்சாரம் என நீங்கள் நம்ப முடியாமல் கேட்பது புரிகிறது. இதயம் தனக்குத் தேவையான மின் ஆற்றலை (Electric power) தானே உற்பத்தி செய்து தன்னைத் தானே தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்த மின் ஆற்றலை இதயம் எப்படி உற்பத்தி செய்கிறது? அதற்காகவே ஒரு சிறப்பு அமைப்பு இதயத்துக்குள் அமைந்துள்ளது. இதயத்தின் வலது பக்க மேல் அறையின் மேற்பகுதியில் நரம்புகளாலும், தசை நார்களாலும் உருவாக்கப்பட்டுள்ள முடிச்சு போன்ற அமைப்பு உள்ளது. இந்த நரம்புத் தசை முடிச்சை ஆங்கிலத்தில் சைனோ& ஆக்டீரியல் நோடு (Sino Arterial Node) என்று சொல்வார்கள். சுருக்கமாக எஸ்.ஏ.நோடு (S.A.Node) என்றும் சொல்வார்கள். இந்த அமைப்பை மோட்டார்களில் உள்ள மின் ஆற்றலை உற்பத்தி செய்யும் அமைப்போடு ஒப்படலாம். இதயத்துக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறிய மின் உற்பத்தி அமைப்பானது நிமிடத்துக்கு 72 முறை என்ற எண்ணிக்கையில் மின்பொறியை அல்லது மின் ஆற்றலை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இதய மேல் அறையில் தொடங்கும் மின் ஆற்றலானது. மேல் அறைக்கும் கீழ் அறைக்கும் இடையே அமைந்துள்ள மற்றொரு நரம்பு முடிச்சு அமைப்புவரை (NODE) ஒரே சீராகப் பரவுகிறது. இங்கிருந்து இந்த மின் ஆற்றல், ஒரே சீராக இதயத்தின் இடப்பக்கம் உள்ள கீழ் அறையின் கடைசிப் பகுதிவரை பரவுகிறது. இவ்வாறு மின் ஆற்றல் ஒவ்வொரு முறையும் சீராக இதயம் முழுவதும் பரவுவதால் இதயம் இயக்கப்படுகிறது. மின் ஆற்றலால் இதயம் நிமிடத்துககு 72 முறை என்ற அளவில் துடிக்கிறது. உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் இயங்குவதற்கு ரத்தமும், அதன்மூலம் கடத்தப்படும் பிராண வாயுவும் தேவை என்பது எல்லோரும் அறிந்ததே. அப்படியானால் இதயம் இயங்கவும் ரத்தம் தேலை இல்லையா, அந்த ரத்தத்தை இதயம் எப்படி பெறுகிறது? ஒரு வங்கியில் சாதாரணமாகப் பணிபுரியும் ஒருவர் தன்னுடைய வங்கியில் அலுவலக நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளைக் கையாண்டாலும், தன்னுடைய சொந்தத் தேவைக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்தமுடியாது. மாறாக வங்கியில் இருந்து மாத ஊதியமாகப் பெறும் பணத்தை மட்டும்தான் தன்னுடைய சொந்தத் தேவைக்காகவும், தன்னுடைய குடும்பச் செலவுக்காகவும் பயன்படுத்த இயலும். இதுபோல் இதயம் தன்னுடைய அறைகளில் கரை புரண்டு ஓடும் தூய்மையான ரத்தத்தை தான் இயங்குவதற்காக நேரிமையாகப் பயன்படுத்துவதில்லை. மாறாக உடலின் மிகப்பெரிய ரத்தக் குழாயாகிய மகா தமனியில் (Aorta) இருந்து முதல் கிளைகளாகப் பிரியும் இதயத் தமனிகள் (CORONARY ARTERIES) மூலமாகத் தனக்குத் தேவையான ரத்தத்தை இதயம் பெறுகிறது. மகா தமனியின் இருந்து முதல் கிளைகளாக மூன்று தமனிகள் பிரிகின்றன. இந்த மூன்று ரத்தக் குழாய்கள்தான் இதயம் இயங்குவதற்குத் தேவையான உயிர்வளி, ரத்தம், ஊட்டச் சத்துகள் ஆகியவற்றை வழங்குகின்றன. குளிர்பானங்கள் குடிப்பதற்குப் பயன்படுத்தும் உறிஞ்சும் குழல்களின் (STRAWS) அளவில்தான இதயத் தமனிகள் இருக்கும். மனிதனின் மொத் எடையில் இதயமானது 200&ல் ஒரு பங்கு என்ற அளவில்தான் இருக்கிறது. அளவு சிறயதாக இருந்தாலும், மனிதனின் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் மொத்த அளவில் 200&ல் ஒரு பங்கு அளவுள்ள ரத்தத்தை இதயம் பயன்படுத்திக் கொள்கிறது. இதயத்துக்கு ரத்தம் அளிக்கும் ரத்தக் குழாய்களை ஆங்கிலத்தில் (CORONARY ARTERIES) என்று அழைப்பார்கள். இந்த ரத்ததக் குழாய்கள் அனைத்தும் இன்னும் பல சிறு கிளைகளாகப் பிரிந்து இதயத்தை ஒருவலைபோல் போர்த்தியுள்ளன. (CORONARY