Monday, March 22, 2010

My Documents - Folder Location -ஐ வேறு Drive க்கு மாற்றுவது எப்படி?

வழக்கமாக My Documents


C:\Documents and Settings\உங்கள் User Name\My Documents என்று இருக்கும்.

ஒருவேளை உங்கள் System Drive -ல் இடபற்றாகுறை, மற்றும் இதர காரணங்களுக்காக நீங்கள் My Documents ஐ வேறு டிரைவிற்கு மாற்ற வேண்டுமென்றால்,

1. தேவையான டிரைவில் "My Documents" Folder -ஐ Create செய்து கொள்ளவும்.

2. My Computer -ஐ திறந்து கொண்டு, அதில் இடது புறமுள்ள Common Task pane-ல் உள்ள "My Documents" -ஐ ரைட் கிளிக் செய்து Properties -க்கு செல்லவும். (வலதுபுறமுள்ள "My Documents Folder"-ல் அல்ல.)

3. இதில் Target எனும் இடத்தில் நீங்கள் புதியதாக உருவாக்கிய "My Documents"- Folder-ன் சரியான பாதையை டைப் செய்து Apply -ல் கிளிக் செய்யவும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!...

Hide any file inside any other file.

உங்கள் ஹார்ட் டிஸ்க் NTFS ஆக இருந்தால் இது சாத்தியமாகும். FAT32 வில் இந்த வித்தை பலிக்காது.

உதாரணமாக Solitaire ஃபைலை (Sol.exe) ஒரு டெக்ஸ்ட் (Text) ஃபைலுக்குள் மறைத்து வைக்க என்ன செய்ய வேண்டும்...

நீங்கள் 'C' ட்ரைவை உபயோகிப்பதாக வைத்துக்கொள்வோம்.

1. 'TEST' என்ற போல்டரை உருவாக்கவும்.(C:\TEST) எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.

2. அந்த போல்டருக்குள் ஒரு டெக்ஸ்ட் ஃபைலை (Text Document) உருவாக்கி, அதனுள் ஏதாவது டைப் செய்து விட்டு அந்த ஃபைலுக்கு container.txt என பெயரிட்டு சேமித்து கொள்ளவும். (இந்த டெக்ஸ்ட் ஃபைலுக்குள் தான் Sol.exe ஃபைலை மறைத்து வைக்க போகிறோம்)

3. \windows\system32 என்ற போல்டரிலிருந்து sol.exe ஃபைலை C:\TEST க்கு காப்பி செய்யவும்.

4. இப்பொழுது Command Window ஐ திறந்து கொண்டு, C:\TEST போல்டருக்கு சென்று “Type Sol.exe > container.txt:sol.exe” இதை டைப் செய்து என்டர் அடிக்கவும்.

5. திரையில் எந்த மாற்றமும் தெரியாது. அந்த டெக்ஸ்ட் ஃபைலின் அளவு + .Sol.exe ஃபைலின் அளவு 50 கேபி ஆகியிருக்கும். அந்த டெக்ஸ்ட் ஃபைலை திறந்து பார்த்தால், நீங்கள் முன்பு டைப் செய்திருந்த அனைத்தும் அப்படியே இருக்கும்.

6. நீங்கள் C:\TEST. போல்டரில் காப்பி செய்த Sol.exe ஃபைலை அழித்துவிடவும்.

7. இப்பொழுது மறைத்து வைத்த ஃபைலை எப்படி திறப்பது? கீழ்கண்ட கட்டளையை கொடுக்கவும்.

“start c:\test\container.txt:sol.exe”

அவ்ளோதான்.

இப்படி எந்த வகை ஃபைலையும், இன்னொரு எந்த வகை ஃபைலுக்குள்ளும் மறைத்து வைக்கலாம். (உங்கள் ஹார்ட் டிஸ்க் NTFS ஆக இருக்கும் பட்சத்தில்..)

குறிப்பு:- நீங்கள் மறைத்து வைக்கும் ஃபைலின் பெயரை மறந்துவிட்டால் சிரமம். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

விண்டோஸ் 7 ல் சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் உருவாக்குவது எப்படி?


சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் பல சமயங்களில் நமக்கு பேருதவியாக இருக்கும். புதிதாக ஏதாவது மென்பொருள் பதிந்த பின்னரோ அல்லது புதிதாக ஏதாவது வன்பொருள் நிறுவிய பின்னரோ கணினியின் இயங்குதளம் பாதிக்கப்பட்டு சரிவர இயங்காமல் போய்விடுகிறது.


இது போன்ற சமயங்களில் நாம் ஏற்கனவே ஏதாவது ஒரு தேதியில் சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் உருவாக்கியிருந்தால், அந்த குறிப்பிட்ட தேதிக்கு கணினியை ரீஸ்டோர் செய்ய முடிவதால், நமது முக்கியமான டேட்டாக்களை இழக்காமலிருக்க முடியும். இந்த வசதி Windows Me பதிப்பிலிருந்து மைக்ரோ சாப்டினால் தரப்பட்டுள்ளது. (Windows 98 -ல் டாஸ் ப்ராம்ப்ட்டில் Scanreg / Restore என்ற கட்டளை கொடுத்து பயன் படுத்தலாம்.)

எப்பொழுதுமே புதிதாக எதாவது மென்பொருள் அல்லது வன்பொருள் நிறுவுவதற்கு முன்னதாக ஒரு சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் உருவாக்குவது பாதுகாப்பானதாகும்.

இந்த வசதி விண்டோஸ் எக்ஸ்பியில் All Programs -> Accessories -> System Tools -> System Restore சென்றால் கிடைக்கும்.

விண்டோஸ் ஏழில் இந்த வசதி சற்று வித்தியாசமாக தரப்பட்டுள்ளது.

My Computer ல் வலது கிளிக் செய்து Properties செல்லவும். இனி வரும் டயலாக் பாக்ஸில் இடதுபுற பேனில் System Protection என்பதை கிளிக் செய்யவும்.

இனி திறக்கும் System Properties திரையில் System Protection என்ற டேபில் 'Create' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

அடுத்து உங்களுக்கு இந்த ரீஸ்டோர் பாயிண்ட் எப்பொழுது எந்த நிகழ்விற்கு முன் உருவாக்கினோம் என்பதை நினைவூட்டும் வகையில் ஒரு விபரத்தை டைப் செய்து Create கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவுதான்!
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கண்ணுக்கு தெரியாத (Invisible Folder) ஃபோல்டரை உருவாக்குவது எப்படி?

கண்ணுக்கு தெரியாத (Invisible Folder) ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?


1. எந்த ஃபோல்டரை கண்ணுக்கு புலப்படாமல் (Invisible Folder) செய்ய வேண்டுமோ, அந்த ஃபோல்டரை ரைட் கிளிக் (Right Click) செய்து 'Rename' கிளிக் செய்யவும்.


2. புதுப்பெயரை இடும் பொழுது Alt கீயை அழுத்திக் கொண்டு '0160' ( Numeric Pad-ல்) டைப் செய்து என்டர் அடிக்கவும்.

(இப்பொழுது ஃபோல்டரின் பெயர் மறைந்துவிடும்.)

3. ஃபோல்டரில் ரைட் கிளிக் செய்து Properties -ல் Customize tab கிளிக் செய்து Change Icon கிளிக் செய்யவும். இதில் நிறைய ஐகான்கள் (Icons) இருக்கும் Scroll செய்து பார்த்தால் அவற்றிற்கு இடையில் வெற்று (Blank) ஐகான்களும் இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். Apply மற்றும் Ok.

கண்ணுக்கு தெரியாத போல்டர் ரெடி! பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஜி-மெயில் : எக்ஸ்ட்ரா டிரைவ்

நம் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி வேறு ஒரு இடத்தில் நம் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவே நாம் விரும்புவோம். சிடிக்களிலும், மேக்னடிக் டேப்களிலும் பைல்களைப் பதிந்து பாதுகாக்கலாம்.


ஆனால் இவற்றை நாம் செல்லும் இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினம். மேலும் இவையும் நிலையாகப் பல ஆண்டுகளுக்கு இவற்றைக் கொண்டிருக்குமா என்பதுவும் ஐயமே.

ஆன்லைனில் பல தளங்கள், மாதக்கட்டணம் பெற்றுக் கொண்டு நம் பைல்களை ஸ்டோர் செய்து வைக்கின்றன. இதற்கென பல நிலைகளில் கட்டணங்கள் அடங்கிய திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மையும் முழுமையானதாக இல்லை.

இந்த வகையில் இலவசமாக சேவை செய்திடும் சிலதளங்கள், பாதுகாப்பிற்கு அனுப்பப்படும் பைல்களின் அளவு, தன்மை, தளங்களுக்கான இணைப்பு ஆகியவை குறித்து பல வரையறைகளைக் கொண்டுள்ளன. எனவே இவற்றை எந்த அளவிற்கு நம்பிக்கையுடன் நம் பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியும் என்பது கேள்விக் குறியே. ஆனால் நம் அருகிலேயே ஓர் அருமையான ஆன்லைன் சேவிங் தளம் உள்ளது என்பதனை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. அதுதான் ஜிமெயில். உலகில் இயங்கும் இமெயில் சேவைகளில் தலையானதும் மிகச் சிறந்ததுவும் ஜிமெயில் என அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஜிமெயில் ஸ்பாம் மெயில்களைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்படுகிறது. நம் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. 7 ஜிபிக்கும் மேலாக நம் மெயில்கள் மற்றும் இணைப்புகளுக்கு இடம் தருகிறது. இந்த அளவும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளது. நமக்கு ஜிமெயில் தரும் இட வசதியில், மிகக் குறைந்த அளவே நாம் பயன்படுத்துகிறோம். ஜிமெயில் தளம் சென்றவுடன் இந்த செய்தி நமக்குக் காட்டப்படும். எனவே இந்த பயன்படுத்தாத ஜிமெயில் டிரைவ் இடத்தை ஏன் நாம் நம் பைல்களைப் பாதுகாத்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தக் கூடாது.

இந்த வகையில் ஜிமெயில் டிரைவ் என்ற ஒரு வசதியை கூகுள் தருகிறது. ஜிமெயில் டிரைவ் நம் கம்ப்யூட்டரில் உள்ள மை கம்ப்யூட்டரில் ஒரு சிஸ்டம் பார்ட்டிஷனை ஏற்படுத்துகிறது. இதனை நம் விண்டோஸ் எக்ஸ்புளோரருடன் இணைக்கிறது. ஆன்லைனில் கூகுள் தரும் டிரைவ் இடத்தை, நம் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் போலப் பயன்படுத்தும் வசதியினைத் தருகிறது. நம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்ட ஒரு டிரைவ் போல இந்த ஆன்லைன் ஜிமெயில் டிரைவ் இயங்குகிறது. எனவே பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவிலிருந்து ட்ராக் அண்ட் ட்ராப் வசதி மூலம் இந்த ஆன்லைன் டிரைவில் இழுத்துவிட்டு காப்பி செய்திடலாம். இதிலும் சில வரையறைகள் உள்ளன. பைல் ஒன்று 25 எம்பி என்ற அளவிலே தான் இருக்க வேண்டும். இந்த வரையறையைச் சமாளிக்க ஜிமெயில் டிரைவ், பைலைப் பிரித்து அடுக்கி வைத்துக் கொள்கிறது.