ARTERIES) என்ற பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. லத்தீன் மொழியில் கொரானா (CORONA) என்றால் மகுடம் அல்லது மணிமுடி என்பது பொருள். பல நூறு ஆண்டுகளுக்கு முன், மேலை நாடுகளில் முட்கள் போன்ற அமைப்புடைய கிரீடத்தை மன்னர்கள் தங்கள் மகுடமாக அணிந்து கொள்வது வழக்கம். எனவேதான் இதய ரத்தக் குழாய்களுக்கு இந்தப் பெயர் வந்தது. இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களுக்கும் உடலின் மற்ற பகுதியில் உள்ள ரத்தக் குழாய்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதயத் தமனிகள், இதயத்தின் இடைவிடாத இயக்கத்துக்கு ஏற்றவாறு இயற்கையாகவே நெகிழ்ந்து விரிந்து கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதயம் விரிவடையும்போது இந்த ரத்தக் குழாய்கள் நன்கு விரிவடைந்து, தங்களுக்குத் தேவையான ரத்தத்தைப் பெற்றுக்கொள்கின்றன. இதுபோல் இதயம் சுருங்கும் போது இதயத்தின் ரத்தக் குழாய்கள் நன்றாகச் சுருங்கி ரத்தத்தை வெளியேற்றுகின்றன. இதயம் & சில ஆச்சரியமான உண்மைகள் மனிதன் உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் ஒன்று இதயம். இதயமானது தொடர்ச்சியாக 12 மணி நேரத்தில் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டு 6 டன் எடையுள்ள பொருளை தரையில இருந்து 2 அடி உயரத்துக்கு தூக்க முடியும். இதயமானது ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் உடலில் உள்ள மொத்தம் சுமார் பத்தாயிரம் மைல் நீளம் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்தத்தை அனுப்புகிறது. மருத்துவர்களால் புரிந்துகொள்ள முடியாத சில புதிரான ஆற்றல்களை இதயம் பெற்றுள்ளது. இதயத்தைப் பிணைத்திருக்கும் பலவகையான நரம்பு அமைப்புகளை முழுமையாகத் துண்டித்துவிட்டால்கூட, இதயம் எந்தவிதமான பாதிப்புக்கும் ஆளாகாமல், தானாகவே இயங்கும் ஆற்றல் பெற்றது. ஒவ்வொரு நாளும் இதயமானது ஒரு லட்சம் முறை விரிந்து சுருங்குகிறது. இந்தக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் 70 ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயமானது 25 ஆயிரம் கோடி முறை சுருங்கி விரிகிறது. ஒரு நாளில் இதயமாவது 1800 காலன் (7200 லிட்டர்) அளவு ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது. இந்த அளவில் கணக்கிட்டால் இதயமானது ஒரு மனிதனின் வாழ்நாளில் சுமார் 4.6 கோடி காலன அளவு ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கு அனுப்புகிறது. இதயத்தின் ஆற்றலானது (Power) ஒரு குதிரையின் ஆற்றலில் (Horse Power) 240&ல் ஒரு பங்கு. இதயமானது ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் சுமார் 11 பிண்ட் (PINT) அளவுள்ள ரத்தத்தை ரத்தக் குழாய்களின் மூலமாக உடலின் பல பாகங்களுக்கு அனுப்புகிறது. இதயமானது ஓர் ஆண்டில் வெளியேற்றும் ரத்தத்தின் அளவானது 6.5 லட்சம் காலன்கள். இந்த அளவு ரத்தத்தைக் கொண்டு 900 காலன் கொள்ளளவு கொண்ட 72 லாரிகளை நிரப்பலாம். ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயமானது வெளிப்படுத்தும் ஆற்றலை ஒன்றாகத் திரட்டினால் அந்த ஆற்றலால் ஒரு டன் எடையுள்ள பொருளைத் தரையில் இருந்து சுமார் 150 மைல் உயரத்துக்குத் தூக்க முடியும். |
மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் எண்ணெய்க் கசிவைத் தடுப்பதில் தோல்வி
அமெரிக்காவில் மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுவருகின்ற எண்ணெய்க் கசிவை அடைப்பதற்காக BP நிறுவனத்தார் தற்போது செய்துள்ள முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.