புதிய போல்டர்களை உருவாக்குவது, பைல்களை காப்பி, பேஸ்ட் மற்றும் டெலீட் செயல்பாடுகளுக்கு உள்ளாக்குவது போன்றவற்றை ஜிமெயில் டிரைவில் மேற்கொண்டாலும், இதற்கென தனியாக ஒரு டிரைவ் எழுத்து தரப்படுவதில்லை.

மேலும் பைல்களின் பெயர்கள் 40 கேரக்டர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. உங்களிடம் ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், இந்த ஜிமெயில் டிரைவினை எப்படிப் பெறுவது என்று பார்ப்போம்.

முதலில் உள்ள முகவரிக்கு செல்லவும். இந்த இணையப் பக்கத்தில் கீழாக ஸ்குரோல் செய்து செல்லவும். இதில் இரண்டு டவுண்லோட் லிங்க் தரப்பட்டுள்ளது. இதில் ஏதாவது ஒன்றில் கிளிக் செய்து அதனை எளிதாக இயக்கும் வகையில் டெஸ்க் டாப்பில் வைத்துக் கொள்ளவும். அடுத்து gmailfs115.zip இந்த பைலை அன்ஸிப் செய்திடவும். அனைத்து பைல்களையும் எக்ஸ்ட்ராக்ட் செய்து பெற்ற பின்னர் gmailfs115 என்ற போல்டருக்குச் செலல்வும். பின் இதில் உள்ள செட் அப் பைல் மீது டபுள் கிளிக் செய்திடவும். இப்போது பைல் திறக்கும் செயலுக்கான எச்சரிகை வந்தால், அதனைக் கண்டு கொள்ளாமல் கீதண கட்டளை கொடுக்கவும்.

இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் முழுமையாக இன்ஸ்டால் ஆகும். உங்கள் கம்ப்யூட்டரில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். பின் உங்கள் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து பார்த்தால், அங்கே Other என்ற வகையில் புதியதாக டிரைவ் ஒன்று இருப்பதனைப் பார்க்கலாம். பின் GMail Drive என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இங்கே லாக் இன் விண்டோ திறக்கப்படும். இங்கு கிடைக்கும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களுக்கான பீல்டுகளில் உங்கள் ஜிமெயில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தரவும்.இதில் உள்ள ஆட்டோ லாக் இன் டிக் செய்து வைத்தால், அடுத்த முறை இன்டர்நெட் இணைப்பு கிடைத்தவுடன், நீங்கள் தானாகவே லாக் இன் செய்துவிடுவீர்கள்.

லாக் இன் தகவல்களைத் தந்த பின் ஓகே கிளிக் செய்திடும் முன் சில ஆப்ஷன்களை நீங்கள் படித்தறியலாம். More பட்டனை அழுத்தினால் இவை கிடைக்கும். இதில் 'Preserve Filenames' என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து மிக முக்கியமானதான Use Secure HTTP என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் கம்ப்யூட்டருக்கும் ஜிமெயிலுக்கும் உள்ள இணைப்பிற்குப் பாதுகாப்பளிக்கும்.

இறுதியாக Use Draft Folder என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் பைல்களை ட்ராப்ட் போல்டருக்கு அனுப்பும். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸுக்குத் தொல்லை கொடுக்காது.

முக்கியமான அனைத்து செட்டிங்ஸ் மேற்கொண்ட பின், ஜிமெயிலுக்கு இணைப்பை ஏற்படுத்த ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து ஜிமெயில் டிரைவ் காட்டப்படும். இதில் பைல்களை இழுத்துச் சென்று விடலாம். பைல்கள் அனைத்தும் ஜிமெயில் ட்ராப்ட் போல்டரில் விழும். பைல் மாற்ற வேகம் உங்கள் இன்டர்நெட் இணைப்பைப் பொறுத்து இருக்கும்.
"This menu is visible to the users when right-clicking the GMail Drive icon in Windows Explorer"

"The users have to type down their GMail user account and password in order to use the GMail Drive"
"After clicking the More button one can activate a secure HTTP connection or the username and the password for a proxy"

"The users will see this progress bar while posting a file to the GMail Drive"

"The users will easily see in Windows Explorer the content of the GMail Drive"



தரவிறக்கச் சுட்டி பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, March 21, 2010

கனவு காணுவதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன?

நமது பயமோ அல்லது மனஅழுத்தமோ நாம் காணும் கனவுகளுக்கு அடிப்படையான காரணங்களாக அமைகின்றன. இதைத் தொடர்ச்சி அனுமானம் என்று சொல்கிறார்கள். பரீட்சைக்குப் போகும்போது 'ஐயோ, எப்படி எழுதப்போகிறோமோ!' என்று பயத்துடன் இருந்தால் உங்கள் கனவுகள் அது சம்பந்தமானதாக இருக்கும்.


எதைப்பற்றி அதிகம் நினைக்கிறோமோ அவை கனவுகளில் வருகின்றன. நீங்கள் கிரிக்கெட் விளையாடுபவராக அல்லது ரசிகராக இருந்தால் உங்கள் கனவுகள் அதைச் சுற்றியே பெரும்பாலும் அமையும். யாரிடமாவது நாம் மிக அன்பு செலுத்தினாலோ அல்லது யாரையாவது காதலித்தாலோ அவர்களைப் பற்றிய கனவு காண்பீர்கள்.

அடுத்து எழும் கேள்வி, போதை மருந்துகள் கனவுகளைத் தூண்டுமா என்பது.

'தூண்டும்' என்று சொல்ல முடியாவிட்டாலும் அவைகள் கனவுகளைப் பயமானதாகவும், விரிவாகவும் ஆக்குகின்றன என்று சொல்லலாம். எல்.டோபா என்ற மருந்தைப் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்தபோது இந்த உண்மை அறியப்பட்டது.

ஆனாலும், போதை மருந்துகளுக்கும் கனவுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய முழுமையான ஆய்வு இதுவரை நடைபெறவில்லை.

யாரெல்லாம் கனவு காண்கிறார்கள?

மிருகங்கள் கனவு காணுமா என்ற கேள்விக்கு நிச்சயமான பதில் இல்லை. ஆய்வில் சொல்ல முடிவதெல்லாம் மிருகங்களுக்கும் விரைவுக் கண்ணசைவுகள் இருக்கின்றன என்பதுதான். இந்தக் கண்ணசைவு நேரங்களில் நமக்குப் பெரும்பாலும் கனவுகள் வருகின்றன.

குட்டி போட்டுப் பால் கொடுக்கும் இனம் எல்லாவற்றிற்கும் இந்த விரைவுக் கண்ணசைவுகள் உண்டு. ஆனால் இதை மட்டும் வைத்து அவைகள் கனவு காண்கின்றன என்று உறுதிப்படுத்த முடியாது. மனிதர்களுக்கும் இந்த மாதிரியான நேரங்களில் கனவு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை அல்லவா!

அடுத்து எழும் வினா, கண்பார்வையில்லாதவர்கள் கனவு காண்பார்களா? அவர்கள் கனவுகள் எப்படியிருக்கும்?

நாம் காணும் கனவுகள் நேரில் நடப்பதைப்போல அவ்வளவு தெளிவாகவும், விரிவாகவும் இருப்பதுதான் இந்த சந்தேகத்திற்குக் காரணம். நிச்சயம் கண்பார்வை இல்லாதவர்களும் கனவு காண்கிறார்கள்.

குழந்தைகள் காணும் கனவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தூக்கப் பரிசோதனை செய்தபோது அவர்கள் அடிக்கடி கனவு காண்பதில்லை மற்றும் அவர்கள் காணும் கனவுகள் சுவாரசியமற்றதாக, உப்புச் சப்பில்லாதவையாகவே அமைகின்றன என அறிய முடிந்தது.

ஐந்தாவது படிக்கும் வயது வரும்போது சிறுவர்கள் நன்றாகவே கனவு காண்கிறார்கள்.

கனவுகள் ஏன் நினைவில் நிற்பதில்லை?

நாம் தூக்க நிலையில் கனவு காண்பதால் அந்தக் கனவிற்கு அப்போது அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது கிட்டத்தட்டப் பழக்கமானவர்கள் காரை டிரைவ் செய்து கொண்டுபோவது போலத்தான். மனம் எங்கேயோ இருந்தாலும் அனிச்சையாக செயல் நடந்து கொண்டிருக்கும். அதனால்தான் நாம் நமது கனவுகளில் 95 லிருந்து 99 சதவிகிதம் வரை நினைவில் வைக்க முடிவதில்லை. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கனவுகள் Dreams

கனவுகள் என்றால் என்ன?


                                           What Is The Dreams ?
1. நாம் அசந்திருக்கும்போது நமது மூளை மிகக்குறைந்த அளவில் வேலை செய்யும் நேரங்களில் படக்காட்சிகள் போல நிகழ்வதுதான் கனவுகள் என்பது. அந்த நேரங்களில் வேறெந்த வெளித் தூண்டுதல்களும் மனதிற்குள் நுழைவதில்லை.

ஆமாம். நாம் தூங்கும்போது மட்டும் கனவு காண்பதில்லை. நம்மை மறந்து ஓய்வு நிலையில் விழிப்புடன் இருக்கும்போதுகூட ஏதோ காட்சிகள் நம் முன் விரிகின்றன. திடீரென ஏதோ கனவு கண்டோமே என்று திடுக்கிட்டு விழிக்கிறோம்.

இந்த மாதிரி ஓய்வாக இருக்கும்போது கனவு காண்பவர்கள் விழிப்புடன்தான் இருக்கிறார்கள் என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். இந்த நிகழ்வுகள் தூங்கும்போதுதான் கனவுகள் வரும் என்ற தவறான முடிவைத் தகர்க்கின்றன.

2. கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது. கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன. அப்போது நாம் நமது புலன்களைப் பயன்படுத்துகிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம்.

கனவுகளில் எப்போதுமே நாம் தான் கதாநாயகனாக இருப்போம். நமக்கு அல்லது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைத் தான் பெரும்பாலும் கனவு காண்கிறோம். பல சமயங்களில் நமது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது திடுக்கிட்டு விழிக்கிறோம். அருகிலிருப்பவர்கள், 'என்னாயிற்று உனக்கு?'என்று கேட்குமளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம்

3. கனவு என்பது நம் அடுத்தநாள் நினைவில் நிற்பது. எனவே இதனைக் கனவு அனுபவத்தின் 'நினைவுகள்' என்றுகூடச் சொல்லலாம்.

4. கனவு என்பது நாம் வாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஒரு ரிப்போர்ட். கனவில் நாம் கண்ட நிகழ்ச்சியை வேறு யாரும் பார்க்கவும் முடியாது, கனவு காணும்போது நாம் நேரடியாகக் கனவை மற்றவர்களுக்கு விளக்கவும் முடியாது.

கனவைப்பற்றிய இந்த நான்கு செய்திகளையும் இணைத்து சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், "கனவு என்பது நாம் சாதாரணமாக அயர்ந்து இருக்கும் நிலையில் நம் மனக்கண்முன் நடைபெறும் நிகழ்ச்சிகளின் ஒரு நினைவு" என்று சொல்லலாம்.

இன்னும் விளங்கும்படியாகச் சொல்ல வேண்டுமென்றால் நாம் நம்மையும் சூழ்நிலையையும் மறந்திருக்கும் நிலையில் நமது மனதுக்குள் தானாக அரங்கேறும் சின்ன நாடகங்கள் என்றும் கூறலாம். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கணனியை எப்போதும் மேம்படுத்திய நிலையில் வைத்திருக்க உதவும் குறிப்புக்கள்

கணனியின் இயங்கு தளம் டிவைஸ் டிரைவர்ஸ் மற்றும் மென்பொருட்களை எப்போதும் மேன்படுத்திய நிலையில் வைத்திருப்பது முக்கியமாகும். ஹக்கெர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கவும் இது உதவும். ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது எதைச் செய்வது என்று விழிப்பவர்களுக்கான சில டிப்ஸ்கள்.


1. அப்டேட் ஐ ஆரம்பிக்க முதல் ஒருமுறை கணனியை சுத்தப்படுத்தல் நல்லது அப்டேட் இன் பின்னர் வேகப்படுத்த இது உதவும். தேவையற்ற மென்பொருட்களை முறையாக நீக்கிவிடுதல் இணைய உலாவிகளின் ஹிஸ்டரி ஐ நீக்கிவிடுதல் ஒருமுறை டிஸ்க் கிளீனப் செய்தல் போன்றவை.

2. விண்டோஸ் தானியங்கி மேன்படுத்தல் மென்பொருளை (விண்டோஸ் அப்டேட்) எப்போதும் இயங்கு நிலையில் வைத்திருப்பது முக்கியம். இதை சரிபார்க்க Start - Control panel - Automatic update எனும் ஒழுங்கில் சென்று கிளிக் செய்ததும் திறக்கும் விண்டோவில் Automatic என்பது தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். (விண்டோஸ் பதிவு செய்யப்படாத பதிப்பை ஹக்கிங் செய்து நிறுவி இருப்பவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது)

3. கணனியிலுள்ள ஏனைய மென்பொருட்கள் மேன்படுத்த FileHippo வின் அப்டேட் செக்கர் எனும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம். இந்த மென்பொருள் உங்கள் சிஸ்டத்தை தானாக நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களையும் ஸ்கானிங் செய்து அவற்றின் புதிய பதிப்பின் தகவல்களை தரும்.

4.மேன்படுத்த விரும்பாத மென்பொருட்களை தவிர்க்க ஆப்ஸனும் உண்டு. படத்தில் உள்ளது போன்று மேன்படுத்த வேண்டிவற்றின் விபரங்கள் காட்டப்படும். தேவையானதை தேர்வு செய்து அப்டேட் ஐ நிறுவிக்கொள்ளலாம். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, March 20, 2010

விலங்குகளை விட மோசமான முறையில் கொல்லப்படும் ஆதிவாசிகள்(ஆடு, மாடுகளை கூட இப்படிக் கொல்வார்களா எனத் தெரியாது.வீடியோ இணைப்பு)

இப்படி, கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்படுவது தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே. காவல்துறை, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை மற்றும் ஒருமுறை வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது இந்திய தேசம்.

ஆடு, மாடுகளை கூட இப்படிக் கொல்வார்களா எனத் தெரியாது.

ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் "காமன் மேன்" கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.

இது போன்ற ஏராளமான கொடூரங்(ன்)களை கேள்விப் பட்டிருப்பினும் வீடியோ இணைப்புடன் காணும் பொழுது நெஞ்சம் பதறுகின்றது. இன்னமும், காந்தி தேசம், அகிம்சை, மக்களாட்சி என புழுகித் திரிபவர்கள் திரும்பவும் ஒருமுறை காணொளி இணைப்பினை காணவும்...

வீடியோ இணைப்பு பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, March 18, 2010

நோக்கியா மொபைல் ட்ரிக்ஸ்

By pressing x + # (where x is any number) will show the telephone number stored in that particular location.


For example, pressing 125 in idle mode and then pressing "#" later, will show the 125th number stored when the number are entered in your phone-book.

*3370#
Activate Enhanced Full Rate Codec (EFR) - Your phone uses the best sound quality but talk time is reduced my approx. 5%
#3370#
Deactivate Enhanced Full Rate Codec (EFR) OR *3370# ( Favourite )
*#4720#
Activate Half Rate Codec - Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720#
Deactivate Half Rate Codec.
*#0000#
Displays your phones software version,
1st Line : Software Version,
2nd Line : Software Release Date,
3rd Line : Compression Type. ( Favourite )
*#9999#
Phones software version if *#0000# does not work.
*#06#
For checking the International Mobile Equipment Identity (IMEI Number). ( Favourite )
#pw+1234567890+1#
Provider Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols).
#pw+1234567890+2#
Network Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols).
#pw+1234567890+3#
Country Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)
#pw+1234567890+4#
SIM Card Lock Status. (use the "*" button to obtain the "p,w"and "+" symbols).
*#147#
(vodafone) this lets you know who called you last.
*#1471#
Last call (Only vodofone).
*#21#
Allows you to check the number that "All Calls" are diverted to
*#2640#
Displays security code in use.
*#30#
Lets you see the private number.
*#43#
Allows you to check the "Call Waiting" status of your phone.
*#61#
Allows you to check the number that "On No Reply" calls are diverted to.
*#62#
Allows you to check the number that "Divert If Unreachable (no service)" calls are diverted to.
*#67#
Allows you to check the number that "On Busy Calls" are diverted to.
*#67705646#
Removes operator logo on 3310 & 3330
*#73#
Reset phone timers and game scores.
*#746025625#
Displays the SIM Clock status, if your phone supports this power saving feature"SIM Clock Stop Allowed", it means you will get the best standby time possible.
*#7760#
Manufactures code.
*#7780#
Restore factory settings.
*#8110#
Software version for the nokia 8110.
*#92702689#
Displays -
1.Serial Number,
2.Date Made,
3.Purchase Date,
4.Date of last repair (0000 for no repairs),
5.Transfer User Data.
To exit this mode you need to switch your phone off then on again. ( Favourite )
*#94870345123456789#
Deactivate the PWM-Mem.
**21*number#
Turn on "All Calls" diverting to the phone number entered.
**61*number#
Turn on "No Reply" diverting to the phone number entered.
**67*number#
Turn on "On Busy" diverting to the phone number entered. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tally 4.5 அல்லது பழைய DOS விளையாட்டுகளை Windows XP/Vista வில் நிறுவ

என்னதான் விண்டோஸ் XP, Vista, 7 என புதிது புதிதாக இயங்குதளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உபயோகத்தில் இருந்தாலும், DOS தான் நமக்கு புடிச்ச OS என MS-DOS ஐ விரும்புபவர்கள் ஏராளம். ஆனால் DOS இயங்குதளத்தில் வடிவமைக்கப்பட்ட மென்பொருட்கள், விளையாட்டுகள் மற்றும் கருவிகள் பெரும்பாலும் விண்டோஸ் XP /Vista வில் இயங்குவதில்லை.


இது போன்ற பயன்பாடுகள், விளையாட்டுகள் மற்றும் கருவிகளை தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகின்ற Windows Xp, Vista & Windows 7 ஆகிய இயங்குதளங்களில் எப்படி இயங்க வைக்கலாம்?

சமீபத்தில் Tally 4.5 ஐ பழைய DOS இயங்குதள கணினியில் பயன்படுத்தி வரும் நண்பர் ஒருவர், Tally 4.5 ஐ Windows XP யில் பயன்படுத்த முடியுமா எனக் கேட்டிருந்தார். Tally 4.5 இல் உள்ள டேட்டாக்களை Tally 7.2 விற்கு மாற்ற கருவி இருப்பதை சுட்டி காட்டி. அவருடைய இந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது என பார்க்கலாம்.

இதற்காக D-Fend Reloaded 0.9.1 என்ற மென்பொருளை பயன்படுத்தப் போகிறோம். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.
இந்த Wizard தொடருங்கள்.



Accept all settings க்ளிக் செய்து கொள்ளுங்கள். Wizard முடிந்த பிறகு D-Fend Reloaded ஐ திறந்து கொள்ளுங்கள்.

இந்த விண்டோவில் ADD எனும் டூல்பார் பட்டனை க்ளிக் செய்து ADD DOSBOX profile மெனுவை க்ளிக் செய்யுங்கள். அடுத்து வரும் திரையில்,

Profile பெயர் மற்றும் Program file லொகேஷனை browse செய்து கொடுங்கள். தேவைப்பட்டால் ஐகானை தேர்வு செய்து கொண்டு OK பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.

இனி வலது புற பேனில் Tally 4.5 பட்டியலிடப் பட்டிருப்பதை பார்க்கலாம். இதற்கு மேல் Tally 4.5 ஐ இயக்க D-Fend Reloaded ஐ திறந்து கொண்டு Tally 4.5 ஐ க்ளிக் செய்தால் போதுமானது.

இதோ Windows XP யில் Tally 4.5


இதே முறையில் மற்ற பழைய டாஸ் விளையாட்டுகளையும் பயன்படுத்த முடியும். ஆனால் இதனுடைய நிலைத்தன்மை எப்படி இருக்கும் என்பது தொடர்ந்து உபயோகித்து பார்த்தால் மட்டுமே அறிந்து கொள்ள இயலும்.


D-Fend Reloaded 0.9.1 installer பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Spitzer Spies Earliest Black Holes


The Spitzer Space Telescope has found what appear to be two of the earliest and most primitive supermassive black holes known. "We have found what are likely first-generation quasars, born in a dust-free medium and at the earliest stages of evolution," said Linhua Jiang of the University of Arizona, Tucson, lead author of a paper published this week in Nature.


A quasar is a compact region in the center of a massive galaxy surrounding the central supermassive black hole.

As shown by the image we posted earlier today from the Planck mission, our galaxy – and the Universe – is littered with dust. But scientists believe the very early universe didn't have any dust — which tells them that the most primitive quasars should also be dust-free. But nobody had seen any "clean" quasars — until now.

Spitzer has identified two — the smallest on record — about 13 billion light-years away from Earth. The quasars, called J0005-0006 and J0303-0019, were first unveiled in visible light using data from the Sloan Digital Sky Survey. That discovery team, which included Jiang, was led by Xiaohui Fan, a coauthor of the recent paper. NASA's Chandra X-ray Observatory had also observed X-rays from one of the objects. X-rays, ultraviolet and optical light stream out from quasars as the gas surrounding them is swallowed.

"Quasars emit an enormous amount of light, making them detectable literally at the edge of the observable universe," said Fan.

When Jiang and his colleagues set out to observe J0005-0006 and J0303-0019 with Spitzer between 2006 and 2009, their targets didn't stand out much from the usual quasar bunch. Spitzer measured infrared light from the objects along with 19 others, all belonging to a class of the most distant quasars known. Each quasar is anchored by a supermassive black hole weighing more than 100 million suns.


Of the 21 quasars, J0005-0006 and J0303-0019 lacked characteristic signatures of hot dust, the Spitzer data showed. Spitzer's infrared sight makes the space telescope ideally suited to detect the warm glow of dust that has been heated by feeding black holes.

"We think these early black holes are forming around the time when the dust was first forming in the universe, less than one billion years after the Big Bang," said Fan. "The primordial universe did not contain any molecules that could coagulate to form dust. The elements necessary for this process were produced and pumped into the universe later by stars."

The astronomers also observed that the amount of hot dust in a quasar goes up with the mass of its black hole. As a black hole grows, dust has more time to materialize around it. The black holes at the cores of J0005-0006 and J0303-0019 have the smallest measured masses known in the early universe, indicating they are particularly young, and at a stage when dust has not yet formed around them.