"ஆழ்கடல் கிணற்றிலிருந்து எண்ணெய் வெளிவருவதைத் தடுப்பதற்காக மேலிருந்து கடினமான சேற்றையும் சிமெண்டு-ஜல்லிக் கலவையையும் செலுத்தி நாங்கள் மூன்று நாட்களாக முயற்சி செய்தும் எண்ணெய் வெளிவருவதைத் தடுக்க முடியவில்லை", என BP நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி டூக் சட்டில்ஸ் அறிவித்துள்ளார்.
பல முறை முயன்ற பின்னும் இந்த முயற்சி பல தரவில்லை என்பதால் மாற்று வழியில் முயலலாம் என அந்நிறுவனம் தற்போது தீர்மானித்துள்ளது.
அடுத்த கட்ட முயற்சி
பூமிக்கு அடியிலிருந்து எண்ணெய் மேலே வருவதற்கான அந்த குழாயை ஒரு இடத்தில் வெட்டி, மேலே வருகின்ற எண்ணெயை கடலில் கலக்க விடாமல் அப்படியே உறிஞ்சி கப்பலில் சேமித்து விடுவது என்பது அவர்களுடைய அடுத்த உத்தியாக இருக்கும் எனத் தெரிகிறது.
இந்தத் திட்டம் வெற்றி அடைந்தாலும் கூட, கடலில் எண்ணெய் கலப்பதை மொத்தமாகத் தடுத்து விட முடியாத் என்பதை பிபி நிறுவனத்தார் ஒப்புக்கொள்கின்றனர்.
அரசியல் தாக்கங்கள்
கசிந்த எண்ணெய் அமெரிக்கக் கரை வரை பரவியுள்ளது என்றால், இதன் அரசியல் தாக்கங்களோ அதனையும் தாண்டி வாஷிங்டன் வரை பரவியுள்ளது.
எண்ணெய்க் கசிவைத் தடுக்க முடியாது போயுள்ள இந்த சூழ்நிலை குறித்து தான் கவலையும் கோபமும் அடைந்திருப்பதை அதிபர் ஒபாமா ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தார். இந்த விவகாரம் அவரது தலைமைத்துவத்தின் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.
வானிலை சவால்கள்
களத்தில் ஏற்கனவே நிலவுகின்ற சிரமான சூழலை வானிலை மாற்றங்கள் மேலும் கடினமாக்கி விடலாம் என கடலோரக் காவல்படையைச் சேர்ந்த அதிகாரி ரியர் அட்மிரல் மேரி லாண்ட்ரி கூறுகிறார்.
"வானிலை என்பது எங்களுடைய முயற்சிகளுக்கு மிகப்பெரிய ஒரு சவாலாக அமைந்துள்ளது. மெக்ஸிகோ வளைகுடாவில் சூறாவளிகள் ஏற்படுகின்ற ஒரு காலகட்டத்துக்குள் நாம் இப்போது நுழைந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்." என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே லூசியானா மாகாண கடலோரப் பகுதிகளில் தங்களுடைய நிலமும் வாழ்வாதாரமும் அழிக்கப்படுவது கண்டு மக்களிடம் ஆத்திரமும் ஆற்றாமையும் அதிகரித்து வருகிறது.