The Spitzer observations were made before the telescope ran out of its liquid coolant in May 2009, beginning its "warm" mission. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மிகச்சிறந்த இலவச ஆன்டி-வைரஸ்

பணம் கொடுத்து 'ஆன்டி- வைரஸ்' வாங்க முடியாத வாடிக்கையாளர்கள் தங்களுடைய மென்பொருட்களை பயன்படுத்தியாவது பார்க்கட்டுமே என்ற எண்ணத்தில் வழங்கப்படும் 'ஆன்டி-வைரஸ்' தான் "இலவச ஆன்டி-வைரஸ்".


இந்தவகை மென்பொருட்களில் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டி-வைரஸில் இருப்பதை விட கொஞ்சம் குறைவான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்,சில வாடிக்கையாளர்கள் தங்கள் கணினுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் பணம் கொடுத்தே ஆன்டி-வைரஸை வாங்கிக்கொள்வார்கள்.

ஆனால் என்னதான் பணம் கொடுத்து நாம் கணினியில் ஆன்டி-வைரஸ் போட்டுக் கொண்டாலும் புதுபுது வைரஸ்களின் அட்டகாசம் இன்றைக்கும் தாங்க முடியாததாகத்தான் உள்ளது.

குறிப்பாக நாம் இணையதளங்களில் உலவும்போது கண்டிப்பாக வைரைஸ்களின் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.அவை நாம் இணையதளங்களிருந்து ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது வைரஸும் அதன் கூடவே சேர்ந்து வந்து நம் கணினியில் உட்கார்ந்து கொள்ளும்.

இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் (வந்து கொஞ்ச நாள் ஆன) இலவச Microsoft Security Essentials என்ற மென்பொருள்.

பல கணினி உபயோகிப்பாளர்கள் பயன்படுத்தி பார்த்த வரையில் மிக அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் ஆன்டிவைரசாக Microsoft Security Essentials மென்பொருள் செயல்படுகிறது.குறிப்பாக இணையதளங்களில் நாம் உலவும்போது இந்த ஆண்டிவைரஸ் அதிகபட்ச இணைய பாதுகாப்பை நமக்கு தருகிறது.இந்த இலவச ஆன்டிவைரஸ்' நாம் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டிவைரஸ் தரும் அதிகபட்ச பாதுகாப்பை ஒத்த பாதுகாப்பை நமது கணினுக்கும் வழங்குகிறது.

அது மட்டுமல்லாமல் அதுவே தானாக அடிக்கடி தன்னை புதுப்பித்துக் கொள்வதால் நமது கணினிக்கு நல்ல பாதுகாப்பும் கிடைக்கிறது,இந்த ஆன்டிவைரஸை பயன்படுத்திப் பார்த்த பலபேர் இதன் செயல்திறனை வெகுவாக பாராட்டுகிறார்கள்.

தரவிறக்கச் சுட்டி பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!

செல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டது. ஆனால் இதே செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள், உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து வருகிறது.


அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (ஈடபிள்யூஜி) சமீபத்தில் ஒரு செல்போன் பட்டியலை வெளியிட்டது.

இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு பாதிக்கப்பட்டு மூளைப் புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு செல்போனும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவை வைத்து இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியேஷன் அளவை Specific Absorption Rate எனப்படும் SAR அலகைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.

அந்த லிஸ்ட்:

மோட்டாரோலா ட்ராய்ட் (Motorola Droid)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.50 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.49 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.50 W/kg

ஆப்பிள் ஐபோன் 3 ஜி – ஜிஎஸ்எம் 850 (Apple iPhone 3G S)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.19 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.63 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.52 W/kg

எச்டிசி நெக்ஸஸ் ஒன் (HTC Nexus One)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.39 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.87 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.39 W/kg

பிளாக்பெர்ரி – போல்ட் 9700 (Blackberry Bold 9700)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.55 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.55 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.77 W/kg

சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி (Samsung Instinct HD)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.16 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.16 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.71 W/kg

மோட்டாரோலா க்ளிக் (Motorola Cliq)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.10 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.69 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.10 W/kg

மோட்டாரோலா ப்ரட் (Motorola Brute i680)

அதிகபட்ச ரேடியேஷன் – 0.86 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.59 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.86 W/kg

பேண்டக் இம்பாக்ட் (Pantech Impact)

அதிகபட்ச ரேடியேஷன் – 0.92 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.72 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.92W/kg

எல்ஜி சாக்லேட் டச் (LG Chocolate Touch)

அதிகபட்ச ரேடியேஷன் – 0.46 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 1.46 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.79W/kg

சாம்ஸங் மிதிக் (Samsung Mythic)

அதிகபட்ச ரேடியேஷன் – 1.08 W/kg

காதில் வைக்கும் போது SAR அளவு – 0.67 W/kg

உடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.64W/kg

ஜிஎஸ் எம் 1900 மாடல் இது.

மோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே செல்போன் வாங்கும் வாங்கும் முன் அல்லது பயன்படுத்தும் முன் இந்த கதிர்வீச்சு சமாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ளவும்! பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, March 17, 2010

மடிக்கணினி வாங்கும் முன்

தற்போது அனைத்துக் கணினிகளின் விலை மாபெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. உயர்தரமான அதிக வசதிகள், பயன்பாடுகள் கொண்ட கணினியைக்கூட இன்று மிகக் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

வழக்கமான நிலைக்கணினியை போலவே மடிக்கணினி இன்று மிகப்பரவலாகப் பயன்பட்டு வருகிறது. ஏறத்தாழ இரண்டின் விலையும் ஒரே அளவில் தான் இருக்கின்றன். அப்படியிருக்கையில் இன்னும் ஏன் நிலைக்கணினி? புறப்படுங்கள் மடிக்கணினிக்கு...


மடிக்கணினி வாங்க தயாராகிவிட்டீர்கள் அல்லவா? இதோ மடிக்கணினி வாங்குவதற்கு முன்பான சில யோசனைகள்...

மடிக்கணினி வாங்கும் முன் முக்கியமாக கவனிக்க வேண்டியவை :

1எடை மற்றும் அளவு
2இணைப்புத்திறன்
3மின்கலங்கள்
4பாதுகாப்புத் தன்மை
5மேம்பாட்டு வசதி
6உத்தரவாதம் மற்றும் ஆதரவு

எடை மற்றும் அளவு



மடிக்கணினி வாங்குவதற்கான கருத்துருக்களில் மிக முக்கியமானது எடை மற்றும் அளவு. பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து பயணித்து வருபவர் மெல்லிய மற்றும் எடை குறைவான மடிக்கணினிகளையே வாங்க வேண்டும். அதிக எடை கொண்டவற்றை எடுத்துச்செலவதும் பயன்படுத்துவதும் மிகக் கடினம். நிலைக்கணினிகளை இடம்பெயர்க்கும் மடிக்கணினி சிறந்ததுதான் என்றாலும் அதனை பயண நேரங்களில் பயன்படுத்துவது சற்று கடினமே.

இணைப்புத்திறன்

இணையம் மற்றும் அலுவலக வலைப்பின்னலில் இணைக்கும் இணைப்புத்திறனை அவசியம் பெற்றிருக்க வேண்டும். ஒரே நேரத்தில் பல இணைப்புகளை ஏற்கும் திறனை பெற்றிருப்பதோடு சில சமயங்களில் பங்கீட்டு இணைய வலைப்பின்னல் வசிதியை வழங்கவிருப்பதாகவும் இருக்க வேண்டும். Wi-Fi இணைப்புத்திறன் பெற்றிருப்பின் சாலச் சிறந்தது.

மின்கலங்கள்




நடமாடும் அலுவலக பயனீட்டாளர்களுக்கு அதிக வாழ்நாள் தன்மை கொண்ட மின்கலங்களே பொருத்தமானதாகும். அதுமட்டுமில்லாது மற்றும் ஒரு மின்கலத்தை இணைக்கும் வசிதியும் இருக்க வேண்டும். மின்சார வசதி இல்லாத இடங்களிலும், பயணம் மேற்கொள்ளும் போதும் இது மிக உதவியாக இருக்கும். மேலும் மின்கலங்களை புத்துயிரூட்ட (RECHARGE ) ஆகும் நேரத்தையும் கருத்தில் கொண்டு வாங்க வேண்டும்.


பாதுகாப்புத் தன்மை

இன்று அதிகம் களவுபோவது செல்லிடைப்பேசிகளை அடுத்து மடிக்கணினிகளே. ஆதலால் பாதுகாப்புத் தன்மைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. மேம்பட்ட பாதுகாப்புத் தன்மை கொண்ட மடிக்கணினி நம்முடைய பணத்தையும் அச்ச உணர்வையும் பெருமளவு குறைக்கும்.

மேம்பாட்டு வசதி

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்முடைய மடிக்கணினியையும் மேம்படுத்தும் வசதி மிகவும் அவசியமாகிறது. நினைவகம் (RAM MEMORY ), கொள்ளளவகம் (HARDDISK ), செயலகம் (PROCESSOR) போன்றவற்றை மேம்படுத்துவது மிக எளிமையானதாக இருக்க வேண்டும். உள்ளிணைந்த (On Board ) வசதி மேம்பாட்டு வசதியினை தடுத்து விடுவதால் அத்தகையவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் அளவில் மிகச்சிறியவற்றை தேர்ந்தெடுப்பதினால், அதனை பயன்படுத்துவது கடினமானதாகவும் காயமேற்படுத்துவதாகும் இருப்பதினால் சற்று பெரிய மடிக்கணினிகளையே வாங்குவது நல்லது.

உத்தரவாதம் மற்றும் ஆதரவு

24x7 ஆதரவு அளிக்கும் நிறுவனத்திடம் மட்டிமே மடிக்கணினிகளை வாங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத உத்தரவாதம் மற்றும் ஆதரவு இருக்க வேண்டும்.பிரச்சனைக்குரிய அனைத்து பாகங்களையும் சரி செய்தோ அல்லது மாற்று பாகங்களை அளித்தோ ஏற்றிட வேண்டுமென்பதை வாங்கும்போதே உறுதி செய்துகொள்ள வேண்டும். பிரச்சனைகளுக்குத் தீர்வு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் கிடைப்பின் மிகு நன்மையளிக்கும்.

நல்ல மடிக்கணினி வாங்கிட என் வாழ்த்துக்கள்!!!


  பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, March 15, 2010

விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க


புதிதாக ஒரு இயங்கு தளம் அல்லது ஒரு இயங்கு தளத்தின் புதிய பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை.


உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளி வந்த போது அதில் எக்ஸ்பீயிற்கு முன்னைய பதிப்புகளில் இயங்கிய ப்ரோக்ரம்களை இயக்க முடியாமல் போனது. அதன் பிறகு வெளிவந்த விஸ்டா பதிப்பிலும் அதே நிலைமைதான். இவ்வாறே இப்போது வெளி வந்துள்ள விண்டோஸ் செவனிலும் அதே நிலைமை தொடர்கிறது.

ஒரு இயங்கு தளத்தை மேம்படுத்தி அதன் புதிய பதிப்பை வெளியிடும்போது பழைய எப்லிகேசன்களும் இயங்கத் தக்கதாக அதற்கு ஒத்திசையும் வண்ணம் உருவாக்கவே முயற்சிக்கப்படும். இதனை பேக்வர்ட் கம்படிபிலிட்டி (Backward Compatibility) எனப்படும் இருந்தாலும் சில எப்லிகேசன்களை இவ்வாறு இயக்க முடிவதில்லை எனினும் இந்த சிக்கலுக்கு தீர்வாக மைக்ட்ரோஸொப்ட் நிறுவனம் தனது புதிய இயங்கு தளங்களில் பழைய ப்ரோக்ரம்களையும் இயக்கக் கூடிய வசதியை எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் விண்டொஸ் செவன் பதிப்புகளிலும் வழங்கி வருகிறது.

உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீயில் முறையாக இயங்கிய ஒரு ப்ரோக்ரம் விஸ்டாவிற்கு மாறிய பிறகு இயங்க மறுத்தால் அந்த குறிப்பிட்ட ப்ரோக்ரமுக்கு மட்டும் தேவையான செட்டிங்கை மாற்றி இயங்க வைக்கும் வசதி உள்ளது. அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக்குரிய .exe பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் compatibility டேபில் க்ளிக் செய்யுங்கள். அடுத்து Run this program in compatibility mode for என்பதைத் தெரிவு செய்யுங்கள். பின்னர் விண்டோஸின் உரிய பதிப்பைத் தெரிவு செய்து விட்டு ஓகே சொல்லுங்கள்.

அப்படியும் அது இயங்காது போனால் மேலும் சில தெரிவுகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக அதே டயலொக் பொக்ஸில் Run this program as an administrator என்பதைத் தெரிவு செய்து இயக்கிப் பாருங்கள்.

ப்ரோக்ரம்ஸ் லிஸ்டில் உள்ள Program Compatibility Wizard மூலமாகவும் ஒரு ப்ரோக்ரம் இயங்கு தளத்துடன் ஒத்திசைகிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்கலாம்.

சரி, இந்த .exe பைலை எங்கே போய்த் தேடுவது? எங்கும் போக வேண்டாம் . (மை) கம்பியூட்டர் விண்டோவில் C ட்ரைவில் ப்ரோக்ரம் பைல்ஸ் போல்டரைத் திறந்து பாருங்கள். நீங்கள் இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக் குரிய போல்டரும் அங்கு காணப்படும். அந்த போல்டரில் .exe பைலைக் காணலாம் பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் நமது உடலின் வெப்பநிலை கூடினாலோ, குறைந்தாலோ உடல் நோய்வாய்ப்படும். நமது இயக்கத்துக்கு ஏற்ப வெப்ப ஆற்றல் வெளிப்படும். மாறுபடவும் செய்யும்.


இப்படி உடல் இயக்கத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை சேகரித்து அந்த ஆற்றலைக் கொண்டு எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க ஒரு கருவி தயாரித்துள்ளது எம்.ஐ.டி. பல்கலைக்கழகம்.

நடப்பது, ஓடுவது என எந்த வேலையில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட அளவில் ஆற்றல் செலவாகிறது. அதில் ஒரு பகுதி வெப்ப ஆற்றலாக வெளியேறுகிறது. இந்த வெப்ப ஆற்றலையும், சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் உள்ள ஆற்றலையும் கிரகித்து மின்ஆற்றலாக சேமிக்கிறது இந்தக் கருவி. இதைக் கொண்டு 2 வாட் மின்சாரத்துக்கும் குறைவான பயன்பாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

செல்போன் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் கருவிகள் மிகக் குறைந்த மின் ஆற்றலில் இயங்கக்கூடியவை. எனவே இந்த கருவியில் சேமிக்கும் மின் ஆற்றலைக் கொண்டு இனி செல்போன்களை சார்ஜ் செய்ய முடியும். சார்ஜரை தேடிக் கொண்டோ, தூக்கிக் கொண்டோ திரிய வேண்டாம். அனைவரும் பயன்படுத்தலாம் இந்த லாபமான கருவியை. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, March 12, 2010

கடுமையான பூகம்பத்தால் சிலி 10 அடி தூரம் நகர்வு

கடந்த மாதம் (பிப்ரவரி) சிலி நாட்டில் மேற்கு கடற்கரையில் 8.8 ரிக்டர் அளவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படு காயம் அடைந்தனர்.பூகம்பத்தினால் வீடுகளை இழந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பிரேசில், போர் டலேசா போன்ற நாடுகளில் குடியேறி வருகின்றனர்.



இந்த நிலையில் பூகம்பத்தால் சிலியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து 4 பல் கலைக்கழகங்கள், பல நிறுவனங்கள், புவியியல் வல்லுனர்கள் ஆய்வுகள் மேற் கொண்டனர்.


இதில், சிலி நாட்டில் உள்ள நகரங்கள் மேற்கு நோக்கி 10 அடி தூரம் நகர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தலைநகரான சாண்டியாகோ 11 அங்குலம் அளவுக்கு விலகி நகர்ந்துள்ளது.


வல்பாறைசோ, மென்டோஷா, அர்ஜென்டினா போன்ற நகரங்களும் வழக்கத்தை விட நகர்ந்துள்ளன. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

டைனோசர்களை மொத்தமாக அழித்த ராட்சத எரி நட்சத்திரம்!

ராட்சத விலங்கான டைனோசர்களை ஒட்டுமொத்தமாக அழித்தது பூமியைத் தாக்கிய ராட்சத எரிநட்சத்திரம் தான் என்று விஞ்ஞானிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.பூமியில் முன்பு வலம் வந்து கொண்டிருந்த ராட்சத பாலூட்டிகளான டைனோசர்கள் எப்படி மறைந்தன என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.



பூமியின் தென் பகுதியில் (இப்போது இந்தியா உள்ள பகுதி) மிகப் பெரிய அளவிலான எரிமலைகள் வெடித்துச் சிதறியதால் டைனோசர்கள் அழி்ந்ததாக ஒரு கருத்தும், எரி நட்சத்திரம் தாக்கியதால்தான் டைனோசர்கள் இறந்ததாக இன்னொரு கருத்தையும் விஞ்ஞானிகள் கொண்டுள்ளனர்.


எரிமலை வெடித்ததாக கூறும் விஞ்ஞானிகள், கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு அவை தொடர்ந்து வெடித்துச் சிதறிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.


இந்த சர்ச்சைக்கு தற்போது 41 விஞ்ஞானிகளைக் கொண்ட குழு ஒன்று தீர்வைக் கூறியுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் குழு சயின்ஸ் இதழில் தனது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.


கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்தக் குழுவினர் ஆய்வுகள் நடத்தி வந்தனர். தற்போது ஆய்வு முடிவை இக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


அதன்படி, கிட்டத்தட்ட 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கியது ஒரு ராட்சத எரிநட்சத்திரம். இதன் காரணமாக பூமியில் இருந்து வந்த பாதி அளவிலான உயிரினங்கள் கூண்டோடு அழிந்தன. அதில் டைனோசர்களும் ஒன்று.


பூமியைத் தாக்கிய அந்த எரிநட்சத்திரத்தின் அளவு 15 கிலோமீட்டர் அகலம் உடையதாகும். தற்போது மெக்சிகோ உள்ள பகுதி அன்று சிக்கக்ஸிலப் என்று அறியப்பட்டது. அந்த இடத்தில்தான் இந்த எரிகல் வந்து மோதியது.


இதன் காரணமாக பூமிப் பந்தின் பெரும் பகுதியில் பெரும் தீப்பிழம்புகள் தோன்றின. 10 ரிக்டருக்கும் மேலான நிலநடுக்கங்கள் பூமியை சிதறடித்தன. கண்டங்களில் பெருமளவில் நிலமாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் ராட்சத சுனாமிகள் தோன்றி பூமிப் பரப்பில் பாதியை அழித்து விட்டது.


ஹீரோஷிமாவைத் தாக்கிய அணு குண்டின் சக்தியை விட பல கோடி மடங்கு அதிக அளவிலான வேகத்துடனும், சக்தியுடனும் அந்த ராட்சத எரிநட்சத்திரம் பூமியைத் தாக்கியுள்ளது. இதனால்தான் பூமியே சிதறுண்டு போயுள்ளது.


இந்த தாக்குதலில் பூமியில் இருந்து வந்த உயிரினங்களில் பாதிக்கும் மேலானவை பூண்டோடு அழிந்து போய் விட்டன. அவற்றில் டைனோசர்களும் ஒன்று.


எரிநட்சத்திரம் தாக்கியதால் ஏற்பட்ட பெரும் பிரளயத்தால் பூமியின் பெரும்பாலான பகுதிகளை இருள் சூழ்ந்தது. இதனால் ஏற்பட்ட புதிய சூழலைத் தாக்குப் பிடிக்க முடியாமல்தான் டைனோசர்கள் அழிந்து போயுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் ஒருவரான ஜெர்மனி விஞ்ஞானி பீட்டர் ஷூல்ட் கூறுகையில், 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததாக நமக்கு தடயங்கள் உள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது அப்போது பூமியைத் தாக்கிய எரிநட்சத்திரம்தான் இதற்குக் காரணம் எனத் தெரிய வருகிறது.


மேலும் இந்தியாவில் ஏற்பட்ட பெரும் எரிமலை வெடிப்புகளால் டைனோசர்கள் இறந்ததாக கூற முடியாத அளவுக்கு எங்களது ஆய்வு முடிவுகள் உள்ளன.


டைனோசர்கள் அழிந்த காலத்தில் ஏற்பட்ட பிரளயத்திற்குப் பின்னர்தான் மனிதர்கள் சக்தி வாய்ந்த உயிரினங்களாக பூமியில் உருவெடுத்தனர். எனவே இந்தப் பிரளயம், மனித குல வளர்ச்சிக்கு அடிக்கல்லாக அமைந்தது என்று கூடச் சொல்லலாம் என்றார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, March 6, 2010

சிலி நிலநடுக்கத்தால் பூமியின் மையக்கோட்டில் பாதிப்பு


சிலி நாட்டில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஏற்பட்ட 8.8 ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக பூமியின் மையக்கோட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாளின் மொத்த கால அவகாசத்தில் 1.26 மைக்ரோ செகண்ட் குறையும் என நாசா விஞ்ஞானிகளின் முதற்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன.


இதுதொடர்பாக சி.என்.என் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,
பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் போது பூமியில் உள்ள பாறைகள் இடம்பெயரும். இதன் காரணமாக பூமி சுழலும் வேகம் மாறுவதால், ஒருநாளின் கால அவகாசமும் மாறுபடும்.

நாசாவில் பணியாற்றும் புவியியல் விஞ்ஞானி ரிச்சர்ட் க்ராஸ் என்பவர் கணினியின் உதவியுடன் நடத்திய ஆய்வில், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி சிலியில் ஏற்பட்ட 8.8. ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக பூமியின் மையக்கோடு 8 செ.மீ. சாய்ந்துள்ளதையும், இதன் காரணமாக நாளின் காலஅவகாசம் 1.26 மைக்ரோ செகண்ட் அளவு குறைந்துள்ளதையும் கண்டறிந்துள்ளார்.

கடந்த 2004இல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் பூமியின் சுழலும் வேகம் அதிகரித்தது. அதனால் நாளின் காலஅவகாசம் 6.8 மைக்ரோ செகண்ட் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: ஒரு நொடியில் மில்லியனில் ஒரு பகுதியே மைக்ரோ செகண்ட் எனப்படும். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, March 3, 2010

கோழிக்குஞ்சுகளின் விழித்திரை மனிதனை விட விசேஷமானது

கோழிகளின் விழித்திரை மனிதனின் விழித்திரையை விட வண்ணங்களை பகுத்துணரும் சக்தி மிக்கது, என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாஷிங்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி ஜோசப் கார்போ இது குறித்து கூறியதாவது,

மனிதனின் விழித்திரையை விட பறவைகளின் விழித்திரை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

இதனால் தான் வானத்தில் வட்டமிடும் கழுகு கீழே கிடக்கும் சிறிய சுண்டெலியை கூட கூர்ந்து பார்த்து வேட்டையாடுகிறது. பாலூட்டிகள், பறவைகள் எல்லாம் ஒரே மூதாதையரை கொண்டவை. டைனோசர் உள்ளிட்ட ராட்சத விலங்குகள் கூட இரவில் வேட்டையாடும் குணம் கொண்டவையாக இருந்தவை. கும்மிருட்டிலும் கூட சுற்றுப் புறங்களை தெளிவாக பார்க்கும் திறன் வாய்ந்தவையாக இருந்தன. நாளடைவில் இந்த பழக்கம் பகலில் வேட்டையாட துவங்கியதும் மங்க துவங்கி விட்டது. ஆனால், இந்த விசேஷ குணத்தை பறவைகள் இன்று வரை கட்டி காக்கின்றன.