எண்ணெய்க் கசிவை தடுத்து நிறுத்துவதற்கான நிஜமான தீர்வு என்பது அந்த இடத்துக்கு அருகிலேயே இன்னொரு கிணற்றைத் தோண்டுவது என்பதுதான் என நிபுணர்கள் பலர் நம்புகின்றனர்.
ஆனால் அப்படி இன்னொரு கிணற்றைத் தோண்ட ஆகஸ்ட் மாதம் வரை ஆகிவிடலாம்.
அதற்கு முன்னதாக மாற்று வழி கண்டறியப்படவில்லை என்றால், எண்ணெய்த் திட்டுக்களால் ஏற்படுத்தகக்கூடிய சுற்றுச் சூழல், பொருளாதார மற்றும் அரசியல் சேதங்கள் மிகவும் மோசமாக இருக்கும் என்றே தெரிகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும்
பொதுவாக எந்த ஒரு போரிலும் சில முக்கியமான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதில் முக்கியமானது தான் “உளவு” ஆகும்.
போருக்கு முன்னதாக எதிரியின் இயலுமை, ஆயுதவளங்கள், சாதகமான பௌதிகநிலைகள், செயல்வேகம் ஆகியவற்றை அறிந்து கொள்வதன் மூலம் போரின் முடிவை தமது தரப்பிற்கு சாதகமாக்கிக்கொள்வது என்பது “உளவு” இனுடைய அவசியம் ஆகும். ஆகவே பூமி மீதான முற்றுகைக்கான உளவு நடவடிக்கைகள் தான் இப்பொழுது அவதானிக்கப்படும் மேற்படி வேற்றுக்கிரகவாசிகளின் பிரசன்னத்திற்கான அர்த்தமாகுமா? எனும் கேள்வியும் எழத்தானே செய்கிறது.
யுத்தம் உளவு முடிந்தவுடனா? அல்லது ஆரம்பித்துவிட்டதா?
எமது கிரகத்திற்கு ஆக்கிரமிப்பு நோக்கமாக வருகை தரும் வேற்றுக்கிரகவாசிகள் அரங்கேற்றிக்கொண்டிருக்கின்ற உளவு நடவடிக்கைகள் தான் எம்மால் அவதானிக்கப்படும் சம்பவங்களுக்கான காரணம் என்று ஆய்வின் முன்னைய பகுதியில் தெளிவாக ஆராய்ந்து உறுதிப்படுத்தி இருந்தோம்.
அப்படியாயின் அவர்கள் தமது ஆக்கிரமிப்பின் ஓரங்கமாக மனிதர்கள் மீது உயிரிழப்புகளை ஏற்படுத்த்தொடங்கவில்லையா? என்று நோக்குமிடத்து இல்லை என்னும் பதிலை கூறுவதில் பல சிக்கல்கள் தோன்றுகின்றன.
இதன் ஓரம்சமாக தோன்றுவது தான் இப்போது இடம்பெறும் உயிரிழப்புகளுக்கும் அவர்களுக்கும் தொடர்புண்டா என்கிற கேள்வி.
வேற்றுக்கிரகவாசிகள் திடீர் திடீரென தோன்றுவதும் அதே வேகத்தில் மறைந்து போவதற்கும் ஆன காரணங்களாக
வேற்றுக்கிரகவாசிகள் திடீர் திடீரென தோன்றுவதும் அதே வேகத்தில் மறைந்து போவதற்கும் ஆன காரணங்களாக
1. அவர்கள் எமது கண்ணுக்கு புலப்படாத வேறு பரிமாணங்கள் ஊடாக (Dimensions) இயங்கக்கூடிய ஆற்றலைக்கொள்ளுதல்.
2. அவர்கள் சூழ்நிலைக்கேற்ப உருமாறக்கூடிய ஆற்றலை கொண்டிருத்தல் ஆகியவற்றைக்குறிப்பிடலாம்.