குறிப்பாக, கோழிகள் அதை விட கோழி குஞ்சுகளுக்கு வண்ணங்களை பிரித்தறியும் வகையில் விழித்திரை பிரமாதமாக உள்ளது. மனிதனை பொறுத்தவரை சிகப்பு, நீலம், பச்சை வண்ணங்களை கூர்ந்து அறிய முடிகிறது. ஆனால், கோழிக்குஞ்சுகளின் விழித்திரை புறஊதா கதிர்களை கூட பகுத்துணரும் தன்மை வாய்ந்தவை.இதனால், தான் கோழிகள் தனது இணையை அதன் இறகுகளை வைத்து அடையாளம் காண்கின்றன.

இதேபோன்ற குணம் மற்ற பறவைகளுக்கும் உள்ளன. இதன் காரணமாக தான் சில பறவைகள் வண்ண மிகு பழங்களை சுவைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.மனிதர்களுக்கு 200 வகையான பாரம்பரிய குறைபாடுகளின் காரணமாக குருட்டு தன்மை ஏற்படுகிறது. கோழிக்குஞ்சுகளின் விழித்திரையிலிருந்து ஸ்டெம் செல்லை பிரித்தெடுத்து மனிதர்களுக்கு பொருத்துவதன் மூலம் குருட்டு தன்மை மற்றும் நிறக்குருடு குறைப் பாட்டை போக்கமுடியும், என நம்புகிறோம். இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இவ்வாறு ஜோசப் கார்போ கூறினார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, February 26, 2010

B-52 குண்டுவீச்சு விமானம்

குண்டுவீச்சு விமானங்களின் நீண்ட வரலாற்றுப் பயணத்தில் அவை காலத்திற்குக் காலம் நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி புதிய வினைத்திறனுடன் வளர்ச்சியடைந்து வந்துள்ளன.

இந்த வகையில் அமெரிக்க விமானப்படையாற் பயன்படுத்தப்படும் B-52 வகைக் குண்டுவீச்சு விமானம் மிக நவீன தொழிநுட்பங்களை உள்ளடக்கிய ஒரு விமானமாகும். 1955 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க விமானப்படையின் சேவையில் உள்ள இவ்வகைக் குண்டுவீச்சு விமானங்கள் காலத்திற்குக் காலம் விருத்திசெய்யப்பட்டு நவீன தொழிநுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வகை விமானத்தின் ஆரம்ப வடிவம் ஆறு சுழலி இயந்திரங்களைக் (turbo propeller) கொண்டிருந்த போதிலும் நவீன வடிவங்கள் தாரை இயந்திரங்களைக் கொண்டிருக்கின்றன.

32 000 கிலோக்கிராம் வெடிபொருட்களைக் காவிச்செல்லவல்ல இவ்வகை விமானங்கள், பனிப்போர் காலத்திலே அயுவாயுதத் தாக்குதல் நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட போதிலும், இவ்வகை விமானங்கள் இதுவரையான தாக்குதல் நடவடிக்கைகளில் சாதாரண வெடிகுண்டு வீச்சுக்களையே மேற்கொண்டுள்ளது.

1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க விமானப்படையின் நடவடிக்கைக் கட்டளை மையம், இவ்வகையான நவீன குண்டுவீச்சு விமானங்களின் குணவியல்புகளை (characteristics) வரையறை செங்தது. அவ்வரையறையினடிப்படையில் இவ்வகை விமானங்கள் நீண்டதூர நடவடிக்கைகளைத் தனித்து செய்துமுடிக்கவல்லனவாக உருவாக்கப்பட்டன. இவ்விமானங்கள், மணிக்கு 480 கிலோமீற்றர் வேகத்தில் 10400 மீற்றர் உயரத்தில் 8000 கிலோமீற்றர் வரை தொடர்ச்சியான பறப்பை மேற்கொள்ளவல்லது. Boeing நிறுவனத்தினாற் பரிந்துரைக்கப்பட்ட இவ்வகை விமானத்தின் ஆரம்ப வடிவம் நேரான இறக்கைகளுடன் ஆறு சுழலி இயந்திரங்களைக் கொண்டதாகக் காணப்பட்டதுடன் 160000 கிலோக்கிராம் சுமையினைக் காவிச்செல்ல வல்லதாகவும் 5010 கிலோமீற்றர் துர்ரம் தொடர் பறப்பை மேற்கொள்ள வல்லதாகவும் காணப்பட்டது. Boeing நிறுவனத்தாற் பரிந்துரைக்கப்பட்ட இந்த ஆரம்ப வடிவத்தில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இவ்வகை விமானங்கள் அமெரிக்க வான்படையின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன.

தொடர்ந்து 1959 ஆம் ஆண்டிலே அமெரிக்க வான்படை அதனது சேவையிலிருந்து, ஆரம்பகால வடிவம் தவிர்ந்த, அனைத்து B-52 வகைக் குண்டுவீச்சு விமானங்களையும் நவீன கருவிகளுடன் மேம்படுத்தும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியது. இத்திட்டத்திற்கமைய, சேவையிலிருந்த விமானங்கள் பின்வரும் நான்கு வடிவமைப்பு மாற்றங்களுக்கு (modification) உட்படுத்தப்பட்டன.

1. அனைத்துவிதமான காலநிலை மற்றும் தாழ்வான உயரத்தில் (150 மீற்றர்) பறப்பை மேற்கொள்ள வல்லதாகவும் சோவியத் ஒன்றியத்தின்

வான்பாதுகாப்புப் பொறிமுறையை முறியடிக்க வல்லதாகவும் மாற்றியமைத்தல்.

2. AGM-28 Hound Dog அணுவாயுத ஏவுகணையை ஏவவல்லதாக மாற்றியமைத்தல்.

3. ADM-20 Quail ஏவுகணையை ஏவவல்லதாக மாற்றியமைத்தல்.

4. எதிரிப்படைகளின் இலத்திரனியற் கருவிகளைச் செயலிழக்கச் செய்யவல்ல கருவிகளைப் (Electronic Countermeasures) பொருத்துதல்.

B-52A வகை விமானங்கள் 1951 ஆம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டுவிட்ட போதிலும் அவை பரிசோதனைப் பறப்புக்களில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து B-52B வகை விமானம் 1954 ஆம் ஆண்டு அதன் முதற்பறப்பை மேற்கொண்டது. ஆரம்ப நிலையிவ் இவ்விமானம் பல்வேறுபட்ட பின்னடைவுகளைச் சந்தித்தபோதிலும் படிப்படியான தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக இவ்விமானம் இன்று பலமிக்கதொரு போராயுதமாகக் காணப்படுகின்றது.

வியட்னாமிய யுத்தத்தின்போது இவ்வகை விமானங்கள் கணிசமானளவிற் பயன்படுத்தப்பட்டன. வியட்னாமியக் காடுகளை அழிக்கும் பாரிய குண்டுவீச்சுக்களில் இவ்வகை விமானங்களே பயன்படுத்தப்பட்டன. வியட்னாமியக் காடுகளை அழிப்பதற்காக இவை குண்டுகளை வீசின என்பதைவிட விதைத்தன என்பதே பொருத்தமாக இருக்கும். ஆம், B-52D வகை விமானங்கள் பெரும்தொகையான குண்டுகளைக் காடுகளுக்குள் கொட்டத்தக்க வகையில் அவற்றின் குண்டுகளைக் காவிச்செல்லும் பகுதிகள் மீள்வடிவமைப்புச் செய்யப்பட்டன.

தொடர்ந்து பனிப்போர் காலப்பகுதியில் சோவியத் ஒன்றியத்தின் மீதான அணுவாயுதத் தாக்குதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இவ்வகை விமானங்கள் சோவியத்தின் அண்டையிலுள்ள அமெரிக்க சார்பு நாடுகளில் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 1991 இல் இந்நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பாலைவனப் புயல் நடவடிக்கையில் இவ்வகை விமானங்களின் பங்கு பாரியளவிற் காணப்பட்டது. ஈராக்கியப் படைகள் மீது வீசப்பட்ட குண்டுகளின் 40 வீதமான குண்டுகள் இவ்வகை விமானங்களாலேயே வீசப்பட்டது. வளைகுடா யுத்தத்தின்போது இவ்வகை விமானமொன்று தொடர்ந்து 35 மணித்தியாலங்களாக 14000 கிலோமீற்றர் தூரத்திற்குப் பறந்து ஈராக்கியப் படைகள்மீது தாக்குதலை மேற்கொண்டது. 2037 ஆம் ஆண்டளவில் நவீன தொழிநுட்பங்களுடன் கூடிய புதியவகைத் குண்டுவீச்சு விமானங்களை உருவாக்குவதற்கு அமெரிக்க விமானப்படை திட்டமிட்டிருக்கின்ற போதிலும், தற்போது பயன்பாட்டிலுள்ள B-52H வகைக் குண்டுவீச்சு விமானங்களை 2040 ஆம் ஆண்டு வரை சேவையிலீடுபடுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, February 22, 2010

!!!!! அனாதையாய் நான் !!!!!

வலிகள் மட்டுமே வாழ்க்கையாகி
போனது இங்கு எனக்கு மட்டும் ..
பிரிந்து இருக்கும் குடும்பம்
புரியாத உறவுகள் ...அறிந்து
கொள்ள முடியாத நட்புகள் என
ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் என்னுள் ..

இங்கு நான் சிரிப்பதும் சிரிக்க
வைப்பதும் வேஷங்கள் மட்டுமே...
அறியாதவயதில் நான் செய்த
சேட்டைகள் அனைத்தும் இன்று
விளைவுகளாய் என்னிடத்தில் ...

வருந்துவதை தவிர வேறு வழி
இல்லாமல் வாழ செய்துவிட்டது சூழ்நிலை...
தினமொரு சிந்தனையில் சிக்கி
சிறுத்துகொண்டு போகிறது மனம்....
திசை அறிய முற்படும் போதெல்லாம்
திடீர் புயலாய் சிறு சிறு தடைகள் ..

அறியாத இத் தேசத்தில் சரியான
முடிவுகளை தேர்வு செய்வதில் இடியப்பமாய்
சிக்கல்..வழி துணைக்கும் வழி காட்டவும்
என் நிழல் தவிர யாருமில்லை இங்கு ....
என்னில் மீதமிருக்கும் நம்பிக்கைகளே
என்னை வழி நடத்துகிறது எப்போதும்....
அதுவும் விடைபெறும் சந்தர்பங்களில்
அனாதையாய் நான்...... !! பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, February 16, 2010

இணையம்

உலகின் மிகப் பெரிய கணிணி வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. உலகிலுள்ள 170 ற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சர்ந்த கணினி வலையமைப்புகள் இணையத்தில் இணைந்துள்ளன.


ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு கணினியூடாக பைல் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. கண்டத்திற்குக் கண்டம் நாட்டுக்கு நாடு வியாபித்திருக்கும் இந்தக் கணினி வலையமைப்பு அதி வேகம் கொண்ட கேபல் கொண்டிணைக்கப்பட்டுள்ளன. இதனை Internet Backbone எனப்படுகிறது.

பல்வேறு வகையான பல்வேறு அளவுகளைக் கொண்ட பல்வேறு இயங்கு தளங்களைக் கொண்ட ஆயிரக் கணக்கான கணினிகள் இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ளன. இவற்றை சேர்வர் கணினிகள் எனப்படும்.

பல்வேறு வகையான கணினிகள் இணையத்தில் இணைந்துள்ள போதும் அவற்றிற்கிடையே TCP/IP (Transmission Control Protocol /Internet Protocol) எனும் பொதுவான ஒரு விதிமுறை பின்பற்றப்படுவதன் காரணமாக நாம் எந்த ஒரு கணினியிருந்தும் மற்றுமொரு கணினியுடன் இலகுவாகத் தொடர்பாட முடிகிறது.

இராணுவ தேவைக்காக அமெரிக்காவினால் 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பே பின்நாளில் இண்டர்நெட்டாக உருவெடுத்தது. ஆரம்பத்தில் இந்தக் கணினி வலையமைப்பு ARPANET என அழைக்கப்படது.

தற்போது இணையத்தின் உரிமையாளராக எந்த ஒரு நாடோ நிறுவனமோ இல்லை எனினும் இணையத்தின் வளர்ச்சிக்காகவும் இணையத்தில் விதி முறைகளை நிர்ணயிக்கவும் முறைப்படுத்தவுமென சில தன்னார்வநிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இணையத்தின் மூலம் கிடைக்கும் சில பொதுவான பயன்பாடுகளாக எந்த வொரு விடயம் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல், மின்னஞ்சல் சேவை, நிகழ் நேரத்தில் ஒருவரோடொருவர் உரையாடுதல், பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளல், இசை, திரைப்படம், விளையாட்டு என பொழுது போக்கு அம்சங்களில் ஈடு படல் பொருட்கள் மற்றும் சேவைகளைப பெறுதல் விற்பனை செய்தல் மூலம் இணைய வணிகத்திலீடுபடல் போன்ற பல வற்றைக் குறிப்பிடலாம்.

இணையம் சார்ந்த சில கலைச் சொற்ளையும் அவற்றிற்கான விளக்கத் தையும் பார்ப்போம்.

Asymmetric Digital Subscriber Line (ADSL) : அதி வேக இணைய வசதியை வழங்கும் ஒரு இணைய இணைப்பு முறை. இதனையே Broadband எனவும் அழைக்கப்படுகிறது.

Blog : web Log என்பதன் சுருக்கமே ப்லோக். இதனை ஓன்லைன் ஜேர்னல் (online Journal) எனப்படுகிறது. இது இணைய தளம் போன்ற்தே. இணைய தள வடிவாக்கம் பற்றி அறியாதவர்கள் கூட இதனை இலகுவாக உருவாக்கலாம். இந்த சேவையை blogspot.com, wordpress.com என்பன இலவசமாக வழங்குகின்றன. தமிழில் வலைப்பதிவு எனப்படுகிறது.

Browser இணைய சேவைகளில் ஒன்றான உலகலாவிய வலைத் தளமமான WWW ஐ அணுகுவதற்குப் பயன்படும் மென்பொருளையே பிரவுஸர் (இணைய உலாவி) எனப்படுகிறது. உதாரணம்: இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மொஸில்லா பயபொக்ஸ், கூகில் க்ரோம்

Download : இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒரு கணினியிலிருந்து எமது கணினிக்கு பைல் ஒன்றைப் பெற்றுக் கொள்வதை டவுன்லோட் எனப்படும். Domain Name இணையத்தில், இணைந்துள்ள கணினிகளை அல்லது இணணய தளங்களை இலகுவாக நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் ஐபி முகவரி எனும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன் படுத்தும் முறையை டொமேன் நெம் எனப்படுகிறது.

Dial-up: இணையத்தில் இணைவதற்குப் பலரும் நாடும் ஒரு பொதுவான இணைப்பு முறை. இணைய சேவை வழங்கும் நிறுவன கணினியை ஒரு மோடமைப் பாவித்து தொலைபேசிக் கம்பியூடாக இணைப்பக்கப்ப்டும். அதிக பட்சமாக 128 kbps அளவிலான வேகத்தையே கொண்டிருக்கும்.

E-mail (Electronic mail) : கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பிரபலமான இணைய சேவையே மின்னஞ்சல் ஆகும். மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் ஒரு மின்னஞ்சல் முகவரி அவசியம். ஒரு மின்னஞ்சல் முகவரி jeesa@gmail.com எனும் வடிவில் இருக்கும். இங்கு பயனர் பெயரும் டொமேன் பெயரும் @ எனும் குறியீட்டால் பிரிக்கப்படும்.

Extranet : ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. இது இணையத்தோடு தொடர்புபட்டிருக்கும். அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மட்டுமன்றி பொது மக்களும் உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லோடு இதனை அணுக முடியும்.

FTP : (File Transfer Protocol) இணையம் வழியே பெரிய அளவிலான பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளும் சேவையை FTP எனப்படுகிறது.

File attachment மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பப்படும் சிறிய ஆவணங்கள் மற்றும் படங்களை எட்டேச்மண்ட் எனப்படுகிறது.

Firewall இணையத்தைப் பயன்படுத்தி எமது கணினிக்குள் அனுமதியின்றி எவரும் ஊடுறுவாமல் தடுக்கும் மென்பொருளை பயவோல் எனப்படுகிறது.

Hyperlink : இணைய தள மொன்றில் ஒரு பக்கத்திலிருந்து மற்றுமொரு பக்கத்திற்கு அல்லது வேறொரு இணைய தளத்திற்கு வழங்கப்படும்

இணைப்பை ஹைபலின்க் எனப்படுகிறது.

HTTP (Hypertext Transfer Protocol) உலகலாவிய வலைத் தளத்தில் HTML ஆவணங்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான விதி முறையாகும்.

HTML (Hypertext Markup Language) வலைத்தளங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு கணினி மொழி.

Home Page ஒரு இணைய தளத்தின் முதல் பக்கத்தை அல்லது இணைய உலாவியைத் (வெப் பிரவுஸர்) திறக்கும் போது வரும் முதல் பக்கத்தை ஹோம் பேஜ் எனப்படுகிறது.

Hacker ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள ஒரு கணினியின் பாதுகாப்பு ஓட்டைகளை நன்கறிந்து அக்கணினியினுள் அனுமதியின்றி நுளையும் ஒரு கை தேர்ந்த நபர் ஹெக்கர் (குறும்பர்). எனப்படுகிறார். பாதுகாப்புத் தன்மையைப் பரீட்சிப்பதற்காகவும் ஹெக்கர்களின் உதவியை நாடுவதுண்டு.

Instant Message (IM): இணையததைப் பயன் படுத்தி நிகழ் நேரத்தில் இருவருக்கிடையில் நிகழ்தப்படும் உரையாடலை உடனடி செய்திச் சேவை எனப்படுகிறது. உதாரணம் : யாஹூ மெஸ்ஸென்ஜர், ஸ்கைப்

Internet Service Provider (ISP): இணைய சேவை வழங்கும் நிறுவனத்தையே ISP எனப்படுகிறது. நமது கணினியை இணையத்துடன் இணைக்கும்போது இந்த நிறுவனத்தின் கணினியூடாகவே நம் இணையத்தில் இணைகிறோம்.

IP (Internet Protocol) address இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒவ்வொரு கணினியையும் வேறு படுத்திக் காட்டும், ஒரு இலக்கமே ஐபி முகவரி எனப்படுகிறது. இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். (உதாரனம்: 169.254.222.1). ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருகும்.

ISDN (Integrated Services Digital Network) டயல் அப், ப்ரோட்பேண்ட் போன்று ஒரு வகை இணைய இணைப்பாகும். இது டயல் அப்பை விட வேகமானது. ப்ரோட்பாண்டை விட வேகம் குறைந்தது. இது ஒரு டிஜிட்டல் சேவை என்பதால் மோடெம் அவசியமில்லை.

Intranet ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்களால் மட்டுமே இதனை அணுக முடியும். இது இணயத்தோடு தொடர்பு பட்டுமிருக்கலாம். தொடர்பு படாமலும் இருக்கலாம். எனினும் பொது மக்க்ள் யாரும் இந்த இந்த வலையமைப்பை அணுக முடியாது,

Modem: என்லொக் வடிவில் டேட்டாவை ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்கு தொலைபேசிக் கம்பியூடாக அனுப்புவதற்கு மோடெம் எனும் சாதனம் பயன் படுத்தப்படுகிறது, இது டிஜிட்டல் வடிவிலுள்ள் டேட்டாவை (analogue) எனலொக்காகவும் (modulation) எனலொக் வடிவிலுள்ளதை டிஜிட்டல் (demodulation) வ்டிவிலும் மாற்றுகிறது.

Offline: கணினி இணையத்தில் இணைந்திராத சந்தர்ப்பத்தை ஓப்லைன் எனப்படுகிறது. . Online: இணையத்தில் எமது கணினி இணந்திருக்கும் போது கணினி ஓன்லைனில் இருப்பதாகச் சொல்லப்படும்.

Password: ஒரு பைலை, கணினியை அல்லது வலையமைப்பை அதிகாரமளிக்கப்பட்வர்கள் மாத்திரம் அனுகுவதற்குப் பயன்படும் எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்ட ஒரு ரகசிய சொல்.

Portal: மின்னஞ்சல், தேடற்பொறி ,போன்ற பல வகைப்பட்ட சேவைகளை வழங்கும் ஒரு இணைய தளத்தை வெப் போட்டல் எனப்படுகிறது. உதாரணம் : யாஹூ

Server ஒரு வலையமைப்பில் தனது வளங்களையும் தகவல்களையும் ஏனைய கணினிகளுடன் பகிர்ந்து கொள்ளும் கணினிகளை சேர்வர் அல்லது Host ஹோஸ்ட் எனப்படுகிறது.

Search Engine வேர்ல்ட் வைட் வெப் எனும் உலகலாவிய வலையமைப்பில் எமக்குத் தேவையான தகவல்கள் எந்த வலைத்தளங்களில் உள்ளன என்பதை தேடிப் பட்டியலிடும் மென்பொருளையே தேடற் பொறி எனப்படுகிறது. உதாரணம் : கூகில், யாஹூ, பிங்

Sub Domain: டொமேன் பெயரில் ஒரு பகுதியே சப் டொமேன் எனப்படுகிறது. உதாரணமாக madeena.sch.lk, என்பதில் sch என்பது பிரதான டொமேன் எனவும் madeena என்பது சப்டொமேன் எனவும் அழைக்கப்படுகிறது.

Spam எமக்குத் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து நாம் கேட்காமலேயெ எமது மின்னஞ்சல் முகவ்ரிக்கு வந்து சேரும் வேண்டாத (குப்பை) மின்னஞ்சல்களையே ஸ்பாம் எனப்படுகிறது.

Top-level domains: டொமேன் நேம் சிஸ்டம் எனப்படும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன் படுத்தும் முறையில் ஒரு பிரதான பிரிவே டொப் லெவல் டொமேன் எனப்படுகிறது. உதாரணம் .com, .gov, .edu.