இப்போது பூமியில் ஏற்படுகின்ற சிறு விபத்துக்கள் முதல் பல பாரிய விபத்துக்கள் வரை காரணம் கண்டறிய முடியாத நிலை காணப்படுகிறது. வேற்றுக்கிரக வாசிகள் மேற்குறிப்பிட்ட இயல்புகளை கொண்டிருக்குமிடத்து இவ்விபத்துக்களில் அலகுவாக பங்கேற்க்க்கூடியவர்களாக இருப்பது அவ்வளவு கடினமானதல்ல.
மாறாக இவ்விபத்துக்களில் அவர்கள் தொடர்பைக் கொண்டிக்காவிடின் அவர்கள் உயிரிழப்புக்களை ஏற்படுத்துவது எப்போது?
பொதுவாக ஒரு ஆக்கிரமிப்பானது சில பிரதான நோக்கங்களையே கொண்டிருக்கும்.
1. எதிரி நாட்டு வளத்தை சூறையாடுதல்.
2. தன்னை பலமானவனாக காட்ட முயற்சிப்பது. அதாவது பிராந்தியத்தில் தனது நிலையை உயர்வாக வைத்திருத்தல். ( வல்லரசு )
3. அடிமைப்படுத்தல்.
இதில் 2வது காரணத்தை வேற்றுக்கிரகவாசிகள் கொண்டிருப்பின் ஏற்கனவேயே எம்மீது தாக்குதலை ஆரம்பித்திருக்கவேண்டும். எனினும் இதுவரை அவ்வாறு இடம்பெறாமையானது 2வது காரணத்திற்கான சாத்தியப்பாடுகளை குறைக்கிறது. (Possibilities)
எனவே அவர்களின் தெரிவாக அமையக்கூடியது 1ம் 3ம் காரணங்கள் ஆகும்.
1. எமது பூமியிலுள்ள வளமே அவர்களின் முக்கிய இலக்காக மாறுமென்பதை எம்மால் ஊகிக்கமுடிகிறது. எனினும் இந்த வளங்களுக்கான வேட்டை பூமியில் தொடங்கிவிட்டதா? இல்லையா? இதுவரை நாம் அறிந்த வளங்களில் குறிப்பிடத்தக்க மறைவுகள் இடம்பெறாத்தைக்கொண்டு இன்னும் வளத்திற்கான ஆக்கிரமிப்பு தொடங்கவில்லைஎன்று கூறிவிடமுடியாது.
ஏனெனில் எம்மால் வளங்கள் என்று அடையாளம் காணப்பட்டவை தான் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் வளங்களாக இருக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. எனவே இப்பொழுது ஆரம்பித்திருக்கும் இந்த வளங்கள் சூறையாடப்படாமல் காரணமாக நாம் அடுத்த கட்ட முன்னேற்றத்தை (அவர்களுக்கு இணையாக) அடையவதற்கான அறிவைப்பெறுகின்ற சமயத்தில் கூட வளப்பற்றாக்குறையால் இப்படியே இருக்கவேண்டிய இருக்கவேண்டிய நிலை ஏற்படலாம். அதாவது எமது எதிர்கால வளர்ச்சியின் போது நாம் இனம் காணப்போகும் வளங்கள் இப்போது வேற்றுக்கிரகவாசிகளால் எமது பூமியில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றன.
இவ்வாறு தங்களுக்குரிய வளங்களை முற்றாக இங்கிருந்து கொண்டு சென்ற பின் தம்முடன் மனிதர்கள் போட்டியிடுவதற்கான போராடுவதற்கான இடிப்படை இயலுமைகள் கூட அற்ற தன்மையையே கொண்டிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அவர்கள் வெளிப்படையாக பூமிமீது ஆக்கிரமிக்கும் சாத்தியம் ஏற்படும். அப்போது பாரிய போர் நடைபெறாது. பூமி அவர்களுக்கு இலகுவாக அடிபணிக்ன்ற நிலை ஏற்படும். பூமியிலுள்ள அனைவரும் வேற்றுக்கிரக வாசிகளின் அடிமைகளாகும் நிலை உருவாகுவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லாமலில்லை.
தொடரும்...............
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Subscribe to:
Posts (Atom)
