Uniform Resource Locator (URL): உலகலாவிய வலைத் தளத்தில் உள்ள ஒரு ஆவணத்தின் முகவரியைக் குறிக்கிறது. இதனையே வெப் எட்ரஸ் எனவும் அழைக்கப்படுகிறது.

Upload இணையத்தில் அல்லது வலையமைப்பொன்றில் ஒரு கணினியிலி ருந்து மற்றுமொரு கணினிக்கு பைல் ஒன்றை அனுப்புவதை அப்லோட் எனப்படுகிறது.

World Wide Web ஹைப டெக்ஸ்ட் ஆவணங்களையும் தரவுத் தளங்களையும் கொண்ட இணைய சேர்வர்களையே வேர்ல்ட் வைட் வெப் (உலகலாவிய வலத்தளம்) எனப்படுகிறது. இது 1989 ஆம் ஆண்டு Tim Berners-Lee, எனும் பிரித்தானியரால் வடிவமைக்கப்பட்டது.

Website : HTML எனும் வலை மொழி கொண்டு உருவாக்கிய, ஹைபடெக்ஸ்ட் ஆவணத்தையே இனையதளம் (வெப்சைட்) எனப்படுகிறது. இந்த ஆவணம் ஒரு நிறுவனம் சார்ந்த அல்லது தனி நபர் சார்ந்த அல்லது ஏதோவொரு விடயம் சார்ந்த தகவல்களைக் கொண்டிருக்கும். இது ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்களையோ (web pages) கொண்டிருக்கும் இவை ஹைபலிங் கொண்டு இணைக்கப்பட்டிருக்கும். இதனை இணையத்தில் இணைந்திருக்கும் ஒரு வெப் சேர்வரில் சேமிக்கப்படும். அந்த இணைய தளத்திற்கெனப் பதிவு செய்யப்படும் பெயரைக் கொண்டு (வெப் எட்ரஸ்) கொண்டு அந்த தளத்தை உலகின் எப்பாகத்திலிருந்தும் அணுகலாம். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இதயம் சில உண்மைகள்!

பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும்இருக்கும்.


(எலி - நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.

2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.

3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன .



5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டர்கள் …நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)

6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).

8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.

9. நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.

10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, February 2, 2010

உங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு சூப்பர் மேஜிக்

கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து உங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு சூப்பர் மேஜிக் பாருங்கள். பிரவுசரை மேசிமைசோ மினிமைசோ செய்யாதீர்கள்.


இங்கே கிளிக்கவும். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

எறும்பு

1. எறும்புக்கு 6 கால்கள் உள்ளன. ஒவ்வொரு காலிலும் 3 இணைப்புகள் உள்ளன. எறும்பின் கால்கள் மிகவும் வலிமையானவையாக இருப்பதால் அதனால் மிக வேகமாக ஓடமுடியும். ஒரு மனிதனின் உடல் தகுதிக்கு ஏற்றவாறு எந்த வேகத்தில் ஓட முடியுமோ, அதேபோல் எறும்பினாலும் முடியும். எறும்பினால் அதன் உடல் எடையைப் போல 20 மடங்கு எடையை தூக்கமுடியும்.


2. எறும்பின் மூளையில் 2,50,000 மூளைச் செல்கள் உள்ளன. மனிதனின் மூளையில் 10,000 மில்லியன் எனவே, 40,000 எறும்பு கூட்டங்களின் மொத்த முளை ஒரு மனிதனின் மூளைக்கு சமம்.

3. எறும்புகளின் ஆயுட்காலம் 45 முதல் 60 நாட்கள்.அதன் உணர்வு கொம்புகள், தொடுதலுக்கு மட்டுமல்ல, நுகர்வதற்கும்தான்.

4. இரு தாடைகள் உள்ளன. அவை ஒரு கத்திரிக்கோல் போல பக்கவாட்டில் மூடும்படி இருக்கும். பெரிய எறும்பினால் உணவை மெல்ல முடியாது. எனவே அவைகள் உணவில் திரவத்தை உறிஞ்சிக்கொண்டு திடப்பொருளை துப்பிவிடும்.

5. இரண்டு கண்கள் உள்ளன. ஒவ்வொரு கண்ணிலும் ஏகப்பட்ட கண்கள் உள்ளன. இவற்றை கூட்டுக்கண்கள் என்கிறோம்.

6. அவற்றிற்கு வயிற்றுப்பகுதி இரு பிரிவாக உள்ளது, ஒன்று தனக்கன உணவிற்கும், மற்றொன்று சக எறும்புகளுடன் பகிர்வதற்கும்.

7. எறும்புகளில் 10,000 க்கும் மேற்ப்பட்ட இனங்கள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் 1 அல்லது அதற்கு மேற்பட்ட ராணி எறூம்புகள் உண்டு.

8. ராணி எறும்பின் வேலை முட்டை இடுவது. அவற்றை வேலைக்கார எறும்புகள் கவனித்துக் கொள்ளும். வேலைகார எறும்புகளுக்கு இனப்பெருக்கத் திறன் கிடையாது. அவற்றின் வேலை உணவு சேகரிப்பது, சிறுசுகளை கவனித்துக் கொள்வது மற்றும் தங்கள் வீட்டை எதிரிகளிடமிருந்து காப்பது.

9. சிலவகை சிவப்பு எறும்புகளுக்கு கூர்மையான கொடுக்கு உண்டு.பிற கறுப்பு மற்றும் மர எறும்புகளுக்கு கொடுக்கு கிடையாது. ஆனால், Formic acid ஐ பீச்சி அடிக்கும். சிலவகை பறவைகளில் உள்ள ஒட்டுண்ணிகளை இந்த Formic. acid அழிக்கவல்லது.

10. எறும்புகளில் இராணுவ எறும்புகளும், விவசாய எறும்புகளும் கூட உண்டு. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, February 1, 2010

அறிவியல்

வளர்ந்த ஒரு

மனித உடலில் சுமார் 2 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை
நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது.
அணு உட்கருப் (nucleus) பகுதியில் நூலிழை போன்ற 46 குரோமோசாம்கள் அடங்கியுள்ளன; இவையே உயிரணுவின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துபவை.
மூளைப் பகுதியின் நரம்பிலுள்ள உயிரணுக்கள் நம் வாழ்நாள் முழுதும் உயிர் வாழ்பவை.
பறக்கும் ஈ ஒவ்வொரு வினாடியிலும் 200 படிவங்களைப் (images) பிரித்துணரும் ஆற்றல் வாய்ந்தது.
சாதாரண மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் சிலரிடம் 12 இணை விலா எலும்புகளுக்குப் (Ribs) பதிலாக 13 இணைகள் இருப்பதுண்டு; இதனால் அத்தகையோர்க்கு மொத்தத்தில் 208 எலும்புகள் இருக்கும்.
வளர்ந்த ஒருவரின் கண்ணறைகளின் மொத்தப் பரப்பளவு சுமார் 70 சதுர மீட்டர் அளவுக்கு இருக்கும்.
நமது செரிமான அமைப்பு வாயில் துவங்கி மலக்குடல் வரை நீளும் நீண்டதொரு குழாயாகும். இதன் நீளம் வளர்ந்த மனிதருக்கு சுமார் 9 மீட்டர். உணவு இந்நீண்ட பகுதியைக் கடக்க 10 முதல் 20 மணி நேரம் பிடிக்கிறது.
ஒவ்வொரு வினாடியும் பில்லியன் கணக்கில் மின் சமிக்ஞைகளை அனுப்பி நமது மூளைகளால் மனித உடல்களைக் கட்டுப்படுத்த முடிகிறது.
மனிதனது கண்கள் மிகவும் கூருணர்வுத்திறன் கொண்டவை. நிலவொளியே இல்லாத இருளில் ஒரு மலையுச்சியின் மீது அமர்ந்துள்ள மனிதனால் 80 கி.மீ. தூரத்திற்கு அப்பால் உரசப்படும் ஒரு தீக்குச்சியின் ஒளியையும் காண இயலும் எனக் கூறப்படுகிறது.
பூமிதோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள், பிரபஞ்சம் உருவாகி 14.5 பில்லியன் ஆண்டுகள்
ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.
மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.
தொன்மா (Dinosaur, டைனசோர் (கேட்க) என்பது ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்கள் ஆகும். இவை ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயிற்று.
பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.
ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.
மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.
ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.
நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.
நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.
நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.
உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.
கைரேகையை‌ப் போலவே நா‌க்‌கி‌ல் உ‌ள்ள வ‌ரிகளு‌ம் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் வேறுபடு‌ம்.ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.
WDக‌ண் தான‌த்‌தி‌ல் கரு‌ப்பு ‌வி‌ழிக‌ள் ம‌ட்டுமே அடு‌த்தவரு‌க்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.
900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது.மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது
மின்மினிப் பூச்சியின் முட்டையும் ஒளி வீசும் தன்மை கொண்டது.
பறக்காத பறவை பெங்குவின் கடல் கோழி என்று அழைக்கப்படுகிறது.
பாம்பே டேக் என்பது ஒரு வகை மீனின் பெயராகும்.
கடல் ஆமைக்கு மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.
ஆண் குதிரைக்கு 36 பற்கள் உண்டு.
யானையின் தும்பிக்கையில் எலும்பு இல்லை.
மிக நீண்ட ஆயுள் கொண்ட விலங்கு ஆமை. சுமார் 200 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.
கங்காரு இருந்த இடத்திலிருந்து தாண்டும் தூரம் 7 மீட்டர்.
நீர்வாழ் பாலூட்டி இனங்களில் அதிக பற்கள் கொண்டது திமிங்கலம்தான். எவ்வளவு இருக்கும் என்று நினைக்கின்றீர்கள். சுமார் 260 பற்கள்.
விலங்குகளில் அதிக பற்கள் உடையவது நாய்தான். மொத்தமாக 42 பற்கள் இருக்குமாம்.
மீன்களின் அரசன் என்று அழைக்கப்படுவது சுறா மீன்.
ஒட்டகச்சிவிங்கி நாக்கு ஒன்றரை அடி நீளத்துக்கு மேல் இருக்கும்.
நெருப்புக் கோழியின் கண்கள் அதன் மூளையின் அளவை விடப் பெரியதாக இருக்கும்.
1சதுர அடி - 1 அடி'' x 1 அடி''
10 சதுர அடி - 10 அடி'' x 10 அடி''
435.6சதுர அடி - 1 சென்ட் (Cent)
1076 சதுர அடி - 1 ஏர் (Are)
1200 சதுர அடி - ½ கிரவுண்டு (Ground)
2400 சதுர அடி - 1 கிரவுண்டு
43560 சதுர அடி - 1 ஏக்கர்
107637.8 சதுர அடி - 1 ஹெக்டேர்
1 சென்ட் - 435.6 சதுர அடி (Sq. ft)
10 சென்ட் - 4356 சதுர அடி
100 சென்ட் - 43560 சதுர அடி
1 ஏக்கர் = 43560 சதுர அடி
= 100 சென்ட்
= 40.5 ஏர்கள்
= 0.471 ஹெக்டேர்
= 18.15 கிரவுண்டுகள்
1 குழி - 144 சதுர அடி
3 குழி - 1 சென்ட்
30 குழி - 1 மா(Maa)
1 காணி - 1.322 ஏக்கர்
1 மீட்டர் - 3.280833 அடி (Feet)
1 மைல் - 5280 அடி (Feet) பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF